பெருநாள் தக்பீரை தனித்தனியாக கூறுவதே முறையான அமல்

அல்லாமா இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
 "நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜதுல் விதா எனும் இறுதி ஹஜ்ஜில் வீற்றிருந்தோம், (ஒரே நேரத்தில்) எங்களில் ஒருவர் தக்பீரும், இன்னுமொருவர் லாஇலாஹ இல்லல்லாஹ் (தஹ்லீல்) உம், மற்றுமொருவர் தல்பிய்யாவும் கூறுபவராக இருந்தனர்", ஒவ்வொருவரும் தனித்தனியாக தல்பிய்யா சொல்வதும், மற்றவருடன் சேர்ந்து கூறாமலிருப்பதுவுமே முஸ்லிம்களுக்கு விதியாக்கப்பட்டுள்ள கடமையாகும்.

நூல்: பிக்ஹுல் இபாதாத் (பக்கம்: 343)

أحدث أقدم