இசை : தடைக்கு ஆதாரமாக உள்ள மூன்று குர்ஆனிய வசனங்கள் :
உலமாக்களால் கீழ்க்கண்ட மூன்று வசனங்கள் இசைக்கு எதிரான நிரூபணமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என இமாம் குர்தூபி அவர்கள், தனது குர்ஆனுக்கு விளக்கவுரை (தப்ஸீர்)யான அல்-ஜாமியிலி அஹ்காமில் குர்ஆன் - ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
முதல் வசனம் :
أفمن هذا الحديث تعجبون . وتضحكون ولا تبكون . وأنتم سمدون . فاسجدوا لله واعبدوا
பொருள் : இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கவும் செய்கின்றீர்கள். நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்கள். (இதனைப் பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுங்கள். (அவனையே) வணங்குங்கள். சூரா அந்நஜ்ம் : 59-62.
இதையே ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
Wasting your (precious) lifetime in pastime and amusements (singing etc.,). While you amuse yourselves (proudly) in vanities? Surah : An najm – 61).
பொருள் : உங்களது (பொன்னான) நேரங்களை (வாழ்க்கையை) வீண்பொழுது போக்குகளிலும், வேடிக்கை விநோதங்களிலும் (இசையிலும்) கழித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களை நீங்களே (தற்பெருமைகளில்) வீணடித்துக் கொண்டிருக்கும் பொழுது? (Maktaba Dar-us-salam –Riyadh. Al-Qur’an. Eng.Trans)
இங்கே நமது ஆதாரத்துக்குத் தேவையான வசனம் 61 ம் அதில் வரக் கூடிய وأنتم سمدون என்ற சொல் மட்டுமே. இதில் வந்துள்ள சொல்லாகிய سمدون (சாமிதூன்) என்ற சொல் மட்டுமே நமது ஆய்வுக்குரியது. இங்கு சாமிதூன் என்ற சொல்லுக்கு மூலச் சொல்லான سمداசமதா என்பதற்கு, அரபி மொழி இலக்கண மற்றும் மொழியியலாளர்கள் பல்வேறு பொருள்களைத் தந்துள்ளார்கள். அதை வைத்துத் தான் குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள், வெவ்வேறான பல மொழி பெயர்ப்புக்களை, தமது மொழி பெயர்ப்புக் குர்ஆன் - களிலே பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
இங்கே, இமாம் அல் குர்தூபி அவர்கள் மொழி வழக்கிலே பல்வேறு விதமாகக் கையாளப்படும் பொருள்களைக் கீழே தருகின்றார்கள் :-
சாமிதூன் என்பதன் மூலச் சொல்லாகிய சமதா என்பது, ஒருவன் பெருமை கொண்டு தன் தலையை உயர்த்துதல் என்ற பொருளைத் தரக் கூடியது.
வினைச் சொல்லாக இருக்கும் பொழுது, பெயர்ச்சி சொல்லாகிய سمود சமூத் என்ற சொல், ஓய்வாக இருத்தல் அல்லது பொழுதை வீணாகக் கழித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் அந்த வினையைப் புரிபவருக்கு سمد(சாமித்) என்றாகி, யார் தன் பொழுதை வீணான முறையில் இசை இசைப்பதிலும் அல்லது இது போன்ற செயல்களிலும் விளையாட்டுத்தனமாத் திரிகின்றார்களோ அவர்களைக் குறிக்கும். அதே போல பெண்பாலில் இச் செயலைப் புரிபவளுக்கு أسمديناஅஸ்மிதினா (உனது பாடலைக் கொண்டு எங்களை உற்சாகப்படுத்து) என்ற பொருளைத் தரக் கூடியது.
இருப்பினும், சாமித் என்பது, ஒருவன் தற்பெருமை கொண்டு, கர்வம் கொண்டு தலையை உயர்த்தித் திரிதில் என்று மிகப் பழைய அரபி அகராதியாகிய அஸ்-ஸிஹாஹ் - ல் குறிப்பிடப்பட்டுள்ளது. (See Al-Jawhar’s As-sihaah. Vol.2. p.489)
சமதா எனும் சொல்லுக்கு அசைவற்று இருத்தல், வீணாக சோம்பி இருத்தல் என்ற பொருளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல் ஜமாயிலி அஹ்காமில் குர்ஆனில் அல்-மஹ்தவி என்பவரால், சமதா என்ற சொல்லுக்கு கீழ்க்காணும் முறையிலும் பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, ஒருவனைக் கேலி மற்றும் வீணானவற்றைக் கொண்டு வழிபிறழச் செய்தல் ஆகும். ((Al-Jaami’li Ah kaamil Qur’an . vol.17, p.123)
இறுதியாக முப்ரித் என்பவர், சாமிதூன் என்பதற்கு, சாமிதூன் என்றால் காமிதூன் அதாவது அசைவற்றிருத்தல் அமைதி ஆகிய பொருளைக் குறிக்கும் என்கிறார்.
அத்தபரி என்பவர் ஸஹாபாப் பெருமக்களிடமிருந்தும் மற்றும் தாபியீன்கள் வழி மூலமாகவும் சில விளக்கங்களை தருகின்றார்கள். (See Jaami’ul Bayaan ‘an taweeli Aayil Qur’an. Vol.27. pp.82-84)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது, சாமிதூன் என்பது எங்கெல்லாம் திருமறை ஓதப்படுகின்றதோ, அப்படி ஓதப்படும் திருமறை வசனங்களை பிறர் செவியேற்காத வண்ணம் ஆடியும், பாடியும் கூச்சலிட்டு விளையாடியும் கெடுதல் செய்வார்களே முஷ்ரிக்குகள், அவர்களது இந்தப் பழக்கத்தைத் தான் குறிக்கும் என்கிறார்கள். see also Qurtubi’s Tafseer vol.17. p.123)
மேற்கண்ட அர்த்தம் தான் எமன் மக்களாலும் கையாளப்படுகின்றது.
மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதற்கு இரண்டாவதாக ஒரு பொருளையும் தருகின்றார்கள் :-
அதாவது, தமது வேலையை (பிரச்னைகளை) எளிதாக்கிக் கொள்வதற்காக விளையாட்டிலும், பொழுது போக்கிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்கள். இதே கருத்தை தாபியீன்களாகிய இக்ரிமா அவர்களும் மற்றும் அத்தஹாக் அவர்களும் ஆமோதித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மூன்றாவதாக இந்த கீழ்க்காணும் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். ஆதாவது, ஒருவன் தற்பெருமை கொண்டு தலையைத் தூக்கித் திரிவதைக் குறிக்கும்.
கதாதா அவர்கள், சாமிதூன் என்பது கவனமின்மையைக் குறிக்கும் என்றும், இது முஷ்ரிக்கீன்களின் பழக்கமாகும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், முஜாஹித் என்பவர் கடுமையான கோபம் அல்லது ஆத்திரம் என்றும் பொருள்படும் எனக் கூறியுள்ளார்.
ஆக, சாமிதூன் என்ற சொல்லானது இரைந்து பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், தமது நேரங்களை வீணான வகையில் கழித்துத், தற்பெருமை கொண்டு தலையை உயர்த்திக் கொண்டு திரிபவர்களையும், அல்லது இறைமறையையும் அதன் வசனங்களையும் பிறர் காதில் விழா வண்ணம் இறை அழைப்பைத் தடை செய்யும் நோக்குடன் மூர்க்கத்தனமாக, கோபங் கொண்டு, ஆவேசத்துடன் திரிபவர்களையும் குறிக்கக் கூடிய பொருளைத் தெளிவான முறையில் தந்து நிற்கிறது. மேற்கண்ட செயல்முறையானது இஸ்லாத்திற்கு விரோதமான, மாறுபாடான அதன் மேல் அவர்களது கவனமின்மையையும் குறிக்கக் கூடிய ஒரு கருத்துச் செறிவைத் தந்து நிற்கிறது.
மேலும், சாமிதூன் என்ற சொல்லுக்கு, கருத்து வழக்கில் பலவாறான பொருள்கள் கூறப்பட்டாலும், இசையைத் தடை செய்தவற்குண்டான நேரடியான பொருளைத் தந்து விடவில்லை. எனவே, இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்து நாம் இசைக்கு எதிரான தடைக்கான ஆதாரமாக முன் வைக்க முடியாது. மேலும் இந்த நிலையை உண்மைப்படுத்துவதற்கு மேலும், குர்ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் அமுத மொழி (சுன்னாக்)களிலிருந்தும் நாம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகின்றது.
இரண்டாவது வசனம்
இந்த இரண்டாவது வசனம் சூரா அல் இஸ்ராவில் இடம் பெற்றுள்ளது. இதுவும் இசைக்கு எதிரான ஆதாரமாக அமைகின்றது.
واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال ولأولد وعدهم، وما يعدهم شيطان إلا غرور (سورة : الإسراء :64)
இன்னும் அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு: அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். (சூரா அல் இஸ்ரா அல்லது பனீ இஸ்ராயீல் : 64)
ஆதம் (அலை) அவர்களுக்கு ஷைத்தானை இறைவன் சிரம் பணியச் சொன்ன போது அவன் மறுத்த பின், அலலாஹ்வின் நல்லடியார்களாகிய சிலரைத் தவிர, மற்றவர்களை வழிகேட்டில் கொண்டு செல்ல இறைவனிடம் ஷைத்தான் வேண்டிக் கொண்டான். அதற்குப் பதிலாகத் தான் இறைவன் ஷைத்தானை நோக்கி உரையாடுவதாக மேற்கண்ட வசனம் அமைந்துள்ளது.
தாபியீன்களின் காலத்திற்குப் பின் வந்த குர்ஆன் விரிவுரையாளர்களாகிய முஜாஹித் என்பவரும், அத்தஹாக் என்பவரும் மேற்கண்ட வசனம் பற்றிக் கூறும் பொழுது, ஷைத்தானானவன் தன்னுடைய குரலைக் கொண்டு இசையாலும், பாடல்களாலும் மற்றும் வேடிக்கை விநோதங்களாலும் மனிதர்களை குதூகலிக்கச் செய்கின்றான் என விரிவுரை தந்துள்ளனர். (See Tafseer vol.10 p.289, Ibn Katheer’s Tafseerul Qur’aanil Adheem. Vol.5, p.91 and Tabari’s Tafseer vol.15.p.118.)
அந்த ஒலியானது காற்றைக் கொண்டு ஒலி எழுப்பக் கூடிய இசைக் கருவியாகும் என அத்தஹாக் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மேலும், எந்த ஒரு சப்தம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதலை விட்டும் அவனைத் தடுக்கின்றதோ அத்தகைய சப்த ஒலிகளைப் பற்றித் தான் மேற்கொண்ட வசனம் குறிப்பிடுகின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (As reported in the Narration of At-Tabari Traced to Ibn Abbas and Qataadha, see his Tafseer, vol-15, p.118 for details)
நிச்சயமாக மேற்கண்ட வசனம் மிகச் சரியாக எதைக் குறிக்கின்றதென்றால், அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா குறிப்பிடும் (இன்னும் -அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய்-) வசனம், அது எந்த வகையான, எத்தகைய சப்தம், எத்தகைய கூப்பாடு எனக் குறிப்பிட்டுக் கூறவில்லையாயினும், எந்த சப்தம் இறை அழைப்பாக இல்லையோ, எந்த சப்தம் இறைவனுக்கு கீழ்ப்படிய அழைப்பு விடுக்கும்படி இல்லையோ அத்தகைய சப்தத்தைத் தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது என்று அத்தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (See At-Tabari’s Tafseer vol.15. p.118 for details)
ஆக, மேற்கண்ட விளக்கமானது, அல்லாஹ்வின் அழைப்பொலியைத் தவிர்த்து, ஏனைய ஒலிகள், சப்தங்கள் அது போன்றே இசையையும் தடை செய்வதற்கான ஆதாரமாக அமைந்தாலும், இன்னும் நாம் நிறைவான ஆதாரத்தை அடையவில்லை என்றே தோன்றுகின்றது. எனவே, அடுத்த ஆதாரத்தைத் தேடிப் புறப்படுவோம்!
மூன்றாவது வசனம் :
கீழ்க்கண்ட இந்த வசனம் தான் இசைக்கும், அது சார்ந்த பாடலுக்குமான தடைக்கு சரியான ஆதாரமாகத் திகழுகின்றது.
ومن الناس من يشترى لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخدها هزوا أولئك لهم عذاب مهين . (سورة لقمن :6)
மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகின்றார்கள். அவர்கள் எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழி(யில் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும் தான்!
மேலே உள்ள வசனத்தில் நமது ஆய்வுக்கு உட்படும் சொல்லானது لهو الحديث ஆகும்.
மேற்கண்ட சொல்லின் விளக்கவுரையாக IFT - குர்ஆனில் கூறப்பட்டிருப்பதைக் கீழே தருகின்றோம்.
மூலத்திலுள்ள சொற்றொடர் லஹ்வல் ஹதீஸ் ஆகும். இது மனிதனை முழுக்க முழுக்க தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு பிறவற்றை மறக்கச் செய்து விடும் விஷயம் எனப் பொருள்படும். ஆறிவிப்புக்களில் விளக்கப்பட்டுள்ளதாவது : அதாவது, குறைஷ்களின் அனைத்து முயற்சிகளினுடனேயும் நபி (ஸல்) அவர்களுடைய அழைப்புப் பணி தடைபடாமல் அதன் விளைவுகள் தொடர்ந்த போது, குறைஷ்கள் ஈரானிலிருந்தும் மற்றும் இஸ்ஃபந்தியாரின் கதைகளை வரவழைத்து கதை சொல்லும் படலத்தைத் தொடங்கினார்கள். பாட்டுப்பாடும் அடிமைப் பெண்களையும் ஏற்பாடு செய்தார்கள். மக்கள் இவற்றில் மூழ்கி நபியவர்களின் பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டும் என்பதற்காக! (இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட், குர்ஆன் தமிழாக்கம், விளக்கவுரை பழைய பதிப்பு vol.2, பக்கம் 265 அடிக்குறிப்பு 2. (சூரா லுக்மான:06 வது வசனம்)
மேற்கண்ட வசனமானது, யார் ஏக இறையோனாகிய அல்லாஹ்வின் தூதைச் செவிமடுக்காமல், தங்களை வீண் கேளிக்கைகளில் மன மயக்கத்தை ஏற்படுத்துபவைகளில் ஈடுபடுத்திக் கொண்டும், நேரான பாதையினின்றும் விலகி தூரமான தீய வழிகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார்களே அவர்களைப் பற்றித் தான் இறைவன் மேற்கண்ட வசனம் மூலம் விளக்குகின்றான்.
மேற்கண்ட நமது ஆய்வுக்கு உட்பட்ட சொல்லாகிய لهو الحديث பற்றி இப்னு ஜரீன் அத்தபரி அவர்கள தனது ஜாமிஉல் பயானில் குறிப்பிடும் போது, மேற்கண்ட சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளார்கள். அந்த சொல் பற்றிய அவர்களது விளக்கம் மூன்று வித பிரிவுகளில் நின்றி அறிவுரை தருகின்றது.
· பாடுவதும் அதைக் கேட்பதும்
· பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஆண், பெண்ணை விலைக்கு வாங்குதல்
· வீணாகப் பொழுதைப் போக்குவதற்காக (இசை)க் கருவிகளை வாங்குதல். உதாரணமாக - தபேலா (drum)
மேற்கண்ட மூன்று விளக்கங்களும் குறிப்பில் எதை உணர்த்துகின்றதென்றால், வீணாக, வெறுக்கத்தக்கவைகளானவற்றையும், அதற்கான சாதனங்களையும் விலைக்கு வாங்கி, தங்களது பொருளையும், நேரத்தையும் அதில் வீணடித்தல் குறிப்பாக இசையிலும், பாடலிலும் ஈடுபடுதலைத் தான் குறிக்கின்றது.
மேற்கண்ட விளக்கத்தை ஒற்றியே நாயகத் தோழர்களாகிய, இப்னு மஸ்ஊது (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர்களது கருத்தும் அமைந்திருந்தது. மேற்கண்ட சொல்பற்றி இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட பொழுது, எவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது பாடுவதையே குறிக்கும் என்றார்கள். மேலும், மேற்கண்ட தன்னுடைய நிலையை உறுதிப்படுத்துவதற்காக மூன்று முறை அதன் மேல் உறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்கள். Related By Al-Byhaqi, Ibnul-Mundhir and Al-Hakkim in his Mustadrak, where he authendicated it; and it was confirmed by Abu-Dhahabi).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, பாடுவதும் மற்றும் அதைப் போன்றதையும் குறிக்கும் என்றார்கள். (See At-Tabri’s Jamiul-Bayan, vol.p.61, for the various narrations related to Ibn Abbas)
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது, பாடுவதும் மற்றும் பாடுவதைக் கேட்பதும் ஆகும் என்று கூறினார்கள். (See At-Tabari’s Jaamiul-Bayan vol.21, p.62.)
