بسم الله الرحمن الرحيم
தமிழாக்கம்: ம. அ. முகம்மது முகைதீன்
உள்ளடக்கம்:
அல்அஹாதீஸுல் குத்ஸியா அறிமுகம்
அல்லாஹ்வை நினைவு கூர்தல், ஓரிறைக் கொள்கை ஆகியவற்றின் சிறப்பு பற்றி...
சரியான கொள்கை பற்றி
நற்செயல்களை செய்வதன் கூலியை இரட்டிப்பாக தருவதில் அல்லாஹ்வின் சங்கையை பெற்றவர் பற்றி
அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது பற்றி
நல்லடியார்களுக்கு அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளவை பற்றி
அல்லாஹ் தன் அடியானை பிரியம் கொள்வது அதற்கு அடையாளம் இதர மக்கள் பிரியம் கொள்வது
இறைநேசர்களை நோவினை செய்பவனுக்கு கூலி மற்றும் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி...
அல்லாஹ்வை அஞ்சுவது, பயப்படுவது, பாவங்கள் மன்னிக்கப்பட உள்ள காரணங்களில் உள்ளதாகும்
அல்லாஹ், உறவு (என்ற) பண்புடன் நேரில் பேசியது பற்றி
தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்
லுஹா தொழுகையின் சிறப்பு
பரிந்துரைத்தல் பற்றிய ஹதீஸ்கள்
நூல் அறிமுகம்
அல் அஹாதீஸுல் குத்ஸிய்யா என்பது இந்நூலின் பெயராகும். 'ஹதீஸ் குத்ஸிகள் மட்டும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளது. இந்நூலை பெய்ரூத்தில் உள்ள ''அல்மக்தபதுத் தகாஃபிய்யாகிவினர் வெளியிட்டுள்ளனர். அல்முத்தா, புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜாவில் உள்ள ஹதீஸ் குத்ஸிகள் மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தொகுத்தவர் யார்? என்ற விபரம் மூல நூலில் இல்லை.
இந்நூலில் 400 ஹதீஸ்கள் உள்ளன. ஹதீஸ்களின் துவக்கத்திலேயே இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள நூல் பற்றிய விபரம் இடம் பெறுகிறது. எனினும் நாம் அதை ஹதீஸின் இறுதியிலேயே இடம் பெறச் செய்துள்ளோம்.
நபி(ஸல்)அவர்களின் சொல், செயல் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்படடவை என நபித்தோழர்களால் அறிவிக்கப்படுவதை அனைத்தும் 'ஹதீஸ்' என்று கூறப்பட்டும்.
ஆனால், இறைவன் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர் மூலம் அறிவிக்கும் செய்திக்கே 'ஹதீஸ் குத்ஸீ' என்று கூறப்படும்.
மேலும், இறைவன் கூறிய அதே வாசகங்களுடன் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம் வந்ததே 'குர்ஆன்' என்னும் வேதநூலாகும்.
ஆனால், இறைவன் கூறினாலும் நபி(ஸல்) அவர்கள் தன்சொந்த வாசகங்களுடன் கூறும் செய்தியே 'ஹதீஸ் குத்ஸி' எனப்படும். இதில் ஜிப்ரில்(அலை) அவர்களும் சம்பந்தப்பட மாட்டார்கள்.
எனவே குர்ஆன், ஹதீஸ், ஹதீஸ் குத்ஸீ இவைகள் வெவ்வேறானவை என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும். இந்நூலில் சில ஹதீஸ்கள் மீண்டும், மீண்டும் இடம் பெற்றுள்ளன. வேறு, வேறு வாசகங்களாக அவை வெவ்வேறு நூலில் உள்ளதால் நாமும் அப்படியே மீண்டும், மீண்டும் மொழியாக்கம் செய்துள்ளோம்.
அல்லாஹ்வை நினைவு கூர்தல், ஓரிறைக் கொள்கை ஆகியவற்றின் சிறப்பு பற்றி...
ஹதீஸ் எண் :1
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ''நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள்.
அவர்களை நன்கு அறிந்தவனாக அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் என்ன கூறுகிறார்கள்? என்று கேட்பான். ''உன்னை அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' என்று கூறி தூய்மைப் படுத்துகிறார்கள். 'அல்லாஹு அக்பர்' என்று கூறி உன்னை பெருமைப் படுத்துகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உன்னை புகழ்கிறார்கள். உன்னை புகழுக்குரிய வார்த்தைகளால் உயர்வு படுத்துகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர்.
என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லைம் என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.''உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர்.
என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள்.
எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ''நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ''நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ''மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு) வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு) என்று கூறுவார்.
''அவர்களும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் தான்! அவர்களுடன் உட்கார்ந்தவர் அவர்களுக்கு (பயனில்) குறை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
(''அல்லாஹ்வின் சிறப்பும் என்ற பாடத்தில் 'புகாரி' நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது)
ஹதீஸ் எண்:2
இறைவனை நினைவு கூறும் இடங்களை தேடி சுற்றி வரும் வானவர்கள் அல்லாஹ்விடம் உண்டு. இறைவனை நினைவு கூறும் இடத்தை அந்த வானவர்கள் கண்டால் அவர்களோடு உட்கார்வார்கள். அவ்வானவர்களில் சிலர் சிலரை தங்களின் இறக்கைகளால் இணைப்பார்கள். இதனால் அவர்களுக்கும், வானத்திற்கும் இடையே உள்ளதை நிரப்பி விடுவார்கள்.
இறைவனை நினைவு கூறுவோர் பிரிந்தும், இவர்கள் வானத்தின் பக்கம் விரைந்த உயர்வார்கள். அவர்களை நன்கு அறிந்த அல்லாஹ் அவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்பான். ''பூமியில் உள்ள உன் அடியார்களிமிருந்து வருகிறோம். அவர்கள் உன்னை தூய்மைப் படுத்துகிறார்கள். உன்னை புகழ்கிறார்கள். உன்னிடம் கேட்கவும் செய்கிறார்கள் என்று வானவர்கள் கூறினர்.
என்னிடம் அவர்கள் கேட்பது என்ன? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் உன் சுவர்க்கத்தைக் கேட்கிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். எனது சொர்க்கத்தை அவர்கள் பார்த்துள்ளனரா? என்று அல்லாஹ் கேட்பான். ''இறைவா! இல்லை என்பர் வானவர்கள். எனது சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் எப்படி நடப்பார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் பாதுகாப்பு தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவர். எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! உன் நரகத்திலிருந்து தான் என்று வானவர்கள் கூறுவர். எனது நரகத்தை பார்த்துள்ளனரா? என்று அல்லாஹ் கேட்பான். ''இல்லை என்று வானவர்கள் கூறுவர்.
எனது நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் என்ன செய்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் மன்னிப்புக் கோருவார்கள் என்று வானவர்கள் கூறுவர். நான் அவர்களை மன்னித்து விட்டேன். அவர்களை மன்னித்து விட்டேன். அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்கள் '' இறைவா! அவர்களில் ஒருவர் இருந்தார். அவர் தவறான செயல் கொண்ட மனிதர், அவர் (வேறு வேலையாக) வந்தவர் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டார். (இவருக்குமா மன்னிப்பு உண்டு?) என்று கூறுவர். அவரையும் மன்னித்துவிட்டேன். அவர்களுடன் உட்கார்ந்திருந்தவர் அவர்களுக்கு குறைவை ஏற்படுத்தி விட மாட்டார்.
இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது ''இறைவனை நினைவு கூரும் இடங்களின் சிறப்பும் என்ற பாடத்தின் கீழ் 'முஸ்லிம்' நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.)
ஹதீஸ் எண்: 3
மக்களின் (செயல்களை எழுதும்) எழுத்தாளர்(களான வானவர்)கள் நீங்கலாக பூமியில் சுற்றி வரும் வானவர்கள் சிலர் அல்லாஹ்வுக்கு உண்டு. அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை கண்டு விட்டால் ''நீங்கள் தேடியதின் பக்கம் வாருங்கள்'' என்று ஒருவருக்கொருவர அழைத்துக் கொள்வார்கள். அவர்களை சூழ்ந்திருந்த அவர்கள் பூமியின் வானத்தின் பக்கம் வருவார்கள்.
என் அடியார்களை என்ன செய்து கொண்டிருக்கும் போது விட்டு வந்தீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். அவர்கள் உம்மை நினைவு கூருபவர்களாகவும், மேன்மை படுத்துபவர்களாகவும், உம்மை புகழ்பவர்களாகவும் விட்டு வந்தோம்'' என்று வானவர்கள் கூறுவர்.
என்னை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். சொர்க்கத்தை தேடுகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை என்பார்கள். அதை அவர்கள் பார்த்திருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதை தேடுவதில் அதிக சிரத்தை எடுத்திருப்பார்கள் என்று வானவர்கள் கூறுவர்.
எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். நரகத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுகின்றனர் என்று கூறுவார்கள். அதை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை என்பார்கள். அதை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வர்? என்று அல்லாஹ் கேட்பான். ''அதை அவர்கள் பார்த்திருந்தால் அதை அஞ்சுவதில், பயப்படுவதில், பாதுகாப்புத் தேடுவதில் அதிக கவனம் செலுத்தி இருப்பார்கள்'' என்று வானவர்கள் கூறுவர்.
அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்கள் ''அந்த மக்களில் ஒரு தவறான மனிதர் இருந்தார். அவர் இவர்களுடன் (உம்மை தியானிக்க) வந்தவரல்ல, வேறு ஒரு தேவைக்காக வந்தவர். (உட்கார்ந்து கொண்டார். இவருக்கும் மன்னிப்பு உண்டா) என்று கூறுவர். ''அம்மக்களில் எவருக்கும் உட்கார்ந்தவர் குறைவை ஏற்படுத்திவிட மாட்டார் என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அபூஸயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இதை இமாம் திர்மிதி ''ஹஸன் ஸஹீஸ்'' என்று கூறிகிறார்கள்.
(பூமியின் சுற்றிவரும் மலக்குகள் அல்லாஹ்விற்கு உண்டு என்ற பாடத்தின் கீழ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்:4
ஒரு மனிதன் ''லாயிலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர்'' என்று கூறினால், ''எனது அடியான் உண்மையை கூறினார். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வாகிய நான் தான் மிகப் பெரியவன்'' என்று அல்லாஹ் கூறுவான்.
ஒரு மனிதன், ''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தகு'' என்று கூறினால், ''என் அடியான் உண்மையே கூறினான். தனித்தவனான என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை'' என்று அல்லாஹ் கூறுவான்.
ஒரு மனிதன் ''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தகு லாஷாரிகலகு'' என்று கூறினால், ''என் அடியான் உண்மையே கூறினான். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. எனக்கு இணையானவரும் இல்லை'' என்று அல்லாஹ் கூறுவான்.
ஒரு மனிதன் ''லாயிலாஹ இல்லல்லாஹு வலா ஹவ்லவலா குவ்வத்த இல்லா பில்லாஹி'' என்று கூறினார், ''என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. என்னிடமே தவிர மீளுதலோ, எனக்கே தவிர சக்தியோ இல்லை'' என்று அல்லாஹ் கூறுவான்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் பின்வருமாறு கூறுகிறார்.
எனக்கு இந்த ஹதீஸை கூறிய அல்அஹர்ரு அடுத்து கூறியதை நான் விளங்கிக் கொள்ளவில்லை. அவர் என்ன கூறினார் என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்டபோது ''ஒரு அடியான் அவனது மவ்த்தின் போது இவற்றை வழங்கப்பட்டால் அவனை நகரம் தீண்டாது'' என்று அவர் கூறியதாக கூறினார்.
(''லாயிலாஹ இல்லல்லாஹ்''வின் சிறப்பு என்ற பாடத்தின் கீழ் இப்னுமாஜாவில் இது பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 5
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் ''யாராப்பி! லகல்ஹம்து. கமா யன்பஈ லிஜாலி வஜ்ஹிக அலி அளீமி சுல்தானிக'' (இறைவா! உன் அதிகாரத்தின் உயர்வுக்கும், உன் திருமுகத்தின் மேன்மைக்கும் தகுதிக்கேற்ப உனக்கே புகழ் உண்டாகட்டும்) என்று கூறினார். இவ்வாறு இவர் கூறியது (நன்மை-தீமைகளை எழுதும்) இரு வானவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதை எப்படி- எந்த அளவுக்கு (நன்மை) எழுதுவது என்பதுபற்றி இருகூரும் அறியாது, வானத்திற்கு வந்தனர். ''இறைவா! உன் அடியார் ஒருவர் ஒரு வார்த்தை கூறினார். அதற்கு எதை நன்மையாக) எழுதுவது என்பதை நாங்கள் அறியவில்லை'' என்று இருவரும் கூறினார்.
தன் அடியான் கூறியதை நன்கு அறிந்தவனான அல்லாஹ் ''என் அடியார் கூறியது என்ன?'' என்று கேட்டான். ''இறைவா! யாரப்பி! லகல் ஹம்து கமா யன்பஈ லிஜலாலி வஜ்ஹிக, வஅளீமி சுல்தானிக'' என்று அவர் கூறினார் என அவ்விருவரும் கூறினர்.
அதற்கு அல்லாஹ், ''என் அடியான் கூறியது போன்றே பதிவு செய்து கொள்ளுங்கள். என்னை அவன் சந்திக்கும் போது அதற்கு நான் கூலி கொடுத்துக் கொள்வேன்'' என்று கூறினான்.
இதை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறியதாக அப்துல்லா இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(''புகழ்வோரின் சிறப்பு'' என்ற பாடத்தின் கீழ் நஸயீ எனும் நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் எண் : 6
''சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அஸ்தஸ்பிருல்லாஹ வஅதூபு இலைஹி'' என்று நபி (ஸல்) அவர்கள் அதிகம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். ''இறைத்தூதர் அவர்களே (மேற்கண்ட) இந்த வாசகத்தை நீங்கள் அதிகம் கூறுவதை நான் காண்கிறேனே!'' என்றேன். என் சமுதாயத்தில் ஒரு அடையாளத்தை நான் காண்பேன் என்று எனக்கு அல்லாஹ் கூறி இருந்தான். இதை நான் கண்டுவிட்டால் (மேற்கண்ட) அந்த வாசகத்தை அதிகம் கூறுவேன். இப்போது அதை கண்டு கொண்டேன் என்று கூறினார்கள். பின்பு 110வது அத்தியாத்தை ஓதினார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். முஸ்லிம் நூலின் மற்றொரு அறிவிப்பில், இந்த அத்தியாத்திற்கு விளக்கம் கூறும் போது அந்த வாசகத்தை கூறியதோடு ''அல்லாஹும்ம ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்ற வாசகத்தை கூறியதாகவும் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
(ருகூஉ, ஸுஜுதுவில் கூற வேண்டியவை' என்ற பாடத்தின் கீழ், 'தொழுகை' எனும் அத்தியாத்தில் 'முஸ்லிம்' நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது)
நபி (ஸல்) அவர்கள் கூறிய வாசகத்தின் பொருள்:- அல்லாஹ்வை தூய்மைப்படுத்துகிறேன். அவனுக்கே புகழ் அனைத்தும் அவனிடம் மன்னிப்புத் தேடுகிறேன். அவனிடமே 'தவ்பா' செய்கிறேன்.
