அறபியில்: அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி
தமிழில்: அபு ஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்
மொழிபெயர்த்தோன் உரை
الحمد لله ، والـصـلاة والـسـلام على رسول الله ، وعلى آله وأصحابه ومن اهتدى بهداه، أما بعد
அன்பின் வாசகர் நெஞ்சங்களுக்கு;
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
நாம் கீழே பதிவாக்கியுள்ள தமிழாக்கம் யமன் திருநாட்டில் 'தம்மாஜ்' எனும் பிரதேசத்தில் 'தாருல் ஹதீஸ்' எனும் நாமத்தில் இயங்கிவரும் கலாசாலையைத் தலைமை தாங்கி வழிநடாத்திச் செல்லும் அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் 'அல்மபாதிஉல் முபீதா பித் தவ்ஹீதி வல் பிக்ஹி வல் அகீதா' என்ற நூலாகும்.
இந்நூலில் மார்க்கக் கல்வியின் பிரதான பிரிவுகளில் மூன்றின் உள்ளடக்கம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அவை தவ்ஹீத், பிக்ஹ் மற்றும் அகீதா ஆகியனவாகும்.
உண்மையில், இம்முப்பிரிவுகளும் இஸ்லாத்தில் பிரவேசித்துள்ள அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய அம்சங்களாகும். அவற்றைச் சரிவரக் கற்பதின் மூலமே ஒரு முஸ்லிம் தனது கடமையை உணர்ந்து செயற்பட முடிகின்றது. எதார்த்தத்தில் கூறப்போனால், அத்தகைய அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் வயதெல்லை கிடையாது. தன்னை முஸ்லிம் என்று சொல்லும் அனைவரும் இது விடயத்தில் கவனம் எடுத்தேயாக வேண்டும்.
இன்று எம்சகோதரர்களில் பலரிடத்தில் இப்பிரிவுகள் தொடர்பான அறிவு இல்லாத நிலையைக் காண்கின்றோம். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கின்றீர்;கள்? நிச்சயமாக அவர்கள் சிறுபராயத்தில் இருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் இது விடயத்தில் விட்ட தவறுதான் காரணமாகும். உண்மையில், பெற்றோர்களாகிய அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வி தொடர்பான போதனைகளை வழங்கியிருப்பார்களானால் நிச்சயமாக அவர்களுக்கு மத்தியில் நிகழும் பிரச்சினைகளின் போது அவற்றைச் சரிவரப் பகுப்பாய்வு செய்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவைப் பெற்றிருப்பார்கள். இந்நிலை இனியும் நீடிக்கக்கூடாது. எம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுப்போம்.
அம்முயற்சியின் ஒருகட்டமாக, இந்நூலாசிரியர் நாம் ஏலவே குறிப்பிட்ட பிரதான பிரிவுகளை இலகுவாக சிறார்களின் மனதில் பதியவைப்பதற்காக கேள்வி பதில் என்ற அமைப்பில் குர்ஆன் சுன்னாஹ் ஆதாரங்களின் அடிப்படையில் தொகுத்துத்தந்துள்ளார். அவை நிச்சயம் வாசிப்பதற்கும், விளங்குவதற்கும், மனனமிடுவதற்கும் இலகுவாக இருக்கும்.
எனவே, நாமும் இதனை வாசித்துப் பயன்பெறுவதுடன் எம் பிள்ளைகளுக்கும் பயனடைய வைக்கக்கூடிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அந்தவிதத்தில், மார்க்க விடயங்களை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கக்கூடிய அழைப்பாளர்களும், மார்க்க விடயங்களைப் படிப்பதிலும் அதனைப் பிறருக்கு சென்றடைவதற்கான வழிவகைகளைச் செய்வதிலும் கரிசனை காட்டக்கூடியவர்களும் இப்புத்தகத்தை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட முடியும். இன்னும், இதனை கல்வி போதிக்கும் பாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், மத்ரஸாக்கள் போன்றவற்றில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இணைத்து பயிற்றுவிக்கவும் முடியும்.
மேலும், இப்புத்தகத்தின் முதற்பகுதியில் நூலாசிரியர் தவ்ஹீதின் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அதனைத்தான் நாம் இங்கு பிரசுரித்துள்ளோம். ஏனைய இரு பகுதிகளையும் இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் பகுதி பகுதியாக பிரசுரிப்போம். அத்தோடு, எமது தமிழாக்கத்தின் ஈற்றில் அதனை முழுமையாக அனைவரும் தம்வசம் வைத்து வாசித்துப் பயன்பெறுவதற்காக வேண்டி நூல்வடிவிலும் வெளியாக்கத் திட்டமிட்டுள்ளோம். அல்லாஹ் எம் பணிகளைச் சரிவரச் செய்ய என்றும் எமக்குத் துணை நிற்பானாக!
முன்னுரை
அருள் பொருந்தியதும் சிறப்புமிக்கதுமான புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! மேலும், வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் இணைதுணையற்றவன் என்றும் சாட்சி பகருகின்றேன். இன்னும், நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என சாட்சி பகருகின்றேன். அடுத்து,
அல்லாஹுத்தஆலா தன்னுடைய சங்கைமிக்க வேதத்தில் கூறும் போது: 'யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்னமாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்? எனக் கேட்ட போது அவர்கள், உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம் எனக் கூறினர்.' (அல்பகரா: 133)
மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவாகியுள்ளதாவது, 'ஒரு நாள் நான் நபியவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன், (அப்போது நபியவர்கள் என்னை நோக்கி,) சிறுவனே! நிச்சயமாக நான் உனக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் போணிப்பாதுகாத்துக் கொள் அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்! நீ அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள் நீ அவனை உன் கண்ணெதிரில் கண்டு கொள்வாய்! நீ கேட்பாதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! மேலும், நீ உதவிதேடுவதென்றால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! இன்னும், அறிந்து கொள்! நிச்சயமாக உம்மத்தினர் (அனைவரும்) உனக்கு ஏதாவது ஒன்றைக் கொண்டு பிரயோசனம் அளிக்க நாடினால், அல்லாஹ் உனக்கென்று எழுதியதைக் கொண்டேயன்றி வேறு எதனைக் கொண்டும் அவர்களால் உனக்கு பிரயோசனம் அளிக்க முடியாது. மேலும், (அவர்கள் அனைவரும்) ஒன்றிணைந்து ஏதாவது ஒன்றைக் கொண்டு உனக்குத் தீங்கிழைக்க நாடினால், அல்லாஹ் உன் மீது எழுதியிருக்கின்ற ஒன்றைக் கொண்டேயன்றி (வேறு எதனைக் கொண்டும்) அவர்களால் உனக்குத் தீங்கிழைக்க முடியாது. (விதியை எழுதிய) பேனைகள் உயர்த்தப்பட்டுவிட்டன, (அவை எழுதப்பட்ட) ஏடுகளும் காய்ந்துவிட்டன.
இக்குர்ஆனிய வசனமும் நபிகளாரது பொன்மொழியும் மற்றும் இவை இரண்டைப் போன்ற மூலாதரச் சான்றுகளும் பிள்ளைகளுக்கு அல்லாஹ்வின் ஏகத்துவம் தொடர்பான வார்த்தைகளின் மொத்த தொகுப்புக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கும், அவனை வணங்குவது பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கும், அவனது எல்லைகளைப் பேணிப்பாதுகாப்பதற்கும், அவன் மீது பொறுப்புச் சாட்டுவதற்கும், அவனது கண்காணிப்பை உணர்த்துவதற்கும், நல்லது கெட்டதாக அமையக்கூடிய விதியை விசுவாசம் கொள்வதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளன. மேலும், எவர் இதனடிப்படையில் (சிறுபராயத்தில் இருந்து) வளர்ந்துவருகிறாரோ அவர் ஸாலிஹான நல்லடியார்களில் ஒருவராகத் திகழ்வதற்கு மிகப்பொருத்தமானதாக எதிர்பார்க்கப்படும் சரியான மற்றும் மார்க்கரீதியிலான தர்பியா இதுவேயாகும். இதனாலும் நான் என்னுடைய சிறிய பிள்ளைகளுக்காக வேண்டி (இந்நூலை) எழுதுவதற்குத் தூண்டப்பட்டேன். – நான் அல்லாஹ்விடத்தில் அவர்களைச் சீர் செய்யுமாறும், அவர்களைக் கொண்டு சீர் செய்வதையும் கேட்கின்றேன் - தவ்ஹீத், அகீதா, பிக்ஹ் ஆகியவற்றின் அடிப்படைகள் தொடர்பான இந்த இலகுவான வார்த்தைகள் குர்ஆன், சுன்னாஹ் ஆதாரங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டவையாகும். இதனைக் கொண்டு அவர்களும், ஏனைய முஸ்லிம்களின் பிள்ளைகளும் பிரயோசனம் அடைய அல்லாஹ்விடம் ஆசை வைக்கின்றேன். மேலும், அல்லாஹ்விடத்தில் பொருத்தத்தையும் கேட்கின்றேன்.
அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி
ரஜப் மாதம் 1425 ஹிஜ்ரி
தவ்ஹீதின் அடிப்படைகள்
1)
إذا قيل لك: من خلقك؟ فقل: خلقني الله، وخلق جميع المخلوقات, والدليل قول الله تعالى: {اللَّهُ خَالِق كُلِّ شَيْءٍ} الزمر: 62
உன்னைப் படைத்தவன் யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், என்னையும், அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தவன் அல்லாஹ் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்.' (அஜ்ஜுமர்: 62)
2)
إذا قيل لك: من ربك؟ فقل: الله ربي ورب كل شيء, والدليل قول الله تعالى: {قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ} الأنعام: 164. وقوله تعالى : الحمد لله رب العالمين الفاتحة: 2
உன்னுடைய இரட்சகன் யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ்வே எனது இரட்சகனாகவும் அனைத்து வஸ்துக்களினது இரட்சகனாகவும் இருக்கின்றான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ் அல்லாதவனையா இரட்சகனாக நான் எடுத்துக் கொள்வேன்? அவனே அனைத்துப் பொருட்களினதும் இரட்சகனாக இருக்கின்றான் என (நபியே!) நீர் கூறுவீராக!' (அல்அன்ஆம்: 164) மேலும் கூறுகின்றான்: 'அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.' (அல்பாதிஹா: 2)
3)
إذا قيل لك: لماذا خلقك الله؟ فقل: خلقنا لعبادته، والدليل قول الله تعالى: {وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْأِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ} الذاريات: 56
அல்லாஹ் ஏன் உன்னைப் படைத்தான்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவனை வணங்குவதற்காக வேண்டி எங்களைப் படைத்தான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'என்னை வணங்குவதற்காகவேயன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.' (அத்தாரியாத்: 56)
4)
إذا قيل لك: ما دينك؟ فقل: ديني هو دين الإسلام الحق, والدليل قول الله تعالى: { إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْأِسْلامُ} آل عمران: 19 وقوله تعالى: {هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ} التوبة: 33 وقوله تعالى: {وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ} آل عمران: 85
உன்னுடைய மார்க்கம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், எனது மார்க்கம் உண்மையான இஸ்லாமிய மார்க்கமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் தான்.' (ஆல இம்றான்: 19) மேலும் கூறுகின்றான்: 'அவனே தனது தூதரை நேர்வழியையும், சத்திய மார்க்கத்தையும் கொண்டு அனுப்பிவைத்தான்.' (அத்தவ்பா: 33) இன்னும் கூறுகின்றான்: 'யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகின்றானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்?' (ஆல இம்றான்: 85)
5)
فإذا قيل لك: من نبيك؟ فقل: نبيي ونبي هذه الأمة جميعا هو محمد رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-، والدليل قول الله تعالى: {كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ} الأحزاب: 40 ، وقوله تعالى: {هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولاً مِنْهُمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ} الجمعة:2 ، وقوله تعالى: {فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ} الأعراف:185 وانظر 8.
