துஆ விளக்கவுரைகள்

துஆ 1

வெற்றிக்காகவும், உங்கள் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்காகவும் கேட்கும் துஆ

 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

 _யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ் லீ ஸஃனீ குல்லஹுவலா தகில்னீ இலா நஃப்ஸி தர்ஃபத அய்ன்._

“என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன். என் ஆத்மாவின் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிடாதே அது கண் சிமிட்டும் நொடியாக இருந்தாலும் சரி(அதாவது ..ஓர் நொடி)”

இந்த துஆ காலை மற்றும் மாலையில் கேட்கப்படும் துஆ வின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது* – ஹிஸ்ன் அல் முஸ்லிம் (முஸ்லிம் கோட்டை)

[1]இதன் அறிவிப்பாளர் தொடர் முழுமையாக உள்ளது (ஸஹீஹ்) , அல்-ஹாக்கீம் 1/545, மேலும் பார்க்க அல்பானி, ஸஹிஹுத்-தர்கீப் வத்-தர்ஹிப், 1/273

யார்தான் அல்லாஹ்வினால் கைவிடப்பட வேண்டும் என்று விரும்புவார்கள் அது கண் இமைக்கும் தருணமாக இருந்தாலும் சரி?

யார்தான் தங்களுடைய காரியங்கள் சரியாக அமைய வேண்டும் என விரும்புவதில்லை?

அல்லாஹ் நம்மை ஒருபோதும் கைவிட்டு விடாமலும் நம் செயல்கள் அனைத்தையும் சரியானதாகவும் ஆக்குவானாக.

ஆமின்


துஆ 2

அல்லாஹ்விடம் இறையச்சத்திற்காகவும்(தக்வா) மனத்தூய்மைக்காகவும் வேண்டுதல்

 اَللّٰهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا ، وَزَكِّها أنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا ، أنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا

 _அல்லாஹூம்ம, ‘ஆத்தி நஃப்ஸி தக்வாஹா வஜக்கிஹா அன்த ஹைரு மன் ஜக்காஹா அன்த வலிய்யுஹா வ மெளலாஹா.

யா அல்லாஹ், என்னுடைய ஆன்மாவிற்கு புனித்தன்மையைத் தந்து அதனை சுத்தப்படுத்துவாயாக! நீயே ஆன்மாவை சுத்தப்படுத்துவதில் சிறந்தவன்! நீயே அதன் சிறந்த பாதுகாவலனும், பொறுப்பாளனும் ஆவாய்
(முஸ்லிம்)


துஆ 3

தீய பழக்கங்கள் மற்றும் தீய குணத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதற்கான துஆ

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ مِنْ مُنْكَرَاتِ الْاَخْلَاقِ وَالْاَعْمَالِ وَالْاَھْوَاءِ

_அல்லாஹும்ம இன்னி அஊதுபிக மின் முன்கராதில் ஆஹ்லாகி வல்அஃமாலி வா அல்அஹ்வா’ ,_

யா அல்லாஹ்! தீய குணங்கள், தீய செயல்கள் மற்றும் தீய ஆசைகளிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

( سنن الترمذی، کتاب الدعوات، باب دعاء امّ سلمة :3591 )
صحیح [அத்-திர்மிதி] 

இறைத்தூதர் (صل الله عليه وسلم )அவர்கள் கூறினார்கள்,
“எவரொருவர் தன் செயல்களின் மூலம் சிறந்து விளங்குகிறாரோ அவரே விசுவாசத்தை பொறுத்தவரையில் மிகவும் பரிபூரண நம்பிக்கையாளர் ஆவார்.” [சுனன் அபூ தாவூத்]

ஆயிஷா ( رضي الله عنها) அவர்கள் அறிவிக்கிறார்கள்:.

நபி(صل الله عليه وسلم )அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக எவர் கிருபையை பெற்றிருக்கின்றாரோ அவர் இந்த வாழ்வு மற்றும் மறுவுலகிற்கான நன்மையின் பங்கை கொடுக்கப்பட்டவராக இருக்கின்றார் . குடும்ப உறவுகளை பராமரித்தல், நல்ல குணங்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் நன்னடத்தை ஆகியவற்றினால் அவர்களுக்கு சொர்க்கத்தில் வாசஸ்தலங்களையும் அதிக வாழ்வாதாரத்தையும் பெற செய்யும்.

ஆதாரம்: முஸ்னத் அஹமது 24371ல் அல் -அல்பானி அவர்களை பொறுத்த வரையில் ஸஹீஹ்(நம்பத்தகுந்தது) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல நடத்தை கொண்டிருத்தல் மற்றும் நல்ல குணம் உடையவரே உண்மையான நம்பிக்கையாளரின் உண்மையான அடையாளம் ஆகு‌ம்.


துஆ 4

ஷிர்க்கின் பயத்திற்கான துஆ

 اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

_அல்லாஹும்ம இன்னி அஊதுபிக அன் உஷ்ரிக பிக வ அனா அஃலமு வ அஸ்தஃபிருக லிமா லா அஃலமு._

“யா அல்லாஹ், நான் அறிந்தே உன்னுடன் எதனையும் இணைவைக்காமல் இருப்பதலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மற்றும் நான் அறியாமல் செய்த பாவத்திலிருந்து உன்னிடம் மன்னிப்பு தேடுகிறேன்.”

அஹ்மது 4/403. மேலும் பார்க்க அல் -அல்பானீ , ஸஹீஹ்-உல்-ஜாமி’ அஸ்-ஸகீர் 3/233 மற்றும் ஸஹீஹ் உத்-தர்கிப் வத் -தர்ஹிப் 1/19.


துஆ 5

அனைத்து வகையான ஆபத்துகள மற்றும் விபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான துஆ

எவர் இதனை காலையில் *மூன்று முறை* ஓதுகின்றாரோ அவர்களுக்கு மாலை வரையில் எந்த வித ஆபத்துகளும் ஏற்படுவதில்லை, மேலும் எவர் இதனை மாலையில் மூன்று தடவை ஓதுகின்றாரோ அவர்களுக்கு காலை வரையில எந்தவித ஆபத்துகளும் ஏற்படுவதில்லை.

(அரபியில் மூன்று தடவை ஓத வேண்டும்). 

 بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

_பிஸ்மில்லாஹில்-லதி லா யதுர்ரு ம’அஸ்-மிஹி ஷய்உன் ஃபில்- அர்தி வலா ஃபிஸ்ஸமாயி வஹீவஸ் ஸமீ ‘உல்- ‘அலீம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால், எவரும் அவனுடைய பெயரால் பூமியிலோ அல்லது வானத்திலோ எந்தத் தீங்கும் செய்ய இயலாது,மேலும் அவனே யாவற்றையும் செவியுறுவோன், அனைத்தையும் நன்கறிபவன்

[அபூ தாவூத் 4/323, அத் -திர்மிதி 5/465, இப்னு மாஜா 2/332] 


துஆ 6

தீனை புரிந்து கொள்ளுதல்

 اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ

_அல்லாஹும்ம ஃபக்கிஹ்னி ஃபித் தீன்_

*”யா அல்லாஹ்! எனக்கு தீனை புரிந்து கொள்ளுதலை வழங்குவாயாக.”*
(ஸஹீஹ் அல்-புஹாரி)

அபூ-தர்தா (رضي الله عنه)அவர்கள் அறிவித்தார்கள்: இறைத்தூதர் (صل الله عليه وسلم)அவர்கள் கூறினார்கள், எவரொருவர் அறிவைத் தேடுவதற்கான வழியை பின்பற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையை எளிதாக்குகிறான், உண்மையில், மலக்குமார்கள் அறிவை தேடுபவர்களுக்கு தங்கள் இறக்கைகளைத் தாழ்த்திக் கொள்கிறார்கள், அவர் செய்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்  மேலும் நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் மக்கள், தண்ணீரின் ஆழத்தில் உள்ள மீன்களும் கூட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகிறார்கள். பக்தியோடு வணங்குபவரையும கற்றுக்கொண்டவரின் மேன்மையையும் மீதமுள்ள நட்சத்திரங்களை முழு நிலவோடு ஒப்பிடுவது போன்றதாகும்(அதாவது பிராகசத்தில்)._ _கற்றுக்கொண்டவர்கள் நபிமார்களுக்கு வாரிசு ஆவார் தினாரயோ அல்லது திர்ஹமயோ விட்டுச்செல்லவில்லை ஆனால் அறிவை விட்டு சென்றனர்; அதை பெற்றுக்கொள்பவர், உண்மையில் ஏராளமான பங்கை பெற்றவராவார்._
(அபூ தாவூத் மற்றும் அத்-திர்மிதி)

ஸுப்ஹானல்லாஹ் இத்தகைய அழகிய, ஊக்குவிக்கும் ஹதீஸ்கள் தீனைப் பற்றிய அறிவு பெற உதவுகின்றன. குறிப்பிடப்பட்ட வெகுமதி நம் கற்பனைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது. இதனால், நாம் எப்போதும் மதிப்பளிக்கும் அறிவைப் பெற முயற்சி செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டில் நமக்கு உதவுவதற்காக இந்த துஆ வை நம் தினசரி நடைமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களும் இதை பெறுவதற்கு அவர்களை அழைக்க வேண்டும்; அல்லாஹ் سبحانه وتعالى மற்றும் அவனின் தூதர் صل الله عليه وسلم அவர்களின் வார்த்தைகளை பகிர்ந்து மற்றும் பரப்ப வேண்டும் , மேலும் நாம் மட்டும் வெகுமதிகளை சம்பாதிக்காமல் மற்றவர்களிடமும் நன்மையை பரப்ப வேண்டும்.

அபூ ஹூரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்: _அல்லாஹ்வின் தூதர் صل الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், நேர்வழியை பின்பற்றுபவதற்காக மற்றவரை அழைப்பவர் அவரை பின்பற்றுபவர்களுடைய நன்மைக்கு சமமான நற்கூலியைப் பெறுவார்; அவர்களுடைய நற்கூலி எந்த விதத்திலும் குறைந்துவிடாது_
(முஸ்லிம்)


துஆ 7

உங்கள் வருமானம், செல்வம் அதிகரிக்கவும் மற்றும் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான துஆ

 اَللّٰهُمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرَامِـكَ، وَأَغْنِـني بِفَضْـلِكَ عَمَّـنْ سِـوَاك

_அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக ‘அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக ‘அம்மன் ஸிவாக்_

*“ யா அல்லாஹ்! என் தேவைக்கு சட்டத்திற்குப் புறம்பான (ஹராமானதிற்கு) பதிலாக சட்டப்படி (ஹலாலான) வாழ்வாதாரத்தை எனக்கு வழங்குவாயாக, என்னுடைய தேவைகளை போதுமானதாக்குவாயாக, மற்றும் வேறு எவரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் உன்னுடைய அருளைக் கொண்டு என்னை போதுமானதாக்குவாயாக”*

இது அலி(அவர்களின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்)அவர்கள் அறிவித்துள்ளனர். அந்த முக்கத்திப் ( அடிமை ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தில் நுழைந்த அடிமை ) அவர்களிடத்தில் வந்து கூறினார்கள்: _“என்னால் என்னுடைய அடிமை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை; எனக்கு உதவுங்கள் .” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை நான் உங்களிடம் கூறட்டுமா? ஸீர் மலையளவு உங்களுக்கு கடன் இருந்தாலும், உங்களுக்காக அல்லாஹ் அதை கொடுப்பான். இதை சொல்லுங்கள் என்று கூறினார்கள்:_
_அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக ‘அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக ‘அம்மன் ஸிவாக்_

அல்-திர்மிதி (3563) ஆல் அறிவிக்கப்பட்டது; அல்-திர்மிதியில் அல்-அல்பானி அவர்களால் ஹஸன்(பலமானது) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.


துஆ 8

இஸ்திக்ஃபார்

اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

_அல்லாஹீம்ம அஃபிர் லிதன்பீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆஹிரஹு வ ‘அலா நியதஹு வஸிர்ரஹு_

(யா அல்லாஹ்! என்னுடைய பெரிய மற்றும் சிறிய , முதல் மற்றும் கடைசி, அதில் வெளிப்படையான மற்றும் மறைமுகமாக செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து அருள்புரிவாயாக)
 [முஸ்லிம் 1:350]

மன்னிப்பு கேட்பது பரக்கத்தின் முக்கிய ஆதாரமாகவும், இந்த வாழ்விலும் மறுவுலகிலும் வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது.