ஹதீஸ் எண்: 7
அனைத்து மக்கள் முன்பும் என் சமுதாயத்தில் இருந்து ஒரு மனிதரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, அவன் முன்னே 99 ஏடுகளை பரப்புவான். ஒவ்வொரு ஏடும் பார்வை படும் தூர அளவுக்கு இருக்கும். (இவை அனைத்தும் பாவ ஏடுகளாகும்)
நம்பகமான எனது எழுத்தாளர்கள் வானவர்கள் உனக்கு அநீதம் செய்துள்ளார்களா? இதில் எதையேனும் நீ மறுக்கிறாயா? என்று அல்லாஹ் கேட்பான். ''இறைவா! இல்லை'' என்பார் அம்மனிதர்.
உனக்கு ஏதேனும் குறை உண்டா? என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! இல்லை என்பார் அவர். ''இல்லை, உனக்கு ஒரு நன்மை உண்டு. இன்று உனக்கு அநீதம் செய்யப்பட மாட்டாது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு ஒரு சிறிய சீட்டு ஒன்று வெளியே எடுக்கப்படும். அதில் ''அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துகு வரசூலுகு'' என்று இருந்தது.
உன் (நல்லறத்தின்) எடையைப்பார் என்று அல்லாஹ் கூறுவான். அவரோ ''இறைவா! இந்த (பெரிய) ஏடுகளுடன் இந்த சிறிய சீட்டினால் (நிறுப்பதால்) பயன் என்ன?'' என்று கூறுவார். ''நீ அநீதம் செய்யப்படமாட்டாய் (எடையைப்பார்!)'' என்று அல்லாஹ் கூறுவான்.
பின்பு (தராசின்) ஒரு தட்டில் ஏடுகள் வைக்கப்படும் மறுதட்டிலோ சிறிய சீட்டு வைக்கப்படும். ஏடுகள் (இருந்த தட்டு) லேசாம், சீட்டு (உள்ள தட்டு) கனத்துவிடும். அல்லாஹ்வின் பெயருடன் எதுவும் கனத்து விடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது ஹஸன் காரிப் எனும் ஹதீஸாகும் என திர்மிதி இமாம் அபூஈஸா கூறுகிறார்கள்.
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று கூறி இறந்தவன் பற்றி வரும் பாடத்தின் கீழ் இந்த ஹதீஸ் திர்மிதியில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 8
'மறுமையில் அல்லாஹ்வின் கருணையிலிருந்து ஆதரவு வைத்தல்' என்ற பாடத்தின் கீழ் மேற்கண்ட ஹதீஸ் இப்னு மாஜாவில் உள்ளது.
ஹதீஸ் எண் : 9
(நன்மை, தீமைகளை பதிவு செய்யும்) வானவர்களும் இரவில், அல்லது பகலில் சேகரித்தவைகளுடன் அல்லாஹ்விடம் வருவார்கள். (அவர்கள் கொண்டுவந்த) ஏட்டின் ஆரம்பத்தில் அதன் இறுதியில் ஒரு நன்மையையே இருப்பதாக அல்லாஹ் காண்பான். அப்போது அல்லாஹ் வானவர்களிடம்), ''இந்த ஏட்டில் இரு ஓரத்திற்கும் இடையே உள்ளவற்றை என் அடியானுக்கு மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்கியாக ஆக்குகிறேன்'' என்று அல்லாஹ் கூறுவான்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது ''ஜனாஸாவின் பாடங்கள்'' என்ற தலைப்பின் கீழ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 10
ஒரு நாளேனும் என்னை நினைவு கூர்ந்தவரை அல்லது ஒரு இடத்தில் என்னை அஞ்சிய வரை நரகில் இருந்து வெளியேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது ஹஸன் காரிப் என்னும் ஹதீஸாகும் என திர்மிதி இமாம் அபூஈஸா கூறுகிறார்கள்.
(இது திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 11
ஆதமின் மகனே! என்னை வணங்குவதில் ஈடுபடு! உன் நெஞ்சில் (போதுமெனும் அளவுக்கு) தேவையற்ற நிலையை ஏற்படுத்துவேன். உன் ஏழ்மையை தடுப்பேன் அப்படி வணங்கவில்லையாயின் விரும்பியதைச் செய்! உன் இருகைகளிலும் கஷ்டத்தை நிரப்புவேன். உனது ஏழ்மையை தடுக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இது ஹஸன் காரிப் என்னும் ஹதீஸாகும் என திர்மிதி இமாம் அபூ ஈஸா கூறுகிறார்கள்.
(இது திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 12
மலையின் உச்சியின் மீது ஆடுமேய்க்கும் ஒருவர், (தொழுகை நேரம் வந்ததும்) தொழுகைக்காக பாங்கு கூறுகிறார் பின்பு தொழுகிறார். இவர் பற்றி மகிழ்ச்சியுறும் உமது இறைவன், ''இந்த என் அடியாரைப் பாருங்கள். பாங்கு கூறி, தொழவும் செய்து, என்னை அஞ்சவும் செய்கிறார். என் அடியாரை நான் மன்னித்து விட்டேன். அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன்'' என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டதாக உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(''தனியே தொழுபவர் பாங்கு கூறுதல்'' என்ற பாடத்தின் கீழ் நஸயீ நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்:13
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தன் உரையில் (கீழ் கண்டவாறு) கூறினார்கள்.
அறிந்து கொள்ளுங்கள்! என் இறைவன் உனக்கு இன்று கூறியவற்றில் இருந்து நீங்கள் அறியாததை உங்களுக்கு கூறும்படி என்னை கட்டளையிட்டுள்ளான் அவன் கூறியதாவது:-
அடியானுக்கு நான் கொடுத்துள்ள ஒவ்வொரு பொருளும் அனுமதிப்பட்டது தான். என் அடியார்கள் ஒவ்வொரு வரையுமே நான் தூய்மையானவர்களாகவே படைத்தேன் அவர்களிடம் ஷைத்தான்கள் வந்து, அவர்களை மார்க்கத்தை விட்டுப் வெளியேற்றிவிட்டன. அவர்களுக்கு நான் அனுமதித்த (ஹலால்) வற்றை அவர்களுக்கு தடை செய்தன. எந்த அதிகாரமும் இயலாதவைகளை எனக்கு அவர்கள் இணைவைக்கும்படி செய்து விட்டன.
நிச்சயமாக அல்லாஹ் பூமியில் உள்ள அரபி பேசுவோரையும், அரபி பேசாதவர்களைவும் கோபத்துடன் பார்த்தான் வேதத்தை உடைய (யூத-கிருத்துவத்தில் உள்ள ஒரிறை கொள்கை உடைய) சிலரைத்தவிர.
உம்மை சோதிக்கவும், உம்மூலம் பிறரை சோதிக்கவுமே உம்மை (தூதராக) அனுப்பியுள்ளேன். தண்ணீரால் சுத்தம் செய்யப்படத் தேவை இல்லாத வேதத்தை உம்மீது இறக்கியுள்ளேன் விழிப்பிலும், உறக்கத்திலும் அதை நீ ஓதுகிறாய்.
குறைஷிகளை எரித்துவிடும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான். அப்போது நான், ''இறைவா! என் தலையை அவர்கள் உடைத்து, அதை ரொட்டியாக ஆக்கி விடுவார்கள்'' என்றேன். அவர்கள் உம்மை வெளியேறச் செய்தது போல், அவர்களை நீ வெளியேறச் செய்வீராக! அவர்களுடன் சண்டை செய்! உமக்கு நாம் உதவி செய்வோம். நீ செலவு செய். உமக்கு நாம் செலவு செய்வோம். படையை அனுப்பு! அது போன்று ஐந்து மடங்கை நாம் அனுப்புவோம். உம்மை ஏற்றுக் கொண்டவருடன் சேர்ந்து உம்மை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் சண்டையிடுவீராக!
சுவர்க்கவாசிகள் மூன்று பேர்களாவர்; உண்மையான நேர்மையான, சரியான தலைவன், முஸ்லிம்கள், மற்றும் உறவினர்களிடம் இரக்கம் காட்டும் கனிவான மனிதன், குடும்பத்தாரிடம் நேர்மையாக நடந்து கொள்பவன்.
நரகவாசிகள் ஐந்து நபர்களாவர்; குடும்பத்தையோ, சொத்தையோ தேடாத (சோம்பேறியான) உங்களிடையே பிறரை (கண்மூடித்தனமாக) பின்பற்றுகின்ற அறிவற்ற பலவீனன்; தன் மோசடியைத்தவிர (வேறு எதையும்) வெளிப்படுத்தாத, தன் ஆசையையும் வெளிப்படுத்தாத மோசடிக்காரன்; உம் குடும்பம், உம் சொத்தில் உமக்கு மோசடி செய்ய காலையிலும் மாலையிலும் எண்ணும் மனிதன்; கஞ்சன் அல்லது பொய்யன்; தீய குணம் உடையவன்.
இதை இயாஸ் இப்னு கம்மார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இது சொர்க்க நரக வாசிகளை இவ்வுலகில் அடையாளம் காட்டும் பண்புகள்' என்ற பாடத்தின் கீழ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்:14
'அடியானுக்கு நான் கொடுத்த ஒவ்வொரு பொருளும் ஹலால் என்ற வாசகம் இன்றி முந்தையா ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது.
வேறு அறிவிப்பாளர்களைக் கொண்டும் இதே ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் எண் : 15
முந்தைய ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது. அதில், ஒருவர் மற்றொருவரைவிட பெருமை கொள்ளாத, ஒருவர் மற்றொருவரை மோசடி செய்யாத அளவுக்கு பணிவுடன் இருந்து கொள்ளுங்கள் என எனக்கு அல்லாஹ் 'வஹீ அறிவித்தான்' என்று வாசகம் மட்டும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
சரியான கொள்கை பற்றி
ஹதீஸ் எண் : 16
''என்னை ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசியவனாக என்னை நோவினை படுத்துகிறான். (காரணம்) நானே காலமாக உள்ளேன். என் கையில் தான் அதிகாரம் உண்டு. நானே இரவு-பகலை மாற்றுகிறேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(காலத்தை ஏசாதீர்கள் என்ற பாடத்தின் கீழ் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண்: 17
''ஆதமின் மகன் காலத்தை திட்டுகிறான். நானே காலமாக உள்ளேன் என் கையிலேயே இரவு-பகல் உள்ளது'' என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(தவ்ஹீது அத்தியாயம் பிரிவில் புகாரியிலும், ஒழுக்கம் அத்தியாயம் பிரிவில் முஸ்லிம், அபூதாவூதிலும், தப்ஸீர் பிரிவில் நஸயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண்: 18
''காலத்தின் கேடே!''என்று ஆதமின் மகன் கூறி என்னை நோவினை படுத்துகிறான். நானே காலமாக இருக்கிறேன். அதன் இரவையும், பகலையும் நானே மாற்றுகிறேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிம் நூலில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 19
ஆதமின் மகன் என்னை பொய் படுத்துகிறான். அவனுக்கு அது அவசியமே இல்லை என்னை அவன் திட்டுகிறான். அது அவனுக்கு அவசியமே இல்லை. என்னை அவன்பொய் படுத்துவது என்பது; ''என்னை அல்லாஹ் முதலில் படைத்தது போன்று (மரணத்திற்குப்பிறகு) என்னை மீண்டும் எழுப்பமுடியாது'' என்று அவன் கூறுவதாகும். ஆனால் ஆரம்பத்தில் படைத்தது, அவனை மீண்டும் எழுப்புவதை விட எனக்கு இலகுவாக இல்லை.
என்னை அவன் திட்டுவது என்பது; ''அல்லாஹ் மகனை தேர்ந்து எடுத்துள்ளான்'' என்று அவன் கூறுவதாகும். (ஆனால்) நானோ தனித்தவன். தேவையற்றவன். நான் (எவரையும்) பெற்றெடுக்கவில்லை. (எவராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை. எனக்கு எவருமே நிகாரில்லை என்று அல்லாஹ் கூறினான். என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது தப்ஸீர் பிரிவில் புகாரியில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 20
மேற்கண்ட ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 21
ஆதமின் மகன் என்னை பொய் படுத்துகிறான். என்னை பொய் படுத்துவது அவனுக்கு தேவையில்லாதது ஆதமின் மகன் என்னை திட்டுகிறான் என்னை திட்டுவது அவனுக்கு அவசியமற்றது. என்னை அவன் பொய் படுத்துவது என்பது; ''நான் அவனை ஆரம்பத்தில் படைத்தது போல் மீண்டும் அவனை (இறப்புக்குப் பிறகு) எழுப்பமாட்டேன்'' என அவன் கூறுவதாகும். இறுதியில் எழுப்புவது, ஆரம்பத்தில் படைத்ததை விட கஷ்டமானதாக ஒன்றும் இல்லை.
என்னை அவன் திட்டுவது என்பது; 'அல்லாஹ் குழந்தை வைத்துள்ளான்' என்று அவன் கூறுவதாகும். நான் தான் அல்லாஹ் தனித்தவன் தேவையற்றவன். நான் (எவரையும்) பெற்றெடுக்கவில்லை. (எவரொலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை. எனக்கு நிகராக எவரும் இல்லை என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிக்கிறார்கள்.
('முமின்களின் உயிர்கள்' என்ற பாடத்தின் கீழ் நஸயீல் இது இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண்: 22
ஹுதைபிய்யா என்ற இடத்தில் இரவில் மழை பெய்திருந்த போது காலையில் சுப்ஹு தொழுவைத்த நபி (ஸல்) அவர்கள் மக்களை முன்னோக்கித் திரும்பி ''உங்களின் இறைவன் என்ன கூறுகிறான் என்பதை அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக்க அறிந்தவர்கள்' என்று நபித் தோழர்கள் கூறினார். ''எனது அடியார்களில் சிலர் என்னை நம்பியவர்களாகவும், என்னை மறுத்தவர்களாகவும் காலையில் எழுகின்றனர்''. என்று அல்லாஹ் கூறுகிறான். ''அல்லாஹவின் அருளால் அவனது மகிமையால் மழை பெய்தது ''என்று ஒருவன் கூறுவதுதான்; என்னை அவன் நம்பி நட்சத்திரங்களை மறுப்பவன் என்று அல்லாஹ் கூறுவதாகும்.
இந்த, இந்த நட்சத்திரத்தால் மழை பெய்தது என்று ஒருவன் கூறுவதுதான்; என்னை நம்ப மறுத்து, நட்சத்திரங்களை நம்பியவன் என்று அல்லாஹ் கூறுவதாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஸைத் இப்னு காலித் அல்ஜுஹ்னீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(மழை வேண்டுதல் என்ற பாடத்தின் கீழ் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 23
எனது அடியார்களில் சிலர் என்னை மறுக்கின்றனர். சிலர் என்னை நம்புகின்றனர் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் மழை பெய்த அன்று கூறினார்கள் என ஸைத இப்னு காலித் அல்ஜுஹ்னீ (ரலி) அறிவிக்கின்றார்கள்.
('அத்தவ்ஹீது' அத்தியாயத்தின் கீழ் புகாரில் இது இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 24
இதே ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது.
(இது அல்மு அத்தா, நஸயீயில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 25
இந்த நட்சத்திரங்கள் அந்த நட்சத்திரங்கள் மூலமே இது கிடைத்தது என்று கூறியவர்களாக என் அடியார்களில் ஒரு பிரிவினர் என்னை மறுத்தே தவிர என் அடியார்களுக்கு நான் எந்த நன்மையும் செய்ததில்லை என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது நட்சத்திரங்களால் மழை பெய்ததை மறுத்தல் பற்றி வரும் பாடத்தின் கீழ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 26
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் (ஒருமுறை) மழை பெய்தபோது, ''இன்று இரவு உங்களின் இறைவன் என்ன கூறினான் என்பதை நிங்கள் கேட்க வில்லையா? அவன் பின்வருமாறு கூறினான்.
