இஸ்லாமிய உம்மத்தின் ஒரு வலி உய்கூர் முஸ்லிம்கள்

கிழக்கு துர்கிஸ்தான் எனும் நாடு மத்திய ஆசியாவில் 100% முஸ்லிம்கள் வாழ்ந்த நாடு.இதன் பரப்பளவு 1.7 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.அதாவது சீனாவின் பரப்பில் சரி 1/5 பங்கு என்றால் புரிந்துகொள்ளலாம். சுதந்திர நாடாக இருந்த கிழக்கு துருகிஸ்தான் 1949 இல் சீனாவினால் கைப்பற்றப்பட்டு சிங்ஜியாங்க் (Xinjiang) என்ற பெயரில் அதன் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது.

சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு துர்கிஸ்தானில், 1949 இலிருந்து இன்றுவரை சீனா, 60 மில்லியன் முஸ்லிம்களை கொன்றிருக்கின்றது என்பது உலகம் வருத்தப்படாத  உண்மையாகும்.இவ்வெண்ணிக்கையானது பொஸ்னியா, ஈராக், ஆப்கானிஸ்தான்,செச்சினியா மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கையில் 10 மடங்கைவிடவும் அதிகமாகும் என்பது புல்லரிக்கவைக்கும் அதி பயங்கரமான இனப்படுகொலை என்பது முஸ்லிம்களுக்கே தெரியாத கொடூரமாகும். அந்நாட்டில் தற்போது வாழும் மக்கள் வெறும் 10 மில்லியன்களே. கொல்லப்பட்ட அதே அளவு எண்ணிக்கையான உய்கூர் வாசிகள்,உய்கூர் மொழி பேசுபவர்கள் சீன ராணுவத்தால் வேறு இடங்களுக்கு குடிபெயர்க்கப்பட்டனர். உய்கூர் மொழியானது அரபு அச்சரங்களைக்கொண்டதும் துருக்கி மொழியுடன் நெருக்கமான தொடர்புடையதும் ஆகும்.

குதைபாஹ் இப்னு முஸ்லிம் (ரஹ்) ( மரணம்:கி.பி. 715) அவர்கள் உமையாக்கலிபாக்கள் அப்த் அல் மலிக் மற்றும் அப்த் அல் வலித் ஆகியோரின் படைகளில் தளபதியாக இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இஸ்லாமிய ஆட்சியின்பால் கொண்டு வந்த தளபதி ஆவார். குதைபா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 95 இல் கிழக்கு துர்கிஸ்தானின் சிலபகுதிகளை கைப்பற்றினார். ஹிஜ்ரி 332 இல் அந்நாட்டின் மன்னன் சோதுக் பக்ராகான் இஸ்லாத்தை தழுவியதோடு இஸ்லாம் அந்நாட்டின் ராஜாங்க மதமான மாறியததோடு தொடர்ந்து 10 நூற்றாண்டுகளாக சுதந்திரமான முஸ்லிம் நாடாகவும் இருந்து வந்தது.

முதன்முதலாக 1759 இல் துர்கிஸ்தானானது சீனராணுவத்தால் 4 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னார் 1881 இலும் மீண்டும் சீனா ஆக்கிரமித்தது. துர்கிஸ்தான் மக்கள் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடினர்.சுதந்திர போராட்டத்தின் விளைவாக 1933 இல் ‘கஸ்கர்’ நகரில் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற சுதந்திரமான நாட்டையும் அந்நாட்டு மக்கள் பிரகடனப்படுத்தினர்.ஆனால் ரக்ஷ்யா தனது காலனித்துவ  நாட்டிற்கு பக்கத்தில் ஒரு சுதந்திரமான முஸ்லிம் நாடு உருவாவதை விரும்பவில்லை. இதனால் சீனாவிற்கு தேவையான ராணுவ உதவியை வழங்கி ரக்ஷ்யா, 1949 ஆகும்போது கிழக்கு துர்கிஸ்தானை முழுமையாக சீனாவின் ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்கு பக்க பலமாக இருந்தது.

