இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அமல்கள் சமர்ப்பிக்கப்படும் காலங்கள்:
*ஆண்டின் அமல்கள்* ஷஃபான் மாதத்தில் உயர்த்தப்படுகின்றன, ஏனெனில், அந்த மாதத்தில்தான் அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படும் என்று உண்மையாளரும் நம்பகமானவருமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
*வாராந்திர அமல்கள்* திங்கள் மற்றும், வியாழக்கிழமைகளில் சமர்ப்பிக்கப்படுகின்றன, இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து உறுதியாகப் பதிவாகியுள்ளது.
*தினசரி அமல்கள்*, பகல் நேரத்திற்குரியவை பகலின் இறுதியிலும், இரவு நேரத்திற்குரியவை இரவின் இறுதியிலும் சமர்ப்பிக்கப்படுகின்றன; இது புகாரியில் பதிவாகியுள்ள அபூ மூஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸில் வந்துள்ளது.
பின்னர், ஒருவரது ஆயுட்காலம் முடிவடையும் போது, *அனைத்து அமல்களும்* (முழுமையாக) உயர்த்தப்பட்டு, அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவரது (செயல்) ஏடுகள் சுருட்டப்படுகின்றன. இது (அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதில்) மற்றுமொரு கட்டமாகும்.
(நூல்: தரீகுல் ஹிஜ்ரதைன், பக்கம் 75)