بسم الله الرحمن الرحيم
1 உபரியான தான தர்மத்தின் அவசியமும் சிறப்பும்
2 உயர்ந்த தர்மம்
3 உபரியான தான தர்மம் செய்யும்முறை
4 உபரியான தான தர்மங்களை பங்கிடும் முறை
5 உறவினருக்கு தான தர்மம் செய்தல்
6 அண்டைவீட்டாருக்கு தான தர்மம் செய்தல்
7 வரியவர்களுக்கு தான தர்மம் செய்தல்
8 கணவனின் சொத்தில் தான தர்மம் செய்தல்
9 ஒருவர் பிறருடைய சொத்தில் தான தர்மம் செய்தல்
10 இறந்தவர்கள் சார்பாக உரியவர் தான தர்மம் செய்தல்
11 இஸ்லாத்தின் கடமையை வரம்பை மீறியவர்கள் தான தர்மம் செய்தல்
12 ஹஜ்ஜின் போது ஏற்படும் குற்றங்களும் அதன் பரிகாரமும்
13 இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடினால் அதற்குரிய பரிகாரம்
14 சத்தியத்தை முறித்து விட்டால்
15 நேர்ச்சை முறித்து விட்டால்
16 பெண்கள் தான தர்மம் செய்தல்
17 குறிப்பிட்ட நாட்களில் செய்யவேண்டிய தான தர்மங்கள் ரமளானில் தான தர்மம் நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபிர்ராதர்மம்)
18 சூரியன் சந்திரன் கிரகணங்களின் போது தான தர்மம் செய்தல்
19 நோன்பு ஹஜ் பெருநாட்கள் தர்மம்
20 குர்பானி மாமிசத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்தல்
21 இரவல் வழங்கி தர்மம் செய்தல்
22 உணவளித்தல்
23 நோன்பாளிக்கு இஃப்தார் உணவு தயாரித்து கொடுப்பது
24 பூமியை தக்கவைத்து விளைப்பொருளை மட்டும் தர்மம் செய்வது
25 சகோதரத்துவ பாசம் மேற்கொள்வதும் ஓர் தர்மமே
26 'மரம் நடுதல்' ஓர் ஆய்வு
27 அல்லாஹ்வை அனுதினமும் நினைவு கூறுவதும் ஒரு தருமமே
28 பொதுச் சேவையும் ஒரு தர்மமே
29 அறப்போராட்டத்திற்கு தர்மம் செய்தல்
30 உபரியான தர்மம் செய்பவர்கள் கவனத்திற்கு
இஸ்லாம் ஐந்து கடமைகளில் மூன்றாம் கடமையாக ஜகாத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜகாத்தை செல்வந்தர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் அது ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வல்ல அல்லாஹும் நபி(ஸல்) அவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள் சம்பாதிக்கும் பொருட்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட ஜகாத் வழங்கிய பின்னரும் அபரிதமான செல்வம் கொழிக்குமாயின் அதை உபரியாக (தான) தர்மங்கள் செய்யலாம் என்று வழிவகை செய்கிறது.
இதைப்பற்றி வல்ல அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அவன் உங்களை (எந்தச் சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (அல்லாஹ்வுக்காக) செலவு செய்யுங்கள் ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது. (57:7)
உபரியான தான தர்மம் செய்வதின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் பல்வேறு ஹதீஸ்கள் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்கள்.
உங்களில் ஒருவர் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியிஇப்னு ஹாதம்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இரண்டு விஷயங்களிலே தவிர (வேறெதிலும்) பொறாமை கொள்ள கூடாது. அல்லாஹ் ஒரு மனிதருக்கு (அபரிதமான) செல்வத்தை வழங்கியிருக்க அதை அவர் சத்தியத்திற்காக செலவழிக்கிறார். மேலும் ஒரு மனிதருக்கு அல்லாஹ் மார்க்க ஞானத்தை வழங்கியிருக்க அதைக் கொண்டு (மக்களிடையே எழும் பிரச்சனைகளுக்கு) தீர்ப்பளிக்கிறார். மேலும் அதை (மக்களுக்கு) கற்று கொடுக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி
ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
தான தர்மம் செய்வதின் அவசியத்தை பல்வேறு ஹதீஸ்களில் காண்கிறோம். தர்மம் என்பது பணத்தின் மூலமாக மட்டுமல்ல மாறாக உணவு போன்ற தானியமாக இருந்தாலும் தர்மம் செய்யலாம் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விரண்டிற்கும் இயலாமல் இருப்பெரும் உலகத்தில் இருக்கின்றனர். இத்தகையோர் பலம் குன்றியோருக்கு ஒத்தாசையாக இருந்தோ அல்லது நன்மையை ஏவியோ அல்லது தீமையை விட்டு தவிர்த்து கொள்வதும் அதுதானம் தர்மம் செய்ததற்கு ஒப்பானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு தர்மத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதை பார்க்கிறோம்.
தர்மம் செய்வதின் அவசியத்தை வலியுறுத்திய இஸ்லாம் அதனுடைய பலாபலன்களையும், அறிவித்துள்ளது. நல்லதிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தபோதிலும் (அது) உங்களுக்கே பயன்தரக்கூடியதாகும். மேலும் அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தை தேடியே அல்லாது நீங்கள் செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தபோதிலும் (அது) உங்களுக்கு பூரணமாக (திருப்பித்) தரப்படும். மேலும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (2:272)
எந்த பொருளை நீங்கள் செலவு செய்தபோதிலும் அதற்கு பகரமானதை அவன் அளிக்கிறான். (34:39)
எவர்கள் தங்களுடைய செல்வங்களை (தர்மத்திற்காக) இரவிலும் பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும், செலவு செய்கிறார்களோ அத்தகையோர் அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடமிருந்து உண்டு அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை (இம்மையில் விட்டு சென்றதைப்பற்றி) அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள். (2:274)
அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களைச் செலவு செய்கின்றார்களோ அத்தகையோரின் உதாரணம் ஒரு வித்தின் உதாரணத்தை போன்றிருக்கிறது. அது ஏழு கதிர்களை முளைபித்தது. ஒவ்வொரு பதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன, இன்னும் அல்லாஹ்தூன் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரு மடங்காக்குகிறான் அல்லாஹ் மிக்க விசாலமானவன் யாவற்றையும் அறிகிறான். (2:261)
தர்மம் செய்வதின் பலாபலன்களை நபி(ஸல்) அவர்கள் பல்வேறு ஹதீஸ்களில் நவின்றுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ''நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்¡ர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:முஅத்பின் ஜபல்(ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்
அல்லாஹ் ஹலாலானதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டான் என்பதால் எவரேனும் அதிலிருந்து தர்மம் செய்தால் ரஹ்மான் தன் வலக்கரத்தால் அதை பெற்றுக் கொள்கிறான். அது ஒரு பேரீச்சம் பழமாக இருப்பினும் சரியே அது அல்லாஹ்விடத்தில் மலையை விடப் பெரிதாக இருக்கிறது. ஒருவர் தன் ஒட்டகக் குட்டியை வளர்ப்பது போல் (அதை அல்லாஹ் வளரச் செய்கிறான்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி
உங்களில் யார் இன்று நோன்புநோற்றிருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் துயர்ந்திருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்ம்னுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி
இரண்டு வானவர்கள் ஒவ்வொரு (நாள்) காலையிலும் அடியார்களிடம் இறங்குகிறார்கள். அவர்களில் ஒருவானவர் இறைவா (தர்மம்) செய்ய செலவழிக்கிறார்களோ அவர்களுக்கு அதற்கு (பகரமாக) அதிகமாக்குவாயாக! மற்றொரு வானவர் ''இறைவா (செலவழிக்காமல்) மிச்சம் வைக்கிறார்களே அவர்களுடைய செல்வத்தை அழித்து விடுவாயாகம் என்று கூறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி
தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி
ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி
விபசாரியான ஒரு பெண் ஒரும்ணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தாiயில் கட்டிம்ணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால்அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹமத்
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர்தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கிவிரிந்து விரல்களை மறைத்து கால்களை மூடித் தரையில் மழுபடும் அளவுக்கு விரிவடையும் கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வெர்ரு வளைவும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி
மறுமையில் மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா இப்னு அமீர்(ரலி) நூல்கள்: இப்னுஹிப்பான், ஹாம்ம்
உபரியான தான தர்மங்களின் பலாபலன்களின் கீழ் புதைந்துள்ள புதையல்கள் எத்தனை, எத்தனை உபரியான தான தர்மங்களை செய்வதற்கு இதைவிட பெரிய அத்தாட்சிகள் எவை தேவைப்படுகின்றன. எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு தான தர்மம் செய்ய முன்வருவோமாக!
