அறிமுகம் :
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் தோன்றிய நெறிதவறிய இயக்கங்களில் ஷீஆக்கள் பிரதானமானவர்கள்.
'ஷிஆ' என்ற அரபுப்பதம் அடிப்படையில் பின்பற்றுபவர்கள், உதவியாளாகள் போன்ற கருத்தைக் குறிக்கின்றது. பிரிவு, கூட்டம், உதவியாளர், ஒன்றைப் போன்றது ஆகிய கருத்துக்களில் இச்சொல் அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டூள்ளது.
'ஷீஆக்கள்' என்றால் யார்? என்று வரைவிலக்கணப்படுத்துவதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேற்றுமை உள்ளது. அதில் மிக வலுவானதாகப் பின்வரும் கூற்றை எடுக்கலாம் : “ஷீஆ என்பது, ஏனைய கலீபாக்களைவிட அலீ (ரலி) அவர்களை மேம்படுத்தி, நபியவர்களின் குடும்பத்தின் (அஹ்லுல் பைத்தினர்)தான் ஆட்சிக்குத் தகுதியானவாகள் என்பதுடன் ஏனைய ஆட்சிகளெல்லாம் செல்லுபடியற்றவை என்று கருதும் ஒவ்வொருவரும் ஷீஆவே.
தோற்றமும் வளர்ச்சியும் :
ஹிஜ்ரி 36ல் நடைபெற்ற ஸிப்ஃபீன் போரைத் தொடர்ந்து ஒரு புறம் கவாரிஜ்கள் அலீ (ரலி) அவாகளுக்கெதிராக வெளிநடப்புச் செய்தபோது, மறுபுறம் அவர்களுக்கு சார்பாக பக்கபலமாக இருந்தவர்களே பிற்காலத்தில் ஷீஆக்களாக அறியப்பட்டனர்.
எனவே ஷீஆக்கள் ஹிஜ்ரி 35, 36களில் கூபாவில் தோன்றியுள்ளன.
யமன் நாட்டிலிருந்து இஸ்லாமியப் போர்வையில் மதீனா வந்த அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனே இவ்வியக்கம் தோன்ற பிரதான காரணமாகும்.
உஸ்மான் (ரலி) அவாகளின் படுகொலை தொடக்கம் ஷீஆக்களின் அனைத்து வழிகெட்ட சிந்தனைகளுக்கும் சொந்தக்காரன் இவனென்றால் அது மிகையாது.
ஆரம்பத்தில் அரசியல் நோக்கில் அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவளித்த இவர்கள் அடுத்தகட்டமாக ஏனைய 3 கலீபாக்களைவிட அலீ (ரலி, அவர்களை மேம்படுத்தும் நிலைக்குச் சென்றனர். இதனை அலீ (ரலி) அவர்களே கண்டித்துள்ளார்கள். அதன்பின் அப்துல்லாஹ் பின் ஸபஃவின் விசக்கருத்துக்கள் ஷீஆக்களிடையே பரவ ஆரம்பித்தது. ஸஹாபாக்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோரைத் தூற்றவும், காபிராக்கவும் ஆரம்பித்து, இறுதிக்கட்டமாக அலீ (ரலி) அவர்களைக் கடவுளாக்கும் நிலைக்கே சென்று இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலைக்குச் சென்றுவிட்டார்கள். இக்கருத்துடைய பலரை அலீ (ரலி) அவர்கள் தண்டனை கொடுத்துக் கொலை செய்தார்கள்.
ஷீஆக்களின் பெயர்கள் :
1. ஷீஆ : இப்பெயர் கொண்டே அவா்கள் பிரபலமடைந்துள்ளனர். இதில் அவர்களுடைய அனைத்துப் பிரிவும் உள்ளடங்கும்.
2. ஸைதிய்யா : ஹுஸைன் (ரலி) அவர்களின் பேரப்பிள்ளையான ஸைத் பின் அலீயைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இப்பெயர் வந்தது.
3. ராபிழா : மேற்கண்ட ஸைத் பின் அலீ 'கலீபாக்களைத் திட்ட வேண்டாம்' என்று விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் ராபிழா என்ற பெயர் உருவானது.
ஷீஆக்களின் பிரிவுகள் :
ஷீஆக்கள் பல பிரிவினா்களாகப் பிரிந்துள்ளனார். சில அறிஞாகள் இவர்கள் 70 பிரிவினராக உள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அப்பிரிவுகளை ஆய்வு செய்து பார்க்கும் போது அனைத்துப் பிரிவுகளும் ஒரே தரத்திலில்லையென்பது புலனாகின்றது. அதிக தாக்கம் செலுத்தும் பிரதான 3 பிரிவுகளை இங்கு சற்று அலசுவோம்.