மேற்கண்ட முடிவுகள் பாடுவதையும், இசையைக் கேட்பதையும் அதற்கான தடைகளாக உள்ளன என்ற கருத்தை உடையனவாக உள்ளன. இதே கருத்தைத் தான் தாபியீன்களாகிய இக்ரிமா, முஜாஹித், மக்கூல், உமர் பின் சுபை; இன்னும் பலர் பெற்றிருந்தார்கள். (For details Ibn Katheer Tafseer. Vol.6. p.334; Al Qurtubi’s, Al-Jaami, vol.14.pp51-51 and As-Suyooti’s Ad-Durr Al-Manthoor vol.5, pp.158-160)
மேலும் இரண்டாது நிலை விளக்கமாக கீழ்க்கண்ட விளக்கவுரை அமைந்துள்ளது :
ஏந்த ஒரு உரையாடல் அல்லது பேச்சு இறை நிராகரிப்பின் பக்கம் மக்களை அழைக்கின்றதோ அல்லது இறை நிராகரிப்புக் கொள்கையைப் பெற்றிருக்கிறதோ அவற்றைக் குறிக்கக் கூடியது لهو الحديث என்ற சொல் என நபித் தோழர்களுக்கு அடுத்த திருமறை விரிவுரையாளர்களான, அத்தஹாக் அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம் ஆகியோர் கூறி இருக்கின்றார்கள். (see commentatories of Ibn Katheer vol.6. p.334 and At-Tabari vol.21. p.63)
மூன்றாவது நிலை விளக்கம் :
யார் தங்களது கெட்ட பேச்சுக்கள் அல்லது தவறான பேச்சுக்கள் மற்றும் செயல் மூலம் மக்களை அல்லாஹ்வின் வழியினின்றும் அவனை வணங்குவதனின்றும், அவனை நினைவு கூர்வதிலிருந்தும் மக்களை வழி பிறழச் செய்து கொண்டிருக்கின்றார்களோ, அத்தகைய இயல்புகளைப் பெற்றிருப்பவரை இந்த لهو الحديث எனும் சொல் குறிக்கும்.
உதாரணமாக ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக, இமாம் ஆலாஸி அவர்கள் கீழ்க்கண்ட கூற்றைக் கூறுகின்றார்கள். யார் தங்களது இரவு நேரங்களை வீண் பேச்சுக்களிலும், கேளிக்கைகளிலும், சிரிப்பு மூட்டும் செயல்களிலும், கற்பனைக் கரை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும் இன்னும் இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு ஒருவனை அல்லாஹ்வை வணங்குவதினின்றும் அவனை நினைவு கூர்வதிலும் இருந்து மேற்கண்ட மற்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுமாறு செய்கின்றானோ அத்தகைய அனைத்து செயல்களையும் அந்தச் சொல் குறிப்பிடுகின்றது. (Roohl Ma’ani vol.21. p.67)
மேற்கண்ட விளக்கத்தை ஆமோதிக்கும் இமாம் ஆலாஸி அவர்கள், எத்தகைய செயல்கள் வீணான வெறுக்கத்தக்க செயல்களாக இருந்து இறைவனின் ஞாபகத்தினின்றும் ஒருவனைப் பிறழச் செய்கின்றதோ, அத்தகைய செயல்களுக்கு لهو الحديث என்ற இந்தச் சொல்லை குறிப்பிடுவது பொருத்தமானது என்கிறார்.
சிலர் மேற்கண்ட (31:6) வசனம் மற்றும் அதன் தொடராக வரும் வசனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும் போது, இது முஷ்ரிக்கீன்களுடைய செயலைத் தான் குறிக்கும் என்றும், சிலர் இது முஸ்லிம்களையும் குறிக்கும் என்கிறார்கள். (அவனிடம் நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவனுடைய காதுகளில் மந்தம் ஏற்பட்டிருப்பது போன்றும், அவற்றை அவன் கேளாதது போன்றும் தற் பெருமையுடன் முகத்தைத் திருப்பிக்கொள்கின்றான் 31:7)
இமாம் இப்னு ஜைத் அவர்கள் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு, இந்த வசனம் இறை நிராகரிப்பாளர்களையே, அவர்களின் தன்மைகளையே நோக்கி உரையாடுகின்றது என்பதை நீங்கள் அறியவில்லையா!? ஏனக் கூற இஷஅதைக் கீழ்க்காணும் வசனம் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.
சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகின்றார்கள் : இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்|இதன் மூலம் நீங்கள் வென்று விடலாம். (41:26)
மேற்கண்ட வசனம், குர்ஆனிய வசனம் ஓதப்படும் போது, அதை செவியேற்கா வண்ணம் தங்களது கூச்சல், கூப்பாடுகள் மூலம், குர்ஆனைச் செவியுறுவதனின்றும் பிறரை வழி கெடுக்கும் இணை வைப்பாளர்களைத் தான் குறிக்கிறது. ஏனவே, இந்த வசனம் முஸ்லிம்களைக் குறிப்பதல்ல என்கிறார் இமாம் ஜைத் என்பவர். (See At-Tabari Tafseer vol.21. p.63; Al-Qurtubi’s Tafseer vol.15, p.356. for details)
அத்தபரி அவர்கள் இது பற்றிக் குறிப்பிடும் போது, மேற்கண்ட لهو الحديث சொல்லின் சரியான அர்த்தம் எது எனில், எந்த ஒரு பேச்சு அல்லாஹ்வின் நினைவினின்றும் ஒருவனைத் தடுக்கின்றதோ, அத்தகைய பேச்சு இறைவனாலும், அவனது தூதர் முஹம்மது (ஸல்)அவர்களாலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இதில் சில பேச்சுக்களுக்கு விதி விலக்கு உண்டு.
மேற்கண்ட அத்தபரி அவர்களின் கருத்துக்களிலிருந்து ஒரு சரியான தடைக்கு ஆதாரமான இல்லாமல், பாடலையும், இணை வைப்பையும் பொதுவான குறிப்பில் உணர்த்தி நிற்கின்றது.
(Quoted from p.63. vol.21. of his Jaami’ul Baya’an Taweeli Aayil Quraan)
அதாவது எது அல்லாஹ்வுடைய நினைவை விட்டும் பிறழச் செய்கிறதோ அது இணை வைப்பை பெற்றி விடுவதும் அத்தகைய செயல் அல்லது பேச்சு மன மயக்கத்தை ஏற்படுத்தும் பாடல், இசையில் அல்லது பேச்சாக ஒலிக்குமானால் அதுவும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவும் நமக்கு குறிப்பால் உணர்த்தி நிற்கின்றது. குறிப்பாக இந்த لهو الحديث என்ற சொல்லானது, எது அல்லாஹ்வின் பாதையில் செல்வதனின்றும் தடுக்கின்றதோ அத்தகையதைக் குறிக்கின்றது எனலாம். இன்று இசையும், கானமும் அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது என்பதை சந்தேகமில்லாமல் சொல்ல முடியும்.
மேற்கண்ட வசனம் இசைக்கும், பாடலுக்கும் எதிரான, பல்வேறு மொழிபெயர்ப்புக்களினுடனே, தற்செயல் விளக்கமாகத் தான் அதற்கான தடையைப் பெற்றுள்ளத தவிர, ஈமானிய நெஞ்சம் முழுமையான ஆதாரத்தைக் குர்ஆனின் ஒளியில் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. ஏனெனில், நாம் இன்னும் நேரடியான தடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஒரு மறைமுக தற்செயல் விளக்கத்தைத் தான் பெற்றுள்ளோம்.எனவே, மேலும் நாம் தெளிவு பெற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளை நாட வேண்டிய அவசிய அவசரத்தில் உள்ளோம்
2. இசைக்கு எதிரான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள் :
அண்ணல் நபி (ஸல்) அவகளின் ஏராள அமுத மொழிகள், இசைக்கும், பாடலுக்கும் அது சார்ந்த இசைக் கருவிகளுக்கும் எதிராகவே அமைந்துள்ளன. ஆத்தகைய இசைக் கருவிகளை இசைப்பதை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் தடையும் செய்துள்ளன. ஆனால், சில நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்கான நிலைகளில், ஷரீஅத் சட்டம் அனுமதியளிக்கும் நிலைகள் உள்ளன. ஆத்தகைய சந்தர்ப்பங்கள் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளன. பாடக் கூடிய பாடல் வரிகள் அமைப்பையும், இசைக்கக் கூடிய இசைக் கருவியின் வகை, அளவையும் கூட மிகத் துள்ளிதமாகக் கூறி நிற்கின்றன.
ஆனால், துரதிருஷ்டமாக, சில மார்க்க அறிஞர்கள் தம் போதாத ஞானத்தால்,இசைக்கும், பாடலுக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் எதிராக வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை அல்லது புனைந்துரைக்கப்பட்டவை என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆத்தகைய அவர்களின் தவறான கருத்தைப் போக்கும் முகமாக இது விஷயத்தில் நாம் தீவிர ஆய்வில் ஈடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்.
1. ஹதீஸும் அதன் தரங்களும் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்ள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி) (See Fathul Bari vol.10.p.51)
மேற்கண்ட ஹதீஸின் தரம் பற்றி, ஹதீஸ் கலை வல்லுநர்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையில் முதலில் இடம் பெறும் ஹிஸாம் இப்னு அம்மாருக்கும், இமாம் புகாரி அவர்களுக்கும் இடையே தொடர்பு அருந்துள்ளது என இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் குறிப்பிட்டு, இந்த ஹதீஸ் ஏற்புடையதல்ல என்றும் அதனால், இதைக் கொணடு பாடல், இசை, இசைக் கருவிகளுக்கு எதிரான ஆதாமாக மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்.
ஆனால், மிகப் பெரும் ஹதீஸ் கலை வல்லுனராகிய ஷேக் இப்னுஸ் ஸலாஹ் தனது, உலூமுல் ஹதீஸ் என்னும் நூலில் மேற்கண்ட ஹதீஸ் முழு ஆதாரத்துடன், அறிவிப்பாளர் வரிசை சரியான முறையில் அமைந்தும், ஒரு ஹதீஸ் தரமானதாக அறிப்பயன்படும் அனைத்து முறைகளுக்கும் அதன் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, தரமான ஹதீஸ் என் சான்றையும் பெற்றுள்ளது என்ற கருத்தை வழங்கியுள்ளார். மேற்கண்ட இப்னு ஹஸ்ம் அவர்களின் கூற்றi மறுக்க, இப்னுஸ்ஸலாஹ் உடைய கூற்றே போதுமானது என இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரிக்கான விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார். (For Details, refer to vol.10. p.52. of the Salafi Edi. Cairo)
மேலும், இப்னு ஹஜர் அவர்களின் தனிப்பட்ட நூலான, தஃலீகத் தஃலீக் என்னும் நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகின்றது. இதன் மூலம் அல் ஜாமீஈ அஸ் - ஸஹீஹ் எனு;னும் நூலில் பலவீனமான ஹதீஸாகத் தவறான முறையில் குறிப்பிடப்பட்டிருப்பதை, மேற்கண்ட தஃலீகத் தஃலீம் என்ற நூல் மறுத்து, தரமான ஹதீஸ் என்ற சான்றைத் தருகின்றது.
மேலும் இப்னு ஹஜர் அவர்கள், இப்னு ஹஸ்ம் அவர்களின் கூற்றை மறுத்து, மேற்கண்ட ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது எனவும், தனது நூலான தஃலீகத் தஃலீக் - ல் சான்று பகர்ந்துள்ளார்.
மேலும் நவீன கால அறிஞர்களிடம் ஹதீஸ் பற்றி சரியான அணுகு முறை அல்லது ஞானம் இல்லாததின் காரணமாக, தவறான முடிவை அறிவித்து விடுகின்றார்கள்.
உதாரணமாக, யூசுப் அல் கர்ளாவி அவர்கள் தனது, அல் ஹலால் வல் ஹராம் ஃபில் இஸ்லாம் எனும் நூலில், இசை பாடல் சம்பந்தமாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அதன் கருத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது அல்லது பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன என ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் கலை வல்லுநர்கள் கூறுகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு : மேலும், யூசுப் அல் கர்ளாவி அவர்கள் குறிப்பிடும், ஃபிக்ஹ் கலை வல்லுநர்கள், ஷரீஅத் சட்ட ஆராய்ச்சி பற்றி அறிஞர்கள் ஆவார்கள். பிக்ஹ் கலை வல்லுநர்களுக்கும், ஹதீஸ கலை வல்லுநர்களுக்கும் வித்தியாசம் உண்டு. மேலும் ஹதீஸ் பற்றி விமர்சிக்க யூசுப் அல் கர்ளாவி அவர்கள், அல் புகாரி போன்றோ அல்லது அஹமத், இப்னு முயீன், அபு தாவூத், அபு சுரஆ, இப்னு அபி ஹாதிம், இப்னுஸ்ஸலாஹ், அல்- இராக்கி, இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஜர் போன்ற ஹதீஸ் கலை வல்லுநர் அல்ல. அவர் பொதுவான மார்க்க அறிஞர்களான அல் கஸ்ஸாலி, இப்னுல் - அரபி, இப்னு ஹஸ்ம் போன்றவரே. இவர்கள் வழியாகத் தான் மேற்கண்ட ஹதீஸை யூசுப் அல் கர்ளாவி அவர்கள் பலவீனமானத என அறிவிக்கின்றார்கள். எனவே இது ஏற்புடையதல்ல.
மேலும் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் ஏராளமான ஸஹாபாக்களும், தாபியீன்களு; பாடல்களை ரசித்ததாகவும், அதில் அவர்கள் எந்த வித குற்றமும் காணவில்லை என்ற தவறான தகவலை தனது ஹலால் வல் ஹராம் ஃபில் இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 293 ல் குறிப்பிடுகின்றார். மேலும் யூசுப் அல் கர்ளாவி அவர்களும், இப்னுல் - அரபி, இப்னு ஹஸ்ம் அவர்களும் மார்க்க அறிஞர்கள் எனும் தங்களது தகுதியைத் தவறான முறையில் பயன்படுத்தி, தவறான தீர்ப்பு வழங்கியுள்ளார்கள் என இந்நூலின் மூல ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஏனெனில், எந்த ஹதீஸும் இல்லை என்பதற்கு முன், எனக்குத் தெரிந்த வரை என்ற வார்த்தையைச் சேர்த்திருப்பின் அவர்களது அடக்கத்தைக் காட்டியிருக்கும். (See Music and singing – Abu Bilal Musthafa A-Kanadip.17, FN No.58 and 59.)
மற்றும் காதி அபுபக்கர் இப்னுல்அரபி அவர்கள், பாடுவதைத் தடை செய்யக் கூடியதாக எந்த ஹதீஸும் இல்லை என்றும்| இப்னு ஹஸ்ம் அவர்கள் பாடுவதையும், இசையையும் தடை செய்யும் அனைத்து ஹதீஸ்கள் தவறானவை, புனைந்துரைக்கப்பட்டவை என்கிறார்கள்.
மேற்கண்ட ஆய்வில், நாம் சுட்டிக் காட்டி இருக்கும் ஹதீஸானது, தரமானது என்ற நிலையைப் பெற்று, பாடல், இசைக்கு எதிரான தடையையும் அதற்குரிய சரியான ஆராதமாகவும் திகழுகின்றது.
2. புகாரி :
ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف
ஸஹீஹ் புகாரியிலிருந்து நாம் மேற்கோள் காட்டியுள்ள ஹதீஸின் அரபி மூலத்தில், நம் ஆய்வுக்குத் தேவையான பாகம் மட்டும் மேலே எடுத்துக் காட்டப்பட்டு;ள்ளது. அதாவது, ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்கள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.
இதில் நம் ஆய்வுக்கு உட்படும் வார்த்தை معازف (மஆஸிஃப்) என்பது மட்டுமே. இது தான் இசைக் கருவிகளைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாகும். அரபி மொழியின் மூல அகராதியாகிய லிசானுல் அரப் என்ற நூலில் மஆஸிஃப் என்பது مزاف மிஸாஃப் அல்லது أزف அஸ்ஃப் என்ற சொல்லின் பன்மை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அர்த்தமாக, ஒரு பொருளைக் குறிப்பிடுவது அல்லது இயக்குதற்குரிய கருவி அல்லது பொழுது போக்கிற்காக அவர்களின் சப்தத்திற்கு ஏற்றவாறு தாளமிடக் கூடியது என்ற பொருள்களைத் தருகிறது. மேலும் மிஸாப் என்ற சொல், ஒருமையில் பெரிய மரத்தாலான மத்தளம் (Large Wooden Drum) என்று எமன் மக்களால் அர்த்தம் கொள்ளப்பட்டதும் ஆகும். பேயர்ச்ச சொல்லாகிய அஸ்ஃப் ஆனது, معازف மஆஸிஃப் - ஐ இயக்கக் கூடிய செயலைக் குறிக்கும். அதாவது, கை மத்தளம் (Hand Drum – Dufoof)) அல்லது அது போல அடித்து ஓசை எழுப்பக் கூடிய மற்ற கருவிகளை இசைப்பதைக் குறிக்கும்.