 _இப்னு அப்பாஸ்(அவர்களின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (صل الله عليه وسلم ) அவர்கள் கூறினார்கள்.” “எவர் ஒருவர் (அல்லாஹ்விடமிருந்து) தொடர்ந்து மன்னிப்பு தேடுகிறாரோ, அல்லாஹ் எல்லா விதமான வேதனையிலிருந்தும் அவர்களுக்கு ஒரு வழியை அமைப்பான் மற்றும் எல்லா கவலைகளிலிருந்தும் நிவாரணம் அளிப்பான், மேலும் அவர்கள் எதிர்பார்க்காத இடத்தில் அவருக்கு வாழ்வாதாரம் அளிப்பான்; “_ [அபூ தாவூத்].

குறிப்புரை: புத்தகம் 20, ஹதீத் 5 அரபி/ஆங்கிலம் புத்தகம் குறிப்புரை: புத்தகம் 20, ஹதீத் 1873


துஆ 9

அல்லாஹ் سبحانه وتعالى விடம் மன்னிப்பு மற்றும் கருணையை பெறுவதற்கான துஆ

 رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

_ரப்பிஹ்ஃபிர் வர்ஹம் வ-அன்த ஹய்ருர் ராஹிமீன்_

“ என் இரட்சகனே! என்னை மன்னித்து, இரக்கம் காட்டுவாயாக!, மேலும் இரக்கம் காட்டுபவர்களில் நீயே சிறந்தவன் !”

-ஸுரா அல்-முஃமினூன், வசனம்118 

அல்லாஹ்வின் கிருபையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள் ! நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், மிக்க கருணையாளன். .

நிச்சயமாக அவன் கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. மற்றும் அவனது கருணையினால் அவன் எல்லா பாவங்களையும் மன்னிப்பான்.

நீங்கள் செய்த பாவம் அல்லது பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்கள் கடந்த காலம் என்னவாக இருந்தாலும் சரி, இதயத்தில் இருந்து வரும் நேர்மையான தவ்பாவுடன் நீங்கள் அவனிடம் திரும்பி வந்தால், அவன் உங்களை மன்னிப்பான்.

நிச்சயமாக ஒரு தாய் தன் குழந்தையின் மீது கருணை காட்டுவதைவிட அல்லாஹ் மிகவும் கிருபையுடையவன்.

_“நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்தி லிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். .”_
(ஸூரா அத்-தஹ்ரிம் : 8)

எனவே உண்மையாக மனம்திரும்புங்கள், உங்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள், அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் மேலும் அந்த பாவத்தை மீண்டும் செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பான் என்று அல்லாஹ்வின் கிருபையின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் .

நீங்கள் யாருக்கு எதிராக பாவம் செய்கிறீர்களோ அவனின் மேலான மகத்துவத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுங்கள், உங்கள் கடந்தகால வழிகளில் செய்த பிழைகளை அழித்து அல்லாஹ்வின் பாதையை கட்டாயமாக கடைபிடியுங்கள். மேலும் நினைவில் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் அருளின் மீது நம்பிக்கை இழப்பது ஷைத்தானின் பொறிகளில் ஒன்றாகும்.


துஆ 10

சொர்க்கத்திற்காகவும் மற்றும் அதனை நெருக்கமாக கொண்டுவருவனவற்றையும் கேட்பதற்கான துஆ

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ

 _அல்லாஹும்ம இன்னீ அஸ்-அலுக அல்-ஜன்னா, வா மா கர்ரப இலைஹா மின் கவ்ல் அவ் அமல், வ அஊதுபிக மினன்னார் வமா கர்ரப இலைஹா மின் கவ்ல் அவ் ‘அமல்._

*”யா அல்லாஹ், நான் உன்னிடம் சொர்க்கத்திற்காகவும் அதற்குரிய கூற்றுக்களையும், செயல்களையும் என்னிடம் நெருக்கமாக்குமாறும் கேட்கிறேன் மற்றும் நரகத்தில் இருந்தும் மேலும் அதற்குரிய கூற்றுக்களையும் செயல்களையும் விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். “*

ஸஹீஹ் இப்னு மாஜா 2/327 வில் அல்பானியால் ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


துஆ 11

நான்கு விஷயங்களில் இருந்து பாதுகாவல் தேடுதல்

اَللَّهُمَّ إِنِّى أَعُوذُبِكَ مِنْ عِلْمٍِ لَّايَنْفَعُ وَمِنْ قَلْبٍِ لَّايَخْشَعُ وَمِنْ نَفْسٍِ لَّا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍِ لَّا يُسْتَجَابُ لَهَا

_அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ‘இல்மின் லா யன்ஃப’உ வ மின் கல்பின் லா யஹ்ஷ’உ வ மின் நஃப்ஸின் லா தஸ்ப’உ வ மின் தஃவதின் லா யுஸ்தஜாபு லஹா._

யா அல்லாஹ்! நன்மையைப் பெறாத அறிவிலிருந்தும், உன்னை அஞ்சாத இதயத்திலிருந்தும், திருப்தியடையாத ஆசையிலிருந்தும், பதில் அளிக்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
[முஸ்லிம்].


ரஸுலுல்லாஹ்ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: 
நான் சுருக்கமான பேச்சுடன் அனுப்பப்பட்டுள்ளேன்.

(புஹாரி, 6611 முஸ்லிம், 523).

அல்-புஹாரி(அவர்களின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்)அவர்கள் கூறினார்கள் சுருக்கமான பேச்சின் அர்த்தம் என்னவென்றால்; புத்தகங்கள் தேவைபடும் அளவுக்கான பல விஷயங்களை கூறுவதற்கு கூட, ஒரு சொற்றொடர் அல்லது இரண்டு வாக்கியங்களில் சுருக்கமாக கூறிவிடுவது ஆகும்.

இந்த துஆ நாம் அடைக்கலம் தேடுகின்ற விஷயங்களை தேர்ந்தெடுப்பது பற்றி ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களின் பேச்சு எவ்வளவு அழகாக சுருக்கமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும் .

எத்தனை பேர்கள் முடிவில்லாத அறிவைப் பெற்றவர்கள், ஆனால் அவர்களுக்கு அது பயனளிக்காதா?

நாம் எப்படி அடிக்கடி மனனம் செய்ய வேண்டியதை மனனம் செய்கிறோம், ஆனால் அது நம் இதயங்களை பாதிக்கின்றதா?

நம் வாழ்வில் எத்தனை முறை நாம் அதிருப்தி கொள்கிறோம்?

இந்த துஆ நம்மிடையே மிகுதியான திருத்தங்களை உண்டாக்குகிறது.

நன்மை தராத அறிவு:

“எவர் ஒருவர் அறிவை தேட முயல்கிறாரோ அவர் அதனை அல்லாஹ்வின் முகத்திற்காக தேட வேண்டும், அவர் அதை உலகின் பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே பெற்றுக்கொள்கிறார் என்றால் அவர் அர்ஃப்ஃபை அனுபவிக்க மாட்டார், அதாவது சுவனத்தின் வாசனை.” (ஸுனன் அபூ தாவூத் 3664)

கடினமாக மாறிய இதயங்கள்:

எவருடைய உள்ளத்தை, இஸ்லாமை அடைய அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கின்றார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையவர்கள், பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.” (அல்குர்ஆன் 39:22)

திருப்தி இல்லாத ஆசைகள்:

“சொர்க்கம் கஷ்டங்களால் சூழப்பட்டுள்ளது, மற்றும் நெருப்பு ஆசைகளால் சூழப்பட்டுள்ளது.”
(ஜாமீ திர்மிதி பாகம். 4, புத்தகம்12, ஹதீத் 2559)

பதில் அளிக்கபடாத துஆக்கள்:

இமாம் இப்னு அல்-கய்யிம் (அல்லாஹ்வின் அருள் அவர்களின் மீது உண்டாகட்டும்) கூறினார்கள்:
_”துஆக்கள் மற்றும் தஃஅவ்வுதாத் [அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதற்கான தொழுகை] என்பது ஆயுதம் போலாகும், அந்த ஆயுதத்தை பயன்படுத்தும் நபருக்குதான் அது நன்மையாக அமையும்; அது எவ்வளவு கூர்மையானது என்பது மட்டும் வெறும் விஷயம் அல்ல; அந்த ஆயுதம் சரியானதாகவும் மற்றும் தவறுகள் இல்லாமலும் இருந்தால் மேலும் அதை பயன்படுத்துவோரின் கை வலிமையாகவும் இருந்தால் அவரை தடுக்க எதுவும் இல்லையென்றால், அவர்களால் எதிரிகளை வீழ்த்த முடியும். ஆனால் இந்த மூன்று அம்சங்களில் ஏதேனும் குறை இருந்தால் பிறகு அதன் விளைவுகளும் குறைபாடுள்ளதாக அமையும்.”_
 (அல்-தா’ வ’அல்-தாவா, பக்கம். 35).


துஆ 12

வழிகாட்டுதல், இறைப்பக்தி மற்றும் மனநிறைவு பெறுவதற்கான துஆ

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

_[அல்லாஹும்ம இன்னீ அஸ் ‘அலுக்கல் ஹுதா வத்-துகா வல்’அஃபாஃப வல் கின]_

*“யா அல்லாஹ்! நான் உன்னிடம் நேர்வழி, பயபக்தி, பாதுகாப்பு, நல்வாழ்வு, திருப்தியையும் கேட்கிறேன்”*
ஸஹீஹ் முஸ்லிம் (எண்.2721)

இந்த துஆ (பிரார்த்தனை) மிக விரிவான மற்றும் நன்மை தரக்கூடிய துஆ(பிரார்த்தனை) ஆகும், மேலும் இதில் அல்லாஹ்விடம் மார்க்கம் மற்றும் உலகம் ஆகிய இவ்விரண்டின் நல்வாழ்விற்காகவும் துஆ கேட்கப்படுகிறது.

எனவே, *அல் ஹுதா* (வழிகாட்டுதல்) என்பது நன்மையான அறிவு, மற்றும் *அத்-துகா* (அதாவது தக்வா அல்லது பயபக்தி) என்பது நல்லசெயல்கள் ஆகும் மேலு‌ம் அல்லாஹ் மற்றும் அவனின் திருத்தூதரும்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தடைசெய்ததை கைவிடுவதும் ஆகும்; மேலும் இது ஒரு மனிதனுடைய மார்க்கத்தின் சரியான மற்றும் நல்வாழ்விற்கு கேட்கப்படுகிறது. உண்மையில், மார்க்கம் நன்மையான அறிவை உள்ளடக்கியது, மேலும் சத்தியத்தை அங்கீகரித்தல் – அதாவது வழிகாட்டுதல் – அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கீழ்படிந்து நடப்பதில் உறுதியாக இருத்தல்- மேலும் இதுவே பயபக்தியாகும்.

மேலும் *அல்-அஃபாஃப* (நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு) மற்றும் *அல்-கினா* (மனநிறைவு) படைப்பனங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதயமும் அவர்களோடு இணைக்கப்படக்கூடாது. அல்லாஹ்வின் மீதும், அவன் வழங்கியுள்ளவற்றிலும் திருப்தியடைந்து கொண்டிருப்பதுடன், நம் இதயம் எதை கொண்டு அல்லாஹ்வின் மீது திருப்தி அடையுமோ அதனை தேடுதல். எனவே, இதோடு இந்த உலக வாழ்க்கையில் சந்தோஷம் நிறைவடைந்தது, இதயம் உண்மையான இனிப்பு மற்றும் மகிழ்ச்சியை ருசிக்கிறது – இதுவே ஒரு நல்ல வாழ்க்கை ஆகும்.

_எனவே, எவரொருவர் வழிகாட்டுதல், பயபக்தி, நல்வாழ்வு மற்றும் திருப்தியளித்தல் ஆகியவற்றை பெற்றிருக்கிறாரோ அவரே உண்மையில் உண்மையான மகிழ்ச்சியை அடைந்துவிட்டார் ,_ மேலும், சாத்தியமாகக் காண முடிந்த அனைத்தையும் பெற்றிருப்பார், அத்துடன் பயங்கரமான மற்றும் அச்சுறுத்தும் அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருப்பார்.
 [பஹ்ஜதுல்- குலூபுல்-அப்ரார்(பக்கம்.198)] 


துஆ 13

அல்லாஹ்வின் பக்கம் நம் இதயத்தை வைப்பதற்கு உதவும் துஆ

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

_யா முக்கல்லிபல் குலூபி ஸப்பித் கல்பி ‘அலா தீனிக்_

“இதயங்களை திருப்புபவனே (அல்லாஹ் மிக உயர்ந்தவன்), எங்கள் இதயம் உன் மார்க்கத்தின் மீது உறுதியாக இருக்க செய்வாயாக”

[ஜாம்’இ அஸ்-ஸஹீரில் அல்-அல்பானீயால் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 1323/7988]

அல்லாஹ் நாடினால் உங்களை நேரான பாதையிலிருந்து விலக்கி அவன் உங்கள் இதயத்தில் முத்திரையிடுவான்.

