பெண்கள் காதணி (தோடு) அணியலாமா ?

 -மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-

பெண்கள் காது குத்தி தோடு அணிவது சம்பந்தமாக பல வாதப் பிரதி வாதங்கள் நடந்து வருவதை காணலாம்.

ஒரு சாரார் பெண்கள் காது குத்தி தோடு அணியலாம் என்றும், மற்றொரு சாரார் பெண்கள் தோடு அணியலாம்.ஆனால் காது குத்தாமல், கிளிப் மூலமாக அணியலாம் என்று கூறி வருவதை காணலாம்.

நபியவர்கள் காலத்தில் பெண்கள் காது குத்தி தோடு அணிந்திருந்தார்களா என்றால், இரண்டு சாராருக்கும் நேரடியான எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் காதில் தோடு அணிந்திருந்தார்கள் என்பதை இரண்டு சாரார்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

காது குத்தக் கூடாது என்பதற்கு முன் வைக்கும் குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்..
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
(4- 119)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்ற வைப்பேன் என்று இப்லீஸ் சபதம் போடுவதால், காது குத்துவது அல்லாஹ்வின் படைப்பை மாற்றியதற்கு சமமாகும், என்று கூறி பெண்கள் காது குத்தக் கூடாது என்று வாதாடுகிறார்கள்.. பெண்கள் தோடு அணிவதற்காக காதில் ஓட்டைப் போடக் கூடாது என்று இருக்குமேயானால் நபியவர்கள் நேரடியாக அதை தடை செய்திருப்பார்கள்.

எனவே பெண்கள் காது குத்துவதற்கும் இந்த வசனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லை மனிதன் படைக்கப் படும்போது கத்னா செய்யப் படாமல் படைக்கப் படுகிறான். அதற்காக இந்த குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி கத்னா செய்தால் படைப்பில் மாற்றம் வருகிறது, எனவே கத்னா செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா ?

இஸ்லாத்தை பொருத்தவரை சொல்லக் கூடிய விடயங்களை மிகத் தெளிவாகவும், நேரடியாகவும் சொல்லிவிடும்.

பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்’ (புகாரி 5931)

பச்சை குத்துவதன் மூலம் உருவம் மாற்றம் அடைகிறது,, ஒட்டு முடி வைப்பதன் முலம் உருவம் மாற்றம் அடைகிறது், புருவத்தை வழிப்பதன் மூலம் உருவம் மாற்றம் அடைகிறது, பற்களுக்கு இடையில் ரம்பத்தால் அறுப்பதன் மூலம் பற்களுடைய உருவ அடைப்பு மாற்றம் அடைகிறது , இப்படியான விடயங்கள் நபியவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததினால் தான் நபியவர்கள் நேரடியாக அவைகளைப் பற்றி தடை செய்கிறார்கள். காதில் தோடணிவதும் நபியவர்கள் காலத்தில் இருக்கத் தான் செய்தது, ஆனால் நபியவர்கள் அதைப் பற்றி பேசவில்லை.

காதணியும், பெண்களும்
பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.
மேற்ச் சென்ற ஹதீஸில் பெண்கள் தோடு அணிந்திருந்தார்கள் என்று மிகத் தெளிவாக வந்துள்ளதால் பெண்கள் காது குத்தி தோடு அணியலாம் என்பது தெளிவாக விளங்க முடிகிறது. நபியவர்கள் காலத்தில் கிளிப்கள் மூலம் தான் தோடு அணிந்தார்கள் என்றால், அப்படி சொல்பவர்கள் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டும். அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம். என்று யூகத்தின் அடிப்படையில் பேசுவது மார்க்கமாகாது.

கிளிப்பை தொடர்ந்து காதில் அணிந்திருந்தால் காதில் வேதனை ஏற்ப்படுவதற்கும் இடமுண்டு, சில நேரங்களில் தொடர்ந்து அணிந்திருப்பதால் காதின் ஓரம் புண்ணாக்கப் பட்டு காது கிழிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

கிளிப்புகள் சில நேரங்களில் தன்னை அறியாமல் கீழே விழுந்து காணாமல் போவதற்கும் இடமுண்டு,

மேலும் அல்லாஹ் குர்ஆனில் ”உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள், குழைந்து குழைந்து பேசாதீர்கள், ஆபரணங்களை வெளிகாட்டும் விதமாக கால்களை தட்டித் தட்டி நடக்காதீர்கள். போன்ற உபதேசத்தை செய்கிறான், பெண்கள் தோடணிய காதில் ஓட்டை போடுவது ஹராம் என்றால் அன்றே குர்ஆன் மூலமோ, அல்லது ஹதீஸ்கள் மூலமோ மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்.

என்றாலும் சிலர் சத்திர சிகிச்சை மூலம் தனது உருப்புகளை மாற்றி அமைக்கிறார்கள், இது கட்டாயம் தவிர்ந்து கொள்ளப் படவேண்டிய செயலாகும். உதாரணமாக மார்பகத்தை மாற்றி அமைக்கிறார்கள், மூக்கை மாற்றி அமைக்கிறார்கள், இது கூடாது.

அதே நேரம் ஒட்டிப் பிறந்த குழந்தையை சத்திர சிகிச்சை மூலம் பிரிக்கிறார்கள். அல்லாஹ்வின் ஆரம்ப படைப்பை நாம் பிரிக்க கூடாது என்று மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்ட முடியுமா ? தாராளமாக தனி, தனியே பிரிக்கலாம். அல்லது முகத்திலோ, உடம்பிலோ, ஒரு பெரிய கட்டி இருக்கிறது . இது படைப்பின் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது, எனவே அதை அப்புறப் படுத்தக் கூடாது என்று மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்ட முடியுமா ?

அல்லது இரத்தம் மாற்றப் படுகிறது அல்லது கிட்னி மாற்றப் படுகிறது . இந்த குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி படைப்புகளை மாற்றம் செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா ?

எனவே நேரடியான தடை இல்லாததினாலும், நபியவர்கள் காலத்தில் பெண்கள் தோடு அணிந்திருந்தார்கள் என்பதினாலும் தாராளமாக பெண்கள் தோடணிய காது குத்தலாம்..

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
أحدث أقدم