என் அடியார்களுக்கு நான் அருள் புரியும் போதெல்லாம் ஒரு கூட்டம் அதை மறுப்பவர்களாகவே உள்ளனர். இந்த இந்த நட்சத்திரங்கள் மூலமாகத்தான் நமக்கு மழை கிடைத்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
என்னை ஈமான் கொண்டு, எனது மழையின் காரணமாக என்னை புகழ்பவனே, என்னை ஈமான் கொண்டவன், நட்சத்திரத்தை மறுத்தவனாவான்.
இந்த இந்த நட்சத்திரத்தால் தான் மழை கிடைத்தது என்று கூறியவன்; என்னை மறுத்தவன், நட்சத்திரங்களை ஈமான் கொண்டவனாவான்.
இவ்வாறு அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள் என்று ஸைத் இப்னு காலித் அல்ஜுஹ்னீ (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது நஸயீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 27
என்னைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அநீதக்காரன் யார்? (படைக்க விரும்பினால்) அவர்கள் ஒரு சிறு எறும்பை படைக்கட்டும்! அல்லது ஒரு தொலிக் கோதுமையையோ! மணிக் கோதுமையையோ படைக்கட்டும் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது தவ்ஹீது அத்தியாயத்தில் புகாரியில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண்: 28
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் ஒரு வீட்டில் நுழைந்தேன். அவ்வீட்டின் கூரையில் உருவப்படம் வரைந்திருந்ததை கண்டார்கள். அப்போது அவர்கள்
''நான் படைப்பது போன்று படைக்க எண்ணுபவனை விட அநியாயக்காரன் யார்? அவர்கள் தொலிக் கோதுமையை படைக்கட்டும். அல்லது ஒரு சிறிய எறும்பை படைக்கட்டும்! என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறு தான் கேட்டதாக கூறினார்கள்.
பின்பு அபூஹுரைரா (ரலி) தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்து, தன் இரண்டு கைகளையும் கமுக்கட்டு வரை கழுவினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களே! நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நீங்கள் கேட்டதுண்டா? என்று கேட்டேன். ''இது தான் சொர்க்கத்தில் (ஒளுவிற்காக போடப்படும்) அடையாளத்தின் இறுதி எல்லையாகும் என்று கூறினார்கள். இதை அபூஸுர்ஆ அறிவிக்கின்றார்கள். (இது 'ஆடை' எனும் அத்தியாத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 29
மர்வான் அவர்களின் வீட்டில் நுழைந்ததாக மேற்கண்ட ஹதீஸே சில வாசக மாற்றங்களுடன் மீண்டும் இடம் பெற்றுள்ளது 'முஸ்லிம்' நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் எண் : 30
இது எப்படி வந்தது? இது எப்படி வந்தது? என்று உனது சமுதாயத்தவர்கள் பேசுகின்றனர். இறுதியில் இவன்தான் படைத்தான். படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தது யார்? என்று கேட்டு விடுகின்றனர் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது 'ஈமானில் குழப்பம்' என்ற பாடத்தில் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 31
உமது சமுதாயத்தினர் என்ற வாசகம் இன்றி மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்: 32
இதை அல்லாஹ் படைத்தான். அல்லாஹ்வை படைத்தவன் யார்? என்று பேசப்படும் அளவுக்கு மனிதர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்கின்றனர். இந்த நிலையை அடைந்தவர் தான் அல்லாஹ்வையே நம்புகிறேன்' என்று கூறிவிடட்டும்! என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் உள்ளது அல்லாஹ் கூறினான் என்ற வாசகம் இங்கு இடம் பெறவில்லை)
ஹதீஸ் எண்: 33
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து இதை இதைப்படைத்தது யார்? என்று கேட்பான். இறுதியில் உங்களின் இறைவனை படைத்தது யார்? என்று கேட்பான். இந்தநிலையை அடையும் ஒருவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும்! அ(வ்வாறு எண்ணுவ)தை விட்டும் ஒதுங்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இதுவும் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கும் 'அல்லாஹ் கூறினான்' என்ற வாசகம் இல்லை)
ஹதீஸ் எண்: 34
இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என்று ஒருவர் கூறுவார். அப்போது 'இன்ன நபரை நான் மன்னிக்க மாட்டேன் என்று கூறி என்னை அதிகாரம் செலுத்தும் நபர் யார்? நான் அம்மனிதனை மன்னித்துவிட்டேன். உமது நற்செயலை அழித்தும் விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஜுன்துப் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது 'அல்லாஹ்வின் கருணையில் இருந்து மனிதன் நிராசையற்று இருப்பதை தடை செய்தல்' என்ற பாடத்தில் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண்: 35
பனீ இஸ்ரவேலர்களில் இருவர் மார்க்க சகோதரர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவராக இருந்தார். மற்றொருவரோ வணக்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார்.
வணக்கத்தில் ஈடுபட்ட நபர், பாவத்தைச் செய்யும் நபரை குறை கண்டவராகவே இருந்தார். அவரிடம் 'பாவத்தை விட்டு விடு!' என்று கூறினார். 'என்னை விடு. என் இறைவன் மன்னித்து விடுவான். எனக்கு பாதுகாவலனாக நீ அனுப்பப்பட்டுள்ளாயா? என அந்த பாவம் செய்பவர் கூறினார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான். உன்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யமாட்டான் என்று வணக்கசாலி கூறினார்.
இருவரும் மரணித்தனர். அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர். வணக்கசாலியிடம் ''நீ என்னை அறிந்தவனா? அல்லது எனக்கு பொறுப்புதாரியா?'' என்று அல்லாஹ் கேட்டான். பாவியிடமோ ''நீ என் அருளினால் சொர்க்கம் செல்'' என்று கூறிவிட்டு ''இவனை (வணக்கசாலியை) நரகத்திற்கு கொண்டு செல்லுங்கள்'' என்று கூறினான். இதை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஒருவன் ஒரு வார்த்தையை கூறுவது அது அவனது இவ்வுலக, மறுமையின் பலன்களை அழித்தும் விடும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
('வரம்பு மீறுதலுக்கு தடை' என்ற பாடத்தில் இது அபூதாவூத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
நற்செயல்களை செய்வதன் கூலியை இரட்டிப்பாக தருவதில் அல்லாஹ்வின் சங்கையை பெற்றவர் பற்றி
ஹதீஸ் எண்: 36
அல்லாஹ் நல்லவைகளையும், கெட்டவைகளையும் ஏற்படுத்தியுள்ளான். பின்பு அவைகளை தெளிவுபடுத்தியும் விட்டான். ஒருவன் நல்லதை செய்ய எண்ணி, அதை செய்யவில்லையானால் அல்லாஹ் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுவான். ஒருவன் நல்லதை செய்ய எண்ணி, அதை செய்து விட்டால் அல்லாஹ் அதற்கு பத்து நன்மைகள் முதல் 700 நன்மைகள் வரை பலமடங்காக எழுதுவான்.
ஒருவன் தவறு செய்ய எண்ணி, அதை செய்யவில்லையானால் அல்லாஹ் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுகிறான். ஒரு தவறைச் செய்ய எண்ணி, அதை செய்து விட்டால் ஒரு தீமையையே அவனுக்கு எழுதுகிறான் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 37
எனது அடியான் ஒரு தீமையை செய்ய எண்ணியால் அதை அவன் செய்யும் வரை அவன் மீது எதையும் எழுதி விடாதீர்கள். தீமையை செய்து விட்டால் அது போன்றதொரு குற்றத்தையே எழுதுங்கள். என்னை அஞ்சி அதை விட்டுவிட்டால் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள்.
என் அடியான் ஒரு நல்லதை செய்ய எண்ணி, அதை செய்யாது விட்டு விட்டால் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை செய்து விட்டால் அது போன்ற பத்து மடங்கு முதல் 700 மடங்கு வரை நன்மைகளை எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது தவ்ஹீது அத்தியாயத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 38
என் அடியான் ஒரு தீமையை செய்ய எண்ணினால் அவன் மீது (குற்றம் எதையும்) எழுதி விடாதீர்கள். அதை அவன் செய்தால் அவனுக்கு ஒரு தீமையையே எழுதுங்கள்.
அவன் ஒரு நல்லதை செய்ய எண்ணினால் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்தால் அதை பத்து மடங்காக எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ளஹதீஸ் எண்: 39
என் அடியான் ஒரு நன்மையை செய்ய எண்ணி அதை அவன் செய்யவில்லையானால் அவனுக்கு ஒரு நன்மையை நான் எழுதுவேன். அதை அவன் செய்தால் அவனுக்கு 10 நன்மைகள் முதல் 700 வரை எழுதுவேன்.
ஒரு தீமையை செய்ய எண்ணி, அவன் அதை செய்யவில்லையானால் அவன் மீது (குற்றமாக எதையும்) எழுத மாட்டேன். அதை அவன் செய்து விட்டால் ஒரே ஒரு குற்றத்தை அவன் மீது எழுதுவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி)அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் உள்ளது)
ஹதீஸ் எண்: 40
என் அடியான் ஒரு நன்மையை செய்ய எண்ணினால் நான் அவனுக்கு அதை செய்யாமல் ஒரு நன்மையை எழுதுவேன். அதை அவன் செய்து விட்டால் அது போன்ற 10 மடங்காக அவனுக்கு எழுதுவேன்.
ஒரு தீயதை செய்ய எண்ணினால் அதை அவன் செய்யாதிருக்கும் வரை அவனை நான் மன்னித்து விடுவேன். அதை அவன் செய்து விட்டால் அவனுக்கு அது போன்றதொரு குற்றத்தையே எழுதுவேன்.
ஒரு அடியான் தவறு செய்ய எண்ணுவதை நன்கு அறிந்துள்ள அல்லாஹ்டம் ''இறைவா! உன் அடியான் தீயதை செய்ய எண்ணுகிறான்'' என்று வானவர்கள் கூறுவர். ''அவனை விட்டுவிடுங்கள். அதை அவன் செய்தால் அவனுக்கு அது போன்றதொரு குற்றத்தையே எழுதுங்கள். அதை அவன் விட்டுவிட்டால் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அவன் அதை(செய்யாமல்) விட்டது; என்னை அவன் அஞ்சியதே காரணமாகும்'' என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 41
உங்களில் ஒருவர் தன் இஸ்லாத்தில் நல்லதை செய்தால் அவர் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அது போன்ற பத்து மடங்குகள் முதல் எழுநூறு மடங்கு வரை (நன்மை) எழுதப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றதை மட்டுமே அல்லாஹ்வை அவர் சந்திக்கும் வரை எழுதப்படும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் பதிவாகியுள்ளது)
ஹதீஸ் எண்: 42
36வது ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகி உள்ளதாக மீண்டும் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்: 43
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக மீண்டும் மேற்கண்ட ஹதீஸே திர்மிதியில் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் 6:160 வசனத்தை ஓதினார்கள் என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்:44
ஒருவன் நல்லதைச் செய்தால் அவனுக்கு அதுபோன்று பத்து மடங்கு உண்டு. அல்லது அதைவிட அதிகப்படுத்துவேன். ஒருவன் தீமையைச் செய்தால் தீமைக்குக் கூலி அத்தீமையை போன்றதுதான். அல்லது (அதை) மன்னித்தும் விடுவேன்.
என்னிடம் அவன் ஒரு சாண் நெருங்கி வந்தால் அவனை ஒரு முழம் நெருங்குவேன். என்னிடம் ஒரு முழம் நெருங்கினால், அவனிடம் இரண்டு முழம் நெருங்கி விட்டேன். என்னிடம் நடந்து வந்தால் அவனிடம் நான் விரைந்து வருவேன்.
பூமியில் தவறு செய்யாதவனாகவும் பின்பு எனக்கு எதையும் இணை வைக்காதவனாகவும் என்னை அவன் சந்தித்தால் நான் அவனை அதற்கு பகரமாக மன்னிப்பை அளித்தவனாக சந்திப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான் என நபி (ஸல்) கூறியதாக அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது 'குனூத், பாடத்தின் கீழ் நஸயீ மற்றும் இப்னுமாஜாவில் பதிவாகியுள்ளது)
அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது பற்றி
ஹதீஸ் எண்: 45
என் அடியான் என்னைப் பற்றி சிந்திக்கும் இடத்தில் உள்ளான். என்னை அவன் நினைவு கூர்ந்தால் நான் அவனுடன் உள்ளேன். என்னை அவன் மனதிற்குள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை மனதிற்குள் நினைவு கூர்கிறேன். ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அவனை நான் அவர்களையும் விட சிறந்த கூட்டத்தில் நினைவு கூறுவேன். என்னளவில் ஒரு சாண் நெருங்கினால் அவனிடம் நான் ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னளவில் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்குவேன். என்னிடம் அவன் நடந்து வந்தால் அவனிடம் நான் விரைந்து வருவேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இந்த ஹதீஸ் புகாரியில் தவ்ஹீது அத்தியாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது).
ஹதீஸ் எண்: 46
சில வாசக மாற்றங்களுடன் முஸ்லிமில் பதிவாகியுள்ளதாக மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்: 47
மேற்கண்ட ஹதீஸே சில வாசக மாற்றங்களுடன் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்: 48
என் அடியான் என்னைப் பற்றி சிந்திப்பவனாக உள்ளான். என்னை அவன் அழைத்தால் நான் அவனுடன் இருப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(இது அல்லாஹ்வையற்றி நல்லெண்ணம் கொள்தல் என்ற பாடத்தில் திர்மிதியில் பதிவாகியுள்ளது).
ஹதீஸ் எண்: 49
45வது ஹதீஸே திர்மதியில் உள்ளதாக மீண்டும் இங்கே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்: 50
என் அடியான் என்னை நினைவுகூரும் போது என் அடியானுடன் உள்ளேன். அவனது இரண்டு உதடுகளும் என்னை (நினைவு கூரும் முகமாக) அசைகின்றன என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது ''இறைவனை நினைவு கூர்தலின் சிறப்பு'' என்ற பாடத்தில் இப்னுமாஜாவில் பதிவாகியுள்ளது.)
ஹதீஸ் எண்: 51
ஒரு முழம் நெருங்கினால் இரண்டு முழம் நெருங்குவேன் என்ற வாசகம் இன்றி 45வது ஹதீஸே இப்னுமாஜாவில் ''அமல்களின் சிறப்பு'' என்ற பாடத்தில் உள்ளதாக மீண்டும் இடம் பெற்றுள்ளது.
நல்லடியார்களுக்கு அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளவை பற்றி
ஹதீஸ் எண்: 52
கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனித இதயத்தில் உதித்திராத ஒன்னை என் நல்லடியார்களுக்காக தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
(இது ''சொர்க்கவாசிகள் பற்றிய வர்ணணை'' என்ற பாடத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 53
மேற்கண்ட ஹதீஸே புகாரியின் ''தப்ஸீர்''அத்தியாத்தில் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 54
கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனிதனின் உள்ளத்தில் உதித்திராத, இது வரை நீங்கள் காணும் எதுபோன்றும் இல்லாத சிறந்த ஒன்றை என் நல்லடியார்களுக்கு நான் தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நான் தயார் செய்த வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு 32:17வது வசனத்தை ஓதினார்கள். என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் தப்ஸீர் அத்தியாத்தில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 55
மேற்கண்ட ஹதீஸே புகாரியில் 'தவ்ஹீது அத்தியாத்தில் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 56
கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனித உள்ளத்தில் உதித்திராத ஒன்றை என் அடியார்களுக்கு தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு இதை குர்ஆனில் உள்ள 32:17 வசனம் உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் ''சொர்க்கம், அதன் அருள் பற்றியும், அதற்குரியவர்கள் பற்றியும் வர்ணணை என்ற அத்தியாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது''
ஹதீஸ் எண் : 57
54 வது ஹதீஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 58
54 வது ஹதீஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 59
54வது ஹதீஸ் இடம் பெறுகிறது. இருப்பினும் இங்கே 32:16,17 வசனங்கள் ஓதக் கூறினார்கள் என உள்ளது.
