1. அல் இமாம் இப்னு அல்-கய்யிம் رحمه الله கூறினார்கள்:
“அல்லாஹ்வை நினைவு கூறுவதனால் இதயம் புத்துயிர் பெறுகிறது.”
அல்-மதாரிஜ் அஸ்-ஸாலிகீன் 2/29 | அல்-இமாம் இப்னு அல்-கய்யிம் رحمه الله
2. நான்கு விஷயங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்:
1) (வருங்காலத்தை பற்றின) கவலை
2) (கடந்தகாலத்தில் நடந்ததை பற்றின) துக்கம்
3) பசியுடன் இருத்தல்
4) இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது
[ஜாத் அல்-ம’ஆத்தில் இப்னு அல்-கய்யிம் (4/367)]
3. நம்முடைய இதயங்களுக்கான நான்கு தீர்வுகள்
இமாம் இப்னு அல் கய்யூம் [ரஹிமஹுல்லாஹ்] கூறினார்:
1. நம் உடலுக்கு நோய் ஏற்படுவதை போல் நம் இதயத்திற்கும் நோய் ஏற்படும் அந்த நோய்க்குரிய நிவாரணம் அவன் பக்கம் மனந்திரும்புதலிலும் (அல்லாஹ்வையும், அவனது தூதரையும் கட்டுபடுவதில்…)ஆர்வம் காட்டுதலிலும் இருக்கிறது.
2. ஒரு கண்ணாடி துருப்பிடிப்பது போல், நம்முடைய இதயமும் துருப்பிடிக்கும், எனவே அல்லாஹ்வை நினைவு கொள்வதன் மூலம் நாம் அதை பளபளப்பாக்கலாம்.
3. இதயம் உடலைப் போல் அலங்கரிக்கப்படாமல் ஆக கூடும், அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் அதனை அழகுப் படுத்தும்.
4. உடல் பசியினால் அசெளகரியம் அடைவது போல் இதயமும் அசெளகரியம் அடையும் அதற்குரிய உணவும் குடிபானமும் : அல்லாஹ்வை பற்றிய அறிவும், விழிப்புணர்வும் , அல்லாஹ்வின் அன்பும், அல்லாஹ்வின் மேல் உள்ள நம்பிக்கை, அல்லாஹ்வின் பக்கம் உண்மையாக பாவமன்னிப்பு கேட்டு திரும்புதல், தவ்ஹீத்தை கொண்டு கீழ்படிதல்,அல்லாஹ்விற்கு கீழ்படியும் செயல்களைச் செய்வது ஆகும்.
அல்-ஃபவாயித் 143
4. இமாம் இப்னு அல்-கய்யிம் رحمه الله அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் :
நபித்தோழர் கஅப் (இப்னு மாலிக்) رضي الله عنه அவர்கள் கூறினார்கள் : “யார் அதிகமாக அல்லாஹ் عز وجل லை நினைவுக்கூறுகிறாரோ அவர் நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்.”
எந்த ஆச்சரியமும் இல்லை- அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்- அல்லாஹ் تعالى ஸூரா முனாஃபிஃகூனை பின்வருமாறு கூறி முடித்துள்ளான்:
*يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ*
(ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.)
[ஸூரா அல்-முனாஃபிஃகூன் : 63:9]
இதில் (ஈமான் கொண்டவர்களுக்கு) நயவஞ்சகர்களின் ஃபித்னாவிலிருந்தும் எவர் அல்லாஹ் عز وجل லை நினைவுக்கூர்வதில் அலட்சியமாக இருந்து நயவஞ்சகத்தனத்தில் விழுகிறார்களோ அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை உள்ளது.”
[الوابل الصيب من الكلم الطيب 80\1]
5. இமாம் இப்னு அல்-கய்யிம் رحمه الله:
“நிச்சயமாக எவனுடைய உடல் உயிரோடு இருந்தும் அவனுடைய இதயமும் ஆன்மாவும் இறந்து விடுகிறதோ அவனே ஜாஹில் ஆவான். அவனுடைய உடல் இந்த பூமியில் நடமாடும் ஓர் பிணத்தை போன்றது.”
