அசிங்கமானவைகளை உண்ணும் ஹலாலான பிராணிகளை எவ்வாறு அறுப்பது?

குப்பைத் தொட்டிகளில் மேயும் பிராணிகள் 
'' جَلّالة " "ஜல்லாலா" என அழைக்கப்படுகின்றன. 
அதாவது நல்லவைகளோடு சேர்த்து அசிங்கமானவைகளை உண்ணும் கோழி, ஆடு, மாடு, ஒட்டகை போன்ற ஹலாலான மிருகங்கள் என்பது இதன் பொருளாகும்.

அவற்றைப் பிடித்து உடனே அறுத்து உண்ணுவதை நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள் (ஹதீஸ்).

அந்த அடிப்படையில் அவற்றைத் தனிமைப்படுத்தி புல் கொடுத்து அதன் உடல் நிலை மாற்றமடைந்து அவற்றின் மாமிசம் உண்பதற்கு உகந்ததாக மாறிய பிறகு அறுக்க வேண்டும்.

ஒட்டகம் 40 நாட்கள்.
மாடு 30 நாட்கள்.
ஆடு ஒருவாரம்.
கோழி மூன்று நாட்கள் என்பது ஃபிக்ஹ் துறை அறிஞர்களின் விளக்கமாகும்.

-தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم