பண்பாடான வார்த்தைகளை பேசுவது என்பது இலக்கியத் துறையின் ஒரு கலை ....!!!
"நோயாளி", என்று கூறுவதைவிட
"ஆரோக்கியத்தை நாடுபவர்", என்று கூறலாம்.
"குருடர்", என்று கூறுவதை விட "மாற்றுத்திறனாளி", என்று கூறலாம்
"ஒற்றைக்கண் கொண்டவர்", என்று சொல்வதைவிட "மேன்மையான கண் கொண்டவர்" என்று கூறலாம்.
ஒரு முறை கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள் தனது அரண்மனையில் கொட்டிக் கடந்த மூங்கில் குவியலைப் பற்றி கேட்டார். அதற்கு, அமைச்சர் ஃபழ்லு பின் ரபீஃ, "கலிஃபா அவர்களே!
அவைகள் "வில் அம்பின் நார்களாகும்",
என்று பதிலளித்தார்.
மூங்கில் என்ற அரபி அர்த்தமுடைய "கீர்ஸான் - خيرزان ", என்ற வார்த்தையை ,அமைச்சர் பதிலாக அளிக்கவில்லை. ஏன் என்றால், மன்னருடைய தாயின் பெயர் கீர்ஸான் - எனவே அமைச்சர் இடமறிந்து பேசினார்.
ஒருமுறை ஒரு அரசர் அரபுமொழியில் தனது மகனிடம் மிஸ்வாக் என்ற வார்த்தையின் பன்மையை கேட்டார். அதற்கு அரபுமொழியில் " மஸாவீக் - مساويك ",
என்று சொல்லப்படும். அதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது "உனது குறைகளும் இழிவுகளும் " என்று.
தந்தை தன்னை சோதிப்பதற்காக கேட்கிறார் என்று அறிந்த மகன், புத்திசாலியாக "மஸாவீக்" என்ற பதில் சொல்லாமல், "உங்களின் சம்பூர்ண குணத்திற்கு எதிரான ஒன்று" என்று கூறினார்.
அமீருல் மூமினீன் உமர் பின் அல்கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை நகர் வலம் வருகிற பொழுது, தீயை மூட்டி அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றார்கள். "நெருப்பை மூட்டி அமர்ந்திருப்பவர்களே!" என்று கூறுவதற்கு பதிலாக , "வெளிச்சத்தில் அமர்ந்து இருப்பவர்களே!" என்று சபை ஒழுக்கத்தைப் பேணி கூறினார்கள்.
ஏனென்றால், அரபுமொழியில் நெருப்பு - نار என்பதற்கு நரகம் என்ற அர்த்தமும் இருக்கிறது. அதாவது நரகவாசிகள் என்று அர்த்தமாகக் கொள்வதை தவிர்த்துக் கொண்டார்கள்.
ஒரு முறை அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் "நீங்கள் பெரியவரா ? அல்லது இறைத்தூதர் ﷺ அவர்கள் பெரியவரா ?" என்று கேட்கப்பட்ட பொழுது,
"இறைத்தூதர் ﷺ அவர்களே! பெரியவர் நான் அவர்களுக்கு முன்பாக பிறந்து விட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
என்ன அருமையான சொல்லாடல்கள்!!!
இன்று நமது சமூகத்தில் தொலைந்து போன பொக்கிஷங்கள்....!!!
பிறர் உள்ளத்தை காயப் படுத்துவதற்கும் அவர் அன்பை பெறுவதற்கும் இடையில்
" சொல்லும் விதம் " என்ற ஒரு மெல்லிய கயிறு துண்டித்து விடாமல் இருக்கிறதா என்று நாம் நம்மை சோதித்துக் கொள்ள வேண்டும்.
அரபு மொழியில் பதிவு செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்திலிருந்து....
- தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
من فنون الأدب اختيار اللفظ المناسب .. حتى قالوا:
⚘⚘ ( لكل مقام مقال ) ⚘⚘
فيقال للمريض "معافى"
و للأعمى "بصير"
و للأعور "كريم العين"
• وكان هارون الرشيد قد رأى في قصرهِ ذات مرة حزمة من الخيزران
فسأل وزيره الفضل بن الربيع:
ما هذه ؟.
فأجابه الوزير: عروق الرماح يا أمير المؤمنين.
أتدرون لماذا لم يقل له: إنها الخيزران؟
لأن أم هارون الرشيد كان اسمها "الخيزران"، فالوزير يعرف من يخاطب؛ فلذلك تحلى بالأدب في الإجابة.
• وأحد الخلفاء سأل ابنه من باب الاختبار : ما جمع مسواك ؟
فأجابه ولده بالأدب الرفيع : (ضد محاسنك يا أمير المؤمنين).
فلم يقل الولد: (مساويك) لأن الأدب هذّب لسانه، وحلّى طباعه.
• وخرج الفاروق عمر رضي الله عنه- يتفقد المدينة ليلاً، فرأى ناراً موقدة، فوقف، وقال : يا أهل الضَّوء، وكره أن يقول: يا أهل النَّار.
• ولما سُئِل العباس- رضي الله عنه،
أنت أكبر أم رسول الله ﷺ
فأجاب العباس قائلا :
"هو أكبر مني، و أنا ولدت قبله"
ما أجملها من إجابة في قمة الأدب لمقام رسول الله ﷺ
اختيار الألفاظ قيمةٌ ضاعت للأسف فى مجتمعاتنا،
يجب أن نعي جيدا أن بين كسر القلوب وكسبها خيطاً رفيعاً اسمه "الأسلوب"..
منقول ⚘