1. பலஹீனமான மற்றும் வீண் ஆசைகளைக் கட்டுப்படுத்த இயலாமை
وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفً
ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
(அல் குர்ஆன் ஸூரா 4: வசனம் 28)
2. பொறுமையின்மை
إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 70: வசனம் 19)
3. அவசரம்
خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ ۚ
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்;
(அல் குர்ஆன் ஸூரா 21: வசனம் 37)
وَكَانَ الْإِنسَانُ عَجُولًا
மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 17: வசனம் 11)
4. அநியாயம்
إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 14: வசனம் 34)
5. நன்றிகெட்டவன்
وَكَانَ الْإِنسَانُ كَفُورًا
இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 17: வசனம் 67)
إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ
நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
(அல் குர்ஆன் ஸூரா 22: வசனம் 66)
إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُّبِينٌ
நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 43: வசனம் 15)
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 100: வசனம் 6)
6. கஞ்சத்தனமாக
وَكَانَ الْإِنسَانُ قَتُورًا
மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்
(அல் குர்ஆன் ஸூரா 17: வசனம் 100)
7. சர்ச்சைக்குரிய மற்றும் தர்க்கம்
وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا
எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 18: வசனம் 54)
8. அறிவிலியாக
إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا
நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
(அல் குர்ஆன் ஸூரா 33: வசனம் 72)