நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்

بسم الله الرحمن الرحيم


(தொகுப்பு: அபூஹுனைப் ஹிஷாம் ஸலபி, மதனீ)

بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين . أما بعد:

இத்தொகுப்பில் நபியவர்கள் தனது சுஜூதின் போது ஓதிவந்த ஸஹீஹான சில துஆக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நல்லமுறையில் மனனம் செய்து எங்களது சுஜூதுகளின் போது ஓதி நன்மைகள் பல பெற்றிட முயற்சி செய்வோமாக!

سُبْحَانَ رَبِّيْ الأعْلَى

பொருள்: உயர்வான எனது இரட்சகனைத் துதிக்கின்றேன். அறிவிப்பவர்: ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (772)



سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللهُمَّ اغْفِرْلِيْ

பொருள்: எங்களுடைய இரட்சகனாகிய இறைவா! உன்னைத் துதிக்கின்றேன், மேலும் உன் புகழைக்கொண்டும் (உன்னைத் துதிக்கின்றேன்), இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூட்கள்: புகாரி (817), முஸ்லிம் (484)



سُبْحَانَكَ وَبِحَمْدِكَ ، لَا إلهَ إلَّا أنْتَ

பொருள்: உன்னைத் துதிக்கின்றேன், மேலும் உன்னுடைய புகழைக் கொண்டும் (உன்னைத் துதிக்கின்றேன்), உன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் (485)



سُبُّوْحٌ قُدُّوْسٌ ، رَبُّ المَلائِكَةِ وَالرُّوْح

பொருள்: (நீ) மிகத் தூய்மையானவன் மிகப் புனிதமானவன், வானவர்கள் மற்றும் (பரிசுத்த) ஆவி(யான ஜிப்ரீல் அலைஹிமிஸ்ஸலாம்) ஆகியோரின் இரட்சகன். அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் (487)



سُبْحَانَ ذِي الجَبَرُوْتِ وَالمَلَكُوْتِ وَالكِبْرِيَاءِ وَالعَظْمَةِ

பொருள்: அடக்கியாளும் திறனும் பெரும் ஆட்சி வல்லமையும் பெருமையும் மகத்துவமும் மிக்கவனைத் துதிக்கின்றேன். அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூட்கள்: அபூதாவூத் (873), அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1031)



اللهُمَّ لَكَ سَجَدْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَلَكَ أسْلَمْتُ ، سَجَدَ وَجْهِيَ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ ، تَبَارَكَ اللهُ أَحْسَنُ الخَالِقِيْنَ .

பொருள்: இறைவா! உனக்கு நான் சிரம் தாழ்த்திவிட்டேன், மேலும் உன்னைக் கொண்டு விசுவாசம் கொண்டு விட்டேன், இன்னும் உனக்கு நான் அடிபணிந்து விட்டேன், படைத்தவனும் உருவமைத்தவனுமாகிய (அவனுக்கு) என்னுடைய முகம் சிரம் தாழ்த்தியது, செவிப்புலனையும் கட்புலனையும் ஏற்படுத்தித்தந்தவனுக்கும் (என்னுடைய முகம் சிரம் தாழ்த்தியது), படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் அருட்பாக்கியம் உடையவன். அறிவிப்பவர்: அலி இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (771)



اللهُمَّ اغْفِرْلِيْ ذَنْبِيْ كُلَّهُ ، دِقَّهُ وَجِلَّهُ ، وَأَوَّلَهُ وَآخِرَهُ ، وَعَلانِيَّتَهُ وَسِرَّهُ .

பொருள்: இறைவா! என்னுடைய அனைத்துப் பாவங்களுக்காக வேண்டி எனக்கு மன்னிப்பருள்வாயாக, (அவற்றில்) நுட்பமானதும் (அளவில்) பெறியதும், ஆரம்பமானதும் இறுதியானதும், வெளிப்படையானதும் மறைவானதுமாக (அமைந்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக.) அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (483)



اللهُمَّ أعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ ، وَأعُوْذُ بِكَ مِنْكَ ، لَا أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ أنْتَ كَمَا أثْنَيْتَ عَلى نَفسِكَ .

பொருள்: இறைவா! உன்னுடைய திருப்பொருத்தத்தைக் கொண்டு உன் கோபத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுகின்றேன், மேலும் உன் மன்னிப்பைக் கொண்டு உன் தண்டனையில் இருந்து(ம் பாதுகாப்புத் தேடுகின்றேன்), இன்னும் உன்னைக் கொண்டு உன்னிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றேன், உன் மீது புகழாக என்னால் வரையறுக்க முடியாது, நீயோ உன்னை நீ புகழ்ந்த பிரகாரம் இருக்கின்றாய். அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் (486)

– பார்க்க: ஹிஸ்னுல் முஃமின் (பக்கம்: 33, 34)
أحدث أقدم