யார் இந்த இஹ்வான்கள்?

இஸ்லாம் தடுத்துள்ள சகோதர படுகொலைகளை ஆகுமாக்கிக் கொண்ட, சதிவலைகள், அரசியல் படுகொலைகள், வன்முறைக் கலாச்சாரம் போன்றவற்றை ஹலாலாக்கிக் கொண்டு தங்களை இஸ்லாமிய இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இதுவரை மில்லியன் கணக்கான தம் இன முஸ்லிம்களையே கொன்று குவிப்பதற்கு காரணமான ஓர் இயக்கத்தைப் பற்றி அறிவீர்களா?

அதுதான் இஹ்வானுல் முஸ்லிமீன்.

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லீம்களை ஹஸனுல் பன்னா ஸ்தாபித்தார். "இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே"; இவர்களின் இலட்சியம் என்று கூறிக் கொண்டாலும், உண்மையில் அவர்களது இலட்சியம் ஆட்சியைப் பிடிப்பதாகும்.

இவர்களின் பிரச்சாரத்தையும் செயல்பாட்டையும் கவனித்தால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் பாடுபடவில்லை. தங்களை ஆட்சியாளர்களாக ஆக்கிக்கொள்ள மார்க்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என்பதை அறியலாம்.

குர்ஆன் ஹதீஸில் ஆட்சி அதிகாரம் பற்றி வரும் வசனங்களை மட்டும் படிப்பார்கள். இதைத் தங்களுடைய கொள்கைக்கு ஆதாரங்களாகக் கூறிக் கொள்வார்கள்.

வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களிடத்தில் கூட இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

இவர்கள் மக்களிடம் இஸ்லாத்தைக் காட்டி ஓட்டுக் கேட்பதால் கேவலத்தில் மற்ற அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டனர். அதுமட்டுமில்லாமல் எகிப்திலும், சிரியாவிலும், லிபியாவிலும், டியூனீஸியாவிலும், பலஸ்தீனிலும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களை தங்களின் அதீகார ஆசையினால் கொல்லப்படுவதற்கு காரணமாகினர்.

இவர்களின் வரலாறு நெடுகிலும் பார்த்தால் ஆட்சிக்காக எப்பேர்பட்ட கொடுங்கோலர்களுடனும் கூட்டுச் சேரக் கூடியவர்கள் என்பது தெட்டத் தெளிவானது.

உதாரணங்கள்:-

1) இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் கருத்தைத் தாங்கி குவைத்திலிருந்து வெளியாகும் ‘அல்முஜ்தமஃ’ ( ﺍﻟﻤﺠﺘﻤﻊ ) என்ற சஞ்சிகையில் 434வது இதழில் ஈரானியப்புரட்சி பற்றி 1979 களில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது:

‘இஹ்வானுல் முஸ்லிமூன் பொதுவான அறிக்கையொன்றை வெளியிடுகின்றது ….

கொமைனீயைச்சந்திக்க நாம் உத்தேசித்துள்ளோம் .

இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி ,

இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ,

இந்தோனேஸிய மாஸூமி ,

மலேசிய ஷபாபுல் இஸ்லாம்போன்ற இயக்கங்களை அழைக்கின்றோம்

2) 1985களில் ‘மஜல்லதுத்தஃவா’ எனும் சஞ்சிகையில் 105 வது இதழில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான உமர் அத்தில்மிஸானீ என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

“இன்றுள்ள மார்க்க அறிஞர்களில் பொறுப்புக்களில் ஒன்றுதான் ஷீஆக்களையும், ஸுன்னிகளையும் சேர்த்து வைப்பதாகும்….

இந்தப்புரட்சிக்குப் பின்னால் இஹ்வானுல் முஸ்லிமூனுக்கும்,ஷீஆக்களுக்குமிடையே தொடர்புகள் குறையவில்லை.

ஆயத்துல்லா காஸானியோடு நாம் தொடர்பிலுள்ளோம் .