ஹதீஸ் எண் : 60
கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனித உள்ளத்தில் உதித்திராத ஒன்றை என் நல்லடியார்களுக்கு தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நீங்கள் விரும்பினால் 32:17 வசனத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.
சொர்க்கத்தில் ஒரு மரம் உண்டு. 100 வருடம் ஆனாலும் விலகாத அதன் நிழலில் ஒருவர் இளைப்பாறுவார். நீங்கள் விரும்பினால் 56:30 வசனத்தைப் படியுங்கள்.
சொர்க்கத்தில் உள்ள ஒரு இன்பமான இடம்: பூமி மற்றும் அதில் உள்ளவை அனைத்தையும் விட சிறந்ததாகும் நீங்கள் விரும்பினால், ''3:185'' வசனத்தைப் படியுங்கள். என்று நபி (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். 'ஹளன்ஸஹிஸ்' எனும் ஹதிஸாகும் இது என அபூ ஈஸா எனும் திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.
(இது திர்மிதியில் 'அல்வாம்ஆ' எனும் அத்தியாத்தின் பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 61
52 வது ஹதீஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 62
தன்னிடம் கேட்கவும், வேண்டவும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் விடுக்கும் அழைப்பு...
நமது இறைவன் இரவின் மூன்றில் ஒரு பிந்திய நேரத்தில் பூமியின் வானத்தில் ஒவ்வொரு இரவும் இறங்குகிறான். அப்போது அவன் ''என்னிடம் துஆச் செய்பவர் யார்? அவருக்கு நான் பதிலளிப்பேன். என்னிடம் கேட்பவர் யார்? அவருக்குக் கொடுப்பேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் யார்? அவரை மன்னிப்பேன்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'நடு இரவில் பிரார்த்தித்தல்' என்ற பாடத்தின் கீழ் பதிவாகியுள்ளது)
ஹதீஸ் எண் : 63
மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது.
(புகாரி, முஅத்தாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 64
சில வாசக மாற்றங்களுடன் மேற்கண்ட ஹதீஸே முஸ்லிமில் உள்ளதாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 65
''இவ்வாறு கூறுவது பஜ்ரு வரை நீடிக்கும்'' என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்று முஸ்லிம் நூலில் உள்ளதாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 66
பாதி இரவோ, அல்லது இரவில் மூன்று இரண்டு பங்கு நேரமோ சென்று விட்டால் அல்லாஹ் பூமியின் வானத்தின் பக்கம் இறங்கி கொடுக்கப்பட கேட்போன் உண்டா? நிறைவேற்றப்பட கோரிக்கை வைப்போன் உண்டா? மன்னிக்கப்பட மன்னிப்புக் கேட்பான் உண்டா?'' என்று பஜ்ரு நேரம் வரும் வரை கூறுவான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண் : 67
அல்லாஹ் பூமியின் வானத்தில் இறங்கி ''என்னை அழைப்பவன் யார்? அவனுக்கு பதிலளிப்பேன். என்னிடம் கேட்போன் யார்? அவனுக்குக் கொடுப்பேன்'' என்று கூறுவான். பின்பு, ''இழப்பு நிலையோ, அநீதமோ இல்லாத ஒருவனை வணங்குவோன் யார்?'' என்றும் கேட்பான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 68
'தன் கையை விரித்து வைத்து இவ்வாறு கூறுவான்' என்று வாசகம் கூடுதலாக இடம் பெற்று, முஸ்லிமில் உள்ளதாக இடம் பெறுகிறது.
ஹதீஸ் எண் : 69
இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்றதும் அல்லாஹ் பூமியின் வானத்தில் இறங்கி ''மன்னிப்புக் கோருபவன் உண்டா? பாவமன்னிப்புக் கோருபவன் உண்டா? (உதவி தேடி) அழைப்பவன் உண்டா?'' என்று பஜ்ரு நேரம் வரும் வரை கேட்பான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 70
62வது ஹதீஸே மீண்டும் இங்கே இடம் பெற்றுள்ளது.
(இது அபூதாவூதில் 'மிகச்சிறந்த இரவு எது?' என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 71
65வது ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது.
இது, ஹஸன்ஸஹீஹ் எனும் ஹதீஸாகும் என அபூஈஸா (ஏ) திர்மிதி கூறுகிறார்கள்.
(இது திர்மிதியில் ஒவ்வொரு இரவிலும் வானத்தில் அல்லாஹ் இறங்குவான்-என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 72
ஆதமின் மகனே! என்னிடம் நீ பிரார்த்தித்து, என்னிடமே ஆதரவு கோரும் நிலை, உன்னிடம் இருக்கும் வரை நான் உன்னை மன்னிப்பேன். அதில் நிலையாக இருப்பேன். ஆதமின் மகனே! வானத்தின் முகடு அளவுக்கு உன்னுடைய பாவம் இருந்த பின்பு என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன் அதில் நிலையாக இருப்பேன்.
ஆதமின் மகனே! பூமியின் பரப்பளவுக்கு தவறுகள் இருந்து எனக்கு இணைவைக்காதவனாக என்னை நீ சந்தித்தால் அதே (பூமி) அளவுக்கு மன்னிப்புன் உன்னை சந்திப்பேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது திர்மிதியில் 'பாவமன்னிப்பு, பிழைபொறுக்க வேண்டாம்' பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 73
ஷஃபான் மாதம் பாதிநாட்கள் கடந்து (15ஆம் நாள்) இரவு வந்துவிட்டால் அந்த இரவில் வணக்கம் புரியுங்கள். அதன் பகலில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அந்த இரவில் சூரியன் மறையும் போதே பூமியின் வானத்தின் பக்கம் அல்லாஹ் இறங்குகிறான். அப்போது அவன், ''(என்னிடம்) பாவமன்னிப்புக் கேட்போர் உண்டா? அவரை நான் மன்னிப்பேன். (என்னிடம்) உணவு தேடுவோர் உண்டா? அவருக்கு உணவளிப்பேன் (என்னிடம்) சங்கடத்திற்குரியோர் (முறையீடு) உண்டா? அவருக்கு நிவாரணமளிப்பேன். அவர் இல்லையா? இவர் இல்லையா?'' என்று கப்ஹு நேரம் வரை கேட்பான் என்று நபி (ஸல்) கூறியதாக அலி இப்னு அபீதாலிப் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது இப்னுமாஜாவில் 'ஷஃபான் மாதம் 15ஆம் இரவு பற்றி....' என்ற பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வாரிசையில் அபூபக்கர் இப்னு அப்துல்லா இப்னு முஹம்மது அபிபுஸ்ரா என்ற இப்னு அபீபுஸ்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவரை இமாம் அஹ்மத், இப்னு முயீன் ஆகியோர் குறை காணுகிறார்கள்.
அல்லாஹ் தன் அடியானை பிரியம் கொள்வது அதற்கு அடையாளம் இதர மக்கள் பிரியம் கொள்வது
ஹதீஸ் எண் : 74
அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரிலை அழைத்து, ''அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!'' என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரில் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ''அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் ''படைப்புகளின் ஆரம்பம்' அத்தியாயத்தில் 'மலக்குகளிடம் நினைவு கூர்தல்' என்ற பாடத்தின் கீழ் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 75
மேற்கண்ட ஹதீஸே இங்கும் ஒழுக்கம் எனும் அத்தியாத்தில் 'அல்லாஹ்வின் அன்பு' என்ற பாடத்தின் கீழ் இது பதிவாகி உள்ளது. இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 76
மேற்கண்ட ஹதீஸே இங்கும் 'ஓரிறைக் கொள்கை (தவ்ஹீது) எனும் அத்தியாத்தில் 'ஜிப்ரிலுடன் அல்லாஹ் பேசுதல்.....' என்ற பாடத்தின் கீழ் இது பதிவாகி உள்ளது. இங்கும் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் கொண்டால் ஜிப்ரிலை அழைப்பான். ''நான் இன்ன மனிதரை பிரியம் கொள்கிறேன். நீயும் அவரை நீ விரும்பு'' என்று கூறுவான். ஜிப்ரில் அவரை பிரியம் கொள்வார். பின்பு அவர் வானத்தில் உள்ளோரை அழைத்து ''அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நாங்களும் விரும்புகிறோம்'' என்பார். அவர்களும் அவரை விரும்புவர். பின்பு பூமியில் உள்ளோரிடையே அவருக்கு இணக்கத்தை ஏற்படுத்தப்படும்.
அல்லாஹ் ஒரு அடியானை கோபம் கொண்டால் ஜிப்ரிலை அழைத்து ''இன்ன மனிதனை நான் கோபிக்கிறேன். நீயும் அவனை கோபித்து விடு'' என்பான். ஜிப்ரில் அவனை கோபம் கொள்வார். பின்பு அவர் வானத்தில் உள்ளோரை அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் இன்ன மனிதனை கோபிக்கிறான். நீங்களும் அவனை கோபியுங்கள்'' என்று கூறுவார். அவர்களும் அவனை கோபிப்பார்கள். பின்பு பூமியில் உள்ளோரிடையேயும் கோப நிலையை அவனுக்காக ஏற்படுத்தப்படும். இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் நல்லது செய்தல் இணைந்து வாழ்தல் என்ற அத்தியாத்தில் அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்தல் அவனை அடியார்களும் பிரியம் வைப்பர் பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண் : 78
மேற்கண்ட ஹதீஸே அல்முஅத்தாவில் ''அல்லாஹ்வின் விஷயத்தில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுதல் என்ற பாடத்தின் கீழ் இடம்பெற்றுள்ளதாக இடம் பெறுகிறது.
ஹதீஸ் எண் : 79
அல்லாஹ் ஒருவனை பிரியம் கொண்டால் ஜிப்ரிலை அழைத்து, ''அவரை நான் பிரியம் கொள்கிறேன் நீயும் அவரை விரும்பு'' என்று கூறுவான். அவரும் வானத்தில் உள்ளவர்களை அழைத்துக் கூறுவார். பின்பு பூமியில் உள்ளோரிடையேயும் அவருக்கு பிரியத்தை ஏற்படுத்தப்படும். இதற்கு ''நிச்சயமாக அவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்'' (அல்குர்ஆனின் 19:96 வசனம் சான்றாக உள்ளது.
ஒரு அடியானை அல்லாஹ் கோபம் கொண்டால் ஜிப்ரிலை அழைத்து 'நான் அவரை கோபிக்கிறேன்'' என்று கூறுவான். வானத்தில் உள்ளோரிடம் அதை அவர் அறிவிப்பார். பின்பு பூமியில் உள்ளோரிடையேயும் அவர் மீது கோபத்தை இறக்கப்படும் என்று நபி (ஸல்) அறிவிக்கின்றார்கள்.
(இது திர்மிதியில் 'மர்யம் அத்தியாயம்' என்ற பாடத்தின் கீழ் உள்ளது.
குறிப்பு:- இங்கே மூல நூல்படி 80வது ஹதீஸ் இடம் பெறவில்லை)
இறைநேசர்களை நோவினை செய்பவனுக்கு கூலி மற்றும் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைப்பதில் மிகச் சிறந்த செயல்.
ஹதீஸ் எண் : 81
என் நேசரை நோவினை செய்தவனிடம் நான் பகிரங்கமாக போர் புரிவேன். கடமையாக்கிய ஒன்றை தான் செய்வதில் இருந்தே தவிர எனக்கு மிக விருப்பமான வேறொன்றை செய்து என் அடியான் என்னிடம் நெருங்கிட முடியாது. நபிலான (உபரியான) வணக்கங்களை செய்வது மூலம் என்னிடம் நெருங்குவதில் என் அடியான் தொடர்ந்து இருப்பான் இதனால் அவனை நான் பிரியம் கொள்வேன்.
அவனை நான் பிரியம் கொண்டு விட்டால் அவன் கேட்கும் அவனது செவியாகவும் அவன் பார்க்கும் பார்வைப் புலனாகவும், அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடந்து செல்லும் காலாகவும் நான் ஆவேன்.
என்னிடம் அவன் கேட்டால் அவனுக்குக் கொடுப்பேன். என்னிடம் நெருங்குவதில் என் அடியான் தொடர்ந்து இருப்பான். இதனால் அவனை நான் பிரியம் கொள்வேன்.
அவனை நான் பிரியம் கொண்டு விட்டால் அவன் கேட்கும் அவனது செவியாகவும் அவன் பார்க்கும் பார்வைப் புலனாகவும், அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடந்து செல்லும் காலாகவும் நான் ஆவேன்.
என்னிடம் அவன் கேட்டால் அவனுக்குக் கொடுப்பேன். என்னிடம் அவன் பாதுகாப்புத் தேடினால் அவனை நான் காப்பாற்றுவேன். மரணத்தை அஞ்சும் என் மூமினான அடியானின் உயிரை கைப்பற்றுவதை நான் தயங்குவது போல் வேறு எதற்கும் நான் தயங்குவதில்லை அவனின் மரண வேதனையை நான் நீக்குகிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'பணிவாக இருத்தல்' என்ற பாடத்தின் கீழ் பதிவாகியுள்ளது)
அல்லாஹ்வை அஞ்சுவது, பயப்படுவது, பாவங்கள் மன்னிக்கப்பட உள்ள காரணங்களில் உள்ளதாகும்
ஹதீஸ் எண் : 82
நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுள்ளதை எங்களுக்கு கூறுங்களேன் என்று நான் ஹுதைபா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குப் பின் வருமாறு கூறினார்கள்.
தஜ்ஜால் வெளியேறும் காலத்தில் அவனிடம் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். இது நெருப்பு என்று மக்கள் கருதுவதோ குளிர்ந்த நீராக இருக்கும். இது குளிர்ந்த நீர் என மக்கள் கருதுவதோ நெருப்பாக கரிக்கும்.
இடங்களில் எவரேனும் (அக்காலத்தை) அடைந்தால் இது எனக்கருதும் ஒன்றை அது தான் குளிர்ந்த நீர் என்று முடிவு செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறிடக் கேட்டேன்.
மேலும் ஹுதைபா (ரலி) கூறினார்கள்:-
உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவரின் உயிரை கைப்பற்ற வானவர் அவரிடம் வந்து கைப்பற்றினார். மரித்த (அ) வரிடம் (உலகில்) நல்லதைச் செய்தீரா? என்று கேட்கப்பட்டதற்கு அவர் எனக்குத் தெரியாது என்றார். நினைத்துக் கூறும்' என்று கூறப்பட்டதற்கு எதுவும் அறியவில்லை'' என்று கூறிவிட்டு ''எனினும் நான் மக்களிடையே உலகில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அவர்களிடையே பங்கு பிரித்துக் கொண்டிருந்தேன். பணக்காரனை கவனிப்பேன். அவனிடமிருந்து உள்ளதை) ஏழைக்கு வழங்குவேன் என்று கூறினார். அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழையச் செய்தான் என்று நபி (ஸல்) கூறக் கேட்டுள்ளேன்.
மேலும் ஹுதைபா (ரலி) கூறுகின்றார்கள்.
