நபியவர்கள் தடுத்த கப்று வணக்கம்

மனிதனை ஷிர்க்‌ எனும்‌ பெரும்பாவத்திற்கு எடுத்துச்‌ செல்லும்‌ அனைத்துப்‌ பாதைகளையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌. அவைகளை அதிகமாக எச்சரிக்கையும்‌ செய்துள்ளார்கள்‌. அவைகளில்‌ ஒன்றுதான்‌ கப்ரு வணக்கமாகும்‌.

இந்த கப்ரு வணக்கத்திலும்‌, கப்ரில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டவர்கள்‌ மீது அளவு கடந்து செல்லும்‌ விடயத்திலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ உறுதியான தடைகளை வைத்துள்ளார்கள்‌.

அவைகள்‌ பின்வருமாறு:

1-அவ்லியாக்கள்‌, நல்லடியார்கள்‌ விடயத்தில்‌ அளவு கடந்து போவதை நபி (ஸல்‌) அவர்கள்‌ எச்சரிக்கை செய்துள்ளார்கள்‌. ஏனெனில்‌ அவ்வாறு அளவு கடந்து செல்லல்‌ அவர்களை வணங்க வழிவகுக்கின்றது. எனவே நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “அளவு கடந்து செல்வதை நான்‌ உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்‌. அளவு கடந்து செல்வதுதான்‌ உங்களுக்கு முன்னிருந்தவர்கள்‌ அழியக்‌ காரணமாக இருந்தது”. (ஆதாரம்‌: திர்மிதீ, இப்னுமாஜ.'., அஹ்மத்‌)

மேலும்‌ கூறினார்கள்‌: “மர்யமின்‌ மகன்‌ ஈஸாவை கிறிஸ்தவர்கள்‌ உயர்த்திப்‌ புகழுவது போல என்னை நீங்கள்‌ உயர்த்திப்‌ புகழ வேண்டாம்‌. நிச்சயமாக நான்‌ ஒரு அடிமை. எனவே என்னை அல்லாஹ்வின்‌ அடிமை என்றும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ என்றுமே கூறுங்கள்‌”. (ஆதாரம்‌: புஹாரி)

2- கப்ருகள்‌ மீது கட்டிடம்‌ கட்டுதலையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌.

அபுல்‌ ஹய்யாஜ்‌ அல்‌ அஸதி (ரஹ்‌) அறிவிக்கிறார்கள்‌:

அலி (ரலி) அவர்கள்‌ எனக்குச்‌ சொன்னார்கள்‌: நபி (ஸல்‌) அவர்கள்‌ என்னை எதற்காக அனுப்பி வைத்தார்களோ அதே நோக்கத்திற்காக உன்னையும்‌ நான்‌ அனுப்பி வைக்கட்டுமா? ஒரு சிலையையும்‌ வைக்காமல்‌ உடைக்குமாறும்‌, மதிக்கப்படும்‌ கப்ருகளை உடைத்து நாசப்படுத்தாமல்‌ விட வேண்டாம்‌ என்றும்‌ சொல்லி அனுப்பி வைத்தார்கள்‌.(ஆதாரம்‌: முஸ்லிம்‌)

3. அந்தக்‌ கப்ருகளில்‌ நிறம்‌ பூசுவதையும்‌, அதன்‌ மீது கட்டிடம்‌ கட்டுவதையும்‌ தடுத்தார்கள்‌.

கப்ருகள்‌ மீது நிறம்‌ பூசுவதையும்‌, அதன்‌ மீது அமர்வதையும்‌, அதன்‌ மீது கட்டிடம்‌ கட்டுவதையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌ என ஜாபிர்‌ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. (ஆதாரம்‌ முஸ்லிம்‌)

4-  கப்ருகளுக்கு அருகில்‌ தொழுகை நடத்துவதையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணத்தறுவாயில்‌ இருக்கும்‌ போது தம்முடைய போர்வையை தம்‌ முகம்‌ மீது போடலானார்கள்‌. அது முகத்தை மறைத்த போது அதை நீக்கி விட்டு பின்வருமாறு சொன்னார்கள்‌: “யூதர்களையும்‌ கிறித்தவர்களையும்‌ அல்லாஹ்‌ சபிப்பானாக! அவர்கள்‌ தங்களின்‌ நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்‌” எனக்‌ கூறினார்கள்‌. இந்த பயம்‌ மட்டும்‌ இல்லாதிருந்தால்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ கப்ரும்‌ திறந்த வெளியில்‌ அமைக்கப்பட்டிருக்கும்‌. எனினும்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ கப்ரும்‌ வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும்‌ என்ற பயம்‌ அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. (ஆதாரம்‌: புஹாரி முஸ்லிம்‌)

மேலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “உங்களுக்கு முன்னிருந்தவர்கள்‌ நபிமார்களின்‌ அடக்கஸ்தலங்களை பள்ளிவாசல்களாக எடுத்துக்‌ கொண்டார்கள்‌. அவ்வாறு நாங்களும்‌ அடக்கஸ்தலங்களை பள்ளியாக (வணங்குமிடமாக) எடுத்துக்‌ கொள்ள வேண்டாம்‌. அதை விட்டும்‌ நான்‌ உங்களை தடுக்கின்றேன்‌” என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

பள்ளிகளாக தேர்ந்தெடுப்பதென்பது அந்த இடத்தில்‌ தொழுகை நடத்துவதாகும்‌. அந்த அடக்கஸ்தலங்கள்‌ மீது கட்டிடம்‌ கட்டப்படாமல்‌ இருந்தாலும்‌ சரியே! 

எந்த இடத்தையும்‌ தொழுகை என்று நாடினால்‌ அந்த இடத்தை பள்ளியாக எடுத்து கொண்டார்கள்‌ என்றே பொருள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “பூமி எனக்கு வணங்குமிடமாகவும்‌, சுத்தமானதாகவும்‌ ஆக்கப்பட்டுள்ளது”. (ஆதாரம்‌ புஹாரி) 

எனவே, இந்த அடக்கஸ்தலங்களில்‌ பள்ளி வாசல்‌ கட்டப்பட்டால்‌ அதன்‌ நிலை மிக கடினமானதாகும்‌. இந்த எச்சரிக்கைகளை பொரும்பாலான மக்கள்‌ அலட்சியம்‌ செய்து தடுக்கப்பட்ட விடயங்கைளைச்‌ செய்து ஷிரக்கிலே வீழ்ந்து விட்டிருக்கின்றனா. கப்ருகள்‌ மீது பள்ளிகளையும்‌ ஸியாரத்துக்களையும்‌ மகாம்களையும்‌ கட்டுகின்றனா்‌.கப்ருகளைத்‌ தரிசிப்பதற்குரிய இடங்களாக மாற்றி அவ்விடத்தில்‌ அறுத்துப்பலியிடல்‌, அதில்‌ அடங்கப்பட்டவர்களிடம்‌ பிரார்த்தித்தல்‌, உதவி தேடல்‌, அவாகளுக்காக நேர்ச்சை செய்தல்‌ போன்ற பெரிய ஷிர்க்குகளைச்‌ செய்கின்றனர்‌.

அல்லாமா இப்னு கையிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: கப்ரில்‌ நிறைவேற்றப்படும்‌ வழிபாடுகளையும்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ வழிமுறைகளையும்‌ அவர்களின்‌ ஏவல்கள்‌, விலக்கல்களையும்‌, நபித்‌ தோழர்கள்‌ செய்தவற்றையும்‌ ஒருவன்‌ ஒப்பிட்டுப்‌ பாரத்தால்‌ ஒன்றுடன்‌ ஒன்று முரண்படுவதைப்‌ பார்ப்பான்‌. இரண்டும்‌ ஒன்றோடு ஒன்று சேராதவாறு எதிர்‌ மாற்றமாக இருப்பதைக்‌ காணலாம்‌. கப்ருகள்‌ உள்ள இடங்களில்‌ தொழுவதை நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ அந்த இடங்களில்‌ தொழுகையை நிறைவேற்றுகின்றனர்‌. அந்த இடங்களை பள்ளியாக எடுத்துக்‌ கொள்வதை நபி (ஸல்‌) தடை செய்தார்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ அதன்‌ மீது பள்ளிகளைக்‌ கட்டுகின்றனர்‌. மேலும்‌ அல்லாஹ்வுடைய வீடுகளுக்கு அவைகளை ஒப்பாக வைத்து அவைகளைத்‌ தரிசனத்திற்குரிய இடமென்று பெயரும்‌ சூட்டுகின்றனர்‌. மேலும்‌ அந்தக்‌ கப்ருகள்‌ மீது விளக்குகள்‌ ஏற்றுவதை நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர்‌. அந்த இடங்களைக்‌ கொண்டாடும்‌ இடமாக எடுப்பதைத்‌ தடுத்தார்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ அந்த இடங்களை கொண்டாடும்‌ இடமாகவும்‌, வணக்கங்கள்‌ நிறைவேற்றும்‌ இடமாகவும்‌ எடுத்துக்‌ கொள்கின்றனர்‌. பெருநாள்‌ தினங்களுக்கு ஒன்று கூடுவதை விட அல்லது அதை விட அதிகமானோர்‌ அங்கு ஒன்று கூடுகின்றனர்‌. மேலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அந்தக்‌ கப்ருகளை உடைத்து தரைமட்டமாக்குமாறு ஏவினார்கள்‌. இமாம்‌ முஸ்லிம்‌ அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌: அபுல்‌ ஹய்யாஜ்‌ அல்‌ அஸதி (ரஹ்‌) அவர்கள்‌ அலி (ரலி) அவர்கள்‌ எனக்குச்‌ சொன்னார்கள்‌ என அச்செய்தியை பின்வருமாறு கூறுகிறார்‌: எந்த ஓவியங்களையும்‌ வைக்காமலும்‌, உடைக்காமலும்‌, கண்ணியப்‌ படுத்தப்படும்‌ எந்தக்‌ கப்ருகளையும்‌ உடைத்து தரமட்டமாக்காமலும்‌ விட வேண்டாம்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ என்னை அனுப்பி வைத்தார்கள்‌ அதே போன்று உன்னையும்‌ நான்‌ அனுப்பி வைக்கட்டுமா என்றார்கள்‌”.

