பெற்றோரின் மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் செய்ய வேண்டிய 7 கடமைகள்

அஷ்ஷைக் கலாநிதி அஸீஸ் பர்ஹான் அல் அனஸீ அவர்கள் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் செய்ய வேண்டிய 7 கடமைகளை பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

1.  அவர்களுக்காக துஆ (பிரார்த்தனை) செய்தல் -بِالدُّعَاءِ لَهُمَا-: அவர்களின் மறுமை வாழ்விற்காக அல்லாஹ்விடம் வேண்டுதல்.

2.  அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுதல்-بِالاسْتِغْفَارِ لَهُمَا-: அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து உயர் பதவிகளை வழங்க இறைஞ்சுதல்.

3.  அவர்கள் சார்பாக தர்மம் (ஸதகா) செய்தல் -بِالصَّدَقَةِ عَنْهُمَا-: ஏழை எளியவர்களுக்கு அவர்கள் பெயரில் உதவி செய்தல்.

4.  அவர்களின் வாக்குறுதிகளையும் உயில்களையும் நிறைவேற்றுதல்-بِإِنْفَاذِ عَهْدِهِمَا "أَيِ الْوَصِيَّةِ-: அவர்கள் விட்டுச் சென்ற நன்மையான உடன்படிக்கைகள் மற்றும் மரண சாசனங்களைச் செயல்படுத்துதல்.

5. அவர்கள் மூலமாக ஏற்பட்ட இரத்த உறவுகளைப் பேணி நடத்தல் -بِصِلَةِ الرَّحِمِ الَّتِي لَا تُوصَلُ إِلَّا بِهِمَا-: பெற்றோரின் உறவினர்களுடன் (உதாரணமாக: மாமா, மாமி, சின்னமா, பெரியம்மா, சின்னப்பா பெரியப்பா) சுமுகமான உறவைப் பேணுதல்.

6. அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துதல்-بِإِكْرَامِ صَدِيقِهِمَا -: பெற்றோருடன் நட்பாக இருந்தவர்களை மதித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்.

7.  அவர்களின் கடமைகளை நிறைவேற்றுதல் -بِإِبْرَاءِ ذِمَّتِهِمَا مِمَّا اشْتَغَلَتْ بِهِ مِنَ الْحُقُوقِ-: அவர்கள் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அல்லது நிறைவேற்ற வேண்டிய மார்க்கக் கடமைகள் இருந்தால் அவற்றை நிறைவேற்றி அவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவித்தல்.

தமிழில்: Azhan Haneefa

Previous Post Next Post