மேலும், மிகப் பழமையான அகராதியாகிய அல்-ஜவ்ஹரி அவர்களின் அஸ்-ஸிஹாஹ் - ல், மஆஸிஃப் என்பது இசைக் கருவிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல்-ஆஸிஃப் என்பது, பாடுபவரையும், அஸ்ஃப் என்பது காற்றைக் கொண்டு ஒலி எழுப்பக் கூடியதாய் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்-ஸபீதி என்பவர் தனது, தாஜுல் அரூஸ் மின் ஜவாஹிரில் காமூஸ், என்னும் நூலில் மஆஸிஃப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். முஆஸிஃப் என்பது பொழுது போக்கிற்காகப் பயன்படுத்தக் கூடிய கருவிகள், அக் கருவிகள் மீது அடித்து ஒலி எழுப்பதலும் அல்லது புல்லாங்குழல் (flute) போல ஊதி ஒலி எழுப்புதலும் அல்லது மேளம் (drum) போன்ற இசைக் கருவிகளை இசைத்தலும் அல்லது கைக் கொட்டு (hand drum) போன்றவற்றில் ஒலி எழுப்புதலும் அல்லது இது போன்ற இசைக் கருவிகளை பயன்படுத்துவதும் ஆகும் எனக் குறிப்பிடுகிறார். (Taajul ‘Aroos min Jawaahiril Qamoos vol.6 P.197)
மேலும் பாலைவனத்தில் மரங்களினூடே காற்று புகந்து எழுப்பும் விசில் போன்ற சப்தத்திற்கு, ஜின்களின் சப்தம் அதாவது அரபியில் ஆஸிஃபுல் ஜின் என்பர். ஆந்த ஆஸிஃப் என்ற வார்த்தை மஆஸிஃப், அஸ்ஃப் என்ற வார்த்தையாக இருக்கும் பொழுது, இசைக் கருவிகளை இசைப்பதையும், இசைக் கருவிகளையும் குறிப்பிடுகிறதோ அதே போல, அவ்வாறு எழும் ஒலி அலைகளுக்கு ஆஸிஃபுல் (ஆஸிஃபுல் ஜின் - ஜின்களின் சப்தம்) எனக் குறிப்பிடப்படுகிறது என இப்னுல் அஃதீர் என்பவர் தனது அந்-நிஹாயா ஃபீ கரீபில் ஹதீஸ் என்ற நூலில் குறிப்பிடுகிறார். (vol.3, p.230 of An-Nihaayah)
இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹ் புகாரிக்கான விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில், அஸ்ஃப் என்பது பாடுவதைக் குறிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். (Fathhul Baari, vol.10. p.55)
மேற்கண்ட அறிஞர்கள், உலமாப் பெருமக்களின் கூற்றுப்படி மஆஸிஃப் என்ற சொல் கீழ்க்கண்ட அர்த்தங்களைப் பெற்றிருக்கிறது என தெளிவாகிறது.
அதாவது, இசைக்கருவிகள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அதுபோல உள்ள இசைக்கருவிகளிலிருந்து எழும்பக் கூடிய ஓசை அல்லது இசை, இசைக் கருவிகளுடன் இயைந்து பாடுவது என்பன போன்ற அர்த்தங்களைத் தாங்கி நிற்கின்றது என்பதை நாம் உணர முடிகின்றது. இவ்வளவு தெளிவிற்குப் பின்னும் அதற்கு வேரொரு அர்த்தம் புனைவது என்பது, மேற்கண்ட அறிஞர்களின் கருத்தை மறுப்பதுவும், தமக்கு இயைந்த வகையில் பொருள் கொள்ள நினைப்பதையுமே அச் செயல் குறிப்பிடும்.
மேலும், மேற்கண்ட விளக்கங்களின் மூலம் இசையும் அல்லது இசையுடன் இணைந்த பாடலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆடுத்து, மஆஸிஃப்-டன் இணைந்து வரும் விபச்சாரம், மது, பட்டு அணிதல் போன்றவைகள் இஸ்லாத்தினால் தெளிவாகத் தடையைப் பெற்றிருக்கும் பொழுது, அதனுடன் இணைந்த மஆஸிஃப் (இசை, பாடல்) - ம் தடை செய்யப்பட்டதே என்பதை சொல்லாமலேயே விளங்க முடியும். இதை மறுப்பவர்கள், இஸ்லாத்தில் இசையும் பாடலும் அனுமதிக்கப்பட்டவையே என வாதிப்பவர்கள் மேற்கண்ட தடை செய்யப்பட்ட விபச்சாரம், மது, பட்டு அணிதல்ழூ ஆகியவையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என வாதிடுவார்களா? ஆக, தம் இச்சைக்கு அடி பணிந்து, தடைக்கு எதிராக வாதிடுபவர், இசைக்கான தடையை மட்டும் மாற்ற முனையவில்லை, இஸ்லாத்தினால் தெளிவாகத் தடை செய்யப்பட்டிருக்கும் விபச்சாரம்,மது, பட்டு அணிதல் ஆகியவற்றுக்கும் உள்ள தடையை நீக்க முனைகிறார் என்றே அர்த்தம் கொள்ள வேண்டி வரும். ழூ ஆண்கள் பட்டு அணிதல் ஹராம். பெண்கள் அணிந்து கொள்ளலாம்.
நாம் மேற்கண்ட தலைப்புக்கு, ஸஹீஹ் புகாரி குறிப்பிடும் மேற்கண்ட ஒரு ஹதீஸே சரியான ஆதாரமாகும். ஏனினும் இன்னும் அதை வலுப் பெறச் செய்ய மறற ஹதீஸ் கிரந்தங்களையும் பார்வையிடுவது அவசியமாகின்றது.
3) இப்னு மாஜா :
حدثنا عبد الله بن سعيد، قال : حدثنا معن بن عيسى عن معاويه بن صلح عن حاتم حريث ، عن مالك بن أبي مريم، عن عبدالرحمن بن غنم الأشعرئ عن مالك الأشعرى، قال : قال رسول الله صلى الله عليه وسلم ((ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها ، يعزف على رؤوسهم بالسعازف والمغنيات ، يخسف الله بهم الأرض ، ويجعل منهم القردة والخنازي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)
இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் ஸஹீஹான தரத்தில் அமைந்துள்ளது. மேலும், இதே வார்த்தை அமைப்புடன் பைஹக்கீயிலும், இப்னு அஸாக்கிர் - லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ் கலை மற்றும் பிக்ஹ் கலை அறிஞரான இப்னுல் கைய்யும் அவர்கள் ஸஹீஹான ஹதீஸ் என குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷேக் முஹம்மது நஸிருத்தீன் அல்-அலபானி அவர்கள் தனது, சில்சிலத்துல் அஹதீத் அஸ்-ஸஹீஹ் பாகம்.1 ஹதீஸ் எண்.90, பக்கம் 136-139 ல் ஸஹீஹான ஹதீஸ் என சான்று வழங்கியுள்ளார்கள். மேலும், காயத்துல் மராம், தக்ரீஜுல் ஹலாலி வல் ஹராம் எனும் அவரது நூலிலும் இது ஸஹீஹான ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
4) முஸ்னத் அஹ்மது :
حدثنا عبد الله ، حدثنا أبي ، حدثنا أبو أحمد ، حدثنا سفيان عن علي بن بذيمة ، حدثني بن حبير قال : سألت ابن عباس عن (أمور... وفيه سئل النبي صلى الله عليه وسلم عن أمور أجاب عليها في آخرالحديث): قال صلى الله عليه وسلم : ((إن الله حرم على أو حرم الخمر والميسر والكوبة ، وكل مسكر حرام)) قال سفيان قلت تعلي بن بذيمة : ماالكوبة؟ قال الطبل (رواه الإمام أحمد فى المسند)
முஸ்னத் அஹ்மது. பாகம்.1. பக்.289., பாகம்.2 பக்கம்.158 மற்றும் 171-172).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (ஆடுவதையும்)| மற்றும் அல்-கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு நச்சுப் பொருளும் தடை செய்யப்பட்டதே. இந்த ஹதீஸை தனக்கு அறிவித்த அலி பின் பதீமா அவர்களிடம் சுஃப்யான் அவர்கள், அல் கூபா என்றால் என்ன என்று வினவிய போது, அல்-கூபா என்றால் மத்தளம் (னுசரஅ) என்று பதில் கூறினார்.
Ahmed’s Musnad vol.1. pp.289 and 350 : vol.2. pp.158.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
إن الله حرم على أمتي الخمر والميسر والمزر والكوبة والقنين، وزادني صلاة الوتر(رواه أحمد في مسند)முஸ்னத் அஹ்மத் பாகம்:2 பக்கம் 165 மற்றும் 1
நிச்சயமாக அல்லாஹ் மதுவையும், சூதாடுவதையும், தானியங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவைகளையும், மத்தளம் அல்லது மேளத்தை (னுசரஅ) யும் (நரம்பினால் ஓசை எழுப்பக் கூடிய) கிதார் (ஙinநெநn) போன்றவற்றையும் எனது உம்மத்துக்கு தடை செய்துள்ளான். மேலும், (ஒற்றைப்படைத் தொழுகையான) வித்ரு - என் மீது அதிகப்படியாகக் கடமையாக்கி உள்ளான்.
இமாம் பைஹக்கீ அவர்கள் தனது சுஉபுல் ஈமான் என்ற நூலில் சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். ஆத்தபரானி - ல் தரமானது (ஜய்யித்) என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், மிஸ்காத்துல் மஸாபீஹிலும் இந்த ஹதீஸ் சரியான ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகம்.2 பக்.1276. எண்.4503.
அல் அல்பானி அவர்களுடைய ஸஹீஹுல் ஜாமிஇஸ் சகீர் - ல் சரியான விரிவான ஆதாரங்களுடன் சரிபார்க்கப்பட்டு, நல்ல தரமான ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகம் 1-2. புக்கம்.106 ஹதீஸ் எண்.1743-1744.
மேலும், அல்-அஹதீஸ் அஸ்ஸஹீஹ் எனும் நூலிலும் சரியான தரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகம்:4, பக்.283-285. ஹதீஸ் எண்:1708 மற்றும் பக்கம்422, ஹதீஸ் எண்:1806.
5. அல் ஹாக்கிம் :
ஆல்-ஹாக்கிம் அவர்கள் தனது நூலான அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன், எனும் நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸ் பின்வருமாறு அமைந்துள்ளது :
நபி (ஸல்) அவர்கள் தனது கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் எனும் தோழருடன் கோர்த்துக் கொண்டு, நோயுற்று மரண நிலையிலிருக்கும் தன் மகன் இப்றாஹீமைக் காணச் செல்கின்றார்கள். தம் மகனை உயிர் பிரியும் வரை மார்பில் கிடத்தி வைத்திருந்த நபி (ஸல்) அவர்கள், உயிர் பிரிந்ததும் தம் மகனைத் தரையில் கிடத்தி விட்டு, கண்ணில் நீர் சொறிய அழுத விழிகளுடன் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள், யா! ரசூலுல்லாஹ் தாங்களுமா அழுகின்றீர்கள்? என வினவ கீழ்க்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலிறுக்கின்றார்கள் :
قال صلى الله عليه وسلم (( إني لم أنه عن البكاء، ولكنى نهنيت عن صوتين أحمقين فاجرين : صوت عند نغمة لهم ولعب، ومزاميرالشيطان، وصوت عند مصيبة، لطم وجوه، وشق حيوب، وهذه ومن لا يرحم ل يرحم)).. .. الحديث (رواه الحاكم باسناد حسن)
Entitled Al-Mustadrak ‘alas saheehayn ; the hadeeth appears on p.40 of vol.4.
நிச்சயமாக நான் அழுவதைத் தடைசெய்யவில்லை. மாறாக,இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும்.
முதலாவது, ஷைத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும்| இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன்.
எனது, இந்த அழுகையானது, மனதில் ஏற்பட்ட துக்கத்தினால் இரக்கம், கருணை காரணமாக வெளிப்பட்டதாகும். ஏவர் மனதில் கருணை இரக்கம் இல்லையோ அவர் இதனை அடைந்து கொள்ள மாட்டார்.
குறிப்பு : இந்த ஹதீஸின் தரம், அறிவிப்பாளர் வரிசை போன்ற மேலும் விபரங்கள் தேவை இருப்பின், அல் அல்பானி அவர்களின் சில்சிலத்துல் அஹதீத் அஸ்-ஸஹீஹ் பாகம்:1, ஹதீஸ் எண்.428 லும் மேலும், அல்-பகாவி அவர்களின், சர்ஹுஸ் ஸுன்னாஹ், பாகம்:5, பக்கம்431 லும் பார்வையிடவும்.
6. அபுபக்கர் அஷ்-ஷாபிஈ - அர் ருபாயியத்
மேலே அல் ஹாக்கிம் - ல் வ்நத ஹதீஸை உறுதிப்படுத்துமுகமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
عن أنس بن مالك مرفوعا : (صوتان ملعونان، صوت مزمار عند نعمة، وصوت ويل عند مصيبة)) (رواه أبوبكر الشافعي باسند حسن)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
காற்றினால் ஒலி எழுப்பக் கூடியதும் (றiனெ)| புல்லாங்குழல் (ஆணைஅயயச) போன்றும் உள்ள இரு இசைக்கருவிகளை சந்தோசமான, உற்சாகமான நேரத்திலும், மற்றும் துக்ககரமான நேரத்திலும் இசைப்பதை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
அல் பஸ்ஸார் அவர்களின் அல் முஸ்னது எனும் நூலில் சிறிய வார்த்தை மாற்றங்களுடன் மேலே உள்ள ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல் ஹாபிழ் நூருத்தீன் அல்-ஐஹதமீ அவர்களின் மஜ்மாஅ அஸ்-ஸாவாஇத் பாகம்:3 பக்கம் 13 ல் சரியான அறிவிப்பாளர் தொடருடன் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதுவரை இசைக்கு எதிராக நாம் கண்டு வந்த குர்ஆனிய மற்றும் சுன்னா (ஹதீஸ்) வின் ஆதாரங்களும் மிகத் தெளிவான முறையில் தடையைக் கொண்டு அமைந்துள்ளன எனால்.
கடைசியாக உள்ள மூன்று ஹதீஸுகளிலும் கையாளப்பட்ட இசைக்கருவிகளாவன :
இசைக் கருவிகள் (பொதுவாக அனைத்து இசை எழுப்பக் கூடிய கருவிகளும்.
1. புகாரி, இப்னு மாஜா
المعازف
மத்தளம்
2. அஹ்மது
والكوبة
கிதார் (நரம்பு கொண்டு இசைக்கும் கருவிகள்.
பொதுவாக அரபு நாடுகளில் பயன்படுத்தப்படும் கிதார் போன்ற ஒரு வகை இசைக்கருவி)
3. அஹ்மது
والقنين
காற்று கொண்டு ஊதி இசைக்கும் கருவிகள் - ஷைத்தானின் ஊதுகுழல்)
4. அல் ஹாக்கிம்
ومزاميرالشيطان
காற்று கொண்டு ஊதி இசைக்கும் கருவிகள் - ஷைத்தானின் ஊதுகுழல்)
அர் ருபாயியத்
مزمار
மேலே தொகுத்துத் தரப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸுகளில் கையாளப்பட்டவைகளாகும். இன்றுள்ள இசைக் கருவிகள் அனைத்தும் மேலே உள்ள தன்மையில் ஏதாவது ஒன்றைப் பெற்றுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். மேலும், நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸின் தரங்களும் நல்ல தரமானவையாகவே உள்ளன எனும் போது, நிச்சயமாக இறைவன்! இந்த சமுதாயத்தின் மீது இசையையும் அதனுடன் பாடப்படும் பாடலையும் தடை செய்தே வைத்திருக்கின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதற்கு மேல் மேலதிக விளக்கம் தேவை இல்லை என்பது உண்மையான முஃமினுக்கு உள்ள அடையாளம் என்பதை கீழ்வரும் குர்ஆனிய வசனம் குறிப்பிட்டுக் கூறி நிற்கிறது.
ஏவருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.) (காஃப்:51:37)
3. இசைக்கு எதிராக இமாம்கள் :
இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்)
ஹனபி மத்ஹபின் தீர்ப்புப்படி பாடுவதும் இசை இசைப்பதும், கேட்பதும் பாவமான செயலாகும். மேலும், அபு ஹனிஃபா அவர்களின் நேரடி மாணவர்கள் இசை போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதையும், அதில் நேரத்தை விரையமாக்குவதையும், காற்றைக் கொண்டு ஊதி இசைக்கப்படும், இசைக்கருவிகள், மற்றும் கஞ்சிரா கைக் கொட்டு மற்றும் இது போன்று உள்ள அனைத்து இசைக் கருவிகளை இசைப்பதையும்|மேலும் குச்சிகளைக் கொண்டு தட்டி ஒலி எழுப்புவதையும் தடை செய்துள்ளார்கள்.
மேலும், அவ்வாறு தடையைப் பினபற்றாமல் இருப்பவன், அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதனின்றும் அவன் தன்னைத் தடுத்துக் கொண்டு பாவத்தில் ஈடுபடுகின்ற காரணத்தினால், அத்தகையவனின்ன சாட்சியத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றார்கள்.
மேலும், முஸ்லிம்கள் அத்தகைய நிலைகளில் இருந்து தம்மை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அத்தகைய இடத்தில் இருக்க நேர்ந்தாலோ அல்லது அந்த இடத்தை கடக்க நேர்ந்தாலோ, அத்தகைய பாவமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதனின்றும், அந்த இசை, பாடலைக் கேட்பதனின்றும் தன்னைத் தவிர்த்துக் கொள்ளவும், அதனினின்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடவும் வேண்டும்.
அபு ஹனிஃபா அவர்களின் நெருங்கிய மாணவரான அபு யூசுஃப் கூறுகிறார், எந்த வீட்டில் இசையும், பாடலும் ஒலிக்கின்றதோ அத்தகைய ஒலி அலைகள் அந்த வீட்டிலிருந்து வருமானால், அத்தகைய வீட்டினுள் அனுமதியின்றி நுழையலாம்.
மேற்கண்ட தீர்ப்பின் விளக்கம் யாதெனில், அவ்வாறு வீட்டினரின் அனுமதியின்றி உள்ளே நுழைவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட செயல். இருப்பினும், அத்தகைய செயல் அவ் வீட்டாரின் சுய உரிமையைப் பாதிக்கச் செய்யப்படுவதற்காக அல்ல. மாறாக, அவ்வீட்டினரின் செயல்களிலிருந்து சமுதாயம் பாழாவதைத் தடுப்பதன் பொருட்டு, செய்யப்படும் பலப்பிரயோகமே தவிர வேறில்லை. இதன் மூலம் சமுதாயம் நலன் பொருட்டு, இத்தகைய தீய மனிதர்களைத் தண்டிப்பது தவறாகாது என்ற கருத்துத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹனபி மத்ஹபின் மற்ற அறிஞர்களான இப்றாஹிம் அந்நகயீ, அஸ் ஸாஃபி, ஹம்மாத் மற்றும் அத் தவ்ரி ஆகியோரும் மேற்கண்ட கருத்துக்களை ஆமோதித்துள்ளனர். ஆல்-பஸ்ராவின் இஸ்லாமிய சட்டப் பொதுக் குழுவும் (புநநெசயட டிழனல ழக துரசiளிசரனநnஉந) இதே கருத்தைத தான் வலியுறுத்தியுள்ளது.
(Stated by Abu-Theeb Taahir At-Tabari and Quoted in Al-Qurtubi’s Al-Jaamiili Ahkaamil Quran vol.14, P.55).
2. இமாம் மாலிக் (ரஹ்):
இப்னுல் ஜவ்ஸி அவர்கள் அறிவிப்பதாவது : இமாம் மாலிக் பின் அனஸ் அவர்களிடம் இஸாக் பின் ஈஸா அத்தபாஅ என்பவர், மதீனா மக்கள் பாடும் பாட்டு பற்றிக் கேட்ட பொழுது, இமாம் அவர்கள் நிச்சயமாக! இது பாவிகளால் செய்யக் கூடியது என்று பதில் கூறினார்கள்.
ஆபுத் திப் அத் தபரி அவர்கள் கூறுவதாவது : இமாம் மாலிக் அவர்களைப் பொறுத்தவரை, பாடுவம் அதைக் கேட்பதும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். மேலும், இமாம் அவர்கள் கூறியதாக அவர் கூறும் பொழுது, ஒருவன் ஒரு அடிமைப் பெண்ணை விலை கொடுத்து வாங்கிய பின், அந்த அடிமைப் பெண் தொழில் முறைப்பாடகியாக இருக்கும் பட்சத்தில், அவளை வாங்கிய நபர், தான் வாங்கிய பொருளில் குறை இருந்தால் எவ்வாறு விற்ற நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுவாரோ, அது போல அவரிடம் அப் பெண்ணைத் திரும்பக் கொடுத்து, பணத்தை மீட்டிக் கொள்ள வேண்டும்.
(The previous sayings related to Maalik ware quoted from Ibnul-Jawzi’s TALBEES IBLEES, p.229.)
மேற்காணும் தடைக்கு ஆதரவாகவே மதினா அறிஞர்கள் செயல்பட்டுள்ளார்கள். முhலிக் மத்ஹபின் ஆய்வாளரான அல்-குர்துபி அவர்கள், இப்னு குவைஸ் மான்தாத் என்பவர் கூறியதாகக் கூறுவதாவது, இமாம் மாலிக் அவர்கள் இஸ்லாமியக் கல்வி கற்க ஆரம்பிப்பதற்கு முன்பு வரை பாடுவதையும் இசையையும் கற்றிருந்தார்கள். பின்பு அவர்கள் இஸ்லாமியக் கல்வி கற்ற பின் அவர்களின் கருத்து, இசைக்கும் பாடலுக்கும் எதிராக இருந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள். (Al-Jaami’li Ahkaamil Quraan vol.14. p.55)
மேலும் அல் குர்துபி அவர்கள், சில சமங்களில் இமாம் மாலிக் அவர்கள் பாடுவதை அனுமதித்து உள்ளார்கள்.அதாவது, கடுமையான உழைப்பின் போது ஏற்படும் களைப்புத் தீரப் பாடப்படும் நாட்டுப் புறப் பாடல்கள் மற்றும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றைத் தனியாக மேய்த்துக் கொண்டிருக்கும் போதும், ஈதுப் பெருநாள் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான நேரங்களில் பாடப்படும் பாடல்களுக்கும், அத்துடன் சிறு கைக் கொட்டு அடித்துப் பாடுவதற்கும் பொதுவான அனுமதியை வழங்கியுள்ளார்கள். இந்த அனுமதி இன்ற பாடப்படும் பாடல்களுக்கும், இசைக்கும் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்க. மேலும், இன்றைய இசையை ஆதரித்துப் பேசுபவர்கள், சூபித்துவக் கொள்கையின் தாக்கத்தால் பேசுகிறார்களே ஒழிய, உண்மையான சுன்னாவைப் பின்பற்றுவதால் அல்ல. அத்தகையவர்கள் செய்வது இஸ்லாத்தில் ஏற்பட்டுள்ள நவீனம் (பித்அத்) வகையைச் சார்ந்ததும், இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டதுமாகும். (Al-Jaami’li Ahkaamil Quran vol.14. p.54)
3) இமாம் ஷாபிஈ (ரஹ்):
அதாபுல் கதா எனும் நூலில், இமாம் ஷாபிஈ அவர்கள், நிச்சயமாக பாடல் என்பது வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) என்று கூறியதாக பதியப்பட்டுள்ளது. மேலும், எவர் ஒருவர் இதில் அடிக்கடி ஈடுபடுகிறாரோ அவர் தகுதியற்ற முட்டாள்தனமான செயலில் ஈடுபடுகிறார். மேலும் அத்தகையவருடைய சாட்சியத்தை ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும்.
இப்னு ஹஜர் அல் ஐஹதமீ அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் அறிஞரான அல் ஹாரித் அல் முஹாஸிபி அவர்கள் கூறுவதாகக் கூறுவது என்னவெனில், தானாகச் செத்த பிராணியை அதன் மாமிசத்தை (Maytah) உண்பது எவ்வாறு இஸ்லாமியச் சட்டத்தினால் ஹராமாக ஆக்கப்பட்டுள்ளதோ அதே போல பாடலும் தடை செய்யப்பட்டதாக இருக்கின்றது.
மேலும் ஷாபிஈ மத்ஹப் அறிஞரான அர்-ரஃபிஈ என்பவருடைய நூலான அஸ் ஸர்ஹுல் கபீர் - ல் பாடுவது என்பது ஹராம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட கூற்றை இமாம் நவவீ அவர்களின் ரவ்தா எனும் நூல் சட்ட அங்கீகாரம் வழங்கி, மேற்கண்ட அறிஞர்களின் கூற்றை பலப்பத்தி உள்ளது. (Kuffar Ra’aa- p.61))
4) இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்):
ஹம்பலி மத்ஹபின் அறிஞரும், திருமறை விரிவுரையாளரான அபுல் ஃபரஜ் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் தல்பீஸ் இப்லீஸ் எனும் நூல், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களின் நிலையை தெளிவாக விளக்குகின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் காலத்தில், பொதுவாக பாட்டுக்கள் மெட்டுக்களுடன், ராகத்துடன் பாடப்பட்டு வந்தது. ஆந்தப் பாடல்கள் யாவும் மக்களை இறையச்சம் உடையோராக ஆக்கவும், அதன்பால் தம் வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டு கோலாக அமைய பாடப்படுவதாக இருந்தது. இருப்பினும், சில பாடகர்கள் அழுகுணர்ச்சிக்காகவும், தாள லயத்துக்காவும், வர்ணனைகளைக் (qasaaiduz zuhd) கூட்டி பாடும் போது, இத்தகைய பாடல்கள் பாடுவதற்கான அனுமதியுடன், இமாம் அஹ்மத இப்னு ஹம்பல் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்கள்
இமாம் அஹ்மத் அவர்களின் மகனும், மாணாக்கரும் ஆகிய அப்துல்லா அவர்கள் தனது தந்தை கூறியதாகக் கூறுவதாவது, பாடல்கள் என்பது ஒருவனது மனத்தில் கபட எண்ணத்தை விதைக்கின்றது.
மேலும், மற்றொரு அறிஞரான, இஸ்மாயீல் பின இஸ்ஹாக் அத் தகபி அவர்கள் கூறுவதாவது, ஒருவர் பாடல்களை செவியுறுவது அல்லது கேட்பது சம்பந்தமாக இமாம் அஹ்மத் அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, அதை நான் வெறுக்கின்றேன், மேலும், அது ஒரு புதினம் (பித்அத்) ஆகவும் இருக்கிறது என பதிலளித்தார்கள். மேலும், அத்தகைய இடத்தில் பாடுபவர்களுடன் உட்காரவும் கூடாது என்றார்கள் என தகபி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மேலும், அபுல் ஹாரித் என்ற அறிஞர் இமாம்அஹ்மத் அவர்கள் கூறியதாகக் கூறுவதாவது, இறைவனின் ஞாபகத்தை விட்டும் மறக்கடிக்கக் கூடிய வகையில் இசையும், பாடலுமாக, ஆட்டமும் இவை போன்றவற்றில் (At-Tahyeer) ஈடுபடுவது பித்அத் ஆகும். மேலும், இதில் ஈடுபடுபவர்களிடம் கேட்கும் போது, எங்களை உணர்ச்சியுடனும், இதயத்தை இதமாக ஆக்கவும் இவை பயன்படுகிறது எனவும் கூறுவார்கள். இத்தகைய செயல்கள் பித்அத் ஆகும் என்று இமாம் அஹ்மத் அவர்கள் கூறுவதாக அபுல் ஹாரித் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மேலும், யாகூப் அல் ஹாஸிமி அவர்கள் இமாம் அஹ்மத் கூறுவதாகக் கூறுவதாவது : அத்தக்யீர் என்பது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நவீனம் பித்அத் ஆகும் என்றார்கள். மேலும், யாக்கூப் பின் கய்யாத் என்பவர் இமாம் அஹ்மத் அவர்கள் கூறுவதாகக் கூறுவதாவது, அத் தக்யீர் - ஐ செவிமடுப்பது என்பது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்கிறார்கள்.
இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கீழ்க்காணும் அபுபக்கர் அல் கல்லால் மற்றும் இமாம் அஹ்மத் அவர்கள் கவிதை பாடுவதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிற கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்பதைக் கீழ்க்காணும் செய்தியின் தொடர்பைக் கொண்டு குறிப்பிடுகின்றனர்,
அதாவது, இமாம் அஹ்மத் அவர்கள் ஒரு பாடகர் பாடிக் கொண்டிருப்பதை செவியுற்று, அவர்கள் அச் செயல் பற்றிக் கடிந்து கொள்ளவில்லை. இதற்கு ஆதாரமா கீழ்க்காணும் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள். நூன் எனது தந்தையாகிய இமாம் அஹ்மத் அவர்களிடம் தந்தையே! ஓருவர் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டும் அதை நீங்கள் விமர்சம் செய்யவில்லை. அதைத் தடையும் செய்யவில்லை என வினவிய பொழுது, இமாம் அஹ்மத் அவர்கள், அவர்கள் கண்டனத்திற்குரிய வெறுக்கத்தக்க செயலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் அதை வெறுக்கின்றேன். ஏன்னைப் பொறுத்தவரை அதில் நான் விருப்பமற்றவனாகவும் இல்லை என பதிலளித்ததாக இமாம் அவர்களின் மகனார் ஸாலிஹ் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட கருத்தை மறுக்குமுகமாக, அறிஞர் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கீழ்க்கண்ட கருத்தை முன்வைக்கின்றார்கள்.
ஆதாவது, ஹம்பலி மத்ஹபில் உள்ள சில அறிஞர்களான, அபுபக்கர் அல் கல்லால் மற்றும் அப்துல் அஜீஸ் போன்றோர் பாடுவதை அனுமதித்துள்ளனர். இத்தகைய கருத்துக்கள் எல்லாம், அன்றைய அவர்கள்து காலத்தில் இஸ்லாத்தின் தூது பற்றியும், புனிதப் போர் பற்றியும் இயற்றப்பட்ட ஆன்மீகப் பாடல்களைத் தான் குறிக்கின்றது. ஆதானல் தான் இத்தகைய பாடல்களை இமாம் அஹ்மத் அவர்ள் வெறுக்காமல் இருந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இமாம் அவர்கள், சில கவிதைகள், பாடல்கள், கதைகள் போன்றவை இசை கலக்காமல் பாடப்படுவதைக் கண்ணுற்றும் அதை அவர்கள் தடை செய்யவில்லை என அனைத்து அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், கீழ்க்காணும் நிகழ்ச்சி மூலம் இமாம் அவர்கள் இசை, பாடலுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்கள் என விளங்க முடிகின்றது.
ஆதாவது, தன் தந்தை இறந்த பின்,தனக்காக விட்டுப் போன சொத்தில் ஒரு அடிமைப் பாடகியும் இருக்க, அந்த அடிமைப் பெண்ணை மகனானவர் விற்க விரும்பி, இமாம் அஹ்மத் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறார். ஆதற்கு பதிலளிக்குமுகமாக இமாம் அவர்கள், அந்த அடிமைப் பெண் பாடகி எனும் முறையில் அவளது விலை மதிப்பு முப்பது ஆயிரம் திர்ஹம்கள். ஆதே நேரத்தில் பாடகி அல்லாத அடிமைப் பெண் எனும் பட்சத்தில் அவளது விலை மதிப்பு வெறும் இருபது தினார் மட்டுமே. மேலும். அவளை ஒரு சாதாரண அடிமைப் பெண் எனும் முறையில் தான் விற்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். ஏனெனில், அவள் இஸ்லாமிய ஆன்மீகப் பாடலைப் பாடவில்லை|ழூ மாறாக, அவள் புனைந்துரைக்கப்பட்ட ஒருவரைப் புகழ்ந்து பாடக் கூடிய பாடலைப் பாடுவதால், அவளை சாதரண நிலையில் தான் விற்க வேண்டும் என்ற இமாம் அவர்களின் கருத்தானது, நாம் எடுத்துக் கொண்ட தலைப்புக்கு சரியான ஆதரமாகத் திகழுகின்றது.
பிற ஆண்களைக் கவரும் வண்ணம் பெண்கள் தங்களது குரலை உயர்த்திப் பேசுவதும், குலைந்து பேசுவதும் தடுக்கப்பட்டது. பேண்களின் மறைவான (அவ்ரத்) பகுதிகளாக அவர்களது குரல் ஓசையும் அடங்கியுள்ளது என்பது அறிஞர்களின் கருத்தாகும்.(ஆர்)
மேலும் இதன் மூலம் பாடுவது என்பது ஹராமானது என்பதும், அத்தகைய செயல்கள் மூலம் பொருளீட்டுவதும், அதைச் சொத்தாகச் சேர்த்துக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல.
