ஆசிரியர்களுக்காக மாணவர்கள் வகுப்பறையினுள் எழுந்து நிற்பது கூடுமா?

ஆசிரியர்கள், தாங்கள் வகுப்பிற்குள் நுழையும் போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுன்னாவுக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை.

நபியவர்கள் கூறினார்கள் :

“யாருக்கு மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அவர் நரகத்தை தனது தங்குமிடமாக்கிக்கொள்ளட்டும்.”

(அஹ்மத், அபூதாவூத், திர்மிதி – 

மேலும், அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நபியவர்களைவிட எங்களுக்குப் பிரியமானவர் யாரும் இல்லை.

ஆனால், அவர்கள் நுழைந்தால் நாங்கள் எழுந்து நிற்பதில்லை;

ஏனெனில், அது அவர்களுக்கு விருப்பமில்லாதது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.”

(அஹ்மத், திர்மிதி – ஸஹீஹ்)

எனவே,

ஆசிரியர்கள் வகுப்பறையினுல் நுழையும்போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று  கட்டாயப்படுத்துவது அல்லது எதிர்பார்ப்பது சுன்னாவிற்கு எதிரானது என்பது தெளிவாகிறது.

ஆகையால்,ஆசிரியர்கள் மாணவர்களை எழுந்து நிற்குமாறு கூறுவது அனுமதிக்கப்படாத ஒன்றாகும்,

மேலும் மாணவர்கள் அதை விரும்பாமல் இருக்க வேண்டும்.


- அஷ்ஷைக் பின் பாஸ் (ரஹ்)
Previous Post Next Post