எமது பிள்ளைகள் இளமையில் இருந்தாலும் அவர்களுக்கு திருமணத்தை இலகுபடுத்திக் கொடுப்பது மிகவும் அவசியம்.

"இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் 17, 18 வயதாக இருக்கும் போதே திருமணம் முடித்து வைக்க சொல்றீங்களா?" - சுருக்கமாக பதில் சொன்னால் "ஆம், முடிந்தால் அதற்கும் முன்னரே"
 ‍‍
ஹலாலை இலகுபடுத்துவதைக் கொண்டு தேவையில்லாமல் ஹராத்தில் விழுவதை விட்டும் தவிர்க்கலாம்.
 ‍‍
பத்துகளிலும் ஆரம்ப இருபதுகளிலும் இருக்கும் இளைஞர்களின் பொறுப்பில் ஒப்படைப்பது மிகவும் பாரதூரமாக தோன்றலாம், ஆனால் யதார்த்த வாழ்க்கை என்னவெனில் நாம் எதில் அவர்களை ஈடுபடுத்துகிறோமா அதன் அடிப்படையில்தான் அவர்களது முதிர்ச்சி நிலை வெளிப்படுகிறது. நாம் அவர்களை சிறு பிள்ளைகள்தானே என்று  விளையாட்டுகளிலும் கேளிக்கை கூத்துகளிலும் பாவங்களிலும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட விட்டிருக்கிறோம். ஒரு சில பொறுப்புகளை கொடுத்து சில வேலைகளை கொடுத்து அவர்களை பொறுப்பு உணர்வுக்கு பழக்கியதில்லை. எனவே அவர்கள் கேளிக்கையிலும் பாவங்களிலும் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சிரயம்?
 ‍‍
அப்படியே விவாகரத்தில் வந்து நின்றாலும், விபச்சாரத்தை விட விவாகரத்து சிறந்தது! அதே நேரம் சிறு வயதில் திருமணம் முடித்துக் கொண்டவர்கள் சிறந்த முறையில் வாழ்க்கையை கொண்டு சென்றதே வரலாற்றில் அதிகம். 
 ‍‍
ஆபாசம் விரல் நுனியில் இருக்கும் ஒரு சூழலில் இருக்கிறோம், குறுஞ்செய்தி மற்றும் செக்ஸ்டிங் செய்வது முன்னெப்போதையும் விட எளிதாகவும், காதலன்-காதலி உறவுகள் கலாச்சார நெறியாகவும் இருக்கும் போது பட்டபடிப்புகளும் BMWகளும் எமது எதிர்பார்புகளில் கடைசியாக தான் இருக்க வேண்டும்.
 ‍‍
ஹராம் எந்தளவு இலகுவாக விரல் நுனிகளில் அடையதக்கதாக இருக்குதோ அதே அளவு அடையதக்கதாக திருமணமும் இருக்கவேண்டும்.
 ‍‍
- Hamdhan Hyrullah, Paragahadeniya


இன்று சில இஸ்லாமிய சட்டங்கள் முஸ்லிம்களில் சிலருக்க சங்கடமாகத் தெரிவதற்குக் காரணம் தற்காலத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு தவறான சிஸ்டங்களே. 

எனவே நாம் இஸ்லாத்தைக் குறைகாணாமல் நமது தவறுகளைத் திருத்துவதற்கு முயல வேண்டும்.

உதாரணமாக 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்தல்

இஸ்லாம் இதனை அனுமதிப்பதை பெரும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் அதற்கு முன்னர் பிள்ளைகள் முதிர்ச்சியடையவில்லை என்பதாகும். 

ஆம், உண்மைதான் ஆனால் 18 வயதில் முதிர்ச்சியடையாமைக்குக் காரணம் நாமா அல்லது அவர்களின் இயல்பா என்று பார்த்தால் நமது கல்விமுறைமையும் பிள்ளை வளர்ப்புமே அதற்குக் காரணமாகும். 

இல்லாவிட்டால் அண்மைய காலம் வரை நமது முன்னோர்கள் சிறுவயதிலே திருமணம் செய்வது சர்வசாதாரண விடயமாகவே காணப்பட்டது.

ஆனால் தற்போதைய முதலாளித்துவ பொருளாதார முறைமையில் மனிதர்களை வைத்து உழைப்பதற்காக வேண்டியென்றே உருவாக்கப்பட்ட கல்வி முறை மற்றும் தொழில் முறையினால் நமது பிள்ளைகளை பணம் கறக்கும் கருவிகளாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்கின்றோமே அன்றி எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்பிப்பதில்லை.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
Previous Post Next Post