இதன்பின்னர் அந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நாத்திக கம்யூனிசவாதிகளினால் இனப்படுகொலைகள் வயது,பால் வேறுபாடின்றி வரையறையின்றி கட்டவிழ்த்துவிடப்பட்டது. உலகில் கேட்பதற்கு நாதியில்லாத மனிதவர்க்கமாக அவர்கள் மாறினார்கள்.மனித உரிமை மீறல்களை எண்ணிலடங்காதவை. இறையில்லங்கள்  இடிக்கப்பட்டன, ஜும்மாத் தொழுகை மற்றும் ஐவேளை தொழுகைகள், நோன்பு போன்ற இஸ்லாமிய கடமைகளும் தடுக்கப்பட்டது, தாடி வளர்த்தல்,இஸ்லாமிய கலாச்சார ஆடை அணிதல்,முஸ்லிம் பெயர்களை சூட்டுதல், ஹிஜாப் அணிதல் என்பவற்றை தடை செய்தார்கள். மேலும் உறவினர்களுடனான மற்றும் அனைத்து சகோரதத்துவ உறவுகளையும் வலுக்கட்டாயமாக  துண்டித்து தனி உலகில் வாழநிர்பந்தித்தார்கள். பாவனைக்கு ஒரு கத்தியை வாங்க வேண்டுமானாலும் அதனை இணையத்தில் பதிவு செய்யவேண்டும். அடிக்கடி வீடுகள்,கடைகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. கத்தி காணாமல் போயிருந்தால் கைது செய்யப்படுகின்றார்கள். இதனால் கடைகளிலும் சரி வீடுகளிலும் சரி கத்தியை சங்கிலியினால் பிணைத்தே வைத்திருக்கின்றனர்.

துருகிஸ்தான் பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. அங்கு 40 பெரிய ஆறுகள் ஓடுகின்றன. சீனாவின் 25% எண்ணெய் வளமும், 28% எரிவாயுவும், தங்கம்,வெள்ளி, பிளாட்டினம்,கரி,யூரேனியம் என்பவற்றின் 80% ஐயும் சீனாவிற்கு துர்கிஸ்தானிலேயே கிடைக்கின்றது.ஆனால் உய்கூர் முஸ்லிம்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேதான் வாழ்கின்றார்கள்.

சீன அரசாங்கம் கிழக்கு துர்கிஸ்தானில் ஹன் பெளத்த மதத்தை அங்குள்ள மக்கள் மீது திணிக்கின்றது. 1949 இல் 97% இருந்த முஸ்லிம்களின் வீதம் தற்போது 40% ஆக குறைவடைந்துள்ளது. உய்கூர் முஸ்லிம்களை துன்புறுத்துவதற்காக சீனா கண்டுபிடித்துள்ள புதிய இனச்சுத்திகரிப்பு பொறிமுறை “Twin kinship” எனப்படும் இரட்டை உறவு” முறை கொள்கையாகும். இம்முறைப்படி ஒரு முஸ்லிமின் வீட்டில் ஒரு நாத்திகனும் பெளத்தனும் வாழ்வார்கள். அவர்களோடு சேர்ந்து ஒரே வீட்டில் வாழ முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள். இதனால் வீட்டிற்குள்ளும் முஸ்லிமாக வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு  அம்மக்கள் ஆளாகியுள்ளனர். மேலும் சீனர்களை அங்கு சென்று கவர்ச்சிகரமான சலுகைகளுடன் வேலை செய்ய ஊக்குவிக்கின்றது. இவ்வாறுதான் யூத குடியேற்றங்களும் பாலஸ்தீனில் ஊக்குவிக்கப்படுகின்றது.

-AKBAR RAFEEK
أحدث أقدم