“தவறான வழிகேட்டிலிருந்து எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அதனால் தொடர்ந்து உங்களை *நேரான பாதையில் செலுத்துமாறு மறக்காமல் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்”*.

அல்லாஹ்வின் திருத்தூதர் ( صل الله عليه وسلم) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அமர் பின் அல்-ஆஸ் (رضي الله عنه)அறிவித்தார்,
_”ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களின் சந்ததியர்களின் அனைத்து இதயங்களும் அர் ரஹ்மானின் இரு விரல்களுக்கிடையில் ஓர் இதயம் ஆக இருக்கிறது. அவன் நாடினால் எந்த திசையிலும் திருப்பிவிடுவான்.ஆதலால் அல்லாஹ்வின் திருத்தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள், “அல்லாஹ்வே! இதயத்தை திருப்புபவனே, எங்கள் இதயங்களை உனக்கு கீழ்படிதலை நோக்கி திருப்புவாயாக”_.

[ஸஹீஹ் முஸ்லிம் பாகம்.4,ப.1397,எண். 6418]

வழிநடத்துதலுக்கும் அறிவுக்கும், சொர்க்கத்துக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்வதில் நம்மில் பலருக்கு நினைவிருக்கிறது ஆனால் நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் மறந்துவிடக்கூடிய முக்கியமான ஒன்று இருக்கிறது.

ஒரு வாழ்க்கையின் இறுதி வரை மார்க்கத்தில் உறுதிப்பாடு மற்றும் நேர்மை ஆகியவற்றிற்காக பிரார்த்தனை(துஆ) செய்வதின் முக்கியத்துவம்.

நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் இதை செய்பவராக இருந்தார், எங்களுக்கும் கற்றுக் கொடுத்து அதனை எங்களையும் செய்ய சொன்னார், இதைப் பற்றி உம்மு ஸலாமா ஹதீதில் ஸிஹ்ர் என்பவரால் கூறபடுவதாவது: நான் உம்மு ஸலாமாவிடம் கேட்டேன்:

’நம்பிக்கையாளர்களின் தாயே! என்ன துஆ உங்கள் முன்னிலையில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லாம்) அவர்கள் அதிகமாக கேட்பார்?
அதற்கு அவர்கள் கூறினார்கள்: அவர்கள் அடிக்கடி கேட்ட துஆ :

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

ஆயிஷா (ரலியல்லாஹீ அன்ஹா) ஹதீதிலிருந்து இமாம் அஹ்மது அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது: ‘இந்த துஆ’ இறைத்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் அதிகமாக கேட்டார்…” என்று கூறி இந்த துஆவை குறிப்பிட்டார்கள்.

அல்-இமாம் அல்-அல்பானீ அவர்களின் :2091 ல் உள்ள ஸில்ஸிலா அஸ் ஸஹீஹா விலிருந்து எடுக்கப்பட்டது.

ஒரு ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான இதயம் முக்கியம் என்று மருத்துவர்கள் இன்று நமக்கு சொல்கிறார்கள் அதுபோல நேர்மைக்கு ஆரோக்கியமான இதயம் தான் திறவுகோல் என்று நம் அன்பிற்குரிய இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு அறிவித்தார்கள்.

நம்மில் பலருக்கு பரிச்சயமான ஹதீதில் நம் அன்பிற்குரிய இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்,

_” எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விலும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!”_
[புஹாரி மற்றும் முஸ்லிம்]

இந்த துஆவின் மொழியியல் அழகு இதில் ‘கல்ப்’ என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.

குலூப் என்பது கல்பின் பன்மை ஆகும், அதாவது இதயம். கல்ப் இதயத்திற்கான பொதுவான சொல்.இது வார்த்தையின் எந்த மூலத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அதன் பொருளாவது சுற்றி சுற்றி மற்றும் தலைகீழாக மாறும என்பதேயாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் இதுவே இதயத்தின் இயல்பாகும்.

எனவே இந்த துஆ வின் மூலம் நாம் நம் இதயங்களை அவனுக்கு கீழ்படிந்து நடக்க வழிநடத்துமாறு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். இது நாம் தொடர்ந்து நம் கீழ்ப்படிதலில் குறைவாகக் இருப்பதையே காட்டுகிறது.

நமது வழிகாட்டுதலில் நாம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இந்த துஆ நமக்கு ஒரு நிலையான நினைவூட்டுதலாக இருக்கிறது. நம் இதயங்கள் ஒழுங்கான முறையில் அமைய வேண்டும் என்று வழக்கமான அடிப்படையில் துஆ கேட்பது நமக்கு மிக முக்கியமாகும்.

ஏனென்றால் நம்முடைய இதயங்கள் நாளை எங்கு நிற்கும் என்று நமக்குத் தெரியாது.

இதயம் அடித்தளமாகும். அல்லாஹ்வுடன் இணைவைப்பதிலிருந்தும், பித்அத்திலிருந்தும், நமது சக முஸ்லிம்களுக்கு எதிரான தவறான உணர்வுகளிலிருந்தும், நமது குணத்தில் இருக்கும் வேறு எந்த தீய செயல்களிலுமிருந்தும் நம் இதயங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.

ஈமானில் அதிகபட்சம் மற்றும் தாழ்வுகளை அனுபவிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்,
ஆனால் இந்த துஆ நம்மை நேரான பாதையில் இருந்து வெகுதூரம் செல்லாமல் இருப்பதற்கு உதவும் ஒன்றாகும்.


துஆ 14

 உங்கள் குழந்தைகளுக்கான துஆ

رَبِّ هَبْ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ

_ரப்பி ஹப் லீ மினஸ் ஸாலிஹீன்.

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக!.”

ஸூரா அஸ்-ஸஃப்ஃபாத் வசனம் 100

இன்றைய நவநாகரீக போட்டி நிறைந்த உலகில் மிகுதியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, புறத்தோற்றம், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றில் தான் அக்கறை கொள்கிறார்கள்.

ஆம், இவை அனைத்தும் பெற்றோரின் பொறுப்பாக இருந்தாலும், தன் பிள்ளைகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தகுந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இளம் வயதிலேயே நம் குழந்தை
களுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டி,பெற்றோர்கள் கடினமாக முயற்சி செய்து, இஸ்லாமிய நெறிமுறைப்படியும்,இஸ்லாமிய மார்க்கப்படியும் அவர்களை திகழச் செய்ய வேண்டும்.

_நம்முடைய குழந்தைகள் ஸாலிஹானவர்களாக மாற்றுவதற்கு இது உரிய துஆவாகும். ஒரு ஸாலிஹான குழந்தை அல்லாஹ்வை மட்டுமே ஈமானோடு வணங்கும், முகமது நபி ﷺ, ஸுன்னத்துகளை பின்பற்றும், தங்களுடைய பெற்றோர்களுக்கு கீழ்படியும், தங்களுடைய பெற்றோர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பார்கள், தன்பெற்றோர்களுக்காக துஆ செய்வார்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் காலமும், அவர்கள் இறந்த போதிலும், இன்னும் பிற._

பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை வழி நடத்த மட்டுமே முடியும், ஆனால் இறுதியாக அவர்களைச் சரியான முறையில் வழிநடத்திச் செல்வது அல்லாஹ்வின் கைகளில் உள்ளது எனவே நமக்கு மிகச்சிறந்த, ஸாலிஹான குழந்தைகள் கிடைக்க சிரம் தாழ்த்தி, கையேந்தி தி அல்லாஹ்விடம் துஆ கேட்போம்.

இந்த ஆயத்தை உள்ளர்த்தத்துடன்,ஆழ்ந்து சிந்தித்து நம்முடைய தினசரி துஆவில் சேர்த்துக் கொள்வோமாக!.


துஆ 15

இந்த துஆ பின்வரும் நோக்கங்களுக்காக ஓதலாம்.

*- பயபக்தி மற்றும் நேர்மை*

*- உங்கள் துஆவை ஏற்றுக்கொள்ளுவதற்காக*

*- தொழுகையை ஒழுங்காக பேணுவதற்கு*

*- நேர்மையான குழந்தைகளுக்காக*

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

_ரப்பிஜ்’அல்னீ முகீமஸ்-ஸலாதி வமின் துர்ரீயத்தீ ரப்பனா வதகப்பல் து’ஆ_

(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” ஸூரா இப்ராஹிம், வசனம் 40 

இப்ராஹிம் அலைஹிவஸல்லாம் இந்த துஆவின் மூலமாக அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

_அவரை தொழுகையாளியாக ஆக்குவாயாக_

உண்மையிலேயே உங்களை நேரான பாதையில் வழிநடத்தி மற்றும் நற்செயல்கள் செய்ய வைப்பதற்கு அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்தியும் வல்லைமையும் இல்லை என்பதை இதில் நமக்கு காட்டுகிறது.

_அவர்களின் சந்ததிகளையும் தொழுகையை கடைப்பிடிக்க செய்வாயாக_

அவர் குறிப்பாகத் தொழுகையைப் பற்றிக் கேட்டார், ஏனென்றால் தொழுகை நன்றாக அமைந்தால் மற்ற செயல்களும் நன்றாக அமையும், தொழுகை சிதைந்தால் மற்ற செயல்களும் சிதைந்து விடும். *தொழுகையே நமது வெற்றியாகும்*.நமது தொழுகை நன்றாக அமைந்தால் ,நமது மற்ற வழிபாடுகளுக்கு உத்திரவாதம் கொடுக்கலாம்.
தீர்ப்பு நாளில் அல்லாஹ் سبحان وتعالى நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி நமது தொழுகையைப் பற்றியதாகும்.

ஹதீஸ்:

அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

_நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்._

அல்-திர்மிதி புத்தகம் 9, ஹதீஸ் 1081.

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் நம் வாழ்வில் தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். அவர் தொழுகையை நிலைநாட்டுவதில் அவருக்கு உதவுவதற்கு மட்டுமல்லாமல் பிற்பாடு வரும் அவர்களின் சந்ததியருக்கும் உதவுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டார். அல்லாஹ் அவர்களின் இந்த துஆ வை அதிகமாக நேசித்ததால் புனித குர்ஆனில இந்த துஆ வை நமக்காக பதிவு செய்து வைத்திருக்கிறான், ஆதலால் நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டக்கூடியவர்களாக ஆக்குவாயாக என்று அதே வார்த்தைகளின் மூலமாக அல்லாஹ்விடம் நாம் கேட்க வேண்டும் என்பதற்காக.

_அவர்களின் துஆவை ஏற்றுக்கொள்ளுதல்_

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் எனது துஆ விற்கு” பதில் அளிப்பாயாக” என்று கூறவில்லை மாறாக “ஏற்றுக்கொள்வாயாக” என்றார்கள். ஏனென்றால் *”துஆ கேட்பது என்பது இறைவழிபாடாகும்”* சுப்ஹானல்லாஹ்.

மேலும் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டால், துஆ கேட்டதற்கும் அதற்கு பதில் அளித்ததற்கும் சேர்த்து வெகுமதி கிடைக்கப்பெறுகிறது.


துஆ16

சுவனத்தில் இல்லம்

رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

_ரப்பி இப்னீ லீ ‘இன்தக ~பைத்தன்~ பைத்தன் ஃபில் ஜன்னத்தி_

*“ இறைவனே! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”*

-ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் 11

பிர் அவ்னின் மனைவி, ஆஸியா இவ்வுலகில் தேவையான அனைத்து ஆடம்பர வசதிகளையும் கொண்டிருந்தார். அன்றைய நாகரீக உலகின் முதல் முன்னோடி பெண் அவர்களே! வாழ்வதற்கு மிகவும் அழகான அரண்மனை, அவர் அழைத்தவுடன் ஓடி வர பணியாளர்கள், விலையுயர்ந்த ஆடைகளும், ஆபரணங்களும், பொருட்களும் வாங்கக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள்.

இருப்பினும் அவர் மனமோ இறுதிவரை அழியாத அழகான உலகமாகிய அல்லாஹ்வின் வீடாகிய மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கக் கூடிய வீட்டைப் பற்றி பிராத்தித்துக் கொண்டிருந்தது!.


