அல்லாமா அல்-ஃபகீஹ் அல் இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் ரஹிமஹுல்லாஹ்
பெயர், பிறப்பு மற்றும் பரம்பரை:
அபு அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் இப்னு முஹம்மத் இப்னு அல்-உதைமீன் அத்-தமீமி அந்-நஜ்தி.
ஷேக் உதைமீன் என்ற பெயரினால் பிரபலமாக அறியப்படும் இமாமவர்கள், சவூதி அரேபியாவின் காசீம் பிராந்தியத்தில் உள்ள உனைசா நகரில், ஹிஜ்ரி 1347 ரமழான் 27 இல் ஒரு பிரபலமான மார்க்கப்பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்தார்கள்.
கல்வி / பணி:
இமாமவர்கள் தனது கல்வியை பல முக்கிய அறிஞர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்:
அவர்களில்
ஷேக் 'அப்துர்-ரஹ்மான் இப்னு நாசிர் அஸ்-ஸஅதி (1307H - 1376H),
ஷேக் முஹம்மது அமீன் அஷ்-ஷன்கீதி (1325H – 1393H), மற்றும்
ஷேக் அப்துல்-அஜீஸ் பின் பாஸ் (1330H - 1420H), ஆகியோர் மிக முக்கியமானவர்களாவர்.
இமாமவர்களின் கற்பித்தல் பணியினால், சவூதி அரேபியாவிற்குள்ளும் வெளியிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் பயனடைந்தனர். மார்க்க விளக்கவுரைகளை போதிப்பதில் இமாமவர்களுக்கென்று ஒரு தனித்துவமான பாணியிருந்தது. பிடிவாதமாகவும் கண்மூடித்தனமாகவும் மார்க்கத்தை அணுகுவதிலிருந்து விலகி தனக்கு முன்சென்ற அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ அறிஞர்கள் இஸ்லாமிய மார்க்கத்துக்கு பணிசெய்தது போலவே இமாமவர்களும் பணி செய்தார்கள். அந்த வகையில் இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாடுகள்(ஈமான், அகீதா), வழிமுறைகள் விதிமுறைகள்(மன்ஹஜ், உஸுல்), சட்டக்கலை(ஃபிக்ஹ்)
போன்றன எவ்வாறான அடிப்படைகளில் அமையவேண்டும் என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக இமாமவர்கள் வகுத்தும் அடையாளம் காட்டியும் சென்றுள்ளார்கள்.
ஏறக்குறைய ஐம்பது மார்க்கத் தீர்ப்புத் தொகுப்புகளை இமாமவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் இறப்பதற்கு முன், இமாம் முஹம்மது இப்னு சவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தின் காசீம் கிளையில் மார்க்க அடிப்படைகளை கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சவூதி இராச்சியத்தின் மூத்த அறிஞர்கள் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வந்தார்கள், மேலும் உனைசா நகரின் பெரிய மசூதியின் இமாம் மற்றும் கதீப் ஆகவும் பணிபுரிந்து வந்தார்கள்.
வகித்த பதவிகள்:
1. சவுதி அரேபியாவின் மூத்த அறிஞர்கள் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் ஹிஜ்ரி 1407 முதல் மரணிக்கும் வரை.
2. முஹம்மத் இப்னு ஸவூத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கல்விச் சபையின் முன்னாள் உறுப்பினர்.
3. ஷரீஆ மற்றும் மார்க்கத் துறைச் சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் காசீமில் உள்ள முஹம்மது இப்னு சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழக கிளையின் அகீதா பீடத்தின் தலைவர்.
4. ஹிஜ்ரி 1392 முதல் மரணிக்கும் வரை ஹஜ் பருவத்தில் கல்வி மற்றும் அறிவொளி கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர்.
5. ஹிஜ்ரி 1405 முதல் மரணிக்கும் வரை உனைசாவில் இலாப நோக்கற்ற புனித அல்குர்ஆன் மனன சங்கத்தின் முன்னாள் தலைவர்.
அழைப்புப் பணியில் இமாமவர்களது நன்கு அறியப்பட்ட ஆக்கங்களில் சில:
தஃப்ஸீர் ஆயத்துல் குர்ஸி.
ஷரஹ் ரியாழுஸ் ஸலிஹீன்.
கிதாப் உல் இல்ம்.
ஷரஹ் உசூல் தலாத்தா.
ஃபதாவா அர்கான் இஸ்லாம்.
இஸ்லாமிய அகீதா மற்றும் ஃபிக்ஹ் பல தலைப்புகளில் மஜ்மூ ஃபதாவா.
ஃபதாவா மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு. தஃப்சீர் அல் குர்ஆன் அல் கரீம்.
ரமலான் மஜ்லிஸ்.
அல் கவ்ல் அல் முஃபீத் 'அலா கிதாப் அத் தவ்ஹீத். அஷ் ஷரஹ் அல்-மும்தி' அலா ஜாதில் முஸ்தக்னி'.
கிதாபுல் இல்ம்.
தக்ரீப் அத் தத்மூரியா.
அல்லாஹ்வின் அழகான பெயர்கள் மற்றும் பண்புகளைப் பற்றிய முன்மாதிரியான அடித்தளங்கள். அல் அர்பாயீன் ஆன் நவவியாவின் விளக்கம்.
ஃபாத் ரப் அல் பாரியா.
