அஷ்ஷைக் ஸாலிஹ் அல் பஃவ்ஸான்(حفظه الله)
அவர்களிடம் கேட்கப்பட்டது !
بلغوا عني ولو آية
“என்னைப் பற்றி ஏதேனும் ஒரு செய்தி கேள்விப்பட்டாலும் அதை மற்றவர்களுக்கு எத்திவையுங்கள்”
என்ற ஹதீஸின் அர்த்தம் என்ன ?
ஏனென்றால் நாங்கள் சில தாயீக்களை காண்கிறோம்...
அவர்களின் குறைவான மார்க்க அறிவைக் கொண்டு மக்களுக்கு தாஃவா செய்கிறார்கள் !
அவர்கள் ஆதாரமாக இந்த ஹதீஸை காட்டுகிறார்கள் .
அதற்கு இமாம் அஷ்ஷைக் ஸாலிஹ் அல் பஃவ்ஸான்
பதில் கூறினார்கள் -
எத்திவைப்பது என்பது கடமைதான் ஆனால் வெளிப்படையான, தெளிவான அர்த்தத்தை சுமந்துள்ள குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை எத்திவைக்கலாம் !
அதை படித்தால் இலகுவாக (அனைவருக்கும்) விளங்கிவிடும் (உதாரணமாக, அல்லாஹ் ஒருவனே, வட்டி ஹராம்)
இன்னும் இது போன்ற வசனங்கள் .!
ஆனால் இதை தவிர்த்து அர்த்தம் புதைந்துள்ள குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் நிறைய இருக்கின்றன!
ஆகையால் யாரிடம் மார்க்க அறிவு மற்றும் பிஃக்ஹு இல்லையோ அவர் அவற்றிற்கு விளக்கம் கொடுக்க முற்படவேண்டாம் !
அவ்வசனத்திற்கு தஃப்ஸீர் செய்ய வேண்டாம் !
மார்க்க சட்டம் பேச வேண்டாம் !
மார்க்க தீர்ப்பு கொடுக்க வேண்டாம் !
அது உலமாக்களுடைய பணி !
அதனை உலமாக்கள் மட்டுமே செய்வார்கள் !
எனவே மார்க்கத்தை எடுத்துவைப்பது எவ்வாறு அமைய வேண்டுமென்றால் ஒரு விசயத்தை எடுத்து வைப்பதற்கு முன் அதனுடைய தரம் என்ன ?
அதனை எவ்வாறு புரியவேண்டும் ?
நாம் புரிந்தது சரிதான் என்ற கல்வி அறிவோடு மார்க்கத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இல்லையென்றால் நபிﷺ கூறியது போன்றுதான் ஆகிவிடுவோம்
كفى بالمرء كذبًا أن يحدّث بكل ما سَمِع
நபிﷺகூறினார்கள்- *ஒரு மனிதன் தான் கேள்விப்பட்டதை எல்லாம் அறிவிப்பது அவன் பொய்யன் என்பதற்கு போதுமானது ஆகும்* ...
ஆகையால் கல்வியறிவு இல்லாதவர்கள் தங்களை தாஃவா களத்தில் முற்படுத்தாதீர்கள் !
உலமாக்களை முற்படுத்துங்கள் !
கல்வியறிவை சரியான முறையில் முதலில் கற்றுக் கொள்ளுங்கள்!
ஒருவர் தனது வீட்டினுல் இருந்து ஒரு செங்கல்லை பெயர்த்தெடுப்பது போன்று அதன் விளைவை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்லாஹ்விற்காக தவிர்த்து கொள்ளுங்கள்.!
அல்லாஹ் மிக அறிந்தவன்.