துஆ 17

*உங்களுக்காகவும், உங்கள் பெற்றோர்களுக்காகவும் மற்றும் அனைத்து முஃமீன்களுக்காகவும் பாவமன்னிப்பு தேடுவதற்கான துஆ* 

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَاب

_ரப்பனஹ்ஃபிர்லி வலிவாலிதய்ய வலில்முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்_

*எங்கள் இறைவா!என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!”*

-ஸூரா இப்ராஹிம் ,வசனம் 41

இந்த துஆ வில், நம் இரட்சகனிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக;

“`தனக்காக“`
“`பெற்றோர்களுக்காக“`
“`அனைத்து மூஃமீன்களுக்காக“`

தனக்காக பாவமன்னிப்பு தேடுவது:

இது வழிபாட்டுக்குரிய முக்கியமான செயல், இந்த துன்யா மற்றும் ஆஹிரா ஆகிய இரு இடங்களில் பல பலன்களைக் கொண்டுள்ளது.

ஸூரா நூஹ் – வசனம்: 10-12.

மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்”. “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

_எல்லா மனிதர்களிலும் மிக உயர்ந்தவராகவும், மன்னிக்கப்பட்டவராகவும் இருந்த நம் அன்பிற்குரிய இறைத்தூதர் ﷺ அவர்கள்கூட ஒவ்வொரு நாளும் 70 முதல் 100 முறை மன்னிப்பு தேடினார்கள்._

பெற்றோர்களுக்காக பாவமன்னிப்பு தேடுவது:

நம் பெற்றோரை நேசிப்பதோடு அவர்களை மதிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மூலம் தான் நாம் இந்த உலகத்திற்கு கொண்டு வரப்படுகிறோம். 

அனைவருக்கும் உணவு அளிப்பவனான அல்லாஹ் நம் உலகின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெற்றோரைப் பாதுகாப்பாளர்களாக நியமித்து மேலும் சிறந்த ஆஹிராவிற்க்கு வழி நடத்தவும் செய்கிறார்கள். 

எனவே, சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக நம் வாழ்வில் நம் பெற்றோருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்.

நாம் பிறந்த நாளிலிருந்து அவர்கள் நம்மை கவனித்து வருகிறார்கள். அவர்கள் நம்மை அன்போடும் அக்கறையோடும் வளர்த்து பாதுகாத்து வந்தார்கள். குர்ஆன் பல்வேறு இடங்களில், பெற்றோருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகிறது.

” மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்”

[அல்-அஹ்காஃப் 46:15]

ஒரு மனிதன் தன் பெற்றோரின் மன்னிப்பிற்காகவும் மற்றும் அவர்களின் மீது கருணை காட்டுவதற்காகவும் பிரார்த்தனை செய்யலாம்.அல்லாஹ் கூறுகிறான்(பொருள் விளக்கம்):

“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
[அல்-இஸ்ரா’ 17:24]

ஷேக் இப்னு ஸ’தி (அல்லாஹ் அவர்கள் மீத கருணை காட்டுவானாக) அவர்கள் கூறியதாவது: அவர்கள் உயிரோடு இருக்கும்போதும் இறந்து விட்ட பிறகும் அவர்களின் கருணைக்காக துஆ செய்யுங்கள்.
தஃப்ஸீர் அல்-ஸ’தி, ப. 524

_நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக: அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார்கள்: “ஒரு மனிதன் சொர்க்கத்தில் அவருடைய நிலை உயர்த்தப்படலாம், இது எங்கிருந்து வந்தது? என்று அவர் கேட்பார் அதற்கு “உங்கள் மன்னிப்பிற்காக உங்களுடைய மகன் பிரார்த்தனையிலிருந்து” என்று கூறப்படும்._
இப்னு மாஜா, 3660 ல் கூறப்பட்டது.
ஸஹீஹ் அல் ஜாமியில் அல்-அல்பானியால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டது. எண் 1617.

தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் அன்பு அல்லாஹ்வுடைய ஞானமேயாகும், இதன் மூலம் மனிதகுலமும் பிற உயிரினங்களும் இந்த கிரகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் நமக்கு செய்ததை எந்தவிதத்திலும் நம்மால் நம் பெற்றோர்களுக்கு திருப்பி செலுத்த முடியாது, புனித குர்ஆனில் கூறும் அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்றுவதை தவிர, நமது இறக்கைகளை கருணையின் மூலமாக அவர்களை நோக்கி தாழ்த்திக்கொள்ளவும் மேலும் இந்த துஆவை ஓதவும் வேண்டும்.

அனைத்து முஃமின்களுக்காகவும் பாவமன்னிப்பு தேடுவது:

முஃமின்களுக்காக மன்னிப்புத் தேடவேண்டுமென்று அனைத்து நபிமார்களும் கட்டளையிடபட்டார்கள். இந்த வசனத்தில் உயர்ந்தோனான அல்லாஹ், கூறுகிறான்(பொருள் விளக்கம்):

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக ”
 [முஹம்மது 47:19]

ஹதீஸ்: அதன் சிறப்புகள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகின்றார்:

_“ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காக அவர் இல்லாத நேரத்தில் துஆ செய்தால் அந்த துஆ கபூலாகும்! அவரது தலையில் ஒரு மலக்கு அவனோடு இணைந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் தன் சகோதரனுக்காக நல்லவற்றை துஆ கேட்கும் போது அந்த மலக்கு ஆமீன் என்றும் அதே போல் உனக்கும் உண்டாகட்டும் என்று கூறுவார்.”_
(ஸஹீஹ் முஸ்லிம் ஹதீத் எண் 2733)

உபாதா இப்னு ஸாமித் அவர்கள் அறிவித்தார்கள்: ” இறைத்தூதர் صل الله عليه وسلم அவர்கள் கூறத் தாம் கேட்டதாக கூறினார்கள்:

_”எவரொருவர் ஆண் மற்றும் பெண் மூஃமீன்களுக்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவருக்கு அல்லாஹ் ஒவ்வொரு ஆண் மற்றும் ஒவ்வொரு பெண் முஃமீன்களுக்கும் ஓர் நன்மையை எழுதிகிறான்!”_

 (முஸ்னதுஷ் ஷாமியீன் 3/234 ஹதீஸ் எண் # 2155 ல் தபரானி என்பவரால் சேகரிக்கப்பட்டதோடு, ஸஹீஹ் அல் ஜமாயி ‘6026 ல் ஷேக் அல் அல்பானியால் ஹசன் என அறிவிக்கப்பட்டுள்ளது)

எனவே தனக்காக, பெற்றோர்களுக்காக மற்றும் அனைத்து முஃமீன்களுக்காக பாவமன்னிப்பு கோருவதன் மூலம் பல
வெகுமதிகளை பெருக்கிக் கொள்ள முடியும்.ஆகவே இந்த துஆவை நாம் மனனம் செய்வோம்.


துஆ 18

உங்கள் எதிரிகள், வெறுக்கத்தக்கவர்கள் மற்றும் தீயவர்களிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கேட்கும் துஆ

இந்த துஆ பின்வரும் நோக்கங்களுக்காக ஓதப்படுகிறது.

*-உங்கள் எதிரிகளிடமிருந்தும் தவறு செய்பவர்களிடமிருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு*

*-அடக்குமுறை மற்றும் கொடூரத்தை சமாளிப்பதற்கு*

*-அல்லாஹ்வின் உதவியைப் பெறுவதற்கு* 

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

_ரப்பி நஜ்ஜினீ மினல் கவ்மி-தாலிமீன்._

 “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”*

-ஸூரா அல் கஸஸ் ,வசனம் 21


துஆ 19

அல்லாஹ்விடம் அவனின் உதவியையும் ஆதரவையும் பெறுவதற்காக கேட்கும் துஆ

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

_ரப்பி இன்னீ லிமா அன்ஸ(z)ல்த இல்லய்ய மின் ஹய்ரின் ஃப(f)கீர்_

*”என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”*

-(ஸூரா அல்-கஸஸ், 28: 24)

 _மூஸா عليه وسلم அவர்களால் கேட்கப்பட்ட ஒரு விரிவான துஆ புனித குர்ஆனில் காணப்படுகிறது._
குர்ஆனில் மிக விரிவாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய கதை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய வாழ்க்கையின் இந்த பகுதி படிப்பினைகள் நிறைந்ததாக இருக்கும.

ஃபிர்அவ்னின் நகரத்தை விட்டு வெளியேறிய பிறகு, நபி மூஸா عليه وسلم அவர்கள் மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டார்கள். விசாரித்ததில் அவர்களின் தந்தை மிகவும் வயதானவர் என்றும் “இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் அவர்களால் தண்ணீர் புகட்ட முடியாமல் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டார்கள்.

அவர்களுக்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் உடனடியாக அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டினார்கள். மேலும் இந்த துஆ வையும் ஓதினார்கள். பின்னர் இரண்டு பெண்களின் தந்தை அவர்களை பணியமர்த்தினார் மற்றும் அவர்களுக்கு வரை நிலம் கொடுத்தார். பின்னர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அந்த இரண்டு பெண்களில் ஒருவரை மணந்தார்கள்.

இந்த துஆ தொடர்பான இரண்டு சுவாரஸ்யமான குறிப்புகள் உள்ளன.

அவர்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருந்தபோது, அவர்கள் இந்த துஆ வை மட்டும் கேட்கவில்லை, அதைக் கேட்பதற்கு முன்னதாக அவர்கள் ஏதேனும் நல்லதை செய்தார்களா என்பதை உறுதிப்படுத்தினார்கள். நாம் நமது துஆக்களை நல்ல செயல்களோடு சேர்த்து கேட்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த துஆ திருப்பு முனையாக இருந்தது. இந்த துஆவிற்கு முன்னர் அவர்கள் அகதியின் நிலைமையில் இருந்தார்கள் – அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பயந்தார்கள், வீடோ தொழிலோ குடும்பமோ கிடையாது.

இந்த துஆவிற்கு பிறகு அவர்களது அனைத்து தேவைகளையும் மிக அழகான முறையில் சந்தித்தார்கள்.

நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்தால், உடனே துஆ கேளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக நாம் செய்யும் நன்மையின் கூலியை அல்லாஹ் நமக்குத் தருகின்றான்.


துஆ 20

அல்லாஹ்வை நினைப்பதற்கும், வழிபடுவதற்கும் மற்றும் நன்றி செலுத்துவற்காகவும் கேட்கும் துஆ*

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

_அல்லாஹூம்ம அ’இன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததிக்_

*“யா அல்லாஹ், உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் மேலும் மிகச் சிறந்த முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக.”*

அபூ தாவூத் 2/86, அன் நஸாஇ3/53. மேலும் பார்க்க அல்-அல்பானி ஸஹீஹ் அபூ தாவூத் 1 /284.

முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கையை பிடித்துக்கொண்டு கூறினார்கள், _”அல்லாஹ்வின் மீது ஆணையாக, முஆத், நான் உங்களை நேசிக்கிறேன், எனவே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இதை ஓதிக் கொள்ள மறக்காதீர்கள் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்:”அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக வஷுக்ரிக , வஹுஸ்னி இபாததீக (யா அல்லாஹ், உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் மேலும் மிகச் சிறந்த முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக)”_

(அஹ்மது, அபூ தாவூத், அன்-நஸாஇ , இப்னு குஷய்மா, இப்னு ஹிப்பான் மற்ற அல்-ஹாகிம் ஆகியவற்றோடு தொடர்புடையது)

அல்லாஹ்வின் படைப்புகளாகிய நாம், நம் படைப்பாளனின் நிலையான தேவையைப் பெற்றிருக்கிறோம்.

இந்த துஆவானது மூன்று குறிப்பிட்ட பகுதிகளில் அவனுடைய உதவியைக் குறித்த நமது அவசியத்தை வலியுறுத்துகிறது, உண்மையில் அது நம் தேவைகளை முழுமையாக உள்ளடக்கி உள்ளது.

அல்லாஹ்வுடைய உதவி நமக்கு தேவை:

1. அல்லாஹ்வை நினைவு கூறுதல்

_”எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.”_
அல் குர்ஆன்(ஸூரா 20: வசனம் 124)

_நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்._
அல்குர்ஆன் (ஸூரா 8: வசனம் 45)

_மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்._
அல்குர்ஆன் (13:28)

தஹ்மீத், தஹ்லீல், தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுவது மற்றும் அதுபோல் பிரதிபலிப்பது போன்ற அனைத்து வகையான திக்ருகளும் அல்லாஹ்வை நினைவு கொள்ளுவதில் அடங்கும்.

2. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்

உங்கள் செல்வம், உடல்நலம், நிலை, அறிவார்ந்த திறமைகள் மற்றும் வாழ்க்கை போன்றவற்றில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்திற்கும் அல்லாஹ்விடம் நன்றி செலுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாமிற்கு ஆதரவாக இருப்பதற்காகவும் ஏனென்றால் இதுவே சொர்க்கத்திற்கு நம்மை வழிநடத்தும் சரியான பாதையாகும்.