முக்தாசர் மனா அல் லபீப்.
அல் அகீதா அல் வாசிதிய்யா விளக்கம்.
லும்அதுல் இதிகாத் விளக்கம்.
மனாசிக் அல் ஹஜ் வல் உம்ரா.
அல் உசூல் மின் 'இல்ம் அல் உசூல்.
தஷீல் அல் ஃபராயித்.
முஸ்தலா அல்-ஹதீத்.
நபியவர்களின் ஹஜ்ஜின் விளக்கம்.
தாவாவில் சமநிலையில் இருப்பது.
ஹிஜாப் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு.
அல் மன்ஹஜ் லி முரீத் அல் உம்ரா வல் ஹஜ்.
குர்பானி விதிகள்.
48 நோன்பு பற்றிய கேள்விகள்.
அல்லாஹ்வை நோக்கி அழைப்பவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள்.
அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் அதன் காரணங்கள்.
கடன்கள்.
60 மாதவிடாய் விதிகளின் கேள்விகள் பதில்கள்.
நோன்பு தராவீஹ் மற்றும் ஜகாத் பற்றிய அத்தியாயங்கள்.
மின்ஹாஜ் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅஹ்.
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.
தொழுகையை கைவிடுபவரின் மீதான சட்டம்.
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள்.
அகீதாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ்.
குடும்பம் தொடர்பான கேள்விகளின் தொகுப்பு. பெண்களும் இரத்தம் தொடர்பான விதிகளும்.
ஹாஜிகள் விடும் சில பொதுவான பிழைகள்.
ஜகாத் அல் ஹுலீ.
ஸஜதா ஸஹ்வு.
கழா கத்ர்.
ஒரு முஸ்லீம் ஹஜ் மற்றும் உம்ரா எவ்வாறு செய்கிறார். ஃபிக் அல் ஃபராயிதின் சுருக்கம்.
தங்கம் வாங்குவது மற்றும் விற்பது.
தஃப்சீரின் அடிப்படைகள்.
மதிப்புமிக்க நினைவு.
தடை செய்யப்பட்ட அறிக்கைகள்.
திருமணம்.
நபியவர்களின் தொழுகையின் விளக்கம்.
பித்ரா அழைக்கும் அத்தியாவசிய உரிமைகள்.
துஆ மற்றும் சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்திசைவு. பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனை நேரங்கள்.
குனூத் அல் வித்ர் துஆவின் விளக்கம். இளைஞர்களின் பிரச்சனைகளிலிருந்து.
ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் தன்னை எவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸஹீஹ் அல்-புகாரியின் விளக்கம்.
ரியாத் அஸ் சாலிஹீன் பற்றிய விளக்கம்.
புலூகுல் மராமின் விளக்கம்.
அல் அகீதா அல் வாசிதிய்யாவின் விளக்கம்.
அல் அஜ்ரூமிய்யாவின் விளக்கம்.
லும்அத் அல் இதிகாத் விளக்கம்.
அல் அர்பாயீன் அன் நவவிய்யாவின் விளக்கம்.
அல் பைகோனியாவின் விளக்கம்.
மூன்று அடிப்படைக் கோட்பாடுகளின் விளக்கம். காஷ்ஃப் அஷ் ஷுபுஹாத்தின் விளக்கம்.
அல் அகீதா அஸ் ஸஃபரீனியாவின் விளக்கம்.
நுக்பத் அல் ஃபிக்ரின் விளக்கம்.
நாத்ம் அல் வரகாதின் விளக்கம்.
உம்தத் அல் அஹ்காமின் விளக்கம்.
தஃப்சீரின் விதிமுறைகள் ஓர் அறிமுகம்.
அல்ஃபியத் இப்னு மாலிக்கின் விளக்கம்.
கிதாபுத் தவ்ஹீத் விளக்கம்.
அல் ஃபதாவா அல் ஹமாவிய்யாவின் விளக்கம்.
பண்பு:
இமாமவர்கள் தனது எளிமை, அடக்கம், அவர் சந்தித்த அனைவரிடமும் பாகுபாடு காட்டாமல் நடந்து கொள்ளுதல் மற்றும் பிடிவாதம் கண்மூடித்தனம் இல்லாமல் தலைப்புகளை அணுகுதல் போன்ற பண்புகளால் மிகவும் பிரபலமானவர்களாவர். ஆழமான அறிவார்ந்த விடயங்களை எளிமையான மொழிநடையில் விளக்குவதில் இமாமவர்கள் தனித்திறமை பெற்றிருந்தார்கள். வாழ்வாதாரத்திற்காக அல்லாஹ்வை தவிர்த்து பிறரிடம் தேவையற்று வாழ்வதையே பெரிதும் விரும்பிய இமாமவர்கள் ஹிஜ்ரி 1400 க்குப் பிந்தைய சகாப்தத்தின் முதன்மையான பேரறிஞர்களில் ஒருவராவர்.
மரணம்:
இமாமவர்கள் ஹிஜ்ரி 1421 ஷவ்வால் 15,/10 ஜனவரி 2001 C.E புதன்கிழமை அன்று காலமானார்கள். அப்போது அவர்களுக்கு வயது 74. அல்லாஹ் (சுப்ஹானஹு வத்தஆலா) அவர்களின் ஆன்மா மீது கருணை காட்டுவானாக, ஆமீன்.