யார் ஒருவர் தொழுகையை பொடுபோக்கு செய்கிறாறோ அவரை அல்லாஹு தஆலா 15 விடையங்களைக் கொண்டு வேதனைப்படுத்துவான் .

கேள்வி :
சில பிரபலமான நூல்களிலும் சில  பேச்சாளர்களின்  உரைகளிலும் குறிப்பிடப்படும் பின்வரும் ஹதீஸ் ஆதாரபூர்வமானதா?

"யார் ஒருவர் தொழுகையை பொடுபோக்கு செய்கிறாறோ அவரை அல்லாஹு தஆலா 
15 விடையங்களைக் கொண்டு வேதனைப்படுத்துவான் .

துன்யாவில் 6 தண்டனைகள் வழங்கப்படும்.....

1. அவனுடைய வாழ்க்கையில் பரகத்தை செலிப்பை நீக்கிவிடுவான்...

2. அவனுடைய முகத்திலிருந்து ஸாலிஹீன்களுடைய  அடையாளத்தை நீக்கிவிடுவான்.....

3. அவனால் நிறைவேற்றப்படும் மற்றைய அமல்களுக்கு கூலியும் வழங்கப்பட மாட்டாது ...

4. அவனுடைய துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.....

5. ஸாலிஹீன்களுடைய துஆவிலே அவர்களுக்கு  எவ்வித பங்கும் கிடைக்கமாட்டாது....

6. மனிதர்கள் அவர்கள் மீது கோபத்தை காட்டுவார்கள்.....

மௌத்துடைய நேரத்தில்  3 தண்டனைகள் வழங்கப்படும் ....

1. அவருக்கு மரணம் இழிவான முறையில்  ஏற்படும் ..

2. அவருக்கு பசித்த நிலையிலே மரணம் ஏற்படும்...

3. இன்னும் அவன் தாகித்த நிலையில் மரணிப்பான் . அந்த தாகத்துக்கு துன்யாவிலுள்ள கடல்களின் நீர் அணைத்தையும் புகட்டினாலும் தாகம் தீராத அளவுக்கு தாகித்தவனாக மரணிப்பான் .....

கப்ரிலே 3 தண்டனைகள் வழங்கப்படும்....

1. அவனை கப்ர் நெருக்கும்... (அவனுடைய விலா எலும்பு மாற்றமடையும் அளவுக்கு கப்ர் நெருக்கும்...)

 2. கப்ரிலே அவருக்கு எதிராக நெருப்பு மூட்டப்பட்டும்... அந்த
நெருப்பு  இரவு பகலாகவே  தனலாகக் காணப்படும் ...

3. கப்ரில் அவருக்கு எதிராக ஒரு மலைப்பாம்பு சாட்டப்படும். மலைப்பாம்பின் பெயர் ----
அச்சுஜாஉல் அக்ரஃ
கண் நெருப்பாலானது
நகங்கள் இரும்பாலானது.
ஒவ்வொரு நகமும் ஒரு நாள் நடக்கும் தூரத்தின் அளவுக்கு விஷாலமானது.
சத்தம் பயங்கரமான இடியுடைய சத்தத்தைக் கொண்டது. இவ்வாறு அந்த பாம்பு மய்யத்துடன் கதைக்கும் நான் தான் சுஜாஉல் அக்ரஃ.
அல்லாஹு தஆலா எனக்கு உன்னைத்தீண்டும் படி (உனக்கு அடிக்கும்) படி   ஏவினான் ....

ஏனென்றால் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றாமல் வீணாக்கினதற்காக வேண்டி ஒரு அடயும் ...அவ்வாறே லுஹர் , அஸர் , மஃரிப்,இஷா தொழுகைகளை நிறைவேற்றாமல் வீணாக்கினதற்காக வேண்டி ஒவ்வோர் அடியாக உனக்கு அடிப்பதற்காகவே என்னை சாட்டினான்....என்று பாம்பு கூறும்.....
ஒரு முறை அந்த மலைப்பாம்பு தீண்டினால் 70 முலங்கலளவுக்கு அவன் நிலத்திலே மூழ்குவான் .....
மீண்டும்  மீண்டும் தீண்ட தீண்ட அவன் கியாமத்து நாள் வரை நிலத்திலே மூழ்கி அதாபு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.

மறுமையில கப்ரிலிருந்து வெளியேற்றப்படும் நேரத்தில் 3 வேதனைகள் வழங்கப்படும் .....

1. அவனுக்கு  கேள்விகணக்கு  கடினமாக்கப்படும் ....
2. அல்லாஹு  தஆலாவுடைய  கோபத்துக்கு சொந்தம் பெறுவான் ...
3.  அவன் நரகத்தைப் பெற்றுக்கொள்வான்.

பதில் :

இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என ஹதீஸ் துறை அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். முக்கியமாக பிரபல ஹதீஸ்துறை விமர்சகர்களான இமாம் தஹபி (ரஹ்) தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலிலும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தனது லிஸானுல் மீஸான் என்ற நூலிலும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என குறிப்பிட்டுள்ளார்கள். முஹம்மத் இப்னு அலி என்பவர் இதை நபியவர்கள் கூறியதாக பொய்யாக இட்டுக்கட்டியுள்ளார் என அவ்வறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறே இந்நூற்றாண்டின் அறிஞர்களான அல்லாமா பின் பாஸ் (ரஹ்), அல்லாமா இப்னு உதைமீன் (ரஹ்) போன்றோரும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என குறிப்பிடுகிறார்கள். 

தொழுகையின் முக்கியத்துவம் குறித்தும் அதை விடுவதன் பாரதூரம் குறித்தும் ஏராளமான ஆதாரபூர்வமான நபிமொழிகள் உள்ள போது, நபியவர்களின் பெயரில் பொய்யாக புனையப்பட்ட இது போன்ற செய்திகளை ஒரு முஸ்லிம் நம்புவதோ, பேசுவதோ, பகிர்வதோ, பரப்புவதோ கூடாது. 

நன்றி: முல்தகா அஹ்லில் ஹதீஸ்

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم