– பேராசிரியர் அஹ்மத் அஷ்ரப் (Ph.D. Al-Azhar)
பாலஸ்தீன் விவகாரம் என்பது , ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் , மனச்சாட்சியில் வாழும் ஒன்றாகும் . காரணம் , முஸ்லிம்களின் மூன்றாவது புனித இடமாகிய " பைத்துல் மக்திஸ் பள்ளி " அங்கு அமைந்திருப்பதாகும் . அதை யூதர்களிடமிருந்து மீட்டெடுப்பது, வெறும் " நிலப் போராட்டம்" அல்ல . உம்மத்தின் சின்னத்தை மீட்டெடுக்கும் பணியாகும் . இந்த யதார்த்தத்தை , ஷீயாக்களோ , அல்லது கர்ழாவி பக்தர்களோ சமூகத்துக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
பைத்துல் மக்திஸ் பள்ளி , பாலஸ்தீன் பூமியில் அமைந்திருப்பதால் , அதை மீட்கும் பணி , நேரடியாக பாலஸ்தீன் மக்களின் கடமையாகும் . அதற்க்கு உறுதுணையாக இருப்பது ஏனைய முஸ்லிம்களின் கடமையாகும்.
ஆரம்பத்தில், அரபு நாடுகள் , யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்த்தீனை மீட்க்க யுத்தம் தொடுத்து, அவைகளின் நிலங்களையும் இழந்தன . பின்பு சில அரபு நாடுகள், யூதர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன.
தற்போது பாலஸ்தீன் மக்கள், இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர் :
(1) அல் Fபத்ஹ் இயக்கம். இதை, பல பாலஸ்தீன் குழுக்களை உள்ளடக்கிய " பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் " அதிமுக்கியமான குழுவாகப் பார்க்கப்படுகின்றது. இதை யாசிர் அரபாத் 1965ல் உருவாக்கினார் . தற்போது மஹ்மூத் அப்பாஸ் அதன் தலைவராக உள்ளார் . இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் " பத்ஹாவி" என அழைக்கப்படுகின்றனர். 1993ல் பாலஸ்தீன் விடுதலை இயக்கம், இஸ்ரேலுடன் " ஓர்சோலோ சமாதான ஒப்பந்தம்" செய்த பின்பு, மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சுய ஆட்ச்சியை பொறுப்பேற்றது. அல் Fபத்ஹ் இயக்கம் 2007ல் வன்முறை இன்றி அறப் போராட்டம் மூலம் உரிமைகளை வென்றெடுக்கப்போவதாக அறிவித்தது .
இதற்க்கு பெரும்பாலான அரபுநாடுகள் ஆதரவு வழங்கின.
(2) ஹமாஸ் இயக்கம். இதைச் சேர்ந்தவர்கள் " ஹம்ஸாவி " என அழைக்கப்படுகின்றனர் . இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சேர்ந்த அஷ்ஷைக் அஹ்மத் யாஸீன் , 1973 ல் காசாவில் " இஸ்லாமிய நிலையம் என்ற "நலன்புரி நிறுவனத்தை" தொடங்கினார் . அந்நேரத்தில் , காசா இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்தது . இஸ்ரேல் , இந்த நிறுவனத்துக்கு பண உதவிகள் வழங்கியது . பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது. இதன் மூலம் , மத சார்பற்ற கொள்கையுடைய யாசிர் அரபாத்துக்கு எதிரான மதக் குழு ஒன்றை வளர்த்து , " சமநிலையை உருவாக்கலாம் எனக் கருதியது . பின்பு ஹமாஸ், 1987 முதல் , இராணுவ அமைப்பாக மாறியது . இஸ்ரேல் ஊக்குவித்த அமைப்பு , அதற்க்கு வினையாக மாறியது
அல் பத்ஹ் + ஹமாஸ் முரண்பாடு
2006ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேத்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இஸ்மாயீல் ஹனியா பிரதமர் ஆனார். ஹமாசின் அரசாங்கத்தை இஸ்ரேல், அமெரிக்கா ஆகியன, அங்கீகரிக்க மறுத்தன. அல் பத்ஹ் மட்டுமே அரசாங்கம் அமைக்கவேண்டும் எனக் கூறின. இதனால், இரு அமைப்புகளும் இடையில் முறுகல் ஏற்பட்டது 2007ல் சவூதி அரேபியா, இரு தரப்பினரையும் மக்காவுக்கு அழைத்து, பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது. இரு தரப்பினரும், " மக்கா ஒப்பந்தத்தில்" கைசாத்திட்டன . இந்த ஒப்பந்தத்தில் ஹமாஸ் சார்பாக , காலித் மிஷ்அழும் , அல்பத்ஹ் சார்பாக மஹ்மூத் அப்பாசும் கையொப்பமிட்டனர். (ஒப்பந்தப் பிரதி இணைக்கப்பட்டுள்ளது) ஆனால் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறி, அல்பத்ஹ் போராளிகளை தாக்கி "முற்று முழுதாக" காசாவை கைப்பற்றியது . இதனால் சவூதி அரேபியாவுக்கும் , ஹமாஸுக்கும் இடையில் பாரிய முரண்பாடு ஏற்பட்டது . பின்பு ஹமாஸ் ஈரானை நோக்கி பயணித்தது . ஈரான் ஆயுதங்களை வழங்கியது. அவ்வப்போது ஹமாஸ் இஸ்ரேலுடன் பல சண்டைகளில் ஈடுபட்டது.
வரலாறு தெரியாத ஷீயாக்களும் . கர்ழாவி பக்தர்களும், "பழி முழுவதையும்" சவூதி அரேபியா மீதுபோட முற்படுகின்றனர் . அரபு நாடுகள் , பேச்சுவார்த்தை மூலம் , பாலஸ்தீன் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டு என முடிவு செய்துள்ளன . அவ்வாறு இருக்கும்போது , ஹமாஸ் "தனியாக" தன் இஷ்டப்படி இஸ்ரேலுடன் சண்டைகளை ஆரம்பித்து விட்டு , நிலைமை மோசமாகும் போது , ஆயிரக்ககணக்கான மக்கள் கொல்லப்படும்போது , அரபுநாடுகள் , இஸ்ரேலுடன் யுத்தம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது ?!! ஹமாஸுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஈரான், ஒரு ரொக்கட்டை கூட இஸ்ரேலுக்கு அனுப்பவில்லை . ஈராக் , சிரியா, லெபனான், யமன் , நாடுகளில் அது உருவாக்கிய ஆயுதக் குழுக்கள் மூலமாகத்தான் செயல்படுகின்றது . ஈரான் , நேரடியாக , இஸ்ரேலையோ அல்லது அமெரிக்கா கப்பல்களையோ தாக்கினால் , தனக்கு என்ன அழிவு ஏற்படும் என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளது . ஒருமுறை அஹ்மத் நஜாதி , " நான் இஸ்ரேலைத் தாக்க நான் பைத்தியகாரன் அல்ல" என்று கூறியை இங்கே ஞாபகப்படுத்ததுகின்றேன்.
எனவே ஷியாக்கள் , கர்ழாவி பக்தர்கள் , பாலஸ்தீன் + பாலஸ்தீன் உட்பூசலை பயன்படுத்தி , வேறு நாடுகளில் பழியைப் போடுவதை நிறுத்தவேண்டும் .