விசுவாசியும், நிராகரிப்பாளரும்

- தபஸ்ஸும் முஸ்லெஹ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முஹம்மது நபி ﷺ நபித்துவம் பெற்ற பின் சுமார் 13 ஆண்டுகள் தன்னுடைய ஊரான மக்காவில் வசித்தார்.  அந்த காலகட்டத்தில், அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே, இணை, துணை எதுமின்றி வணங்குதல், உறவுகளைப் பேணுதல், பெண் குழந்தைகளைக் கொல்லாமல் இருத்தல் போன்ற தார்மீக கொள்கைகளைப் போதித்ததால் அவருடைய மக்களான குரைஷிகள் சொற்களாலும், உடல்ரீதியாகவும் அவரையும் அவரை நம்பினவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். இதனால், மக்கா – நபி ﷺ அவர்களை ஆதரித்தவர்களும், அவர்களுக்கு எதிராக இருந்தவர்களும் என்று இரண்டு பிரிவுகளாக ஆகியது.

இந்த இரண்டு பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு உதாரணங்களைப் பார்ப்போம்:

நம்பிக்கையாளர்: பிலால் பின் ரபாஹ் (ரலி)
மக்காவின் மிகத்தாழ்ந்த குலத்தை சேர்ந்த இவர் ஒரு அபிசீனிய அடிமை.   அவர் தவ்ஹீது(ஓரிறைக்கொள்கை)டைய செய்தியைக் கேட்டவுடன், அவர் மதம் மாறியது  வெளியே தெரிந்தால், சந்திக்க வேண்டிய விளைவுகளைப் பற்றி முழுதும் அறிந்திருந்தாலும், அவர் முஸ்லிமாவதற்குத் தயங்கவில்லை.  அதே போல், அவ்விஷயம் விரைவில் வெளியே தெரிந்து விட்டது.

பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பியதால், அவருடைய எஜமானன்,  அவரை பாலைவனத்தின் சுடுமணலில் வெற்றுடம்புடன் கிடத்தி, நெஞ்சின் மீது பாறைகளை வைத்து, மிகவும் பயங்கரமாக துன்புறுத்திக் கொண்டிருந்தான்.  அவரைக் கொடுமை செய்து கொண்டிருந்த போது, அவரை நிராகரிக்கும் (குஃப்ருடைய) வார்த்தைகளை சொல்லும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.  பிலால் (ரலி) அவர்கள் இடைவிடாது, ‘அஹதுன், அஹத்’ (ஏகன், ஏகன்) என்று சொல்லிக் கொண்டிருந்தார் – அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன், வணங்குவதற்கும், கீழ்ப்படிவதற்கும் தகுதியானவர் (ஒரு அடிமையின் உரிமையாளர் அடங்கலாக) அவனைத் தவிர வேறெவருமில்லை.


நிராகரிப்பாளர்: முகீரா பின் ஷூ’பா
அவன் மக்காவிலேயே மிக உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, மரியாதைக்குரிய, பெரிய மனிதன்.  இன்னும் அவன் யார் தெரியுமா? அவர் தான் நாம் இப்போது சந்தித்த பிலால் (ரலி) அவர்களின் உரிமையாளன்.

இறுதியாக, அபுபக்கர் (ரலி) முகீராவிடமிருந்து பிலால் (ரலி) அவர்களை வாங்கி விடுதலை செய்தபோது, அவர் முகீராவிடமிருந்து தப்பித்தார்.

ஆண்டுகள் கடந்தன, முஸ்லிம்கள் மதீனாவுக்கு இடம்பெயர்ந்து சென்றனர், இறுதியாக, நபி (ஸல்) அவர்களும், நிராகரிப்பாளர்கள் அவரைக் கொலை செய்ய முடிவு செய்த போது, மதினாவுக்கு இடம்பெயர்ந்தார்.  அதன் பிறகு, குரைஷிகளுக்கு எதிராக முஸ்லிம்களின் முதல் போரான பத்ரு யுத்தம் நிகழ்ந்தது.

பிலால் (ரலி) அவர்கள் போருக்கு சென்றார்கள், முகீராவும் சென்றான்.

முஸ்லிம்களின் போர்க்கோஷம் என்னவாக இருந்தது?  அஹதுன், அஹது!

முகீராவின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள் – அந்த வார்த்தைகளை – அவனுடைய கொடுமைக்கு ஆளான முன்னாள் அடிமை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டிருந்து அதே சொற்கள்.  அதைக் கேட்டவுடன் அவனுக்கு மாரடைப்பு வருவது போல் ஆகி விட்டது.  மேலும், நிராகரிப்பாளர்கள் தோல்வியடைந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் அவனுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

உடனே, பிலால் (ரலி) அவர்கள்,  ஒரு அன்சாரிகளின் குழுவிற்கு சென்று, “இதோ உமையா பின் கலஃப், அவன் தப்பித்தால் அது எனக்கு பெரும் துக்கமாகி விடும்” என கூறினார்.  அவர்கள் நிராகரிப்பாளனான அவனைக் கொன்று விட்டார்கள். (புகாரி 2301)

அது தான் கொடுமாயாளனின் விதி, மறுமையில் அவனுக்கு தண்டனை காத்திருக்கிறது.  அல்லாஹ் (சுபஹ்) நம்மை அத்தகைய விதியிலிருந்து காத்து, பிலால் (ரலி) அவர்களைப்போல் உறுதியான ஈமான் உடையவர்களாக்குவானாக.

அல்லாஹ் ﷻ இவ்வரலாற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய முக்கியமாக படிப்பினைகளை காட்டுகிறான்.  அவன் இரு குழுக்களைப்பற்றி குறிப்பிடுகிறான்:

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. [அல் குர்’ஆன் 3:13]
Previous Post Next Post