உன்னுடைய நபி யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், என்னுடைய நபியும் இந்த உம்மத்தினர் அனைவருடைய நபியும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'முஹம்மத், உங்களது ஆண்களின் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்.' (அல்அஹ்ஜாப்: 40) மேலும் கூறுகின்றான்: 'அவன் தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவனது வசனங்களை அவர் அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். மேலும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.' (அல்ஜும்ஆ: 2) இன்னும் கூறுகின்றான்: 'ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், (எழுத்தறிவற்ற) உம்மி நபியாகிய அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும், அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்பிக்கை கொள்கிறார். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அவரையே பின்பற்றுங்கள்.' (அல்அஃராப்: 158) மற்றும் இலக்கம் 8ஐப் பார்க்க.
6)
فإذا قيل لك: ما أول واجب على العبد؟ فقل: تعلم توحيد الله عز وجل، والدليل حديث ابن عباس -رضي الله عنهما- قال: لما بعث النبي -صلى الله عليه وعلى آله وسلم- معاذ بن جبل إلى اليمن قال له: { إنك تقدم على قوم من أهل الكتاب, فليكن أول ما تدعوهم إلى أن يوحدوا الله تعالى } متفق عليه، وهذا لفظ البخاري
அடியான் மீதுள்ள முதல் கடமை எது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ்வின் ஏகத்துவத்தை (ப் பற்றிக்) கற்றுக் கொள்வதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். அவர்கள் கூறுகிறார்கள்: 'நபியவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பிய போது அவரை நோக்கி (நபியவர்கள் பின்வருமாறு) கூறினார்கள்: நிச்சயமாக நீர் வேதம் கொடுக்கப்பட்ட ஒரு கூட்டத்திடம் செல்ல இருக்கின்றீர். எனவே, நீர் அவர்களை அழைக்கும் முதல் விடயம் அவர்கள் அல்லாஹுத்தஆலாவை ஒருமைப்படுத்துவதாக இருக்கட்டும்' என்றார்கள். (புகாரி முஸ்லிம்) இது இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாசகமாகும்.
7)
فإذا قيل لك: ما معنى لا إله إلا الله؟ فقل: معناها: لا معبود بحق إلا الله، والدليل قول الله تعالى: { فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ } محمد: 19 وقوله: { ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ } الحج: 62
لا إلهَ إلاّ اللهُ என்ற வாசகத்தின் பொருள் யாது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அதனுடைய பொருள் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படத் தகுதியானவன் வேறுயாருமில்லை என்பதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறெவரும் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக!' (முஹம்மத்: 19) மேலும் கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்.' (அல்ஹஜ்: 62)
8)
فإذا قيل لك: ما معنى محمد رسول الله؟ فقل: معناها أنه رسول الله إلى الناس كافة، من الجن والإنس، والدليل قول الله تعالى: { وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ } سبأ: 28 وعن أبي هريرة رضي اله عنه أن النبي صلى الله عليه وسلم قال: { ... وأرسلت إلى الخلق كافة } رواه مسلم ويجب علينا جميعا طاعته وتصديقه واجتناب ما نهى عنه، والدليل قول الله تعالى { قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ } النور: 54 وقوله تعالى: { هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ } يس: 52 وعن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم } متفق عليه
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார் என்பதின் கருத்து யாது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அதனுடைய கருத்து, நிச்சயமாக அவர்கள் ஜின் மற்றும் மனிதன் உள்ளிட்ட முழு மனித சமுதாயத்திற்கும் தூதராகவுள்ளார்கள் என்பதுவாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(நபியே!) மனிதர்கள் அனைவருக்கும் (அன்றி) நாம் உம்மை அனுப்பவில்லை.' (ஸபஉ: 28) மேலும், அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'படைப்பினங்கள் அனைவருக்குமாக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.' (முஸ்லிம்) இன்னும், அவரை வழிப்படுவதும், உண்மைப்படுத்துவதும், அவர் தடுத்தவற்றை தவிர்ந்து கொள்வதும் எங்கள் அனைவர் மீதும் கடமையாகும். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் : 'நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், இன்னும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று (நபியே) நீர் கூறுவீராக!' (அந்நூர்: 54) மேலும் கூறுகின்றான்: 'அர்ரஹ்மான் வாக்களித்தது இதுதான். தூதர்கள் உண்மையே உரைத்தனர் (என்று கூறப்படும்)' (யாஸீன்: 52) இன்னும் நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நான் எதைவிட்டும் உங்களைத் தடுத்துள்ளேனோ அதை நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும், எதைக் கொண்டு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை முடியுமான அளவு எடுத்து நடவுங்கள்.' (புகாரி முஸ்லிம்)
9)
فإذا قيل: ما حق الله على عباده؟ فقل: حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا، والدليل حديث معاذ بن جبل أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا } متفق عليه
தனது அடியார்கள் மீது அல்லாஹ்வின் உரிமை எது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், தனது அடியார்கள் மீது அல்லாஹ்வின் உரிமையாகிறது அவனை அவர்கள் வணங்குவதும், எந்த ஒன்றைக் கொண்டும் அவனுக்கு இணைவைக்காமல் இருப்பதுமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'அடியார்கள் மீது அல்லாஹ்வின் உரிமையானது அவனை அவர்கள் வணங்குவதும், அவனுக்கு எந்த ஒன்றைக் கொண்டும் இணைவைக்காமல் இருப்பதுமாகும். மேலும், அல்லாஹ் மீது அடியார்களின் உரிமையானது எவர்கள் எந்த ஒன்றைக் கொண்டும் இணைவைக்காமல் இருக்கின்றார்களோ, அவர்களை வேதனை செய்யாமல் இருப்பதுவாகும்.' (புகாரி முஸ்லிம்)
10)
فإذا قيل لك: ما هو الشرك؟ فقل: هو عبادة غير الله عز وجل، فكل ما كان عبادة لله عز وجل فصرفه لغير الله شرك، والدليل قول الله تعالى: { وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً } النساء: 36
ஷிர்க் - இணைவைத்தல் - என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக வணக்கம் புரிதலாகும் என்று கூறு. எவையெல்லாம் அல்லாஹ்வுக்குச் செலுத்தப்பட வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருக்கின்றனவோ அவற்றை அல்லாஹ் அல்லாதோருக்காகத் திருப்புவது இணைவைப்பாகும். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்.' (அந்நிஸா: 36)
11)
فإذا قيل لك: فما حكم تصوير ذوات الأرواح؟ فقل: تصوير ذوات الأرواح من كبائر الذنوب، والدليل حديث ابن مسعود -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إن أشد الناس عذابا يوم القيامة المصورون } متفق عليه. وفي حديث أبي جحيفة -رضي الله عنه- قال: نهى رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- عن ثمن الكلب، وثمن الدم... ولعن المصور. أخرجه البخاري.
உயிருள்ளவற்றை படம்பிடிப்பதின் சட்டம் என்ன என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், உயிருள்ளவற்றை படம்பிடிப்பது பெரும்பாவங்களில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நிச்சயமாக மறுமை நாளில் மனிதர்களில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவோர் உருவமைப்பவர்களாவர்.' (புகாரி முஸ்லிம்) மேலும், அபூ ஜுஹைபா (ரழி) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: 'நபியவர்கள் நாய் விற்றுப் பெறப்பட்ட சம்பாத்தியத்தையும், உதிரத்திற்காகப் பெறப்பட்ட சம்பாத்தியத்தையும் - என்று தொடர்கிறது அவரது அறிவிப்பு - தடைசெய்தார்கள். மேலும், உருவமைப்பவனையும் சபித்தார்கள்.' (புகாரி)
12)
فإذا قيل لك: فما تعلق تصوير ذوات الأرواح بالشرك؟ فقل: إن التصوير خلق يكون به المصور مضاهيا ومشاركا لله عز وجل في ذلك، والدليل حديث عائشة -رضي الله عنها- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { أشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله } متفق عليه. وحديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: قال الله تعالى { ومن أظلم ممن ذهب يخلق كخلقي... } متفق عليه
உயிருள்ளவற்றை படம்பிடிப்பதிற்கும், இணைவைத்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று உன்னிடத்தில் வினவப்பட்டால், நிச்சயமாக படம்பிடித்தலானது படைத்தலாகும். அந்நடவடிக்கை மூலம் உருவமைப்பவரானவர் அது விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணையாளனாகவும், கூட்டாளனாகவும் ஆகிவிடுகின்றான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, ஆயிஷா (ரழி) அவர்களின் ஹதீஸாகும். (அதில் இடம்பெற்றுள்ளதாவது) 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: மறுமைநாளில் மனிதர்களில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவோர் அல்லாஹ்வினுடைய படைப்பிற்கு இணையாகுபவர்களாவர்.' (புகாரி முஸ்லிம்) மேலும், அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது: 'நிச்சயமாக அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்: என்னுடைய படைப்பைப்போன்று படைக்க நாடுபவனைவிட அநியாயக்காரன் யாரிருக்க முடியும்?' (புகாரி முஸ்லிம்)
13)
فإذا قيل: ما تعريف العبادة؟ فقل: هي اسم جامع لكل ما يحبه الله ويرضاه، والدليل قوله تعالى: { إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ } الزمر: 7
இபாதத் -வணக்கம்- இன் வரைவிலக்கணம் என்னவென்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் விரும்பக்கூடிய மற்றும் பொருந்திக் கொள்ளக்கூடிய அனைத்து வகையான விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு பெயர்ச் சொல்லாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவனாவான். அவன் தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை பொருந்திக்கொள்ளமாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அதை அவன் உங்களுக்குப் பொருந்திக் கொள்வான்.' (அஸ்ஸுமர்: 7)
14)
فإذا قيل لك: أين الله؟ فقل: الله في السماء، مستو على عرشه، والدليل قول الله تعالى: { أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ } الملك: 16 وقوله تعالى: { الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى } طه: 5 وحديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر, يقول: من يدعوني فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له } متفق عليه. والنزول يكون من أعلى
அல்லாஹ் எங்கு இருக்கின்றான்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் வானத்திற்கு மேல் தனது அர்ஷின் மேல் உயர்ந்தான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'வானத்தில் உள்ளவன் உங்களைப் பூமிக்குள் உள்வாங்கி விடமாட்டான் என்று, நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அப்போது அது பலமாக அசையும்.' (அல்முல்க்: 16) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: 'அர்ரஹ்மான் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மேல் உயர்ந்தான்.' (தாஹா: 4) இன்னும், அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது, 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இரவினதும் மூன்றில் ஒருபகுதி எஞ்சியிருக்கும் நிலையில் எங்களுடைய இரட்சகன் உலகின் முதல் வானத்திற்கு இறங்கி, யார் என்னை அழைக்கின்றாரோ அவருக்கு நான் பதிலளிப்பேன், யார் என்னிடத்தில் கேட்கின்றாரோ அவருக்குக் கொடுப்பேன், யார் என்னிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கின்றாரோ அவரை மன்னிப்பேன் என்றும் கூறுவான்.' (புகாரி முஸ்லிம்) எனவே, இறங்குதலானது மேலிருந்து கீழ்நோக்கியே இடம்பெற முடியும்.