இதையே ஹம்பலி மத்ஹம் மார்க்க அறிஞரான அல்-மிர்வாஸி அவர்கள், மனதை வசீகரிக்கக் கூடிய அளவில் பாடக் கூடிய பாடல்களைப் பாடுபவர் தவறானதொரு செயலைச் செய்கின்றார். ஏனெனில், அவர் இஸ்லாமிய ஆன்மீகப் பாடல்களைப் பாடவில்லை. மாறாக, அதை விடக் கீழானதொரு இஸ்லாத்தின் வரம்புக்குள் வராத புனைந்துரைக்கப்பட்ட பாடல்களையே பாடுகிறார்.
மேற்கண்ட ஆய்வுகளின் முடிவாக இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுவது என்னவென்றால், இமாம் அஹ்மத் அவர்களின் முடிவு ஒரு சமயத்தில் பாடலுக்கு ஆதரவாகவும், இன்னுமொரு சமயத்தில் அதற்கு எதிராகவும் உள்ள நிகழ்வானது, பாடக்கூடிய பாடலின் தரத்தைப் பொறுத்து மாறுபாடடைகிறது என்பதை உணர முடிகின்றது. மேலும், இசையுடன் கூடிய பாடல்கள் இமாம் அஹ்மத் அவர்களின் கருத்திற்கிணங்க தடை செய்யப்பட்டவையே என்ற முடிவுக்கு நம்மால் வெகு இலகுவாக வர முடிகின்றது என்பதை உணர வேண்டுகின்றோம். (Talbees Iblees pp-228-229)
4. பாடலுக்கான அனுமதியும் அதற்கான விதிவிலக்குகளும்
இதுவரை நாம் கண்ட விளக்கங்கள் இசைக்கும் அது சார்ந்த பாடலுக்கும் எதிரான கொள்கையைப் பெற்றிருக்கக் கண்டோம். இதே நிலையைத் தான் அனைத்து நிலைகளிலும் இஸ்லாம் கொண்டுள்ளதா? ஏனில், இல்லை என்றே பதில் வரும். ஏனெனில், இஸ்லாம் சில சமயங்களி; இசைக்கும், பாடலுக்கும் அனுமதி தந்துள்ளதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் தொகுப்புக்களான ஹதீஸ் நூல்களில் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆந்த அனுமதிகளும்,இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டு, அதற்கான சட்ட திட்டங்களும் தெளிவாகவே வகுத்துத் தரப்பட்டுள்ளது. ஆத்தகைய அனுமதிகள் இன்றைய சூழலில் உள்ள இசைக்கும், பாடலுக்கும் சற்றும் பொருந்தாது. இஸ்லாம் என்பது சரியான நிலைநிறுத்தப்பட்ட அளவில், பொழுது போக்கிற்காகவும் உடற்பயிற்சி போன்ற விளையாட்டிற்காகவும், கேளிக்கைளுக்காகவும் அனுமதி வழங்கி, அந்த அனுமதியை ஒரு சிறந்த சட்ட வரையறைக்குள் நிறுத்துவதன் மூலம் அத்தகைய செயல்களின் மூலம் எழும் பாவமான, மோசமான மற்றும் இஸ்லாத்திற்கெதிரான அனைத்தையும் தடை செய்து விடுகின்றது.
அனுமதியும் அதற்கான உதாரணங்களும்.
1. ஜிஹாத் (இறைவழியில் போர்) :
ஒருவன் இறைவழியில் போராட ஆயத்தமாகும் பொழுது, போர்க் களங்களில் அவன் தன்னை முழுமையாக நிலை நிறுத்திக் கொள்ள, ஆன்மீகம், ஒழுக்க போதனைகள் சம்பந்தமான எழுச்சியூட்டும் பாடல்கள் அவனுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் ஊட்டவல்லவைகளாக அமைந்துள்ளன. இத்தகைய போர்க்காலச் சூழ்நிலைகளில் பாடப்படும் பாடல்கள் இஸ்லாமிய வீரன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், அவனது வல்மையும் அவனது ஆயதங்களும் ஏக இறையோனாகிய அல்லாஹ்வின் திருக்கலிமாவை இவ் உலகில் நிலைநிறுத்துவதற்காகவும், இறைமறுப்பாளர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அவர்களது சதிகளையும் வேரடி மண்ணாகச் சாய்க்கவும், எவ்வாறு பயன்பட வேண்டும் என்ற உணர்வை அப் பாடல்கள் ஊட்டி வந்துள்ளன என்பதை சில ஹதீஸ்கள் மூலம் அறிய முடிகின்றது
நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் (உ-ம், காலித் பின் வலீத், அலீ பின் அபிதாலிப்) போரில் ஈடுபட்டிருக்கும் முஜாஹிதீன்களை (இறைப் போராளிகள்) உத்வேகம் ஊட்டவும், எழுச்சிப் பாடல்களை போரின் போதும், போருக்கு முன்னும் பாடி வந்துள்ளதைக் கீழ்க்காணும் ஹதீஸ் மூலம் அறிய முடிகின்றது.
عن البراء قال : كان رسول الله صلى الله عليه وسلم ينقل التراب يوم الخندق حتى اغبر بطنه يق
لو لا أنت مالهتدينا ولا يصوقنا ولا صلينا
فأنزلن سكينة علينا وثبت الأقدام إن لا قينا
إن الألى قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا
يرقع بها صوته ((أبينا أبينا)) (متفق عليه))
இதன் பொருள் :
யா அல்லாஹ்! நீ இல்லை என்றால் (நாங்கள்) நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்.
நாங்கள் ஜகாத் கொடுத்திருக்க மாட்டோம்
தொழுதிருக்க மாட்டோம். எனவே,
எங்களுக்கு நிம்மதி இறக்கியருள்வாயாக!
நாங்கள் போரைச் சந்தித்தால்
எங்களுடைய பாதத்தை உறுதிப்படுத்துவாயாக!
முன் உண்டான எதிரிகள் எங்களை மிகைத்து விடடார்கள்.
அவர்கள் குழப்பத்தை நாடினால்.
எங்களுக்காகத் தடுத்து விடு.
மேற்கண்ட ஹதீஸ் அல்-பராஅ என்பவரால் அறிவிக்கப்பட்டது. நாயகம் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது, தோழர்களுடன் இணைந்து, போருக்கு ஆயத்தமாக அகழ்க்குழிகளைத் தோண்டிக் கொண்டிருக்கும் போது, மண் தூசிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றுப் பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த நிலையில், மேற்கண்ட பாடலைப் பாடியதாக அல் பராஅ என்ற நாயகத் தோழர் அறிவிக்கின்றார். மேலும் கடைசி வரியான أبينا أبينا என்பதை உரத்த குரலில் பாடியதாக அறிவிக்கின்றார். (புகாரி, முஸ்லிம்).
ஹதீஸ் : 2
عن أنس رضى الله عنه قال : جعل المهاجرون والأنصار يحفرون الخندق حول المدينة وينقلون التراب على متونهم وهم يقولون :
نحن الذين بايعوا محمدا على الا سلام ما بقينا أبدا
قال النبى صلى الله عليه وسلم وهو يجيبهم :
((اللهم إنه لا خير إلا خير الآ خرة فبارك فى الأنصار والمهاجرة)) (رواه البخارى)
2.களைப்பு நீங்க :
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மதினாவைச் சுற்றி, அகழ்ப் போருக்கான ஆயத்தமான அகழ்க் குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்த போது, அன்ஸாரிகளும், முஹாஜிர்களும், கீழ்க்காணும் பாடலைப் பாடத்துவங்கினார்கள்.
நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தின் மீது நிரந்தரமாக இருப்போம் என பைஅத் (உறுதிமொழி) செய்தோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்தவர்களாக பதில் அளித்தார்கள்.
யா! அல்லாஹ்!! நன்மை என்பது மறு உலக நன்மை தான். எனவே, யா! அல்லாஹ்! அன்ஸார்களுக்கும், முஹாஜிர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!
மேற்கண்ட பாடலானது, மதினாவில் அகழ்ப் போருக்கு முன்னேற்பாடாக, ரசூல் (ஸல்) அவர்களுடன், அன்ஸார்களும், முஹாஜிர்களும் இணைந்து மதினாவைச் சுற்றிலும் அகழ் (குழி) தோண்டிக் கொண்டிருந்தனர். இப்போர் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆகழ் தோண்டும் பணியில் ரசூல் (ஸல்) அவர்களும் சாதாரண தம் தோழர்களைப் போலவே வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆந்த நேரத்தின் போது, வேலையின் கடினத்தை மறப்பதற்காக, அப்துல்லா பின் ரவாஹா எனும் தோழர் மேற்படி பாடலை இயற்றிப் பாட, அவருடன் இணைந்து ஒரே கோரஸுடன் மற்றவர்களும் பாட ஆரம்பித்தனர். ஆந்தச் சூழ்நிலையானது, நாயகத் தோடர்களின் மனங்களை இணைத்து, உறுதியுடன் கூடிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த போரில் இறைவனின் பேருதவியினால், முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்
மேற்படி பாடலைக் கேட்ட ரசூல் (ஸல்) அவர்கள் அப்பாடலையும், பாடுவதையும் தடை செய்யவில்லை. மாறாக, யா! ஆல்லாஹ்! (உன்னிடம் உள்ள) மறுமை (பாக்கியங்களைத்) தவிர வேரொன்றும் நல்லது கிடையாது. ஏனவே, அன்ஸார்களுக்கும், முஹாஜிர்களுக்கும் நல்லாசி வழங்குவாயாக என இறைவனிடம் பிரார்த்திக்கின்றார்கள்.
3) ஈதுப் பெருநாள் :
இஸ்லாத்தின் இரு பெரும் திருநாள்களான ஈதுப் பெருநாள்களின் போது, சாதாரண பாடலுடன் கைக் கொட்டு (னுயகக) அடிப்பதும், சுன்னாவினால் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.
عن عائشة رضى الله عنها قالت :
دخل على رسول الله صلى الله عليه وسلم ، وعندي جاريتان تغيان بخناء بعاث : فاضطجح على الفراش وحول وجهه. ودخل أبوبكر فانتهرني وقال: مزمارة الشيطان عند النبي صلى الله عليه وسلم فأقبل عليه رسول الله صلى الله عليه وسلم فقال : ((دعهما)) فلما غفل عمزتهما فخرجتا . (أخرجه البخارى)
وفي رواية له دكرت عائشة أن أبابكر رضى الله عنه دخل عليها وعندها جاريتان فى أيام منى تدففان وتضربان ، والنبى صلى الله عليه وسلم متغش بثوبه ، فانتهرهما أبوبكر فكشف النبى صلى الله عليه وسلم عن وجهه، فقال : (دعهما يا أبابكر، فأنها أيام عيد) وتلك الأيام أيام منى.
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் :
என் முன்னிலையில் இரு பெண் குழந்தைகள் பாடிக் கொண்டிருந்த பொழுது, ரசூல் (ஸல்) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். பின்பு அவர்கள் கீழே உட்கார்ந்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார்கள். ஆப்பொழுது, (என் வீட்டில்) நுழைந்த தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஷைத்தானின் ஓசையா? ஏனக் கேட்டு என்னைக் கடிந்து கொண்டிருந்த நிலையில், ரசூல் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களை நோக்கி, அபுபக்கரே! ஆவர்களை விட்டு விடும் எனக் கூறினார்கள். இதைத் தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது கண்ணயர்ந்தவுடன், சிறுமிகளை வெளியே போகச் சொல்லி சைகை செய்தவுடன், அவர்களும் சென்று விட்டார்கள்.
புகாரியில் வந்துள்ள மற்றொரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பாதாவது,
மினா நாளின் போது (எனது தந்தை) அபுபக்கர் (ரலி) அவர்கள் (என் வீட்டிற்கு) வந்த பொழுது என்னருகில் இரு சிறுமிகள் சிறு கொட்டு அடித்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள். ஆப்பொழுது, ரசூல் (ஸல்) அவர்கள், துணியால் தம்மை மூடிய நிலையில் சாய்ந்திருந்தார்கள். ஆப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் அச்சிறுமிகளை திட்ட ஆரம்பித்தார்கள். (இதைச் செவியுற்ற) ரசூல் (ஸல்) அவர்கள், தம் முகத்தை மறைத்திருந்த தம் ஆடையை நீக்கி விட்டு, அபுபக்கர் அவர்களே இன்றைய தினம் ஈதுப் பெருநாள் தினமாகையால், அவர்களை விட்டு விடும் என்றார்கள்.
4) திருமண விருந்து:
திருமண விருந்து போன்ற சமயங்களில் பெண்களும் குழந்தைகளும் சிறு கொட்டு அடித்துக் கொண்டு, பாட்டுப் பாடுவதும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மூலியமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பாடல் வெகுளித்தனமானதாகவும் இருத்தலும், தவிர இன்றுள்ள பாடல்களைப் போல காதலை மையமாக வைத்தோ அல்லது ஒழுக்க நெறிகளைப் பாதிக்கக் கூடிய வகையிலோ அந்தப் பாடல்களும், செய்கைகளும் அமைந்திருக்கக் கூடாது என்பது அவசியமானதாகும். மேலும், அந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் முகமாகவும், விருந்தினர்களைச் சந்தோசப்படுத்தக் கூடியதாகவும், குறிப்பாக, அங்கு நடைபெறும் திருமணத்தை முன்னறிவிப்புச் செய்து, திருமணம் நடைபெறுகிறது என்பதை உணர்த்தக் கூடியதாகவும்,அப் பாடல்கள் அமைய வேண்டும்.
மேலும், இங்கு ஒன்றைக் குறிப்பிடுவது மிக அவசியமானதாகும். பாடக் கூடிய பெண்கள், ஆண்களுக்கு மத்தியில் பாடாமல், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள உள் அறைகளிலே தவிர, ஆண்கள் முன்னிலையில் பாடக் கூடாது. அப்படிப் பாடுவது, இஸ்லாத்திற்கு முரணான செயலைத் தூண்டுவதாக அமைந்து விடும்.
இனி இது பற்றியுள்ள ஹதீஸ்களைக் காண்போம் :
ஹதீஸ் : 1
عن محمد بن حاطب الجمحي قل : قال رسول الله صلى الله عليه وسلم : فصل ما بين الحرام والحلال : الدف والصوت )) رواه الترمذي باسناد حسن
முஹம்மது பின் ஹாதிப் அல் - ஜுமாஹி (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஹலாலுக்கும், ஹராமுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்பது கைக் கொட்டும் (தஃப்ம்), சத்தமும்ழூ ஆகும். (திர்மிதி)
இங்கு சத்தம் என்பது, திருமண அறிவிப்பை சிறு கொட்டு அடித்துப் பாட்டுப் பாடி, பிறர் அறியும் வண்ணம் செய்தல் என மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
ஹதீஸ் : 2
عن عائشة رضى الله عنها قلت : قال رسول صلى الله عليه وسلم : (أعلنوا هذا النكاح وأحعلوه في المساجد ، واضربوا عليه بالدفوف) رواه الترمذي وابن حبان وغيرهماஃ باسناد حسن.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், திருமணத்தை (மக்கள் அறியும்படி) விளம்பரப்படுத்துங்கள். ஆத் திருமணத்தை பள்ளியில் வைத்து நடத்துங்கள். துஃப் கைக் கொட்டு அடித்து (மக்கள் அறியும்படி விளம்பரம்) செய்யுங்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்)
ஹதீஸ் : 3
عن عائشة رضى الله عنها زفت أمرأة إلى رجل من الأنصار ، فقال نبي الله صلى الله عليه وسلم : (يا عائشة ما كان معكم لهو ، فان الأنصار يعجبهم الهو) رواه البخارى وعيره
وفي رواية أخرى بلفظ : فقال : فهل بعثم معها فقال :
((تقل : أتيناكم أتيناكم فحيونا نحييكم )) رواه الطبراني باسناد حسن
ஆயிஷா (ரலி) அறிவிப்பதாவது
ஒரு அன்ஸாரித் தோழருக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆப்பொழுது ரசூல் (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களை; பார்த்து, ஓ! ஆயிஷாவே! போழுது போக்கு எதுவும் இல்லையா என வினவ, அன்ஸார்கள் பொழுது போக்கு (சிறு கேளிக்கையை) விரும்பக் கூடியவர்களாயிற்றே! என்கிறார்கள்.
பின் ஆயிஷாவே, மணப்பெண்ணுடன் தஃப் அடித்து பாட்டுப் பாட சிறுமிகளை ஏதும் அனுப்பி வைத்தாயா? என வினவ, அச் சிறுமிகள் தங்கள் பாடலில் எதைக் கூறுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட பொழுது,
உங்களுக்காக வந்தோம்!!
உங்களுக்காக வந்தோம்!!!
எங்களை நீங்கள் வரவேற்றது போல்,
உங்களை நாங்கள் வரவேற்கின்றோம்!!
எனக் கூறட்டும் என ரசூல் (ஸல்) அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். (தபரானி-ஹஸன்).
