வளைகுடாவின் இஸ்ரேல் ஐக்கிய அரபு ராஜ்யமான அரபு எமிரேட்ஸ்.

(முனைவர் அப்துல்லா #அந்நுபைசி, அரசியல் ஆய்வாளர், குவைத் )

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அரபு நாடுகளில் வித்தியாசமான கோணத்தில் தனது நிர்வாகத்தை அமைத்து செயல்படுகின்ற ஒரு நாடு. 

அது மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக கணிக்கப்படுவதன் இரகசியங்களில் ஒன்று அந்த நாட்டின் பொருளாதார பங்காளியாக சியோனிச செல்வந்தர்கள் அதன் பின்னால் இருப்பதாலாதாகும்.

தாராண்மை வாதம் என்ற மந்திரத்தினுள் நாஸ்திகம் உள்ளடங்க இருப்பது போல் இப்ராஹீமிய மதம் என்ற சிந்தனைக்குள் நாஸ்திகத்தை வளர்ப்பதில் துபாய் அரசுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 
இந்து கோயில் அமைத்து ஓம் ஸ்ரீ ராம் என்று சிறப்பு விழா செய்கின்ற துபாய் அரச பரம்பரையின் இஸ்லாம் பற்றி சொல்லத் தேவையில்லை. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2025ல்  துபாய்க்கு விஜயம் மேற்கொண்ட போது வரவேற்பதற்காக கட்டிளம் பருவ யுவதிகளை அலங்கரித்து அவர்கள் தமது தலைகளை திறந்து நீண்ட நெடிய கொண்டைகளை அசைத்துக்காட்டி வரவேற்றதையும்  துபாய் நாட்டில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் இதனை மேலும் உதவி செய்கின்றது.  

துபாய்  தொடர்பாக 20 வருடங்களுக்கு முன்னால்  கருத்து தெரிவித்த #குவைக் நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான முனைவர் அப்துல்லா று நுபைசி அவர்கள்: எமிரேட்ஸ் (துபாய் நாடு) #வளைகுடாவின் இஸ்ரேல் என    குறிப்பிட்டார் என அரபு பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடும் இந்த அரபு ராஜ்ஜியம் வளைகுடாவில் மாத்திரம் அல்ல, ஆப்பிரிக்க நாடுகளான சூடான் சோமாலியா போன்ற முஸ்லிம் நாடுகளிலும் #இரத்த வெறி பிடித்த காடேறி  இஸ்ரேலியனோடு இணைந்து மறைவில் பல சதிகளை செய்வது சமீபத்தில் தெரிய வந்திருக்கின்றது.

சூடானில் அரச படைக்கு எதிராக  ஹமீதத்தியின் தலைமையில் போர் புரிகின்ற சூடான் துணை ராணுவத்துக்கு திரை மறைவில் பல கோடி பெறுமதியான ஆயுத தல பாடங்கள் வழங்கி சூடானின் திறத்தன்மைக்கு துறுத்தலாக செயல்பட்டு வருகிறது .

இது‌ சூடான் அல்ஃபாஷிர் மாகாணத்தில் மாத்திரம் 2 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்களை கொன்றொழிக்க உதவியது. 
சூடானின் பிரதம பள்ளி‌ ஒன்றின் இமாம் ஒரு ஜும்மாவில் 
اللهم عليك بابن زايد 
யா அல்லாஹ்! 
துபாய் மன்னன் முஹம்மத் பின் ஸாயிதை நீ பிடிப்பாயாக, நீ அவருக்கு வகுப்பு நாட்களை காண்பிப்பாயாக போன்ற சாபம் நிறைந்த வாசகங்களால் சபித்து பிரார்த்தனையை செய்திருந்தது தொலைக்காட்சிகளில் வெளியானது. 

இது அங்குள்ள தங்கச் சுரங்கத்தை உலகக் கொள்ளயன் இஸ்ரேலுடன் இணைந்து கொள்ளையடிப்பதற்கான சதி முயற்சி என அரசியல் ஆய்வாளர்கள் #சுட்டிக்காட்டுகின்றனர். 