15)
فإذا قيل لك: هل الله معنا؟ فقل: الله عز وجل معنا بعلمه، والدليل قول الله تعالى: { وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ } الحديد: 4 وقوله: { وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الْأَرْضِ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ } الأنعام: 3 قال ابن كثير: المراد أنه الله الذي يعلم ما في السموات وما في الأرض، من سر وجهر
அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றானா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ் எங்களுடன் அவனது அறிவைக்கொண்டு இருக்கின்றான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'மேலும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான்.' (அல்ஹதீத்: 4) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: 'வானங்களிலும், பூமியிலும் (உண்மையாக வணங்கப்படும்) அல்லாஹ் அவன் தான். உங்கள் இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிவான். மேலும், நீங்கள் சம்பாதிப்பவற்றையும் அவன் நன்கறிவான்.' (அல்அன்ஆம்: 3) இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இவ்வசனம் குறித்துப் பேசுகையில்: 'நிச்சயமாக அல்லாஹ் ஆகிறவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவைபற்றிய இரகசியம், பரகசியம் ஆகியவற்றை அறிபவனாகவுள்ளான்' என்கிறார்.
16)
فإذا قيل لك: ما تعريف الإسلام؟ فقل: هو الاستسلام لله بالتوحيد، والانقياد له بالطاعة، والخلوص من الشرك. والدليل قول الله تعالى: { فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ } الحج: 34 وقوله: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ } آل عمران: 102
இஸ்லாத்தின் வரைவிலக்கணம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஏகத்துவத்தைக் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிவதும், வழிப்படுவதைக் கொண்டு கீழ்படிவதும், இணைவைப்பில் இருந்து நீங்கிக் கொள்வதுமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.' (அல்ஹஜ்: 34)
மேலும் கூறுகின்றான்: 'நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்குப் பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாகப் பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.' (ஆல இம்ரான்: 102)
17)
فإذا قيل لك: هل دين الإسلام كامل، أم يحتاج إلى تكميل؟ فقل: هو دين كامل، والدليل قول الله تعالى: { الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْأِسْلامَ دِيناً } المائدة: 3
இஸ்லாம் மார்க்கம் பூர்த்தியானதா? அல்லது பூர்த்தி செய்யப்பட வேண்டியதா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அது பூர்த்தியானது என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம்.' (அல்மாயிதா: 3)
18)
فإذا قيل لك: من أين يأخذ المسلم دينه؟ فقل: يأخذ المسلم دينه من القرآن والسنة على فهم السلف الصالح، والدليل قول الله تعالى: { أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ } العنكبوت: 51 وقوله تعالى: { فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ } النساء: 59 وقوله تعالى: { اهْدِنَا الصِّرَاط المُسْتقِيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلا الضَّالِّينَ } الفاتحة:6- 7 وقوله تعالى: { وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيراً } النساء: 115 وانظر الحديث الذي بعد هذا
முஸ்லிமானவன் தனது மார்க்கத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்வான்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், முஸ்லிமானவன் தனது மார்க்கத்தை ஸலபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இருந்து பெற்றுக் கொள்வான் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(நபியே) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா?' (அல்அன்கபூத்: 51)
மேலும் கூறுகின்றான்: '(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விடயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்.' (அன்னிஸா: 59)
இன்னும் கூறுகின்றான்: 'நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.' (அல்பாதிஹா: 6,7)
இன்னும் கூறுகின்றான்: 'எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கொட்டது.' (அன்னிஸா: 115) மேலும், இதற்குப் பின்னால் இடம்பெற்றிருக்கும் ஹதீஸைப் பாருங்கள்.
19)
فإذا قيل لك: ما عقيدتك؟ فقل: أنا سني سلفي، والدليل حديث العرباض بن سارية -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور؛ فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة } أخرجه أبوداود وغيره، وهو حديث حسن
உன்னுடைய அகீதா என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நான் ஒரு ஸுன்னி - ஸுன்னாஹ் வழி நடக்கக்கூடியவன் - மற்றும் ஸலபி - ஸலப்களின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டவன் - என்று கூறு. அதற்கான ஆதாரமாக அல்இர்பாழ் இப்னு ஸாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் அமைகின்றது. அவர் தனது செய்தியில்: 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். எனவே, உங்கள் மீது என்னுடைய வழிமுறையையும், நேர்வழி நடந்த கலீபாக்களினது வழிமுறையையும் இருக்கின்றன. அவற்றை கடைவாய்ப்பற்களினால் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்களைவிட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். நிச்சயமாகப் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் - நூதன அனுஷ்டானம் - ஆகும். இன்னும், பித்அத்துக்கள் ஒவ்வொன்றும் வழிகேடாகும்' என்று குறிப்பிட்டார்கள். (அபூதாவுத் மற்றும் அதுவல்லாத கிரந்தங்களில் இச்செய்தி பதிவாகியுள்ளது. மேலும், இது ஹஸன் எனும் தரத்தைப் பெற்ற ஒரு ஹதீஸ் ஆகும்.)
21)
فإذا قيل لك: من أول الرسل إلى أهل الأرض، ومن آخرهم؟ فقل: أولهم نوح عليه السلام، وآخرهم أفضل الأنبياء نبينا محمد -صلى الله عليه وعلى آله وسلم-، فبعثته أول العلامات الصغرى للساعة، ويجب علينا الإيمان بهم جميعا، والدليل حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال عن أهل المحشر يوم القيامة: { فيأتون نوحا فيقولون: يا نوح أنت أول الرسل إلى أهل الأرض، وسماك الله عبدا شكورا } متفق عليه.والدليل على أن آخرهم محمد -صلى الله عليه وعلى آله وسلم- قول الله تعالى: { مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ } الأحزاب: 40 وحديث ثوبان -رضي الله عنه- أنه -صلى الله عليه وعلى آله وسلم- قال: { وأنا خاتم النبيين لا نبي بعدي } أخرجه مسلم.والدليل على أنه أفضل الأنبياء حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { أنا سيد الناس يوم القيامة } متفق عليه. والدليل على أنه أول علامات الساعة: حديث سهل ابن سعد -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { بعثت أنا والساعة هكذا } وأشار بأصبعيه. متفق عليه. وعن أنس بن مالك -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { بعثت أنا والساعة كهاتين } وضم السبابة والوسطى. متفق عليه.والدليل أنه يجب علينا الإيمان بهم جميعا، ومن كفر بواحد منهم فقد كفر بهم جميعا؛ قول الله تعالى: { آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ } البقرة: 285 وقوله تعالى: { إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلاً * أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقّاً وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَاباً مُهِيناً } النساء: 150 151
பூமியில் உள்ளோருக்கு முதலாக அனுப்பப்பட்ட தூதர் யார்? என்றும் அவர்களில் இறுதியானவர் யார் என்றும் உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவர்களில் முதலாமவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் என்றும் இறுதியானவர் நபிமார்களில் தலைசிறந்தவரான எங்களுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள் என்றும் நீ கூறு. மேலும், அவரது வருகை மறுமை நாளின் சிறிய அடையாளங்களின் துவக்கமாகும். அத்துடன் அவர்கள் அனைவரையும் விசுவாசம் கொள்வது எமது கடமையுமாகும். அதற்கு ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் உள்ளவர்களின் நிலை குறித்துக் கூறுகையில்: அவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வருகைதந்து நூஹே! நீங்கள் பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதலாவது தூதராக உள்ளீர்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு நன்றியுள்ள அடியார் என்றும் பெயர் சூட்டியுள்ளான் ... (என்று கூறுவார்கள்.') (புகாரி முஸ்லிம்)
இன்னும் நபியவர்கள், அவர்களில் இறுதியானவர் என்பதற்காக ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'முஹம்மத், உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்.' (அல்அஹ்ஜாப்: 40)
மேலும், ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது, 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: இன்னும் நான் நபிமார்களின் முத்திரையாகவுள்ளேன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.' (முஸ்லிம்)
இன்னும், நபியவர்கள் நபிமார்களில் மிகச் சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நான் மறுமைநாளில் மனிதர்களின் தலைவனாக இருக்கின்றேன்.' (புகாரி முஸ்லிம்)
மேலும் நபியவர்கள், மறுமை நாளின் சிறிய அடையாளங்களில் முதல் அடையாளம் என்பதற்குச் சான்றாக ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: நான் நபியாக அனுப்பப்பட்டதும், மறுமை நாளும் இவ்வாறு இருக்கின்றன.' எனக்கூறி தனது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள். (புகாரி முஸ்லிம்) இன்னும், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இடம்பெற்ற அறிவிப்பில்: 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். நான் நபியாக அனுப்பப்பட்டதும், மறுமை நாளும் இவை இரண்டைப் போன்றும் இருக்கின்றன.' என்று கூறி தனது சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். (புகாரி முஸ்லிம்)
மேலும், அவர்கள் அனைவரையும் விசுவாசம் கொள்வது எமது கடமை என்பதற்கும், அவர்களில் ஒருவரையேனும் நிராகரித்தால் அது அனைவரையும் நிராகரித்ததிற்குச் சமனாகும் என்பதற்குமான சான்றாக, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.' (அல்பகரா: 285)
மேலும் கூறுகின்றான்: 'நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்குமிடையில் பாரபட்சம் காட்ட விரும்பி, '(தூதர்களில்) சிலரை நாம் நம்பிக்கை கொள்வோம். மற்றும் சிலரை நிராகரிப்போம்' என்று கூறி (நிராகரிப்பு, நம்பிக்கை ஆகிய) இவற்றுக்கு மத்தியில் ஒரு பாதையை எடுத்துக் கொள்ள நாடுகின்றார்களோ அவர்கள் தாம் உண்மையான நிராகரிப்பாளர்களாவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையையே நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.' (அன்னிஸா: 150, 151)
22)
فإذا قيل لك: جميع الرسل إلى ماذا يدعون الناس؟ فقل: يدعونهم إلى عبادة الله وحده لا شريك له، والدليل قول الله تعالى: { وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولاً أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ } النحل: 36
அனைத்துத் தூதர்களும் எதன்பால் மக்களை அழைக்கக்கூடியவர்களாக இருந்தனர்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், தனித்தவனும், இணையற்றவனுமாகிய அல்லாஹ்வை வணங்குவதின் பால் அவர்களை அழைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வை வணங்குங்கள். மேலும், (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) 'தாகூத்'தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.' (அந்நஹ்ல்: 36)
23)
فإذا قيل لك: ما تعريف التوحيد الذي جميع الرسل يدعون إليه؟ فقل: هو إفراد الله بالعبادة، والدليل قول الله تعالى: { وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً } النساء: 36 وقوله تعالى: { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ }
எல்லா தூதர்களும் அழைப்புவிடுத்த தவ்ஹீத் - ஏகத்துவம் - இன் வரைவிலக்கணம் யாது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், வணக்கத்தைக் கொண்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்.' (அன்னிஸா: 36) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: 'அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக!' (அல்இஹ்லாஸ்: 1)
24)
فإذا قيل لك: كم أقسام توحيد الله عز وجل؟ فقل: ثلاثة أقسام:
1. توحيد الربوبية
2. توحيد الألوهية
3. توحيد الأسماء والصفات.