1. அஸ்ஸபஇய்யா :
அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனைப் பின்துயர்ந்தவர்களே ஸபஇய்யாக்கள் எனப்படுகின்றனர். அஹ்லுல் பைத்தினர் மீது கொண்ட போலியான நேசத்தை தனது விசக்கருத்துக்களை விதைக்க ஆயுதமாகப் பயன்படுத்தினான். ஹிஜாஸ் மாகாணம் (மக்கா, மதீனா, ஜித்தா, தாஇப்) மற்றும் பஸரா, கூபா, ஸிரியா, எகிப்து போன்ற பகுதிகளில் உஸ்மான் (ரலி) அவா்களுக்கெதிரான கருத்துக்களை பரத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தி அவர்கள் அறியாயமாகக் கொலை செய்யப்படக் காரணமாயிருந்தான்.
அலீ (ரலி) அவர்கள்தான் ஆட்சிக்கென நபியவர்களால் வஸிய்யத் செய்யப்பட்டவரென்றும், அவர்கள் மறுபிறவியெடுத்து வருவார்களென்றும், அவர்களிடம்
கடவுள்த்தன்மை இருப்பதாகவும், அவர்கள் கொலை செய்யப்படவில்லை, மாறாக வானிற்கு ஏறியுள்ளார்களென்றும் வாதாடிக் கொண்டிருந்தான். இந்த ஸபஇய்யாக்களின் கருத்துக்களுக்கும் அஹ்லுல்பைத்தினருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைச் செவியுற்ற அலீ (ரலி) அவர்கள்கூட அக்கூட்டத்தினருக்குத் தண்டனை வழங்கினார்கள்.
2. ஸைதிய்யாக்கள் :
ஹுஸைன் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஸைனுல் ஆப்தீன் அலீ பின் ஹுஸைன். அவர்களுடைய காலத்தில் ஷீஆக்கள் அஹ்லுல்பைத் விடயத்தில் அளவுகடந்து செல்ல ஆரம்பித்தனர். இவர்கள் அதனைக் கண்டிக்கும் போக்கைக் கொண்டிருந்தனர். இந்த அலீ பின் ஹுஸைனுக்குப் பல குழந்தைகள் உள்ளனர்.
அவர்களில் ஸைத், முஹம்மத், உமர் போன்றவர்கள் பிரபலமானவர்கள். ஸைனுல் ஆப்தீனுக்குப் பின் இமாமத்திற்குத் தகுதியாகனவர் யார்? ஸைத்தா ? அல்லது முஹம்மதா? என்பதில் ஷீஆக்கள் மத்தியில் பிரச்சினை உருவானது. ஒரு பிரிவினர் ஸைத் பின் அலீதான் தகுதியானவர் என்று ஒரு கூட்டாத்தார் வாதாடினர். அவாகள்தான் ஸைதிய்யாக்கள்.
யமன் நாட்டிலே இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
இப்பிரிவின் ஆரம்பத்தவா்கள் ஸஹாபாக்களைத் தூற்றாமல் நடுநிலை வகித்தார்கள். அதனால் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு மிக நெருக்கமான ஷ்ஆப் பிரிவு இந்த ஸைதிய்யாக்கள் என்று சில அறிஞாகள் எழுதி வைத்திருந்தனர். ஆனால் தற்காலத்திலுள்ள ஸைதிய்யாக்கள் நிலைமாறி ராபிழாக்களுடைய கொள்கையையே ஸஹாபாக்கள் விடயத்தில் கடைபிடிக்கின்றனர்.
3. ராபிழாக்கள் :
‘ரஃப்ழ்' என்ற அரபு மூலச்சொல்லிலிருந்தே ராபிழா' என்ற பெயர் உருவானது.
ரஃப்ழ் என்றால் ஒன்றை விட்டுவிடுதல், புறக்கணித்தல் என்பதாகும். “அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) உட்பட பெரும்பான்மையான ஸஹாபாக்களை மறுத்து, கிலாபத் நபியவ்களுடைய வஸிய்யத் பிரகாரம் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் வம்சத்தினருக்கும்தான் அமைய வேண்டும், ஏனையோருடைய கிலாபத் செல்லுபடியற்றது” என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களே ராபிழாக்கள் எனப்படுகின்றனர்.
