தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழுகை நடத்துவது பற்றி இப்னு பாஸ் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது.....
அதற்கு இமாமவர்கள் :
"(இணைவைத்தல் அல்லாத பாவங்களைச் செய்த) பாவிகளுக்கு எவ்வாறு தொழுகை நடத்தப்படுமோ அதே போன்று அவருக்காகவும் ஏனைய முஸ்லிம்கள் தொழுகை நடத்துவார்கள்......
ஏனென்றால் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கொள்கையின் அடிப்படையில் அவர் இஸ்லாத்திலேயே இருக்கிறார்.... ( அதாவது அவர் மார்க்கத்திலிருந்து வெளியேறிய காஃபிர் அல்ல)
மஜ்மூஉ பதாவா இப்னு பாஸ் 13/162
سئل الشيخ عبد العزيز بن باز :
من قتل نفسه فهل يصلَّى عليه ؟ .
فأجاب :
يصلِّي عليه بعض المسلمين كسائر العصاة ؛ لأنه لا يزال في حكم الإسلام عند أهل السنة .
" مجموع فتاوى الشيخ ابن باز " ( 13 / 162 ) .
தற்கொலை செய்து கொள்ளுபவரை குளிப்பாட்டி, தொழுகை நடத்த முடியுமா?
தற்கொலை செய்து கொள்ளுபவரை குளிப்பாட்டி, தொழுகை நடத்த முடியுமா ?
என இப்னு பாஸ்z (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டது.....
அதற்கு இமாமவர்கள் :
" ஆம் ! அவரைக் குளிப்பாட்டி, அவருக்கு தொழுகை நடாத்தி முஸ்லிம்களின் மையவாடியில் அவரை அடக்கம் செய்யப்படுவார்.....
ஏனென்றால் தற்கொலை என்பது ஒரு (கொடிய)பாவமே அன்றி அது அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றும் செயல் அன்று.......
அவ்வாறு ஒருவர் தற்கொலை செய்து கொண்டால்.....
அல்லாஹ் நம்மனைவரையும் அதிலிருந்து பாதுகாக்க வேண்டும்........
அவர் குளிப்பாட்டி, கபனிடப்பட்டு, தொழுகைக்காக வைக்கப்படும் போது.....
அந்த ஊரிலுள்ள தலைவர் போன்ற முக்கியஸ்தர்கள் இவ்வாறான விடயங்களைக் கண்டிப்பதற்காக அவருக்காக தலைமை தாங்கி இமாமாக நின்று தொழுகை நடத்தாமல் விட்டுவிடுவது சிறந்தது....
(நபியவர்கள் செய்ததைப் போல....
ஆதாரம் : முஸ்லிம் 978)
இல்லையெனில்.....
மக்களின் பார்வையில் இந்த விடயத்தை அவர்கள் அங்கீகரித்ததாக ஆகி விடும்......
முக்கிய புள்ளிகள் அல்லாத யாராவது அவரின் ஜனாஸா தொழுகையை முன்நின்று நடாத்துவார்.
மொழியாக்கம் :
முஹம்மத் அத்னான் முராத் { السلفي }