உம்மத்தின் பிரிவினை பற்றிய ஹதீஸின் விளக்கம்

بسم الله الرحمن الرحيم

விளக்கவுரை : அஷ்-ஷெய்க் ஸாலிஹ் அஸ்-ஸின்தீ حفظه الله
[அகீதா துறை பேராசிரியர், இஸ்லாமிய பல்கலைக்கழகம், அல்மதீனா அல்-முனவ்வரா, ஸவூதி அரேபியா]

الحديث :

افترقتِ اليهودُ على إحدَى وسبعينَ فرقةً , وافترقتِ النصارَى على اثنتَينِ وسبعينَ فرقةً , وستفترقُ هذه الأمةُ على ثلاثٍ وسبعينَ فرقةً كلُّها في النارِ إلا واحدةً، قيل : من هي يا رسولَ اللهِ؟ فقال صلَّى اللهُ عليهِ وسلَّمَ : مَن كان على مِثلِ ما أنا عليه وأصحابِي

{ " யூதர்கள் 71 கூட்டங்களாகப் பிரிந்தனர், மேலும் கிறிஸ்துவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தனர், மேலும் இந்த உம்மத் 73 கூட்டங்களாகப் பிரியும்.

(அவற்றுள்) ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர மற்றவையாவும் நரகத்திற்கே செல்லும்".

(அப்பொழுது) "அல்லாஹ்வின் தூதரே! (பாதுகாப்புப் பெறும்) அந்த ஒரு கூட்டம் எது? " எனக் கேட்கப்பட்டது.

(அதற்கு) "நானும் என் தோழர்களும் எதன் மீது உள்ளோமோ அதுபோன்றவற்றின் மீது இருப்பவர்கள்" என (நபி ﷺ பதில்) கூறினார்கள்.}

ஹதீஸின் விளக்கம் :

இது சமுதாயங்களின் பிரிவினை பற்றிய ஹதீஸாகும். இது உறுதியான ஆதார்வப்பூர்வமான ஹதீஸாகும். இதில் இந்த (முஸ்லிம்) உம்மத்தானது பிரிவினை அடையும் என்பதனை நபியவர்கள் ﷺ தெளிவுபடுத்தியுள்ளார்கள். மாறாக, இதன் (இந்த உம்மத்தின்) பிரிவினையோ, யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் பிரிவினையையெல்லாம் மிகைக்கும் (என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார்கள்).

(உம்மத்தின்) பிரிவினை என்பது விதியில் நிர்ணயம் செய்யப்பட்ட விடயமாகும் (எனவே அது கண்டிப்பாக நிகழும்). மேலும் ஷரீஅத் ரீதியாக (நம்மீது) கடமையாக  இருப்பது அதனை அகற்றுவதற்கு முயற்சிப்பதாகும் . 

(இங்கு இரு விடயங்கள் உள்ளன) 
1. ஒன்று விதி தொடர்பான விடயம், 
2. மற்றொன்று ஷரீஅத் ரீதியிலான விடயமாகும். 

விதி தொடர்பான விடயத்தை பொருத்த வரையில்  : இந்த உம்மத்தில் பிரிவினை ஏற்படுமென அல்லாஹ் நாடியதாகும். இது விதியுடன் தொடர்பான ஒரு விடயம். (இதையோ) அல்லாஹ் ﷻ  மிகப்பெரும் அல்லது ஆழமான ஞானம் கருதி நாடியிருக்கின்றான். 

மற்றொன்று ஷரீஅத் ரீதியிலான விடயமாகும்: அது இந்த பிரிவினையை அகற்றுவதற்கும், இந்த கருத்துவேறுபாட்டை நீக்குவதற்கும் மேலும் சத்தியத்தின் மீது ஒன்று சேர்வதற்காகவும் முயற்சிப்பதாகும். 

{واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا}* هذا هو الواجب.  

{மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்} [4 : 103] இதுவே (நம்மீதுள்ள) கடமையாகும். 

என்றாலும் எவர் சத்தியத்திற்கு முரண்படுகிறாரோ, அஸ்ஸிராத் அல் முஸ்தகீம் (எனும் நேரான பாதையை) விட்டு வழிதவறுகிறாரோ, அவரே பழிக்கப்படுபவரும்,  குறைகூறப்படுபவரும் ஆவார். 

ஆனால் எவர்கள் (நேரான மார்க்க) அடிப்படையின் மீது நிலைபெற்றுவிடுவார்களோ, மேலும் அஸ்ஸிராத் அல் முஸ்தகீம் (என்னும் நேரான பாதையின்) மீது உறுதியாக இருப்பார்களோ, அவர்கள் தான் புகழப்படுவர்களும், பாராட்டப்படுபவர்களும் ஆவர். மேலும் அவர்கள் தான் தவ்ஃபீக் (ஈடேற்றம்) மற்றும் பாக்கியமிக்க மக்களும் ஆவர்.  அவர்கள் எத்தகையோரென்றால் நபியவர்களும் ﷺ அவர்களின் தோழர்களும் எதன் மீது இருந்தார்களோ அதன் மீது உள்ளவர்கள். 

