இஸ்லாமிய தஃவாவில் பேணப்படும் ஹிக்மா என்ன?

بسم الله الرحمن الرحيم 

அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது: 

கேள்வி: 
இஸ்லாத்தில் இன்று பல ஜமாஅத்துக்கள் (கூட்டங்கள்) பிரிந்து பிரிந்து காணப்படுகின்றன. இவ்வாறான ஜமாஅத்துக்களுடன் இணைந்து தாஃவாவை செய்வதும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் ஹிக்மாவாக கருதப்படுமா?

பதில் தமிழ் மொழி மூலம்: 
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன். 

நிச்சயமாக ஹிக்மா (ஞானம்) என்பது, அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனிலும் நபி ﷺ அவர்களின் ஸுன்னாவிலும் ஒன்றுபடுவதாகும்.

அல்லாஹுத்தஆலா தன்னுடைய புத்தகமான அல்-குர்ஆனில் கூறுகின்றான்:

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌
“நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.” 

அல்லாஹ்வின் கயிறு– அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் (நபி ﷺ அவர்களின் வழிகாட்டலும்) ஆகும்.

எனவே இவ்விரண்டிலும்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். இதுவே அனைத்து முஸ்லிம்களினதும் கடமையாகும். 

மேலும் இதுதான் தஃவாவில் மேற்கொள்ள வேண்டிய ஹிக்மாவாகவும் இருக்கின்றது.

இவ்வாறு யாரெல்லாம் இருக்கின்றார்களோ; அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி; அவர்களோடு இணைந்து தஃவா செய்வதுதான் ஹிக்மாவாகும். என்று ஷெய்க் அவர்கள் கூறுகின்றார்கள்.

யாரெல்லாம் அசத்தியத்தில் இருக்கின்றார்களோ; அவர்கள் அசத்தியத்தில் இருக்கும் காலம் எல்லாம்; நாங்கள் அந்த அசத்தியத்தோடு சேர்ந்து அவர்களுக்கு உதவிகளைப் புரிவதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தாலும்; நிச்சயமாக அதனைச் செய்ய முடியாது.
இவ்வாறு அனைத்து  முஸ்லிம்களும் ஒன்று சேர முடியாது.

ஒரு பித்அத்வாதி அவருடைய பித்அத்களை களையும் வரைக்கும்; அந்த பித்ஆக்களை விட்டும் நிரபராதியாகும் வரைக்கும்; எங்களால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.

ஏனெனில் அல்லாஹுத்தஆலாவின் புத்தகமான அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவின் பால் ஒன்று சேரும்படியே அவன் எங்களுக்கு தெளிவாக ஏவியுள்ளான். 

நாம் இவ்வாறான ஜமாஅத்துக் (கூட்டமைப்பு)களோடு இணைந்து ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிப்பது கூடாது.

பித்அத்துக்கள் அவர்களிடம் காணப்படும் நிலையில் அவர்களோடு ஒற்றுமைப்படுவது கூடாது.

எவரிடமெல்லாம் பித்ஆக்கள் இருக்கிறதோ; மேலும் யாரெல்லாம் பித்ஆவை மார்க்கம் என்று நினைத்து  மேற்கொள்கிறார்களோ; அவர்கள் அந்த பித்ஆக்களை களைந்து கொள்ள வேண்டும். இது அவர்கள் மீது கட்டாயக் கடமையாகும்.

மேலும் யாரெல்லாம் அஹ்லுஸ்-ஸுன்னா-வல் ஜமாஅத்தினர்களாக இருக்கின்றார்களோ; அவர்களோடு இணைந்து கொள்ளவது கடமையாகும்.

அஹ்லுஸ்-ஸுன்னா-வல் ஜமாஅத்தினர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்; 

அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் புத்தகமான அல்-குர்ஆனையும் நபி ﷺ அவர்களின் ஸுன்னாவையும் பற்றி பிடித்திருப்பார்கள். 

அதனாலேயே அவர்கள் ஸுன்னாவை உடையவர்கள்; ஒற்றுமையுடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். 

எனவே நாம் இவ்வாறானவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு சேர்ந்து இருப்பதே ஹிக்மாவாகும்.
 
இவ்வாறு அஹ்லுஸ்-ஸுன்னா-வல் ஜமாஅத்தினர்களோடு இணைந்து; எங்களுடைய ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அல்லாஹ்வின் புத்தகத்தின் வசனங்களையும், நபி ﷺ அவர்களின் ஸுன்னாக்களையும் விளங்குவதில்தான் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். என ஷெய்க் அவர்கள் கூறுகின்றார்கள்.

எங்களுடைய தஃவா ஹிக்மத்தாக இருக்க வேண்டும். அந்த ஹிக்மத் எப்பொழுது ஹிக்மத்தாக கருதப்படும் என்பதை குர்ஆன், ஸுன்னாவைக் கொண்டுதான் நாம் ஆராய வேண்டும்.

வழிகேட்டில் உள்ளவர்களோடு; அல்லது பித்அத்தில் இருக்க கூடியவர்களோடு; அல்லது அஹ்லுஸ்ஸுன்னா வல்-ஜமாஅ அல்லாதவர்களோடு சேர்ந்து செல்வது ஒற்றுமையாக கருதப்படமாட்டாது. 

மாற்றமாக அது அல்-குர்ஆனுக்கும், அஸ்-ஸுன்னாவுக்கும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் மன்ஹஜ்க்கு மாற்றமானது. 

மேலும் அது ஹிக்மத்தாக கருதப்படமாட்டாது. அது இந்த தஃவாவிற்கு செய்யும் ஒரு கேடாகும்.

- தமிழ் தொகுப்பு: உம் யுஸ்ரா
Previous Post Next Post