في البخاري حديث 531 عن أنس بن مالك قال : قال النبي صلى الله عليه وسلم: إن أحدكم إذا صلى يناجي ربه .
உங்களில் ஒருவர் தொழுகின்ற போது அவர் தனது இரட்சகனோடு மறைமுக உரையாடல்- முனாஜாத்- செய்கின்றார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள கூறியதாக நபித்தோழர் அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( புகாரி- 531).
இது தொடர்பாக விளக்கமளிக்கும் இமாம் இப்னு ஹஜர் ரஹி அவர்கள்.
قال الحافظ : ومناجاة الرب جل جلاله أرفع درجات العبد .
فتح الباري ٢ / ١٩
கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வோடு மறைமுக உரையாடல்- முனாஜாத்- செய்வது ஒரு அடியானின் அதி உயர் நிலையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஃபத்ஹுல் பாரீ- இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹி )
- ஷேக் சுல்தான் அல் அம்ரி- சவூதி அரேபியா
தெளிவு:
தொழுகை என்ற உயர்ந்த ஆன்மீக வணக்கமானது உலகில் வாழ்ந்து மரணித்த அல்லாஹ்வின் படைப்புகளான, பதில் தர முடியாத
நபிமார்கள்,
நாதாக்கள்,
அவ்லியாக்கள்,
நல்வடியார்கள்
போன்றோரிடம் அவர்களால் பர்ஸக் வாழ்வில் நிறைவேற்ற முடியாததை கேட்பதை ஹராமாக்கி,
எப்போதும் நிறைவேற்றும் ஆற்றல்மிகு அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வோடு உரையாடிப் பெறுவதை கடமையாக்குகின்றது.
-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி