மீலாதுன் நபி நரகமே பரிசு

அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மை இந்த ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்களின் பெயரை பயன் படுத்தி கொண்டு ஆட்டம் கவிதை பாடல் என பித்அத் ஆன செயல்களில் ஒரு கூட்டம் செய்ய ஆரம்பித்து விடுகிறது!

மற்ற நாட்களில் பர்ளு தொழத நபர் கூட இந்த மாதத்தில் அதிகம் ஸலவாத், திக்ர், துஆ செய்வார்கள் இவ்வாறு செய்வதால் கவலை நெருக்கடி வறுமை நீக்கும் என்று கூறி அமல் செய்ய வைப்பார்கள் ஆனால் அப்போது கூட யாரும் தொழுகைக்கு முன் உரிமை கொடுத்து அமல் செய்ய சொல்ல மாட்டார்கள்!

இந்த மீலாத்தில் மிக முக்கியமானவை பணம் இரண்டாவது உணவு ஆகும் உணவுக்கே இந்த மீலாத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்!

மீலாத் பற்றி இயன்ற அளவுக்கு ஆதாரம் உடன் பதிவில் கொடுத்து உள்ளோம் அதனால் பதிவு சற்று பெரியதாக இருக்கும்! பொறுமையாக படித்து பாருங்கள்!


மீலாத் எனும் பித்ஆத் தோன்றிய வரலாறு சுருக்கம் :

ஃபாதிமய்யாக்கள் என்ற ஷீஆப்பிரிவினை சேர்த்த அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி என்பவனால் முதன் முதலில் மௌலித் எனும் பித்ஆத்தை உருவாக்கினான்!

ஃபாதிமிய்யாக்கள் (ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்) என தமக்கு தாமே பொய்யான பெயர் சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம்!

பனுஉபைத் என்ற கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்கள்! 

இவர்கள் ஆட்சிக்கு வந்தது அந்த நாட்டு மக்களுக்கும் மற்றும் தமது நிர்வாகத்தில் உள்ள மக்களுக்கும் இவர்கள் மீது வெறுப்பு காணப்பட்டது!

இதை சமாளிப்பதற்காகவும்! தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக எந்த விதமான புரட்சியில் ஈடுபடாமல் இருப்பதற்காகவும் இன்னும் மக்களின் கவனத்தை தமது பக்கம் ஈர்ப்பதற்காகவும் முதன் முதலில் மீலாத் எனும் ஒன்றை உருவாக்கினார்கள்!

இந்த மீலாத் மக்கள் இடையே அதிகம் வரவேற்பு பெற்றது இதனால் ஷியாக்கள் மேலும் இது போன்று நிறைய உருவாக்கினார்கள்!

1) மவ்லிதுன் நபி

2) மவ்லிது அலி

3) மவ்லிது ஹஸன்

4) மவ்லிது ஹுஸைன்

5) மவ்லிது ஃபாத்திமா

இது போன்று நிறைய பித்அத் ஆன மவ்லீத்களை உருவாக்கினர்கள்!

‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ இவனைத் தொடர்ந்து ‘அல்முயிஸ’ என அழைக்கப்படும் இவனது மகன் மீலாத்தை பேணி வந்தான்!

இப்படி தான் வரலாற்றில் மீலாத் தோன்றியது!

(நூல் : அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன் : 1 / 201)

அல்லாஹ் பாதுகாக்கணும் இந்த மீலாத்தை ஆதரிக்க உண்மை என்று கூற நவதுபில்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களின் தோழர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக்கட்டி கூறுகிறார்கள்! 

ஆனால் உண்மை என்ன வென்று நாம் அறிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் ஹதீஸ்களை இமாம்கள் வாழ்ந்த காலம் வரை நாம் பார்த்தலே நமக்கு தெளிவாகி விடும்!

1) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மீலாத் கிடையாது!

2) அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

3) உமர் பின்  கத்தாப் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

4) உஸ்மான் பின்  அஃப்ஹான் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

5) அலி இப்னு  அபூ தாலிப் (ரழி) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

6) இமாம்  அபூ ஹனிபாஃ (ரஹ்) ஹிஜ்ரி 150 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

7) இமாம் மாலிக் (ரஹ்) ஹிஜ்ரி 170 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

8) இமாம்  ஷாபிஈ (ரஹ்) ஹிஜ்ரி 204 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

9) இமாம் அஹ்மத் இப்னு பின் ஹம்பல் (ரஹ்) ஹிஜ்ரி 241 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

10) இமாம்  புகாரி (ரஹ்) ஹிஜ்ரி 256 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

11) இமாம் முஸ்லீம் (ரஹ்) ஹிஜ்ரி 261 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

12) இமாம்  அபூ தாவூத் (ரஹ்) ஹிஜ்ரி 275 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

13) இமாம் திர்மிதி (ரஹ்) ஹிஜ்ரி 279 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

14) இமாம் நஸயீ (ரஹ்) ஹிஜ்ரி 303 - அவர்கள் வாழ்ந்த காலத்தில் மீலாத் கிடையாது!

நபி ( ஸல் ) அவர்கள் காலம் முதல் ஹதீஸ்களை சேகரித்த இமாம்கள் வாழ்ந்த காலம் வரை இந்த மீலாத் என்று ஒன்று எந்த இடத்திலும் கிடையாது!

இதனால் தான் நம்மால் இந்த மீலாத் என்று ஒரு வார்த்தை கூட எந்த ஹதீஸ்களிலும் காண முடியவில்லை!

இந்த மீலாத் சம்பந்தமாக ஹதீஸ் கலை இமாம்கள் அல்லது இமாம் ஷாபிஈ ஹனபி ஹம்பளி மாலிகி ஆகிய நான்கு இமாம்கள் கூட எதுவும்  கூற வில்லை!


இஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம் :

இந்த இஸ்லாம் மார்க்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது!

இதற்கு பின்பு இஸ்லாத்தில் நன்மை காரியம் என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் உள்ள ஒன்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது!

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்!
(அல்குர்ஆன் : 5 : 3)

இஸ்லாத்தில் நன்மையான காரியம் என்று புதியதாக ஒன்றை சேர்க்கவோ அதே போன்று இஸ்லாத்தில் உள்ள ஒன்றை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது! அவ்வாறு யாரேனும் சேர்த்தாலும் அதை நாம் ஏற்று கொள்ள கூடாது!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்!
(நூல் : புகாரி : 2697)

இஸ்லாம் பொறுத்த வரை அனைத்து செயல்களையும் அனைத்து விதமான ஒழுக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி கொடுத்து உள்ளார்கள்!

மலம் ஜலம் எவ்வாறு கழிக்க வேண்டும்? கணவன் மனைவி எவ்வாறு சேர கூடாது! ஹைலு நிபாஸ், குளிப்பு கடமை என அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக கூறி உள்ளார்கள்!

இவ்வளவு சொல்லி கொடுத்த நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு முறை கூட இந்த மீலாத் பற்றி குறிப்பிட வில்லை!

இப்போது உள்ளவர்கள் போன்று மீலாத்தில் இவர்களே சுயமாக எழுதிய ஷிர்க் ஆன கவிதைகளை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் பாட வில்லை!

அதே போன்று இந்த ரபீயுல் அவ்வல் முதல் 10 நாட்களில் அதிகம் ஸலவாத் திக்ர் ஓதுவார்கள் பின்பு நான் இவ்வளவு ஸலாவத் மற்றும் திக்ர் ஓதினேன் என்று பிறரிடம் அதை எத்தி வைப்பார்கள் பின்பு கூட்டாக துஆ செய்வார்கள் இவை எல்லாமே தெளிவான வழிகேடு ஆகும்!

வருடத்தில் ஒரு நாள் அமர்ந்து நபி (ஸல்) அவர்களை சிறப்பித்து எந்த ஸஹாபாக்களும் கொண்டாடியாது கிடையாது! இவை எல்லாமே பின்னால் வந்தவர்கள் உருவாக்கி கொண்டது!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் எதை செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் உங்களுடைய முடிவுக்கு விட்டுவிட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டுவிடுங்கள்!

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்!*
(நூல் : புகாரி : 7288)

இந்த ஹதீஸ் நமக்கு போதுமானது நபி (ஸல்) அவர்களின் சொல் செயலை மட்டுமே நாம் பின் பற்ற வேண்டும் என்று!

நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை அல்லது செய்ய சொல்லாத ஒன்றை நாம் பின் பற்ற கூடாது!


மலக்குமார்கள் விரட்டி அடிப்பார்கள் :

மறுமை நாளில் நமக்கு மிகவும் தாகம் ஏற்படும் காரணம் சூரியன் நமக்கு மிக அருகில் வந்து விடும்!

இதன் காரணமாக நம்மில் ஒவ்வொருவருக்கும் அதிகம் தாகம் ஏற்படும்!

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும் ஒரு நீர் தாடகத்தை வழங்கி இருப்பான்!

நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் நபி (ஸல்) கையால் அல்கவ்ஸர் எனும் தாடகத்தில் நீர் அருந்துவார்கள்! அதன் பின்பு சொர்க்கம் செல்லும் வரை நீர் தாகம் எடுக்காது!

ஆனால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது!

இஸ்லாத்தில் இல்லாத பித்அத் ஆனா புதிய செயல்களை உருவாக்கிவர்களை மலக்கு மார்கள் அல் கவ்ஸர் நீர் தாடகத்தின் அருகில் கூட சேர்க்க மாட்டார்கள்! விரட்டி அடித்து விடுவார்கள்!
(நூல் : புகாரி : 6582)


இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்கள் மட்டுமே :

இஸ்லாத்தில் ஒரு முஸ்லீம் மார்க்க ரீதியாக கொண்டாட கூடிய நாட்கள் என்பது ;

1) ஹஜ் பெருநாள் (பக்ரீத்)

2) நோன்பு பெருநாள் (ரம்ஜான்)
(நூல் : அபூதாவூத் : 1134)

ஒரு முஸ்லீமுக்கு மார்க்க ரீதியான கொண்டாட்டம் என்பது இந்த இரண்டு நாட்கள் மட்டுமே! இதை தவிர்த்து இஸ்லாத்தில் வேறு கொண்டாட்ட நாட்கள் கிடையாது!


நபி (ஸல்) அவர்கள் எப்போது பிறந்தார்கள் :

மீலாத் கொண்டாடுவதின் மிக முக்கியமான அடிப்படை நோக்கம்! நபி (ஸல்) அவர்கள் ரபீஅல் அவ்வல் மாதம் பிறை 12 தேதி பிறந்தார்கள் என்ற அடிப்படையில் தான் கொண்டாடுகிறார்கள்!

ஆனால் உண்மையில் நபி (ஸல்) அவர்கள் எந்த தேதியில் பிறந்தார்கள் என்று தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது!

நபி (ஸல்) அவர்கள் ரபீயுல் அவ்வல் மாதம்! அந்த மாதத்தில் ஏதோ ஒரு திங்கள் கிழமை நாளில் ஏதோ ஒரு தேதியில் பிறந்து உள்ளார்கள்!

ஆனால் இந்த மீலாத் கொண்டாட கூடியவர்கள் நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை 12 ம் நாள் தான் பிறந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்! இதுவே இவர்களின் மார்க்க அறியாமைக்கு உதாரணமாகும்!


நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் அளவு :

நபி (ஸல்) அவர்களுக்கு நிறைய சிறப்புகள் அற்புதங்கள் செய்யும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்து உள்ளான் இருந்தாலும் அல்லாஹ் கூறுகிறான்!

முஹம்மது (ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்!
(அல்குர்ஆன் : 3 : 144)

ஆயிரம் தான் இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரே!

நாம் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பேசலாம் ஆனால் ஒரு வரம்பு தான்!

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் :

கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்!

ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்!
(நூல் : புகாரி : 3445)

ஆனால் இன்று மீலாத் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தி புகழ்ந்து பேசுகிறார்கள்!

உதாரணமாக :

கஷ்டங்களை நீக்க கூடியவர் பாவங்களை மன்னிக்க கூடியவர் நீங்கள் என்று அல்லாஹ்வின் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள்! இவை எல்லாமே தெளிவான ஷிர்க் ஆகும்!


பிறந்தநாள் கொண்டலாமா?

