1.உறவினரை தரிசித்தல் :
'தனது வாழ்வாதாரத்தில் விருத்தியும் நீண்ட ஆயுளும் கிடைக்கவேண்டுமென விரும்புபவர் தனது உறவினரோடு சேர்ந்துவாழட்டும்' (ஸஹீஹுல் புஹாரி).
2. நோயாளியை தரிசித்தல் :
'ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரனை நோய் விசாரிக்கச் சென்று அவரிடமிருந்து திரும்பும் வரை சுவர்க்கத்தின் பழத் தோடங்களில் இருக்கிறார்' (ஸஹீஹ் முஸ்லிம்).
3. புனித மக்கா மஸ்ஜிதை தரிசித்தல்:
'(மக்காவிலுள்ள புனித மஸ்ஜிதாகிய) இந்த இல்லத்தை ஒருவர் தரிசித்து, வீணான, கெட்ட செயல்களில் ஈடுபடாமலும் இருந்தால் அவர் தனது தாய் பெற்றெடுத்தது போன்று (பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நிலையில்) திரும்பிச்செல்வார்' (ஸஹீஹ் முஸ்லிம்).
4. புனித மதீனா மஸ்ஜிதை தரிசித்தல்:
மதீனா மஸ்ஜிதில் தொழப்படும் ஒரு தொழுகை மக்கா ஹரம் மஸ்ஜிதை தவிரவுள்ள ஏனைய மஸ்திதுகளில் தொழப்படும் ஆயிரம் தொழுகைகளை விட சிறந்ததாகும்' (ஸஹீஹ் முஸ்லிம்
5. குபா மஸ்ஜிதை தரிசித்தல் :
'ஒருவர் தனது வீட்டில் வுழூ செய்துகொண்டு பின்னர் குபா மஸ்ஜிதுக்கு சென்று தொழுதால் அவருக்கு ஒரு உம்ரா செய்த கூலி கிடைக்கும்' (திர்மிதி).
6. அல்லாஹ்வுக்காக ஒருவரை சந்தித்தல்:
'யாரேனும் ஒருவர் ஒரு நோயாளியை தரிசித்தால் அல்லது தனது சகோதரர் ஒருவரை அல்லாஹ்வுக்காக சந்தித்தால் வானிலிருந்து ஒரு அழைப்பாளர் 'நீங்கள் நற்காரியம் செய்தீர்கள், உங்கள் தரிசிப்பு நல்லதாக அமைந்துவிட்டது, சுவர்க்கத்தில் உங்களுக்கென ஒரு வீட்டை ஒதுக்கிக்கொண்டீர்கள்' என்று கூறுவார்' (திர்மிதி, இப்னுஹிப்பான்).
7. பலவீனமான முஸ்லிம்களை தரிசித்தல்:
'நபிகளார் பலவீனமான முஸ்லிம்களை சந்திக்கின்ற, அவர்களிலுள்ள நோயாளிகளை நோய் விசாரிக்கின்ற, அவர்களில் மரணித்தோரின் அடக்கத்தில் கலந்துகொள்கின்ற வழக்கத்தை கொண்டிருந்தார்கள்'(ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா)
8. மண்ணறைகளை தரிசித்தல் :
'மண்ணறைகளை தரிசியுங்கள், அது மறுமையை நினைவூட்டும்' (ஸஹீஹ் முஸ்லிம்)
: 'மஜ்மஉல் பவாஇத்'
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)