مدارج السالكين ١٩٠/٣
6. சுவரக்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்த பின், உலகில் தன்னுடன் சேர்ந்து சில நன்மைகள் செய்தவர்களை காணவில்லையே என்பதை உணர்வார்கள். இவர்கள் அல்லாஹ்விடம் அவர்களைப் பற்றி இவ்வாறு கேட்பார்கள்,
“எங்கள் இறைவா நாங்கள் உலகில் எங்களுடைய சகோதரர்களுடன் வாழ்ந்தோம். நாங்கள் ஒன்றாக தொழுதோம் மேலும் ஒன்றாக நோன்பு வைத்தோம். ஏன் அவர்களை இங்கு காணவில்லை?”. அல்லாஹ் அவர்களுக்கு, ” நீங்கள் நரகிற்க்குச் சென்று, அங்கு யாரேனும் தங்கள் இதயத்தில் அணு அளவு ஈமான் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை வெளியே கொண்டுவாருங்கள்” என்று பதில் அளிப்பான்.
இப்ன் மாஜா
இமாம் அறிஞர் ஹசன் அல் பஸ்ரி رحمه الله கூறுகிறார்கள்,
“நீங்கள் நிறைய நல்லடியாளர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள் அவர்கள் தீர்ப்பு நாளன்று உங்களுக்காக பரிந்துரை செய்வார்கள்”.
அறிஞர் இப்னு அல் கய்யிம் رحمه الله கூறினார்கள்: ”
என்னை சுவர்க்கத்தில் காணவில்லையென்றால், என்னை பற்றி விசாரணை செய்யுங்கள்” இவ்வாறு கேளுங்கள் ‘யா அல்லாஹ் உன்னுடைய அடியான் ஒருவன் உன்னைப் பற்றி எங்களுக்கு நினைவூட்டுபவராக இருந்தார்’ என்று கூறி கடுமையாக அழுதார்கள். உண்மையான நண்பன் என்பவன் உங்களை சுவர்க்கத்திற்க்கு அழைத்துச்செல்பவனே.
7. ஓர் உண்மையான முஃமின் உடல் ரீதியான மரணத்தை கண்டு அஞ்ச மாட்டான், மாறாக, அவனுடைய இதயத்தின் மரணத்தை கண்டே அஞ்சுவான்.
இப்னு அல் கய்யிம் رحمه الله
8. அல்லாஹ்வை நினைவுகோருவோரில் ஒருவராக உங்கள் பெயரை மலக்குமார்கள் எழுதும் பேனாவின் ஒலியை கேட்டால் நீங்கள் சந்தோஷத்தில் இறந்தே விடுவீர்கள். இப்னு அல்-கய்யிம்
9. திக்ரின் நன்மைகள்:
ஷைத்தானை துரத்துக்கின்றது மேலும் அவனை இழிவுப்படுத்துகிறது.
அல்லாஹ்வை சந்தோசப்படுத்துகிறது.
நம்முடைய துன்பங்களையும், மன வலிகளையும் போக்குகிறது.
நம் இதயத்திற்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது.
மனதையும் முகத்தையும் பிரகாசமாக்குகிறது.
ஒருவரின் வாழ்வாதாரத்தையும், பரக்கத்தையும் அதிகப்படுத்துகிறது.
ஒருவர் அல்லாஹ்வின் அன்பிற்கு நெருக்கமானவராக வளர காரணமாகிறது.
அல்லாஹ்விடம் , அடியான் உரையாடுவதற்கான கதவை திறக்கிறது.
நாம் நல்லதொரு சூழ்நிலையில் இருக்கும் போது திக்ர் செய்கையில் ,நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போதும் அல்லாஹ் நமக்கு அதன் பலனை திருப்பி தருவான்.