ஷைத்தானின் பணி மனிதகுலத்தை நன்றியற்றதாக்குவதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: அவைகளின் பொறிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

நமது சொந்த நலனுக்காகவே நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் நன்றியற்றவர்களாக இருந்தால் அல்லாஹ் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டான். நீங்கள் நன்றியுடையவர்களாக இருந்தால், உண்மையான மூஃமீன்களாக மாறுவதற்கு முதல் படி எடுத்துவிட்டீர்கள் என அர்த்தம்

_”நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”._

-(அஸ்-ஸூமர் 39:7)

அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஸுக்ர் ஏராளமான நன்மைகளைப் பெற்று தருக்கிறது.
_”நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்.”_
-(இப்ராஹிம் 14:7).

மேலும் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது

3. அல்லாஹ்வை வணங்குதல்

அல்லாஹ் கூறுகிறான், நம் வாழ்வில் முக்கிய நோக்கம் வழிபாடு ஆகும்.
_”ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.”_
அல்குர்ஆன் (51:56)

இஹ்ஸான் உடன் வழிபாடு செய்ய வேண்டும்.

ஜிப்ரீல் அலைஹிவஸல்லம் தோழர்கள் முன்னிலையில் அவர்களிடம் இஹ்ஸானைப் பற்றிக் கேட்டதற்கு நமது இறைத்தூதர் ﷺ அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:
_”(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்.”_

எனவே, தொழுகை, கலிமா, ஜகாத் போன்ற அனைத்து வழிபாடுகளையும் சரியாக நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதற்கு நம்மால் முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும். மேலும் நிச்சயமாக அல்லாஹ்விற்காகவும் அவனுடைய மகிழ்ச்சியை பெறுவதற்காகவும் நமது மற்ற செயல்களை தூய்மையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும்.

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
-அல்குர்ஆன் 55:60

நாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் நிலையான தேவையுள்ளவராக இருக்கின்றோம், அவனை நினைவில் கொள்ளவும், அவனுக்கு நன்றியுடன் இருக்கவும் மற்றும் சிறந்த முறையில் அவனை வணங்கவும் இந்த துஆ நமக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கிறது. ஆகவே நாம் இந்த துஆ வை மனனம் செய்வோம்.


துஆ 21

பயன்தரக்கூடிய அறிவிற்காகவும், பரிசுத்தமான உணவிற்காகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய அமல்களுக்காகவுமான அழகிய துஆ

اَللّٰهُمَّ اِنِّیْ اَسْئَلُکََ عِلْمًا نَّافِعًا وَرِزْقًا طَیِّبًا وَعَمَلًا مُّتَقَبَّلًا

_அல்லாஹும்ம ‘இன்னீ ‘அஸ்அலுக்க இல்மன் நாஃபி ‘அன், வ ரிஜ்கன் தைய்யிபன், வ’அமலன் முத்தகப்பலன்.

*“யா அல்லாஹ் !பயன் தரக்கூடிய அறிவையும், சிறந்த வாழ்வாதாரத்தையும், சிறந்த அமல்களும் கிடைக்கச்செய்வாயாக”*

இப்னு அஸ் -ஸுன்னி,எண். 54,இப்னு மாஜா எண. 925 இதன் தொடர்பு நன்றாக (ஹஸன்) உள்ளது, இப்னு கைய்யும் -2/375.

 _உம்மு ஸலமாرضي الله عنها (குறிப்பிட்டுள்ளதாவது)முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
பஜ்ரு தொழுகை ஸலாம் முடிக்கும் போது இந்த துஆ வை ஓதுவார்கள்_

துஆவின் விரிவான விளக்கம்:

துஆவின் முதல் பகுதியில் கேட்கப்படுவது:

*பயனுள்ள அறிவு*

பயனுள்ள அறிவு என்றால் என்ன?
கடந்தகால அறிஞர்களும், ஸலஃப்களும் பயனுள்ள அறிவு என்பது செயலுக்கு வழிநடத்துவது என்கிறார்கள். இல்ம் என்பது இலக்கு அல்ல, மாறாக, அல்லாஹ்விற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய, அதன்பிறகு ஏற்படக்கூடிய வெற்றியை அடையவதற்கான வழியாகும். உங்களுடைய அறிவு, உங்கள் நடத்தை மற்றும் வழிபாடு மூலம் உங்களைச் சிறந்த முஸ்லிமாக மாற்றவில்லையெனில், உங்கள் அறிவால் எந்த பயனும் இல்லை. .”அறிவு” என்பது “அல்லாஹ் அஸ்ஸவ்ஜலிடமிருந்து மட்டுமே கிடைக்ககூடிய அன்பளிப்பாகும் அல்லாஹ் கற்றுத்தந்த அறிவின் மூலம் நாம் பயன் அடைய அல்லாஹ்விடம் இந்த துஆவின் மூலம் இறைஞ்சுவோம்.

அறிவில் சிறந்தது தீனை பற்றின அறிவு ஆகும். முஹம்மது நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறியதாவது,

_நிச்சயமாக, எல்லாவற்றிலும் மிகைத்தோனாகிய அல்லாஹ், இம்மைவாழ்வில் சிறந்த ஞானமுடையோராக இருந்து ஆனால் மறுமையை பற்றிய ஞானம் இல்லாதவரை விரும்பமாட்டான்_
- [ஸஹீஹ் அல் ஜாமி’]

உங்களுடைய அறிவு அதிகமானால், இபாதத்தும் அதிகமாக வேண்டும். அல்லாஹ்விடம் பயன் தரக் கூடிய அறிவு கொண்டு நன்மை கிடைக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

துஆவின் இரண்டாவது பகுதி

*பரிசுத்தமான மற்றும் நல்ல உணவுக்காக*

*தையிப்* என்பது சிறந்த மற்றும் பரிசுத்தமான இரண்டு விஷயங்கள் இணைந்ததாகும். அதாவது, சிறந்ததாகவும், மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும், நம்மை உற்சாகப்படுத்துவதாகவும், பரிசுத்தமானதானதாகவும் இருக்கும். *ஹலால்* என்ற வார்த்தையின் பொருள் *தையிப்* என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் சிறந்ததையும், பரிசுத்தமானதையும் கேளுங்கள்.

நம்முடைய வருமானமும், நம்முடைய பொருட்களும்,
நம்முடைய வாழ்வாதாரமும் பரிசுத்தமானதாகவும், சிறந்ததாகவும் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ கேட்போம்.

“`துஆவின் மூன்றாவது பகுதி “`

*நம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட*

நம் எண்ணங்களைப் பொறுத்தே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, உலகின் புகழுக்காகவோ அல்லது பிறரை கவருவதற்காகவோ இல்லாமல் அல்லாஹ்வைத் திருப்திபடுத்துவதற்காக அமல்களைச் செய்வோம்.

அல்லாஹ் விரும்பக்கூடிய அமல்களைச் செய்து அதை அவன் ஏற்றுக்கொள்வதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

எனவே இந்த துஆவில் அடங்கியுள்ள மூன்று முக்கிய விஷயங்களாவது,

*பயன்தரும் அறிவு *உங்கள் இதயத்தையும், எண்ணத்தையும் சுத்தப்படுத்தும், உங்கள் நோக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும், அல்லாஹ்வை நினைவு கூற உதவும்.

*சிறந்த மற்றும் பரிசுத்தமான ரிஸ்க்* சிறந்த மற்றும் பரிசுத்தமான ரிஸ்க் எடுத்துக்கொள்ளும் போது அது உங்களை கெடுதலிலிருந்து காக்கும். உங்களிடம் பயனுடைய அறிவிருந்து, உங்களுடைய சம்பாத்தியமும், உங்கள் உணவும் ஹராமானதாக இருந்தால். நீங்கள், உள்ளுக்குள் கறைபட்டு விடுவீர்கள் பின்னர் உங்கள் செயல்கள் நல்லவையாக ஆகாது, அந்த துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

*ஏற்றுக் கொள்ளக்கூடிய அமல்கள்* முதல் இரண்டு விஷயங்கள் கிடைக்க அல்லாஹ்விடம் கேளுங்கள். அது உங்களையும், உங்கள் உட்புறமும், உங்கள் இதயத்தின் நிலையும், சுத்தமாகி விட்டால், உங்களுடைய செயல்கள் நேர்மையானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மாறிவிடும்.

மனிதனை பரிசுத்தப்படுத்துவதாகத் திகழும்,
மிகவும் சக்திவாய்ந்த இந்த மூன்று வழிகள் இந்த துஆவில் அடங்கியுள்ளது.


துஆ 22

*அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழப்பதிலிருந்து பாதுகாப்பு பெறுதல்.* 

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَ فُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ

_”அல்லாஹும்ம இன்னி அ’ஊது பிக மின் ஜவாலி, நிஃமதிக்க, வ தஹவ்வுல்லி ‘ஆஃபியதிக, வ ஃபுஜாஅதி, நிக்மதிக, வ ஜமீ’இ ஸஹதிக._

*யா அல்லாஹ்! நீ மறுக்கக்கூடிய விஷயங்களிலிருந்தும், பாதுகாப்பற்றதிலிருந்தும், திடீரென்று கிடைக்கக்கூடிய உன் தண்டனைகளிலிருந்தும், உனக்கு திருப்தி அளிக்காத எல்லாவற்றிலிருந்தும் பாதுகாவல் தந்தருள்வாயாக!*

அப்துல்லாஹ் பின் உமர் رضي الله عنه அவர்கள் கூறியதாவது, அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم இதை ஓதுபவராக இருந்தார்கள்:

_”அல்லாஹும்ம இன்னி அ’ஊது பிக மின் ஜவாலி, நிஃமதிக்க, வ தஹவ்வுல்லி ‘ஆஃபியதிக, வ ஃபுஜாஅதி, நிக்மதிக, வ ஜமீ’இ ஸஹதிக._

(யா அல்லாஹ்! நீ மறுக்கக்கூடிய விஷயங்களிலிருந்தும், பாதுகாப்பற்றதிலிருந்தும், திடீரென்று கிடைக்கக்கூடிய உன் தண்டனைகளிலிருந்தும், உனக்கு திருப்தி அளிக்காத எல்லாவற்றிலிருந்தும் பாதுகாவல் தந்தருள்வாயாக!)”_[முஸ்லிம்].

குறிப்பு: புத்தகம் 17, ஹதீத்14 அரபிக்/ஆங்கில புத்தக குறிப்பு : புத்தகம் 17, ஹதீத் 1478

இந்த துஆ கீழ்க்கண்ட விஷயங்களிலிருந்து பாதுகாப்பு பெற நமக்கு கற்றுத்தருகிறது…
1. அல்லாஹ்வின் உதவியை மறுத்தல்
2.பாதுகாப்பபை கடந்து செல்லுதல்.
3. திடீரென்று கிடைக்கும் அல்லாஹ்வின் தண்டனை.
4. அல்லாஹ் விரும்பாத செயல்கள்.

ஸுப்ஹானல்லாஹ்.. நமது வாழ்க்கையை மோசமானதாகவும், குழப்பமானதாகவும் மாற்றக்கூடிய காரணிகள் இவை..

அல்லாஹ்வின் பாதுகாப்பை நாம் தக்க வைத்துக் கொள்வதுடன், அல்லாஹ் நம் மீது அளவுக்கு அதிகமான கருணையுடன் இருப்பதனால், நம்முடைய நன்றியுணர்வை அதிகப்படுத்தி நன்றியுடன் இருக்க வேண்டும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நாம் அதிகமதிகம் நன்றி செலுத்தும் போது அவன் தன் வாக்குறுதியின் படி நம் மீது கருணை கொண்டு நமக்கு அருள் புரிவதற்கான வழியாக அது அமைகிறது. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.

_”அன்றி, உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, “இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்.”_

(ஸூரா அல் இப்ராஹிம் 14:7)

நன்றியுணர்வுடன் இருப்பது மிகச்சிறந்த அருளாகும். இவ்வாறு நன்றியுணர்வுடன் இருப்பவர்கள் அல்லாஹ்விடம் நல்ல அந்தஸ்தைப் பெறுவதோடு எல்லாவற்றிலும் சந்தோசத்தை அடைவார்கள், துக்கத்திலிருந்தும், மனஅழுத்தத்திலிருந்தும் விடுதலை அடைவார்கள்.