والدليل قول الله تعالى: { بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ } وقوله تعالى: { رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيّاً } مريم: 65 فهاتان الآيتان فيها أنواع التوحيد الثلاثة
அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் வகைகள் எத்தனை என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று வகை என்று கூறு.
1. தவ்ஹீதுர் ருபூபிய்யாஹ்
2. தவ்ஹீதுல் உழூஹிய்யாஹ்
3. தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்
அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்.)' மேலும் கூறுகின்றான்: 'அவனே வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டுக்குமிடைப்பட்டவற்றினதும் இரட்சகன். எனவே, அவனையே நீர் வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அவனுக்கு நிகரான எவரையேனும் நீர் அறிவீரா?' (மர்யம்: 65) இவ்விரு வசனங்களிலும் தவ்ஹீதின் மூன்று வகைகளும் உள்ளடங்கியிருக்கின்றன.
25)
فإذا قيل لك: ما أعظم حسنة، وما أعظم سيئة؟ فقل: أعظم حسنة هو توحيد الله عز وجل، وأعظم سيئة هو الشرك بالله عز وجل، والدليل قول الله تعالى: { إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ } النساء: 48 وقوله تعالى: { فَمَا لَنَا مِنْ شَافِعِينَ * وَلا صَدِيقٍ حَمِيمٍ * فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ } الشعراء: 100 102 عن أنس بن مالك -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { شفاعتي لأهل الكبائر من أمتي } أخرجه أحمد، وهو حديث صحيح. وهذا يدل على أن أسعد الناس بشفاعة النبي -صلى الله عليه وعلى آله وسلم- هم أهل الكبائر من المسلمين، ولا شفاعة لمشرك.وعن جابر بن عبدالله -رضي الله عنهما- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { من مات لا يشرك بالله شيئا دخل الجنة، ومن مات يشرك بالله شيئا دخل النار } أخرجه مسلم
நன்மையின் மிக மகத்தானதும், தீமையின் மிக விபரீதமானதும் எவை என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நன்மையின் மிக மகத்தானது அல்லாஹ்வின் ஏகத்துவமும், தீமையின் மிக விபரீதமானது அல்லாஹ்வைக் கொண்டு இணைவைப்பதுமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை, தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான்.' (அன்னிஸா: 48) மேலும் கூறுகின்றான்: ' எனவே, எமக்குப் பரிந்துரை செய்வோர் எவருமில்லை. இன்னும் உற்ற நண்பனும் இல்லை. நிச்சயமாக (உலகிற்கு) திரும்பிச் செல்லுதல் எமக்கு இருந்தால் நாம் நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.' (அஷ்ஷுஅராஉ: 100-102) நபியவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'எனது பரிந்துரை என்னுடைய உம்மத்தில் பெரும்பாவம் செய்யதவர்களுக்கு இருக்கும்.' (அஹ்மத், இது ஸஹீஹ் எனும் தரத்தையுடைய செய்தியாகும்.) இன்னும் இச்செய்தியானது, நிச்சயமாக நபியவர்களின் பரிந்துரை மூலம் மனிதர்களில் மிக மகிழ்ச்சிக்குரியவர்கள் முஸ்லிம்களில் உள்ள பெரும்பாவம் செய்யதவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. மேலும், இணைவைக்கும் ஒருவனுக்கு அப்பரிந்துரை இருக்காது. நபியவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணைவைக்காத நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். மேலும், யார் அவனுக்கு ஏதாவது ஒன்றைக் கொண்டு இணைவைத்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் நரகம் நுழைந்துவிட்டார்.' (முஸ்லிம்)
26)
فإذا قيل لك: كم مراتب الدين؟ فقل: مراتب الدين ثلاثة: الإسلام، والإيمان، والإحسان، والدليل حديث عمر بن الخطاب -رضي الله عنه- في صحيح مسلم رقم(8)، وفيه أن جبريل عليه السلام سأل رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- عن الإسلام، ثم عن الإيمان، ثم عن الإحسان.
மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மார்க்கத்தின் படித்தரங்கள் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகிய மூன்றாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, ஸஹீஹ் முஸ்லிம் (இல: 8) இல் இடம்பெற்றுள்ள உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். அதில் இடம்பெற்றுள்ளதாவது, 'நிச்சயமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றியும் பிறகு ஈமானைப் பற்றியும் பிறகு இஹ்ஸானைப் பற்றியும் கேட்டார்கள்.'
27)
فإذا قيل لك: كم أركان الإسلام؟ فقل: خمسة أركان، والدليل حديث عبدالله بن عمر -رضي الله عنهما- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان } متفق عليه
இஸ்லாத்தில் கடமைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஐந்து தூண்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸாகும். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி சொல்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தைக் கொடுப்பதும், ஹஜ்ஜை நிறைவேற்றுவதும், ரமளான் நோன்பு நோற்பதுமாகும்.' (புகாரி முஸ்லிம்)
28)
فإذا قيل لك: ما هو الإيمان؟ فقل: هو نطق باللسان، واعتقاد بالقلب، وعمل بالجوارح، وهو يزيد بالطاعة، وينقص بالمعصية.والدليل على أنه نطق باللسان، وعمل بالجوارح حديث أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة، فأفضلها: قول: لا إله إلا الله، وأدناها: إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان } متفق عليه والدليل أنه اعتقاد بالقلب حديث عمر الذي تقدم في أركان الإيمان، وقول الله تعالى: { وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ } المائدة: 23 وعن أنس بن مالك -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { آية الإيمان حب الأنصار، وآية النفاق بغض الأنصار } متفق عليهوالدليل على أنه يزيد بالطاعة... قول الله تعالى: { إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَاناً وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ } الأنفال: 2 وقوله تعالى: { هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَاناً مَعَ إِيمَانِهِمْ } الفتح: 4 وقوله: { وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَاناً } المدثر: 31 والدليل على أنه ينقص بالمعصية أدلة زيادته، فإنه قبل أن يزيد كان ناقصا.قال الإمام البخاري في (كتاب الإيمان) من «صحيحه» باب (33): فإذا ترك شيئا من الكمال فهو ناقص. وحديث شعب الإيمان الذي ذكرناه قريبا، وحديث أبي سعيد الخدري -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان } أخرجه مسلم. وفيه أن إنكار المنكر من الإيمان
ஈமான் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நாவால் மொழிவதும், உள்ளத்தால் உறுதி கொள்வதும், உருப்புக்களால் அமல் புரிவதுமாகும் என்று கூறு. அத்துடன் அது, வழிப்படுவதின் மூலம் அதிகரிக்கும், மாறுசெய்வதின் மூலம் குறையும். மேலும், ஈமான் என்பது நாவால் மொழிவதும், உருப்புக்களால் அமல் புரிவதுமாகும் என்பதற்கான ஆதாரமாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ஈமானாகிறது எழுபத்து சொச்சம் அல்லது அறுபத்து சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் சிறந்தது لا إله إلا الله என்ற வார்த்தையாகும். மேலும், அவற்றில் மிகத்தாழ்ந்தது பாதையைவிட்டும் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றை அகற்றுவதாகும். இன்னும், வெட்கம் ஈமானின் ஒரு கிளையாகும்.' (புகாரி முஸ்லிம்) மேலும், ஈமானாகிறது உள்ளத்தால் உறுதிகொள்வதாகும் என்பதற்கான ஆதாரமாக ஈமானின் தூண்கள் தொடர்பான விடயத்தில் முன்வைத்த உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். இன்னும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வையுங்கள் எனக் கூறினர்.' (அல்மாயிதா: 23) மேலும், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்: 'ஈமானின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதும், நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸாரிகளை கோபிப்பதுமாகும்.' (புகாரி முஸ்லிம்) இன்னும், ஈமானாகிறது அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரமாக, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வைப்பற்றி ஞாபகமூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், அவர்கள் தமது இரட்சகன் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்.' (அல்அன்பால்: 2) இன்னும் கூறுகின்றான்: 'அவனே நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அவர்களது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக அமைதியை இறக்கிவைத்தான்.' (அல்பத்ஹ்: 4) மேலும் கூறுகின்றான்: 'நம்பிக்கை கொண்டோர் (தமது) ஈமானை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும்,' (அத்முத்தஸ்ஸிர்: 31) ஈமானாகிறது அதிகரிக்கும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் ஈமானாகிறது பாவத்தின் காரணமாகக் குறையும் என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஏனெனில், அது அதிகரிக்க முன்னதாகக் குறைவானதாகவே இருக்கும். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் தனது ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுல் ஈமான் எனும் பகுதியில் 33ம் பிரிவின் கீழ் கூறுகின்றார்: 'ஈமானைப் பூர்த்தி செய்யும் விடயங்களில் இருந்து எதாவது ஒன்றை விட்டுவிட்டால் அது குறைவானதாக இருக்கும்.' அத்தோடு, சற்றும் முன்னர் நாம் குறிப்பிட்ட ஈமானின் கிளைகள் தொடர்பான ஹதீஸும், அபூஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கும், 'உங்களில் எவர் ஒரு தீய காரியத்தைக் காண்கிறாரோ அவர் அதனைத் தனது கையால் தடுக்கட்டும், அவ்வாறு அவரால் முடியாத போது தனது நாவால் தடுக்கட்டும், அதற்கும் அவரால் முடியாதபோது தனது உள்ளத்தால் தடுக்கட்டும். அதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும்.' (முஸ்லிம்) என்ற ஹதீஸும் (இதற்கான ஆதாரங்களாகும்.) மேலும், இச்செய்தியில் நிச்சயமாக பாவத்தைத் தடுப்பது ஈமானில் நின்றும் உள்ளதாகும் என்ற விபரம் உள்ளடங்கியுள்ளது.
