வேதங்களைக்‌ கொண்டு ஈமான்‌ கொள்ளல்‌

அல்லாஹ்விற்கு சில வேதங்கள்‌ இருக்கின்றன. அவற்றை தனது நபிமார்களுக்கும்‌, ரஸுல்மார்களுக்கும்‌ இறக்கினான்‌ என உறுதியாக ஈமான்‌ கொள்ளலாகும்‌.

அல்குர்‌ஆன்‌ அதற்கு முன்னர்‌ உண்டான அனைத்து வேதங்களையும்‌ மாற்றிற்று எனவும்‌, எழுத்து, ஓசையை உள்ளடக்கிய தனது பேச்சாக அதனையே தேர்ந்தெடுத்துள்ளான்‌ எனவும்‌ ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ்‌ தன்‌ தூதர்களுக்கு அருளாகவும்‌, அவனது படைப்புகளுக்கு நேர்வழிகாட்டியாகவும்‌, அதன்‌ மூலம்‌ இன்வுலகிலும்‌ மறுவுலகிலும்‌ விமோட்சனம்‌ பெற வேண்டும்‌ என்ற நோக்கில்‌ அருளியவற்றையே (இறை) வேதங்கள்‌ எனக்‌ குறிப்பிடுகின்றோம்‌.

வேதங்களை ஈமான்‌ கொள்ளல்‌ நான்கு விடயங்களை உள்ளடக்கும்‌.

1-அவை உண்மையாகவே அல்லாஹ்விடமிருந்து இறங்கப்பட்டவை என ஈமான்‌ கொள்ளல்‌.

2-அவற்றில்‌ பெயர்‌ குறிப்பிடப்பட்டவற்றை அந்தப்‌ பெயர்களுடன்‌ நம்ப வேண்டும்‌.

உதாரணமாக :

அல்குர்‌ஆன்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களுக்கும்‌,

தெளராத்‌ வேதம்‌ மூஸா (அலை) அவர்களுக்கும்‌,

இன்ஜீல்‌ வேதம்‌ ஈஸா (அலை) அவர்களுக்கும்‌,

ஸபூர்‌ வேதம்‌ தாவுத்‌ (அலை) அவர்களுக்கும்‌

அருளப்பட்டன என குறிப்பாகவும்‌, ஏனைய பெயர்‌ கூறப்படாதவற்றை பொதுவாகவும்‌ ஈமான்‌ கொள்ள வேண்டும்‌.

3-அவற்றில்‌  கூறப்பட்டுள்ளவற்றை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. அல்குர்‌ஆனின்‌ கூற்றையும்‌, அதற்கு முன்னர்‌ உண்டான வேதங்களின்‌ கூற்றுகள்‌ திருத்தப்படாமலோ, மாற்றப்படாமலோ இருப்பின்‌ அவற்றையும்‌ உண்மை என ஏற்க வேண்டும்‌.

4-அது கூறக்கூடிய சட்டங்களை பின்னர்‌ (அச்சட்டங்கள்‌) மாற்றப்படாமல்‌ இருப்பின்‌ அதனை செயல்படுத்த வேண்டும்‌. மேலும்‌ அவற்றிற்கு பூரணமாக கட்டுப்படவும்‌ வேண்டும்‌. அச்சட்டங்களின்‌ நோக்கம்‌ நமக்கு புரிந்தாலும்‌, புரியாவிடினும்‌ சரியே.

முந்தைய அனைத்து வேதங்களும்‌ அல்குர்‌ஆனின்‌ வருகையால்‌ மாற்றப்பட்டே உள்ளன. இதனை அல்குர்‌ஆன்‌ இவ்வாறு கூறுகிறது:

மேலும்‌ (நபியே) முற்றிலும்‌ உண்மையைக்‌ கொண்டுள்ள இன்வேதத்தை நாம்‌ உம்மீது இறக்கி வைத்துள்ளோம்‌. இது வேதத்திலிருந்து தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகும்‌. அவற்றை பாதுகாப்பதாகவுமிருக்கின்றது. (அல்‌ மாஇதா: 48)

எனவே அல்குர்‌ஆன்‌ ஏற்றுக்கொள்ளாத, சரிகாணாத எந்தவொரு சட்டத்தையும்‌ முந்தைய வேதங்களில்‌ இருந்து பெறுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வேதங்களை ஈமான்‌ கொள்வதால்‌ ஒரு முஃமினிடத்தில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌:

அல்லாஹ்விற்கு அடியார்கள்‌ மீதுள்ள கரிசனையைக்‌ காட்டுகிறது. ஏனெனில்‌ ஒவ்வொரு கூட்டத்தினருக்கும்‌ நேர்வழி காட்ட அவ்வப்போது வேதங்களை இரறக்கியுள்ளான்‌.

அல்லாஹ்வின்‌ வல்லமையை உணர்த்துகிறது. ஒவ்வொரு சமூகத்திற்கும்‌ பொருத்தமான வழிகாட்டல்களை அருளியுள்ளான்‌. இதனையே அல்குர்‌ஆன்‌ இவ்வாறு கூறுகிறது:

உங்களில்‌ ஒவ்வொரு வகுப்பார்களுக்கும்‌ மார்க்கத்தையும்‌, வழிமுறையையும்‌ நாம்‌ ஆக்கினோம்‌. (அல்‌ மாஇதா: 48)

இவற்றிற்காக அல்லாஹ்விற்கு நன்றி கூறத்‌ தோன்றுகிறது


أحدث أقدم