*நன்றியுணர்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் அனைத்தும் அல்லாஹ் ﷻ விடமிருந்து வந்தது என்பதை அறிந்திருத்தல்*

நன்றியுணர்வு நம் மனதை அல்லாஹ்வின் பக்கம் திருப்புகிறது, ஏதோவொன்று துரதிஷ்டவசமாக அன்றைய தினம் நம்முடைய வாழ்வில் கவனச்சிதறல், கற்பனையின் மூலம் தவறுதலாக நடந்த போதிலும் நாம் நம் உள்ளுணர்வுக்கு இவை யெல்லாம் இறைவனின் விருப்பப்படி தான் நடக்கின்றது என்பதை ஞாபகமூட்டி எது நடந்தாலும் நனமைக்கே இறைவன் நமக்கு விதித்தபடியே நடக்கின்றது என அமைதி கொள்ள வேண்டும். ஏனெனில் இறைவன் விரும்பினாலன்றி எதுவும் தன்னிச்சையாக நிகழாது என்பதை உணர்வதுதான் நன்றியறிதல்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான், :

_” மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; “._

[ஸூரா அந்-நஹ்ல் 16:53]

மேலும் அவன் கூறுகிறான்,

وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ

_” மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்_

[ஸூரா -அல்-லுஹா 93:8].

எனவே நாம் எப்போதும் நிலையாக நம்முடைய தொழுகை மூலம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, அவனுடைய அருட்கொடைகளின் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு பெற்று அல்லாஹ்வின் பொருத்தத்துக்குரியவராக, அளவில்லா அருட்கொடைகள் கிடைக்க கிருபை செய்யுமாறு இறைஞ்சுவோமாக!


துஆ 23

வழிகாட்டுதலுக்குப் பிறகு தீனின் மீது உறுதியாக இருத்தல்

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

_ரப்பனா லா துஸிஃஹ் குலூபனா பஃத இத் ஹதய்தனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப்._

*“ (அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!”*
(ஸூரா அல் – இம்ரான், 3:8) 

எங்கள் இறைவனே! நீ எங்களை வழி நடத்தியபின் எங்கள் இதயங்கள் (நேர்வழியிலிருந்து) விலக்கி விடாதே; என்பதன் பொருள், “அவர்கள் அதனை அடைவதற்கு நீ அனுமதித்தப்பிறகும் எங்கள் இதயங்களை வழிகாட்டுதலிருந்து விலக்கிவிடாதே. தங்கள் இதயத்தில் தீய எண்ணங்களை கொண்டவர்களைப் போலவும் , குர்ஆனில் *முதஸாபிஹ்* வசனங்களை பின்பற்றுவோரைப் போலவும் எங்களை ஆக்கிவிடாதே. மாறாக, உன்னுடைய நேர்மையான பாதையில் மற்றும் உண்மையான மார்க்கத்தில் உறுதியாக இருக்கச் செய்வாயாக.”

மேலும் உன்னுடைய (அன்பான) அருளை எங்களுக்கு வழங்குவாயாக, இதில் நீ எங்களுடைய இதயத்தை உறுதியாக இருக்கச் செய்வாயாக , மேலும் எங்கள் விசுவாசத்தையும் உறுதியையும் அதிகரிக்கச் செய்வாயாக , நிச்சயமாக நீதான் சிறந்தவன்.

*குறிப்பு:*

“`குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன“`

1. *முஹ்கம்* – குர்ஆனில் பெரும்பான்மையான அனைத்து வசனங்களும் தெளிவாகவும், அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கும்; மேலும்

2. *முதஷாபிஹாத்:*

முழுமையான (உண்மையான) விளக்கத்தை அறியமுடியாத வசனங்களான அவற்றை
அறிஞர்களும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களும் புரிந்துக் கொள்வார்கள் என்றாலும் அல்லாஹ் மட்டுமே அவற்றை முழுமையாக அறிந்தவன்.

“ எனவே, யாருடைய இதயங்களில் ஒரு விலகல்(தீய எண்ணங்கள்) இருக்கிறதோ ”, அதாவது ; தவறான வழிகாட்டுதல், மற்றும் பொய்யை ஆதரிப்பதன் மூலம் உண்மையை புறக்கணிப்பது, “அவர்கள் முற்றிலும் தெளிவாக இல்லாததைப் பின்பற்றுகிறார்கள் .” அதாவது ; அவர்கள் விரும்பும் விதத்தில் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், அவர்கள் ஊழல் நிறைந்த நோக்கங்களுக்கு ஏற்ப அதை சிதைக்கிறார்கள். ஆனால் தெளிவாக உள்ள வசனங்களை பொருத்த வரையில், அவர்களால் அவ்வாறு எதுவும் செய்ய முடியாது, எனவே அது அவர்களுக்கு எதிரான ஓர் தெளிவான சான்றாகும்.

எனவே, பரிசுத்தமான வழிநடத்தலை ஏற்றுக் கொண்ட பிறகு மனதிற்கு சாத்தியமான தீய எண்ணங்களை தவிர்க்கவும், இதயத்தின் விலகலை தவிர்க்கவும் இந்த பிரார்த்தனை முன்னெச்சரிக்கையாக இருக்கிறது. இந்த தற்காலிக உலகில் நம் வாழ்வின் நோக்கம் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் முறைப்படி அல்லாஹ்வை வணங்குவதாகும். மேலும் இந்த வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு நிலையான வாழ்க்கையான மறுமை வாழ்விற்கு தயாராக வேண்டும்.

தனது இறைவனிடம் திரும்பிச்செல்லும் ஒரு மனிதனின் பயணத்திற்கு பரிசுத்தமான வழிநடத்தலுடன் இருப்பதும், ஸிராத் அல் முஸ்தகீம் பாலத்தின் மீது நிலைத்திருப்பதும் தான் மிக முக்கியமான பகுதிகள்(காரணிகள்) ஆகும்.

எனவே, வழிகாட்டுதலின் பாதையில் தங்கியிருந்து, நம்முடைய இறைவனுடனான நம்முடைய உறவில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் , நாம் உண்மையில் நம்மால் சொந்தமாக அதை செய்ய முடியாது.

நம் அனைவருக்கும் ஒரு சிறப்பு வகையான கருணை(அருள்) தேவை.

_உண்மையான தீனின் (இஸ்லாம் மதம்) மீது நிலைத்திருப்பதற்கு அல்லாஹ்வின் கருணை (அருள்) வேண்டும்._

இது தான் இந்த துஆவில் கேட்கப்படுகிறது.

“`இந்த இரண்டு வரிகளில், பாரட்டப்படுவதற்கு நிறைய இருக்கின்றது.“`

அதன் முக்கியத்துவம் நம் இதயங்களை ஊடுருவி, நம் தினசரி பங்கில் அதை இணைத்துக்கொள்ள உதவி , மேலும் சொர்க்கம் வரை நேரான பாதையில் வழிநடத்தும் அருளை அனுபவித்து மகிழ்வோமாப.

இதுவே சிறந்த செயல்கள், சிறந்த நாட்கள் மற்றும் சிறந்த துஆக்கள் ஆகியவற்றிற்கு தொடக்கமாக நம் அனைவருக்கும் அமையட்டும்.
ஆமீன்.


துஆ 24

உங்களுடைய எல்லா செயல்களும் வெற்றி பெறுவதற்காக ஓதும் துஆ

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

_ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ‘அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அழீம்_

*”எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை. அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி”.*
-(ஸூரா அத் – தவ்பா, 9: 129)

இந்த துஆ பற்றிய ஒரு விரிவான புரிதல்:

பின்வரும் இந்த பிராத்தனை (துஆ) குறிப்பாக நமது அன்பிற்குரிய இறைத்தூதர் முஹம்மது ﷺ அவர்களுக்காக இறக்கபட்டது. மக்காவாசி மக்கள் தவ்ஹீதின் செய்தியை நிராகரித்தார்கள் மேலும் இறைத்தூதர் ﷺ அவர்களை அவமானப்படுத்த தொடங்கினார்கள் அவர்களை பார்த்து சிரித்தார்கள் , அவர்களுக்கு அவமரியாதை செய்தார்கள். அல்லாஹ் இறைத்தூதரை உற்சாகப்படுத்தி ஆறுதல் கூறினான் அதனால் அவர்கள் விரக்தியடையவில்லை. அவன் இறைத்தூதர் முஹம்மது ﷺ அவர்களை பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை (துஆ) கேட்குமாறு கட்டளையிட்டான்.

எந்தவொரு பிரச்சனைகளையும், தேவைகளையும் மற்றும் அவசியங்களையும் மக்கள் எதிர்கொள்ளும் போது முதலில் அவர்கள் செய்வது என்னவென்றால் மற்றவர்களை பார்த்து அதற்கான தீர்வை கண்டறிகின்றனர். மேலும் அவர்கள் திரும்பிய நிகழ்வைப் பற்றி புகார் செய்கிறார்கள் , பழி கூறுகிறார்கள் மற்றும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டுகிறார்கள். அந்த விஷயங்கள் தவறாகும் போது தான் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனின் உதவியை கோரி இறுதியில் அவனிடம் தஞ்சம் அடைகிறார்கள்.

எனினும் நேர்மையான முஃமீன்களின் நன்னெறியான தரம் என்னவென்றால் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் *அந்த மூஃமீன்கள் முதலிலும் முக்கியமானதுமாக அல்லாஹ்விடம் தான் கேட்பார்கள்.* அதற்கு மாறாக முரண்பாடான எண்ணத்தைக் கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை இழக்கமாட்டார்கள்.

எனவே முதல் வகையில் இருப்பவர்கள் அல்லாஹ்வைக் காட்டிலும் தன்னையும் மற்றவர்களையும் அதிகமாக நம்பியிருப்பார்கள் இது தன்னிறைவு வகையை காட்டுகின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிரியமானதல்லாத தன்மை உடையவையாகும். மேலும் இது உண்மையில் அவனது அன்பிலிருந்து அவர்களை விலக்கி வைக்கிறது.

அதே சமயம் அடுத்த வகையில் இருப்பவர்கள் முதலில் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவன் மீது அதிகமான நம்பிக்கையை கொண்டு, செயல்களை செய்வார்கள். இத்தகையவர்களை உண்மையாக *முத்தவக்கிலூன்* அல்லாஹ்வால் விரும்பப்படுபவர்கள் என்ற தகுதியை பெற்றிருப்பார்கள்.

 நிச்சயமாக எவரொருவர் தன் இறைவனின் மீது முழு நம்பிக்கையயும் வைக்கிறாரோ ,அவனிடமிருந்தே எல்லா நன்மைகளையும் தேடுகிறாரோ , அவர்களுக்கு அல்லாஹ் பல்வேறு இடங்களில் இருந்து உதவி செய்வான் – இது மக்களிடமிருந்தோ அல்லது சூழ்நிலைகளில் ஒரு மாற்றமாகவோ இருக்கலாம்.

إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ

*”நிச்சயமாக , அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.”*
(ஸூரா இம்ரான் 3:159)

எனவே , மகத்தான வல்லமைபடைத்த சிம்மாசனத்தின் (அர்ஷின்) அதிபதியும், சொர்க்கம் மற்றும் நரகத்தின் அதிபதியும், மீதமிருக்கும் எல்லாவற்றிற்கும் அதிபதியாகிய வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் அல்லாஹ் அவனை தவிர வேறு யாரை நம்மால் சார்ந்திருக்க முடியும்? நிச்சயமாக, முடியாது!, இறைநம்பிக்கையாளர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராகவும், ஷைத்தான் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு எதிராகவும், அடக்குமைறையாளர்கள் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராகவும், ஜின்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் அனைத்து தீய செயல்களுக்கு எதிராகவும், பிறப்பு மற்றும் இறப்பின் அனைத்து சோதனைகள் மற்றும் பேராபத்துகளுக்கு எதிராகவும் சர்வவல்லமை படைத்த அல்லாஹ்வே முஃமின்களுக்கு போதுமானவன்.

இந்த துஆ நமது அன்பிற்குரிய இறைத்தூதர் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களால் ஓதப்பட்டது ஆதலால் அவர்களை பின்பற்றுவோராகிய நாமும் இந்த துஆவை, அல்லாஹ்வின் மீது மட்டுமே நம் நம்பிக்கையை வைப்பதற்காக ஓது வேண்டும். மேலும் அவனிடமே நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுமாறும், அனைத்து பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்குமாறும் கேட்க வேண்டும்.

ஆகவே இந்த துஆவை நாம் மனனம் செய்து , நமது தேவை எவ்வளவு பெரியதோ, சிறியதோ எதுவாக இருந்தாலும் சரி நமக்கு தேவையான *எல்லாவற்றையும்* நாம் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டுமென்று இப்போதிலிருந்து உறுதி கூறுவோம்.