உயர்ந்த தர்மம்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும்நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்
நம்மில் பலரிடம் தர்மம் என்பது செல்வந்தர்கள் தான செய்யவேண்டும். நிறைவேக செய்யக்கூடிய தர்மம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எண்ணி நடுத்தரவர்க்கத்தினர் குறைவான வசதி வாய்ப்பு உள்ளோர் கருதுகின்றனர். மேற்கண்ட இரு ஹதீஸ்களும் இவர்களின் சிந்தனை வாதத்தை நீக்கி ''அரசன் முதல் ஆண்டி'' வரை அனைவரும் தர்மம் செய்யலாம் என்று தெளிவுப்படுத்துகிறது.
உபரியான தர்மம் செய்யும் முறை:
அல்லாஹ் இதைப்பற்றி குர்ஆனில் குறிப்பிடுகிறான், தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப்பிரையும் தூண்டும்) அவற்றை இரகசியமாக ஏழை எளியோர்க்கும் கொடுத்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (2:271)
நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் முறையைப் பற்றி விளக்கியுள்ளார்கள்.
மறுமையில் இறைவனுடைய நிழலைபெறக் கூடிய ஏழு நபர்களில் ஒருவர் தன் இடக்கரத்திற்கு தெரியாமல் வரக்கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி
உபரியான தர்மங்களைப் பற்றி வலியுறுத்திய இஸ்லாம் அதனுடைய பலாபலன்களை பல்வேறு ஹதீஸ்களில் மூலம் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உபரியான தர்மம் செய்யும் முறையையும் விளக்கியது சிப்பிக்குள் முத்தை எடுப்பது போல் உள்ளது.
உபரியான தர்மங்களை பங்கிடும் முறை:
உபரியான தான தர்மங்களை அது செல்வமாகவோ அல்லது தானிவர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால் முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஒரு தீனாரை அல்லாஹ்வின் பாதையில் நீர் செலவழித்தீர்
மேலும் ஒரு தீனாரை அடிமைக்கு செலவழித்தீர்,
மேலும் ஒரு தீனாரை மிஸ்ம்னுக்கு செலவழித்தீர்,
மேலும் ஒரு தீனாரை உம்முடைய குடும்பாத்தாருக்கு செலவழித்தீர்,
இதில் உம்முடைய குடும்பாத்தருக்கு செலவழித்தோ மிக உயர்ந்த கூலியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ
நீர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி எதை செலவு செய்தாலும் அது(கூலி) உமக்கு வழங்கப்படும் (அற்பமான) உமது மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டினாலும் சரியே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத்பின்வகாஸ்(ரலி) நூல்: புகாரி
நன்மையை நாடி ஒரு முஸ்லிம் தன் மனைவிக்கு செலவு செய்தால் அது அவருக்கு தர்மமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்பத்ரி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் வாங்கக்கூடிய கையை விட கொடுக்கக்கூடிய கையே உயர்ந்தது (தர்மத்தை) நீர் உமது வீட்டாரிடமிருந்து ஆரம்பிப்பீராக (முதலில்) உமது தாய், மேலும் தந்தை மேலும் உமது சகோதரி, மேலும் உமது சகோதரர் பிறகு உமது நெருங்கியவர், உறவினர் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: நஸயீ
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு தீனார் (தர்மம் செய்ய) இருக்கிறது என்று வினவ நபி(ஸல்) அவர்கள் நீர் உமக்(ஆரோக்கியத்திற்)காக செலவழிப்பீராக என்றார்கள்.
அம்மனிதர் மற்றொரு தீனார் இருக்கிறது என்று வினவ நபி(ஸல்) அவர்கள் நீர் உமது குழந்தைக்காக செலவழிப்பீராக என்றார்கள். அம்மனிதர் அம்மனிதர் (மீண்டும்) என்னிடம் மற்றுமொரு தீனார் இருக்கிறது என்று வினவ நபி(ஸல்) அவர்கள் நீர் உமது பணியாளருக்கு செலவழிப்பீராக என்றார்கள். அம்மனிதர் (மீண்டும்) என்னிடம் மற்றுமொரு தீனார் இருக்கிறது என்று வினவ நபி(ஸல்) அவர்க்ள (தேவையுடையோருக்கு தர்மம் செய்வதில்) நீரே மிக அறிந்தவர் என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ
உபரியான தான தர்மங்களை பங்கீடும் முறையில் நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தனக்கு அடுத்து தாய் தந்தையர், சகோதரர், சகோதரி என்றும், மனைவி மக்கள் என்றும் வரிசைப்படுததி ஏனைய குடிமக்களுக்கு வழங்குவதை விட இவர்களை முன்னுரிமைப்படுத்தி தர்மம் செய்வது தான் உயர்ந்த கூலியாக சிறப்பித்து உள்ளார்கள் என்பதை பல்வேறு ஹதீஸ்கள் சான்று பகர்கிறது.
உறவினருக்கு தர்மம் செய்தல்
அன்ஸாரிகளில் அபூதல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார் அவருக்கு பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைரூஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும், விருப்பனமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)ர்க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்¡ரை குடிப்பது வழக்கம். அல்லாஹ் குர்ஆனில் (நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையமாட்டிர்கள்) என்ற (3:92) வசனத்தை இறக்கியதும். அபூதல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, ''நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாத வரை நீங்கள் நன்மையை பெறவேமாட்டீர்கள் எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைரூஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் செய்கிறேன்.
நான் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அல்லாஹ்விடம் எனது மறுமை வாழ்வின் நலுனுக்கான) சேமிப்பாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்கு காட்டிய வழியில் பயன்படுத்தி கொள்ளுங்கள் எனக்கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஆஹா இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாக செவியுற்றேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் நாடுகிறேன் என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா(ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன் எனக் கூறிவிட்டு அத்தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும் மேலும் தன் பெரிய தந்தையின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்கள்: புகாரி,முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்
முஸ்லிம் உடைய அறிவிப்பில் அபூதல்ஹா(ரலி) அவர்கள் பைரூஹா தோட்டத்தை தம் நெருங்கிய உறவினர்களில் ஹாஸ்ஸான் பின்ஸாபித்(ரலி) அவர்களுக்கும் உபய்யுபின் அபு(ரலி) அவர்களுக்கும் பங்கிட்டு கொடுத்துவிட்டதாக ஹதீஸ் பதிவாம்யுள்ளது.