29)
فإذا قيل: كم أركان الإيمان؟ فقل: ستة أركان، والدليل حديث عمر بن الخطاب في «صحيح مسلم» أن النبي - صلى الله عليه وعلى آله وسلم- سأله جبريل عليه السلام عن الإيمان فقال: { أن تؤمن بالله، وملائكته، وكتبه، ورسله، واليوم الآخر، وتؤمن بالقدر خيره وشره } قال: صدقت. وهو متفق عليه من حديث أبي هريرة
ஈமானின் கடமைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஆறு கடமைகள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். 'நிச்சயமாக நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈமானைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வையும், அவனது மலக்குமார்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும் விசுவாசம் கொள்வதாகும் எனவும் கத்ரை அது நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் விசுவாம் கொள்வதாகும் எனவும் பதிலளித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்: நீர் உண்மை சொல்லிவிட்டீர் எனக் கூறினார்கள். இன்னும், இச்செய்தி அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியாக புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
30)
فإذا قيل لك: ما تعريف الإحسان بين العبد وربه؟ فقل: هو { أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك } كما جاء في حديث عمر بن الخطاب في «مسلم» رقم 8
அடியானுக்கும் அவனது இரட்சகனுக்கும் இடையில் உள்ள இஹ்ஸானின் வரைவிலக்கணம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், முஸ்லிம் எனும் கிரந்தத்தில் (இல: 8) உமர் இப்னு அல்ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெறுவதைப் போன்று, நீ அல்லாஹ்வை வணங்கும் போது அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் வணங்கு, அவ்வாறு உனக்கு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் வணங்கமுடியாவிட்டால் நிச்சயமாக அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நினைவில் வணங்குவதாகும் எனக் கூறு.
31)
فإذا قيل لك: ما حكم سب الله، وسب رسوله، وسب دينه، أو الاستهزاء بذلك؟ فقل: هذا كفر أكبر، من تعمده خرج من ملة الإسلام، والدليل قول الله تعالى: { قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ * لا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ } التوبة: 65 66
அல்லாஹ், அவனது தூதர், அவனது மார்க்கம் ஆகியவற்றைத் திட்டுவது அல்லது அதனைக் கொண்டு பரிகாசம் செய்வது போன்றவற்றின் சட்டம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், இது ஒரு பெரிய நிராகரிப்பாகும் என்று கூறு. யார் வேண்டுமென்று அதில் ஈடுபடுகின்றாரோ அவர் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிட்டார். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று (நபியே) நீர் கேட்பீராக! போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள்.' (அத்தவ்பா: 65,66)
32)
فإذا قيل لك: ما جزاء المؤمنين، وما جزاء الكافرين يوم القيامة؟ فقل: جزاء المؤمنين الجنة في أعلى عليين، والدليل قول الله تعالى: { إن الذين ءامنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَداً رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ } البينة: 7 8 وجزاء الكافرين النار في أسفل سافلين، والدليل قول الله تعالى: { وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ } فاطر: 36 والدليل أن الجنة في أعلى عليين قول الله تعالى: { وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى *عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى *عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى } النجم: 13 15
மறுமைநாளில் முஃமீன்கள் மற்றும் நிராகரிப்பாளர்களின் கூலி எத்தகையது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், முஃமீன்களின் கூலியானது உயர்ந்த இடத்தின் உயர்விஸ்தானத்திலுள்ள சுவனமாகும் எனக் கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிகின்றார்களோ, அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள். அவர்களின் கூலி அவர்களது இரட்சகனிடம் நிலையான சுவனச் சோலைகளாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பர். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது, எவர் தனது இரட்சகனை அஞ்சி நடக்கின்றாரோ அவருக்குரியதாகும்.' (அல்பய்யினா: 7,8) மேலும், நிராகரிப்பாளர்களின் கூலியானது தாழ்ந்த இடத்தின் மிகத்தாழ்ந்த இஸ்தானத்திலுள்ள நரகமாகும் எனக் கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பு உண்டு. அவர்கள் மரணித்துவிடும்படி தீர்ப்பளிக்கப்படவும் மாட்டார்கள். இன்னும், அதன் வேதனை அவர்களை விட்டும் இலகுபடுத்தப்படவும் மாட்டாது. நிராகரிக்கும் ஒவ்வொருவனுக்கும் நாம் இவ்வாறே கூலி வழங்குவோம்.' (பாதிர்: 36) மேலும், நிச்சயமாக சுவனமானது உயர்ந்த இடத்தின் உயர்விஸ்தானத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஸித்ரத்துல் முன்தஹா எனும் இடத்தில் இவர் மீண்டும் ஒரு தடைவ (ஜிப்ரீல் ஆகிய) அவரைக் கண்டார். அங்குதான் ஜன்னத்துல் மஃவா (எனும் சுவர்க்கம்) இருக்கிறது.' (அந்நஜ்ம்: 13-15)
والدليل أن النار في أسفل سافلين حديث البراء أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال فيما يروي عن ربه عزوجل: { اكتبوا كتاب عبدي في سجين، في الأرض السفلى } أخرجه أحمد في المسند وهو حديث صحيح. ولا نشهد بالجنة أو النار إلا لمن شهد له الدليل؛ لقول الله تعالى: { وَلا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ } الإسراء: 36
நிச்சயமாக நரகமானது, தாழ்ந்த இடத்தின் மிகத் தாழ்ந்த இஸ்தானத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரமாக அல்பர்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். 'நிச்சயமாக நபியவர்கள் தனது இரட்சகனைத் தொட்டும் அறிவிக்கும் அறிவிப்பில் கூறினார்கள்: என்னுடைய அடியானின் ஏட்டை கீழ்ப் பூமியில் இருக்கும் சிஜ்ஜீனிலே எழுதுங்கள்' (எனக் கூறுவான்.) இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்முஸ்னத் எனும் கிரந்தத்தில் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். இது ஒரு ஸஹீஹான ஹதீஸாகும். மேலும், ஆதாரம் யாருக்கு சாட்சி சொன்னதோ அவருக்கன்றி வேறு எவருக்கும் நாங்கள் சுவனம் அல்லது நரகத்தைக் கொண்டு சாட்சி சொல்ல மாட்டோம். ஏனெனில், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின்தொடராதீர்!' (அல்இஸ்ரா: 36)
33)
فإذا قيل لك: كم عدد الدور؟ فقل: ثلاثة:
دار الدنيا الفانية، والدليل قول الله تعالى: { وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ } آل عمران: 185
دار البرزخ، والدليل قول الله تعالى: { وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ } المؤمنون: 100
دار القرار، والدليل قول الله تعالى مخبرا عن مؤمن آل فرعون: { يَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ } غافر: 39
(மனிதன் வாழும் வாழ்க்கையின்) வீடுகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று என்று கூறு.
1. அழிந்து போகும் உலக வீடு: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இவ்வுலக வாழ்வு ஏமாற்றம் தரும் இன்பமேயன்றி வேறில்லை.' (ஆலஇம்றான்: 185)
2. திரைமறைவான வீடு: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு முன்னால் ஒரு திரை இருக்கின்றது.' (அல்முஃமினூன்: 100)
3. நிலையான வீடு: அதற்கான ஆதாரமாவது பிர்அவ்னுடைய குடும்பத்தில் ஒரு விசுவாசி கூறியது தொடர்பாக அல்லாஹுத்தஆலா தெரிவிக்கும் செய்தியாகும். 'எனது சமுகத்தினரே! இவ்வுலக வாழ்க்கை அற்ப இன்பமே! நிச்சயமாக மறுமையோ நிலையான வீடாகும் (என்றும் கூறினர்)' (அல்காபிர்: 39)
34)
فإذا قيل لك: ما أول منازل الآخرة؟ فقل: أول منازل الآخرة القبر، والدليل حديث عثمان بن عفان -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إن القبر أول منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينج منه فما بعده أشد منه } أخرجه الترمذي، وابن ماجه، وأحمد، وهو حديث حسن
மறுமையின் ஆரம்ப நிலை எது? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மறுமையின் ஆரம்ப நிலை கப்ர் எனக் கூறு. அதற்கான ஆதாரமாவது உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். 'நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக கப்ர் மறுமையின் ஆரம்ப நிலையாகும். எனவே, அதிலிருந்து ஈடேற்றம் பெற்றுவிட்டால், அதற்குப் பிறகு அதைவிட மிக இலகுவானது இருக்கமுடியாது. மேலும், அதிலிருந்தும் ஈடேற்றம் பெறாவிட்டால் அதற்குப் பிறகு அதைவிட மிகக் கடுமையானது இருக்க முடியாது.' இச்செய்தியை இமாம்களான திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் பதிவுசெய்துள்ளார்கள். இன்னும் இது ஒரு ஹஸனான ஹதீஸாகும்.
