- MBM. இஸ்மாயில் மதனி
அரபுலகில் பல பிரதேசங்கள் தொடர் அநீதிகளை அனுபவித்துவரும் பிரதேசங்களாகும். சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கமும் பிராந்திய அரசியல் மேலாதிக்கப் போட்டிகளும் கொள்கை ரீதியான வேறுபாடுகளும் இதில் பெரும் பங்காற்றுகின்றது.
அப்பிரதேசங்களில் மிக முக்கியமானது தான் அல்- அஹ்வாஸ் (அல்லது அரபிஸ்தான்). இது இன்றைய ஈரானில் உள்ள ஒரு பிரதேசமாக இருந்தாலும், அதன் மக்கள், மொழி, பண்பாடு அனைத்தும் அரபு அடையாளங்களால் நிரம்பியதாகும். இன்று, இந்த அரபு நிலம், தனது உரிமைகள், அடையாளம் மற்றும் சுதந்திரத்திற்காக போராடி வருகிறது.
பலஸ்தீனத்தை விடவும் சுமார் 16 மடங்கு பெரியதோர் நிலப்பரப்பைக்கொண்டதாகும். இங்கு அரபுலகின் பிரபல்யமான கோத்திரங்கள் வாழ்ந்துள்ளன பலர் ஈரானின் கெடுபிடிகளால் இடம்பெயர்ந்தாலும் அவர்களின் பரம்பரைகள் தற்போதும் வசித்துவருகின்றன.
வரலாற்றுப் பின்னணி:
அல்-அஹ்வாஸ் ஒரு காலத்தில் சுதந்திரமான அரபு பிரதேசமாக இருந்தது. ஷேக் கஸ்அல் இப்னு ஜாபிர் அல் காஅபி என்ற அரபு தலைவர், 1925 ஆம் ஆண்டு வரை இப்பகுதியை ஆட்சி செய்தார். பிரஅத்தானிய ஆக்கிரமிப்புக்கு அச்சுருத்தலாக குறிப்பாக அரபுக் கடலில் இவரது இருப்பு பிரித்தானியாவுக்கு பல சவால்களை உருவாக்கியதனால் ஈரானுடன் பிரித்தானியா செய்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக அதன் அப்போதைய ஆட்சியாலர் ஷா ரேசா பஹ்லவி தனது இராணுவத்துடன் அல்-அஹ்வாஸை கைப்பற்றி, அரபு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
மக்கள், மொழி மற்றும் அடையாளம்:
இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் அரபுகள். அவர்கள் அரபு மொழியைப் பேசுகிறார்கள் மற்றும் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் கொள்கையைச் சேர்ந்தவர்கள் ஆனால் ஈரான் அரசாங்கம் அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்க ஒழுங்குபடுத்தப்பட்ட "பாரசீக மயமாக்கல்" (Persianization) நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரபு பெயர்கள் மாற்றப்படுகின்றன, அரபு மொழியில் கல்வி தடைசெய்யப்படுகிறது, மற்றும் பண்பாட்டு விழாக்கள் அடக்கப்படுகின்றன.
பொருளாதார நலன்களும் புறக்கணிப்பும்:
அல்-அஹ்வாஸ் பிரதேசம், ஈரானின் முக்கிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதுடன், கரூன் (Karun) போன்ற முக்கியமான நதிகளை கொண்டுள்ளது. ஈரான் முழுக்க உற்பத்தியாகும் எண்ணெயில் சுமார் 80% இந்தப் பகுதியில் இருந்து வருகிறது. அதிக இயற்கை வழங்களைக் கொண்டதாக இப்பிரதேசம் இருந்தபோதும் மத்திய அரசின் தேவைகளுக்கே அவை பயன்படுத்தப்படுகின்றன.
இப்பகுதி மக்கள் அதிக வறுமையும், வேலைவாய்ப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள். இவர்களின் இயற்கை வளங்கள் அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை.
அரசியல் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள்:
இப்பகுதியில் பல அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் தோன்றியுள்ளன. முக்கியமான அமைப்புகளில் "அல்அஹ்வாஸ் விடுதலை இயக்கம்" (Ahvaz Arab Liberation Movement) ஒன்றாகும். இவ்வியக்கங்களை தலைமை வகித்தவர்களில், யாகூப் ஹர் அல் தஸ்தரி மற்றும் ஹபீப் அஸியூத் போன்றோர் ஈரானால் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகினர். இதனிடையே, உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், ஈரானின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள போதும் போதியளவான ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை.
சர்வதேச ஆதரவு:
Amnesty International, Human Rights Watch மற்றும் ஐ.நா. மனித உரிமை மன்றம் போன்ற அமைப்புகள், அல்அஹ்வாஸ் மக்கள் எதிர்கொள்ளும் இனவாத அடக்குமுறைகள், மொழி அடக்கம், மற்றும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுப்பு ஆகியவற்றை பதிவு செய்து வருகின்றன. பல ஐரோப்பிய நாடாளுமன்றங்களிலும் இந்த பிரச்சனை குறித்து உரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக 2011, 2018, 2021 காலப்பகுதிகளில் ஏற்பட்ட மிகப் பெரிய அளவிலான மக்கள் புரட்சிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டாலும் அரபுகளுக்கு எதிரான ஊடகப்போரின் உக்கிரத்தால் அது போதியளவான ஊடக மயமாக்களையோ சர்வதேச மக்கள் ஆதரவையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எதற்கெடுத்தாலும் ஸியோனிஸ்டுகள் மொசாட்டுகள் என்று கதையளப்பதில் கெட்டிக்காரனான ஈரான் அந்த குற்றச்சாட்டுக்களை சொல்லியே அவர்ககளையும் அழித்துவருகின்றது
அல்லாஹ் அவர்களின் வாழ்விலும் பரகத் செய்வானாக அவர்களுக்கும் சுதந்திரத்தை நஸீபாக்குவானாக...
இதன் வரலாறு தொடர்பில் விரிவாக பார்க்க விரும்புவோர்...
https://ahwazstat.org/
تاريخ عرب الأهواز لعبد النبي القيم
الأحواز.. عربستان لعلي نعمة الحلو
الاحواز في سطور ذهبية
الاحواز .. عربستان عمارة في دائرة النسيان
رحلة الى عرب أحواز العراق