இஸ்னாஅஷரிய்யாக்கள் :
ராபிழாக்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து சென்றனர். அவர்களில் பிரதானமானவர்களும், தற்காலத்தில் பெரும்பான்மை ஷீஆக்களாகவும் இருப்பவர்கள் 12 இமாம்களை முதன்மைப்படுத்தும் இஸ்னாஅஷரிய்யாக்களாகும். ஈரான், இராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் ஷீஆக்கள் இப்பிரிவினரே. இந்தியா இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் நாடுகளில்கூட இவர்களுடைய ஊடுருவல் உள்ளது. அவர்கள் முதன்மைப்படுத்தும் அந்த 12 இமாம்களும் பின்வருமாறு :
1. அலீ பின் அபீதாலிப் (ரலி).
2. ஹஸன் பின் அலீ (ரலி).
3. ஹுஸைன் பின் அலீ (ரலி).
4. அலீ பின் ஹுஸைன் பின் அலீ.
5. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் அல்பாகிர்.
6. ஜஃபர் பின் முஹம்மத் பின் ஹுஸைன் அஸ்ஸாதிக். 7. மூஸா பின் ஜஃபர் அல்காழிம்.
8. அலீ பின் மூஸா அர்ரிழா.
9. முஹம்மத் பின் அலீ அல்ஜவாத்.
10. அலீ பின் முஹம்மத் அல்ஹாதீ.
11. ஹஸன் பின் அலீ அல்அஸ்கரீ.
12. முஹம்மத் பின் ஹஸன் அல்அஸ்கரீ. (இவர்தான் மறைந்து வாழும் எதிர்பார்க்கப் படக்கூடிய அவர்களின் மஹ்தி). இந்த இஸ்னாஅஷரிய்யாக்களுக்கு ஜஃபரிய்யா, இமாமிய்யா, ராபிழா போன்ற வேறு பெயர்களும் உள்ளன.
ஷீஆக்களின் அடிப்படைக் கொள்கை :
ஷீஆக்களின் அகீதாவைப் பொருத்தவரை பல விதமான விநோதமான நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் நிரம்பியிருக்கின்றன. அவையனைத்தையும் இங்கு விவரிக்க இடம்கொடுக்கமாட்டாது. எனவே முக்கியமான சில அடிப்படைக் கொள்கைகளை இங்கு சுருக்கமாகக் கூறுகின்றேன்.
1. கிலாபத்தும் இமாமத்தும் :
ஷீஆக்களின் பிரதான கோட்பாடே இந்த கிலாபத்துதான். இமாமத்தை அவா்கள் இஸ்லாத்தின் அடிப்படை ருகூன்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். நபிமார்கள் ரஸுல்மார்களைப் போன்று இமாம்களையும் அல்லாஹ்வே தெரிவு செய்கின்றான். அவா்களுக்கு அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்புள்ளது. அவர்களை நம்புவது ஈமானின் ஒரு பகுதி போன்ற கருத்துக்களைக் கொண்டுள்ளதுடன், அல்குர்ஆனின் பல வசனங்களை இவர்களது இமாம்களுக்கு சார்பாக வளைத்துள்ளனர்.
2. இமாம்கள் தவறைவிட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் :
சிறிய பாவங்களோ, பெரிய பாவங்களோ, தவறுதலாகவோ, மறதியாகவோ பிறந்ததிலிருந்து மரணிக்கும்வரை அவா்களுடைய இமாம்கள் செய்ய மாட்டார்கள். அதனை விட்டும் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது ஷீ்ஆக்களுடைய அடிப்படைக் கொள்கை. அவர்களுடைய இமாம்கள் நபிமார்களைவிடச் சிறந்தவர்கள், மறைவான அறிவு பெற்றவர்கள் போன்ற கருத்துக்களையும் இமாம்கள் விஷயத்தில் நம்புகின்றனர்.
3. நடிப்பு (தகிய்யா) :
இது ஷீஆக்கள் தமது தீய கருத்துக்களை சமூகத்தில் வெளிவராமல் முன்னெச்சரிக்கையாக மறைத்துக் கொள்வதைக் குறிக்கின்றது. பெரும்பான்மை ஷீஆக்கள் தம்மை ஷீஆவெனக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
4. எதிர்பார்க்கப்படும் மஹ்தீ :
அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஸஹீஹான நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள மஹ்தீ (அலை) அவா்கள் பற்றிய செய்திகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஷஆக்கள் கூறும் மஹ்தி இவரல்ல. அவர்களுடைய 12வது இமாமாகிய முஹம்மத் பின் ஹஸன் அல்அஸ்கரீ என்பவரே ஷீஆக்கள் எதாா்பார்க்கும் மஹ்தி.