திக்ர் செய்பவர்கள் மற்றவர்களிடம் அன்போடும், கனிவோடும் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடும்.
இப்னு அல்-கய்யிம் அவர்களின் வாபிள் அஸ்-ஸையிப் தொகுப்பு
10. ”மூன்று வகையான பொறுமை”
1. “கடமை மற்றும் நற்செயல்களை பூர்த்தி செய்வதில் பொறுமையுடன் இருத்தல் (தொழுகை, நோன்பு, ஜகாத், கற்புநெறி தவறாதிருத்தல், இன்னும் பல)
2. தீய செயல்கள், தடை விதிக்கப்பட்ட செயல்கள் மற்றும் விரும்பதகாத செயல்கள் ஆகியவற்றிலிருந்து தன்னை பொறுமையுடன் காத்துக்கொள்ளுதல் (மது, புறம் பேசுதல், விபச்சாரம், புகைப்பிடித்தல், இன்னும் பல).
3. துயரமான நேரங்களில் புகார் கூறாமல் பொறுமையுடன் இருத்தல் (பிறரிடம் புகார் கூறாமல் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுதல்).
-இப்னு அல்-கய்யிம்
11. இப்னு அல்-கய்யிம் رحمه الله சில ஸலஃப்கள் குறிப்பிட்டதாக கூறியதாவது :
“இந்த உலகத்தில் சோதனைகள் மட்டும் நமக்கு இல்லையெனில், தீர்ப்பளிக்கப்படும் மறுமை நாளில் ஓட்டாண்டியாக தான் நாம் சென்றடைவோம்.”
12. இமாம் இப்னு கய்யீம் رحمه الله கூறுகிறார்…
“உங்களுடைய கோபத்தை பொறுமை என்னும் சங்கிலியால் கட்டுங்கள், ஏனென்றால் கோபம் ஒரு நாயைப் போன்றது மேலும் அது தப்பித்துக்கொண்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
அல் – ஃபவாயித் ப.84
13. பாவங்களால் பல பக்க விளைவுகள் உண்டு. அவற்றில் ஒன்று, அது உங்கள் அறிவைத் திருடிவிடும்
-இப்னு கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா
12. அல்லாஹூதாஅலா ஒரு அடியானுக்கு நன்மை செய்ய விரும்பினால், அவருடைய உள்ளத்திலிருந்து தன்னுடைய நற்செயல்களை எண்ணிப் பார்க்கும் தன்மையையும் மேலும் அவற்றைபற்றி தன் நாவினால் பேசுவதையும் நீக்கிவிடுகிறான், மேலும் தான் செய்த பாவங்களை எண்ணிப்பார்க்கக்கூடியவராகவும் அவரை ஆக்கிரமிக்கிறான், மேலும் இது அவர்களின் கண்கள் முன்பாக அவர் சுவர்க்கத்தில் நுழையும்வரை தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டிருக்கும்.”
[தர்கீக் அல்-ஹிஜ்ரதைன், 1/168-169]
13. உன்னுடைய கவசம் எங்கே?
இப்னு அல் கய்யிம் கூறினார்கள் : காலை மற்றும் மாலையின் அத்கார் (பிராத்தனை) ஒரு கேடயதின் பங்கை ஆற்றுகிறது. அது எவ்வளவு தடினமாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் , அதற்குரியவர் பாதுகாக்கப்படுவார். மேலும் கூறுகையில், இதனுடைய பலம் எவ்வளவு தூரமெனில் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு அதன் இலக்கின் மீது பட்டு, திரும்பி மீண்டும் அம்பு எய்தியவரையே தாக்கிவிடும்.
ஷேக் உதைமீன் கூறினார்கள் : எவர் ஒருவர் தன் மனம் பொருந்தி காலை மற்றும் மாலை அத்கார் (பிராத்தனை) கூறுகிறாரோ, அது அவருக்கு யஃஜூஜ் மற்றும் மஃஜூ்ஜின் சுவரை விட மிக வலிமையான கேடயமாக அமையும்.
