اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
_பாவங்களை அழிப்பவரே! உம் மீது ஸலாம்!
_கவலைகளை அகற்றுபவரே! உம் மீது ஸலாம்!
_اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
_சிறுபிழைகள் யாவும் மன்னிப்பது தாங்களன்றோ,
_அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ
كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
_என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
_சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!_
குர்ஆன் வரிகள்:
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)
புர்தாவின் வரிகள்:
فان من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم
_(நபியே!) இவ்வுலகமும், மறு உலகமும் உங்களின் அருட்கொடையாகும். லவ்ஹுல் மஹ்பூலில் உள்ள ஞானம் உங்கள் ஞானத்தின் சிறு பகுதி தான்._
அதாவது லவ்ஹூல் மஹ்ஃபூலில் உள்ள ஞானத்தை விட நபிகள் நாயகத்தின் ஞானம் அதிகம் என்று இந்த வரியில் கூறப்படுகிறது.
அல்லாஹ்வின் ஞானத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஞானம் அதிகம் எனக் கூறும் இந்த நச்சுக் கருத்தைப் பாடுவதும், நம்புபவதும் எவ்வளவு மிகப் பெரிய வழிகேடு.
- அஷ்ஷெய்க் ஜஹான் (பலாஹி)