பட்டாசுகள் விற்பது மற்றும் வாங்குவது

பட்டாசுகளை பயன்படுத்துவது மற்றும் விற்பதானது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்ட செயலாகும். 

சில குறிப்பிட்ட காரணங்களை பொறுத்து இச்செயல் தடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 

அவையாவன,

1) பொருளாதார வீண் விரயம்

2) மக்களுக்கு தொல்லை தருவது

3) பிற சமூக மக்களுக்கு ஒப்பாக நடப்பது 


உயர்ந்தோனாகிய அல்லாஹு கூறுகிறான் :

  وَلَا تُسۡرِفُوٓاْ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ

"வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை."

(அல்குர்ஆன் 6:141)

நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது :

 "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்."

(நூல் : ஸஹீஹ் புகாரி  5185)

நபி ﷺ அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது :

"من تشبّه بقوم فهو منهم

"மாற்று சமுதாய மக்களுக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை."

(நூல் : அபூதாவூத் 3512)

[இமாம் அல்பானி رحمه الله அவர்கள் இந்த ஹதீஸை 'ஸஹீஹ்' என தனது நூலான இர்வாவுல் ஙலீல் 2691-ல் கூறியுள்ளார்கள்]

 எனவே இதுபோன்ற பாவமான காரியத்தில் ஒரு முஸ்லிம் தன் குடும்பத்தை ஈடுபடுத்தாமல் இருப்பதில் மட்டுமே அல்லாஹ்வின்பால் அவருக்கு நலவும், வெற்றியும் இருக்கிறது. 

அல்லாஹு தஆலா அனைவருக்கும் நல்ல புரிதலை தருவானாக...
Previous Post Next Post