அவர்களின் நம்பிக்கைப் பிரகாரம் இவர் ஹி.260களில் மறைந்து ஒளித்துக் கொண்டிருக்கின்றார். மீண்டும் திரும்பி வந்து நீதியை நிலைநாட்டுவாரென்பது இவர்களின் நம்பிக்கை.
5. அல்குர்ஆன் பற்றிய ஷீஆக்களின் நிலைப்பாடு :
தற்போதுள்ள அல்குர்ஆன் முழுமையற்றது, திரிபுகளும் குறைபாடுகளுமுள்ளது, அலீ (ரலி) மற்றும் அஹ்லுல் பைத்தினர் பற்றி அருளப்பட்ட வசனங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. தற்போதிருக்கும் அல்குர்ஆனின் மூன்று மடங்கு பெரியதுதான் உண்மையான அல்குர்ஆன். அதன் பெயர் ‘முஸ்ஹபு பாத்திமா' என்பதாகும். அதன் மூலப்பிரதி தாம் எதிர்பாரத்திருக்கும் மஹ்தீயிடம்தானுள்ளது என்பதுதான் ஷீஆக்களின் அல்குர்ஆன் பற்றிய நம்பிக்கை. அத்துடன் தற்போதுள்ள அல்குர்ஆனின் பல வசனங்களைத் தமக்கு சார்பாக மாற்றிக் கொண்டுள்ளதுடன், மேலதிகமாக பல வசனங்களையும் அத்தியாயங்களையும் அதிகரித்துள்ளனர். அதில் முக்கியமானதுதான் “ஸுரதுல் விலாயா” என்பது.
6. ஸஹாபாக்கள் பற்றிய நிலைப்பாடு :
ஸஹாபாக்கள் விடயத்தில் ஷீஆக்கள் வரம்பு மீறியே நடந்து கொள்கின்றனர். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட முப்பெரும் கலீபாக்கள் உட்பட பெரும்பான்மையான ஸஹாபாக்கள் இவர்களின் பார்வையில் மதம்மாறியவா்கள். நபியவர்களின் அன்பு மனைவி முஃமின்களின் அன்னையான ஆஇஷா (ரலி) அவர்களுக்கும் படுதாறு கூறித்திரிகின்றனர். அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகிய இருவரையும் குரைஷிகளின் இரு சிலைகள் என்கின்றனர்.
7. விதியில் நெறிபிறழ்ந்த ஷீஆக்கள் :
ஒரு செயல் நடக்கும் வரை அதுபற்றி அல்லாஹ்வுக்குத் தெரியாது என்பது ஷீஆக்களின் மற்றுமொரு கொள்கை. இதனை அரபியில் “அல் பதா” என்பர்.
இப்பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு முன்னரே அல்லாஹ் மறுமை வரை நடக்கவிருக்கின்ற அனைத்தையும் அறிவான் என்பதே அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கை. இதில் ஷீஆக்கள் மாறுபடுகின்றன.
ஷீஆக்கள் பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு :
முன்சென்ற காலத்திலும்தான் தற்காலத்திலும்தான் பொதுவாக அனைத்து ஷீஆக்களும் பொரும்பாலும் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளனர். அஹ்லுஸ்ஸுன்னத்தினா் ஷீஆக்கள் விடயத்தில் பின்வரும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனா :
1. அனைத்து ஷீஆக்களும் ஒரே தரத்திலில்லை. இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் கருத்துக்களைக் கொண்டவர்களும் உள்ளனார். அதனைவிடக் குறைவாக பித்அத்வாதியாகக் கணிக்கப்படக்கூடியவர்களும் உளர்.
2. தனிநபருக்குத் தப்புச் செய்ய முன் அதன் வரையறைகளைக் கருத்திற்கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. பொதுவாக அனைத்து ஷீஆக்களும் சத்தியத்தை விட்டும் தூரமாகிய வழிகெட்ட பாவிகள் என்பதில் எவ்வித ஐயமும் அஹ்லுஸ்ஸுன்னாக்களிடத்தில் இல்லை.
4. அல்குர்ஆன் மாற்றப்பட்டுதென்றோ, தமது இமாம்கள் நபிமார்களை விடச் சிறந்தவர்களென்றோ, அவர்கள் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்றோ, ஸஹாபாக்களைக் காபிர்களென்றோ, அல்லாஹ்வுக்கு ஒரு விடயம் நடைபெறும்வரை அதுபற்றித் தெரியாதென்றோ நம்பிக்கை கொண்டால், அதுபற்றித் தெளிவபடுத்தப்பட்ட பின்பும் இக்கொள்கையிலேயே பிடிவாதமாக இருந்தால் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளிப்பட்டவர்கள் என்பதே அஹ்லஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடாகும்.