நவாப் ஸபவீயை எகிப்துக்கு விருந்தாளியாக நாம் அழைத்துள்ளோம் .

அவருடைய மத்ஹபை விட்டு இங்கே வரவேண்டும் என்பதற்காகநாம் அவரை விருந்துக்கழைக்கவில்லை.

பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொள்வதற்காகவே நாம் அவரையழைத்தோம்.

இஸ்லாமிய மத்ஹபுகள்

(அகீதாவிலுள்ள மத்ஹபுகள்)

அனைத்தும் ஒன்றித்து செல்லவேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம்.

3) ஈரானியப் புரட்சி வெடித்த அதே காலப்பகுதியில் குவைத்திலிருந்து வெளியான மஜல்லதுல் இத்திஹாத் என்ற சஞ்கிகையில் ஓர் அறிக்கை வெளியாகியது.

“ஈரானின் புரட்சிக்கு உதவுமாறு குவைத் அரசிடம் நாம் வேண்டுகிறோம்.

ஈரானுக்கு எதிராக என்ன தடைகள் வந்தாலும் அந்நாட்டுக்கு குவைத் அரசு உதவ வேண்டும்.

ஏனென்றால் ஈரானின் வெற்றியானது குவைத்தின் வெற்றியாகும்.

அதன் தோல்வியானது குவைத்தின் தோல்வியாகும் ……” 

என்றவாறு அவ்வறிக்கை அமைந்திருந்தது.

4) ‘மௌஸுஅத்துல் ஹரகிய்யா’ எனும் நூலில் 289ம் பக்கத்தில் நவாப் ஸபவீ யைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார். “ஈமானும், நல்லுணர்வும் கொண்ட 29 வயதுடைய ஒரு வாலிபர்.

இவரைப் போன்றே எல்லோரும் இவ்வுலகிலிருக்கவேண்டும் …..”

அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறிபிடித்த ஷீஆவைப் பற்றி இவர் சொல்லும் பாராட்டு மழைதான் இது.

5) ஹஸனுல்பன்னாவுக்கு அடுத்த படியாக வந்தவரென்று இஹ்வான்கள் மதிக்கின்ற முஹம்மத் அல் கஸ்ஸாலி என்பவர் தனது ‘கைப நப்ஹமுல் இஸ்லாம்’ என்ற நூலில் 142ம் பக்கத்தில் அகீதா ரீதியாக இஸ்லாத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பற்றிச் சொல்லிவிட்டு “அல்லாஹ்வையும், நபியவர்களின் தூதுத்துவத்தையும் ஏற்றுள்ள நாம் ஏன் ஷீஆ, ஸுன்னி என்று சண்டை பிடித்துக் கொள்கிறோம்.

ஸுன்னிகளாகிய நமக்கும் ஷீஅக்களுக்கும் அகீதாவில் கருத்து வேறுபாடு ஏதுமில்லையே. அப்போது ஏன் நமக்குள் இந்த சச்சரவுகள்……..?” என்று உலக விடயங்களெல்லாம் தெரிந்த(!) கஸ்ஸாலி எழுதுகின்றார். ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் அகீதாவில் காணப்படும் முரண்பாடுகள் பற்றி இவருக்குத் தெரியாது போலும். அதே நூலில் 145ம் பக்கத்தில் தொடர்ந்தும் அவர் கூறும் போது “ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் எதைப்போன்றதென்றால் ஹனபீ, ஷாபிஈ , மாலிகீ மத்ஹபுகளுக்கிடையே பிக்ஹு ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைப் போன்றதே …” என்று சொல்கிறார். அப்படியாயின் ஷீஅக்களை ஐந்தாம் மத்ஹபாகச் சொல்கின்றார்.

6) அபுல் அஃலா மெளலானா மௌதூதி அவர்கள் 1979 ஓகஸ்டில் வெளியான தஃவா எனும் சஞ்சிகையின்

19வது இதழில் “கொமைனீயின் புரட்சி ஓர் இஸ்லாமியபுரட்சியாகும். 

