தஜ்ஜால்

1) தஜ்ஜால் இப்போது எங்கே வாழ்கிறான்? 

அவன் நமக்குத் தெரியாத கடலிலுள்ள ஒரு தீவில் வசிக்கிறான்.

2) தஜ்ஜால் வெளியேறியதன் பின் எத்தனை நாட்கள் வாழ்வான்? 

40 நாட்கள்.

3) இந்த நாட்களின் நீளம் எத்தனை?

தஜ்ஜால் வெளியேறும் முதல் நாள் ஒரு வருடம் போன்றும் இரண்டாம் நாள் ஒரு மாதம் போன்றும் மூன்றாம் நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரான நாட்களைப் போன்றும் இருக்கும். 

4) தஜ்ஜாலிடம் என்ன என்ன விடயங்கள் காணப்படும்?

அவனுடன் ஒரு சுவர்க்கமும் ஒரு நரகமும் அல்லது அவனுடன் இரண்டு ஆறுகள், குளிர்ந்த நீருடன் ஒரு நதி மற்றும் கொதிக்கும் நீருடன் ஒரு நதி இருக்கும். 

5) அவனிடம் இருக்கும் நரகமும் சுவர்க்கமும் உண்மையானதா? 

இல்லை, ஆனால் அவனது சுவர்க்கம் நரகமாகும், அவனது நரகம் சுவர்க்கமாகும். 

6) பூமியில் தஜ்ஜாலின் வேகம் என்ன?

காற்றின் வேகம் போன்ற மிக வேகத்தில் நடப்பது, அதன் வேகம் மழை போன்றது. அதாவது காற்றினால் விரட்டப்படும் மழை போன்றது என நபிகளார் தெளிபடுத்தினார்கள். 

7) தஜ்ஜாலின் திறமை என்ன?

அல்லாஹ் அவனுக்கு அற்புதமான சில திறமைகளைக் கொடுப்பான். வானத்திற்கு மழை பொழிவிக்குமாறு கட்டளையிட்டால் அது மழை பொழியும். பூமிக்கு துளிர்த்து செடி முளைக்க கட்டளையிட்டால் அது முளைக்கச் செய்யும். அதனுடைய பொhக்கிஷங்களை வெளியேற்றுமாறு கட்டளையிட்டால் அது தங்கம், வெள்ளி போன்றவைகளை வெளியேற்றும். 

8) தஜ்ஜால் நுழையாத இடங்கள் எவை?

அவனால் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு புனித நகரங்களுக்கும் நுழையமுடியாது. அதன் வாயில்களில் மலக்குமார்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். 

9) தஜ்ஜாலின் தோற்றம் என்ன?

அவன் ஒற்றைக் கண் அல்லது ஒரு கண் துடைக்கப்பட்டவன் அதாவது ஒரு கண்ணால் மாத்திரம் தான் அவன் பார்ப்பான். மேலும் அவனுடைய இரு கண்களுக்கும் மத்தியில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும். அதனை படிக்கத் தெரிந்த தெரியாத ஒவ்வொரு முஃமின்களும் வாசிப்பார்கள்.

10) தஜ்ஜாலை யார் கொலை செய்வார்கள்?

ஈஸா (அலை) அவர்கள் அவனைக் கொலை செய்வார்கள். அவரை தஜ்ஜால் கண்டால் தண்ணீரில் உப்பு கரைவதைப் போல கரைய ஆரம்பிப்பான். அப்போது ஈஸா (அலை) அவர்கள் ஒரு ஈட்டியால் அவனைக் குத்தி கொலை செய்வார்கள்.

11) தஜ்ஜாலை விட பெரிய ஒரு பித்னா இருக்கின்றதா?

இல்லை, ஆதம் (அலை) அவர்களுடைய காலம் முதல் மறுமை நாள் வரை தஜ்ஜாலை விட மிகப் பெரிய எந்த ஒரு பித்னாவும் இல்லை என நபிகளார் கூறினார்கள்.

12) தஜ்ஜாலைப் பின்பற்றுபவர் யாராவது இருப்பார்களா?

ஆம், அவனை அஸ்பஹானைச் சேர்ந்த 70 ஆயிரம் யஹுதிகள் பின்பற்றுவார்கள். அஸ்பஹான் என்பது தற்போது ஈரானில் உள்ள ஓர் இடமாகும். மேலும் அவனை முனாபிக்களும் பின்பற்றுவார்கள். பெரும்பாலான பெண்களும் அவனைப் பின்பற்றுவார்கள். அதனால் ஆண்கள் வீட்டினுள் நுழைந்து பெண்கள் தஜ்ஜாலிடம் செல்லாமலிருப்பதற்காக கட்டி வைப்பார்கள். மேலும் சில மனிதர்கள் தஜ்ஜாலைப் பற்றி மக்களுக்கு எச்சரிப்பதற்காக அவனிடம் வந்து அவனுடைய பேச்சுக்களைக் கேட்டு இஸ்லாத்தை விட்டு விட்டு அவனைப் பின்பற்றுவார்கள். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் அவனைக் கண்டால் விரண்டோடுமாறு ஏவினார்கள்.

13) நாங்கள் எப்படி தஜ்ஜாலிடமிருந்து தப்பிப்பிழைப்பது?

சூறதுல் கஹ்ப் உடைய முதல் 10 வசனங்களை மனனம் செய்வதன் மூலமும் ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுப்பதற்கு முன் தஜ்ஜாலுடைய பித்னாவை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம். 

இந்த ஒவ்வொரு விடைகளும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தரிப்பட்டுள்ளன. 

இதைப் படித்து விட்டு ஏனையவர்களுக்கும் அனுப்ப தவறாதீர்கள்.

இறைவா தஜ்ஜாலின் பித்னாவை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம். 

தமிழாக்கம்
மௌலவிய்யா ஹப்ஸா பின்த் அக்ரம்
பைத்துல் ஹிக்மா வளாகம்
Previous Post Next Post