இன்னும்‌ சமாமா இப்னு ஷுபிய்யைத்‌ அவர்களைத்‌ தொட்டும்‌ முஸ்லிமில்‌ அறிவிக்கப்படுகிறது: “ரோம்‌ தேசத்தில்‌ (பிரவ்தஸ்‌) எனும்‌ இடத்தில்‌ புழாளா இப்னு உபைத்‌ என்பவரோடு நாம்‌ இருந்தோம்‌. அச்சமயம்‌ எங்களோடு இருந்த ஒரு தோழர்‌ இறந்து விட்டார்‌. பழாளா என்பவர்‌ அவரின்‌ கப்ரை பூமியுடன்‌ மட்டமாக வைக்கும்படி ஏவினார்கள்‌. பின்பு நபி (ஸல்‌) அவர்கள்‌ இவ்வாறு மட்டம்‌ செய்யுமாறு ஏவியதை நான்‌ கேட்டுள்ளேன்‌ என்றார்கள்‌.

இவர்கள்‌ இந்த இரண்டு நபி மொழிகளுக்கும்‌ மாற்றம்‌ செய்வதை பார்க்கமுடிகிறது. பூமியை விட்டும்‌ கப்ருகளை உயர்த்துகிறார்கள்‌. அதன்‌ மீது குப்பாக்களையும்‌ அமைக்கின்றார்கள்‌.

மேலும்‌ இமாமவர்கள்‌ கூறுகையில்‌ : நபியவர்கள்‌ காட்டிய வழிமுறை, மேற்கூறப்பட்டவற்றிலிருந்து அவர்கள்‌ தடுத்த நோக்கம்‌ ஆகியவற்றுக்கும்‌, இவர்கள்‌ உருவாக்கிய வழிமுறை அதன்‌ நோக்கம்‌ என்பவற்றுக்கிடையிலுள்ள பாரிய வேறுபாட்டைக்‌ கவனித்துப்‌ பாருங்கள்‌. இதில்‌ கணிப்பிட முடியாதளவு தீய விளைவுகள்‌ ஏற்படுகின்றன என்பதை யாராலும்‌ மறுக்கமுடியாது.

பின்பு இமாமவர்கள்‌ அந்தப்‌ பிரச்சினைகளையும்‌, விளைவுகளையும்‌ குறிப்பிடுகிறார்கள்‌ அவைகள்‌ பின்வருமாறு:

கப்ருகளை தரிசிக்கும்‌ போது மறுமையை ஞாபகப்படுத்தல்‌, தரிசிக்கப்படுவருக்கு நல்லது செய்தல்‌, அவருக்காக இறைவனிடம்‌ பிராத்தனை செய்தல்‌, அவர்‌ மீது அன்பு காட்டல்‌, அவருக்காக மன்னிப்பு வேண்டல்‌, அவருக்காக நல்வாழ்வை வேண்டுதல்‌ போன்றவைகளே நபி (ஸல்‌) அவர்களின்‌ வழிமுறைகளாகும்‌. எனவே தரிசிப்பவர்‌ தனக்கும்‌ தனது உள்ளத்திற்கும்‌ நல்லது செய்பவராகவே இருப்பார்‌.