இவர்கள் மட்டுமே பாதுகாப்பு பெறும் மக்களாவர். முதலாவதாக வழிகேட்டை விட்டும், இரண்டாவதாக நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுகின்றனர். 
 

 قال النبي صلى الله عليه وسلم في كل الفرق المخالفة إلا الفرقة الواحدة المتّبعة للحق. إنها كلَّها في النار، إنها كلُّها في النار '  

சத்தியத்தைப் பின்பற்றும் அந்த ஒரு கூட்டத்தாரைத் தவிர்த்து, கருத்துவேறுபாடு கொள்ளும் பிற கூட்டங்கள் யாவற்றையும் குறித்து நபியவர்கள் ﷺ "அவையனைத்தும் நரகத்திற்கே செல்லும்" என்று கூறினார்கள். நபியவர்கள் ﷺ மற்றும் அவர்களின் தோழர்களின் பாதையிைல் பயணிக்கும் இவ்வொரே ஒரு கூட்டத்தைத் தவிர. 

இவர்கள் தான் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஆ, இவர்கள் தான் பாதுகாப்புப்பெறும் கூட்டத்தார் (அல்-ஃபிர்கத்துன் நாஜியா) , இவர்கள் தான் (அல்லாஹ்விடமிருந்து ﷻ)  உதவிசெய்யப்படும், வெற்றிபெறும் கூட்டத்தாரும் ஆவர். 

 في الصحيحين قال النبي صلى الله عليه وسلم ' لا تزال طائفة ' 

புகாரி மற்றும் முஸ்லிமின் அறிவிப்பில் நபியவர்கள் ﷺ கூறுகிறார்கள் "என்றென்றும் ஒரு கூட்டம் (நிலைத்து) இருந்து கொண்டே இருக்கும்..." என்னை கவனியுங்கள்: இங்குள்ள வார்த்தை ('கூட்டம்' என்று ) ஒருமையாகவே உள்ளது; 'கூட்டங்கள்' என்று (பன்மையாக) இல்லை. ‘கூட்டம்' என்று (ஒருமையாக) மட்டுமே உள்ளது.  

' لا تزال طائفة من أمتي على الحق '

"என்றென்றும் என் உம்மதிலிருந்து ஒரு கூட்டம் சத்தியத்தின் மீது இருந்துகொண்டே இருப்பார்கள்". சத்தியத்தின் மீது உறுதிபெற்றிருத்தலைக் கவனியுங்கள். (அம்மக்கள்) சத்தியத்தின் மீது உறுதியாக இருப்பவர்கள். 

' ظاهرين لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله ' 
"வெற்றிபெறுபவர்கள், அவர்களைக் கைவிடுபவர்களாலும், அவர்களுக்கு மாறுசெய்பவர்களாலும், அம்மக்களுக்கு தீங்கிழைக்க முடியாது. (இந்நிலை) அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை நீடிக்கும்.“ அதாவது: மறுமை நாள் சமீபமாகும் வரை (இந்நிலை தொடரும்). 

இவையாவும் நபியவர்கள் ﷺ அறிவித்தவற்றிலிருந்து உள்ளதாகும். மேலும் அவர்கள் அறிவித்தவாறே நிகழ்ந்தும் விட்டது. 

நபித்தோழர்களின் காலம் முடிந்த பிறகு மக்களுக்கு மத்தியில் புதுமைகளும்,  பித்அத்களும் நுழைந்தன.

 وصدق النبي صلى الله عليه وسلم فيما خرّج الإمام مسلم حيث قال ' وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما تُوعد ' أتاها ما وُعدت في الأمر المقدر 

இமாம் முஸ்லிம் அறிவிக்கும் ஹதீஸில் நபியவர்கள் ﷺ  ஒரு உண்மையை உரைத்தார்கள். அவர்கள் கூறினார்கள், "என் தோழர்கள் என்னுடைய உம்மத்திற்கு பாதுகாப்பு ஆவார்கள். அவர்கள் சென்றுவிட்டால், என்னுடயை உம்மத்திற்கு அதற்கு வாக்களிக்கப்பட்டது வந்தடையும்". (அவ்வாரே) அதற்கு விதியில் வாக்களிக்கப்பட்டது வந்தடைந்துவிட்டது. 