ஹதீஸ் : 4
عن عامر بن سعد رضى الله عنه قال : دخلت على قرظة بن كعب وأبي مسعود الأنصاري في عرس ، وإذا جوار يغنين، فقلت: أي صاحبي رسول الله صلى الله عليه وسلم وأهل بدر ، يفعل هذا عندكم!؟ فقالا : إجلس إن شئت فاسمع معنا ، وإن شئت فاذهب، فإنه قدرخص لنا في اللهو عند العرس. (أحرجه النسائي باسناد حسن
அமர் பின் ஸஅது (ரலி) அறிவிப்பதாவது :
ஒரு திருமண நிகழ்ச்சியில், கராதா பின் கஅப் (ரலி) மற்றும் அபி மஸ்ஊது அல் அன்ஸாரி (ரலி) ஆகிய இரு தோழர்கள் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னிலையில் இரு சிறுமிகள் பாடிக் கொண்டிருக்கும் நிலையில் நான் சென்றேன். பின் நான் அவர்களைப் பார்த்து, நாயகத் தோழர்களே, பத்ருப் போர் கண்ட மாவீரர்களே! உங்கள் முன்னிலையில் இப்படி (நிகழ்ச்சி) நடக்கலாமா? என வினவினேன். அதற்கு அவர்கள் நீ விரும்பினால் எங்களுடன் உட்கார்ந்து கேளும், விருப்பமில்லை எனில் போகலாம் என்று கூறி விட்டு, திருமணத்தின் போது இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்கள். (நஸயீ - ஹஸன்)
மேலும், இங்கு நாம் ஒரு முக்கியமானதொரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, கைக் கொட்டு அடித்து பாடுவதற்கு பெண்களுக்கு, சிறுமிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கவனிக்கத்தக்கது.
இனி இது பற்றி வந்துள்ள அறிஞர்களின் கூற்றுக்களைக் கவனிப்போம். ஷேக் முஹம்மது அல் முபாரக்புரி என்ற இது பற்றிக் கூறும் போது, திருமண நிகழ்ச்சியின் போது பாடுவதற்கும், கைக் கொட்டும் அடிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி பெண்களுக்கு மட்டுமே பொருந்துவதாகும், ஆண்களுக்கல்ல. (Tuhfatul Ahwadhi. Vol.4. p.210)
இனி, ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதைக் கவனிப்போம்.
ரசூல் (ஸல்) அவர்களது காலத்தில் திருமண நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளில், கைக் கொட்டு அடித்து பாட்டுப் பாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பொழுது போக்குகளில், பாட்டுப் பாடவும், அதில் கைக் கொட்டு அடிக்கவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசூல் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு பாட்டுப் பாடவோ, கைக் கொட்டு அடிக்கவோ அல்லது வெறுங் கைகளினால் பாட்டுக்கு ஏற்றவாறு கைதட்டி இசை எழுப்பவோ அனுமதி வழங்கப்படவில்லை.
ஏனெனில், கை தட்டுவது பெண்களுக்கும், தஸ்பீஹ் செய்வது ஆண்களுக்கும் உரியது. (புகாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸின் அடிப்படையிலும்,
ஆண் பெண்ணைப் போலத் தோற்றமளிப்பதும், பெண் ஆணைப் போலத் தோற்றமளிப்பதும் ஆகிய செயல்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் (அஹ்மது மற்றும் பல) என்ற ஹதீஸின் அடிப்படையிலும், கை தட்டுவதும், பாடுவதும் கைக் கொட்டு அடிப்பதும் ஆண்களுக்கு தடை செய்யப்பட்டதாகும்.
மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிந்திய ஸஹாபாக்கள் தாபியீன்கள், இமாம்கள் ஆகியோரின் வாழ்நாளில், இது போன்ற செயல்களில ஈடுபடும் ஆண்களை பெண் தன்மை கொண்ட அலிகள் என கருதப்பட்டு வந்துள்ளனர். (See vol.11, p.565 of Ibn Taimiyyah’s Majmoo’ul Fatwa)
5. அரசு விருந்தினர் அல்லது மதிப்பிற்குரிய தலைவர்களின் வருகையின் போது :
அரசு விருந்தினர்கள் அல்லது மதிப்பிற்குரிய தலைவர்கள், உலமாக்கள், அறிஞர்கள், போர் முடிந்து வெற்றியுடன் திரும்பும் குழுக்கள், நமக்கு மிகவும் பரியமான நபர், மிக நீண்ட நாள் கழித்து இல்லம் திரும்பும் நபரைக் கௌரவிக்க ஆகிய நிகழ்வுகளின் போது, அவர்களை வரவேற்க கைக் கொட்டு அடித்து வரவேற்பது, நபி (ஸல்) அவர்களது சுன்னாவின் மூலம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் தெரிவிக்கின்றது. மேலும், கைக்கொட்டு அடிப்பதுடன், இஸ்லாத்திற்கு முரணில்லாத வகையில் பாடப்படும் பாடல்களும் அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
ஹதீஸ் எண் : 1
عن عمرو بن شعيب ، عن أبيه عن جده رضى الله عنه أن أمرأة قالت : يا رسول الله! إني نذرت أن أضرب على رأسك بالدف : ((أوفى بنذرك)) رواه أبوداود باسناد حسن
தனது பாட்டனார் வழியாக அமரு பின் சுபை; என்பவர் அறிவிப்பதாவது, ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்து ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! தூங்கள் வருகையின் போது, உங்கள் முன்னிலையில் கைக் கொட்டு அடிப்பதாக (வரவேற்பதாக) சத்தியம் செய்துள்ளேன் என்று கூறினாள். ஆதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உனது சத்தியத்தை நிறைவேற்றிக் கொள் எனப் பதிலளித்தார்கள். (அபூதாவூது - ஹஸன்)
இந்நிகழ்ச்சி ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து வெற்றி பெற்று பாதுகாப்புடன் திரும்பி வந்த பொழுது நிகழ்ந்த நிகழ்வாகும். ஆவர்களின் வருகையை ஒட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாகவும், அவர்கள் நலமுடன் திரும்பி வர வேண்டும் என மக்கள் கொண்டிருந்த பிரார்த்தனை நிறைவேறியதன் பொருட்டு நடந்த நிகழ்ச்சியுமாகும். (See Mirqastul Mafaateh. Vol.7. p.41)
ஹதீஸ் : 2
عن بريدة قال : حرج رسول الله صلى الله عليه وسلم في بعض مغازيه، فلماانصرف جاءت جارية سوداء فقالت : يارسول الله إني يذرت ان ردك الله سالما أن أضرب بين يديك بالدف وأتغنى، فقال لها رسول الله صلى الله عليه وسلم : ((إن الله كنت نذرت فاضربي، وإلا فلا)).
فجعلت تضرب فدخل أبوبكر وهى تضرب ثم دخل علي وهى تضرب ثم دخل عثمان وهى تضرب ثم دخل عمر قألقت الدف تحت استها، ثم قعدت عليه فقال رسول الله صلى الله عليه وسلم : (إن الشيطان ليخاف منك يا عمر)) أخرجه الترمدى وغيره باسناد حسن
புரைதா என்பவர் அறிவிப்பதாக திர்மிதியில் வந்துள்ள ஹதீஸ் கூறுவதாவது :
ஒரு போருக்குச் சென்று, பின் இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் நாடு திரும்பி வந்திருந்த பொழுது, ஒரு கருப்பு நிற அடிமைப் பண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் பாதுகாப்புடன் திரும்பி வந்தால், இந்த கைக் கொட்டை அடித்து பாட்டுப் பாடுவதாக இறைவன் மேல் ஆணையிட்டு (சபதம் செய்து) இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவன் மீது நீ சபதம் செய்திருப்பின் உனது சபதத்தை நிறைவேற்றிக் கொள். அவ்வாறு சபதம் செய்யவில்லையாயின் வேண்டாம் எனக் கூறினார்கள். அதன் பின் அந்த (கருப்பு நிற அடிமை)ப் பெண் தன் கைக் கொட்டை அடிக்க ஆரம்பித்தாள். அவ்வேளையில் அந்த இடத்துக்கு முதலில் அபுபக்கர் (ரலி) அவர்களும், அடுத்து உதுமான்(ரலி) அவர்களும்,அடுத்து அலி (ரலி) அவர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இறுதியில் உமர் (ரலி) அவர்களும் வருகிறார்கள். உமர் (ரலி) அவர்களைக் கண்டதும் அப் பெண் தன் கையிலிருந்த கைக் கொட்டை தன் பின்புறமாக எறிந்து விட்டு உட்கார்ந்து விடுகின்றாள்.இதைக் கண்ட ரசூல் (ஸல்) அவர்கள், ஓ! உமரே! நிச்சயமாக! உம்மைக் கண்டதும் ஷைத்தான் பயப்படுகின்றான். (திர்மிதி)
மேற்கண்ட ஹதீஸின் மூலம், முக்கியப் பிரமுகர்கள் வருகையின் போது, கைக் கொட்டு மட்டும்அடித்து வரவேற்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. மேலும், அந்தச் செயல், விரும்பத்தகாத ஒன்று என்பதைக் கீழ்க்காணும் வாசகத் தொடர் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆதாவது, இறைவன் மேல் ஆணையிட்டு இருக்கும்பட்சத்தில் (கைக் கொட்டு அடித்து) உன் சபதத்தை நிறைவேற்று| இல்லையெனில் வேண்டாம் என ரசூல் (ஸல்) அவர்கள் தடுத்திருப்பதிலிருந்து, அது ஒரு தேவையற்ற செயலாகவே கருத அதிக இடமுள்ளது. மேலும், அவ்வாறு செய்வது கூட ஷைத்தானின் செயல் என்பதையும், உமர் (ரலி) அவர்கள் சம்பவ இடத்திற்குள் நுழையவும், அப் பெண் கைக் கொட்டு அடிப்பதை நிறுத்தி விட்டு,அதை எறிந்தும் விடுகின்றாள். இதைக் கண்ணுற்ற ரசூல் (ஸல்) அவர்கள் ஓ! உமரே! நிச்சயமாக உம்மைக் கண்டதும் ஷைத்தான் பயப்படுகின்றான் என்பதிலிருந்து அந்தக் கொட்டு அடிப்பதே ஷைத்தானின் வேலை என்றால், இன்றைய இசைக் கருவிகளின் நிலையையும், அதனால் எழுப்பப்படும் இசையைக் கேட்பதும், அதனால் எழுப்பப்படும் இசையை ரசிப்பதும் இஸ்லாத்தில் கூடுமா? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்
தபூக் யுத்தம் முடிந்த பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் வெற்றியுடன் திரும்பியவுடன் மக்கள் பாட்டுப்பாடி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். போரிலிருந்து திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்களை பெண்களும், குழந்தைகளும் சகிதமாக வந்து வாழ்த்திப்பாடியுள்ளதாக நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு (சீரத்துந்நபி)களில் காண முடிகின்றது. ஆதற்கு எடுத்துக் காட்டாக :
طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله داع
நம் மீது சந்திரன் உதித்து விட்டது.
வதா என்ற மலையை அடுத்து,
நன்றி (செய்வது) நம்மீது அவசியமாகி விட்டது ஒவ்வொரு நேரமும்,
நாம் இறைவனைத் துதிக்கும் நேரத்திலும்!!
Muntaqan Nuqool. P.329 and Ar-Raheeq Al-Makhtoom p.193.
இது வரை நாம் கண்ட அனைத்து தலைப்புகளிலும் கொடுக்கப்பட்ட அனுமதிகள் யாவும் ஒரு வரையறைக்குள் வைத்து, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமானது, மனிதனை எல்லா நேரமும் ஆடிப்பாடி தனது பொன்னான நேரங்களை விரையமாக்க அனுமதியளிப்பதில்லை. மாறாக, அதற்கேயுரிய நேரங்களில் மட்டும் பொழுது போக்கு என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது, ஈதுப் பெருநாள் எனும் போது, சந்தோசத்தை முன்னிறுத்தியும், திருமணம் மற்றும் திருமண விருந்து எனும் போது, சந்தோசம் மற்றும் அந்நிகழ்ச்சியைப் பிறர் அறியும்படிச் செய்ய ஏதுவாகவும், போர் முடிந்து திரும்பும் தலைவர்கள் மற்றும் வீரர்களுக்கு களைப்பைப் போக்கி உற்சாகம் தந்து, அவர்களது அர்ப்பணிப்புகளையும், தியாகத்தையும் நினைவு கூறுமுகமாகவும்|இந்த அனுமதிகள் வழங்கப்பட்டு, அதற்கேயுரிய விதிமுறைகளும் தெளிவாகவே தரப்பட்டுள்ளன.
அதாவது, இந்நிகழ்ச்சிகளில் பெண்களும், சிறுமிகளும் மட்டுமே பங்கெடுத்துப் பாட, கைக் கொட்டு அடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, ஆண்கள் இத்தகு செயல்களில் ஈடுபட அனுமதியளிக்கப்படவில்லை. பாடக் கூடிய பெண்கள் அவர்களுக்குரிய தனி இடங்களில் இருந்து பாட மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தவிர, ஆணும், பெண்ணும் கலந்து இருக்கும் சூழ்நிலையை இஸ்லாம் அனுமதியளிப்பதில்லை. எனவே, இதன் மூலம் ஒழுக்கக் கேடுகள் பரவுவதைத் தடுப்பவையாக அதன் சட்ட வரைமுறைகள் அமைந்துள்ளதைக் காணலாம்.
மேற்கண்ட அனைத்து விளக்கங்கள் மூலம் இன்றைய இசையும், பாடலும், ஆணும், பெண்ணும் கலந்து பாடுவதும், அதைக் கேட்பதும், பார்ப்பதும் இஸ்லாத்தினால் பூரணமாகத் தடை செய்யப்பட்ட ஒன்றே என அறியலாம்.
அடுத்து பாடல் எனும் போது, கவிதை அவசியம். அதற்கான புலமை அவசியம் அன்றோ! ஆது பற்றிய குர்ஆனிய மற்றும் சுன்னா மற்றும் உலமாப் பெருந்தகைகளின் கருத்தக்களைக காண்போம்.
5. கவிஞர்களும் கவிதைகளும்
நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெரும் பெரும் கவிஞர்கள் இருந்துள்ளனர் என்பதை திருமறையில் இறைவன் கவிஞர்களைப் பற்றி ஒரு சூராவே இறக்கியருளியிருப்பதிலிருந்து புலனாகிறது. மேலும், மக்காவில் இறங்கிய குர்ஆனிய வசனங்கள் (மக்கி வசனங்கள்) யாவும் கவித்துவம் உடையனவாகவும இருக்கக் காணலாம். முதினாவில் இறங்கிய வசனங்கள் உரைநடை போலவும், மக்காவில் இறங்கிய வசனங்கள் கவிதை நடையிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.
மேலும், ஒருவனது வயிற்றில் சீழ் நிரம்பி இருப்பது தெரிந்தும், அவனது இதயத்தில் கவிதை நிரம்பி இருப்பதை விட, அந்த சீழ் நிரம்பி இருப்பது சிறந்தது என்ற ஹதீஸின் மூலம் கவிதை எவ்வாறு வெறுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
மேலும், அந்தக் காலத்திலும் கவிதைகள் யாவும் புனைந்துரைக்கப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட, பொய்களைச் சுமந்ததாகவே அமைந்துள்ளது.
(விசுவாசிகளே!) ஷைத்தான்கள் எவர் மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
(செயலால்) பாவியான, (சொல்லால்) அதிகமாகப் பொய் கூறும் ஒவ்வொருவரின் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
தாங்கள் கேள்விப்பட்டதை, (அப் பொய்யர்களின் காதுகளில்) போடுகிறார்கள்| அவர்களில் பெரும்பாலோர் (பெரும்) பொய்யர்களே!
இன்னும் கவிஞர்கள் - அவர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். (அஷ்ஷுஅரா :221-224)
நிச்சயமாக, இது சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும். இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல. (அல்ஹாக்கா. 40-41)
கவிஞர்களைப் பொய்யர்கள் என்றும் அவர்கள் கூறுவது ஷைத்தானின் பொய் நிரம்பிய கபட வார்த்தைகள் தான் என்பதையும் மேற்கண்ட குர்ஆன் வசனம் எடுத்துரைக்கின்றது.
மேலும், கவிஞர்கள் எந்தளவு வெறுக்கப்பட்டனர் என்பதையும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் எந்தளவு அவர்களின் கவிதைகள் இஸ்லாத்திற்கு முரண்பாடாக இருந்தன என்றால்,
நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த தாயிப் நகர வாசியும், கவிஞருமான கஃப் பின் சுஹைர் என்பவருடைய சம்பவம் நமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டும் பாடமுமாகும்.
