ஜுலைபீப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு

மதீனாவில் மிக சிறந்த அழகியாக போற்றப்பட்ட பெண்ணை திருமணம் செய்த ஸஹாபி.

அவசியம் படிக்க வேண்டிய ஒரு சரித்திரம் ஜுலைபீப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.

ஹதீஸ் வரலாறுகளில் ஒரு நபித்தோழரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள்தான் ஜுலைபீப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்...

* உயரம் குறைவானவர்கள்
* நேர்த்தியில்லாத உருவம் 
* பரம்பரை சரித்திரம் இல்லாதவர்கள்
* அவர்களுடைய பெற்றோர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை 
* எந்த குலத்தவரும் சொந்தம் கொண்டாடப் படாதவர்கள்
* அவர்கள் ஒரு தனிமரமாக காணப்பட்டார்கள்.
மதீனாவின் குழந்தைகளும் அவகளைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலையில் இருந்தார்கள்
* எவரும் அவர்களை தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்பாத, நட்பு பாராட்டாத ஒரு நிலை.

பல நாட்கள் மதீனாவின் வீதிகளில் தன் நிலையை எண்ணி அழுதவண்ணம், தனிமையில் காலம் கடந்தது. 

கண்மணி நாயகம் முகம்மதும் முஸ்தபா ﷺ அவர்கள் மதீனாவிற்கு வந்த பின்பாக ஜுலைபீப் رضي الله عنهم அவர்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

அவர் நபிகளார் ﷺ அவர்களின் கூட்டத்தில் இருப்பார்கள், அவர்களை செவுயுருவார்கள். மிக குறைவாக பேசுவார்கள். வெக்கத்தால் தலை குனிந்தவாறே இருப்பார்கள்.

இப்போது இவர் நபிகளார் ﷺ; அவர்களின் தோழராய் ஆகிவிட்டார்கள்.

ஒரு நாள் தோழர்களுடன் இருக்கும் நேரத்தில் நபிகளார் ﷺ அவரிடம் கேட்டார்கள்: ஓ ஜுலைபீப் رضي الله عنهم என்னிடம் நீ ஏதாவது கேள், உனக்கு விருப்பமான ஏதாவது உள்ளதா என்பதாக.

அவர் வெட்கம் கலந்த குரலில் கூறினார்,
ஓ அல்லாஹ்வின் தூதர் ﷺ, அவர்களே, எல்லாம் அல்ல அல்லாஹ் உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்துள்ளானே. இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் என்பதாக.

நபிகளார் ﷺ கேட்டார்கள்: எனதருமை நண்பரே நீர் திருமணம் செய்ய ஆசைப் படுகிறீற என்பதாக. ஜுலைபீப் رضي الله عنهم அவர்களோ புன்னகைத்தார்கள், நம்மை யார் திருமணம் முடிக்க முன்வருவார்கள் என நினைத்தவாறு. 

இருப்பினும், பதில் கூறினார். ஆம், அல்லாஹ்வின் தூதரே ﷺ என்பதாக.

நபிகளார் ﷺ அவர்கள் மதீனாவில் புகழ் பெற்ற ஒரு அன்சார் சஹாபியின் வீட்டுக்குச் சென்றார்கள். சென்று கூறினார்கள், நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்துள்ளேன் என்பதாக.

அந்த சஹாபியோ, யா ரசூல் ﷺ அவர்களே இதை விட சிறந்த பாக்கியம் எங்களுக்கு வேறு என்ன இருக்க முடியும் என்பதாக. 

நபிகளார் ﷺ கூறினார்கள்: நான் எனக்காக கேட்கவில்லை. எனது நண்பர் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்காக என்றார்கள்.

அந்த சஹாபியோ மிக நொந்தவராக, ஜூலைபீப் رضي الله عنهم அவருக்காக என்றார்கள். நபிகளார் ﷺ ஆம் என கூறினார்கள்.

சஹாபி கூறினார், நான் எனது மனைவிடம் கலந்தாலோசனை செய்து வருகிறேன் என்பதாக. செய்தியைக் கேட்ட மனைவியோ, அழுகையும், ஒப்பாரியுமாக. நான் ஜுலைபீப் رضي الله عنهم அவரைத் தவிர எவருக்கு வேண்டுமானாலும் எனது மகளை மணமுடித்து குடுப்பேன் என்பதாக.

இவர்களின் உரையாடலைக் கேட்ட மகள் விபரம் கேட்டார் தனது பெற்றோரிடம். அந்த பெண்ணோ மதீனாவின் மிக சிறந்த அழகியாக போற்றப் பட்டவர். சிறந்த பயபக்தி உடைய அந்த பெண்மணி சதா வணக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 

அவர் கூறினார் தனது தாயிடம், எனது அருமை தாயே, எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நபிகளாரின் ﷺ. கோரிக்கையை நிராகரிக்கப் போகிறீர்களா என்பதாக. மேலும், கூறினார் அந்த இளம் பெண், அல்லாஹ்வும், அவனது தூதர் ﷺ அவர்களும் ஒரு காரியத்தை முடிவு செய்ய, அதில் மாற்றுக் கருத்து சொல்ல எந்த இறை நம்பிக்கையாளருக்கும் உரிமை இல்லை என்பதாக 

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நம்மை இழிவு படுத்துவார் என நீங்கள் என்னுகிரீர்களா?
எவ்வளவு பெரிய சிறந்த நிலை ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு, அல்லாஹ்வின் தூதரே ﷺ உங்களின் மகளை பெண் கேட்டு வந்துள்ளார்கள். உங்களுக்கு தெரியாதா, மலக்குகளும் பொறாமைக் கொள்கின்றனர் அல்லாஹ்வின் தூதரிடம் ﷺ நெருக்கம் கொண்டவர்களைப் பார்த்து. 

கூறுங்கள் நபிகளார் ﷺ அந்த சஹாபியை இங்கு அனுப்புவதற்கு. இதை விட சிறந்த பாக்கியம் வேறொன்றுமில்லை, இதை விட சிறந்த கணவர் வேறு எவரும் எனக்கு இருக்க முடியாது என்றார். மேலும் கூறினார் தாயிடம், நபிகளார் ﷺ சிறந்த பரிசுடன் நமது வீடு தேடி வர, நீங்களோ அழுதுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாக.

அடுத்த நாளே திருமணம் நடந்தது.
உத்மான் رضي الله عنهم மற்றும் அலி رضي الله عنهم அவர்கள் பரிசளித்தனர் பணக்குவியலை திருமண வலிமா மற்றும் தங்க வீடு வாங்குவதற்கும்.

குறுகிய காலத்தில் ஒரு போருக்கான அறிவிப்பு. மாமனார் கூறினார், மருமகனே நீங்களோ புதிதாய் திருமணம் ஆனவர். உங்களுக்கு இப்போது போர் கண்டிப்பு அல்ல, நீங்கள் உங்கள் மனைவியுடன் நேரத்தை சந்தோசமாக களியுங்கள் என்பதாக.

ஜூலைபீப் رضي الله عنهم, பல வருடங்கள் கழித்து திருமணம் புரிந்தவர். கூறினார்கள், மாமனாரிடம், உங்களுக்கு இது விசித்திரமாக இல்லையா.
நமது தூதர் ﷺ அவர்களோ போர் முனையில், என்னால் எப்படி வீட்டில் எனது மனைவியுடன் சந்தோசமாக இருக்க முடியும் என்பதாக.

சின்ன உருவமான ஜுலைபீப் رضي ا
لله عنهم அவர்கள் கிட்டத்தட்ட அவரது உயரத்தில் வாழ் ஒன்றை ஏந்தியவராக போர்க்களம் நோக்கி சென்றார். மற்ற சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர், எப்போதும் அமைதியாக, வெட்கம் கொண்டவராய் காணப்படும் ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் இப்போது ஒரு சிங்கம் போல களத்தில் செல்கிறாரே என்பதைக் கண்டு. 
போர்க் களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளை துவசம் செய்ய ஆரம்பித்தார்.

போர் முடிந்த பின்பாக நபிகளார் ﷺ கூறினார்கள் மற்ற சஹாபாக்களிடம் சென்று பாருங்கள் எவராவது தங்கள் குடும்பத்தில் திருபவில்லையா என்பதை அறிந்து வாருங்கள் என்பதாக. பதில் கிடைக்கப் பெற்றார்கள், இல்லை எல்லோரும் திரும்பி விட்டனர் என்பதாக. அப்போது நபிகளார் ﷺ அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள், "நான் எனது அருமை ஜுலைபீப் رضي الله عنهم அவர்களை இழந்து விட்டேன். அவரை சென்று பாருங்கள் என்பதாக.".

அங்கு கண்டனர் சஹாபாக்கள், ஏழு காபிர்களைக் கொன்று, அவரும் அங்கு சஹீதாக்கப் பட்டதை.

நபிகளார் ﷺ குழி தோண்டச் சொன்னார்கள். நபிகளார் ﷺ அவரின் உடலை ஏந்தியவண்ணம் கூறினார்கள், "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து" என்பதாக 3 முறைக் கூறினார்கள். மற்ற சஹாபாக்கள் கூறினார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் ஜுலைபீப் رضي الله عنهم அவர்களுக்கு எவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளான் என்பதாக.

சஹாபாக்கள் ஆச்சரியம் கொண்டனர் அவரின் வாழ்க்கையை பார்த்து. அவர் அல்லாஹ்வையும், நபிகளார் ﷺ அவர்களையும் அதிகம் விரும்பினார் இதோ மிக சிறந்த நிலையை அவர் அடைந்து விட்டார். அவர் பார்க்க அழகாய் இல்லை, ஆனால் மிக அழகிய மனைவியை அல்லாஹ் கொடுத்தான். மிக ஏழை, ஆனாலும் மிக பணக்கார பெண்ணை கரம் பிடித்தார். சிறந்த பெண்மணி, பயபக்தி உடையவர், சிறந்த குலத்திலிருந்து மனைவி கிடைக்கப் பெற்றார். 

நபிகளார் ﷺ அவர்களும் கூறினார்கள் "யா அல்லாஹ்! இவர் என்னிடமிருந்து, நான் அவரிடம் இருந்து". 

மேலும் கூறப்பட்டது, அவரது தியாக மரணத்தால், அவரது ஜனாஸாவில் கலந்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குகள் வானத்தில் குவிந்துள்ளனர் என்பதாக. சுப்ஹானல்லாஹ்.

ஜுலைபீப் رضي الله عنهم அவர்கள் தனிமையில் இருந்தார், எப்போது அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அன்புக்குரியவர் ஆனாரோ, அதுமுதல் அவர் தனி மனிதர் அல்ல. 

இதுதான் நபிகளாரின் ﷺ மீது அன்பு கொள்பவர்களின் நிலை. 

இன்ஷா அல்லாஹ்,
நாமும் நமது மனதில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் ﷺ அவர்கள் மீதும் அதிகம் அன்பு வைத்து, அவர்கள் வழி வாழ்ந்து மறுமையில் அவர்கள் நட்பு கிடைக்கப் பெற்றவர்கள் ஆவோமாக.
[சஹீஹ் முஸ்லிம் - புத்தகம் 031, ஹதீத் No:6045]
Previous Post Next Post