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா(ரலி) அவர்கள் தம் அடிமைப்பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மைமூனா(ரலி) அவர்களிடம் (இந்த அடிமைப்பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து) உன்தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்கு பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: குரைப்மவுலா இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அண்டை வீட்டாருக்கு தர்மம் செய்தல்
''நீர் குழம்பை சமைத்தால் அதில் தண்¡ரை அதிகமாக்கி உம்முடைய அண்டைவீட்டாருக்கும் பங்கீடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்கள்: திர்மிதி
நான் நபி(ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டைவீட்டார்கள் இருவர் உள்ளனர் அவர்களில் எவருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன்'' அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அரும்லுள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய் என்று கூறினார்கள். அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
(உபரியான) தான தர்மங்களில் குடும்பம், உறவினர்களை கவனித்தபின்னர் அண்டை வீட்டாருக்கும் கவனிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அண்டை வீட்டார்களில் யாருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
வறியவர்களுக்கு தர்மம் செய்தல்:
மனிதன் இவ்வுலகில் வாழ இன்றியமையாத தேவை உணவு உடை உறைவிடம் ஆகும். இதில் தன்னிரைவு பெற்றவனே பாக்கியம் பெற்றவன். மாறாக இதில் ஒன்றையோ அல்லது இரண்டையோ பெற்றவன் அவனுடைய வாழ்வை ஒரளவு ஓட்ட முடியும். ஆனால் இதில் மூன்றையும் பெற்றுக் கொள்ளாதவனின் நிலையை எண்ணிப்பாருங்கள் வாழ்நாள்களை (ரத்த) கண்¡ரோட கழித்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் தான் வாழ்வை பூஜ்யமாக்கி விட்ட வறியவர்களோ? ஆம் நபி(ஸல்) அவர்களின் புன்னுருவல் பூர்த்தமுகம் இவர்களை கண்டவுடன் வாடிவிட்டது போலும் வறியவர்களின் வாழ்வுக்கு உயிர் ஊட்ட நபி(ஸல்) அவர்கள் தான தர்மங்களை செய்யுமாறு நபித்தோழர்களை ஊக்குவித்தார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்த சமயத்தில் ஆரம்ப நாளில் செறுப்பில்லா, நிர்வாணியான, கழுத்தில் தோலியான மேலாடையை சுருட்டியவர்களாக அவர்களுடைய (தோளில்) வாளை தொங்கவிட்டவர்களாக இருந்த ஒரு கூட்டம் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தது. இவர்களில் அதிகமானோர் அல்லது அவர்கள் அனைவருமோ ''முள்ர்'' என்ற சமுதாயத்தை சார்ந்தவர்கள் அவர்களின் ஏழ்மை நிலையைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது. உடனே (வீட்டிற்கு) உள்ளே நுழைந்து பிறகு வெளியே வந்து பிலால்(ரலி) அவர்களை பாங்கு கூறுமாறு ஏவினார்கள். அவ்வாறே பிலால்(ரலி) அவர்களும் பாங்கு கூறவே உடனே எழுந்து தொழுவித்தார்கள். பிறகு உரை நிகழ்த்தி ªரத்துன்னிஸாவில் முதல் வசனத்தையும், ªரத்துல்ஹஷ்ர் ரயில் பதினெட்டாவது வசனத்தையும் ஓதிகாட்டி (ஒவ்வொரு) மனிதரும் தன்னுடை தீனாரையோ, தீர்ஹமிலிருந்தோ, ஆடையிலிருந்தோ, கோதுமையில் ஒரு ''ஸாவு'' வோ பேரீச்சம்பழத்தில் ஒரு ''ஸாவு'' வோ தர்மம் செய்யட்டும் என்று குறிப்பிட்டு ஒரு துண்டு பேரீச்சம் பழமாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள். உடனே அன்ஸாரி நபித்தோழர்களில ஒரு மூட்டையளவு பொருளை கொண்டுவந்தார். அதனால் அவருடைய கைகள் நழுவின பிறகு மக்கள் (ஒவ்வொன்றாக) பின் தொடர்ந்து தான தர்மம் செய்தார்கள். இதனால் அவைகள் இரண்டு மூட்டையளவு உணவு பொருட்கள், ஆடைகளால் நிரம்பி இருந்தன.
நான் நபி(ஸல்) அவர்களின் முகத்தை பார்த்த போது அது மலர்ச்சியில் நிரம்பி இருந்தது. இதனால் (முகமே) பொன்னிரமாக மாறிவிட்டதோ (என்று நினைத்தேன்) (பிறகு) நபி(ஸல்) அவர்கள் யார் இஸ்லாத்தில் அழகிய நடைமுறையை ஏற்படுத்துகிறாரோ அதில் அவருக்கு அதனுடைய கூலியும், அவருக்கு பின் அதனை நடைமுறைபடுத்தியவர்களின் கூலியும் அவருக்கு உண்டு. அதனை நடைமுறைப்படுத்தியவர்களின் கூலியிலிருந்து எதுவும் அவருக்கு குறைக்கப்படமாட்டாது.
மேலும் யார் இஸ்லாத்தில் ஒரு தீமையை தோற்றுவித்தார்களோ அவருக்கு (அதில்) அதனுடைய பாவமும் அவருக்கு பின் அதனை நடைமுறைப்படுத்தியவர்களின் பாவமும் அவருக்கு கிடைக்கும், அதனை நடைமுறைப்படுத்தியவர்களின் பாவத்திலிருந்து எதுவும் இவருக்கு குறைக்கபடமாட்டாது என்று கூறினார்கள். அறிவிப்பவர்:முன்திர் பின் ஜரீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ
நீண்ட நெடிய ஹதீஸ் மூலமாக வறியவர்களுக்கு தர்மம் செய்யும் அவசியத்தை வலியுறுத்தய நபி(ஸல்) அவர்கள் அதனுடைய சிறப்பையும் சிலாஹிதது குறிப்பிட்டது. அதனுடைய செயல்பாட்டுக்கு மெருகூட்டுகிறது.
கணவனின் சொத்தில் தர்மம் செய்வது:
ஒரு குடும்ப தலைவி கணவனுடைய சொத்தில் தான தர்மம் செய்யலாம் அதே போல பணியாளர் தன் எஜமானின் சொத்திலிருந்து தான தர்மம் செய்யலாம் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு பெண் தன் வீட்டிலிருந்து (மீதமுள்ள) உணவை வீணடிக்காமல் தர்மம் செய்வாளேயானால் அவளுக்கு அதனுடைய நற்கூலி கிடைக்கும். அவளுடைய கணவனுக்கு சம்பாதித்ததற்கான கூலி கிடைக்கும். மேலும் கருவூல பணியாளருக்கு இதேப்போன்றே நற்கூலி கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஒரு பெண் தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாதியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்
ஒரு குடும்ப தலைவி தன் கணவனின் சொத்திலிருந்து தான தர்மம் செய்யலாம் இதனால் இருவருக்கும் (சமமான) நற்கூலி இருக்கிறது மற்றொரு ஹதீஸில ஒரு வேளை கணவனின் சொத்திலிருந்து அவனுடைய அனுமதியில்லாமல் தான தர்மம் செய்தால் அவனுக்கு கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பிறருடைய சொத்தில் தர்மம் செய்வது:
முஸ்லிமான நம்பிக்கைக்குரிய (கருவூல) பாதுகாவலன் (பொருளாளர்) தான ஏவப்பட்ட முறையில் முமுமையாக (நிறைவாக நல்ல முறையில் மனப்பூர்வமாக)த்தான் ஏவப்பட்டபடி ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தல் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
கரூவுல பணியாளர் பொருப்புள்ள முறையில் தர்மம் செய்யலாம் அதே போல அடிமை (பணிவிடை செய்யக்கூடியவர்) தன் எஜமானின் சொத்தில் தர்மம் செய்யலாம் அபூல்லஹம்(ரலி) அடிமை உபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். என்னுடைய எஜமானர் கறிகுழம்பு சமைக்குமாறு எனக்கு உத்தரவிட்டார். நானும் அவ்வாறே சமைத்தேன் (அந்நேரத்தில்) ஒரு மஸ்கீன் என்னிடம் வந்தார். நான் அவருக்கு அதிலிருந்து உணவளித்தேன் இதை அறிந்து கொண்ட என்னுடைய எஜமானார் என்னை அடித்து விட்டார். உடனே இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் எஜமானரை அழைத்து ஏன் அவரை அடித்தீர் என்று விசாரித்தார். அதற்கு அவர் ''இவன் என்னுடைய அனுமதியில்லாமல் என்னுடைய உணவை (மிஸ்கீனுக்கு) தர்மம் செய்தார் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (தர்மம் செய்ததற்கான) நற்கூலி உங்கள் இருவருக்கும் கிடைக்கும் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், நஸயீ
இறந்தவர்கள் சார்பாக உரியவர்கள் தான தர்மம் செய்தல்:
இறந்தவர்கள் மரணிக்கும் தருவாயில் தர்மம் செய்ய எண்ணினாலோ அல்லது ஒருவர் தர்மம் செய்ய எண்ணி திடீர் மரணித்துவிட்டாலோ அவர் சார்பாக அவருடைய வாரிசார்கள் தர்மம் செய்யலாம் இதற்கு நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ''என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' சார்பாக தர்மம் செய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா
பன} சாயிதா குலத்தை சார்ந்த சஅத்பின்உபாதா(ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவர்களின் தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' (பயனளிக்கும்) என்று கூறினார்கள். சஅத்பின் உபாதா(ரலி) அவர்கள் ''எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன். என்பதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத்
இஸ்லாத்தின் கடமையை, வரம்பை தவறியவர்கள் தர்மம் செய்தல்
இஸ்லாத்தில் அடிப்படைக் கடமைகள் ஐந்தாகும். அதில் நான்காம் கடமையாக நோன்பு திகழ்கிறது. அதை ஒவ்வொரு முஸ்லிமும் (ஆண், பெண் வித்தியாசமின்றி) ஒரு மாதம் நோற்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது. இதற்கும் இயலாதவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியப்படதேவையில்லை. ''ஆம்'' ''முதுமைப் பிணியால் வாடும் வயோதிகர்கள்'' இவர்கள் தான் வாழ்வா மரணமா என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் விஷயத்தில் இஸ்லாம் கருணை காட்டுகிறது. கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அதற்கு பரிகாரமாக தர்மம் செய்யுமாறு அறிவுரை கூறுகிறது.
நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்கு பரிகாரமாக ஓர் ஏழைகளுக்கு உணவளிப்பது கடமையாகும். எனினும் எவரேனும் உபரியாக (தர்மம்) நன்மை செய்தால் அது அவருக்கே மேலானதாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும். (2:184)
நோன்புநோற்க இயலாத தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும் அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைகளுக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அதாவு பின் அபீ ரபாஹ்(ரஹ்) நூல்: புகாரி (4505)
அனஸ்(ரலி) அவர்கள் முதுமையடைந்துவிட்ட பின்னால் ''ஓராண்டு'' அல்லது 'ஈராண்டுகள்' ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைகளுக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக்கொடுத்து (பரிகாரம் தேடிக் கொண்டு நோன்பை விட்டுவிட்டார்கள். அறிவிப்பவர்: ஹஸன் அல் பஸரீ(ரலி) நூல்: புகாரி (4505)
நோன்பு நோற்க இயலாதவர்கள் ஏழைகளுக்கு தர்மம் செய்யுமாறு வலியுறுத்திய இஸ்லாம் நோன்பு நோற்றவர் தன் துணைவியிடம் பகலில் உறவு கொள்ளக் கூடாது என்று தடுத்துள்ளது. மறதியாக அல்லது இச்சை மீறியோ உறவுக்கொண்டால் அதற்கு பரிகாரமாக தர்மம் செய்யலாம் என்று இஸ்லாம் வழிவகை செய்கிறது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?) என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா? என்று வினவினார்கள். அவர் ''இயலாது'' என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. ''இதை உம் சார்பாக வழங்குவீராக! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அதற்கவர் ''எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரு மலைகளுக்கிடையில் எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறுயாரும் இல்லை!'' என்று கூறினார். ''அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் எரிந்து போய் விட்டேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது' என்றார்கள் அவர் ரமளானில் என் மனைவியுடன் கூடிவிட்டேன் ''என்று பதிலளித்தார்கள் அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அரக்' என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம்பழம்) கொண்டு வரப்பட்டது. ''எரிந்து போனவர் எங்கே?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க நான் தான் என்று அவர் கூறினார்! அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து ''இதை தர்மம் செய்வீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
நோன்புக் கடமைகளில் தவறியவாகளுக்கு அதற்கு பரிகாரமாக தான தர்மம் செய்யுமாறு வலியுறுத்திய இஸ்லாம் குடும்ப உறவுகளில் உரிமையை பேணக்கூடியவர்கள் அதை மீறினால் அவர்களும் தர்மம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒருவர் தன் மனைவியை ''மிஹார்'' செய்யக்கூடியவர் குடும்ப உறவுகளில் இறைவனின் வரம்பை மீறிவிட்டார். ('ழிஹார்' என்றால் கணவன் தன் மனைவியை தன் தாய்க்கு ஒப்பிட்டு நீ என் தாயின் முதுமை! போல் இருக்கிறாய் என்று கூறுவதாகும். இதன் மூரம் தன்னிடமிருந்து தம் மனைவியை விலக்கி வைக்க முயற்ச்சிக்கிறார்) - இதை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறியவர் அதற்கு பரிகாரமாக அடிமை விடுதலை செய்தல், நோன்பு நோற்றல், தர்மம் செய்தல் போன்றவைகளில் ஒன்று செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.
''மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும் அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ அவர் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்கவேண்டும். எவர் இதற்கும் சக்திபெறவில்லையேர் அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது) (58:3,4)
குடும்ப உறவுகளில் 'ழிஹார்' ஐ கலந்து விட்டதற்கு பரிகாரமாக அடிமையை விடுதலைசெய்தல், தொடர்ந்து இருமாதங்கள் நோன்பு நோற்றல் முன்றாவதாக அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. தர்மத்தின் மகத்துவத்தை காட்டுகிறது.
ஹஜ்ஜின் போது ஏற்படும் குற்றங்களும் அதன்பரிகாரமும்
ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் ம்ரியைகளின் இறுதியாக தலைமுடியை மழிப்பதற்கு முன் பலியிடுதல் வேண்டும். ஆனால் அவைகளில் ஒன்றைமுந்தியோ பிந்தியோ செய்தால் குற்றமாகாது என்று நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் தெளிவுப்படுகிறது. ஆனால் தலை முடியை நிர்பந்தத்தின் காரணமாக மழித்துவிட்டால் அது குற்றமாக கருதப்படும் மேலும் அதற்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்று குர்ஆனும் ஹதீªம் வலியுறுத்துகிறது. இதைப்பற்றி வல்ல இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
''உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தாலோ அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் அணிந்த நிலையிலேயே அவர் தம் தலையை மழித்துக் கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக அவர் நோன்பு நோற்கவேண்டும். அல்லது தர்மம் செய்யவேண்டும் அல்லது குர்பானி கொடுக்கவேண்டும். (2:196)
அப்துல்லாஹ்பின் மஃகல்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் கஅபுபின் உஜ்ரா(ரலி) அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள் ''என் விஷயமாகத் தான் இறங்கியது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்ற நான் எண்ணவில்லை! உம்மிடம் ஓர் ஆடு இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன் நபி(ஸல்) அவர்கள் (தலையை மழித்துக் கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் 'அரை ஸாவு' வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக என்று கூறினார் என்று விளக்கம் அளித்தார்கள். நூல்: புகாரி
இஹ்ராம் அணிந்த துவக்கத்திலிருந்து நிர்பந்தத்தின் காரணமாக தலைமுடியை மழித்தற்கு பரிகாரமாக ஒர் ஆட்டையோ அல்லது மூன்று நாட்கள் நோன்பு இயலாவிடின் மூன்று ஸாவு தானியத்தை, அதை அரை 'ஸாவு' வீதம் பங்கிட்டு தர்மம் செய்யவேண்டும்.
இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடினால் அதற்குரிய பரிகாரம்
ஹஜ்ஜில் இஹ்ராம் அணிந்து கொண்டவர் (ஹரம் எல்லைக்குள்) வேட்டை பிராணிகளை வேட்டையாவது தடுக்கப்பட்டுள்ளது. என்று வல்ல அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி) பிராணிகளைக் கொல்லாதீர்கள். மேலும் உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி பிராணியைக் கொன்று விட்டால் அதற்கு பரிகாரமாக அவர் தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியை கால் நடைகளிலிருந்து பலி கொடுக்கவேண்டும்; உங்களில் நீதிமான்கள் அதனைத் தீர்மானிக்க வேண்டும்; அந்த பலிப்பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்படவேண்டும். அல்லது அந்தச் செயல்களுக்கு பரிகாரமாக ஏழைஎளியவர்களுக்கு உணவளிக்கவேண்டும். அதற்கு சமமான நோன்பு நோற்கவேண்டும் (இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பது) தான் செய்த (தவறான) செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே! முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லர்ஹ மன்னித்து விட்டான்; எனவே யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால் அல்லாஹ் அவரை பழிவாங்குவான் மேலும் அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும் பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்! உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் அணிந்திருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும் அதைப்புசிப்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் எதுவரை இஹ்ராம் அணிந்திருக்கிறீர்களோ அது வரையிலும் வேட்டையாடுவது உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் யாரிடத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (5:95,96)
இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடிய குற்றத்திற்கு பரிகாரமாக ஒரு பிராணியையோ அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பதோ அல்லது நோன்பு நோற்க வேண்டும், இதில் வசனத்தில் தர்மம் எவ்வளவு அளவு எத்தனை பேருக்கு வழங்கபட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
குறிப்பு: இஹ்ராம் அணிந்தவர் வேட்டை பிராணியை வேட்டையாடக் கூடாது ஆனால் மற்றவர் அதை வேட்டையாடினால் இஹ்ராம்அணிந்தவர்கள் அதை உண்ணலாம்.