துஆ 25

உங்களின் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவதற்கான துஆ

கீழ்க்கண்ட விஷயங்களுக்காக இந்த துஆ ஓதப்படுகிறது. :-*

*-வாழ்க்கையில் வெற்றி பெற.*

*-இறைமறுப்பாளர்களிடமும், எதிரிகளிடமிருந்தும் வெற்றி பெற*

*-எல்லா விதமான தேவைகளும் நிறைவு பெற. எ. கா. திருமணம், வியாபாரம், வேலை, தேர்வு இன்னும் பிற*

*அல்லாஹ்வின் உதவியையும், வழிகாட்டலையும் உங்களின் எல்லா விஷயங்களுக்கும் கேட்பது **

رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

 _ரப்பி அத்ஹில்னி முத்ஹல சித்கின் வ அஹ்ரிஜ்னி முக்ரஜ சித்கின் வஜ்’அல் லீ மின் லதுன்க சுல்தானன்- நஸீரா.

*”என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக. “*

[ ஸூரா அல்-இஸ்ரா, வசனம்- 80] 

இந்த துஆ ரஸுல் صلى الله عليه وسلم அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது அல்லாஹ் அவரை ஓதுமாறு கட்டளையிட்ட துஆவாகும்.

நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் போது முஸ்லிம்களாகிய நாம் ஓதவேண்டிய நேர்த்தியான துஆவாகும்.

இந்த துஆ சிறந்த நுழைவுக (சித்திக்) காக கேட்கப்படுகிறது *‘சித்திக்’* _என்பதன் பொருள் ஆரோக்யம், உண்மை, நேர்த்தி, நம்பிக்கை என்பதாகும்.

எனவே நீங்கள் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் போது, அல்லாஹ் سُبْحَانَهُ وَ تَعَالىَ விடம்
அதிலிருந்து மீண்டு வரவும், அழகான, நேர்த்தியான நல்லதொரு புதிய இடத்தில் நுழையவும் வேண்டுங்கள்.

நீங்கள் உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அல்லாஹ்வை வெறும் உதவியாளனாக மட்டுமல்லாமல் உதவி செய்வதற்கு மட்டுமே உரித்தானவனிடம் கேட்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க.

என்ன ஒரு நேர்த்தியான வார்த்தைகளைக் கொண்ட துஆ! ஸுப்ஹானல்லாஹ். 


துஆ 26

*நிச்சயமாக அல்லாஹ்விடம் திரும்புவோம் என ஈமான் கொண்டு அவன் மீது நம்பிக்கை வைத்தல்*

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

_ரப்பனா ‘அலைக்க தவக்கல்னா வ இலைக்க அனப்னா வ இலைக்கல் மஸீர்_

*” “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”*

(ஸூரத்துல் மும்தஹனா, 60: 4)

_நமது உறவினர்களின் (பெற்றோர்,மனைவி அல்லது குழந்தைகள்) நிமித்தம் காரணமாகக்கூட இறைவன் மீது உள்ள நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடடாது என்பதை திருமறை குர்ஆன் இப்ராஹிம்(அலைஹிஸ்ஸலாம்), அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு கூறுகிறது, உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்த தன்னுடைய மனைவி மற்றும் சிலர்தவிர அனைத்து உறவுகளிடமும் அல்லாஹ் மீது அவர்கள் ஈமான் கொள்ளாதவரை அவர்களிடம் வெறுப்பையும், குரோதத்தையையும், பகையையும் காண்பித்தார்கள், அப்போது இந்த துஆவை ஓதினார்கள்.

_முழு நம்பிக்கையையும் அல்லாஹ்வின் மீது மட்டுமே வையுங்கள், அவனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள், மேலும் அவனிடம் ஒருநாள்(மறுமையில்) நம்முடைய கணக்கிற்காக திரும்புவோம், அவனுடைய கருணையும், மன்னிப்பும் மட்டுமே நம்மை நரக நெருப்பிலிருந்து காக்கும்_

முழு தவக்கல்(நம்பிக்கை)அல்லாஹூ (ஸுப்ஹான வ த ஆலா) மீது வையுங்கள், ஒருபொழுதும், ஈமானிலிருந்து சிறிதளவேனும் விலகிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது வெற்றிக்கான பாதையாகும், வெற்றியை அடைவதற்கான வழியாகும்.

*ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், மேலும் உண்மையான நம்பிக்கையாளருக்கு ஏற்படும் சூழ்நிலை எப்பொழுதும் ஏதாவது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும்.*

அல்லாஹ் ஸுப்ஹான வ த ஆலா வின் அருள் கிடைக்கப் பெற்றவர்கள், அல்லாஹ் ஸுப்ஹான வ த ஆலா வை புகழ்வார்கள், அதன் மூலம் அல்லாஹ்வின் வெகுமதியைப் பெறுவார்கள், அவர்களின் மீதுள்ள அருள் அதிகமாகும், பேரிடர் ஏற்படும் போது அவர்கள் அமைதியுடன் எதிர்கொள்வார்கள், அதன் விளைவாக அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் மேலும் அவர்கள் இழந்ததைவிட மேலான ஒன்றை பெறுவார்கள். யார் ஒருவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். தன் மீது நம்பிக்கை கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

உங்களைச்சார்ந்த எல்லா விஷயங்களிலும் வலிமையான நம்பிக்கை அடித்தளத்தை நிறுவுங்கள். இது உங்களுடைய எல்லா விஷயங்களிலும் உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், இதுவே உங்களுடைய இவ்வுலக வாழ்க்கைக்கும், தீனுக்கும்(இஸ்லாம்), ஆகிரத்துக்கும் போதுமான ஓர் குணமாகும். உங்கள் வாழ்க்கையை அல்லாஹ்வின் திருப்தியை பெருவதற்காக வாழுங்கள், மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வோம் என்பதை மனதில் நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள்.


துஆ 27

அல்லாஹ்வை புகழ்வதற்குரிய மிக கனமான(உயரிய) வார்த்தைகள்

سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ

 _ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , ‘அதத ஹல்கிஹி, வரிதா நஃப்ஸிஹி , வஷினத அர்ஷிஹி , வமிதாத கலிமாத்திஹி_

*”அல்லாஹ் குறைபாடு இல்லாதவன், அவனின் புகழைக் கொண்டு தொடங்குகிறேன், அவனுடைய படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு , அவனது மனதின் திருப்தி அளவிற்கு , அவனது அர்ஷின் சுமை அளவிற்கு , அவனது வார்த்தைகள் பதிவு செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய மைக்கு சமமான அளவிற்கு ( அவனது புகழுக்காக).”*

ஹதீத்:

இந்த திக்ரை ஓதுவதின் நல்லொழுக்கத்தைப் பாருங்கள் :

_நம்பிக்கையாளர்களின் அன்னை ஜூவைரியா பின்த் அல் – ஹாரித் رضي الله عنها அவர்கள் அறிவித்தார்கள்: நான் பஜ்ரு தொழுகை தொழுது கொண்டிருக்கும் போது இறைத்தூதர் (ﷺ) அவர்கள் என் வீட்டிலிருந்து வெளியே சென்றார்கள். முற்பகல் நேரம் அவர்கள் திரும்பி வந்து நான் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள், “நான் உன்னை விட்டு சென்றதிலிருந்து நீ இன்னும் அதே நிலையில் இருக்கிறாயா?.” ஆம் என்று நான் உறுதி மொழி அளித்தேன். உடனே இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்,
” நான் உன்னை விட்டு சென்ற பிறகு நான்கு வார்த்தைகளை நான் மூன்று முறை ஓதினேன் . இந்த வார்த்தைகளோடு காலையிலிருந்து நீ ஓதிய அனைத்தையும் சேர்த்து எடை போடப்பட்டால் இந்த வார்த்தைகளின் எடைதான் கனமாக இருக்கும்_

இவைகள்:

سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ
-முஸ்லிம் 2726

இந்த திக்ரின் எடையையும் மற்றும் அதன் வலிமையின் விளைவுகளையும் மேலும் புரிந்து கொள்வதற்காக இந்த வார்த்தைகளின் இன்னும் விரிவான விளக்கம்.

(سبحان الله و بحمده)

*”அல்லாஹ் குறைபாடு இல்லாதவன், அவனின் புகழைக் கொண்டு தொடங்குகிறேன்)*

(سبحان الله)

இது திக்ரின் உச்சம். அல்லாஹ்வின் குறைபாடுகளையும் புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வை (سُبْحَانَهُ وَتَعَالَى)
மகிமைப்படுத்துகிறீர்கள்.

(و بحمده)

நான் அல்லாஹ்வைப் புகழ்ந்து கூறுகிறேன், அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَتَعَالَى) எல்லா நல்ல விஷயங்களையும் நான் உறுதிப்படுத்துகிறேன்.

நீங்கள்
(سبحان الله و بحمده) என்று 100 முறை சொல்லும் போது உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

 
எனவே இந்த திக்ரின் எடையைக் கற்பனை செய்து பாருங்கள், سبحان الله و بحمده என்று நீங்கள் சொல்லும் போது அது கீழ்க்கண்டவற்றோடு பெருக்கப்படுகிறது.

1– (عدد خلقه)
*(அவனது படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு)*

 _அல்லாஹ்வின் படைப்பினங்கள் எவ்வளவு உள்ளன என்பதை உங்களால் கணக்கிடமுடியுமா அல்லது எண்ண முடியுமா? முடியாது. எனவே நீங்கள் கூறுகிறீர்கள்

(سبحان الله و بحمده)
உனது அனைத்து படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு. ஸுப்ஹானல்லாஹ்.

2– (ورضا نفسه)
*(அவனது மனதின் திருப்தி அளவிற்கு)*

அல்லாஹ்வின் திருப்திக்கான ஒரு அளவை உங்களால் கூற முடியுமா? முடியாது, இதன் நிலை மற்றும் மரியாதை மிகவும் அதிகமாக உள்ளது. 

எனவே நீங்கள் கூறுகிறீர்கள்
(سبحان الله و بحمده)
அல்லாஹ்வின் மனதின் திருப்தி அளவிற்கு.

3– (وزنة عرشه)
*(அவனது அர்ஷின் கன அளவிற்கு) *நீங்கள் கூறுகிறீர்கள் (سبحان الله و بحمده)

அல்லாஹ்வின் அர்ஷின் எடையைப் பொறுத்தது, அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَتَعَالَى) அரியாசனத்தை விட மிகப்பெரியது ஒன்றும் இல்லை.

4– (ومداد كلماته‏)
*(அவனது வார்த்தைகளின் மையளவு)*

உங்களின் (سبحان الله و بحمده) அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَتَعَالَى) வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு சமமானதாக அடைய வேண்டும் என்று விரும்புவீர்கள். மேலும் அல்லாஹ்வின் வார்த்தைகள் அளவில்லாதது என்பதை நீங்கள் இந்த வசனத்தில் பார்க்கலாம்:

وَلَوْ أَنَّمَا فِي مِن شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِن بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

_பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதியபோதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்._
அல் குர்ஆன் 31:27

எனவே தயவுசெய்து இந்த துஆவை மனனம் செய்து உங்கள் அன்றாட திக்ருக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள், *இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவுபடுத்தும் விசுவாசத்துடன் இதை ஓதுங்கள் மற்றும் அதன் வெகுமதிகளை அறுவடை செய்யுங்கள்.


துஆ 28

 
இறைத்தூதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ

*-கீழ்க்கண்டவற்றிற்காக இந்த துஆ ஓதப்படுகிறது*

*-உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவதற்காக*

*- அல்லாஹ்வின் கருணையை பெறுவதற்காக*

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

 _ரப்பனா தலம்னா அன்ஃபுஸனா வ இன்லம் தஹ்ஃபிர்லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் ஹாஸிரீன்_

*”எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.*

ஸூரத்துல் அஃராஃப், வசனம் 23

இந்த துஆ விலிருந்து பெறக்கூடிய பாடங்கள்

ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களது மனைவி அல்லாஹ்விற்கு கட்டுப்படாமல் ஷைத்தானுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள், தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து பழத்தை சாப்பிட்டார்கள். இதன் விளைவாக, அவர்கள் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இருவரும் அவனுக்கு கீழ்படியாமல் இருந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் இந்த துஆ வை அவர்களுக்கு கொடுத்து ஊக்கப்படுத்தினான். *அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.* அவர்கள் உடனடியாக மனந்திரும்பி அல்லாஹ்விடம் இந்த துஆவைக் கொண்டு மன்னிப்பு கேட்டார்கள்.

சில நேரங்களில் நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் மிக வருத்தமாக உணர்வீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனதால் நன்றாக உணர்வதற்கு நீங்கள் உடனடியாக மனந்திரும்ப வேண்டும், சரியான பாதையில் இருக்க வேண்டும்

உங்கள் தவறை உணர்ந்த பிறகு நீங்கள் மிகவும் வருத்தமாக உணர்கிறீர்கள் மற்றும் நீங்கள் மனந்திரும்புகீறீர்கள். அல்லாஹ்வுடைய உதவியுடன் உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்றக்கூடிய ஒரு அருள் தான் உண்மையான மனம்திரும்புதலாகும்.