கஃப் பின் சுஹைர் இஸ்லாத்தைத் தழுவுமுன் இஸ்லாத்திற்கு எதிராக கவிதை புனைந்து பாடுவதில் மிகவும் பிரபலமானவர். எந்தளவுக்கு என்றால் அவரைக் கண்ட இடத்தில் கொலை செய்து விடும்படி தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆனால் இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்தது. இதைக் கேள்விப்பட்ட கஃப்பின் சுஹைர் அவர்கள் தன்னை மறைத்தவராக நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு,அ ந்த இடத்திலேயே இஸ்லாத்தைப் பற்றி தூய முறையில் 25 அடிகள் கொண்ட ஒரு பாடலைப் பாடுகின்றார்கள். அப்பாடலின் வரிகளைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் தம் மேலங்கியை எடுத்து, கஃப் பின் சுஹைர் (ரலி) அவர்களுக்குப் போர்த்தி அவரைக் கௌரவித்தார்கள் என்ற செய்தியை கீழ்;க்காணும் நூல் மூலம் அறிய முடிகின்றது.زادا لمعاد - بانت سعاد
ஆக, கவிஞர்களையும், கவிதைகளையும் வெறுத்த இஸ்லாம், ஒரு சில வரையறைக்குட்பட்டு,இஸ்லாத்தின் தூதையும், இஸ்லாமிய ஆன்மீக சிந்தகை கொண்ட பாடல்களையும் அவை இசை கலக்காமல் இருக்கும் போது, அத்தகைய பாடல்களையும் கவிஞர்களையும் இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது.
ஒரு முறை ஹஸன் பின் தாபித் (ரலி) அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்னு கதீர் - ல் காண முடிகின்றது.
உனது பாடலைக் கொண்டு காஃபிர்களை வீழ்த்துவீராக! ஜிப்ரீல் (அலை) உன்னுடன் இருக்கிறார்! இப்னு கதீர். பாகம்.3. பக்.391.
மேலும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கவிஞர்களும், பாடகர்களும் இருந்துள்ளனர். ஆவர்களில் முக்கியமானோர் அப்துல்லா பின் ரவாஹா, கஅப் பின் சுஹைர், அபு சுப்யான், ஹஸ்ஸான் பின் தாபித் போன்றோர்களாவார்.
அஷ்ஷுஅராவில், 221 - 224 வசனம், கவிஞர்கள் பொய்யர்கள், அவர்கள் பேசுவதும், பாடுவதும் ஷைத்தானின் வார்த்தைகள் என இறங்கிய போது, மேற்கண்ட ஸஹாபாப் பெருமக்கள் அழுத வண்ணம் ரசூல் (ஸல்) அவர்களிடம் சென்று, யா! ரசூலுல்லாஹ்! நாங்களுமா? ஏன வினவ, இவர்களைத் திருப்திப்படுத்து முகமாக இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை அதன் தொடராக இறக்கியருளினான் என்பதைக் குர்ஆன் விளக்கவுரைகளிலிருந்து அறிய முடிகின்றது.
ஆயினும் அவர்களில்) விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்து அல்லாஹ்வையும் நினைவு கூர்ந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின பழி தீர்த்துக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர .. .. .. (அஷ்ஷுஅரா : 227) ஆதாரம் : இப்னு கதீர்)
மேலும், அறிஞர் பெருமக்களால் சில சந்தர்ப்பங்களைச் சுட்டிக் காட்டப்பட்டு, அத்தகைய சந்தர்ப்பங்களில் வெகுளித்தனமான, இஸ்லாத்திற்கு முரனில்லாத வகையில் பாடப்படும் பாடல்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
கடினமான வேலையின் போது, அந்த வேலையின் கடினத்தை மறப்பதற்காகப் பாடப்படும், கோரஸான பாட்டுக்கள், இதற்கு உதாரணமாக அகழ்ப் போரின் போது, மதினாவைச் சுற்றி அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஸஹாபாப் பெருமக்கள் தம் களைப்பை மறக்கப் பாடிய பாடலும்| அது சமயம் நபி (ஸல்) அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல், அவர்களுக்காக துஆச் செய்தது| இந்த சம்பவமே அனுமதிக்கான உதாரணமாகும்.
அடுத்து, நீண்ட தூர பயணத்தின் போது, அதாவது அன்றைய நாளில் ஒட்டகம், மாடு, குதிரை போன்றவற்றில் பயணம் செய்யும் போது, களைப்புத் தெரியாமலும், சோர்வடையாமலும் இருக்கப் பாடும், இஸ்லாத்திற்கு முரணில்லாத பாடல்களும் ஆகும்.
நபி (ஸல்) அவர்களின பயணத்தின் போது, ஒட்டகத்தை வழி நடத்திச் செல்பவரான அன்ஜாஸா அவர்கள் குறிப்பிடுவதாவது,
நாங்கள் பயணத்தின் போது, எங்களது பயணப் பிராணிகளை வேகமாக ஓட்டுவதற்கு பாட்டுப் பாடி பயணம் செய்வோம். (புகாரி,முஸ்லிம்)
மேலும், தனிமையில் இருப்பவர் தன் தனிமையைப் போக்கிக் கொள்ளவும், தாம் தன் குழந்தையைத் துயில் கொள்ளச் செய்யவும், அழும் குழந்தையைத் தாலாட்டிச் சமாதானம் செய்யவும், பாடக் கூடிய வெகுளித்தனமான பாடல்களும் ஆகிய இவைகள் இஸ்லாத்திற்கு முரணாகாத வகையில் பாடப்படுமானால், அவற்றை அறிஞர் பெருமக்கள் அனுமதித்துள்ளனர்.
மேலும், அத்தகைய பாடல்கள் ஆன்மீகத்தைப் போதிக்கக் கூடியதாகவும், மக்களிடம் நன்னடத்தையை உருவாக்கக் கூடியதாகவும், தொழுகை, ஜகாத், ஜிஹாத் போன்ற இறைவழிப்பாடுகளை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம்.
ஆது தவிர, இதற்கென நேரம் குறிப்பிட்டு வழமையான முறையில் பாடப்படுமானால், அது நூதனச் செயலாகும். (பித்அத்). மேலும், இதற்கெனவே, தனியாகப் பாடல்களை உருவாக்கி அதையே பாடுவதை வழமையாகவும் கொள்ளக் கூடாது.
6. இசை, பாடல் - அனுமதி இல்லாத நிலையில் பயன்படுத்தினால் சுன்னாவின் எச்சரிக்கை!
கீழ்க்காணும் ஹதீஸ்களில் அனுமதி இல்லாத நிலைகளில், நிகழ்ச்சிகளில், சந்தர்ப்பங்களில் பாடுவதும் கைக் கொட்டு அடிப்பதும் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளன.
ஹதீஸ் : 1
عن شريح أنه سمع صوت دف فقال : (( إن الملائكه لا يدخلون بيتا فيه دف )) رواه إبن شيبة بسند جيد
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களின் மாணவரும், தாபியீன்களில் மிகச் சிறந்த அறிஞருமான பல ஹதீஸ்களில் அறிவிப்பாளராகவும் இருந்துள்ள, காதி சுரைஹ் என் தாபியீன், கைக் கொட்டு அடிக்கும் சப்தத்தைக் கேட்டு விட்டு, நிச்சயமாக கைக் கொட்டு (தஃப்) ஓசை எழும் வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறினார்கள். (இப்னு ஷைபா)
ஹதீஸ் : 2
ومن إبراهيم قال : ((كان إصحاب عبد الله يستقبلون الجوارى في الأزقة معهم الدفوف فيشفونها)) رواه إبن أبي شيبة بسند صحيح
தாபியீன்களின் அறிஞர்களின் வரிசையில் மற்றுமொருவரான இப்றாஹிம் அந் நகயீ என்பார் அறிவிப்பதாவது, அப்துல்லா (இப்னு மஸ்ஊது) வின் மாணவர்கள் ஒரு குறகிய பாதை வழியே வந்து கொண்டிருந்த போது, கைக் கொட்டு அடித்த வண்ணம் அவர்களின் எதிரே வந்து கொண்டிருந்த சிறுமிகளின் கைக் கொட்டைப் பறித்து உடைத்து விட்டார்கள். (இப்னு ஷைபா)
முதலாவது ஹதீஸ்-ல் கைக் கொட்டின் ஓசை எழும் வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என வந்துள்ளது.
இரண்டாவது ஹதீஸ்-ல், அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் கைக் கொட்டு அடித்து வந்த சிறுமிகள், அக் கைக் கொட்டைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
ஆக, அனுமதியளிக்கப்பட்ட அந்தக் கைக் கொட்டு, இஸ்லாத்தின வரையறைகளுக்கு அப்பாற்பட்ட நேரத்தில் பயன்படுத்தும் போது, அவ்வாறு அதைப் பயன்படுத்துவது தெளிவாகத் தடை செய்யப்பட்டது என்பதை உணர முடிகின்றது.
மேலும், இப்னு ஹஜர் அவர்கள், ஸஹீஹ் புகாரி நூலுக்கான தனது விளக்கவுரையில் இது பற்றிக் கூறும் போது, குறிப்பிட்ட இந்த விசயத்தில், இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களை தெளிவான முறையில் மனதில் கொள்ள வேண்டும். பொழுது போக்கு, கேளிக்கை, சந்தோஷம் ஆகியவற்றுக்காக மட்டும் பாடுவதைத் தவிர்த்து, குறிப்பிட்ட வகையில் பாடுவதும், கவிதை இயற்றுவதும், புனைந்துரைக்கப்படாத பாடல்களும், அத்துடன் கைக் கொட்டு அடிப்பதும்| இவற்றைக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களான ஈதுப் பெருநாள், திருமண விருந்து, ஜிஹாத், வேலையில் களைப்பு நீங்க ஆகிய நேரங்களில் பாடுவதும், கைக் கொட்டு அடிப்பதும்| அதற்கான குர்ஆனிய, சுன்னாவின் ஆதாரங்களைத் தெளிவான முறையில் பயன்படுத்தி,அந்த வரையறைக்குள் பயன்படுத்துவது மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. Quoted from Fat-ul Baari. Vol.2. p.443.
மேலும், சில அறிஞர்கள் கீழ்க்காணும் ஹதீஸை பயன்படுத்தி, இசையும் பாடலும் இஸ்லாத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். உமர் (ரலி) பெயரைக் குறிப்பிட்டு வரும் இந்த ஹதீஸ்-ல் பாடுவதும், அதனுடன் இணைந்து கைக் கொட்டு அடிப்பதும் இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டதல்ல என்கின்றனர்
أخبرنا عبد الرزاق عن معمر عن أيوب عن إبن سيرين أن عمر بن الحطاب كان إذا سمع صوتاً أو دفاً قال : ((ما هو؟)) فإذا قالوا: ((عرس أو ختان)) صمت . رواه عبد الرزاق بسند ضعيف
உமர் (ரலி) அவர்கள் பாடுவதையும், கைக் கொட்டு அடிக்கும் சத்தத்தையும் கேட்க நேர்ந்தால், இது என்ன என வினவுவார்கள். ஆது திருமண (விருந்து) அல்லது சுன்னத் என்னும் கத்னா நிகழ்ச்சி என்றால் அவர்கள் அமைதியாகி விடுவார்கள்.
மேற்கண்ட ஹதீஸின் மூலமாக, நாம் ஏற்கனவே சுட்டிக காட்டிய விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் (திருமண விருந்து, ஈதுப் பெருநாள்கள், ஜிஹாத், முக்கிய பிரமுகர்களின் வருகை, வேலையின் களைப்பைப் போக்குவதற்குத் தவிர, இன்னும் இது போன்ற மகிழ்ச்சிகரமான (கத்னா) சந்தர்ப்பங்களிலும், (தஃப்) கைக் கொட்டு அடித்து பாட்டுப்பாடலாம் என்ற கருத்தைத் திணிக்கறார்கள். இறைவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் மூலம் நேரடியான பயிற்சியைப் பெற்ற ஸஹாபாக்கள், தாபியீன்கள் சமூகம் அவ்வாறு தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறான நடைமுறையைப் பின்பற்றி இருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.
மேலும், மேற்கூறப்பட்ட உமர் (ரலி) அவர்களின் பெயரால் வரும் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும் என அறிஞர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் உமர் (ரலி) அவர்களுக்கும் இப்னு ஸ்ரீன் என்பவருக்கும் இடையே தொடர்பு அருந்தள்ளது. எவ்வாரெனில், உமர் (ரலி) அவர்கள் இறந்து 30 வருடங்கள் கழித்துத் தான் இப்னு ஸ்ரீன் என்பவர் பிறந்ததாக ஆதாரக் குறிப்புகள் கூறுகின்றன.
மேற்கண்ட தகவலை ஹதீஸ் கலை அறிஞரான அல்பானி அவர்கள், இந்த நூலின் மூல ஆசிரியருக்கு எழுதிய தபாலில் எழுதி அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(This critical information was supplied by the Muhaddith, Muhammed Nasiruddin Al-Albaani, in a personal letter to the author)
7. இசைக்கருவிகளும் சுன்னாவும் :
சுன்னாவின் நிலைப்பாடு என்னவெனில், இசைக்கருவிகள் அனைத்தையும் معازف எனும் வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டு, தடை செய்துள்ளது. மேலும், அதன் விதிவிலக்காக الدف எனும் வார்த்தையைப் பயன்படுத்தி, இந்த தஃப் (கைக் கொட்டு) - ஐ மட்டும் சில சமயங்களில், அந்த சமயங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு (முன்னர் உள்ள தலைப்புகளில் கண்டவாறு) கூறி அனுமதி வழங்கியுள்ளது. சுன்னா தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ள அந்த சமயங்கள் தவிர பிற சமயங்களில் அனுமதி வழங்கப்பட்ட தஃப் - ஐ பயன்படுத்துவது, தடையும் செய்யப்பட்டள்ளது. மேலும், வாசகர்கள் தெளிவாக அந்த இசைக் கருவிகளை அறியும் பொருட்டு, ஹதீஸில் கையாளப்பட்ட வார்த்தைகளைத் தொகுத்து அட்டவணையிட்டும் காட்டப்பட்டுள்ளது.
ஹதீஸ் நூல்களின் பெயர்கள்
கையாளப் பட்டுள்ள அரபி வார்த்தைகள்
தமிழ் மொழி பெயர்ப்பு
ஆங்கில மொழி பெயர்ப்பு
ஷரீஆவின் நிலை
1. புகாரி, இப்னு மாஜா
وامعازف
அனைத்து இசைக் கருவிகள்
Music Instruments
தடை செய்யப்பட்டுள்ளது
2. அஹ்மது இப்னு ஹம்பல் பாகம் 1 பக்.289, 350 | பாகம் 2, பக்.158,171-172
والكوبة (الطبل)
பறை, பேரிகை, மத்தளம், தவுல், தப்பட்டை
Drum (cylindrical vessel or Barrel)
தடை செய்யப்பட்டுள்ளது.
3. அஹ்மது இப்னு ஹம்பல் பாகம்.2, பக்.165, 167.
والقنين
வீணை அல்லது யாழ் போன்ற சங்கீதக் கருவி. (நரம்பு வாத்தியங்கள்)
Lute
தடை செய்யப்பட்டுள்ளது.
4. அல் ஹாக்கிம், அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் பாகம்.4 பக்.40
والمزامير الشيطان
ஷைத்தானின் (ஊது குழல்) வாத்தியங்கள். காற்று வாத்தியங்கள் (புல்லாங்குழல்)
Satan’s (wind) Instruments
தடை செய்யப்பட்டுள்ளது
5. அபுபக்கர் அஷ் - ஷாபிஈ, அர்ருபாயிய்யத்
مزمار
காற்று வாத்தியங்கள் (புல்லாங்குழல் மற்றும் பல..)
wind Instruments
தடை செய்யப்பட்டுள்ளது
6. திர்மிதி, இப்னு ஹிப்பான், தப்ரானி
الدف
கைக் கொட்டு, ஒரு புறம் மட்டும் தோலால் மூடப்பட்டது.
Daff
குறிப்பட்ட சமயங்களில் மட்டும் பயன்படுத்த அனுமதி.
Manuscript No,2/22/1, as related by the Scholor of hadeeth, Nassiruddeen Al-Albaani in his Al-Ahaadeeth As-Saheehah, vol.1,p.170 of the 5th section
பொதுவாக இந்த இசைக் கருவிகளை நான்கு வகையினதாகப் பிரிக்கலாம் :
1) காற்று வாத்தியங்கள் (wind instrument) - புல்லாங்குழல், ஊதுகுழல் (கொம்பு), தாரை (Trumphets, accordion, Saxophone, Trombones etc.)
2) நரம்பு வாத்தியங்கள் - கிதார், வீணை,
3) தோல் இசைக் கருவிகள் அல்லது கையால் தட்டி ஓசை எழுப்பக் கூடிய இசைக்கருவிகள் (Percussion Instruments) உ-ம் : தபேலா, தவில், மிருதங்கம், கஞ்சிரா, சேகண்டி, மற்றும் பல.