ஒரு மனிதருக்கு மரணம் ஏற்பட்டது. அவர் உயிருடன் இருந்த போது ஒரு நாள் தன் மக்களிடம் நான் இறந்து விட்டால் நிறைய விறகுகளை எனக்காகச் சேகரித்து, என் உடம்பும், என் எலும்பும் மடியச் செய்யும் அளவுக்கு நெருப்பை மூட்டுங்கள். என் உடலை எரிக்கப்பட்டதும் அதை (சாம்பலை) எடுத்து, சேகரித்து, காற்று வரும் வரை பொறுத்திருங்கள் காற்றில் பறத்தி விடுங்கள்'' என்று கூறினார்.
(அவர் இறந்ததும்) அவரது (குடும்பத்தினர்) அவர் விருப்பப்படி) செய்தார்கள். அல்லாஹ் அவரை தன் முன்பே எழுப்பியதுபோது, ஏன் இவ்வாறு செய்தீர்? என்று அவரிடம் கேட்டான். உன்னை அஞ்சிய காரணத்தால் தான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார். அவரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் ''இம்மனிதர் கப்ரைத் தோண்டி, கபன் துணியைத் திருடக் கூடியவராக இருந்தார்'' என ஹுதைபா (ரலி) கூறியதாகவும் கூறுகின்றார்கள்.
(இது புகாரியில் பனீ இஸ்ரவேலர்களை நினைவு கூரல் என்ற பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 83
உங்களுக்கு முன்பிருந்த ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தை தந்திருந்தான். அவருக்கு மரணவேளை வந்த போது தன்மகன்களிடம் ''உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்? என்று கேட்டான். சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார். ''நான் அறவே நற்செயலே செய்ததில்லை. நான் இறந்து விட்டால் என்னை எரித்து விட்டு, என்னை (சாம்பலை) சேகரித்து, பின்பு காற்று காலத்தில் (காற்றில்) பறக்க விடுங்கள்! என்று கூறினார். அவரின் மகன்களும் அவ்வாறே செய்தனர்.
உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது என்ன? என்று அல்லாஹ் அவரை எழுப்பிய போது கேட்டான். உன்னை அஞ்சியதால் தான் என்று அவர் கூறினார். அவரை அல்லாஹ் தன் அருளால் இணைத்துக் கொண்டான்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'படைப்புகளின் ஆரம்பம்' என்ற அத்தியாத்தில் பதிவாக' உள்ளது.
ஹதீஸ் எண் : 84
82வது ஹதீஸில் உள்ள பிந்திய சம்பவம் இங்கே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 85
ஒரு மனிதர் தவறான வழியில் இருந்தார். அவருக்கு மரணவேளை வந்ததும், தன் மகன்களை அழைத்து ''நான் இறந்து விட்டால் என்னை எரித்து விடுங்கள் பின்பு என்னை (என் சாம்பலை) சேகரித்து. காற்றிலே பறக்க விடுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் இறைவன் என்னை சேகரித்து விட்டால் என்னை எவரையும் தண்டிக்காத தண்டனையால் தண்டிப்பான்'' என்று கூறினார். அவர் இறந்ததும், அவர் கூறியபடியே நிறை வேற்றப்பட்டது.
அல்லாஹ் பூமியிடம் ''உன்னில் அவரை (அவர் சாம்பலை) ஒன்று சேர்'' என்று ஆணையிட்டான் பூமியும் அவ்வாறே செய்தது உடனே அவர் எழுந்து நின்றார். ''உன்னை இவ்வாறு நடந்து கொள்ளத் தூண்டியது எது?'' என்று கேட்டான். ''உன்னை அஞ்சியதால் தான்.
நீயே மிக அறிந்தவன் ''என்று கூறினார். அவரை அல்லாஹ் மன்னித்து விட்டான்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 87
83,84 வது ஹதீஸே மீண்டும் சில வாசக மாற்றங்களுடன் புகாரி நூலில் இடம் பெற்றுள்ளதாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 88
85வது ஹதீஸே மீண்டும் இங்கே இடம் பெற்றுள்ளது. 'காற்று' என்பதற்கு பதிலாக 'கடல்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
(இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டு உள்ளது)
ஹதீஸ் எண் : 89
85 வது ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது. இது நஸயீயில் உள்ளது)
ஹதீஸ் எண் : 90
உங்களுக்கு முன்னிருந்த காலத்தைச் சார்ந்த ஒருவர் தன் இஷ்டப்படி வாழ்ந்தார். அவருக்கு மரணம் வந்த போது, தன் குடும்பத்தாரை அழைத்து ''நான் இறந்து விட்டால் என்னை எரித்து என் (சாம்பலை) சேகரித்து, கடலில் வீசி விடுங்கள்.
அல்லாஹ் என் மீது (சேகரிக்க) சக்திபெற்று இருந்தால் என்னை மன்னிக்கவே மாட்டான். (அவர் இறந்தபிறகு அவர் விருப்பப்படியே செய்யப்பட்டது)
அல்லாஹ் வானவர்களுக்கு (அவரது உயிரை நிலை பெற் செய்ய) ஆணையிட்டான். உயிர் பெற்றதும் ''அவரை நோக்கி'' உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? என்று கேட்டான். ''இறைவா! என்னை அஞ்சியகாரணத்தினாலேயே தவிர (வேறு எதற்கும்) செய்யவில்லை என்று கூறினார் அவரை உடனே அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபி (ஸல்) கூறியதாக ஹுதைபா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது நஸயீயில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 91
ஒரு மனிதர் தன் இஷ்டப்படி வாழ்ந்து வந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது தன் மக்களிடம் ''நான் இறந்து விட்டால் என்னை எரித்து விடுங்கள். பின்பு என்னை (என் சாம்பலை) சேகரியுங்கள். பின்பு கடலின் காற்றில் என்னை கலந்து விடச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக என் இறைவன் என் விஷயமாக சக்தி கொண்டால் (இதுவரை) எவரையும் தண்டிக்காத அளவுக்கு என்னை தண்டிப்பான் என்று கூறினார். அவர் கூறிய படியே அவரது மகன்கள் செய்தனர். அப்போது அல்லாஹ் பூமியிடம் ''நீ எடுத்ததை ஒன்று சேர்'' என்று ஆணையிட்டான். (பூமி செய்தது) அப்போது அவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ''உன்னை இவ்வாறு செய்யத்தூண்டியது எது?'' என்று கேட்டான் இறைவா! உன்னை அஞ்சியதால் தான் இவ்வாறு செய்தேன்'' என்று கூறினார். அவரை அல்லாஹ் அதற்காக மன்னித்து விட்டான். இதை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது இப்னுமாஜாவில் உள்ளது)
ஹதீஸ் எண் : 92
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை படைத்தான் அவரது. உயரம் 60 முழமாக இருந்தது. பின்பு அவரிடம் ''நீ அந்த வானவர்களிடம் சென்று சலாம் கூறு! உன்னை அவர்கள் வாழ்த்துவதை நீ கேள்! இந்த வாழ்த்து உனக்குரிய வாழ்த்தாகும். உன் சந்ததிக்குரிய வாழ்த்தாகும் என்று கூறினான்.
ஆதம் (அலை) அவர்கள் அவர்களிடம் ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி என்று பதில் கூறி 'வரஹ்மத்துல்லாஹி என்பதை அதிகப்படுத்தி கூறினார்கள்.
சொர்க்கத்தில் நுழையும் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்கள் உருவப்படியே இருப்பர். எந்தபடைப்பும் இது வரை குறைவை ஏற்படுத்திவிட வில்லை. இதை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரியில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் :93
மேற்கண்ட ஹதீஸின் கருத்தே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 94
மேற்கண்ட ஹதீஸின் இடம் பெற்றுள்ளது.
(இது முஸ்லிமில் சொர்க்க வர்ணணை விளக்கப்பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 95
அல்லாஹ் ஆதமை படைத்ததும் அவரின் முதுகைத்தடவினான். அப்போது அவரின் முதுகில் இருந்து அவரது ஒவ்வொரு வாரிசுகளும் குதித்தனர். அல்லாஹ் தான் அவர்களை மறுமைவரை படைக்கக்கூடியவன் அவர்களில் ஒவ்வொரு மனிதனின் இரு கண்களுக்கிடையே பிரகாசமான ஒளியை ஏற்படுத்தி இருந்தான். பின்பு அவர்களை ஆதம் முன்பு எடுத்துக் காட்டினான்.
இறைவா! இவர்கள் யார்? என்று அவர் கேட்கவும், இவர்கள் நான் உன்வாரிசுகள் என்று அல்லாஹ் கூறினான் அவர்களில் ஒருவரின் இருகண்களிடையே உள்ள பிரகாசம் அவரை ஆச்சாரிய முறச்செய்தது ''இறைவா! இவர் யார்? என்று கேட்டார். இவர் உன் வாரிசுகளில் இறுதியில் உள்ள சமுதாயத்தைச் சார்ந்தவர். இவர் பெயர் தாவூத் என்று கூறப்படும் என்று அல்லாஹ் கூறினான். இறைவா! இவருக்கு எத்தனை வயது கொடுத்துள்ளாய் என்று கேட்டார். 60 வருடம் என்று அல்லாஹ் கூறினான். இறைவா! என் வயிதில் 40 வருடத்தை அவருக்குக கொடுத்து விடு என்று ஆதம் கூறினார்.
ஆதமின் வயது முடிந்த போது மரணத்திற்குரிய வானவர்வந்தார். ''எனக்கு இன்னும் 40 வருடம் வயது பாக்கி இல்லையா? என்று கேட்டார் ஆதம் உம்முடைய வாரிசு தாவூதுக்கு அந்த (40ஐ) கொடுத்து விட்டீரல்லவா?'' என்று வானவர் கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ''(அன்று) ஆதம் மறுத்துரைத்தார். அவரது வாரிசுகளும் மறுத்துரைக்கின்றனர். ஆதம் தவறிழைத்தார். அவரது வாரிசுகளும் தவறிழைக்கின்றனர்.'' என்றும் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (திர்மிதியில் அல்அஹ்ரப் அத்தியாயம் என்ற பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 96
மேற்கண்ட செய்தியின் மற்றொரு அறிவிப்பில் ''பின்பு அல்லாஹ் ஆதமுக்கு ஆயிரம் வருட வயதையும், தாவூதுக்கு 100 வருட வயதையும் பூர்த்தி செய்தான்'' என்ற வாசகம் கூடுதலாக உள்ளது இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 97
உமர் (ரலி) அவர்களிடம் 7:172 என்ற வசனம் பற்றி கேட்கப்பட்டதற்கு, பின்வருமாறு உமர் (ரலி) கூறினார்கள்.
இந்த வசனம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ''அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை படைத்தான். பின்பு அவர்களின் முதுகின் வலப்புறத்தில் தடவி அதிலிருந்து (அவரது) வாரிசுகளை வெளியே வரச் செய்தான். ''இவர்களை சொர்க்கத்திற்கு படைத்துள்ளேன். சொர்க்கவாசிகளுக்குரிய செயலை இவர்கள் செய்வார்கள்'' எனக் கூறினான். பின்பு அவரின் முதுகைத் தடவி (அவரின்) வாரிசுகளை அதிலிருந்து வெளியே வரச் செய்தான். ''இவர்களை நரகத்திற்கு படைத்துள்ளேன். நரகத்திற்குரிய செயலை இவர்கள் செய்வார்கள்'' எனக் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அப்போது ஒருவர் ''இறைத்தூதர் அவர்களே! அந்த செயல்கள் எப்படி நிகழும்?'' என்று கேட்டார். ''அல்லாஹ் ஒரு அடியானை சொர்க்கத்திற்காக படைத்தால் அவனிடம் சொர்க்கத்திற்குரியவர்களின் செயலை செய்ய வைப்பான் அவர் சொர்க்கவாசிகளின் செயல்களில் ஒரு செயலை செய்து இறப்பான். சொர்க்கத்தில் அவனை நுழையச் செய்வான். நரகத்திற்கு என ஒருவனை படைத்தால் அவனை நரகவாசிகளின் செயலை செய்ய வைப்பான். இறுதியில் அவன் நரகவாசிகளின் செயலை செய்ய ஒன்றைச் செய்து இறப்பான். அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை முஸ்லிம் இப்னுயஸார் அல்ஜூஹ்னீ (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது திர்மிதீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
குறிப்பு:- இதன் அறிவிப்பாளரான முஸ்லிம் இப்னுயஸார் என்பவர் உமர் (ரலி)யிடம் எதையும் செவியுற்றதில்லை. மற்றொரு அறிவிப்பில் இவர்களுக்கிடையே ஒருவர் என்று ஒரு அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். அவர் யாரேன்று தெரியவில்லை.
ஹதீஸ் எண் : 98
அல்லாஹ் ஆதமை படைத்து, அவரில் உயிரை கொடுத்த போது, அவர் தும்மினார். அவர் ''அல்ஹம்துலில்லாஹ்'' என்று கூறினார். அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் அவ்வாறு புரிவானாக! உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த வானவர்களிடம் நீ சென்று, அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறு என அல்லாஹ் கூறினான். (அவர் அவ்வாறு கூறியதும்) வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி என்று மலக்குகள் கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் ஆதம் மீண்டும் வந்தார். இந்த வாழ்த்து உனக்குரிய, உன் சந்ததிக்குரிய வாழ்த்தாகும் என்று கூறினான். மேலும் அல்லாஹ்வின் இருகைகளையும் மடக்கி நிலையில் 'இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடு' என்று அல்லாஹ் கூறினான். வலதுகையை அவர் தேர்ந்தெடுத்தார். அவர் அந்தவலது புறத்தை பிரித்த போது அங்கே ஆதமின் வாரிசுகள் நின்று கொண்டு இருந்தனர். இவர்கள் யார் இறைவா! என்று கேட்டார். இவர்கள் தான் உன் வாரிசுகள் என்று கூறினான். அதில் ஒவ்வொரு மனிதனின் இரு கண்களுக்கிடையே அவரின் வயது எழுதப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் மிகவும் பிரகாசமாக இருந்தார். இறைவா இவர் யார்? என ஆதம் கேட்டார். ''இவர் உன் மகன் தாவூதாவார். இவருக்கு 40 வயதை நான் விதித்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். 'இறைவா! இவரின் வயதில் அதிகமாக்கு'' என்று கூறினார். அவருக்கு விதித்த அளவு அவ்வளவு தான் என்று கூறினான். ''இறைவா! என் வயதில் 60 வருடத்திற்கு அவருக்கு நான் தருகிறேன்'' என்று ஆதம் கூறினார். ''நீ தந்தது அவருக்கு உரியது'' என்று கூறினான். பின்பு அல்லாஹ் நான் நாடிய நாள் வரை அவரை சொர்க்கத்தில் இருக்கச் செய்தான். பின்பு சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு காலம் கடந்ததும் மரணத்திற்கான மலக்கு அவரிடம் வந்தார். அவரிடம் ஆதம் ''ஏன் அவசரப்படுகிறீர்? எனக்கு ஆயிரம் வருடம் வயது விதிக்கப்பட்டுள்ளது'' என்றார். சாரிதான்! எனினும் நீர் உமது மகன் தாவூதுக்கு 60 வருடத்தை தந்து விட்டிரே!'' என்று வானவர் கூறினார். இதை நபி (ஸல்) கூறிவிட்டு ''ஆதம் மறுத்துரைத்தார். எனவே அவரது வாரிசுகளும் மறந்துவிடுகின்றனர். இன்று முதல்தான் எழுதிக் கொள்வதும் சாட்சிகள் நியமிப்பதும் கடமையாக்கப்பட்டது'' என்றும் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது திர்மிதியில் 'தப்ஸீர் அத்தியாத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் எண் : 99
97வது ஹதீஸே அப்துல்ஹமீது இப்னு அப்துர்ரஹ்மான் இப்னு ஸைது இப்னு கத்தாப் அவர்கள் அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.