அது மாத்திரமின்றி; அங்கு பிரிவினைவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வழங்கி அந்நாட்டு மக்களைக் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்க உதவுவதை பிற்காலத்திலேயே கண்டறிந்தனர். 

சோமாலியா என்ற  கனிய வளம் மிக்க நாட்டை பலப்படுத்துவடுவதற்குப் பதிலாக கொலைகாரன் இஸ்ரேலோடு இணைந்து #சோமாலியா  லேண்ட் என்ற ஒரு மாகாணத்தை தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்க திரை மறைவில் சதி செய்ததில் இந்த வளைகுடா இஸ்ரேல் என வர்ணிக்கப்படும் துபாய்க்கும்  பங்களிப்பிருப்பது தெரியவந்ததை அடுத்து அந்நாட்டுடன் செய்து கொள்ளப்பட்ட பல நூறு கோடி பெறுமதியான ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செயப்படுவதாக சோமாலியா அரசு உத்தியோபூர்வமாக அறிவித்ததை அரபு பத்திரிகைகள் முக்கிய செய்தியாக வெளியிட்டிருந்தன. 

அவ்வாறே‌ எமனில் சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டுப் படைகள் எமனின் ஸ்திரத் தன்மைக்கும் ஐக்கியத்திற்கும் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியேறும் வகையில் தெற்கு படையணி என்ற பெயரில் ஐத்ரூஸ் ஸுபைதயின் தலைமையில் நிறுவப்பட்ட இடைக்கால அரச படைகளுக்கு ஆயுத தளபாடங்கள் வழங்கி எமனைத் துண்டாடி அதன்  பெட்ரோலிய வளத்தை கொள்ளையடிக்கும் நோக்குடன்  உதவியது தெரிய வந்தது சவூதியிடம் கையும் களவுமாக மாட்டியதை அடுத்து சவுதியின் வான்படையின் கடுமையான வான்வழி தாக்குதலுக்கு உள்ளானதுடன் அங்கிருந்து எமிரேட்ஸ் ராணுவம்  விரட்டியடிக்கப்பட்டதும் இந்த நயவஞ்சகத்தினாலாகும்.

சோமாலியா வேந்தை இஸ்ரேல் அங்கீகரித்தவன் நோக்கம் அங்கிருந்து ஏமன் ஹவுசிகளுக்கு தாக்குதல் நடத்தவும் செங்கடல் ஊடான தனது வர்த்தக கப்பல்களை ஹவுதிக்களின் ராக்கெட் தாக்குதலில் இருந்து பார்க்கவும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது சவுதியின்  தொடர் பாதுகாப்புக்கும் எமனின் ஸ்திரத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எப்போதும் அச்சுறுத்தலாக அமைவதை  கவனத்தில் கொண்ட சவுதி பல வான்வெளி தாக்குதல்களை நடத்தியதுடன் எமனில் நிலை கொண்டிரூக்கும் எமிரேடட்ஸ் படை எமனையை விட்டும் முழுமையாக உடனடியாக வெளியேற வேண்டும் என கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து  #முக்கல்லா, ஷப்வா ஹழ்ரமவ்த் போன்ற பெட்ரோல் வளம் நிறைந்த நகரங்கள் மற்றும் சொக்கத்ரா துறைமுகத்தை   ‌விட்டும் துபாய் படைகள் வெளியேறிச் சென்றன.

இதற்குள் துபாய் அரசினால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த சூடானின் தங்க வியாபாரம் தடைப்படுவதை அடுத்து அதனை சவுதி அரேபியா மொத்தமாக கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொண்டது. எமனிலிருந்து துபாயை சவுதி அரேபியா விரட்டி யடித்தது போல் சூடானில் இருந்தும் சோமாலியாவிலிருந்தும் விரட்டயடிக்க‌ வேண்டுமென சவுதி துருக்கி எகிப்து நாடுகளிடம் அந்நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

- எம் . ஜே.  எம். ரிஸ்வான் மதனி 

Previous Post Next Post