நம்முடைய உலகம் சார்ந்த விஷயங்களின் நோக்கங்கள் குறித்து அல்லாஹூ தஆலா கூறும்பொழுது, فامشوا\ “நடந்து செல்லுங்கள் ”
என்ற சொற்கூறை உபயோகிக்கின்றான்
(பார்க்க: அல்-குர்ஆன் 67:15)
நம்முடைய தொழுகையின் நோக்கங்கள் குறித்து கூறும்பொழுது, அல்லாஹூ தஆலா فاسعوا\ “விரைந்து” செல்லுங்கள் என்ற சொற்கூறை பயன்படுத்துகிறான். (பார்க்க: அல்-குர்ஆன், 62 : 9)
நம்முடைய சுவனத்தின் நோக்கம் குறித்து கூறுகையில், سابقوا/ “ஓடுங்கள்” என்னும் சொற்கூறை பயன்படுத்துகிறான். (பார்க்க: அல்-குர்ஆன், 57: 21)
ஆனால், அவனுக்கான நம்முடைய நோக்கத்தை குறித்து கூறும்பொழுது, அல்லாஹூ தஆலா ففروا / ஓடி வாருங்கள் என்ற சொற்கூறை பயன்படுத்துகிறான்.
(பார்க்க: அல்-குர்ஆன், 51: 50)
வாழ்க்கையில் எல்லா லட்சியங்களும் ஒரே அளவான முயற்சியை உரித்தாக்குவதில்லை.
மேலே குறிப்பிட்டுள்ளதை போன்று, உங்களின் சொந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள், உங்கள் சொந்த ஆசைகளையும் மேலும் அதிக நேரத்தை நீங்கள் எதில் செலவிடுகின்றீர்கள் என்பதையும் எண்ணிப்பாருங்கள். மேற்குறிப்பிடப்பட்டிருப்பது நம்முடைய துல்லியமான பிரதிபலிப்பாக இருக்கின்றதா? அல்லது நாம் இந்த குர்ஆனிய நிலையை தலைக்கீழாக மாற்றி அவனைத்தாண்டிய மற்ற அனைத்து விஷயங்களை நோக்கியும் ஓடோடி செல்கின்றோமா?
இறைத்தூதர் மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ள இந்த வார்த்தைகளை நாம் நினைவில்கொள்வோம்,
وعجلت اليك رب لترضئ
“…..(என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
(அல்-குர்ஆன், ஸூரா 20: 84)