(இது அல்முஅத்தாவில் 'விதி பற்றி பேசத்தடை' என்ற பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 100.
உங்களில் ஒருவரை படைப்பது என்பது அவரின் தாயின் வயிற்றில் அவரை 40 நாட்கள் பகல்-இரவுகள் இருக்கவைக்கப்படும். பின்பு அது அதேகால அளவுக்கு அலக்காக இருக்கும். பின்பு அது, அதேகால அளவுக்கு சதைக்கட்டியாக ஆகும். பின்பு அதன் பக்கம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைப்பான். அவரின் உணவு கால அளவு, அவரின் செயல், அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என நான்கு விஷயங்கள் (எழுத) அனுமதிக்கப்படும் பின்பு அவர் எழுதுவார். பின்பு அவரில் உயிரை அவர் ஊதுவார்.
உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் செயலை செய்வார். அவருக்கும், சொர்க்கத்திற்கும் ஒரு முழு இடைவெளி அளவு தான் இருக்கும் (ஆனால்) அவரை விதிமுந்தும். எனவே அவர் நரகவாசிகளின் செயலை செய்வார். நரகில் நுழைவார்.
உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலை செய்வார் அவருக்கும் நரகத்திற்கும் இடைவெளி ஒரு முழு அளவுதான் இருக்கும். ஆனால், விதிமுந்தும் அவர் சொர்க்க வாசிகளின் செயலை செய்வார். அதில் நுழைவார் என்று நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஇப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'தவ்ஹீது' அத்தியாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண் : 101
சில வாசகங்களுடன் மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 102
மேற்கண்ட ஹதீஸே இப்னுமாஜாவில் 'விதி' பாடத்தின் கீழ் உள்ளதாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 103. 104. 105.
மேற்கண்ட ஹதீஸே இங்கு முஸ்லிம் இடம் பெற்றுள்ளதாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 106
நாற்பது, அல்லது நாற்பத்தி ஐந்து நாட்கள் கர்ப்பப் பையில் விந்து நிலை கொண்ட பிறகு வானவர் வந்து ''இறைவா! இவர் நல்லவரா? கெட்டவரா? என்று கேட்பார். ''இறைவா! இவர் ஆணா? பெண்ணா? என்று கேட்பார். அவ்விரண்டில் ஒன்று எழுதப்படும். அவரின் செயல், அவரின் வாழ்க்கை முறை, அவரின் கால அளவு, அவரின் உணவு போன்றவையும் எழுதப்படும். பின்பு அந்த ஏடு சுருட்டிவைக்கப்படும். அதில் கூட்டவோ, குறைக்கவோ பட மாட்டாது என்று நபி
(ஸல்) கூறியதாக ஹுதைபா இப்னு அபீ அஸீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஹதீஸ் எண் : 107
தன் தாயின் வயிற்றில் கெட்டவனே கெட்டவனாவன். இது அல்லாமல் கூறப்பட்டவன் நல்லவனே என்று அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி) கூறினார்கள். இதுபற்றி ஹுபைதா இப்னு அஸீதுல்ஹிபாரி (ரலி) என்று கூறப்படும் நபித்தோழரை வந்து, இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறியதைக் கூறி, செயல் இன்றி ஒருவர் எப்படி கெட்டவர் ஆவார்? என்று கேட்டேன். அப்போது அந்த நபித்தோழர் நபி (ஸல்) கூறியதாக பின்வருமாறு கூறினார்கள்.
விந்து 42 நாட்கள் இருந்துவிட்டால் அல்லாஹ் அங்கே ஒரு வானவரை அனுப்பி, அதை உருவகம் கொடுக்கச் செய்வான் அவர் அதற்கு கேட்கவும், பார்க்கவும் மற்றும் தோல், கறி, எலும்பு ஆகியவற்றை படைப்பார். பின்பு ''இறைவா! இது ஆணா? பெண்ணா?'' என்று கேட்பார். உனது அல்லாஹ் தான் விரும்பியதை கூறுவான். வானவர் அதை எழுதிக் கொள்வார். பின்பு ''இறைவா! அவரின் கால அளவு என்ன?'' என்று கேட்பார். உமது இறைவன் தான் விரும்பியதைக் கூறுவான். வானவரும் (அதை) எழுதிக் கொள்வார். பின்பு வானவர் அந்த ஏட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு செல்வார். அதில் கூட்டவோ, குறைக்கவோ மாட்டார். இதை ஆமிர் இப்னுவாஸிலா அறிவிக்கின்றார்.
(இது முஸ்லிமில் உள்ளது)
ஹதீஸ் எண் : 108.
விந்து கர்ப்பபையில் 40 நாட்கள் இருக்கும் அப்போது அங்கு அதற்கு வானவர் உருவம் அமைத்து படைப்பார். ''இறைவா இது ஆணா? பெண்ணா? என்று கேட்பார். அதை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லாஹ் ஆக்குவான். பின்பு ''இறைவா! ஊனமற்றவரா? ஊனமுற்றுவரா?'' என்று கேட்பார். அல்லாஹ் அதை ஊனமற்றவராகவோ, ஊனமுற்றவராகவோ ஆக்குவான். பின்பு ''இறைவா! இதன் உணவு என்ன? இதன் கால அளவு என்ன? அவரின் குணம் என்ன?'' என்று வானவர் கேட்பார். பின்பு அவரை நல்லவர் அல்லது கெட்டவர் என அல்லாஹ் ஆக்குவான் என்று நபி (ஸல்) கூறியதாக ஹுதைபா இப்னு அஸீத் அல்ஹிபாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
ஹதீஸ் எண் : 109
மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 110.
அல்லாஹ் ஒரு வானவரை கர்ப்பப்பையில் பொறுப்பேற்க வைப்பான். அவர் ''இறைவா! இது விந்தாக உள்ளது. இறைவா! அலத்ராக உள்ளது. இறைவா! சதைக்கட்டியாக உள்ளது என்று கூறுவார். படைப்பை முழுமைப்படுத்த நாடிவிட்டால் இறைவா! இது ஆணா? பெண்ணா? நல்லவரா? கெட்டவரா? உணவு என்ன? கால அளவு என்ன? என்று கேட்பார். அவ்வாறே அவரின் தாயின் வயிற்றிலேயே எழுதப்படும் என்று நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிமில் இது உள்ளது)
அல்லாஹ், உறவு (என்ற) பண்புடன் நேரில் பேசியது பற்றி
ஹதீஸ் எண் : 111
அல்லாஹ் படைப்புகளை படைத்து முடித்த போது, ரஹ்கி (எனும் உறவு) எழுந்து, இறைவனின் கீழாடையை பிடித்தது அல்லாஹ் அதனிடம் 'பொறு' என்றான். ''என்னைப் புறக்கணிப்பவனிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடவே நான் இவ்வாறு நிற்பாதாகும்'' என்று அது கூறியது. என்னை சேர்ப்போரை நானும் சேர்ப்பேன். உன்னைப் புறக்கணிப்போரை நானும் புறக்கணிப்பேன் என்பதை நீர் திருப்தியுறவில்லையா? என அல்லாஹ் கேட்டான். ''இறைவா! திருப்தி தான்'' என்று கூறியது இதுவே உனக்குரியது என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இதை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ''நீங்கள் விரும்பினால் 22:47 வசனத்தை ஓதுங்கள்'' என்றும் கூறினார்கள்.
(இது புகாரியில் 'தப்ஸீர்' அத்தியாத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 112
மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது. 22:47 வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதும்படி கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாகவும் உள்ளது.
ஹதீஸ் எண் : 113
நான் தான் அல்லாஹ். நான் ரஹ்மான் ஆகும். ரஹ்மை (உறவை) நானே படைத்தேன். (ரஹ்மான் என்ற) எனது பெயரில் இருந்தே அதை (ரஹ்மை) உருவாக்கினேன். அதை சேர்த்துக் கொள்பவரை நானும் சேர்த்துக் கொள்வேன் அதைப் புறக்கணிப்பவரை நானும் புறக்கணிப்பேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்பு (ரலி) அறிவிக்கின்றார்கள். இது 'ஹஸன் ஸஹீஹ்' எனும் விதியாகும் என அபூஈஸா என்ற திர்மிதி கூறுகிறார்கள்.
(இது திர்மிதியில் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 114
மேற்கண்ட ஹதீஸே அபூதாவூதில் 'உறவை இணைத்து வாழ்தல்' என்று பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளதாக இடம் பெறுகிறது
தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்
ஹதீஸ் எண் : 115
நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் முகடு திறக்கப்பட்டது. ஜிப்ரில் (அலை) இறங்கி வந்து, என் நெஞ்சை பிளந்தார். பின்பு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பின்பு ஈமான், ஹிக்மத் ஆகியவற்றால் நிரம்பிய தங்கத்தட்டை கொண்டு வந்தார். இதை என் நெஞ்சினுள் போட்டார். பின்பு நெஞ்சை மூடினார். பின்பு என் கையை பிடித்துக் கொண்டு, உலகத்தின் வானிற்கு உயர்ந்தார். முதல் வானம் வந்தது. வானத்தின் பொறுப்பாளாரிடம் ஜிப்ரில் (அலை), ''திறந்து விடு'' என்று கூறினார்கள். யார் அது? என அவர் கேட்டார். நான் தான் ஜிப்ரில் என்று கூறினார். உன்னுடன் வேறு எவரும் உண்டா? எனக்கேட்டார். ''ஆம்! என்னுடன் நபி (ஸல்) உள்ளார்''. என்றார்கள் ஜிப்ரில் (அலை) ''இங்கே வர அழைக்கப் பட்டுள்ளாரா?'' என அவர் கேட்டார். ''ஆம்'' என்றார்கள் ஜிப்ரில் (அலை) அவர்கள்.
அவ்வானத்தை திறந்த போது நாங்கள் பூமியின் வானத்தினுள் நுழைந்தோம். அங்கு ஒரு மனிதர் உட்கார்ந்து இருந்தார். அவரின் வலப்புறத்தில் சில மனிதர்களும், இடப்புறத்தில் சில மனிதர்களும் இருந்தனர். அவரின் வலதுபுறத்தில் இருப்போரை பார்த்தால் சிரித்தார். இடது புறத்திலுள்ளோரைக் கண்டால் அழுதார். (என்னைக் கண்டதும்) நல்ல மகனே! நல்ல நபியே! (உனக்கு) வாழ்த்துக்கள். என்று கூறினார்.
இவர் யார்? என்று ஜிப்ரில் (அலை) அவர்களிடம் நான் கேட்டேன். இவர் தான் ஆதம் (அலை) அவர்கள் இவரது வலது, இடப்புறத்தில் உள்ளவர்கள் இவரின் வாரிசுகளாவர். அவர்களில் வலது புறத்தில் உள்ளவர்கள் சொர்க்கவாசிகள் இடது புறத்தில் இருப்போர் நரகவாசிகளாவர் எனவே தான் வலதுபுறத்தில் உள்ளோரைக் கண்டதும் சிரித்தார் இடது புறத்தில் உள்ளோரைக் கண்டதும் அழுதார்.
அடுத்த என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் பொறுப்பாளாரிடம் ''திறந்துவிடு'' என்று கூறினார். முதல் (வானத்து) வானவர் கேட்டது போல் இவரும் ஜிப்ரிலிடம் கேட்டார் பின்பு திறந்து விட்டார்.
நபி (ஸல்) அவர்கள் வானங்களில் ஆதம், இத்ரிஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம் ஆகிய நபிமார்களை சந்தித்ததாக கூறுகிறார்கள். இவர்களின் இருப்பிட நிலை எப்படி இருந்தது என்பது பற்றி உறுதிபடுத்தவில்லை. எனினும் முதல் வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும், ஆறாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் சந்தித்தாக கூறுகிறார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
மேலும் நபி (ஸல்) தொடர்கிறார்கள்:-
என்னை ஜிப்ரில் (அலை) அழைத்துச் சென்றார். அங்கிருந்த இத்ரிஸ் (அலை) அவர்கள் ''நல்ல நபியும், நல்ல சகோதரருமான உமக்கு வாழ்த்துக்கள்'' என்றார்கள் இவர் யார்? என்று கேட்டேன். இவர்தான் இத்ரிஸ் என்று ஜிப்ரில் கூறினார்.
பின்பு மூஸா (அலை) அவர்களை நான் சந்திக்கும்போது, 'நல்ல நபியும் நல்ல சகோதரருமான இவருக்கு என் வாழ்த்துக்கள்'' என்றார். இவர் யார்? எனக் கேட்டேன். இவர் தான் மூஸா என்று கூறினார் ஜிப்ரில்.
பின்பு ஈஸா (அலை) அவர்களை கடந்து சென்றபோது, நல்ல நபியும், நல்ல சகோதரருமான இவருக்கு வாழ்த்துக்கள்'' என்றார். இவர் யார்? எனக் கேட்டேன் இவர் தான் ஈஸா என்று பதில் கூறினார்.
பின்பு இப்ராஹீம் (அலை) அவர்களை கடந்து சென்றபோது, ''நல்ல நபியும், நல்ல சகோதரருமான இவருக்கு வாழ்த்துக்கள்'' என்றார் இவர் யார்? எனக் கேட்டேன். இவர் தான் இப்ராஹீம் என்று பதில் கூறினார்.
பிறகு, மேலும் என்னை அழைத்துச் செல்லப்பட்டது. இறுதியில் பேனாக்கள் (எழுதும்) சப்தங்களை நான் கேட்கும்படியான இடத்தில் இருந்தேன். அப்போது அல்லாஹ் ஐம்பது நேர தொழுகைக்கடமைகளை என் சமுதாயத்தினருக்கு விதித்தான்.
நான் திரும்பி வந்து, மூஸா (அலை) அவர்களை தாண்டும் போது, ''உம் சமுதாயத்தினர் மீது உனக்கு அல்லாஹ் விதித்தது என்ன?'' என்று கேட்டார். ஐம்பது நேரத் தொழுகைகள் என்றேன். ''நீ மீண்டும் உன் இறைவனிடம் செல்! உம் சமுதாயம் இதற்கு இயலாது'' என்றார். நான் திரும்பவும் (என் இறைவனிடம்) வந்தேன். அதில் ஒரு பகுதியை என் மீது குறைத்தான். நான் மூஸாவிடம் வந்து, ''அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்'' என்றேன். 'உம் இறைவனிடம் செல்! உம் சமுதாயம் இதற்கு இயலமாட்டார்கள்'' என்றார்.
நான் மீண்டும் வந்தேன். அதில் ஒரு பகுதியை குறைத்தான். நான் மூஸாவிடம் வந்தேன். அப்போதும் அவர் ''உம் இறைவனிடம் செல். உன் சமுதாயம் சக்தி பெறாது'' என்றார். நான் மீண்டும் (இறைவனிடம்) வந்தேன். தொழுகைகளை ஐந்து நேரம் தான். இவை ஐம்பதுக்குச் சமம். என்னிடம் இனிவேறு சொல் மாற்றப்படாது என்று கூறினான்.
