-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
லைலதுல் கத்ரை தேடும் இரவுகளில் அதில் நின்று வணங்க முடியாத மாத சூழற்ச்சி பெண்கள்/நோயாளிகள் /நோயாளிகளுடன் மருத்துவமனையில் இருப்பவர்கள் /வயோதிகர்கள்/பயணத்தில் இருப்பவர்கள் போன்ற தங்கடத்திற்கு உரியவர்களுக்கு எனது தகவல்....
லைலதுல் கத்ர் என்பது தொழுகையோடு மட்டும் சுருக்கப்பட்ட ஒன்றல்ல, அல்லாஹ்வின் அருள் மிகவும் பெரிதும் அவனுடைய இரக்கம் மிகவும் விசாலமான ஒன்று, நற்கருமங்களின் வாயில்களான கியாமுல் லைல்/ தராவீஹ்/ தஹுஜ்ஜுத் போன்ற இபாதாதுக்கள் இல்லாமல இன்னும் நிறைய இருக்கின்றன, நீங்கள் வேறு சில வழிகளின் ஊடாக இரவு முழுவதும் நின்று வணங்க கூடிய நன்மையை இறையருளால் இலகுவாக பெறலாம்
1. அல்லாஹ்வை நினைவு கூறுவது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்,அல்லாஹு அக்பர்,லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அதிகம் அதிகம் ஓதுவது.
2. துஆவை பொதுவாக செய்வது குறிப்பாக
اللهم إنك عفو تحب العفو فاعف عنا
"அல்லாஹும்ம இன்னக அப்ஃவுன் துஹிப்புல் அப்ஃவ பஃபுஃ அன்னி",
இறைவா நீ மன்னிப்பை விரும்பக்கூடிய மன்னிப்பவனாக இருக்கிறாய் எங்களை மன்னித்துவிடு.
என்ற இந்த துஆவை அதிகம் ஓதுவது. அதிலும் குறிப்பாக
சொர்க்கத்தை கேட்பது நரகத்தை விட்டும் பாதுகாப்பு கேட்பது.
3. திருக்குர்ஆனை பொருள் அறிந்து ஓதுவதும்,கேட்பதும் அதற்கு முயற்சி செய்வது.
4.இறைத்தூதர் ஸல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓதுதல்.
5. தவ்பாவை புதுப்பித்துக் கொள்வது அல்லாஹ்விடம் பாவத்திலிருந்து மீள்வது பாவ எண்ணங்களை களைவதற்கு உறுதிமொழி எடுப்பது.
6. முஸ்லிம்களின் சுமைகளையும் பொருளாதார பிரச்சினைகளையும் தர்மங்கள் தருவதின் ஊடாக குறைப்பது.
7. வீட்டில் நமது பிள்ளைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுவது அல்லாஹ்வுடனான அவர்களின் தொடர்பை வலுப்படுத்துவது.
8. தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்வது அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது.
9. நோயாளிகளை சந்திப்பது அவர்களுக்காக துஆ செய்வது.
10. சண்டை இட்டுக் கொண்ட இரண்டு நபர்களை ஒற்றுமை படுத்துவது.
11. இறை இல்லங்களில் லைலதுல் கத்ர் இரவைத் தேடி கடைசி 10 ன் ஒற்றைப்படை இரவுகளில், விழிப்பவர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்வது.
12. கணவன் தனது மனைவிக்கும் மனைவி எனது கணவனுக்கும் நல்லுபகாரம் செய்வது.
13. உரிமைகளை அதற்குரியவர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, அநீதம் இழைக்க பட்டவர்களுக்கு நீதத்தை பெற்று தர முயற்சி செய்தல்.
இதேபோன்று இன்னும் ஏனைய நற்கருமங்கள் இருக்கின்றன, இந்த நற்கருமங்கள் உங்களுக்கு லைலதுல் கத்ரின் வணக்க வழிபாடுகளின் நன்மைகளில் எந்த குறையும் இன்றி இறையருளால் பெற்றுத்தரும்.
ஆக இந்த நாளில் நின்று தொழ முடியவில்லை என்று ஏக்கம் கொள்ள தேவையில்லை, இன் ஷா அல்லாஹ் இந்த நற்கருமங்களை செய்வோம் இறை பொருத்தத்தை பெறுவோம் வாருங்கள்.
رسالتي إلى أهل الأعذار الذين لا يستطيعون قيام الليل في ليلة القدر.
==================================
د.احمد الشواف
كالمرأة الحائض، والشيخ الهرم والعجوز، والمريض.
إن ثواب ليلة القدر لا يقتصر على الصلاة فقط.
ففضل الله كبير ورحمته وسعت كل شيء .
يا أهل الأعذار أبواب الخير غير القيام كثير.
لكم أبواب أخرى قد تنالوا بسببها ثواب القائم المتهجد، ومنها:
1- ذكر الله عموما ومنه التسبيح والتكبير والتهليل والتحميد .
2- الدعاء عموما، وأهمه اللهم إنك عفو تحب العفو فاعف عنا، وطلب الجنة والعتق من النار.
3- قراءة القرآن ، أو سماعه مع التدبر.
4- الصلاة على النبي صلى الله عليه وسلم.
5-تفريج كربات المسلمين ، ومنها الصدقات .
5- تجديد التوبة والرجوع إلى الله وكثرة الاستغفار.
6- الجلوس مع الأبناء وتعليمهم العلم الشرعي أو وعظهم بكل ما يقربهم إلى الله.
7- بر الوالدين وإدخال السرور عليهما.
8- قضاء حوائج المسلمين.
9- زيارة المريض والدعاء له.
10-الإصلاح بين المتخاصمين.
11- عمل وجبات سحور للقائمين المتهجدين في المساجد.
12-الإحسان من الزوجة لزوجها ومن الزوج لزوجته.
13- رد الحقوق والمظالم لأهلها.
وغير ذلك من أبواب الخير الكثيرة جدا التي قد ينال المرء بسببها ثواب ليلة القدر، فلا يقتصر الأمر على الصلاة فقط .