குர்ஆன் சுன்னா ஒளியில் பெண்கள் முகத்தை மூடுவது

السلام عليكم ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். 

திருக்குர்ஆன் 24:30

 وَقُل لِّلْمُؤْمِنتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أو آيابِهنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَابِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي الرِّجَالِ أَو الطَّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَتِ النِّسَاءِ وَلَا أَخَوَتِهِنَّ أَوْ نِسَابِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَاتُهُنَّ أَوِ التَّبِعِينَ التبعين غير أولى الأربة من يضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்.) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். 

திருக்குர்ஆன் 24:31

இந்த வசனம் அஸ்மா பின் முர்ஷிதா (ரலி) அவர்களின் விஷயத்தில் இறங்கியது. ஆதாரம் தப்ஸீர் குர்ஆனுல் அழிம்.

இந்த வசனத்தில் ‘அதிலிருந்தும் வெளியே தெரியகூடியவைகளை தவிர’
(وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا) என்ற வாக்கியதிற்கு இப்னு மஸ்ஊது (ரலி) விளக்கம் கூறுகயில் அலங்காரம் இரண்டு வகைப்படும் 
1. வெளியில் தெரிபவை 
2. மறைந்திருப்பவை
இங்கு வெளியில் தெரியும் அலங்காரம் அது அவளின் ஆடையை (ஹிஜாப்) குறிக்கிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரி பெண்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஏனெனில் இந்த வசனம் அருளப்பட்டவுடன் அவர்கள் தங்களின் முந்தானைகளைக்கொண்டு தங்களது மார்புகளை மூடி கொண்டார்கள் மேலும் முந்தானைகளை கிழித்து உடல் முழுவதையும் மூடிக்கொண்டார்கள் 
ஆதாரம் புஹாரி

இந்த ஹதீஸ் குறித்து இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) விளக்கம் கூறுகயில் இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள ‘பஹ்தமர்ணபிஹா’ என்ற வார்த்தைக்கு அவர்கள் தங்கள் முகத்தையும் சேர்த்தே மூடிகொண்டார்கள் என்பதே ஆகும் 
ஆதாரம் பத்ஹுல் பாரி

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஹ்ராம் அணிந்த நிலையில் பெண்கள் முகத்திரை அணியவேண்டாம், மேலும் தங்களுடைய காலுறைகளையும் அணிய வேண்டாம் - 
ஆதாரம் புஹாரி

இதற்க்கு இமாம் அபூபக்கர் இப்னு அரபி (ரஹி) விளக்கம் கூறுகயில் இஹ்ராம் அணிந்த நிலையை தவிர மற்ற சமயங்களில் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயமாகும். 
ஆதாரம் ஆரிததுல் அஹ்வதி

இமாம் இப்னு தைமியா கூறுகிறார் : இந்த ஹதீஸிலிருந்து திட்டவட்டமாக தெரிவது
என்னவென்றால் முகத்தை மூடுவதும் காலுறை அணிவதும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஒன்று அதை யாரும் தடுக்கவில்லை. 
ஆதாரம் அர் ரிசாலா

நபி ஸல் கூறினார்கள் : பெண்கள் முழுவதும் மறைக்கப்பட வேண்டியவளே. ஒரு பெண் வெளியே சென்றால் ஷைய்தான் அந்த பெண்ணை சூழ்ந்து கொள்கிறான். 
ஆதாரம் திர்மிதி

இமாம் ஹமூத் அத் தவீஜீறி (ரஹி) கூறினார்கள்:
இந்த ஹதீஸ் திட்டவட்டமாக தெரிவிப்பது என்னவென்றால் பெண்களுடைய அனைத்துப்பகுதிகளும் முகம், கை, உட்பட மறைக்கப்பட வேண்டியவையே.
ஆதாரம் கிதாபுத் தத்கீர்

ஒவ்வொரு முஃமினான பெண்ணும் அந்நிய ஆண்களுக்கு முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஹிஜாபைக் கொண்டு தங்களுடைய உடலின் அனைத்துப்பகுதிகளையும் மறைத்தாக வேண்டும். இவ்வாறே சஹாபியப் பெண்மணிகளும் புரிந்து வைத்திருந்தனர்.