35)
فإذا قيل لك: ماذا تعتقد في عذاب القبر ونعيمه؟ فقل: أعتقد أنه حق لمن كان له أهلا، والدليل حديث عائشة - رضي الله عنها- أنها سألت رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- عن عذاب القبر فقال: { عذاب القبر حق } متفق عليه، وهذا لفظ البخاري. وعنها أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- كان يتعوذ من فتنة القبر وعذاب القبر، ومن فتنة المسيح الدجال. متفق عليه. وفيه إثبات عذاب القبر، وفتنة القبر، وفتنة الدجال الأكبر. ومن الأدلة على نعيمه حديث البراء، وفيه: { وأما المؤمن فيقال: ألبسوه من الجنة، وافتحوا له بابا إلى الجنة فيأتيه من طيبها وروحها ويفسح له في قبره مد بصره } أخرجه أحمد في المسند وهو حديث صحيح
கப்ருடைய வேதனை மற்றும் அதனுடைய இன்பம் விடயத்தில் நீ எதனை நம்பிக்கையாகக் கொண்டுள்ளாய்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், எவர் அதற்கு உரித்தானவராக ஆகின்றாரோ அவருக்கு நிச்சயமாக அது உண்மையாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸாகும். 'நிச்சயமாக அவர்கள் நபியவர்களிடத்தில் கப்ருடைய வேதனை தொடர்பாக வினவினார்கள். அதற்கு நபியவர்கள்: கப்ருடைய வேதனை உண்மையாகும் என பதிலளித்தார்கள்.' (புகாரி முஸ்லிம்) மேலும், இச்செய்தி இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாசகமாகும். இன்னும், அன்னையவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நிச்சயமாக நபியவர்கள் கப்ருடைய சோதனையையும் அதனுடைய வேதனையையும் அல்மஸீஹுத் தஜ்ஜாலுடைய சோதனையையும் விட்டும் பாதுகாப்புத்தேடக்கூடியவர்களாக இருந்தார்கள்.' (புகாரி முஸ்லிம்) எனவே, இச்செய்தியில் கப்ருடைய வேதனையையும் அதனுடைய சோதனையையும் மிகப் பெரிய தஜ்ஜாலின் சோதனையையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும், அதனுடைய இன்பத்திற்கான ஆதாரங்களில் உள்ளதாவது, அல்பர்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியாகும். அதில் இடம்பெற்றுள்ளதாவது, 'முஃமினைப் பொருத்தளவில், அவருக்கு சுவனத்தின் ஆடையை அணியச் செய்யுங்கள், சுவனத்தை நோக்கிய பாதை ஒன்றை திறந்து கொடுங்கள், அதிலிருந்து அதன் நறுமணமும், சுகண்டியும் அவரை வந்தடைந்து கொண்டிருக்கட்டும் என்று சொல்லப்படும். மேலும், அவருக்கு கண்ணை எட்டிய தூரம் வரை கப்ரு விசாலமாக்கிக் கொடுக்கப்படும்.' இச்செய்தியை இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் தனது அல்முஸ்னத் எனும் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார். இது ஒரு ஸஹீஹான ஹதீஸாகும்.
36)
فإذا قيل لك: ماذا تعتقد في البعث والوقوف والحساب وأخذ الكتاب؟ فقل: أعتقد أنه حق، والدليل قول الله تعالى: { زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا قُلْ بَلَى وَرَبِّي لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ وَذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ } التغابن: 7 وقوله تعالى { فتول عنهم يوم يدع الداع إلى شيء نكر خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر } القمر: 6-8 وقوله تعالى: { فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ * فَسَوْفَ يُحَاسَبُ حِسَاباً يَسِيراً * وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُوراً * وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ * فَسَوْفَ يَدْعُو ثُبُوراً * وَيَصْلَى سَعِيراً } الانشقاق: 7 12 وقوله تعالى { يوم ندعوا كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرءون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الأخرة أعمى وأضل سبيلا } الإسراء: 71-72
மறுமையில் எழுப்பப்படுவது, தரித்து நிற்பது, கேள்விகணக்குக் கேட்கப்படுவது, ஏட்டைப் பெறுவது தொடர்பாக நீர் எதனை நம்பிக்கையாகக் கொண்டுள்ளாய்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நான் நிச்சயமாக அதனை உண்மை என நம்பியுள்ளேன் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நிராகரித்தோர் தாம் எழுப்பப்பட மாட்டோம் என எண்ணுகின்றனர். அவ்வாறல்ல, எனது இரட்சகன் மீது சத்தியமாக நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்தவை குறித்து பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும் என (நபியே) நீர் கூறுவீராக!' (அத்தகாபுன்: 7) மேலும் கூறுகின்றான்: 'எனவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அவர்களுக்கு) வெறுப்பான விடயத்தின் பால் அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களது பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்கள் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல், மண்ணறைகளிலிருந்து அழைப்பாளரை நோக்கி விரைந்தவர்களாக வெளிப்படுவார்கள். இந்நிராகரிப்பாளர்கள், இது கஷ்டமான நாள் என்று கூறுவார்கள்.' (அல்கமர்: 6-8) இன்னும் கூறுகின்றான்: 'எனவே, எவருடைய பதிவேடு அவரது வலது கையில் வழங்கப்படகின்றதோ அவர் இலகுவான முறையில் விசாரணை செய்யப்படுவார். அவர் (சுவர்க்கத்தில் உள்ள) தன் குடும்பத்தினரிடம் மகிழ்வுடன் திரும்பிச் செல்வார். எவனுடைய பதிவேடு அவனது முதுகுக்குப் பின்னால் வழங்கப்படுகின்றதோ, அவன் (தனக்கு) நாசத்தையே அழைப்பான். மேலும், அவன் நரகத்தில் நூழைவான்.' (அல்இன்ஷிகாக்: (7-12) மேலும் கூறுகின்றான்: 'மனிதர்கள் ஒவ்வொருவரையும் தத்தமது தலைவருடன் நாம் அழைக்கும் நாளில், எவரது பதிவேடு அவரது வலது கையில் கொடுக்கப்படுகின்றதோ அவர்கள் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். யார் இ(வ்வுலகத்)தில் (சத்தியத்தைக் காணாது) குருடனாகிவிட்டானோ அவன் மறுமையிலும் குருடனே. மேலும், அவனே மிகவும் வழி தவறியவன்' (அல்இஸ்ரா: 71,72)
37)
فإذا قيل لك: هل المؤمنون يرون ربهم يوم القيامة؟ فقل: نعم يرونه في عرصات القيامة وفي الجنة، والدليل قول الله تعالى: { وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ * إِلَى رَبِّهَا نَاظِرَةٌ } القيامة: 22 23 وفي الصحيحين من حديث جرير بن عبدالله -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إنكم سترون ربكم يوم القيامة } وأخرج مسلم من طريق حماد بن سلمة، عن ثابت، عن عبدالرحمن بن أبي ليلى، عن صهيب -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { إذا أدخل أهل الجنة يقول الله تبارك وتعالى: تريدون شيئا أزيدكم؟ فيقولون: ألم تبيض وجوهنا؟ ألم تدخلنا الجنة وتنجينا من النار؟ قال: فيكشف الحجاب، فما أعطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل }والكفار لا يرون الله عز وجل يوم القيامة والدليل قول الله تعالى: { كلا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ } المطففين: 15
முஃமீன்கள் தங்களது இரட்சகனை மறுமை நாளில் பார்ப்பார்களா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், ஆம், மறுமையில் விசாரணை செய்யும் இடங்களிலும், சுவனபதியிலும் அவனைப் பார்ப்பார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அந்நாளில் சில முகங்கள் தமது இரட்சகனைப் பார்த்து மலர்ச்சியுற்றிருக்கும்.' (அல்கியாமா: 22,23) மேலும், புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது. நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள். 'நிச்சயமாக நீங்கள் உங்களது இரட்சகனை மறுமைநாளில் பார்ப்பீர்கள்.' இன்னும் இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹம்மாத் இப்னு ஸலமா அவர்கள் வழியாக, அவர் ஸாபித் அவர்களையும் அவர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ ளைலா அவர்களையும் அவர் ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் தொட்டு வரும் அறிவிப்பில் அறிவிக்கும்போது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'சுவனவாசிகள் சுவனத்தில் நூழைவிக்கப்படும் போது அல்லாஹுத்தஆலா கூறுவான்: நான் உங்களுக்கு அதிகரிக்க வேண்டி ஏதாவது ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? அதற்கு அவர்கள்: நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்தில் இருந்தும் பாதுகாத்து சுவனத்தில் நுழைவிக்கவில்லையா? என வினவுவார்கள். எனவே, (அப்போது அவன் தனது) திரையை அகற்றுவான், தங்களுடைய இரட்சகனைப் பார்ப்பதற்குக் கிடைத்த சந்தோசத்தைவிட அவர்கள் விரும்பக்கூடிய எந்த ஒன்றும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்காது.' மேலும், காபீர்கள் மறுமைநாளில் அல்லாஹ்வைப் பார்க்க மாட்டார்கள். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அவ்வாறன்று, அந்நாளில் அவர்கள் தமது இரட்சகனை(ப் பார்ப்பதை) விட்டும் நிச்சயமாகத் தடுக்கப்படுவார்கள்.' (அல்முதப்பிபீன்: 15)
38)
فإذا قيل لك: ماذا تعتقد في القرآن الكريم الذي في المصحف؟ فقل: أعتقد أنه كلام الله عز وجل، ليس بمخلوق، والدليل قول الله تعالى: { وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلامَ اللَّهِ } التوبة: 6
அல்முஸ்ஹபில் இருக்கும் சங்கைமிக்க அல்குர்ஆன் விடயத்தில் எதனை நம்பிக்கையாகக் கொண்டுள்ளாய்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், நிச்சயமாக அது அல்லாஹ்வுடைய பேச்சு என்றும் (அது) படைக்கப்பட்டதன்று என்றும் நம்பிக்கையாகக் கொண்டுள்ளேன் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இணைவைப்பாளர்களில் எவரேனும் உம்மிடம் புகலிடம் கோரினால், அவர் அல்லாஹ்வின் வார்த்தையைச் செவியேற்கும் வரை அவருக்கு புகலிடம் அளிப்பீராக!' (அத்தவ்பா: 6)
39)
فإذا قيل لك: هل القرآن عربي أم أعجمي؟ فقل: هو عربي، والدليل قول الله تعالى: { إِنَّا جَعَلْنَاهُ قُرْآناً عَرَبِيّاً لَعَلَّكُمْ تَعْقِلُونَ } الزخرف:3 وقوله تعالى: { نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ * عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ * بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ } الشعراء:193-195
அல்குர்ஆனானது அறபு மொழியைத் தழுவியதா? அல்லது வேற்றுமொழியைத் தழுவியதா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அது அறபு மொழியைத் தழுவியது என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு, இதனை அறபி (மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாம் ஆக்கினோம்.' (அஸ்ஸுஹ்ருப்: 4) மேலும் கூறுகின்றான்: 'எச்சரிக்கை செய்வோரில் நீர் இருப்பதற்காக நம்பிக்கைக்குரிய ரூஹு (எனும் ஜிப்ரீல்) உமது உள்ளத்தில் இதனைக் கொண்டு இறங்கினார். (இது) தெளிவான அறபு மொழியில் உள்ளதாகும்.' (அஷ்ஷுஅரா: 193-195)
40)
فإذا قيل لك: هل لله أسماء وصفات؟ فقل: نعم له أسماء وصفات تليق بجلاله، والدليل قول الله تعالى: { وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا } الأعراف: 180 وقوله: { وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَى وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ } النحل: 60 وقال تعالى : { قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد } وفي الصحيحين من حديث عائشة رضي الله عنها أن رجلا قال : { لأنها صفة الرحمن } فأقره رسول الله صلى الله عليه وسلم على ذلك. وأسماء الله عز وجل غير محصورة بعدد معلوم لنا؛ لقول النبي -صلى الله عليه وعلى آله وسلم-: { لا أحصي ثناء عليك... } أخرجه مسلم من حديث عائشة -رضي الله عنها-
அல்லாஹ்வுக்கு பெயர்களும், பண்புகளும் இருக்கின்றனவா? என்று உன்னித்தில் கேட்கப்பட்டால், ஆம். அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் பெயர்களும், பண்புகளும் உள்ளன என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹ் கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள்.' (அல்அஃராப்: 180) மேலும் கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கோ உயரிய பண்பு உள்ளது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். ஞானமிக்கவன்.' (அந்நஹ்ல்: 60) இன்னும் கூறுகின்றான்: 'அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவும் இல்லை, அவன் (எவருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.' (அல்இஹ்லாஸ்: 1-4) புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக ஒரு மனிதர் (நபியவர்கள் முன்னிலையில்), 'ஏனெனில் அது நிச்சயமாக ரஹ்மானின் பண்பாகும்' என்று கூற நபியவர்கள் அதனை அங்கீகரித்தார்கள். மேலும், அல்லாஹ்வின் பெயர்கள் எங்களுக்கென்று அறிமுகமான எண்ணிக்கையைக் கொண்டு வரையறுக்கப்பட்டதன்று. ஏனெனில் நபியவர்கள் கூறும்போது: 'உம்மீது கீர்த்தியாக (எதனையும்) வரையறுக்க மாட்டேன்' என்கிறார்கள். இச்செய்தியை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸில் இருந்தும் பதிவு செய்துள்ளார்கள்.