பிறந்தநாள் பொறுத்த வரை இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு செயல் ஆகும்! முழுவதும் மாற்று மத கலாச்சரமே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே!
(நூல் : அபூதாவுத : 4033)

மீலாத் அடிப்படை நோக்கமே நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாளை சிறப்பித்து செய்வது தான்!

நம்மை விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசித்தவர்கள் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களுக்காக உயிரை கூட விட தயங்க மாட்டார்கள்!

இவ்வளவு நேசித்த ஸஹாபாக்கள் யாரும் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளை நினைவு வைத்து விஷேசமாக அமல் செய்தது கிடையாது! கொண்டாடியதும் கிடையாது

மாறாக ஸஹாபாக்கள் நபி (ஸல்) எவ்வாறு இருக்க சொன்னார்களே! எப்படி வாழ சொன்னார்களோ அதை தங்கள் மௌத் வரை பின் பற்றினார்கள்! நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி மௌத்துக்கு பின்பும் சரி!

உதாரணமாக :

இந்த மீலாத் கொண்டாட கூடியவர்கள் பகல் இரவு முழுவதும் பள்ளி வாசல்களில் அமர்ந்து மீலாத் கொண்டாடுவார்கள் மவ்லீத் பாடுவார்கள் ஆனால் தொழுகை நேரம் வந்தால் கூட யாரும் தொழ மாட்டார்கள் பிறரையும் தொழ சொல்ல மாட்டார்கள்!


மௌலித் எனும் ஷிர்க் ஆன பாடல்கள் :

மௌலித் (مولد) என்ற அரபு சொல்லுக்கு பிறப்பு, பிறந்த காலம், இடம் என்ற பொருள்கள் உள்ளன!

இது பேச்சு வழக்கில் மௌலூது என்று கூறப்படுகிறது!  அல்-மவ்லித் அந்நபவி என்றால், நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் என்று பொருள் படும்!

இந்த மீலாதை கொண்டாட கூடியவர்கள் ‘ சுப்ஹான மவ்லித் ’ எனும் ஒரு கிதாபை உருவாக்கி வைத்து உள்ளார்கள் அதில் உள்ள கவிதைகளை வைத்து நபி (ஸல்) அவர்களை போற்றுகிறோம் என்ற பெயரில் ஷிர்க் ஆன சொல்லை எல்லாம் கூறுவார்கள்!

ஆனால் மவ்லுத் எனும் கிதாபை யார் எழுதினார்கள் என்று இவர்களுக்கே தெரியாது! ஆனால் இந்த கிதாபை அல் குர்ஆன் அளவுக்கு உயர்த்தி பேசுவார்கள்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 5)

இந்த மவ்லுத் கிதாப் தமிழில் படிக்க மாட்டார்கள் பெரும் பாலும் அரபிலேயே படிப்பார்கள் அதனாலயே இதில் என்ன உள்ளது என்று தெரியாமல் பலரும் அதை ஓதுகிறார்கள்!

மவ்லூத் கிதாபில் வர கூடிய சிலதை இங்கு குறிப்பிடுகிறோம் ;

1) நபி (ஸல்) அவர்களே! நீங்கள் தான் பிராத்தனைக்கு பதில் அளிக்க கூடியவர்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 13)

இது தெளிவான ஷிர்க் ஆன வார்த்தை ஆகும்! துஆவிற்கு பதில் அளிக்க கூடியவன் அல்லாஹ் மட்டுமே!

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2 : 186)

2 ) நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தான் மறைவானதையும் பகிரங்கமானதை அறிய கூடியவர்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 13)

இதுவும் மிக தெளிவான ஷிர்க் ஆன வார்த்தை ஆகும் மறைவானதை அறிந்து கொள்ள கூடிய பண்பு அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது!

அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார்!*
(அல்குர்ஆன் : 6 : 59)

3) நபி அவர்களே நீங்கள் தான் (கஃப்பார்) பாவங்களை மிகவும் மன்னிக்க கூடியவர்! இன்னும் பெரும் பாவங்களை மன்னிக்க கூடியவர்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 12)

இதுவும் ஷிர்க் ஆனா வார்த்தை ஆகும்! பாவங்களை மன்னிக்க கூடியவன் அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ்விற்கு மட்டும் உள்ள தன்மையை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி கூறுகிறார்கள்!

அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்?
(அல்குர்ஆன் : 3 : 135)

4) மரணித்தவர்களை உயிர்பிக்கும்  ஆற்றல் உடையவர் நபி (ஸல்) அவர்களே!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 23)

இறந்துவர்களை உயிர் பிக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது! ஆனால் இவர்கள் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று அல்லாஹ்வின் தன்மையை ஒப்பிட்டு ஷிர்க் வைக்கிறார்கள்!

எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?
(அல்குர்ஆன் : 36 : 78)

5) நோய்களை குணம் படுத்த கூடியவர்! யா ரஸூலல்லாஹ்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 05)

நோய்க்கு குணம் அளிக்க கூடியவன் அல்லாஹ் மட்டுமே! 

நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்!
(அல்குர்ஆன் : 26 : 80)

இது போன்று ‘ சுப்ஹான மவ்லித் ’ என்ற நூலில் நிறைய ஷிர்க் ஆன வார்த்தைகள் உள்ளன இதை தான் வைத்து தான் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று கூறுகிறார்கள்!

நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று அல்லாஹ்விற்கு இணையாக கூறுகிறார்கள்! இதுவே பெரும் பாவமாகும்!


மௌலித் உள்ள இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் :

சுப்ஹான மவ்லித் ’ என்று இவர்கள் வைத்து இருக்க கூடிய நூலில் அல்லாஹ் பாதுகாக்கணும் நிறைய கட்டுக்கதைகள் கூறி உள்ளார்கள் மார்க்கம் விளக்கம் இல்லாத மக்களை ஏமாற்ற!

எதற்குமே ஸஹீஹான ஆதாரம் கிடையாது இந்த மீலாத்தை ஆதரிக்க பொய்யான செய்திகளை நிறைய கூறி உள்ளார்கள்!

இது மட்டும் இல்லாமல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரை கூறி தஸ்பீக் செய்தல் அவருக்கு தொழுதல் அதனால் கிடைக்கும் சிறப்பு என்று நிறைய கட்டுக்கதைகள் கூறுவார்கள்!


அல்லாஹ் முதலில் யாரை படைத்தான் :

‘ அல்லாஹ் முதலில் நபி ஸல் அவர்களையே படைத்தான் ’
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 16)

இப்படி பெரும் பொய்யை நபி ஸல் அவர்கள் மீது இட்டுக்கட்டி உள்ளார்கள்! இதற்கு எல்லாம் ஒரு ஸஹீஹான ஆதாரம் கூட கிடையாது!


மவ்லிதுக்கு சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கமா?

மவ்லிது ஓத உணவு கொடுத்து மேலும் மக்களை ஒன்று திரட்டினால் மறுமை நாளில் நபி மார்கள் உடன் எழுப்ப படுவார்களாம்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 12)

அல்லாஹ் பாதுகாக்கணும் எப்படி எல்லாம் பொய்கள் கூறுகிறார்கள்! இவ்வாறு செய்தால் இந்த சிறப்பு உள்ளது என்று அல்லாஹ் கூறி உள்ளான அல்லது ரஸூல் அவர்கள் கூறி உள்ளார்களா?

ஜிப்ரயில் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உதவி தேடி பாடி உள்ளார்களாம்!
(நூல் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் : 65)

இந்த மவ்லீத் கொண்டாட கூடியவர்கள் மலக்கு மார்களை கூட விட்டு வைக்க வில்லை! அவர்கள் மீதும் இட்டுக்கட்டி கூறுகிறார்கள்!


மீலாத்தும் பொய்யான ஆதரங்களும் :

மீலாத் கொண்டாட கூடியவர்கள் ஆதாரமாக சில ஹதீஸ்களை காட்டுவார்கள் அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!


நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் :

நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை பிறந்தார்கள்! அதே போன்று திங்கள் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பார்கள்!
(நூல் : முஸ்லிம் : 2153)

இந்த ஹதீசை ஆதாரமாக காட்டி நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாளை நோன்பு வைத்து கொண்டாடி உள்ளார்கள் அதனால் நாம் மீலாத் கொண்டாடலாம் என்று கூறுவார்கள் ஆனால் இது தவறான புரிதல் ஆகும்!