இமாம் ஸாலிஹ் அல் பெளசான் அவர்களிடம் இஹ்ராம் அணிந்த நிலையைத் தவிர மற்ற நிலைகளில் பெண்கள் முகத்தை திறந்து வைக்கலாமா என வினவப்பட்ட போது அவர் கூறினார்:
சரியான கருத்து என்னவெனில் பெண்கள் முழுவதும் மறைக்கப்பட வேண்டியவர்களே. 
கட்டாயமாக முகத்தை மூட வேண்டும் ஏனென்றால் அவர்களின் முகத்திலிருந்து அதிகாமான குழப்பங்கள் ஏற்படுகின்றன. எல்லாருடைய பார்வையும் முதலில் முகத்தை நோக்கி தான் திரும்புகின்றன. மற்றும் மற்ற அனைத்து பகுதிகளை விடவும் முகத்தில் தான் அழகு சேர்கின்றது. எனவே மறைக்கப்பட வேண்டியவைகளிலேயே மிகவும் முக்கியமானது முகம் தான். 
-ஆதாரம் தாருல் இஃப்தா

يأَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ وَبَنتِكَ وَنِسَاءِ المُؤمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذلك أدنى أن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும். உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். 
(33:59)

இவ்வசனம் இறங்கிய போது சஹாபிய பெண்மணிகள் தங்கள் உடல் முழுவதும் கருப்பாலான ஆடையால் மூடினர். இவ்வசனத்தில் அல்லாஹ் 'அவர்கள் அறிந்து கொள்ள' என அறிவுறுத்த வருவது என்னவென்றால் யார் என்பதை அறிந்துகொள்ள அல்ல மாறாக அப்பெண் சுதந்திரமானவள் என அறிந்துகொள்ளவே.

ஆதாரம் தப்சீர் அல்குர்ஆனுல் அளிம்

சில அறிவீனர்கள் இவ்வசனத்தின் பொருளைத் திரித்து ‘அது இன்னாருடைய மகள் என அறிந்துகொள்வதற்காக’ என்று மாற்று விளக்கம் தருகின்றனர். இது அவர்களின் சொந்த கருத்தைத்தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் வாதப்படி அந்த வாக்கியம்  இன்னார் என்று அறியப்படுவதற்கென்றால், ஒரு சமயம் தெரியாத பெண் வந்தால் அவரை எப்படி அறிய முடியும்.

இவ்வசனத்திற்கு விளக்கம் அபூ மாலிக் (ரலி) கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் தங்களின் தேவைகளுக்காக இரவு நேரத்தில் வெளியே செல்வார்கள். அச்சமயத்தில் முஃனாபிக்கள் சிலர் அவர்களை தொந்தராவு செய்வார்கள் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் மனைவியர் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அந்த முஃனாபிக்களை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர்கள் அடிமைப்பெண்களை மட்டுமே அவ்விதம் செய்தோம் என்று கூறினர். அப்போது தங்களை வித்தியாசப்படுத்துவதற்காக ஹிஜாப் வசனம் வலியுறுத்தி இறங்கியது.

وَإِذَا مَا لَتُمُوهُنَّ مَتَاعًا فَسَلُوهُنَّ مِن وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ

நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும். (33:53) 

இவ்வசனத்தில் அல்லாஹ் நீங்கள் ஒரு பொருளைக் கேட்டால் ஹிஜபுக்குப் பின்னால் இருந்து கேளுங்கள் என கூறுகிறான். ஹிஜாப் என்பதின் அர்த்தம் இரண்டு பொருளுக்கு நடுவில் முற்றிலுமாக முழுவதுமாக மறைந்திருப்பது ஆகும்.

இவ்வசனத்திற்கு வழிகேடர்கள் விளக்கம் கூறுகையில் இது நபி ஸல் அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால் உலமாக்களுக்கு மத்தியில் இதில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

இமாம் அல் புஹாரி ரஹ் இவ்வசனம் இறங்கிய காரணத்தை கூறுகிறார்கள்:

உமர் ரலி நபி ஸல் அவர்களிடம் கூறுகிறார்கள் உங்களைப்பார்க்க நல்லவனும் கெட்டவனும் வருகிறார்கள் எனவே முஃமினுடைய தாய்மார்களுக்கு ஹிஜாபைக் கொண்டு கட்டளையிடலாமே என்று கூறினார்கள். உடனே அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கினான்

1. இமாம் இப்னு ஆசிர் இச்சட்டம் நபி ஸல் அவர்களின் மனைவி மார்களுக்கு மட்டுமே எனக்கூறுகிறார்.