41)
فإذا قيل لك: هل أحد غير الله يعلم الغيب؟ فقل: لا أحد يعلم الغيب إلا الله، والدليل قول الله تعالى: { وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ } آل عمران: 179 وقوله تعالى: { فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ } يونس: 20 وقوله تعالى: { وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَا إِلَّا هُوَ } الأنعام: 59
அல்லாஹ் அல்லாத வேறு எவரும் மறைவான விடயங்களை அறிவார்களா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் மறைவானவற்றை அறியமாட்டார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மேலும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தருபவனாக இல்லை.' (ஆல இம்றான்: 179) மேலும் கூறுகின்றான்: 'மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன.' (யூனுஸ்: 20) இன்னும் கூறுகின்றான்: 'அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள்.' (அல்அன்ஆம்: 59)
42)
فإذا قيل لك: متى تقوم الساعة؟ فقل: أمر الساعة من أمور الغيب التي لا يعلمها إلا الله، والدليل قول الله تعالى: { إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ } لقمان: 34 وقوله: { إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ } فصلت: 47 وقول النبي -صلى الله عليه وعلى آله وسلم-: { لا يعلم متى تقوم الساعة إلا الله } أخرجه البخاري من حديث ابن عمر -رضي الله عنهما-
மறுமை எப்பொழுது நிகழும்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மறுமைபற்றிய விடயம் அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அறியாத மறைவான விடயங்களில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மறுமை பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே உள்ளது.' (லுக்மான்: 34) மேலும் கூறுகின்றான்: 'மறுமை பற்றி அறிவு அவனிடமே திருப்பப்படும்.' (புஸ்ஸிலத்: 47) இன்னும் நபியவர்கள் கூறினார்கள்: 'மறுமை எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள்.' இச்செய்தியை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இருந்தும் பதிவு செய்துள்ளார்கள்.
43)
فإذا قيل لك: كم شروط قبول العمل؟ فقل: ثلاثة:
الإسلام، فالكافر لا يقبل الله عمله، والدليل قول الله تعالى: { وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُوراً } الفرقان: 23 وقال تعالى : { إنما يتقبل الله من المتقين } المائدة: 27
அமல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று என்று கூறு.
1. இஸ்லாம்: காபிரைப் பொருத்தளவில் அவனது அமலை அல்லாஹ் பொருந்திக்கொள்ளமாட்டான். அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்த செயலின் பக்கம் நாம் வந்து, பரத்தப்பட்ட புழுதியாக அதை நாம் ஆக்கி விடுவோம்.' (அல்புர்கான்: 23) மேலும் கூறுகின்றான்: 'அதற்கு (மற்றவர்), பயபக்தியாளர்களிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் (எனக் கூறினார்.)' (அல்மாயிதா: 27)
الإخلاص، والدليل: { وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ } البينة: 5 وفي حديث أبي هريرة القدسي أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه } رواه مسلم.
2. இஹ்லாஸ் - மனத்தூய்மை - : அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு,அல்லாஹ்வை வணங்குமாறும், (தவிர அவர்கள் ஏவப்படவில்லை.) (அல்பய்யினா: 5) மேலும், அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸுல் குத்ஸியில் இடம்பெற்றுள்ளதாவது, நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் இணைவைப்பாளர்களின் இணைவைப்பைவிட்டும் தேவையற்றவனாக இருக்கின்றேன். எவர் என்னுடன் நானல்லாத வேரொருவனை இணைத்து ஓர் அமலைச் செய்கிறானோ, அவனையும் அவனது இணைவைப்பையும் விட்டுவிடுவேன்.' (முஸ்லிம்)
المتابعة لرسول الله -صلى الله عليه وعلى آله وسلم-، والدليل حديث أم المؤمنين عائشة -رضي الله عنها-: أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- قال: { من عمل عملا ليس عليه أمرنا فهو رد } أخرجه مسلم
3. நபியவர்களைப் பின்துயர்வதாக இருத்தல்: அதற்கான ஆதாரமாவது, முஃமின்களின் தாயான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஓர் அமலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப்படத்தக்கதாகும்.' (முஸ்லிம்)
44)
فإذا قيل لك: كم أنواع التوسل المشروع؟ فقل: ثلاثة أنواع:
التوسل بأسماء الله وصفاته، والدليل قول الله تعالى: { وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا } الأعراف: 180 وقوله تعالى: { وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ } النمل:19
توسل العبد إلى الله تعالى بعمله الصالح، والدليل قول الله تعالى: { الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ } آل عمران: 16 وقوله: { رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ } آل عمران: 53 ومن السنة حديث الثلاثة الذين انطبقت عليهم صخرة، فسدت عليهم الغار، فتوسل كل واحد منهم بخالص عمله. متفق عليه من حديث عبد الله بن عمر رضي الله عنهما.
التوسل بدعاء الرجل الصالح، والدليل حديث أنس بن مالك -رضي الله عنه- قال بينما رسول الله -صلى الله عليه وعلى آله وسلم- يخطب إذ جاءه رجل فقال: يا رسول الله قحط المطر، فادع الله أن يسقينا، فدعا فمطرنا
மார்க்கம் அனுமதித்த வஸீலா – அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடுதல் - இன் வகைகள் எத்தனை? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், மூன்று வகைகள் என்று கூறு.
1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளைக் கொண்டு வஸீலாத் தேடுவது: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள்.' (அல்அஃராப்: 180) மேலும் கூறுகின்றான்: 'உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.' (அந்நம்ல்: 19)
2. அடியான் தனது ஸாலிஹான அமலைக் கொண்டு அல்லாஹுத்தஆலாவிடம் வஸீலாத் தேடுவது: அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இவர்கள், எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் நம்பிக்கை கொண்டோம்! எனவே, எமது பாவங்களை எமக்காக மன்னித்து, நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக! என்று கூறுவார்கள்.' (ஆல இம்றான்: 16) மேலும் கூறுகின்றான்: 'எங்கள் இரட்சகனே! நீ இறக்கியவற்றை நாம் நம்பிக்கை கொண்டு இத்தூதரையும் பின்பற்றினோம். எனவே, எங்களைச் சாட்சியாயர்களுடன் பதிவு செய்து கொள்வாயாக (என்றும் கூறினார்.)' (ஆல இம்றான்: 53) இன்னும் ஸுன்னாவில் இருந்து (ஆதாரமாக) பாராங்கல் மூவரை அடைத்துக் கொண்ட செய்தியைக் குறிப்பிடலாம். அவர்களைக் குகை அடைத்துக் கொண்டது. அவர்களில் ஒவ்வொருவரும் தாம் புரிந்த தூய்மையான அமலை முன்வைத்து வஸீலாத்தேடினார்கள். (இச்செய்தி) புகாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இருந்தும் பதிவாகியுள்ளது.
3. ஸாலிஹான மனிதனின் துஆவைக் கொண்டு வஸீலாத் தேடுவது: அதற்கான ஆதாரமாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நபியர்கள் உரை நிகழ்த்தும் போது அவர்களிடத்தில் ஒரு மனிதன் சமுகந்தந்து, அல்லாஹ்வின் தூதரே! மழை நின்றுவிட்டது. அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு நீர் புகட்டுமாறு பிரார்த்தனை செய்யுங்கள் என விண்ணப்பித்தான். எனவே, அவர்கள் பிரார்த்தனை செய்ய எங்களுக்கு மழைபொழிந்தது.