பின்பு மூஸாவிடம் வந்தேன். ''உம் இறைவனிடம் மீண்டும் செல்'' என்றார். இனியும் என் இறைவனிடம் நான் செல்ல வெட்கப்படுகிறேன் என்றேன். பின்பு என்னை ஜிப்ரில் (அலை) அழைத்துச் சென்றார். இறுதியில் சித்ரதுல் முன்தகா என்ற இடத்தில் என்னை விட்டுச் சென்றார். அதை பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன. அதன் வகை பற்றி நான் அறிய மாட்டேன் பின்பு சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கே முத்துக்களான கயிறுகள் இருந்தன. அதன் மண்ணோ கஸ்தூரி மணம் கமழ்ந்தது என்று நபி (ஸல்) கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் மிஹ்ராஜில் தொழுகை எப்படி கடமையாக்கப்பட்டது? என்ற பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 116
வெள்ளை நிற உயரமான கழுதையை விட பெரிய, ஒட்டகத்தைவிட சிறிய 'புராக்' வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது. அதன் இறக்கை முடியும் இடத்தில் அதன் கால்குளம்பு இருந்தது.
அதில் நான் ஏறி 'பைத்துல் முகத்தஸ்க்கு' வந்தேன். நபிமார்கள் (தங்களின்) வாகனங்களை கட்டு வளையத்தில் நானும் அதை கட்டினேன்.
பின்பு பள்ளிக்குள் நுழைந்து, இரண்டு ரக்அத் தொழுவைத்தேன். பின்பு வெளியேறினேன். அப்போது மது உள்ள பாத்திரத்தையும், பால் உள்ள பாத்திரத்தையும் ஜிப்ரில் (அலை) கொண்டு வந்தார்கள். நான் பாலை எடுத்துக் கொண்டேன். ''இயற்கையான (இஸ்லாத்)தையே நீர் தேர்ந்தெடுத்தீர்'' என்று ஜிப்ரில் (அலை) கூறினார்கள்.
பின்பு எங்களை வானத்தின் பால் 'புராக்' கொண்டு சென்றது. (வானக் கதவை) திறக்கும்படி ஜிப்ரில் (அலை) கூறினார்கள். ''நீர் யார்'' எனக் கேட்கப்பட்டதற்கு ''ஜிப்ரில்'' என்று பதில் கூறினார்கள். உன்னுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டதற்கு ''நபி (ஸல்) என்று பதில் கூறினார்கள். அவருக்கு (இங்கு வர அனுமதி) தரப்பட்டதா? என்று கேட்கப்பட்டதற்கு, அவருக்கு அழைப்புத் தரப்பட்டது என்று ஜிப்ரில் (அலை) கூறினார்கள். எங்களுக்கு (கேள்வி கேட்டவர்) வானத்தை திறந்தார்.
அங்கு நான் ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். என்னை அவர்கள் வரவேற்றார்கள். எனக்கு நல்லவை கிடைக்க துஆச் செய்தார்கள்.
பின்பு இரண்டாம் வானத்திற்கு எங்களை 'புராக்' வாகனம் உயர்த்தியது ஜிப்ரிலை (அலை) அவர்கள் வாசலைத் திறக்கக் கூறினார் நீர் யார்? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரில் என்று ஜிப்ரில் (அலை) பதில் கூறினார்கள். உன்னுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டதற்கு நபி (ஸல்) என்று கூறினார்கள். இங்கு வர அவருக்கு (அழைப்பு) அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவருக்கு (அழைப்பு) அனுப்பப்பட்டது என்று பதில் கூறினார்கள். எங்களுக்காக கதவு திறந்தது.
நான் அங்கு என் சிறிய தாயாரின் மகனார் ஈஸா(அலை) அவர்களைக் கண்டேன். யஹ்யா இப்னு ஸகரியா (அலை) அவர்களும் அங்கிருந்தார். என்னை அவ்விருவரும் வரவேற்று எனக்கு நல்லது கிடைக்கச் துஆச் செய்தார்கள்.
பின்பு மூன்றாவது வானத்தின் பால் எங்களை உயர்த்தியது. ஜிப்ரில் (அலை) வாசலை திறக்கும்படி கேட்டுக் கொண்டார். நீர் யார்? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரில் என ஜிப்ரில் (அலை) பதில் கூறினார்கள். உன்னுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டதற்கு, முஹம்மது என பதில் கூறினார்கள். இங்கு வர அவருக்கு (அழைப்பு) அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவருக்கு (அழைப்பு) அனுப்பப்பட்டது என்றார்கள். அப்போது எங்களுக்கு (வாசல்) திறந்தது.
அப்போது நான் யூசுப் (அலை) அவர்களுடன் இருந்தேன். அவர் (மொத்த) அழகின் சரிபாதியையும் தரப்பட்டவராக இருந்தார். என்னை அவர் வரவேற்று, எனக்கு நல்லது கிடைக்கத் துஆச் செய்தார்.
பின்பு நான்காவது வானத்தின் பால் எங்களை உயர்த்தியது. ஜிப்ரில் (அலை) கதவைத் திறக்க கேட்டுக் கொண்டார். யார் அது? என்று கேட்கப்பட்டதற்கு ஜிப்ரில் என ஜிப்ரில்(அலை) பதில் கூறினார்கள். உன்னுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதில் கூறினார்கள். இவருக்கு (இங்கு வர அழைப்பு) அனுமதிக்கப்பட்டதா? என்று கேட்கப்பட்டதற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளார் என்று பதில் கூறினார்கள். உடனே எங்களுக்கு (வாசல்) திறந்தது.
அங்கு நான் இத்ரிஸ் (அலை)அவர்களைக் கண்டேன். அவர் என்னை வரவேற்று, எனக்கு நல்லது கிடைக்க துஆச் செய்தார். கஇவரை உயர்ந்த இடத்திற்கு நாம் உயர்த்தினோம் என்று அல்லாஹ் இவர் பற்றியே கூறுகிறான்.
பின்பு ஐந்தாவது வானத்தின் பால் எங்களை உயர்த்தியது. ஜிப்ரில் வாசலைத் திறக்கக் கேட்டுக் கொண்டார், யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரில் என ஜிப்ரில் (அலை) கூறினார்கள். உன்னுடன் இருப்பவர் யார்? என கேட்கப்பட்டது, முஹம்மத் (ஸல்) என்று பதில் கூறினார்கள். இவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. இவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று ஜிப்ரில் கூறினார்கள். எங்களுக்கு வாசல் திறந்தது.
அங்கு நான் ஹாரூன் (அலை) இருக்கக் கண்டேன். என்னை அவர் வரவேற்று, எனக்கு நல்லவை கிடைக்க துஆச் செய்தார்.
பின்பு ஆறாவது வானத்தின் பால் எங்களை உயர்த்தியது. ஜிப்ரில் (அலை) அவர்கள் வாசலைத்திறக்கக் கேட்டுக் கொண்டார். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரில் என ஜிப்ரில் (அலை) பதில் கூறினார்கள். உன்னுடன் இருப்பது யார்? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) என்று பதில் கூறினார்கள். அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது. அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்கள். எங்களுக்கு வாசல் திறந்தது.
அங்கு நான் மூஸாவுடன் இருந்தேன். என்னை அவர் வரவேற்று, எனக்கு நல்லவை கிடைக்க துஆச் செய்தார்.
பின்பு ஏழாவது வானத்தின் பக்கம் எங்களை உயர்த்தியது. ஜிப்ரில் வாசலைத் திறக்கக்கேட்டுக் கொண்டார். உன்னுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டதற்கு, அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்று பதில் கூறினார்கள். எங்களுக்கு வாசல் திறந்தது.
அப்போது நான் பைதுல் மஃமூரில் தன் முதுகை சாய்த்து அமர்ந்திருந்த இப்ராஹிம் (அலை) அவர்களுடன் இருந்தேன். அங்கு ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் மலக்குகள் உள்ளே நுழைகிறார்கள். (அவர்களில்) மீண்டும் (எவரும்) அங்கு வருவதில்லை.
பின்பு சித்ரதுல் முன்தஹாவுக்கு கொண்டு சென்றது. அதன் இலை யானையின் காதுபோல் இருந்தது. அதன் கனி பெருகியானையைப் போல் இருந்தது. அல்லாஹ்வின் அனுமதியினுடன் அதை போது அது மாறியது. அதன் அழகைப்பற்றி வர்ணிக்க இறைவனின் படைப்பில் எவருக்கும் இயலாது.
என்னுடன் அல்லாஹ் கூறவேண்டியதை எல்லாம் கூறினான். என் மீது ஒவ்வொரு இரவு பகல் நாளும் 50 தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் வந்தேன்.
உன் சமுதாயத்தின் மீது உன் இறைவன் என்ன கடமை ஆக்கினான் என்று மூஸா நபி கேட்க. ஐம்பது தொழுகைகள் என்றேன். உன் இறைவனிடம் திரும்பச் செல்! அவனிடம் இன்னும் குறைவு படுத்தும்படிக்கேள். உன் சமுதாயத்தினர் இதற்கு சக்தி பெற மாட்டார்கள் நான் பனீஇஸ்ரவேலர்களை சோதித்தேன். அவர்களிடம் தோல்வியுற்றேன் என்று மூஸா (அலை) கூறினார்கள். நான் என் இறைவனிடம் சென்றேன். ''இறைவா! என் சமுதாயத்திற்கு'' இன்னும் (தொழுகையை) குறைவுபடுத்து என்று கூறினேன். என்னிடமிருந்து அல்லாஹ் ஐந்தை குறைத்தார். நான் மூஸா நபியிடம் வந்தேன். ''என்னிடமிருந்து ஐந்தை அல்லாஹ் குறைத்து விட்டான்'' என்றேன்.
உடனே மூஸா நபி ''உன் சமுதாயத்தினர் இதற்கு சக்தி பெறமாட்டார்கள்'' உன் இறைவனிடம் மீண்டும் செல். குறைக்கும்படி அவனிடம் கேள் என்று கூறினார்கள். நான் மூஸாநபிக்கும், அல்லாஹ்வுக்கும் மிடையே தொடர்ந்து போய் வந்து கொண்டிருந்தேன். இறுதியில் அல்லாஹ், முஹம்மதே! ஒவ்வொரு ஐந்து நேரத் தொழுகைகளாகும். இத்தொழுகைகள் பத்துக் தொழுகைகளுக்கு நிகராகும் ஒருவன் ஒரு நன்மை செய்ய எண்ணியதை அவன் செய்யவில்லையானால் அவனுக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒருவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணி அதை செய்ய வில்லையானால் அவனுக்கு எதையும் எழுதப்படமாட்டாது. அதை அவன் செய்து விட்டால் ஒரு தீமையே எழுதப்படும் என்று அல்லாஹ் கூறினான்.
பின்பு நான் மூஸாவிடம் இறங்கி வந்தேன். அவரிடம் விஷயத்தைக் கூறினேன். உன் இறைவனிடம் சென்று, வந்து விட்டேன்'' என்று கூறினேன்.
இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள் (முஸ்லிமில் 'நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணம்' என்ற பாடத்தின் கீழ் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 117
தூக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடைப்பட்ட சூழ்நிலையில் நான் வீட்டில் இருந்த போது மூன்று நபர்கள் (வந்தனர். அவர்களில்) நடுவில் உள்ள ஒருவர் என்னை முன்னோக்கி வந்தார்.
அறிவு, ஈமான் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட தங்கத்திலான தட்டின் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டேன். குரல்வளையில் இருந்து வயிற்றின் நடுப்பகுதி வரை பிளந்தார். பிறகு இதயத்தை ஸம்-ஸம் தண்ணீரால் கழுவினார். பின்பு (அதில்) அறிவு, ஈமானால் நிரப்பப்பட்டது. பின்பு ஒட்டகத்தை விட சிறிய, கழுதையைவிட பெரிய ஒரு வாகனத்தின் பால் அழைத்துச் செல்லப்பட்டேன்.
பின்பு ஜிப்ரில் (அலை) அவர்களுடன் நடந்தேன். நாங்கள் முதல் வானத்திற்கு வந்தோம் யார் அது? என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரில்' என ஜிப்ரில் (அலை) பதில் கூறினார்கள் உன்னுடன் இருப்பவர் யார்? என கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதில் கூறினார்கள். ''அவர் இங்கு அழைக்கப்பட்டு இருக்கிறாரா? அவருக்கு வாழ்த்துக்கள் அவரின் வருகை நல்லதே!'' என்று கூறப்பட்டது.
நான், ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, அவர்களுக்கு ஸலாம் கூறினேன் நபியும் என் மகனுமான உனக்கு வாழ்த்துக்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
பின்பு இரண்டாம் வானத்திற்கு வந்தோம் யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரில் என ஜிப்ரில் (அலை) பதில் கூறினார்கள். உன்னுடன் இருப்பவர் யார்? என கேட்கப்பட்டது. நபி (ஸல்) என்று பதில் கூறினார்கள். அது போன்றே நடந்தது, யஹ்யா, ஈஸா இருவரிடமும் வந்தேன். அவர்களிடமும் சலாம் கூறினேன். நபியும், சகோதரருமான உனக்கு வாழ்த்துக்கள். என் வாழ்த்தினர்.
பின்பு மூன்றாம் வானத்திற்கு வந்தோம் யார் அது? என்று கேட்கப்பட்டது ஜிப்ரில் (அலை) பதில் கூறினார்கள் உன்னுடன் இருப்பவர் யார்? என கேட்கப்பட்டது. நபி (ஸல்) பதில் கூறினார்கள். அது போன்றே நடந்தது. யூசுப் (அலை) அவர்களிடம் வந்து, ஸலாம் கூறினேன் நபியும், சகோதருமான உமக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்.
பின்பு நான்காம் வானத்திற்கு வந்தோம். முன்பு போன்றே இங்கும் நடந்தது (அங்கிருந்த) இத்ரிஸ் (அலை) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினேன் நபியும், சகோதரருமான உமக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்.
பின்பு ஐந்தாம் வானத்திற்கு வந்தோம் முன்பு போன்றே இங்கும் நடந்தது. (அங்கிருந்த) ஹாரூன் (அலை) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினேன். நபியும், சகோதரருமான உமக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்.
பின்பு ஆறாம் வானத்திற்கு வந்தோம். முன்பு போன்றே இங்கும் நடந்தது. பின்பு மூஸா (அலை) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினேன். நபியும், சகோதருமான உமக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்.
அவரை நான் கடந்து செல்லும் போது அவர் அழுதார் உம்மை அழத்தூண்டியது என்ன? என்று கேட்கப்பட்டது இறைவா? எனக்குப்பின் அனுப்பிய இவரின் சமுதாயத்தில் இருந்து என் சமுதாயத்தை விட மிக அதிகமான நபர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள் மிக சிறப்பிற்குரியவர்களாகவும் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
பின்பு நான் ஏழாம் வானத்திற்கு வந்தோம். முன்பு போலவே இங்கும் நடந்தது. (அங்கிருந்த) இப்ராஹிம் (அலை) அவர்களிடம் வந்து, ஸலாம் கூறினேன். நபியும், மகனுமான உனக்கு வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.
பின்பு என்னை பைத்துல் மஃமூர் அளவில் உயர்த்தப்பட்டது அங்கு ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குள் தொழுவார்கள் அதிலிருந்து வெளியே போனவர்கள் மறுபடி அங்கு வரமாட்டார்கள்.
பின்பு என்னை சித்ரதுல் முன்தஹா அளவில் உயர்த்தப்பட்டது. அதன் கனிகள் யானையைப் போன்று இருந்தது. அதன் இலை யானையின் காது போல் இருந்தது. அதன் அடியில் நான்கு ஆறுகள் உண்டு. இரண்டு ஆறு உட்புறமாக ஓடுகின்றன. இரண்டு ஆறுகள் வெளிப்புறமாக ஓடுகின்றன உள்புறமாக ஓடுபவை சொர்க்கத்தில் உள்ளன. வெளிப்புறமாக ஓடுபவை புராத், நைல் நதிகளாகும்.
