அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் (ஹபிதஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:-
"இப்படி கூறுவது இஸ்லாத்தில் இல்லாத (பித்அத்) புதுமையான ஒரு செயலாகும், இந்த செயலுக்கு அல்லாஹ்ﷻ எந்த ஒரு ஆதாரத்தையும் இறக்கவில்லை.! மற்றும் நபியின்ﷺ சுன்னாஹ்விலும் இது போன்று இருக்கவில்லை.! முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை அன்று வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று எந்த ஒரு செய்தியும் இல்லை, மாறாக முஸ்லிம்கள் (ஈத் அல் பித்ர் மற்றும் ஈத் அல் அதுகா) அன்று வாழ்த்துக்களை கூறிக்கொள்ளலாம் என்று தான் வந்துள்ளது, ஆதலால் இது போன்ற வெள்ளிக்கிழமை வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது கூடாது இது (பித்அத்)ஆனா ஒரு செயலாகும்."
"முன்சென்ற நல்லோர்கள் யாரும் வெள்ளிக்கிழமை அன்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவில்லை,ஆதலால் அவர்கள் செய்யாத ஒன்றை நாம் புதிதாக உருவாக்கக்கூடாது."
அஷ்ஷெய்ஹ் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் (ஹபிதஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:-
"அல்லாஹ்ﷻ மீது சத்தியமாக.!இந்த வெள்ளிக்கிழமை வாழ்த்து கூறுவதற்கு வலுசேர்க்கும் வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நாம் பார்க்கவில்லை,ஆனால் இரண்டு பெருநாட்களில் நபித்தோழர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டால் வாழ்த்துக்கழலை பரிமாறிக்கொள்வார்கள் என்று வந்துல்லது."!
முப்தி-அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் (ஹபிதஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:-
"வெள்ளிக்கிழமை அன்று "ஜும்மாஹ் முபாரக்"என்று கூறிக்கொள்வது அல்லது தொலைபேசியில் இப்படி அனுப்புவதோ கூடாது, இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை..! சந்தேகமேயில்லை ஜும்மாஹ் உடைய நாள் முபாரக் பொருந்திய நாள் தான்,ஆனால் ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் வாழ்த்துக்களை கூறவேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.!
(ஆதாரம்-அஜ்வாபத் அஸ்இலாஹ் மஜ்அல்லத் அல் தாவாஹ் அல் இஸ்லாமிய்யா)
_(Albaidha.net)_
_(Salaf-us-saalih.com)_
_தமிழில்-அமீர் இப்னு அப்துர்ரஹ்மான்_