மன்ஹஜ் (வழிமுறை என ஒன்று) ஏன் இருக்க வேண்டும்?

- அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலுஷ் ஷைஃக் ஹஃபிதஹுல்லாஹ்

மன்ஹஜ் (வழிமுறை என ஒன்றை) வைப்பதால் உள்ள பயன் என்ன? 

முதலாவது: (அதன்) நோக்கமானது பாதுகாப்பு பெறுவதே ஆகும். மேலும் நாம் சொர்க்கத்தின் பக்கம் நெருங்குவதும், நரகத்தை விட்டும் தூரமாகுவதுமாகும்.

 فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ 

ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ, அவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் : 3:185)

அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக, மன்ஹஜின் பக்கம் தேவை இருக்கின்றது. 

இரண்டாவது: ஒரு முஸ்லிமுடைய நிலைப்பாடு மனோ இச்சையின் அடிப்படையில் இல்லாமலிருக்க, உணர்ச்சிகளுடைய தாக்கங்கள் மற்றும் ஷரீஅத் ரீதியிலல்லாத தாக்கங்களின் அடிப்படையில் இல்லாமலிருக்க மன்ஹஜின் பக்கம் தேவை இருக்கின்றது. (மன்ஹஜ் என ஒன்று இல்லாததால்) ஒவ்வொரு நாளும் அவருக்கென ஒரு கருத்து, நிலைப்பாடு, கண்ணோட்டம் என்றே உள்ளது. 

*மூன்றாவது: (மார்க்க) விடயங்களில் (எடுக்கும்) நிலைப்பாடுகள், கருத்து மற்றும் கண்ணோட்டத்தில் ஒரு ஒற்றுமை இருப்பதற்காக (மன்ஹஜின் பக்கம் தேவை இருக்கின்றது). 

புதிதாக வரக்கூடிய ஒவ்வொரு விடயத்துடனும், மேலும் ஒவ்வொரு நிகழ்வுடனும் (எடுக்கக்கூடிய) நிலைப்பாடுகளில் மாற்றம் இருக்குமேயேனால், அது நிச்சயமாக நாம் உறுதியாக இருப்பதற்காக மார்க்கத்திலிருந்து பெறப்பட்ட வழிமுறை என ஒன்று நம்மிடத்தில் இல்லை (என்பதையே காட்டுகின்றது). 

உறுதியாக இருப்பதென்பது பாதுகாப்பிற்கான அடையாளங்களில் இருந்துள்ளதாகும். சரியான வழியின் மீது உறுதியாக இருப்பதென்பது, இது பாதுகாப்பிற்கான அடையாளங்களில் இருந்துள்ளதாகும்.

(ஆனால்) ஒவ்வொரு நாளும் தனக்கென ஒரு மன்ஹஜை உடையவர், ஒவ்வொரு நாளும் தனக்கென ஒரு வழியை உடையவர், மேலும் விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் எவ்வாறெல்லாம் மாறுகின்றதோ, (அதற்கேற்ப) அவற்றுடன் மாறக்கூடியவரைப் பொறுத்தவரையில், நிச்சயமாக அத்தருணத்தில் ஒரு உறுதியான தூணின் (ஆதரவின்) பக்கம் அவர் திரும்ப மாட்டார்.  

இதன் காரணமாகவே, உலமாக்களுடைய அடையாளங்களிலிருந்து உள்ளதாவது, அவர்கள் கல்வியியைக் கொண்டு ஒரு உறுதியான தூணின் (ஆதரவின்) பக்கம் அடைக்கலம் தேடுவர். இதனால் அவர்கள் விடயங்கள் எவ்வாறெல்லாம் மாறினாலும், நிச்சயமாக திரும்புவதற்கென உறுதியான தூண் (ஆதரவு) என்பது அவர்களிடத்தில் உள்ளது.

மன்ஹஜ் இருப்பதால் உள்ள பயன்களிலிருந்து உள்ளதாவது, விடயங்களுக்கென ஒரு சரியான மதிப்பீடு இருக்கும். 

மக்கள் எப்பொழுதும் விடயங்களை மதிப்பீடு செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர். இது நன்றாக உள்ளது, இது நன்றாக இல்லை, இது அசத்தியமானது, இது கெட்டது, இது நல்லது (என மதிப்பீடு செய்வர்களாக இருக்கின்றனர்). எனவே, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கென ஒரு பேச்சு, அவர்களுக்கென ஒரு வழி (என்றுள்ளது). மேலும் ஒவ்வொருவரும் தான் கொண்டுவரக்கூடியதே சரியானது என நம்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். 

எனவே, மன்ஹஜ் என ஒன்று இருப்பது கருத்துக்களை நெருக்கமாக்கும். மேலும் விடயங்களுக்கென ஒரு சரியான மதிப்பீடு இருக்கும்.  

(மேலும்) மன்ஹஜ் என ஒன்று இருப்பது, விடயங்களைக் குறித்து தவறான முறையில் சிந்திப்பதை விட்டும் பாதுகாக்கும். எனவே, ஷரீஅத்திலிருந்து இல்லாத ஒன்றை அதனுடன் தொடர்புபடுத்தும் தவறு ஏற்படாது இருக்கும். 

இதன் காரணமாகவே, "இதுதான் இஸ்லாம், மேலும் இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது, மேலும் இஸ்லாம் இதனை நோக்கி அழைக்கின்றது" என அநேக (மக்கள்) கூறுவதை நாம் இன்று காண்கின்றோம். மேலும் மாறுபட்ட பல கூற்றுகளும் இருக்கின்றன.

எனவே, இதுதான் இஸ்லாமா? மேலும் இதுதான் இஸ்லாமா? மேலும் இதுதான் இஸ்லாமா? (என சரியான இஸ்லாம் குறித்து கேள்வி எழும்புகின்றது).

ஆகையால், ஒரு மனிதரை இது மாதிரியான மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கும் (சரியான) வழிமுறை சிந்தித்தலில் இருப்பது அவசியமாகும்.

மேலும் மன்ஹஜ் என ஒன்று இருப்பதால் உள்ள பயன்களிலிருந்து உள்ளதாவது, உண்மைநிலை மற்றும் பொய்யானதற்கு மத்தியில், உண்மைநிலை மற்றும் அதற்கு முரணானவற்றிற்கு மத்தியில் பிரித்துப்பார்ப்பது என்பது (சாத்தியமாகும்).   

ஏனெனில், ஒரு முஸ்லிமின் இலக்கு எது? சத்தியத்தை (அடைந்து கொள்வதே) ஆகும். சத்தியத்தை (அடைந்து கொள்வதும்), சத்தியத்தின் பக்கம் அழைப்பதும், சத்தியத்தை பற்றிப் பிடிப்பதுமே நம்முடைய இலக்காகும். 

அது எவ்வாறு அறிந்து கொள்ளப்படும்? அதற்கென அதற்குரிய வழிமுறைகள் உள்ளன. அவற்றிலிருந்து உள்ளதாவது, சிந்திக்கும் வழிமுறையானது சரியானதாகவும், முறையானதாவும் இருப்பதாகும். 


- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post