இஸ்லாமிய ஜமாஅத்துக்களே அதைச் செய்கின்றன. 

ஆகவே பொதுவாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அதற்காகப் போராட வேண்டும் ….” என்று அறிக்கை விடுகின்றான்.

7) சூடானிலிருந்து இஹ்வான்களால் வெளியிடப்படும் ஸபாஹுன் ஜதீத் என்ற சஞ்சிகையில் “கொமைனீக்கெதிராக சவுதியிலிருந்து மார்க்கத்தீர்ப்புச் சொல்லப்பட்டுள்ளது…. அரபுத்தீபகற்பத்திலிருக்கும் இவர்கள் ஏன் மார்க்கத்தின் பேரால் இத்தகைய தீர்ப்புக்களைச் சொல்கிறார்கள். இஸ்லாத்துக்கெதிராக இஸ்லாமா? இல்லை. இது ஜிஹாதிய இஸ்லாத்திற்கு எதிரான ஐந்து தூன்களையுடைய இஸ்லாம். கண்ணியமிகு மார்க்கத்துக்கெதிராக வந்துள்ள ரியாழுடைய இஸ்லாம் அல்லாஹ்வின் படைக்கெதிரன அநியாயக்காரர்களின் இஸ்லாம். பிரான்ஸிருந்து வருகின்ற கோழி இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்ற இஸ்லாம்தான் இவர்களுக்குத் தெரியும் உண்மையான இஸ்லாம் தெரியது……” என்று அவ்வாக்கம் சொல்கின்றது. இஸ்லாமிய ஆட்சி என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அஹ்லுஸ்ஸுன்னாவை நக்கலடித்து எழுதும் இவர்களின் வாசகங்களைப் பாருங்கள்.

8.) சற்றே ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் – ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கங்களை முன்வைக்கும் போது அதனை யாரால் மறுக்க முடியும்.

மறுப்பவர்கள் இருந்தால் மறுப்பிடலாம்.

உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லீமும் இக்வாங்களின் இன்றைய நிலையை கண்டு கவலை கொண்டுள்ளார்கள். அன்று செய்யது குத்துப் அவர்கள் எவ்வாறு எகிப்திய அரசால் தூக்கிலிடப்பட்டார்களோ அதே போல் இன்று பன்மடங்கு இக்வான்கள் மரணதண்டனையை பெற்றுள்ளார்கள்.

முன்மாதிரிமிக்க மக்களாக திகழ்வார்கள் என நாம் அவர்களை உற்று நோக்கியபோது மறுபடியும் இரான் புகழ் பாட ஆரம்பித்தார்கள்.

முன்மாதிரி என்பது நம் அன்பிற்குரிய நபிகளாரிடத்தில் அல்லவா இருக்கிறது ? நபிகளாரை இழிவுப்படுத்தும் கூட்டம் இந்த கொமைனி கூட்டம். அவர்கள் எப்படி இக்வாங்களுக்கு முன்மாதிரி ஆக முடியும்.

இறைவழியில் நாங்கள் போராடுகிறோம் என முழங்கும் ஒவ்வொருவரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்று சட்டம் இல்லை. இன்று உலகில் பார்கின்றோம்! – எத்தனையோ அமைப்புக்கள் தங்களை இஸ்லாமிய போராட்ட அமைப்பு என்று அறிவித்து போரிட்டாலும் அவர்களிடத்தில் மார்க்கத்திற்கு புறம்பான எத்தனையோ விடயங்கள் தவழ்வதை காண முடிகிறது.

இக்வான்கள் வரும் காலங்களில் தங்களின் நிலை என்ன என்பதை உணர்ந்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றி தங்கள் கோட்பாடுகளையும் வழிமுறையையும் மறு சீரமைப்பு செய்தல் வேண்டும்.

 

أحدث أقدم