மேலும் இப்னு சலாஹ் கூறினார்கள்: எவர் ஒருவர் காலை மாலை அத்கார் மற்றும் தொழுகைக்கு பின்னர் அத்கார் மற்றும் தூங்குவதற்கு முன்னர் அத்கார் மேற்க்கொள்கிறாரோ அவர், ” அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோர்களில் ஒருவராக எழுதப்படுவார்”.
இப்னு கதீர் கூறினார்கள்: அத்காருடைய கவசத்தை அணிந்துக் கொள்ளுங்கள், அது உங்களை மனிதர்கள் மற்றும் ஜின்னின் தீங்கை விட்டும் பாதுகாக்கும். மேலும் உங்கள் ஆன்மாக்களை இஸ்திக்ஃபாரை வைத்து மறைத்து கொள்ளுங்கள். அது இரவு மற்றும் பகலின் பாவங்களை அழிக்கவல்லது.
14. மற்றவர்களை நன்முறையில் நடத்துவது…
அடுத்தவர்களை நன் முறையில் நடத்துவதும், அவர்களுக்கு நல்லதை வேண்டுவதை தவிர இதயத்திற்கு மிகச்சிறந்தது வேறு எதுவும் இல்லை. நீங்கள் இவ்வாறு செய்தால் ,அந்நியர்களிடம் நேசத்தையும், பிரியத்தையும் பெறுவீர்கள்; உங்கள் தோழமைக் கிடையே நல்லதொரு நட்பையும்,நேசத்தையும் பெறுவீர்கள்; உங்களின் கனிவான தன்மையானது உங்கள் எதிரியின் நெஞ்சில் பொங்கி கொண்டிருக்கும் நெருப்பைக் கூட அணைத்துவிடும்…”
யார் அடுத்தவர்களைக் கனிவான முறையில் நடத்தி மேலும் நல்ல முறையில் அவர்களைப் பற்றி சிந்திக்கிறார்களோ,அவர்களுடைய நோக்கமும் உண்மையானதாக இருக்கும். அவர்கள் எல்லாவற்றையும் எளிமையாக உணருவார்கள். அவர்கள் மனது ஆரோக்கியமாக இருக்கும், எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் தீங்கிலிருந்தும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பான்.”
-இமாம் இப்னு அல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)
மதாரிஜ் அல் ஸாலிஹீன் 2/51.
15. இப்னுல் கய்யிம் (ரஹிமஹூல்லாஹ்)
”… கருஞ்சீரகத் தூளை தேனுடன் வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்கள் கரையும். மேலும் இதனை தொடர்ச்சியாக சில நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் தடையின்றி செல்வதற்கும், மாதவிடாய் பிரச்சனைக்கும், தாய்ப்பால் சுரப்பதற்கும் இது உதுவும். ”
மேற்க்கோள் : ஜாத் அல் ம’ஆத் 4/228
16. நீங்கள் குர்ஆனை ஓதும்போது, நீங்கள் அல்லாஹ்விடம் உரையாடுவதாகவும் அவன் நேரடியாகவே உங்களிடம் பேசுவதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தால் குர்ஆனின் அழகு சொற்பொருள் விளக்கம் மற்றும் அதன் பொருள் உங்கள் இதயத்திலும் ஆன்மாவிலும் வெளிப்படும். ”
-இப்னு கைய்யும் ரஹிமஹுல்லாஹ்
17. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்......
மார்க்கத்தில் சொல்லப்பட்ட விடயத்தில் தனது கருத்தையும், அறிவுக்கு எதிராக மன இச்சையையும் முற்படுத்துவதே அனைத்து குழப்பத்திற்கும் அடிப்படையான காரணமாகும்.
நூல் - இஹாஸதுல் லஹ்ஃபான்
- 2/165