குர்ஆன், ஸுன்னாவை விட பகுத்தறிவை முற்படுத்துவதன் ஆபத்துக்கள்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா  ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :

நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தின் போது அவர் தன் மகனை தங்களுடன் கப்பலில் ஏறிக்கொள்ளுமாறு கூறினார். அங்கு அவர்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையை கீழ் காண்கிறீர்கள்

((அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்;........))

இது பகுத்தறிவைப் பயன்படுத்தியதாகும்

((.....இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று (நூஹ்) கூறினார்.....))

இது இறைவனிடமிருந்து வந்த வஹி ஆகும்

((.......அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி  விட்டான்))

(அல்குர்ஆன் : 11:43)

இது தான் இறுதி முடிவு

குர்ஆன், ஸுன்னாவுக்கு முதலிடமளிக்காது... தம் சுயபுத்திக்கு முதலிடமளிக்கும் அனைவரும் இதே போன்று பித்அத்கள் மற்றும் மனோ இச்சை என்ற இருண்ட கடல்களில் மூழ்கி விடுவார்கள்...

எவர் வேண்டும் என்றே தம் சுய புத்தியைப் பிரயோகித்து ஷரியத்துடைய விடயங்களுக்கு மாற்றம் செய்கிறாறோ அவருடைய உள்ளத்தில் ஈமான் தங்கியிராது."

தர்உ தாஆருழில் அக்லி வந்நக்ல் 1 / 187

خطورة:
((ﺗﻘﺪيم / العقل / على   ﺍﻟﻨـﺺ ﺍﻟﺸﺮﻋـﻲ))

﴿ ﻗَﺎﻝَ ﺳَﺂﻭِﻱ ﺇِﻟَﻰٰ ﺟَﺒَﻞٍ ﻳَﻌْﺼِﻤُﻨِﻲ ﻣِﻦَ ﺍﻟْﻤَﺎﺀِ﴾
[‏ﻫــﺬﺍ ﻋﻘــﻞ]

﴿ﻗَﺎﻝَ ﻟَﺎﻋَﺎﺻِﻢَ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻣِﻦْ ﺃَﻣْﺮِ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻟَّﺎ ﻣَﻦ ﺭَّﺣِﻢَ ﴾
[ ﻫـــﺬﺍ نص الوحي الشرعي ‏]

﴿ﻭَﺣَﺎﻝَ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﺍﻟْﻤَﻮْﺝُ ﻓَﻜَﺎﻥَ ﻣِﻦَ ﺍﻟْﻤُﻐْﺮَﻗِﻴﻦَ﴾
[ ﻫـــﺬﻩ ﺍلنتيجـة ]

كـﻞ ﻣـﻦ ﻗـﺪّﻡ ﻋﻘﻠـﻪ ﻋﻠﻰ ﻧﺼـﻮﺹ ﺍﻟﻜﺘـﺎﺏ ﻭﺍﻟﺴﻨـﺔ الصحيحة ﻏـﺮِﻕ ﻓﻲ ﻇﻠﻤـﺎﺕ ﺑﺤﺎﺭ ﺍﻷﻫـﻮﺍﺀ ﻭﺍﻟﺒﺪﻉ

*ﻣـﻦ ﺗﻌــﻮﺩ ﻣﻌﺎﺭﺿـﺔ ﺍﻟﺸـﺮﻉ ﺑﺎﻟﻌﻘـﻞ ﻻ ﻳﺴﺘﻘـﺮ ﻓـﻲ ﻗﻠـﺒــﻪ ﺇﻳـﻤـﺎﻥ* 
 ﺍﺑﻦ ﺗﻴﻤﻴﺔ رحمـه الله
ﺩﺭﺀ ﺍﻟﺘﻌــﺎﺭﺽ : 1/187
Previous Post Next Post