ஆனால்‌ இந்த இணை வைப்பாளர்கள்‌ இவ்விடயத்தை (தரிசிப்பதன்‌ நோக்கத்தை) தலைகீழாக மாற்றிவிட்டனா. இறந்தவரைக்‌ கொண்டு இணை வைத்தல்‌, அவரை அழைத்தல்‌, அவரைக்‌ கொண்டு பிராத்தனை செய்தல்‌, அவரவர்களுடைய தேவைகளை இறந்தவர்களிடம்‌ கேட்டல்‌, இறந்தவரிடமிருந்து பரக்கத்‌ கிட்டுமென எதிர்பார்த்தல்‌, இவர்களுடைய எதிரிகளுக்கு எதிராக உதவி செய்வார்‌ என்று நினைத்தல்‌ போன்றவைகளை செய்யலானார்கள்‌. இவர்கள்‌ தனக்கும்‌ இறந்தவர்களுக்கும்‌ தீயதையே செய்யலானார்கள்‌.

நேர்ச்சைகளையும்‌, பலிகளையும்‌ இறந்தவர்களுக்காக முன்வைத்தல்‌ பெரிய ஷிர்க்காகும்‌ என்பது இதனால்‌ தெளிவாகின்றது. காரணம்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கப்ருகளை எந்த நிலையில்‌ வைக்கச்‌ சொன்னார்களோ அந்த நிலைக்கு மாற்றமாக இருப்பதனாலாகும்‌. கப்ருகள்‌ மீது கட்டுவதையும்‌, அதன்‌ மீது பள்ளிவாசல்கள்‌ உருவாக்குவதையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்தார்கள்‌. ஏனெனில்‌ அதன்‌ மீது குப்பாக்களும்‌, பள்ளிகளும்‌ கட்டப்பட்டதால்‌ அங்கு அடக்கம்‌ செய்யப்பட்டிருப்பவர்கள்‌ மனிதர்களுக்கு நல்லதை அல்லது தீங்கை செய்வார்கள்‌ என மடையர்கள்‌ நம்பிக்கை வைத்தார்கள்‌. மேலும்‌ அடக்கம்‌ செய்யப்பட்டிருப்பவர்களிடம்‌ உதவி வேண்டினால்‌ உதவி செய்வார்கள்‌ என்றும்‌ இவர்களிடம்‌ வருபவர்களின்‌ தேவைகளை நிறைவேற்றுவார்கள்‌ என்றும்‌ நம்பிக்கை வைத்து நேர்ச்சைகளையும்‌, பலிகளையும்‌ முன்வைக்கலானார்கள்‌. எதுவரைக்கு மென்றால்‌ அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகள்‌ வணக்கப்படும்‌ அளவிற்கு ஆகிவிட்டது.

“இறைவா? எனது கப்ரை வணங்கப்படும்‌ சிலையாக மாற்றி விடாதே என்று பிராத்தனை செய்தார்கள்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌:. (ஆதாரம்‌ : மாலிக்‌, அஹ்மத்‌)

நபி (ஸல்‌) அவர்கள்‌ இவ்வாறு பிரார்த்திக்கக்‌ காரணம்‌ பிற்காலத்தில்‌ சில கப்றுகள்‌ இதுபோல்‌ ஆக்கப்படும்‌ என்பதனாலேயே. இஸ்லாமிய நாடுகள்‌ என்று சொல்லப்படும்‌ அதிகமான நாடுகளில்‌ இவ்வாறு நடக்கின்றது. ஆனால்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ துஆவின்‌ பரகத்தைக்‌ கொண்டு அவர்களின்‌ கப்ரை இறைவன்‌ பாதுகாத்துள்ளான்‌. என்றாலும்‌ பித்‌அத்துகளை பின்பற்றக்‌ கூடிய சில மடையர்களால்‌ சில முரணான விடயங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ பள்ளியில்‌ நட்பதை காண முடிகிறது. என்றாலும்‌ அவர்களின்‌ கப்ரை அவர்களால்‌ அடைய முடியாது. ஏனெனில்‌ அவர்களுடைய கப்ரு அவர்களின்‌ வீட்டில்‌ இருக்கிறது, பள்ளியில்‌ அல்ல. மேலும்‌ அவர்களின்‌ கப்ரு சுவர்களால்‌ சூழப்பட்டுள்ளது.

அல்லாமா இப்னு கையூம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அதனை ஒரு பாடலில்‌ பின்வருமாறு குறிப்பிட்டார்கள்‌:

அகிலத்தாரின்‌ இரட்சகன்‌ நபிகளாரின்‌ அழைப்புக்கு விடை கொடுத்து விட்டான்‌. எனவே மூன்று சுவர்கள்‌ கொண்டு அதனைப்‌ பாதுகாத்தான்‌.


أحدث أقدم