LGBT COMMUNITY Vs ISLAMIC NATION
ஓரினச்சேர்க்கை சமுதாயம் Vs இஸ்லாமிய சமூகம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-Mohamed Ismail Nadwi
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் இயற்கைக்கு முரணான இந்த கருத்துக்கள், 'எந்த மதத்தினரும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று' என்பது, இந்தச் செய்தியைப் படிக்கும் அனைவரின் மனோ நிலையையும், நமக்கு படம் பிடித்து காட்டுகிறது
ஏன் இந்த சமூக அவல நிலை ?
இது சர்வதேசமயமாக்கல் (Globalization- عولمة) கொள்கையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.
மனிதன் தன்னைப் படைத்த இறைவனை மறந்து, தான்தோன்றித்தனமாக மனோ இச்சைகளை பின்பற்ற தொடங்கியதால் ஏற்பட்ட விளைவே இது.
இந்த அருவருப்பான முகம் சுளிக்க வைக்கும் செயல்களை, இன்று புத்தி பேதலித்து போன சிலரால் நியாயப்படுத்தப்படுகிறது.
திண்ணமாகவே, இது சமூக பேரழிவை நம் கண் முன்னே கொண்டு வருகிறது.
'மறுமை நாள் வெகு தூரமில்லை' என்பதையும் நமக்கு உணர்த்துகிறது,
பாவங்களை தவறுதலாக செய்து, அதன் குற்ற உணர்ச்சி, அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று, பின்னர் அதையே - குற்றமற்ற செயல் - என்று கூறும் அளவுக்கு, இந்த நவீன சமூகம்
அதல பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டது.
இது குறித்து, பிபிசி தமிழ் இணையதளத்தில் பெற்ற தகவல்களை முதலில் காண்போம் வாருங்கள் ........
'ஒருபாலுறவு இனிமேல் குற்றமில்லை' என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புச் செய்தி வெளியானதும், அங்கு கூடியிருந்த ஒருபாலுறவுக்காரர்கள் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கான செயல்பாட்டாளர்கள் உரக்கக் குரல் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தின்போது, 1861இல் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், உடலுறவு கொள்ளும் 'ஒருபாலுறவு' குற்றமாக்கப்பட்டது.
"இயற்கையின் விதிகளுக்கு மாறாக, ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள், ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது.
விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அமலில் உள்ளது.
அக்டோபர் 2017ஆம் தேதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது . பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.
இந்த சமூக அவல நிலை மாறி, நமது சமூகத்தின் இளம்தலையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் -
நாம் முதலில் என்ன செய்ய வேண்டும் ?
1) முதலில் இஸ்லாமிய அறிஞர்கள், சங்கையான இமாம்கள், ஒருபால் உறவின் விபரீதங்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்கள் மன்றத்தில் விரைந்து நடத்தி, இந்த இழிவான செயல்களுக்கு மார்க்கம் வழங்கி இருக்கிற கடுமையான தண்டனைகளையும் , 'மறுமையில் அல்லாஹ் தஆலா விடம் இது பற்றி கேள்வி கணக்கு கேட்கப்படுவோம்' என்ற சிந்தனை அதிர்வலைகளை முதன்மையாக ஏற்படுத்த வேண்டும்
2) ஆண் , பெண் விடுதிகளை முறையாக கண்காணித்து இஸ்லாமிய விழுமியங்கள் சார்ந்த வழி காட்டல்கள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, குருகுல முறையில் கல்வி பயிலும்(residential Schools) பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ,கல்வி நிலையங்கள் மிகவும் கவனத்துடன் அவதானிக்கப்பட வேண்டும்.
3) இன்றைய இளைஞர்கள் தான், நாளைய முதியவர்கள் எனவே இறையச்சத்தை ஏற்படுத்துகிற இன்னும் இறைச் சிந்தனைகளை விதைக்கும் அமர்வுகள் (Ritual counseling ) மூலம்
இஸ்லாமிய எழுச்சிகளை மேற்கொள்ளலாம்.
4) வாலிப வயதை எட்டிய பொருளாதார, உடல் ஆரோக்கியமிக்க இருபாலர்களின் பால், உணர்வுகளை நெறிப்படுத்தும் ஹலாலான திருமணங்களை, தாமதமின்றி ஊக்குவிக்க வேண்டும்
5) இலைமறை - காய்மறையாக இருந்த ஓர் பால் உறவுகள், இன்று வீதிக்கு வருவதற்கு காரணிகளான, நவீன குறும்படங்கள் - இன்னும் சமூக வலைதளங்களின் பங்கீட்டை உணர்த்தும் நல்ல கருத்துக்கள் பொதிந்த ஆவணப்படங்கள் இயக்கப்பட்டு, PPT போன்ற நவீன கல்வி முறைகள் பயன் படுத்தப்பட்டு, கல்வி கலா பீடங்களில் காட்சிகளாக காட்டப்பட வேண்டும்.
இது இளம் தலைமுறையினர்களிடத்தில், நேர் மறையான சிந்தனைகளை தூண்டி, ஓரினச்சேர்க்கை போன்ற எதிர் மறை சிந்தனைகளை தவிர்க்கும்.
5) அல்குர்ஆனின் தொடர்பை நமது சமுதாயத்திற்கு அதிகமாக ஏற்படுத்த, முறையாக மார்க்கம் கற்ற அழைப்பார்கள், கொஞ்சம் கொஞ்சமாக - தங்களின் மனிதத்தை தொலைத்து கொண்டிருக்கும் அப்பாவி சமூகத்தை பாதுகாக்க, தங்களின் நேரங்களை வழங்க முன் வர வேண்டும் .
6) அல்குர்ஆனை வேத ஆகமங்களாக மட்டும் அணுகாமல், பொருள் அறிந்து ஒதப்பட்டு, நமது அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் - ஒரு வாழ்வின் - நெறிமுறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
Actions speaks louder !!
اِنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ بَلْ اَنْـتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ
"பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:81)