பிராணிகளை உணவுக்காக அறுக்கும் போதும் நேர்த்தியையும் மென்மையையும் பேணுமாறு போதிக்கிறது இஸ்லாம்.

பிராணிகளை உணவுக்காக அறுக்கும் போதும் நேர்த்தியையும் மென்மையையும் பேணுமாறு போதிக்கிறது இஸ்லாம்.

1. நபிகளார்  கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் நேர்த்தியை விதியாக்கியுள்ளான். எனவே, பிராணிகளை அறுக்கும் போதும் நேர்த்தியாக அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். (அதன் மூலம்) அறுக்கப்படும் பிராணிக்கு ஆறுதலளிக்கவும்
(ஸஹீஹ் முஸ்லிம்).

2. நபிகளார் முன்னிலையில் ஒருவர் ஆடொன்றை படுக்க வைத்துவிட்டு அது பார்த்திருக்க தனது கத்தியை தீட்டினார். அப்போது நபிகளார் ' அந்த பிராணியை இரு தடவைகள் மரணிக்கச் செய்யப் போகிறீரா? அதை படுக்க வைக்க வைக்க முன்னரே கத்தியை தீட்டியிருக்க கூடாதா?' என்று கேட்டார்கள் (ஸஹீஹுத் தர்கீப் வத் தர்ஹீப்).

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி
أحدث أقدم