நபி (ஸல்) அவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் அல்ல! அதிகம் திங்கள் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பார்கள்!
(நூல் : திர்மிதி)

நாமும் அந்த அடிப்படையில் திங்கள் வியாழன் நோன்பு வைக்கலாம் சுன்னாஹ் ஆனால் நபி ஸல் அவர்கள் பிறந்தநாள் அன்று அல்லது மீலாத் என்று எண்ணத்தில் நோன்பு வைத்தால் அது பித்ஆத் ஆக ஆகி விடும்!

ஆனால் இந்த மீலாத் கொண்டாட கூடியவர்கள் ரபீயுல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை மட்டுமே நோன்பு வைப்பார்கள் மற்ற நாட்களில் நோன்பு வைக்க மாட்டார்கள்!

கவிதை பாட அனுமதி கொடுத்த நபி (ஸல்) அவர்கள்?

மீலாத் கொண்டாட மிக முக்கிய ஆதாரமாக இந்த ஹதீஸையும் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) என்ற ஸஹாபியும் குறிப்பிடுவார்கள்!

நபி (ஸல்) அவர்களை காஃபிர்கள் கவிதை மூலம் ஏசினார்கள் அதனால் நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) என்ற கவிதையில் சிறந்து விளங்கிய ஸஹாபியை வைத்து அவர்களுக்கு எதிராக கவிதை பாட சொன்னார்கள்!

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) ஸஹாபிக்கு நபி (ஸல்) அவர்கள் கிழே உள்ளது போன்று துஆவும் செய்தார்கள்!

இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்  (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல்) மூலம் வலிமையூட்டுவாயாக என்று கூறினார்கள்!
(நூல் : முஸ்லிம் : 4903)

இந்த ஹதீசை கூட அப்படியே மாற்றி யார் மீலாத் ஓதுவார்களே அவர்களுக்கு ஜிப்ரயில் (அலை) அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று ஹதீசை மாற்றி கூறுவார்கள்!

அதே போன்று நபி (ஸல்) அவர்களுக்காக பாடிய கவிதையை எந்த ஸஹாபியும் எழுதி வைத்து கொண்டு அல்லது மனம் செய்து வைத்து கொண்டு வருடம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதத்தில் பாடியது கிடையாது!

எந்த ஸஹாபியும் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று வருடம் வருடம் ஒரு நாளை தேர்வு செய்து பள்ளியில் அமர்ந்து பாடி கொண்டு இருக்க வில்லை என்னை பற்றி கவி பாடினால் இவ்வளவு நன்மை உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் யாருக்கும் கூறவும் இல்லை!


நபி (ஸல்) அவர்கள் கவிதை பாடுவதை ஆதரித்தார்களா?

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது :

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘ அல்அர்ஜ் ’ எனுமிடத்தில்  பயணம் செய்து கொண்டிருந்தோம்! அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என்று கூறினார்கள்!
(நூல் : முஸ்லிம் : 4548)


பித்அத் என்றால் என்ன?

பித்அத் என்றால் புதுமை ஆகும்! புதியாக ஒன்றை ஏற்படுத்துவது பித்அத்தை குறிக்கும்!

ஆனால் இஸ்லாத்தில் புதுமை ஏற்படுத்த அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது! 

பித்அத்தில் நல்லது கேட்டது என்று எதுவும் கிடையாது! பித்அத் என்றாலே  வழிகேடு தான்! வழி கேடு அனைத்தும் நரகமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வேதமகும், அழகிய வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களாகும், (மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகள், தீயவிடயஙகளாகும்! பித்அத் எல்லாம் வழி கேடுகளாகும், வழி கேடுகளெல்லாம் நரகத்தில் தான்!
(நூல் : நஸாயீ :1577)

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்!
(அல்குர்ஆன் : 18 : 104)

அல்லாஹ் இது போன்று பித்அத்களை விட்டு நம்மை பாதுகாப்பானாக!

நம்மை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.
أحدث أقدم