இஹ்ராம் அணியாத நான் காட்டுகழுதையை வேட்டையாடி இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காட்டுக் கழுதையை வேட்டையாடினோம். எங்களிடம்; எங்களிடம் (அதில்) மீதமும் உள்ளது!'' என்று கூறினேன் அப்போது நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களிடம் ''உண்ணுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: புகாரி
இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடி சாப்பிடக்கூடிய உயிரினங்களை ஒருபோதும் கொல்லக்கூடாது ஆனால் தனக்கு தீங்கு தரக்கூடிய உயிரினங்களை கொல்லலாம். ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை அவை காகம், பருந்து, எலி, தேள், வெறிநாய் ஆகியவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி
சத்தியத்தை முறித்துவிட்டால்
அல்லாஹ்வின் மீது ஆணையாக மக்களுக்கு நன்மை செய்வேன் அல்லது இன்னாருக்கு இதை செய்வேன் என்று சத்தியமிட்டு பின்னர் அவற்றை நிறைவேற்ற இயலவில்லையென்றால் அதற்கு பரிகாரம் காணுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதைப்பற்றி வல்ல அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
''உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான் எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்த செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை பிடிப்பான் (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்கவேண்டும் அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் அவற்றுக்குரிய பரிகாரம் இதுதான். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணிகாத்துக்கொள்ளுங்கள். (5:89)
சத்தியத்தை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தான தர்மம் செய்யுமாறு அதனை முதன்மைப்படுத்துகிறது. இஸ்லாம் தர்மமாக பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் அல்லது அவர்களுக்கு ஆடை வழங்குதல் என்று வகைப்படுத்துகிறது இஸ்லாம். இதுபற்றி நபி(ஸல்) அவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.
நீர் ஒரு பிரமாணத்திற்காக சத்தியம் செய்து விட்டு பின்னர் அதைவிடச் சிறந்ததை கண்டிரானால் (அதை முறித்து விட்டு) உம்முடைய சத்தியத்திற்கு பரிகாரம் செய்து கொள்வீர். பின்னர் அந்த நல்லதைச் செய்வீர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான்பின் ஸமுரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நேர்ச்சையை முறித்துவிட்டால்....!
நேர்ச்சை என்பது வியாபாரத்தில் இலாபம் அடையவோ அல்லது நோய் குணமாகவோ அல்லது ஆசைகள் நிறைவேறவோ போன்றவற்றிற்hக நேர்ச்சை செய்வதாகவும், நேர்ச்சை நிறைவேற்றி எண்ணி பிறகு அதை நிறைவேற்ற இயலாவிடில் அதற்கும் பரிகாரம் காணப்படல் வேண்டும்.
''சத்தியத்திற்குரிய பரிகாரமே நேர்ச்சைக்கும் உரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: உக்பாபின் ஆமிர்(ரலி) நூல்: முஸ்லிம்
சத்தியத்திற்கு குண்டான பரிகாரமே நேர்ச்சைக்குரிய பரிகாரமாகும். அதாவது பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் அல்லது அவர்களுக்கு ஆடை வழங்குதல் அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்தல், அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பெண்கள் தர்மம் செய்தல்
பெண்கள் இஸ்லாத்தின் கடமைகளை பின்பற்றுவதில் பொதுவாகவே பின்தங்கியுள்ளனர். அதைப்பற்றி அறியாததும் ஒரு காரணம், மற்றும் இஸ்லாத்தை அறிந்து கொள்வதில் அதைபின்பற்றுவதில் படுபோக்காகவே உள்ளனர் என்பதும் ஒரு காரணம். இதனால் தான் தர்மங்களை செய்வதில் அதன் மூலம் நன்மைகளை அடைவதில் மிக குறைவாகவே உள்ளனர். இதனாலேயே நபி(ஸல்) அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்யுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு ஹஜ் பெருநாட்களில் முஸல்லா எனும் தொழும் இடத்திற்கு சென்று தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். ''மக்களே! தர்மம் செய்யுங்கள்!'' என்று கட்டளையிட்டார்கள் பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று ''பெண்களே தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்த நிலை?'' எனப் பெண்கள் கேட்டதும்'' நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள் கணவனுக்கு மாறு செய்கிறீர்கள் கூரிய அறிவுடைய குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
இதன்மூலம் பெணகள் தர்மம செய்யவேணடிய அவசியத்தை வலியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் பெண்கள் தாங்கள் இழைக்கும் தீமையை விட்டும் விலகுவதற்கு ஒரு கேடயமாக தர்மத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதைக்கேட்டவுடன் தர்மங்களை அள்ளிவழங்கியதை ஸஹாபிய பெண்மணிகளின் வாழ்க்கையிலிருந்து படிப்பிவை பெறுகிறோம்.
இதுவரை நாம் தர்மங்களின் அவசியம், அதன்சிறப்பு யார் எனக்கு தர்மம் செய்யவேண்டும். தர்மங்கள் செய்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் தர்மங்கள் செய்யாததினால் உண்டாகும் விளைவுகள் போன்றவற்றை பார்த்தோம், இனி குறிப்பிட்ட நாட்களில் செய்யவேண்டிய தர்மங்கள் மற்றும் தர்மங்களின் பல்வேறுவகைகள் போன்றவை காணலாம்.
குறிப்பிட்ட நாட்களில் செய்யவேண்டிய தர்மங்கள்:
ரமளானில் தர்மம்:
ரமளானில் நோன்பை நோற்றவர்கள் ஏழைஎளியோர் விஷயத்தில் மிகுந்த பரிவை காட்டவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் செயல் மூலம் காட்டியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வழங்கு ஜிப்ரீல் (அலை) ரமளானில் ஒவ்வொரு இரவும் ரமளான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றைவிட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரிவழங்குவார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்திய அடிப்படையில் ரமளானில் அதிகமதிகம் (உபரியான) தர்மங்களை செய்து இறையருளை அடையவேண்டும்.
நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா தர்மம்)
நோன்பு பெருநாளை கொண்டாடும் முகமாக பெருநாளுக்கு முன் ஃபித்ரா தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள்.