நீங்கள் அல்லாஹ்வை புகழ வேண்டும் மற்றும் உங்கள் இதயத்தை சரிசெய்யுமாறும் அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும். ஏனென்றால் அவனால் தான் உங்களை சரி செய்ய முடியும். நீங்கள் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவியையோ ஷைத்தானையோ குற்றம் சாட்டவில்லை.

அதனால்தான் ஒருவர் உங்களுக்கு ஒரு பாவத்தை அறிமுகப்படுத்தியிருந்து அதை நீங்கள் செய்தால் உங்களை தான் நீங்கள் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர மற்றவர்களை அல்ல.

அநீதி என்பது நீதிக்கு எதிரானது, நீங்கள் பாவம் செய்வது உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்தது போன்றதாகும். நீங்கள் மனம்திரும்பும் போது மிகத்தாழ்மையுடனும் கீழ்படிதலுடனும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். நீங்கள் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள் என்றால், அது பெருமிதம் அடைந்து, மேலும் அநீதியை ஏற்படுத்துகிறது.

நமது நஃப்ஸ்(ஆன்மா) அமானிதமாகும். நீங்கள் கூடுதல் கவனிப்புடன் அதை கையாள வேண்டும், மற்றும் அல்லாஹ் (سبحان وتعالى ) விடம் மிகத் தூய்மையாக திருப்பிக் ஒப்படைக்க வேண்டும். எனவே உங்களுக்கு நீங்களே தவறு செய்தால், உண்மையில் நீங்களே உங்களுக்கு தீங்கிழைக்கீறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் தவறை உணர்ந்த பிறகு இந்த துஆவின் மூலமாக நீங்கள் அல்லாஹ்வை அழைக்கும் போது உங்களை மன்னிக்கவும் உங்கள் மீது கருணை காட்டவும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை கவனியுங்கள்.

உங்கள் பாவத்தை மூடி மறைக்குமாறும் , அழிக்குமாறும் மேலும் அந்த பாவத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்குமாறும் மனம்திரும்புதலுடன் அல்லாஹ்விடம் கேளுங்கள்.
உங்கள் மனந்திரும்புதலை ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வின் (سبحان وتعالى )கருணையாகும் மேலும் எதிர்காலத்தில் பாவங்களில் விழுந்துவிடாமல் பாதுகாப்பதும் அல்லாஹ்வின் கருணையேயாகும்.

ஒரு நபர் மன்னிக்கப்படாமலும் கருணை காட்டப்படாமலும் இருந்தால், அவர் இந்த துன்யாவிலும் ஆஹிராவிலும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள்.

எனவே இதை 2 எளிய சமன்பாடுகளாக வைக்கலாம்

*மன்னிப்பில்லை + கருணையில்லை = இழப்பு*

*மன்னிப்பு + கருணை = வெற்றி*

_அல்லாஹ் நம்முடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு , நம்மை நேரான பாதையில் வழிநடத்துவானாக. ஆமீன்_


துஆ 29

மன அழுத்தம் மற்றும் துயரிலிருந்து விடுபட, மன்னிப்பு பெற, உங்கள் தேவைகள் பூர்த்தியாவதற்கான துஆ

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ

_லா இலாஹா இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்த்து மினத்-தாலிமீன்_

*உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”*

-ஸூரா அல்-அன்பியா , வசனம் 87

*_இது யூனுஸ் நபி(அலைஹிவஸ்ஸலாம்)கேட்ட துஆவாகும் ._*

இஸ்லாமில் மனஅழுத்தமான சூழ்நிலைகளைக் கையாள்வது.

நாம் சிரமமான அல்லது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் போது ,அல்லாஹ்விடம் திரும்பி, உண்மையான ஈமானுடன் குறிப்பாக இந்த துஆவை ஓதி அழைத்தால், இறைவன் நம் அழைப்புக்கு செவிசாய்ப்பான், மேலும் நபி ﷺ அவர்கள் இறைவனை அழைக்க இந்த துஆவை ஓதுமாறு ஊக்குவித்தார்கள்.

*“உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். *.”*

முஹம்மது நபி ﷺ அவர்கள் இந்த துஆவைப் பற்றி கூறியுள்ளார்கள், :
_“எந்த ஒரு முஸ்லிமும், எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும், இந்த துஆவை ஓதி இறைவனை அழைத்தால், இறைவன் அவர்களின் அழைப்புக்கு செவிசாய்ப்பான். .”_
(மூல ஆதாரம் அத் திர்மிதி,அல்-யவ்ம் வல்-லைலா விலுள்ள அந்-நஸாஈ.)

அல்லாஹ்
سُبْحَان وَتَعَالَى நபி
யூனுஸ் عليه السلام
பற்றி இவ்வாறு கூறுகிறான்

_இன்னும் (நினைவு கூறுவீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்._

(குர்’ஆன் , 21:87-88)

யூனுஸ் நபி عليه السلام அவர்கள் மக்களிடம் ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட போது நம்பிக்கையற்று காணப்பட்டனர். அல்லாஹ் ﷻ வின் கட்டளைக்கு பொறுத்திருக்காமல் கோபத்துடனும், அவநம்பிக்கையோடும் வெளியேரி விட்டார் அதனால் அல்லாஹ் மிகப்பெரிய திமிங்கலத்தைக் கொண்டு அவரை விழுங்கச்செய்தான். அவர் மீனின் வயிற்றுக்குள் இருந்து துன்பம் நிறைந்தவராக மேற்கண்ட துஆவை ஓதினார்.

இந்த துஆவின் மிக முக்கிய சிறப்பு என்ன?

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் தன் தவறை உணர்ந்து, அல்லாஹ்விடமே அனைத்து ஆற்றலும் உண்டு என உணர்ந்து, மனந்திரும்பி அல்லாஹ் ﷻ செவிசாய்க்கும் வரை ஓதினார்கள். _சில நேரங்களில், நாம் தவறான ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, அதற்காக வெட்கி அல்லாஹ்விடம் திரும்பி உதவி கேட்க தயங்குவோம். ஆனால் இது நபிமார்களின் வழி அல்ல, நீங்கள் தவறு செய்திருந்தாலும்,அதை பொருட்படுத்தாமல் உங்களால் அல்லாஹ்விடம் திரும்ப முடியும் என நினைப்பது உங்களுடைய உறுதியான நம்பிக்கையை குறிக்கிறது.

அல்லாஹ் سُبْحَانَه وَتَعَالىَ மற்றொரு ஸூராவில் குறிப்பிடுகிறான்,

*”அவருடைய இறைவனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்”_*
(*குர்’ஆன், 68:49)

அல்லாஹ் ﷻ அவருக்கு பதிலளித்தான் மேலும் அவரை அவருடைய துயரத்திலிருந்து விடுவித்தான். அதன் பிறகு அவர் மக்களிடம் சென்றபோது அவர்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தனர் ஏனெனில் நிகழ்ந்த முழுமையான அத்தாட்சிகளைக் அவர்களை கண்டிருந்தனர்.

நாம் எப்பொழுதும் நம் தவறுகளை உணர்ந்து , அந்த தவறுகளுக்காக வருந்தி அல்லாஹ்விடம் மனந்திரும்ப வேண்டும். நாம் நிலையாக அவனை நினைவு கூர்ந்து புகழ்ந்தால் நம்முடைய கடினமான தருணங்களில் அவன் நமக்கு உதவுவான்.

இறுதியாக …

இது நினைவில் கொள்வதற்கு இலகுவான துஆ மட்டுமல்ல, நம் தினசரி வாழ்வில் இந்த துஆவை வழமையாக ஓதினால் நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை பெறலாம்.


*துஆ 30*

*துயரிலிருந்து வெளிவரவும், அவற்றை லேசாக்குவதற்கான துஆ* 

اَللّهُـمَّ لاَ سَـهْلَ إِلاَّ مَا جَعَلْـتَهُ سَهْـلاً، وَأَنْتَ تَجْـعَلُ الْحَزْنَ إِذَا شِـئْتَ سَهْـلاً

*அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜ’அல்தஹு ஸஹ்லன் வ அன்த தஜ்’அலுல்- ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்*

*“யா அல்லாஹ் நீ லேசாக்குவதை தவிர வேறு எதுவும் லேசானது இல்லை, நீ விரும்பினால் துன்பங்களை லேசாக்கிவிடுவாய் .”*

இப்னு ஹிப்பானின் ஸஹீஹ். (எண். 2427), மேலும் இப்னு அஸ்-ஸுன்னி. (எண். 351). அல்-ஹாஃபித்- (இப்னு ஹாஜர்) அவர்களால் ஆதாரப்பூர்வமான ஹதீத் என கூறப்பட்டது. 

*சிரமங்கள் மற்றும் சோதனைகள் *

*சில விஷயங்கள் நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், நீங்கள் அதனைக் கடினமானதாகவும், நம்பிக்கையற்றதாகவும், உதவியில்லாததை போல் உணர்வீர்கள், திரும்பத் திரும்ப துயரத்துடன் முயற்சி செய்தும் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது* .

துஆவே அல்லாஹ்விடம் கேட்பதற்கான *அதி சக்தி* வாய்ந்த கருவியாகும் மேலும் 24*7 கிடைக்கக் கூடியது.

நீங்கள் சிரமத்தில் இருக்கும் போது அல்லாஹ்விடம் கேளுங்கள், ஏனெனில் அல்லாஹ் கேட்பதை விரும்புகிறான், மேலும் எப்பொழுதும் கொடுக்கக் கூடியவன். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை போன்று உணர்ந்த, நீங்கள் சிரம் தாழ்ந்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடன் உங்கள் தேவைகளை அவன் முன் சமர்ப்பியுங்கள், :

“அல்லாஹ்வைத் தவிர சக்தி வாய்ந்தவனும், வலிமை மிக்கவனும் வேறொருவனில்லை”

*(லா ஹவ்ல லா குவ்வத்த இல்லா பில்லாஹ்)*

உங்கள் துஆவின் மூலம், அது நன்மையாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் உறுதியாக அதை உங்களுக்கு சுலபமானதாகவும, வெற்றிகரமானதாகவும் ஆக்கி வைப்பான்..

*சோதனைகள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்வது*

நீங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும் போது நம்பிக்கை இழக்காதீர்கள். சோதனைகள் ஒருவேளை உங்கள் பாவத்திற்கான பரிகாரமாகும் அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துவதாகும். சோதனைகள் அல்லாஹ்வின் அருள் என்பதை நாம் அந்த சமயத்தில் உணர முடியாமல் போகலாம். அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய கட்டளைக்கு இணங்கி , அந்த சூழ்நிலையிலிருந்து வெளி வர முயற்சியுங்கள். அல்லாஹ் மிகப் பெரியவன்

_நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;_ (2:216)

நமது நேசத்திற்குரிய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இதனை உறுதிப்படுத்தும் விதமாக கூறுகிறார்கள்,

_”அல்லாஹ் தன் அடியானுக்கு நன்மையைத் தவிர வேறு எதையும்நாடிவிடமாட்டான்.” எனும் நம்பிக்கையாளர்களின் எண்ணம் எவ்வளவு வியப்புக்குரியது!_

[முஸ்னத் அஹ்மத்]


துஆ 31

ஷிர்க்கின் பயத்திற்கான துஆ

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

_அல்லாஹும்ம இன்னி அஊதுபிக அன் உஷ்ரிக பிக வ அனா அஃலமு வ அஸ்தஃபிருக லிமா லா அஃலமு._

“யா அல்லாஹ், நான் அறிந்தே உன்னுடன் எதனையும் இணைவைக்காமல் இருப்பதலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மற்றும் நான் அறியாமல் செய்த பாவத்திலிருந்து உன்னிடம் மன்னிப்பு தேடுகிறேன்.”

அஹ்மது 4/403. மேலும் பார்க்க அல் -அல்பானீ , ஸஹீஹ்-உல்-ஜாமி’ அஸ்-ஸகீர் 3/233 மற்றும் ஸஹீஹ் உத்-தர்கிப் வத் -தர்ஹிப் 1/19.


தினமும், எப்பொழுதும், எந்தவொரு விஷயத்திற்கும் துஆ கேட்கும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள். இந்த கருவியானது, உங்கள் வாழ்வில் நீங்கள் துயரின் எல்லையில் சூழ்ந்து இருக்கும் போது மட்டுமல்லாமல், இலகுவான விஷயங்களுக்கும் உபயோகிக்கலாம்.

அல்லாஹ் நம் துயரங்கள் அனைத்தையும் லேசாக்குவானாக! .

ஆமீன்

أحدث أقدم