அதுதான் கருத்துவேறுபாடுகள், பிரிவினை மற்றும் பித்அத்கள் ஏற்படுவதாகும். இவை மக்களுக்கு மத்தியில் கொள்கை மற்றும் வணக்க வழிபாடுகளுடைய விடயங்களில்  ஊடுருவியவை ஆகும். 

சத்தியமானது - அல்ஹம்துலில்லாஹ் - குர்ஆன் மற்றும் ஸுன்னாவுடைய பாதையில் பயணிக்கின்ற இக்கூட்டத்தாரிடம் என்றென்றும் இருந்துகொண்டே இருக்கின்றது . 

மேலும் இக்கூட்டத்தின் சிறப்பம்சம் மற்றும் அதனுடைய அடையாளம், கோட்பாடு, அடிப்படை என்னவென்றால்: இக்கூட்டம் குர்ஆன் மற்றும் ஸுன்னாவை அடிப்படையாக வைத்து வெளிவருவார்கள், மேலும்  அவையல்லாதவற்றைத் தவிர்ந்துகொள்வார்கள்.

நீங்கள் இக்கூட்டத்தினரை அறியவோ, அல்லது இவர்களை அடையவோ விரும்பினால் யாரிடத்தில் இப்பண்பு(கள்) பிரதிபலிக்கின்றன என்று கவனியுங்கள்.

நபியவர்கள் ﷺ ஹதீஸில் கூறிய சத்தியத்தை பின்பற்றும் அந்த ஒரு கூட்டத்தினரின் பண்புகளாவன : 
1. குர்ஆன் மற்றும் ஸுன்னாவுக்கு ஒப்பாகவே தவிர அவர்கள் (ஒரு விடயத்தில்) முற்படவோ, வரவோ, பேசவோ, நம்பிக்கைக் கொள்ளவோ, வணக்கவழிபாடு செய்யவோ மாட்டார்கள்.

எல்லா சிறிய மற்றும் பெரிய விடயங்களில் அவர்களின் மீழுதல் குர்ஆன் மற்றும் ஸுன்னாவாகவே இருக்கும். 

إنما كان قولَ المؤمنين إذا دُعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا
{எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் "நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்" என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை} [அல்-குர்ஆன்  24 : 51 ]

2. குர்ஆன் மற்றும் ஸுன்னாவை
ஸலஃபுஸ் ஸாலிஹீன் (முன்சென்ற நல்லோர்)களுடைய புரிதலினைக் கொண்டு விளங்குவார்கள். 

குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் (அர்த்தங்களைப்) பெற்றுக்கொள்வதிலும், (அவ்விரண்டிலிருந்து) ஆதாரம் காட்டுவதிலும் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களைப் பின்பற்றுவார்கள்.

(ஒரு விடயத்தில்) ஸலஃபுகள் எவற்றைக் கொண்டு பேசினார்களோ, அவற்றைக் கொண்டே பேசுவார்கள். எவை குறித்து ஸலஃபுகள் மௌனம் காத்தார்களோ அவற்றில் மௌனம் காப்பார்கள். மேலும் ஸலஃபுகள் குர்ஆன் ஸுன்னாவை எவ்வாறு புரிந்து கொண்டார்களோ, அவ்வாறே (அதனில் மாறுதல் செய்யாமல் எடுத்துக் கொள்வார்கள்). 

والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه

{முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர்}
[ அல்-குர்ஆன் 9 : 100 ]

 قال النبي صلى الله عليه وسلم ' فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي ' 

"என்னுடைய ஸுன்னத்தையும் மேலும் குலஃபாஉ ராஃஸிதீன் அல்-மஹ்ஃதீயின் (நேர்வழிப்பெற்ற நான்கு கஃலீபாக்களுடைய) ஸுன்னத்தையும் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது" என்று நபியவர்கள் ﷺ கூறினார்கள். 

நபியவர்களின் ﷺ ஸுன்னாவை (சரியாக) நடைமுறைப்படுத்துதல் என்பது நபித்தோழர்கள் மற்றும் சிறப்புக்குரிய தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் எதன் மீது இருந்தார்களோ அதுவே ஆகும்.

3. அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக குர்ஆன் மற்றும் ஸுன்னாவை முற்படுத்துவார்கள். அவர்களின் புத்திகளில் தோன்றுபவைக்கு மேலாக (குர்ஆன் மற்றும் ஸுன்னாவை முற்படுத்துவார்கள்). ஊர் வழமைகள், சுயகருத்துகள் ஆகியவற்றிற்கு மேலாக குர்ஆன் மற்றும் ஸுன்னாவை முற்படுத்துவார்கள்.(மனிதர்கள் இயற்றும்) விதிகள் மற்றும் சட்டங்களுக்கு முன்பாக குர்ஆன் மற்றும் ஸுன்னாவை முற்படுத்துவார்கள். எல்லாவற்றிற்கும் முன்பாக குர்ஆன் மற்றும் ஸுன்னாவையே அவர்கள் முற்படுத்துவார்கள். 

 اتبعوا ما أُنزل اليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء

{(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள்}
[அல்-குர்ஆன் 7 : 3]

4. மார்க்க ஆதாரங்களை ஒன்று சேர்த்து (ஒன்றோடு ஒன்று முரண்பட்டுக்கொள்ளாதவாறு) அவற்றுக்கு மத்தியில் இணக்கம் ஏற்படுத்துவார்கள். 

 எல்லா (குர்ஆன்) வசனங்களையும், (ஆதாரப்பூர்வமான) எல்லா ஹதீஸ்களையும் எடுத்துக்கொள்வார்கள். ஒருசிலவற்றை எடுத்துக்கொண்டு மற்றசிலவற்றை கைவிடுபவர்களாகவோ, அல்லது குர்ஆனின் சில வசனங்களை மற்றவையோடு முரண்படச் செய்பவர்களாகவோ ஒருபோதும் இருக்கமாட்டார்கள். 

குர்ஆன் முழுவதையுமே எடுத்துக் கொள்வார்கள். குர்ஆன் முழுவதையும்  ஈமான் கொள்வார்கள். மார்க்கத்தில் முழமையாக நுழைந்தும் விடுவார்கள். 

5. அவர்கள் பித்அத்தை விட்டும் எச்சரிக்கையாக இருப்பார்கள், பித்அத் செய்யும் மக்களை விட்டும் எச்சரிக்கை செய்வார்கள். 

மக்கள் அஸ்ஸிராத் அல்முஸ்தகீம் (என்ற நேர்வழியின்) மீது பயணிப்பதில் நிலைபெறமாட்டர், அவர்கள் அதற்கு முரணானவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருக்காத வரை. 

 ولذا لما أخبر النبي صلى الله عليه وسلم أنه من يعش من أصحابه بعده فسيرى اختلافا كثيرا. قال ' إنه من يعش منكم بعدي اختلافا كثيرا. ' طيب . ما المخرج؟ ماذا يصنع الإنسان حينئذ؟ 

எனவே தான், நபியவர்கள் ﷺ அவர்கள், "நிச்சயமாக எனக்கு பின்பு உங்களில் வாழ்பவர் அதிகமான  கருத்துவேறுபாடுகளைக் காண்பார்" எனக் கூறினார்கள். 

சரி இதற்குத் தீர்வு தான் என்ன ? அச்சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்? 

 بيّن هذا النبي صلى الله عليه وسلم قال ' فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، ' 

அதையும் நபியவர்களே ﷺ தெளிவுபடுத்திக் கூறினார்கள்: "எனவே, என்னுடைய ஸுன்னத்தையும் மேலும் குலஃபாஉ ராஃஸிதீன் அல்-மஹ்ஃதீயின் (நேர்வழிப்பெற்ற நான்கு கஃலீபாக்களுடைய) ஸுன்னத்தையும் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது.  அவ்விரண்டையும் உங்களுடைய கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடியுங்கள்". 

தற்பொழுது இது தான் சத்தியமாகும். 

இதற்கு எதிரான (பித்அத்கள்) பற்றி என்ன (கூறினார்கள்)? அவற்றின் விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும். 

قال:وإياكم! يعني: احذروا، وإياكم! ومحدثات الأمور فإن كل محدثة بدعة. وكل بدعة ضلالة. وكل ضلالة في النار. '   

நபியவர்கள் ﷺ கூறினார்கள், "(மார்க்கத்தல்) புதுமையான விடயங்களை குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் ! ஏனெனில், நிச்சயமாக புதுமையான ஒவ்வொரு விடயமும் பித்ஃஅத்தாகும். ஒவ்வொரு பித்ஃஅத்தும் வழிகேடாகும். மேலும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் காரியமாகும் " 

எனவே பித்அத்களை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும். மேலும் பித்அத்வாதிகளை விட்டும் எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும். இதனால் மக்களின் அஸ்ஸிராத் அல் முஸ்தகீமின் மீதான பயணம் பாதுகாப்புப் பெறும். 

ஆதலால் இது தான் (இவ்வுலகில்) வழிகேட்டிலிருந்தும் பின்னர் (மறுமையில்) நரகிலிருந்தும் பாதுகாப்புப் பெற்ற ஒரே கூட்டமாகும். 

எனவே நீங்கள் அம்மக்களிலிருந்து ஒருவராக இருக்க விரும்பினால், (இங்கு குறிப்பிடப்பட்ட) இந்த அடிப்படைகளைச் சிந்திப்பது உங்கள் மீது கட்டாயக் கடமையாகும். மேலும் அவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வே உதவிதேடப்படுபவன். 

أحدث أقدم