தீய பேச்சுகள், வீணான விஷயங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப்படுத்த கூடியதாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கிற ஃபித்ரா(ஜகாத்) தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ''யார் அதை (நோன்பு பெருநாள்) தொழுகைக்கு முன் நிறைவேற்றுகிறார்களோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜகாத் ஆகும்'' யார் அதை தொழுகைக்கு பின் நிறைவேற்றுகிறார்களோ அது தர்மங்களில் ஒன்றாக கருதப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா, ஹாம்ம்
ஃபித்ரா தர்மம் பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றவேண்டும் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி இன்றைய தினம் ஏழைகளை தேவையற்றவர்களாக்குங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ
நபித்தோழர்கள் நோன்பு பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி இன்றைய தினம் ஏழைகளை தேவையற்றவர்களாக்குங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ
நபித்தோழர்கள் நோன்பு பெருநாள் தர்மத்தை ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி
ஃபித்ரா தர்மமாக ஒருஸாவு உணவுப் பொருள் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு 'ஸாவு' அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு 'ஸாவு' அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும் படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி
ஒரு 'ஸாவு' என்று தோராயமாக இன்றைய எடை கணக்கில் இரண்டரை ம்லோவாகும் என்பதே பெரும்பாலான ஹதீஸ் கலை வல்லுநர்களின் கருத்து. மேலும் மேற்கண்ட ஹதீஸில் பேரீத்தம் பழம், கோதுரையை தர்மமாக கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறக்காரணம் ''அன்றைய காலத்தில் திட்டாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக் கட்டியும், பேரீச்சம் பழமும் தான் எங்களின் உணவாக இருந்தேன் என்று நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி(1510)யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டை பொருத்தவரை அன்றாட உணவு, அரிசி, கோதுமை போன்றவை உணவையே ஒரு ''ஸாவு'' அளந்து தர்மம் செய்யலாம். மேலும் ஃபித்ராதான தர்மம் எவருக்கெல்லாம் கடமையாகும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
''சிறியவர், பெரியவர் சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையை (ஏழைகளுக்கு) நோன்பு பெருநாள் தர்மமாகச் (கொடுப்பதை) நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஃபித்ரா தர்மம் செய்யும்போது நேரம், காலம், அளவு, நபர்கள் போன்றவை கவனத்தில் கொண்டு தர்மம் செய்வது உகந்ததாக அமையும்.
சூரியன், சந்திரன் கிரகணங்களின் போது தர்மம் செய்தல்
வல்ல இறைவனின் படைப்புகளின் ஆற்றல்களை அற்புதங்களை மனிதர்களுக்கு அவ்வப்போது காட்டப்படுகின்றன. அவைகள் இறைவனின் அத்தாட்சிகள் என்பதை (அவ்வப்போது) நிருபிக்கப்படுகிறது. அவைகளில் உள்ளது தான் சூரிய, சந்திர கிரகணங்கள் இவைகள் ஏற்படுகிறபோது தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
''சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ எவரது வாழ்வுக்கோ, அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் அவனைப் பெருமைப்படுத்துங்கள். தொழுங்கள், தர்மங்கள் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
நோன்பு, ஹஜ் பெருநாட்கள் தர்மம்
மங்களகரமான பெருநாட்களில் புன்னுருவலுடன் கொண்டாடும் வேளையில் ஏழைகளுக்கு தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழுமிடத்திற்குச் சென்று தொழுது விட்டு உரை நிகழ்த்தினார்கள்.
''மக்களே தர்மம் செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று பெண்களே தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்கினார்கள். (இதை செவியுற்ற பெண்கள்) (தங்களை பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி
ஹஜ் பெருநாளில் குர்பானி மாமிசத்தையும் அதன் தோலையும் தான தர்மம் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் (குர்பானி, ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கீடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள் நானும் அவ்வாறே பங்கிட்டேன் அவற்றின் சேணங்களையும், தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்கு கட்டளையிட்டார்கள் அவ்வாறே நானும் செய்தேன், மேலும் அவற்றை அறுப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்க கூடாது என்றும் எனக்கு உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) நூறு ஒட்டகங்களை அறுத்து பலியிட்டார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே நானும் பங்கிட்டேன், பிறகு அவற்றின் சேணங்கள் பங்கிடுமாறு உத்தரவிட்டார்கள். நானும் அவ்வாறே பங்கிட்டேன் பிறகு அவற்றின் தோல்களை பங்கிடுமுhறு எனக்கு உத்தரவிட்டார்கள் நானும் அவ்வாறே அவற்றை (ஏழைகளுக்கு) பங்கிட்டேன். அறிவிப்பவர்: அலி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
குர்பானி பெருநாளில் அறுக்கப்படும் பலிப்பிராணிகளின் இறைச்சிகளை உரியவர்கள் உண்டு புசித்து ஏழைஎளியவர்களுக்கு வழங்குமாறு வல்ல அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
தங்களுக்குரிய (இம்மை மறுமையின்) பலன்களை அவர்கள் அடைவதற்காகவும் அல்லாஹ்வின் பெயiரை அவன் அவர்களுக்கு கொடுத்த (குர்பானி பிராணிகளான ஆடு , மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிட்ட நாட்களில் கூறுவதற்காகவும் (வருவார்கள்) ஆகவே அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள் கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக்கொடுங்கள். (22:28)
இரவல் வழங்கி தர்மம் செய்தல்
இதற்கு அரபிச் சொல் வாக்கில் ''அல்மனிஹா'' என்று புழுங்குவார்கள்.
நாற்பது நல்ல காரியங்கள் உண்டு அவற்றில் ஒன்றை அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள(சொர்க்த்(தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைபிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான் அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அம்ரு(ரலி) நூல்கள்: புகாரி, அபூதாவூத்
பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட அதிகப் பால் தரும் ஒட்டகம் தான தர்மத்தில் சிறந்ததாகும் மேலும அதிகம் பால்தரும் ஆடும் தர்மத்தில் சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகின்றது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகின்றனது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
வருட, மாத, குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய தர்மங்களைப் பற்றி இதுவரை நாம் அறிந்துக் கொண்டோம். இனி உபரியான தர்மங்களை எவ்வாறெல்லாம் நிறைவேற்றலாம் என்பதை காண்போம்.
உணவளித்தல்
ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (வருகை தந்து) இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது? என்று வினவினார். அதற்கு ''நீர் (ஏழைகளுக்கு) உணவளிப்பதும் மேலும் நீர் அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
வல்ல ரஹ்மானை வணங்குங்கள் (ஏழைகளுக்கு) உணவளியுங்கள், ஸலாமை பரப்புங்கள் (அவ்வாறு செய்தீர்களேயானால்) சாந்தியோட சொர்க்கத்தில் நுழைவீர்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) நூல்: திர்மிதி, இப்னுமாஜா
உம்மு புஜைத்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஏழை எண் வாசலில் வந்து நிற்கிறார். அவருக்கு வழங்க என்னிடம் ஏதுமில்லை (இந்த நிலையில் நான் என்ன செய்வது? என்று கேட்டார்.'' அதற்கு நபி(ஸல) அவர்கள் சுட்ட குழம்பு தவிர வேறு எதுவும் உம்மிடம் இல்லாவிட்டால் அதை அவருக்குக் கொடு என்று கூறினார்கள்'' அறிவிப்பவர்: உம்மு புஜைத்(ரலி) நூல்கள்: திர்மிதி, அஹ்மத்
தான் எவ்வாறு அருசுவை உணவு உண்ணவேண்டும் என்று விரும்புகிறாரோ அதேப்போல் ஏழைகள் உண்ணவேண்டும் விரும்பி அவர்களுக்கு அதுபோல் உணவளிக்கவேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இரவலாக தந்து தான தர்மம செய்தல்
கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) போன்றவைகளை முழுவதுமாக தர்மம் செய்ய இயலாதோர், அவைகளை குறிப்பிட்ட நாட்களுக்கோ இரவலாக கொடுத்து அதன் பாலை மட்டும் தர்மம் செய்யலாம்.
நோன்பாளிக்கு இஃப்தார் உணவை தயாரித்து கொடுப்பது
''யார் நோன்பாளிக்கு இஃப்தார் உணவை செய்து கொடுக்கிறாரோ அவருக்கு (நோன்பாளிக்கு) உண்டான கூலியைப் போன்று அவருக்கு கிடைக்கும். என்றாலும் (இதனால்) நோன்பாளியின் கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதபின் காலித்(ரலி) நூல்கள்: திர்மிதி, அஹ்மத், இப்னுஹிப்பான்
நபி(ஸல்) அவர்கள் ஸஅத்பின் உபாதா(ரலி) இல்லத்திற்கு வருகை தந்தார்கள். (அவர்களுடைய நோன்பு திறக்க) ரொட்டியும் ஜைத்துன் எண்ணையும் கொண்டு வரப்பட்டது. அதனை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டுவிட்டு உங்களில் நோன்பாளிகள் நோன்பை திறந்தனர். மேலும் உங்களிடத்தில் நல்லவர்கள் உணவரிந்தினார்கள். மேலும் உங்களுக்காக வானவர்கள் பாவமன்னிப்பு கோருகின்றனர் என்று பிரார்த்தித்த வண்ணம் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னுஹிப்பான்
பூமியை தக்கவைத்து விளைப்பொருளை தர்மம் செய்யலாம்:
வேளாண்மை பெற்றவர்கள் அதில் விவசாயம் செய்து விளைச்சலை பெறலாம், அல்லது அவர்கள் அதை உபயோகிக்காமல் விட்டுவிட்டால் பூமியைமட்டும் தன்னிடத்தே வைத்துக் கொண்டு பிறர் விவசாயம் செய்து கொடுக்கலாம். அல்லது தானே விவசாயம் செய்து விளைச்சளை தர்மம் செய்யலாம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உமர்(ரலி) அவர்கள் கைபரில் கிட்டிய நிலம் விஷயமாக ஆலோசனை பெற நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள்'' அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தை (கனிமத்தாக) பெற்றேன் அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. ஆகவே, அதைநான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிட்டுகிறீர்கள்'' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்து விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் அதை (எவருக்கும்) விற்கக் கூடாது. அன்பளிப்பாக வழங்கக் கூடாது. வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது என்ற நிபந்தனைகளை விதித்து தர்மமாக ஆக்கினார்கள். (அதன் விளைச்சலை) ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் அடிமைகளை விடுதுலை செய்வதற்கும், அல்லாஹ் பாதையிலும் வழிப்போக்கர்களும், விருந்தினர்களுக்கும், தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப் பேற்றிருப்பவர். அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல் சேகரித்து வைக்காமல், உதாரித்தனமாக செலவழிக்காமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை என்ற (நிபந்தனைகளை) விதித்து தர்மம் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி
சகோதரத்துவபாசம் மேற்கொள்வதும் ஒரு தர்மமே.
இஸ்லாம் மனித சமுதாயத்தில் ஒற்றுமை பாசம் உண்டாக வேண்டும், அவர்களிடையே சகோதரத்துவ பாசம் மலரவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இஸ்லாம் அதில் ''ஒரு முயற்சியாக'' மக்கள் தங்கள் மத்தியில் சகோதரத்துவ பாசம் மேற்கொள்வதும் ஒரு தர்மமே என்று அறிவித்துள்ளது.
நன்மையான காரியங்கள் அனைத்தும் தர்மமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்
நன்மையான காரியங்களில் எதுவும் அற்பமாக கருதாதீர்கள் நீர் உம்முடைய சகோதரரை முகமலர்ச்சியோட சந்திப்பதிலும் கூட என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்
''மரம் நடுதல்'' ஒரு தர்மமே
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்தோ, ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருககு கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்
அல்லாஹ்வை அனுதினமும் நினைவு கூறுவதும் ஒரு தர்மமே!
பல்வேறு வகைகள் மூலமாக தர்மம் செய்வதின் அவசியத்தை வலியுறுத்திய இஸ்லாம் படைத்த இறைவனை கூறுவதின் மூலமாக தர்மம் செய்யலாம் என்று கூறுகிறது.
''நபித்தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே!'' செல்வந்தார்கள் நன்மைகளை (அதிகமாக) பெற்றுவிடுகின்றனர். நாம் தொழுவதைப் போன்று அவர்களும் தொழுகின்றனர். நாம் நோன்பு நோன்பதை அவர்களும் நோன்பு நோற்கின்றனர் ஆனால் அவர்கள் தங்களிடம் உள்ள அபரிமிதமான செல்வங்களை தர்மம் செய்துவிடுகின்றனர். என்று குறிப்பிட அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ (இவையெல்லாது மற்றொன்றும்) ஏற்படுத்தி இருக்கின்றானே ஒவ்வொரு தஸ்பீஹ் (ªப்ஹானல்லாஹ்)வும் தர்மமே! ஒவ்வொரு தக்பீர் (அல்லாஹு அக்பர் கூறுவது)வும் தர்மமே! ஒவ்வொரு தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவது)வும் தர்மமே! ஒவ்வொரு தஹ்லீல் (லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று கூறுவதும்) வும் தர்மமே நன்மையை ஏவுவதும் ஒரு தர்மமே, உங்களில் (ஒவ்வொரு) உறுப்புக்கும் தர்மமே. நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் மன இச்சையை தீர்த்து கொள்வதற்கும் நன்மை உண்டா என்று வினவ அதற்கு ஒருவர் தன் மன இச்சையை தடுக்கப்பட்ட வழியில் தீர்த்து கொள்வது அவருக்கு பாவம் ஆகும் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? அவ்வாறே ஒருவர் தம் இச்சையை ஆகுமாக்கப்பட்ட வழியில் தீர்த்து கொண்டால் அவருக்கு நற்கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்
பொதுச் சேவையும் ஒரு தர்மமே
மக்களின் அன்றாடத் தேவைகளில் உதவுவது, பாதிக்கப்பட்டடோருக்கு உதவுவது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது. மக்களக்க தொல்லை தருபவைகளை அகற்றுவது போன்றவை செய்வதும் தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மக்கள் தம்முடைய ஒவ்வொரு முட்டு எலுமபுக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்.
சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவம் ஒரு தர்மமே ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றிவைப்பதும் ஒரு தர்மமாகும், நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் (வழி தெரியாமல் தடுமாறும்) ஒருவருக்கு சரியான) பாதையை அறிவித்து தருவதும் தர்மமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஒரு மனிதர் ஒரு பாதைவழியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது பாதையில் முட்களையென்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் புரிந்தபாவங்களை விட்டு) மன்னிப்பு அளித்தான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
முஸ்லிமுடைய அறிவிப்பில் ஒரு மனிதர் பாதையில் தொல்லைதரும மரக்கிளையை வெட்டியதால் அவர் சொர்க்கத்திற்கு நுழைந்துவிட்டார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு நடுப்பாதையில் இடையூராக இருந்த மரத்தை அகற்றிய மனிதர் சொர்க்கத்தில் புரண்டுகொண்டு இருப்பதை நான் பார்த்தேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
அறப்போராட்டத்திற்கு தர்மம் செய்தல்
எவர் அல்லாஹ்வின் பாதையில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரு ஜோடிகளை செலவழித்தாரோ அவரை சொர்க்க வாயில்களின் காவலர்கள் ஒவ்வொருவரின் காலவரும் '' இன்னாரே! இங்கே வாரும் என்று அழைப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்ட அபூபக்கர்(ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே (எந்த வாயில் வழியாகவும் அவர் சுவனத்திற்கும் நுழையலாமே) என்று குறிப்பிட்ட நபி(ஸல்) அவர்கள் அவர்களில் நீங்களும் ஒருவர் ஆக நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் கடிவாளமிடப்பட்ட குதிரையை தர்மம் செய்தார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதர் மறுமைநாளில் கடிவாளமிடப்பட்ட ஏழுநூறு குதிரைகளோட வருவார் என்று நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத்(ரலி) நூல்: நஸயீ
எவர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயணவசதி செய்துக் கொடுக்கிறாரோ அவரும் புனிதப்போரில் பங்கு பெற்றவராவார். எவர் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரது வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கின்றாரோ அவரும் புனிதப் போரில் பங்கு பெற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத்பின் காலித்(ரலி) நூல்கள்: புகாரி
உபரியான தர்மம் செய்பவர்கள் கவனத்திற்கு
உபரியான தர்மங்களின் அனைத்து அம்சத்தையும் அல்லாஹ்வின் அருளால் அறிந்து கொண்டோம். உபரியான தான தர்மங்களை செய்கிறவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் விசேஷமாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள் அவற்றையும் இங்கே குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன்.
தர்மங்களை விரைவுப்படுத்துதல்
உபரியான தர்மங்களை செய்யும் போது அதை தாமதப்படுத்தாமல் விரைந்து செய்யவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்திவிட்டு உடனே விரைந்து தன் இல்லத்தினுள் சென்று தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் அல்லது வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நான் எனது வீட்டில் தர்மம் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன் அப்பொருளுடன் இரவை கழிக்க விரும்பவில்லை. எனவே அவற்றைப் பங்கிட்டு (தர்மம்செய்து) விட்டேன். அறிவிப்பவர்: உக்பாபின் ஹாரி!(ரலி) நூல்கள்: புகாரி
தான தர்மம் செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்கள் அதை தாமதப்படுத்தாமல் விரைந்து தர்மம் செய்யவேண்டும்.
