லாயிலாஹா இல்லல்லாஹ்" கலீமத்துத் தவ்ஹீதா? ஹாக்கிமிய்யாவா? - வாசகர் விமர்சனம்


விமர்சனம் - 1

முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியக் கொள்கையில் தடுமாற்றமுள்ளவர்கள், இன்னும் சொல்வதானால் சரியான கொள்கையை அறவே அறியாதவர்கள் என்றும் சொல்லலாம். சரியான அகீதாவை ஒருவர் பேசினால் அவரை வஹ்ஹாபி என்று குற்றம்சாட்டுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நல்வழி காட்டி அவர்களின் நிலையை சீர்திருத்துவானாக.

உஸ்தாத் பஷீர் ஃபிர்தவ்ஸி அவர்கள் எழுதிய "லாயிலாஹா இல்லல்லாஹ்" கலீமத்துத் தவ்ஹீதா? ஹாக்கிமிய்யாவா? என்ற இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தேன்

படிப்பதற்கு இலகுவான நடையிலமைந்த இந்நூல் அறிஞரும் பாமரரும் புரிந்து பயன்பெறுவர்கள். அத்தோடு கொள்கையில் குழம்பி இருக்கிற வழிகேடர்களுக்கு தகுந்த மறுப்புகளும் தெளிவை வேண்டுவோருக்கு தேவையான வழிகாட்டல்களும் இந்நூலில் உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்...

இந்நூலை எழுதிய உஸ்தாத் பஷீர் ஃபிர்தவ்ஸி அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும் அவர் மூலமும் அவரது இந்நூல் மூலமும் முஸ்லிம்களை பயன்பெறச் செய்யட்டும். ஆமீன்....

இவன்
மெளலவி ஃபக்ருதீன் இம்தாதி
முதல்வர், அந்நூரா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, குறிச்சிப் பிரிவு, கோவை புறநகர்


விமர்சனம் - 2

இந்த நூலுக்கு அன்புச் சகோதரர் உஸ்தாத் ஷப்பீர் ஃபிர்தௌஸி முதல்வர் ரியாளுஸ்ஸாலிஹாத் இஸ்லாமிய கல்லுரி அவர்கள் அளித்த வாசகர் விமர்சனம்....

"லாஇலாஹ இல்லல்லாஹ்" கலிமதுத் தவ்ஹீதா ? ஹாக்கிமிய்யவா ?
என்ற இந்த சிறு புத்தகம் மிக பெரிய கொள்கை முரண்பாடை விளக்குகிறது அல்ஹம்துலில்லாஹ்!!..

தௌஹீத் என்பது என்ன? என்றும், நபிமார்களின் அழைப்பு தௌஹீதின் பக்கம் தான் இருந்தது என்று ஆரம்பித்து,

கலிமாவிற்கான சரியான பொருளும், கலிமா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளையும் எளிதாக படித்தால் விளங்குகிறது..

இதே கலிமாவை மொழிந்து வழிகேட்டுக்கு செல்லும் அபாயமான கொள்கையை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

ஆட்சி அதிகாரம் என்று தவறான புரிதலில் இருக்கும் முஸ்லிம்களை மீள் ஆய்வு செய்து சரியான கொள்கைக்கு திரும்ப இப்புத்தகம் ஆணி வேராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்புத்தகத்தை எழுதிய உஸ்தாத் பஷீர் ஃபிர்தௌஸி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

- உஸ்தாத் ஷப்பீர் ஃபிர்தௌஸி 
முதல்வர் ரியாளுஸ்ஸாலிஹாத் 
இஸ்லாமிய கல்லுரி 


விமர்சனம் - 3

தங்களுடைய இச்சிறிய நூலை முதலில் நான் விரைவாக முடிக்க வேண்டும் என ஆரம்பம் செய்தேன் ஆனால் படிக்க படிக்க  அனைவரும் படிக்க வேண்டிய மிகவும் அவசியமான நூல் என அறிந்து கொண்டேன்.

கலிமாவிற்கு தாங்கள் குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களில் இருந்தும் கொடுத்திருக்கும் தெளிவான விளக்கங்கள் மிகவும் அருமை. 

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் அர்த்தத்தையும், சிறப்புகளையும் இன்னும் தவ்ஹீதின் வகைகளையும் அறிந்து கொண்டேன்.

ஒரு முஸ்லிமின் ஐந்து கடமைகளில் முதன்மையான கடமையான திருக்கலிமாவை வாயால் மொழிவதோடு மட்டுமல்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த முறைப்படி அறிந்து செயல்பட்டால் மட்டுமே சொர்க்கம் நிச்சயம் என்பதை உணர முடிகிறது .

மேலும் பல்வேறுபட்ட இயக்கங்கள், ஜமாத்துகள் மூலம் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக ஒற்றுமை இன்றி இருப்பதற்கு  இக் கலிமாவை அதன் தூய வடிவில் அறியாமல் புறக்கணித்தது தான் காரணம் என்பதை இந் நூலின் மூலம் அறிந்து கொண்டேன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்கலிமாவை சரியான முறையில் நபி அவர்கள் கற்றுக் கொடுத்தவாறு வாழ்க்கையில் செயல்படுத்தி ஒற்றுமையுடன் வாழவும் 

கலிமாவை உணர்ந்தவர்களாக,   மொழிந்தவர்களாக நாம்  அனைவருக்கும் மரணத்தை தந்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை அடைய அருள் புரிவானாக.

 படிக்கும் அனைவரும் எளிதில் புரியும் படி புரியும் வண்ணம் எழுதி இதற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டு எழுதிய தங்களுக்கும் இந்நூல் வெளிவர உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் அல்லாஹ் முழுமையான கூலியை வழங்குவானாக!

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான  இதுபோன்ற புத்தகங்கள் மேலும் வெளிவர அல்லாஹ் அருள் புரிவானாக!

சிறிய நூலாயினும் சிந்திக்க வைக்கும் வரிகள்

ஹாக்கிமிய்யா என்றால் என்ன என்பதற்கு மட்டும் தெளிவான விளக்கம் இருந்திருந்தால் அரபுமொழி தெரியாதவர்களும் எளிதில் விளங்கலாம்

இப்படிக்கு 
தஸ்லிமா
أحدث أقدم