பிறரைப் பற்றிய விமர்சனம் என்பது இறுக்கமான கட்டுப்பாடுகளோடும் நிபந்தனைகளோடும் கூடிய அனுமதியாகும்.
ஹதீஸ் கலையில் கூறப்படுகின்ற
الجرح والتعديل அறிப்பாளர் குறை நிறை தொடர்பான
பகுதியில் ஹதீஸ் அறிவிப்பு, நினைவாற்றல், பொய் கூறுவது, மாற்றி அறிவிப்பது, அறிவிப்புக்களில் இருட்டிப்படிப்பு, பலவீனம் போன்ற விஷயங்களில் ஒரு ராவி- الراوي அறிவிப்பாளரை விமர்சனம் செய்ய அனுமதி உள்ளது.
அவ்வாறே அகீதாவில்
التكفير ضوابطه وموانعه இறை மறுப்பாகக் காணுவதற்கான சட்டங்களும் தடைகளும்
التبديع وضوابطه மார்க்கத்தில் புகுந்து விட்ட நவீன பித்ஆவும் வரையரைகளும் போன்ற பகுதியும் இதற்கு உதாரணங்களாகும்.
மார்க்கத்தின் பெயரால் மௌலவிகள் செய்கின்ற முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதும் இந்த அடிப்படையிலாகும்.
இலங்கை போன்ற நாடுகளில் இது பற்றிய தெளிவு அறிஞர்கள் வட்டங்களில் இருந்தாலும் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருப்பதை விரும்புகின்றார்கள் போலும்!!!
ஒருவரைப் பற்றி புறம் பேச அனுமதிக்காத இஸ்லாம், மேற் கூறப்பட்ட விஷயங்களில் மார்க்க நலனைக் கருத்தில் கொண்டு அனுமதி அளித்திருப்பது என்பது இஸ்லாம் பிறர் மானத்தை மறைக்க, காக்க எந்த அளவு தூரம் கவனம் செலுத்தி உள்ளது என்பதை உணரலாம்.
இது தொடர்பான அறிஞர் ஸயீத் பின் ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பின்விரும் கருத்து மிக ஆளமானது.
قال سعيد بن جبير رحمه الله : يؤتى بالعبد يوم القيامة فيدفع له كتابه، فلا يرى فيه صلاته ولا صيامه، ويرى أعماله الصالحة، فيقول يا رب، هذا كتاب غيري، كانت لي حسنات ليس في هذا الكتاب، فيقال له: إن ربك لا يضل ولا ينسى، ذهب عملك باغتيابك الناس
மறுமை நாளில் மனிதன் கொண்டு வரப்பட்டு, அவனது பதிவேடு அவன் முன் வைக்கப்படும்.
அதில் அவனது தொழுகை, நோன்பு, இதர நல்ல செயல்கள் எதையும் அவன் காணமாட்டான்.
உடனே ! எனது இரட்சகனே!
இந்த ஏடு வேறு யாரோ ஒருவருக்குரியதாகிட்டே! எனது பதிவேட்டில் பல நன்மைகள் இருக்க வேண்டுமே. அவற்றைக் காணவில்லையே எனக் கூறுவான்.
அவனிடம் உனது இரட்சகன் மறப்பவனோ, தவறிவிடுபவனோ கிடையாது. மாறாக; மனிதர்களைப் பற்றி நீ புறம் பேசியதால் அவை அனைத்தும் அழிந்து விட்டன எனக் கூறப்பட்டு விடுமாம்.
-இமாம் ஸயீத் பின் ஜுபைர் ரஹி
தெளிவு
---
தன்னைப் பற்றி ஒருவன் புறம் பேசியதாக அறிந்தால் நான் அவனுக்கு ஒரு தீனார் தர்மமாகக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகக் கூறும் முன் சென்ற இமாம்களில் ஒருவர் மறுமையில் நன்மை செய்ய முடியாது. அங்கு தர்மம் அங்கீகரிக்கப்படுவதில்லையே! என கூறுவாராம்.
இது பிறரைப் பற்றி இல்லாத பொல்லாதவைகளைப் பேசி ஒருவர் தனது சிறிய, பெரிய நன்மைகளை அழித்துக் கொள்வதன் விபரீதத்தை உணர்த்துகின்றது.
செய்ததோ கடுகளவு அமல். புறம் பேசியதோ அத்லாண்டிக் கடல் தூர அளவு. சொர்க்கம் எப்படிக் கிடைக்கும்??
இமாம் ஸயீத் பின் ஜுபைர் சொல்வது போல பதிவேட்டில் இருந்து நல்ல Documentகள் அனைத்தும் Was Deleted என அறிவிப்பும் வரலாம்.
نعوذ بالله منها.
தமிழில்: எம் ஜே.எம். ரிஸ்வான் மதனி