தர்மங்களை கணக்கிடக் கூடாது
உபரியான தர்மங்களை பட்ஜெட்டாக கணக்கு போடக்கூடாது. அதை செலவீனங்களில் கணக்கு பார்ப்பதைப் போல் பார்க்க கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தான் தர்மம் செய்த ஏழைகளின் எண்ணிக்கையைப் பற்றி கூறியபோது (அல்லது) தர்மம் செய்ததின் அளவை கூறியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் நீ தர்மம் செய் அதை வரையறுத்துவிடாதே (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உம்மீது வழங்கும் அருட்கொடையை வரையறுத்துவிடுவான். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ''நீ (தர்மம் செய்யாமல்) முடித்து வைத்துக் கொள்ளதே அவ்வாறு செய்தால் இறைவனின் கொடை) உனக்கு (கொடுக்கப்படாமல்) முடித்து வைத்துக் கொள்ளப்படும்'' எனக் கூறினார்கள்.
அப்தா(ரலி) அவர்கள் மற்றொரு அறிவிப்பில் நீ (இவ்வளவு தான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லஹ் (உம்மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக உள்ளது. அறிவிப்பவர்: அஸ்மா பின் அபூபக்ர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
உபரியான தான தர்மம் செய்பவர் மிக ஜாக்கிரதையாக செய்யவேண்டும். அதைக் கணக்கு போட்டு குடும்ப பட்ஜெட்க்காக ஏற்படுத்த கூடாது. மாறாக கணக்கில் கொள்ளாமல் தர்மம் செய்யவேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
தர்மத்தை திரும்பப் பெறுவது
அல்லாஹ்வின் பாதையில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக) வழங்கினேன் ஆனால் அவர் அதை (சரியாக பராமரிக்காமல்) வீணாக்கி விட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க விரும்பினேன் இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவினேன் அதற்கு அவர்கள் அதை நீர் வாங்காதீர் உமது தர்மபொருளை நீர் திரும்ப பெறாதீர் அவன் அதை ஒரு திர்ஹத்திற்கு விற்றாலும் சரியே! ஏனெனில் தர்மத்தை திரும்பபெறுபவன் தான் எடுத்த வாந்தியை (மீண்டும் ) உண்பவனைப் போன்றவனாவான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ
தர்மம் செய்து அதை திரும்ப பெற்றவரின் உவமையாவது நாயைப் போன்றது அது வாந்தி எடுத்து விட்டு பிறகு வாந்தி எடுத்த இடத்திற்கே வந்து அதை விழுங்கி விடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) நூல்: நஸயீ
தர்மத்தை வழங்கி இஷ்டம் போல் திரும்பிபெறுவது என்பது ஒருவன் உண்டதை வாந்தி எடுத்து மீண்டும் அதையே உண்டதற்கு ஒப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தர்மம் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்
தர்மம் செய்யும்போது ஹலாலான சாம்பித் தியத்திலிருந்து செய்தால் தவிர அவை இறைவனால் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் அளவுக்கு தர்மம் செய்தாரோ அல்லாஹ் அவற்றைப் பரிசுத்தமானவற்றை தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி
தர்மம் செய்வதில் முகஸ்துதி கூடாது
தர்மம் செய்வதைக் கண்டு பிறர் தன்னை மெச்சவேண்டும் என்று விரும்பக் கூடாது. மாறாக இறைப் பொருத்தத்தை பெறவே தர்மம் செய்யவேண்டும் என்று வல்ல இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான். விசுவாசிகளே! அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு தன் செல்வத்தை செலவழிப்பவனைப் போல் கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும் நோவினை செய்தும் உங்கள் தான தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள். (2:264)
உபரியான தர்மங்களை செய்த முன்மாதிரிகளை பாரீர்
தர்மங்களை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் அதற்கு உதாரணபுருஷராக நடந்துக் கொண்டதை பார்க்கிறோம்.
இஸ்லாத்தின் பெயரால் எதைக்கேட்டாலும் நபி(ஸல்) அவர்கள் அதை கொடுத்துவிடுவார்கள். ஒரு தடவை ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (உதவக்கோரி) வந்த போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு மலைகளுக்கிடையில் மேய்ந்துக் கொண்டிருந்த அனைத்து ஆடுகளையும் (தர்மமாக) வழங்கினார்கள். அம்மனிதர் தன் சமூக மக்களிடம் சென்று மக்களே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். முஹமமத் மக்களே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், முஹம்மத்(கேட்டவுடன்) இவ்வாறு தர்மம் செய்கிறார். ஏனெனில் அவருக்கு வறுமையப்பற்றி பயமேயில்லை. (அச்சமயத்தில்) யாராவது இஸ்லாத்தை தழுவினால் அவர் உலக தாயத்திற்காக தழுவுவார் பின்னாலில் அவருக்கு உலகத்தை அதில் இருப்பவற்றை விடவும் மிகவும் விருப்பமானதாக ஆகிவிடுகிறது. அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம்
ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் சிலருக்கு கனிமத் (போரில் கிடைத்த) பொருளை பங்கிட்டார்கள். அதற்கு நான் ஆட்சேபித்து அல்லாஹ்வின் தூதரே இவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு கொடுப்பது மிகவும் தகுதியாகுமே! என்று வினவினேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்கள் என்னிடம் மிகவும் நிர்பந்தமாக கேட்க ஆரம்பித்து விட்டனர். மேலும் அவர்கள் என்னை உலோபித்தனம் உடையவன என்று சொல்லுகின்றனர். ஆனால் நானோ உலோபித்தனம் உடைவன் அல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்பின்கத்தாப்(ரலி) நூல்: முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து பலியிட்டார்கள். மேலும் அதை தர்மம் செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அவைகளில் ஏதாவது மிஞ்சியிருக்கின்றனவா? என்று வினவ அதற்கு அவர்கள்; அவைகளில் (மாமிசத்தில்) தோள்பூஜ கரியை தவிரவேறதுவும் மிஞ்சவில்லை. நபி(ஸல்) அவர்கள் தோள்பூஜ கரியைத் தவிர மற்றவை அனைத்தும் எஞ்சிவிட்டன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: திர்மிதி
நபித்தோழர்கள்
நபி(ஸல்) அவர்கள் உபரியானதாக தர்மங்களை செய்வதில் எவ்வாறு முன்மாதிரியாக இருந்து செயல்பட்டார்களோ அவ்வாறே அவர்களின் சொற்களை தட்டாதவர்களாக அவர்களின் உத்த தோழர்கள் திகழ்ந்தர்கள் என்றால் மேய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா
நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் உடனே எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து இருகையளவு தானியம் சம்பாதித்து (அதை தர்மம் வழங்கி) விடுவார். அதனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஒர் இலட்சம (திர்ஹம் (தீனார்) வரை உள்ளன. அறிவிப்பவர்: அபூமஸ்வூத்(ரலி) நூல்: புகாரி
நபி(ஸல்) அவர்கள் பெருநாட்களில் தொழுதுவிட்டு பெண்களிடம் சென்று தர்மம் செய்யுமாறு வலியுறுத்தினார்கள். பிறகு வீட்டிற்கு சென்றதும் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப்(ரலி) அவர்கள் வந்து நபி(ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கோரினார் அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. ''எந்த ஸைனப்?'' என்று நபி(ஸல்) அவர்கள் வினவ இப்னு மஸ்வூத் துணைவியார் ஸைனப் என்று கூறப்பட்டது அவருக்கு அனுமதி வழங்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) ''அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள். என்னிடம் சொன்தமான நகை ஒன்று இருக்கிறது. அதை தர்மம் செய்ய நாடினேன் (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தம் குழந்தைகளுமே அதற்கு தகுதியானவர் என்று எண்ணுகிறார். (என்ன செய்ய) என்று வினவினார் இப்னு மஸ்வூத் எண்ணுவது உண்மை தான் உன் கணவரும் உன் குழந்தைகளுமே உமது தர்மத்தை பெற தகுதியானவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயிதுல் குத்ரி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி