சஅத் பின் முஆத்رضي الله عنه அவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது

நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:
சஅத் பின் முஆத்رضي الله عنهஅவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது.

இதை ஜாபிர் رضي الله عنهஅவர்கள் அறிவித்தார்கள்.

ஜாபிர் رضي الله عنهஅவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:

ஒரு மனிதர் ஜாபிர் رضي الله عنهஅவர்களிடம், “பராஉ رضي الله عنه அவர்கள், “சஅத் பின் *முஆத் رضي الله *عنهஅவர்களைச் சுமந்து* *சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்*” *என்று சொன்னதற்கு ஜாபிர் رضي الله عنهஅவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன*. *நபி صلى الله عليه وسلم அவர்கள், “சஅத் பின் முஆத்رضي الله عنه அவர்களின் இறப்பிற்காக அளவில்லா கருணையாளனின் அரியணை அசைந்தது*' *என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்*.*நூல் ஸஹீஹுல் புஹாரி 3803*

விளக்கம்:

இந்த நபி மொழி சஅத்رضي الله عنه அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியாகும் மறுக்க முடியாத அளவிற்கு முதவாத்திரான தரத்துடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை ஸஹாபாக்களில் ஜாபிர்رضي الله عنه
,அனஸ்رضي الله عنهஉஸைத் பின் ஹுளைர்رضي الله عنهஇப்னு உமர்رضي الله عنهஅபு ஸஈதுرضي الله عنهஆயிஷா رضي الله عنها இன்னும் பலரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் தஹபி  رحمه الله அவர்கள் கூறினார்கள் இது முதவாத்திரான ஹதீஸாகும் இதை அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் தான் கூறினார்கள் என்று நான் சான்றளிக்கிறேன்.அல் உலுவ்வுலிஅலீயில் கஃப்ஃபார் 89

மேற்கூறிய ஹதீஸின் விளக்கமாக ஃபவாயிதுத் தமாம் என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்;  மேன்மையும் மகத்துவமும் மிக்க றப்பின் மகிழ்ச்சியால்  சஅத் رضي الله عنهஅவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது.அறிவிப்பாளர் அபு ஸஈதுல் குத்ரிرضي الله عنهநூல்:ஃபவாயிதுத் தமாம்16 இமாம் அல்பானி رحمه الله அவர்கள் இந்த அறிவிப்பை சரியான ஸனது என்று கூறியுள்ளார்கள் ஸில்ஸிலது ஸஹீஹா1288
இமாம் ஹஸனுல் பஸரி رحمه الله  அவர்கள் கூறியதாக சஅதுرضي الله عنه அவர்களின் ஜனாஸாவிற்காக அர்ரஹ்மானின் அர்ஷு அசைந்தது என்பதற்கு விளக்கமாக அவரை வரவேற்கும் மகிழ்ச்சியில் அசைந்தது என்று கூறினார்கள் .அஸ்ஸுன்னா இமாம் அப்துள்ளாஹ் பின் அஹ்மத் 1058

அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்தான் என்பதை நாம் நம்பிக்கை கொள்வதைப்போன்று சஅது அவர்களின் மரணத்திற்காக அர்ஷு அசைந்தது என்பதையும் நம்பிக்கைக்கொள்வோம்.

உஹது மலையின் மீது அல்லாஹ்வின் தூதரும், அபூபக்கரும், உமரும் இருக்கும் போது உஹது அசைந்தது இன்னும் உஹது நம்மை நேசிக்கும் மலை என்றும் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள் .

-உஸ்தாத்.M. பஷீர் ஃபிர்தௌஸி
أحدث أقدم