காஸிம் இப்னு முஹம்மத்(ரஹி)

சிறப்புகள்: 

ஏழு பிரபல்யமான தாபியீன்களின் இவர்களும் ஒருவர்.

அபூபக்கர்(ரலி) அவர்களின் பேரன்.

ஆயிஷா (ரலி) இவர்களின் மாமி. அன்னையவர்கள் தான் இவர்களை வளர்த்தார்கள்.

காஸிம்(ரஹி) கூறுகிறார்கள் நான் ஒரு சிறந்த தந்தையைவிட தாயைவிட ஆயிஷா (ரலி) அவர்களை தான் பார்த்துள்ளேன்.

காஸிம்(ரஹி) அவர்களுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்யக்கூடியவர்களாக மார்க்க கல்வி கற்பதிலும் உறுதுணையாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

நன்மையான எல்லா விஷயங்களை கற்றுக் கொடுத்தார்கள், தீமையான எல்லா விஷயங்களையும் அதன் விளைவுகளையும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

அன்றைய கால அறிஞர்கள் எல்லாம் நன்மையை கற்பதில் ஆர்வம் காட்டியது போல் தீமையை அறிவதிலும் ஆர்வம் காட்டினார்கள். ஏனென்றால் பாவமான காரியங்களில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக. எனவே நாமும் நம் குழந்தைகளுக்கு  இதை செய்யாதே என்று கூறாமல் அதில் உள்ள தீமையை எடுத்துரைத்து அதன் விளைவுகளையும் உணர வைக்க வேண்டும். நபி (ﷺ) அவர்கள் நமக்கு இப்படித்தான் மார்க்கத்தை காண்பித்து கொடுத்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்கள் மற்றும் பல சஹாபாக்களிடம் கல்விகற்று ஹதீஸ்களையும் அறிவிப்பு செய்துள்ளார்கள் 


அறிஞர்களின் கூற்று: 

இமாம் தஹபி(ரஹி) அவர்களின் புத்தகத்தில் கூறுகிறார்கள்:

காசிம்(ரஹி)  அவர்கள் ஹதீஸில் அறிவுடையவராக, நினைவாற்றலில் வல்லமையுடையவராக

(ஹிப்ளு) அதாவது இவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் மனனம் செய்யக்கூடியவர்களாக சிறந்து விளங்கினார்கள்.


இப்னு உயைனா (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்: 

ஆயிஷா (ரலி )அவர்கள் நிறைய தாபியீன்களின்  ஹதீசை பெற்றுள்ளார்கள், அதில் மூன்று நபர்களை எனக்கு தெரியும் அதில் ஒருவர் தான் காசிம் (ரஹி)


இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்:

மார்க்கத்தில் சிறந்த விளக்கம் அளிக்க கூடியவர்களாக இருந்தார்கள்


இமாம் தஹபீ(ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்:

காசிம் அவர்கள் நற்குணம் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள் மற்றும் கல்வியை கற்று அமல்படுத்த கூடியவர்களாக மற்றும் பண்புகளில் அவர்களின் பாட்டனார்  அபூபக்ர் (ரலி )அவர்களை போன்று இருந்தார்கள் என்று கூறுகிறார்கள்.


மற்றுமொரு இமாம் கூறுகிறார்கள்:

இவர்கள் யாரைப் பற்றியும் புறம் பேசமாட்டார்கள் என்று  எவ்வளவு உயரிய பண்பை கொண்டவர்களாக திகழ்ந்துள்ளார்கள்.


நபி (ﷺ) அவர்கள் புறம் பற்றி கூறும் பொழுது இறந்த மனிதனின் மாமிசத்தை சாப்பிடுவது போன்று என்று கூறியுள்ளார்கள்

 اَلَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰٓٮِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ‌ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ‌ؕ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ‌ۚ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ‌ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى

(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். அல்குர்ஆன் : 53:32 

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறியது போலவே

காசிம்(ரஹி) அவர்கள் யாரைப்பற்றியும் பேசியதில்லை மனிதர்களில்  நல்லவர்கள் தீயவர்களை அல்லாஹ் அறிவான் என்று நற்குணத்துடன் வாழ்ந்தார்கள்.

காட்டரபி ஒருவர் வந்து  காசிம் அவர்களிடம் கேட்கிறார்கள் நீங்கள் பெரிய அறிஞரா? அல்லது சாலிம் (ரஹி) அவர்கள் பெரிய அறிஞரா? அதற்கு காசிம் அவர்கள் தான் கற்ற கல்வியை மற்றவருக்கு  எத்தி வைப்பதே சிறந்தது.  இதில் யார் பெரியவர் என்ற எண்ணம் எல்லாம் எதற்கு என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களை அக்காட்டரபி விடவில்லை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உடனே காசிம் (ரஹி) அவர்கள் நீங்கள் சாலிம்(ரஹி) அவர்களிடமே கேளுங்கள் என்று அனுப்பி விடுகிறார்கள்.

இந்த சம்பவத்தை கூறும் இமாம் அவர்கள் காசிம்(ரஹி) அவர்கள் கூறிய பதிலுக்கு விளக்கம் அளிக்கிறார்கள் ஒருவேளை காசிம் அவர்கள் பெரிய அறிஞர் என்று  கூறினாலோ அல்லது சாலிம்(ரஹி) அவர்கள் பெரிய அறிஞர் என்று கூறினாலோ அது பொய்யாகி விடுமோ என்று அல்லாஹ்விற்கு அஞ்சி மிகவும் பணிவுடன் பதிலளித்தார்கள்.

ஒட்டுமொத்த தாபியீன்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் பார்க்கும் பொழுது  அவர்கள் மார்க்கத்தை சகாபாக்களிடம் கற்றுக் கொண்டு கற்ற கல்வியை அமல்படுத்தினார்கள்.
أحدث أقدم