4) மேற்கண்டவைகளில் ஒன்றுக்கு மேல் கலந்து உள்ள வாத்தியங்கள். ஊ-ம். பியானோ, மின்னணு வாத்தியங்கள் (Electronic Key Board Musical Instruments)
இன்றுள்ள இசைக்கருவிகள் யாவும், மேற் கூறப்பட்ட இசைக் கருவிகளின் தன்மையில் ஏதாவது ஒன்றை ஒத்தே இருக்கின்றதை நாம் அறிவோம். எனவே, சுன்னா மற்றும் ஷரீஆவின் தெளிவான சட்டதிட்டங்களின்படி, மேல் உள்ளதும், அது போன்ற அமைப்பையும் பெற்றுள்ள இசைக் கருவிகளும் தடை செய்யப்பட்டவையே. மேலும், மேற் கூறப்பட்ட இசைக் கருவிகளின் ஒத்த ஓசையை வாய் மூலம் ஒருவர் எழுப்பி, அந்த இசையைக் கேட்பதும், அதனுடன் பாட்டுப்பாடுவதும் தடை செய்யப்பட்டவையே என்பதையும் கவனத்தில் கொள்க.
1. கைக் கொட்டு அல்லது தஃப் (DAFF - الدف
சுன்னாவினால் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ள சமயங்கில் இசைக் கருவிகளில் கைக் கொட்டை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயங்கள் தவிர, ஏனைய நிலைகளில் கைக் கொட்டைப் பயன்படுத்த சுன்னாவின் சட்டங்கள் தெளிவான தடையைப் பிறப்பித்துள்ளன என அறிவோம்
மேலும், அனுமதியளிக்கப்பட்ட சமயங்களில் பயன்படுத்தப்படும் தஃப் ஆனது, கையினால் தட்டி ஓசை எழுப்பக் கூடியதும், தோல் வாத்தியக் கருவியின் வகையைச் சார்ந்ததாகத் தானே இருக்கின்றது. ஏனவே, அது போல் உள்ள ஏனைய தபேலா, தவுல் மற்றும் பல.. போன்ற வாத்தியங்களையும் உபயோகிக்கலாம் தானே என்றொரு கேள்வி எழும். அதற்கும் அறிஞர் பெருமக்கள் பதில் வைத்தே இருக்கின்றனர்.
தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, அனுமதியளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் இசைக்கப்படும் கைக் கொட்டானது, கீழே குறிப்பிட்டுள்ள அளவின்படி இருத்தல் அவசியம். அதாவது, ஒரு பக்கம் மட்டுமே தோலால் மூடப்பட்டதாகவும், அமைப்பில் கஞ்சிரா (TAMBOURINE) வை ஒத்ததாகவும், ஆனால் அதன் கைப்பிடிச் சுவர்களில், சல சலவென ஒலியை எழுப்பக் கூடிய மணிகளோ, சலங்கைகளோ இருத்தல் கூடாது என்பது அவசியமானதாகும். SEE KAFFUR RA’AA PP.94-95.
பொதுவாக, உபயோகப்படுத்த அனுமதியளிக்கப்ட்ட கைக்கொட்டின் அளவானது, அதன் மேல் பரப்பப்பட்டிருக்கும் தோலின் குறுக்களவானது சுமார் 20-35 செமீ க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். அந்தத் தோலை இழுத்துக் கட்டுவதற்கும், கைப்பிடியாகவும் பயன்படும் வட்ட வடிவிலான மரச் சட்டத்தின் அகலம் ஒரு விரல் நீளம் அளவு கொண்டதாக இருத்தல் வேண்டும்.
மேற் கூறப்பட்ட அளவுக்கு மிகுமானால், ஒலி அதிர்வுகள் அதிகமாகும். மேற்படி அளவல்லாது அதிக அளவுள்ள கைக் கொட்டைப் பயன்படுத்துவது ஷரீஆ - வகுத்துத் தந்துள்ள சட்டங்களை மீறும் செயலாகும். ஏனவே, அது தடை செய்யப்ட்ட ஒன்றாகும். மேலும், இதை விடச் சிறிய அளவு உள்ள கைக் கொட்டைப் பயன்படுத்துவது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை பொது அறிவிப்புச் செய்வதற்கு ஏற்ற ஒலி அளவுகளை பெற்றிருக்காது அல்லது தராது, எனவே, நாம் எந்த நோக்கத்திற்காக (பிறர் அங்கு திருமணம் நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதற்காக) அதைப் பயன்படுத்துகின்றோமோ, அந்த நோக்கம் நிறைவேறாது. ஏனவே, குறிப்பிட்ட இந்த விசயத்தில் மிகப் பெரியதும் அல்லாமல், மிகச் சிறியதும் அல்லாமல் நடு நிலையானதொரு அளவைப் பின்பற்றுவது சாலச் சிறந்ததாகும்.
மேலும் பொதுவாக தஃப் (الدف) கைக் கொட்டு என்பது ஒரு பக்கம் மட்டும் (தோலால்) மூடப்பட்ட வாத்தியமாகும். (lisanul Arab vol.9 pp.104-106)
மேலே உள்ள விதிமுறைகளில்படி ஒரு பக்கம் மட்டும் தோலால் மூடப்பட்ட வாத்தியம் தானே தபேலா - வும், மேலும் அது போன்ற வாத்தியங்களும் எனலாம். ஆனால் ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸில் (அஹ்மது இப்னு ஹம்பல் அவர்களின் ஹதீஸில்) الكوبة என்ற சொல்லானது, மத்தளம் என்றும், இன்னும் அது போல உள்ள வாத்தியங்களையும் குறிப்பிட்டு காட்டித் தடையைப் பிறப்பித்துள்ளது.
மேலும், என்பதற்கு இரு பக்கமும் தோலாலான என்ற வாத்தியத்தையும், மற்றும் நீளமான இரு பக்கமும் தோலாலான தவுல் மிருதங்கம் போன்ற வாத்தியங்களையும், மேலும் தபேலா போன்ற ஒரு பக்கம் தோலாலும், மறு பக்கம் மூடப்பட்ட மரம் அல்லது மண்ணால் அல்லது உலோகத்தினால் செய்யப்பட்ட அடித்தளத்தைக் கொண்ட வாத்தியங்களையும் குறிக்கும்.
மேலும், இவை யாவும் கொண்டு நோக்கும் போது, குறிப்பிட்ட இசைக் கருவியான தஃப் (கைக் கொட்டு) தவிர்த்து (குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும்) ஏனைய, இசைக் கருவிகளை இசைப்பதோ, அதனுடன் இயைந்து பாடுவதோ, அவற்றின் இசையைக் கேட்பதோ அவற்றை விலைக்கு வாங்குவதோ, விற்பதோ, உற்பத்தி செய்வதோ, இன்னும் இது சார்ந்த ஏனைய அம்சங்களும் இஸ்லாமிய ஷரீஆ (சட்டத்தி) - னால் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
8. பாடுதல் :
ஒருவர் தனியாகவோ அல்லது இசைக்கருவிகளுடன் இயைந்த வகையில் (ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் மற்றும் தஃப் (கைக் கொட்டு) இசைத்துப் பாடுவது தவிர) பாடுவது இஸ்லாமிய ஷரீஆவினால் பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கனவே கண்ட அல்-ஹாக்கிம் ல் வந்துள்ள ஹதீஸின் மூலம் அறிந்துள்ளோம்.
இசைக் கருவிகளை (ஷைத்தானின் இசைக்கருவிகளை) இசைத்துக் கொண்டு பாடுதும்| துக்ககரமான நேரங்களில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடையைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவை பாவகரமானதும், வெட்ககரமானதும் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், அனுமதியளிக்கப்பட்ட சமயங்களில் பாடப்படக் கூடிய பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் நாம் ஏற்கனவே கண்டோம். ஆதாவது, தூய்மையான அடிப்படையில் இறைப் போதனைகளைக் கொண்டாகவும், இறை நினைவு ஊட்டக் கூடியதாகவும், மேலும் வெகுளித்தனமானதாகவும், இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையிலும் அப்பாடல்கள் அமைந்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.
மேலும் இன்று பாடப்படக் கூடிய சினிமாப் பாடல்களைப் போன்று வக்கிர உணர்வுகளைத் தூண்டக் கூடிய, காதலை மையமாக வைத்தும், புனைந்துரைக்கப்பட்ட பாடல்கள், மற்றும் இன்னும் இது போன்றதும், பெண்களை பாட வைத்து அவர்களின் முக்கல் முனகல்களைப் பயன்படுத்தி காம உணர்வுகளைத் தூண்டக் கூடியதும், ஆன இது போன்ற இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்படாத பாடல்களைப் பாடுவதும் தடை செய்யப்பட்டதாகும்.
மேலும்,ஏற்கனவே தஃப் அடித்து பெண்களும், சிறுமிகளும் பாட அனுமதியளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், பெண்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் பாட அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். ஆண்களின் முன் பாடவோ அல்லது குறிப்பிட்ட நேரம் குறித்து பெண்கள் உள்ள சபையில் பாடல்களைப் பாடுவதோ அல்லது பெண்கள் கூடிய சபையில் இசைக் கச்சேரி அமைத்து பெண் பாடகர்களை வைத்துப் பாடுவதாக இருந்தாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க. அனுமதியளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சிக்காகவும், அந்நிகழ்ச்சி (திருமணத்தை)யை பிறர் அறியும்படிச் செய்யவும் மட்டுமே பாடவும் அத்துடன் தஃப் அடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பாடல்களில் கூட மறந்தும் வரையரை மீறப்படக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்க.
மேலும், எந்த நிலையிலும் ஆண்கள் பாடுவதையும், இசை இசைப்பதையும் மார்க்கம் அனுமதிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க. அதாவது, வேலையின் களைப்பு நீங்க, பயணக் களைப்பு மற்றும் தனிமையைப் போக்க (இதற்கான ஆதார ஹதீஸ்கள் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.)) ஆகிய சந்தர்ப்பங்கள் நீங்கலாக, இச் சந்தர்ப்பங்களில் பாட மட்டும் சுன்னா (நபி மொழி)வின் சட்டங்கள் அனுமதியளித்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்க.
9. நடனமாடுதல் :
இசையுடனும், பாடலுடனும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடனோ இயைந்து நடனமாடுதல் இஸ்லாமிய சட்டங்களினால் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இசை (தஃப் அடித்து) யுடன் அத்துடன் இயைந்து பாடுவதற்கு நடனமாடுவதற்கு (குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே உரித்தானது. மேலும் ஆண்களைப் பொருத்தவரை இது அவர்களுக்குப் பொருந்தாத செயலாகும்.
இஸ்லாமிய மார்க்க அறிஞரும், சட்ட நிபுணருமான இஸ்ஸுத்தீன் பின் அப்திஸ் ஸலாம்ழூ அவர்கள் நடனமாடுவது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், கை தட்டுதலும், நடனமாடுதலும் மிகவும் மென்மையானவர்களான பெண்களுக்கு மட்டுமே உரித்தான, அற்ப அல்லது முக்கியமற்ற விசயமாகும். மேலும், தலையை ஆட்டிக் கொண்டே இருக்கக் கூடிய விதத்தில் நோய்வாய்ப்பட்டவர், மற்றும் பைத்தியம் தவிர, ஆண்களைப் பொறுத்தவரை நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ழூ(இஸ்லாமிய சட்ட அறிவியல் துறையில் சுல்தானுல் உலமா எனப் போற்றப்பட்டவர். ஆத்தகைய பதவிக்கு உரியவரும், தகுந்தவரும் ஆவார். ஹிஜ்ரி 577 - ல் டமாஸ்கஸில் பிறந்து ஹிஜ்ரி 660 ல் கெய்ரோவில் காலமானார். மேலும் தகவல்களுக்கு, முஃஜமுல் முஅல்லிஃபீன் என்ற நூலைப் பார்க்கவும். பாகம் 5, பக்கம்.249-250).
மேற்கூறிய அவருடைய விளக்கத்திற்கு குர்ஆனிலோ நபி மொழிகளிலோ, ஸஹாபாக்களிடமிருந்தோ எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை. எனினும், இன்றைய சூபித்துவக் கொள்கைக் காரர்களின் செயல்பாடுகள், உண்மையான மார்க்கச் சட்டங்களைப் புறக்கணித்து, தமது இச்சைக்காக வேண்டி சட்டங்களை இயற்றிக் கொண்டு, ஆன்மீகத்தின் உச்ச வெளிப்பாடக நடனத்ஐ ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். மேலும், அதில் கை தட்டி அராவரம் கூடக் செய்வார்கள். ஆனால், நபிமொழிகளில்ழூ ஆண்கள் கை தட்டி பாடுவது அல்லது ஆடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னரே கண்டோம். மேலும், கை தட்டல் பெண்களுக்கு மட்டுமே உரியதாகும். ழூபுகாரி, முஸ்லிம் இன்னும் பல. (Kuffur Ra’aa p.73)
மேலும் நடனம் என்பது புதினமாகும் (பித்அத்). ஐபத்தியக்காரனைத் தவிர வேறு யாரும் நடனமாடக் கூடாது. மேலும் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் இது பொருந்தக் கூடியதும் அல்ல. (தப்ஸீர், ரூஹுல் மஆனி பாகம் 21 பக்.71)
மேலும், பெண்கள் நடனமாடுவதும், சில வரையறைகளுக்கு உட்பட்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தஃப் - த் தவிர வேறு எந்த இசைக் கருவியையும் பயன்படுத்தக் கூடாது. அந்த தஃப்-டன் இயைந்து அவள்பாடி ஆடும் போது, இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்ட ஆடைகளை அணிதல் வேண்டும். மேலும், சிறுமிகளுடன் தவிர, பல பெண்கள் இணைந்த குரூப் டான்ஸ் போன்று ஆடுவதும் கூடாது. மேலும், ஆண்கள் உள்ள சபையிலும் ஆடுவது கூடாது. பெண்கள் உள்ள சபையில் அவள் ஆடினாலும், அவளது ஆட்டத்தில் பாடலில் காம உணர்வுகளைத தூண்டக் கூடிய விதத்தில் அவளது பாடலும், இசையும் அமைந்திருக்கக் கூடாது. மேலும், குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களான ஈதுப் பெருநாள், திருமண விருந்து, ஜிஹாது, போர் முடிந்து திரும்புவர்களை வரவேற்பது, முக்கிய பிரமுகர்களை வரவேற்பது, இது போன்ற சந்தர்ப்பஙகளில், மேற்கொண்ட செயல்கள் சந்தோசத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டுமே தவிர, இன்று கேளிக்கைகள் மற்றும் சினிமாக்களில் நடைபெறும் ஆபாசக் கூத்துக்கள் போல் ஆகி விடக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இவை அனைத்தும் ஒரு அனுமதியே தவிர, கண்டிப்பாக பாடியே திர வேண்டும். தப்ஸ் அடித்தே ஆக வேண்டும், பாடியே தீர வேண்டும் என்பதல்ல.
நபி (ஸல்) அவர்களது காலத்தி; அவர்களது அருமை மகளார் பாத்திமா, ருககையா, உம்மு குல்தூம் இன்னும் எண்ணற்ற ஸஹாபா மற்றும ஸஹாபியப் பெண்களுக்கும் திருமணம் நடந்தே இருந்தது. மேலும், நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போர், உஹதுப் போர், அகழ்ப் போர் போன்ற எண்ணற்ற போர்களில் வெற்றி வாகை சூடியே வந்தள்ளனர். ஆது போல் அவர்களை நாடி பல நாட்டுத் தூதுவர்களும் வந்தே இருந்தார்கள். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆடியதாகவோ பாடியதாகவோ, தப்ஸ் அடித்ததாகவோ நம்மால் அறிய முடியவில்லை. எனினும், நாம் அறிந்துள்ள நபி மொழிகளையும் புறக்கணிக்கவும் இயலாது.
எவ்வாறு ஆண்களும் பட்டாடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது எனினும் சட்டை போன்ற ஆடையின் ஓரத்தில் சிறிய அளவில் மடித்துத் தைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது (புகாரி, அபுதாவூத்). ஆவ்வாறே, இதுவும் அதாவது பாடம், இசையும் (தப்ஸ்) நடனமாடுதலும் (ஏற்கனவே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மற்றும் அவற்றின் வரையரைகளுக்குள்) அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி உள்ளதே என்பதற்காக இவற்றை எல்லாம் செய்து தான் தீர வேண்டும் என்பதில்லை. இது தவிர, அனுமதி அளிக்கப்பட்ட மேற்படி தப்ஸ்-ம் மற்றும் அதுவல்லாத ஏனைய இசைக்கருவிகளும், ஏனைய சந்தர்ப்பங்களில் தெளிவான தடையைப் பெற்றுள்ளன.