2. இமாம் அத் தபரி ரஹ் இது அனைத்து முமினான பெண்களுக்கும் என்று கூறுகிறார்.

இவ்வசனத்திற்கு இரு கருத்துக்கள் உலமாக்கள் மத்தியில் இருந்தாலும் இதில் ஏற்கத்தக்க கருத்து இரண்டாம் கருத்தேயாகும். 
-ஆதாரம் அத்வாவுல் பயான்

இவ்வசனத்தில் இரு கருத்துக்கள் இருந்தாலும் மற்ற வசனங்கள் தெளிவாக (முகத்தை மூடுவது பற்றி) உள்ளன.
 
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌  وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் (அலங்காரத்தை,) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளை தம் மேல் சட்டைகளின்மீது போட்டு (தலை கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும், மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவர்களின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவர்களின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றெவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம், அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம், விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள்.

அல்குர்ஆன் : 24:31

இவ்வசனத்திற்கு அல்லாமா இப்னு உஸைமின் விளக்கம் கொடுக்கும் போது இது முகத்தை மூடுவது பற்றி பேசுகிறது என்கிறார் 
- ஆதாரம் தப்ஸீர் இப்னு உசைமின்

يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ  ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ  وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும். உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். 
அல் குர்ஆன் 33:59

இப்னு அப்பாஸ் ரலி இவ்வசனதிருக்கு விளக்கம் கூறுகையில் இங்கு அல்லாஹு தஆலா முஃமீனான பெண்களுக்கு ஹிஜாபுடைய கட்டளையை பிறப்பித்துள்ளான். அவர்கள் ஒரு தேவையின் காரணமாக வெளியே சென்றால் அவர்கள் தங்களுடைய ஜில்பாபை கொண்டு தலையையும் முகத்தையும் மூட வேண்டும்.

இப்னு உஸைமின் கூறுகிறார் இச்சட்டம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து பெறப்பட்டது என சில விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். 

33:59 இவ்வசனம் திட்டவட்டமாக தெரிவிப்பது என்னவென்றால் ஹிஜாப் அனைத்து முஃமீனான பெண்கள் மீதும் கட்டாய கடமையாகும்.

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா கூறுகிறார்: அந்நிய ஆண்களுக்கு முன்னாள் பெண்கள் முகத்தை திறந்துவைப்பது ஆகுமானதல்ல.

அஸ்மா பின்த் அபூபக்கர் ரலி கூறுகிறார்கள் நாங்கள் அந்நிய ஆண்களிடமிருந்து எங்களுடைய முகங்களை மூடிக்கொள்பவர்களாக இருந்தோம் 
-ஆதாரம் ஹாகிம்

சில மக்கள் ஹிஜாப் (முகத்தை மூடுவது) நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டுமே என்று கூறுகிறார்கள் ஆனால் இந்த ஹதீஸில் அஸ்மா பின்த் அபூபக்கர் அறிவிக்கிறார்கள் (كنا نغطي) நாங்கள் முகத்தை மூடுபவர்களாக இருந்தோம். நாங்கள் என்பது ஸஹாபி பெண்மணிகளை குறிக்கிறது எனவே இது ஒட்டுமொத்த முஃமீனான பெண்களுக்கும் இச்சட்டம் என்பது விளங்குகிறது.

இமாம் அபூபக்கர் அர் ராஜிஹி கூறுகிறார்: இவ்வசனம் முஸ்லிமான எல்லா பெண்களுக்கும் கட்டளையிடுகிறது அந்நிய ஆண்களை விட்டும் முகத்தை மூடவேண்டும் என்பதாக 
- ஆதாரம் அஹ்காமுல் குர்ஆன்

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். ஃபழ்ல் (ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள். 'ஆம்!' என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது. 
- ஆதாரம் புஹாரி
أحدث أقدم