45)
فإذا قيل لك: هل في الدين بدعة حسنة؟ فقل: كل بدعة ضلالة، والدليل حديث العرباض المذكور برقم 19 وفيه: { كل بدعة ضلالة } وحديث جابر ابن عبدالله -رضي الله عنهما- أن النبي -صلى الله عليه وعلى آله وسلم- كان إذا خطب... يقول: { أما بعد: فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة } أخرجه مسلم
மார்க்கத்தில் அழகிய பித்அத் இருக்கின்றதா? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், எல்லா பித்அத்துக்களும் வழிகேடாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, (முன்பு) இல: 19ல் குறிப்பிடப்பட்ட அல்இர்பாழ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸாகும். அதில் இடம்பெற்றுள்ளதாவது, 'அனைத்து பித்அத்துக்களும் வழிகேடாகும்.' மேலும் (ஆதாரமாக), ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். நிச்சயமாக நபியவர்கள் உரை நிகழ்த்தினால் (பின்வருமாறு) கூறுவார்கள்: 'அடுத்து, நிச்சயமாக பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டல்களில் சிறந்த வழிகாட்டல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டலாகும். விடயங்களில் மிகத் தீயது புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் - நூதன அனுஷ்டானம் - வழிகேடாகும்.' (முஸ்லிம்)
وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: { أنا فرطكم على الحوض فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا ليرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم قال: إنهم مني فيقال: إنك لا تدري ما بدلوا بعدك فأقول: سحقا سحقا لمن بدل بعدي } متفق عليه
மேலும், அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் (இடம்பெற்றுள்ளதாவது), நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: 'நான் தடாகத்திற்கருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். எவர் அதனை வந்தடைகிறாரோ அவர் அதனில் இருந்தும் அருந்துவார். மேலும், எவர் அதிலிருந்து அருந்துகிறாரோ அவருக்கு அதற்குப்பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (அப்போது) சில கூட்டம் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களை அறிவேன், அவர்களும் என்னை அறிவார்கள். பின்பு எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரையிடப்படும். (அப்போது நபியவர்கள்) நிச்சயமாக அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுவார்கள். (அதற்கு), உங்களுக்குப் பிறகு அவர்கள் மாற்றியமைத்ததை நிச்சயமாக நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறப்படும். அதன்போது நான், எனக்குப் பிறகு மாற்றியமைத்தவருக்குத் தூரம் உண்டாகட்டும், தூரம் உண்டாகட்டும் என்பேன்.' (புகாரி முஸ்லிம்)
46)
فإذا قيل لك: من شر البرية الذين يجب علينا بغضهم؟ فقل: هم اليهود، والنصارى، والمشركون، والدليل قول الله تعالى: إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ البينة: 6 وقوله تعالى: { لا تَجِدُ قَوْماً يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ } المجادلة: 22
நாங்கள் அவசியம் கோபம் கொள்ள வேண்டிய படைப்பினங்களில் மிகக் கொட்டவர்கள் யாவர்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவர்கள் யூதர்களும் கிரிஸ்தவர்களும் இணைவைப்பாளர்களும் ஆவார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:'வேதத்தையுடையவர்களிலும், இணைவைப்பாளர்களிலும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் நரகநெருப்பில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கொட்டவர்கள்.' (அல்பய்யினா: 6) மேலும் கூறுகின்றான்: 'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளும் எந்த ஒரு கூட்டத்தினரையும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறாக செயற்படுகின்றவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர்!' (அல்முஜாதலா: 22)
47)
فإذا قيل لك: ما هي الديمقراطية؟ فقل: هي حكم الشعب نفسه بنفسه، بغير كتاب ولا سنة.
ஜனநாயகவாதம் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்குர்ஆன், அஸ்ஸுன்னா இன்றி மக்கள் தங்களைத் தாங்கள் ஆட்சிசெய்யும் (ஒரு சித்தாந்தமே) அதுவாகும் என்று கூறு.
48)
فإذا قيل لك: ما حكمها؟ فقل: هي شرك أكبر، والدليل قول الله تعالى: { إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ } يوسف: 40 وقوله: { وَلا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَداً } الكهف: 26
அதனுடைய சட்டம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அது ஒரு பெரிய ஷிர்க் ஆகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது.' (யூஸுப்: 40) மேலும் கூறுகின்றான்: 'அவன் தனது அதிகாரத்தில் எவரையும் கூட்டுச் சேர்க்கவும் மாட்டான்.' (அல்கஹ்ப்: 26)
49)
فإذا قيل لك: ما حقيقة الانتخابات؟ فقل: هي من النظام الديمقراطي المنابذ لشرع الله الحق، وهي تشبه بالكفار، والتشبه بهم لا يجوز, وفيها ضرر كثير, وليس فيها أي نفع ولا أي فائدة للمسلمين, ومن أهم أضرارها: مساواة الحق بالباطل والمحق بالمبطل حسب الأكثرية, وتضييع الولاء والبراء, وتمزيق شمل المسلمين, وإلقاء العداوة والبغضاء والتحزب والتعصب بينهم, والغش، والخداع، والاحتيال، والزور، وضياع الأوقات والأموال, وإهدار حشمة النساء, وزعزعة الثقة في علوم الشريعة الإسلامية وأهلها.
தேர்தல்களின் எதார்த்த நிலை என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவை அல்லாஹ்வின் உண்மையான சட்டத்திற்கு மாற்றமான ஜனநாயக ஒழுங்குமுறையில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. மேலும், அவை காபீர்களுக்கு ஒப்பாவதாகும். அவர்களுக்கு ஒப்பாவது கூடாது. இன்னும், அவற்றில் அதிக கெடுதிகள் உள்ளன. அத்துடன் அவற்றில் எந்த நலவும் மற்றும் எந்தப் பிரயோசனமும் முஸ்லிம்களுக்குக் கிடையாது. அதன் கொடுதிகளில் மிகப் பிரதானமானவையாக: சத்தியத்தையும் அசத்தியத்தையும் சமநிலைப்படுத்தல், பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு சீர்குலைப்பவனை வாய்மையாளனாக்குதல், அல்வலாஉ – முஃமின்களுடனான நேசம் - , அல்பராஉ - இறைவிரோதிகளுடனான பகைமை - ஆகிய இரு அம்சங்களையும் வீணடித்தல், முஸ்லிம்களின் கூட்டமைப்பைக் கிழித்தெறிதல், அவர்களுக்கு மத்தியில் விரோதம், கோபம், பிரிவினைவாதம், இனவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தல், மேலும் ஏமாற்றல், சதி செய்தல், தந்திரம் செய்தல், பொய்யுரைத்தல், நேரங்கள் மற்றும் செல்வங்களை வீணடித்தல், பெண்களின் கூச்ச சுபாவத்தைப் போக்குதல், இஸ்லாமிய மார்க்கக் கலைகளிலும், அதன் சொந்தக்காரர்களாகத் திகழுகின்றவர்களிலும் உள்ள நம்பிக்கையை மறைத்தல் (போன்றவற்றைக் குறிப்பிடலாம்)
50)
فإذا قيل: ما حكم الحزبية؟ فقل: الحزبية حرام، إلا حزب الله. والدليل قول الله تعالى: { وَلا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ * مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعاً كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ } الروم: 31-32 وقوله تعالى: { وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعاً وَلا تَفَرَّقُوا } آل عمران: 103 وقوله تعالى: { إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ } الأنبياء: 92 وقوله: { أَلا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ } المجادلة: 22 عن عبدالله بن عمرو بن العاص -رضي الله عنهما- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { …وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة (أي فرقة) واحدة } قالوا: ومن هي يا رسول الله؟ قال: { ما أنا عليه وأصحابي } (أخرجه الترمذي (5/26 وله شاهد من حديث معاوية -رضي الله عنه-، أخرجه أبوداود رقم 4597، وأحمد 4/102، وله شواهد أخرى، فالحديث حسن. وقوله: كلها في النار، فيه بيان حال أهل الأهواء وجرحهم
பிரிவினைவாதத்தின் சட்டம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், பிரிவினைவாதம் ஹராமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மேலும், இணைவைப்பாளர்களில் நீங்கள் ஆகிவிட வேண்டாம். எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்து, பல குழுக்களாக ஆகிவிட்டார்களோ அவர்களிலும் நீங்கள் (ஆகிவிட வேண்டாம்.) ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடமிருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.' (அர்ரூம்: 31, 32) மேலும் கூறுகின்றான்: 'நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். (ஆலஇம்றான்: 103) இன்னும் கூறுகின்றான்: 'நிச்சயமாக உங்களது இந்தச் சமுகம் ஒரே சமுகம்தான். நான் தான் உங்களது இரட்சகன். எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.' (அல்அன்பியா: 92) மேலும் கூறுகின்றான்: 'அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றியாளர்கள்.' (அல்முஜாதலா: 22) நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ' .... மேலும், எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு பிரிவினரைத்தவிர மற்ற அனைவரும் நரகத்தில் இருப்பார்கள். (அதற்கு தோழர்கள்), அல்லாஹ்வின் தூதரே அக்கூட்டம் எது? என வினவினார்கள். நானும் எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ (அதிலே இருப்பவர்கள் தான் அக்கூட்டத்தினராவர்) என (நபியவர்கள்) கூறினார்கள். (திர்மிதி 5:26) இச்செய்திக்குக்கு முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இருந்தும் சான்று உள்ளது. அதனை இமாம்களான அபூதாவுத் (4597), அஹ்மத் (4:102) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். மேலும், அதற்கு மற்றும் சில சான்றுகள் உள்ளன. எனவே, இந்த ஹதீஸை ஹஸன் எனும் தரத்தையுடையது எனலாம்.
மேலும் : 'அவைகள் அனைத்தும் நரகத்தில் இருக்கம்.' என்ற நபியவர்களின் கூற்றிலே மனோ இச்சையைப் பின்பற்றுவோரின் நிலை குறித்த தெளிவும், அவர்களுக்கான குறைமதிப்பும் இருக்கின்றன.
51)
فإذا قيل لك: من أضل الفرق التي تدعي الإسلام؟ فقل: هم الباطنية، والرافضة، والجهمية، وغلاة الصوفية
இஸ்லாத்தைக் கொண்டு வாதிடும் மிக வழிகெட்ட பிரிவினர்; யாவர்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவை அல்பாதினிய்யா, அர்றாபிழிய்யா, அல்ஜஹ்மிய்யா, சூபிய்யாக்களில் அத்துமீறிய பிரிவினர் ஆகியோர்களாவர் என்று கூறு.