பின்பு ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டது. நான் மூஸாவிடம் வந்தேன். என்ன செய்தீர் என்று கேட்டார். என் மீது ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டது. என்று கூறினேன். ''நான் உன்னைவிட மக்களை நன்கு அறிந்தவன். பனீ இஸ்ரவேலர்களிடம் நான் கடும் போராட்டத்தில் இருந்தவன் நிச்சயமாக உன் சமுதாயம் இதற்கு சக்தி பெறமாட்டார்கள். மீண்டும் உன் இறைவனிடம் செல்! இதை உனக்கு குறைக்கும்படி அவனிடம் கேள்! என்று மூஸா (அலை) கூறினார்கள். நான் என் இறைவனிடம் சென்று குறைக்கும்படி கேட்டேன் அவன் அதை நாற்பதாக ஆக்கினான். பின்பு மூஸா அவர்களிடம் வந்தேன். என்ன செய்தீர்? என்று கேட்டார்கள். அல்லாஹ் அதை 40 ஆக ஆக்கி விட்டான் என்று கூறினேன். ஆரம்பத்தில் கூறியது போலவே மீண்டும் மூஸா (அலை) கூறினார்கள். மீண்டும் எண் இறைவனிடம் வந்தேன். அவன் 30 ஆக குறைத்தான். பின்பு மூஸா (அலை) அவர்களிடம் வந்தேன். அவர்களிடம் இதுபற்றி கூறியதும், அவர்கள் முன்பு கூறியது போலவே என்னிடம் கூறினார்கள். நான் மீண்டும் என் இறைவனிடம் வந்தேன். அவன் அதை 20 ஆக ஆக்கினான். பின்பு 10 ஆக, பின்பு ஐந்தாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் வந்தேன். முன்பு சொன்னது போலவே என்னிடம் (கேட்க) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன் அப்போது ''என் கடமையை பூர்த்தித செய்துவிட்டேன்'' என் அடியார்களுக்கு இலகுவாக்கி விட்டேன். ஒரு நன்மைக்கு அது போல் 10 மடங்கு கூலி தருவேன்'' என்று (அல்லாஹ்விடமிருந்து) கூறப்பட்டது.
இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) மாலிக் இப்னு ஸஃஸஅ (ரலி) இருவரும் அறிவிக்கின்றார்கள்.
(இது நஸயீயில் தொழுகை அத்தியாத்தின் கீழ் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 118
என் சமுதாயத்தின் மீது அல்லாஹ் 50 நேர தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான். இதோடு நான் திரும்பி வந்தபோது மூஸா (அலை) அவர்களை கடந்து சென்றேன். அப்போது அவர்கள் ''உன் சமுதாயத்தின் மீது உன் இறைவன் என்ன கடமையாக்கினான்?'' என்று கேட்டார்கள். அவர்கள் மீது 50 (நேரத்) தொழுகைகளை கடமையாக்கினான் என்று கூறினேன். உன் சமுதாயத்தினர் இதற்கு சக்தி பெற மாட்டார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
நான் என் இறைவனிடம் திரும்பி வந்தேன். அவன் அதில் ஒரு பகுதியை குறைத்தான். நான் மூஸாவிடம் திரும்ப வந்தேன். இது பற்றி கூறினேன். உன் இறைவனிடம் மீண்டும் செல், உன் சமுதாயத்தினர் இதற்கும் சக்தி பெற மாட்டார்கள் என்று மூஸா நபி கூறினார்கள். நான் என் இறைவனிடம் வந்தேன். அப்போது அல்லாஹ் ''இவை ஐந்தாகும் இவை ஐம்பத்துக் சமமாகும். என்னிடம் சொல்மாற்றப்பட மாட்டாது என்று கூறினான். நான் மூஸாவிடம் வந்தேன் மீண்டும் உன் இறைவனிடம் செல் என்றார்கள். நான் என் இறைவனிடம் செல்ல வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.
இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) இப்னு ஹஸம் (ரலி) இருவரும் அறிவிக்கிறார்கள்.
(இது நஸயீயில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண் : 119
கழுதையைவிட பெரிதான ஒட்டகத்தை விட சிறியதான ஒரு வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது. அதன் இறக்கை முடியும் இடத்தில் அதன் கால் குளம்பு இருந்தது.
நான் அதில் ஏறி பயணம் செய்தேன். என்னுடம் ஜிப்ரில் (அலை) இருந்தார்கள் நீ இறங்கி தொழு! என்று கூறினார்கள். நான் அவ்வாறு செய்தேன். எங்கே தொழுதாய் என்பதை அறிவீரா? 'தய்யிபா' என்ற இடத்தில் தொழு இதன் பக்கமே ஹிஜ்ரத் செய்யப்பட உள்ளது என்று ஜிப்ரில் கூறினார்கள்.
பின்பு அவர்கள் (சிறிது சென்றப்பிறகு) இறங்கி தொழு! என்று கூறினார்கள். நான் தொழுதேன் எங்கே தொழுதாய் என்பதை அறிவீரா? மூஸா நபியிடம் அல்லாஹ் பேசிய 'தூர்சீனா' மலையில் தான் தொழுதீர்'' என்று கூறினார்கள் ஜிப்ரில் (அலை).
பின்பு (சிறிது தூரம் போனப்பின்) இறங்கிக் தொழு என்று கூறினார்கள். நான் இறங்கி, தொழுதேன். எங்கே தொழுதீர் என்பதை அறிவீரா? ஈஸா (அலை) பிறந்த 'பைத்துலஹ்கி' என்ற இடத்தில் தொழுதீர் என்று ஜிப்ரில் கூறினார்கள்.
பின்பு பைத்துல் முகத்தஸில் நுழைந்தேன். எனக்காக நபிமார்கள் குழுமி இருந்தனர். ஜிப்ரில் என்னை முன்னே நிறுத்தினார்கள் நான் அவர்களுக்கு இமாமம் செய்தேன். பின்பு (உலகின்) வானத்தின் பால் என்னை உயர்த்தப்பட்டது. அப்போது அங்கு என் சிறிய தாயாரின் மக்களான ஈஸா, யஹ்யா ஆகியோர் இருந்தனர் பின்பு மூன்றாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது. அங்கு யூசுப் நபி இருந்தார்கள் பின்பு நான்காம் வானத்திற்கு என்னை உயர்த்தப்பட்டது அங்கு ஹாரூன் (அலை) இருந்தார்கள். பின்பு ஐந்தாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது. அங்கு இத்ரிஸ் நபி இருந்தார்கள். பின்பு ஆறாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது. அங்கு மூஸா (அலை) இருந்தார்கள். பின்பு என்னை ஏழாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது. அங்கு இப்ராஹிம் நபி இருந்தார்கள்.
பின்பு என்னை ஏழு வானங்களுக்கு மேலும் உயர்த்தப்பட்டது. ஸித்ரதுல் முன்தஹா என்று இடத்திற்கு நாங்கள் வந்தோம். களைப்பு என்னை மிகைத்தது. நான் ஸஜ்தா செய்தேன் ''இன்று தான் நான் வானங்களையும், பூமியையும் படைத்தேன். தொழுகைகளை கடமையாக்கினேன். அதை நீயும் உன் சமுதாயத்தினரும் கடைபிடிப்பீராக! என்று கூறப்பட்டது. நான் இப்ராஹிம் நபியிடம் வந்தேன் எதுபற்றியும் அவர்கள் என்னிடம் கேட்கவில்லை. பின்பு மூஸா நபியிடம் வந்தேன். உன் இறைவன் உம்மீதும், உன் சமுதாயத்தினர் மீதும் என்ன கடமையாக்கினான் என்று கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகைகள் என்றேன்.
நிச்சயமாக நீயும், உன் சமுதாயத்தினரும் இதை கடைபிடிக்க இயலாது. எனவே, உன் இறைவனிடம் மீண்டும் செல். குறைக்கும்படி அவனிடம் கேள் என்றார்கள்.
நான் என் இறைவனிடம் வந்தேன். என்னிடம் பத்தை குறைத்தான். பின்பு மூஸாவிடம் வந்தேன். மீண்டும் செல்லும்படி அவர்கள் என்னிடம் வலியுறுத்தினார்கள். நான் மீண்டும் வந்தேன். மீண்டும் என்னிடம் பத்தை குறைத்தான் பின்பு அது ஐந்தாகும் வரை திருப்பி அனுப்பப் பட்டேன்.
பின்பு மூஸா நபியிடம் வந்தேன். உன் இறைவனிடம் மீண்டும் செல், குறைக்கும்படி கேள். பனீ இஸ்ரவேலர்கள் மீது அவன் இரண்டு நேரத் தொழுகைகளை கடமையாக்கினான். அந்த இரண்டையும் கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை என்று கூறினார்கள்.
நான் என் இறைவனிடம் மீண்டும் வந்தேன். குறைக்கும்படி அவனிடம் கேட்டேன். இன்று தான் வானங்களை, பூமியை நான் படைத்தேன். உன் மீதும், உன் சமுதாயத்தின் மீதும் ஐம்பது நேரத்தொழுகைகளை கடமையாக்கினேன். ஐம்பதை ஐந்தாக்கி விட்டேன். நீயும், உன் சமுதாயமும் இதை நிலை நிறுத்துவீர்களாக! என்று கூறினான். கிஇது அல்லாஹ்வின் இறுதி முடிவும் என்று விளங்கிக் கொண்டேன். நான் மூஸாவிடம் வந்தேன். மீண்டும் செல் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் இறுதி முடிவு என விளங்கிக் கொண்டேன். நான் மீண்டும் போக மாட்டேன். இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது நஸயீயில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 120
அல்லாஹ் என் சமுதாயத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகைகளை கடமையாக்கினான். அதோடு திரும்பி, மூஸா நபியிடம் வந்தேன். உன் சமுதாயத்திற்கு உன் இறைவன் எதை கடமையாக்கினான்? என்று மூஸா நபி கேட்டார். ஐம்பது தொழுகையை என் மீது கடமையாக்கினான் என்று கூறினேன். நீ உன் இறைவனிடம் செல்! உன் சமுதாயம் இதற்கு சக்தி பெறாது என்று கூறினார். நான் மீண்டும் என் இறைவனிடம் சென்றேன். என் மீது அதில் ஒரு பகுதியை குறைத்தான் நான் மூஸா நபியிடம் மீண்டும் வந்து கூறினேன். அப்போது அவர்கள் உன் சமுதாயம் இதற்கு சக்தி பெறாது. எனவே மீண்டும் உன் இறைவனிடம் செல் என்று கூறினார்கள்.
நான் என் இறைவனிடம் மீண்டும் சென்றேன். இது ஐந்தாகும். இது ஐம்பத்துக்குச் சமமாகும். என்னிடம் சொல் மாற்றப்படமாட்டாது என்று அல்லாஹ் கூறினான். மீண்டும் மூஸா நபியிடம் வந்தேன். உன் இறைவனிடம் மீண்டும் செல் என்று அவர்கள் கூறினார்கள். இனி இறைவனிடம் செல்ல (முறையிட) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.
இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது இப்னுமாஜாவில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 121
உன் சமுதாயத்தின் மீது ஐந்து நேரத் தொழுகைகளை கடமையாக்கினேன். என்னிடமிருந்து ஒரு உறுதி மொழியையும் தருகிறேன்.
அதாவது, அந்த ஐந்து நேரத் தொழுகைகளையும் உரிய நேரத்தில் ஒருவர் பேணிக் கொண்டால், அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். அவைகளை பேணிடாவிட்டால் என்னிடம் அவருக்கு எந்த உறுதியும் கிடையாது என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள். இதை அபூகதாதா இப்னு ரிப்யீ (ரலி) அறிவிக்கிறார்கள். (இது இப்னுமாஜாவில் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 122
முந்தைய ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது. இது அபூதாவூதில் ஐந்து நேரத்தொழுகைகளைப் பேணுதல் என்ற பாடத்தின் கீழ் உள்ளது.
ஹதீஸ் எண்: 123
தொழும் ஒருவர் தன் தொழுகையில் உம்முல் குர்சூரைன (பாத்திஹா சூராவை) ஓதவில்லையானால் அது குறைவுடையதாகும், பூர்த்தி இல்லாததாகும் என மூன்று முறை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுகிறோம் (அப்போது ஓத வேண்டுமா?) என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. நீ உன் மனதிற்குள் ஓதும் என்று கூறிவிட்டு (பின்வரும்) செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதாக கூறினார்கள்.
நான் தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரண்டு பங்குகளாக்கினேன். என் அடியானுக்கும் அவன் கேட்டது உண்டு என்று அல்லாஹ் கூறினான்.
ஒரு அடியான் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என் அடியான் என்னைப் புகழ்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு அடியான் 'அர்ரஹ்மானிர்ரஹீம்' என்று கூறினால் என்னை என் அடியான் புகழுரைக்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அடியான் 'மாலிம் யவ்மித்தீன்' என்று கூறினால், என் அடியான் என்னை பெருமைப்படுத்துகிறான் என்று அல்லாஹ் கூறுகிறான். மற்றொரு முறையோ என் அடியான் என் பக்கம் திரும்புகிறான் என்று கூறுகிறான்
அடியான் ''இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்'' என்று கூறினால், இது எனக்கும் என் அடியானுக்கு இடையே உள்ள விஷயமாகும். என் அடியானுக்கும் கேட்டது கிடைக்கும்'' என்று அல்லாஹ் கூறுவான்.
அடியான் ''இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம் ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலழ்ழாளின் என்று கூறினால், இது என் அடியானுக்குரியதாகும். அவன் கேட்டது அவனுக்கு உண்டு என்று கூறுவான்.
இதை அப்துர்ரஹ்மான் என்பார் அறிவித்து முஸ்லிமில் 'ஒவ்வொரு ரக்அத்திலும் பாதிஹா' சூரா ஓதுதல் அவசியம்'' என்ற பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் எண்:124
மேற்கண்ட ஹதீஸின் கருத்தே இடம் பெற்றுள்ளது.
ஹிஷாம் இப்னு சுஹ்ராவின் அடிமை அபூஸாயிப் கூறியதாக அல்முஅத்தாவில் ''இமாம் சப்தமாக ஓதாத போது இமாமுக்கு பின்னே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் எண்: 125
மேற்கண்ட ஸதீஸே அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. (இது திர்மிதியல் 'பாத்திஹா சூரா' என்ற பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 126
124வது ஹதீஸே இடம் பெற்றுள்ளது. (இது அபூதாவூதில் ''தொழுகையில் கிராஅத்தை விட்டு விட்டான்....'' என்ற பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண்: 127
125வது ஹதீஸே மீண்டும் இடம்பெற்றுள்ளது. (இது இப்னுமாஜாவில் 'குர்ஆனின் பயன்' என்ற பாடத்தின் கீழ் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 128
124வது ஹதீஸே இடம் பெற்றுள்ளது. (இது நஸயீயில் ''பாத்திஹா சூராவில் பிஸ்மில்லாஹ்.....ஒதுவதை விட்டு விட்டால்....'' என்ற பாடத்தின் கீழ் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்: 129
அல்லாஹ் தவ்ராத்திலோ, இன்ஜீலியோ உம்முல் குர்ஆன் (பாத்திஹா சூரா)வைப் போன்று ஒன்றை இறக்கிடவில்லை அவை 7 வசனங்களாகும். அவை எனக்கும் என் அடியானுக்கும் மத்தியில் பங்குவைக்கப்பட்டு விட்டது. என் அடியானுக்கு அவன்கேட்டது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி), உபை இப்னு கஃபு (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். (இது நஸயீயில் ''அல்லாஹ்வின் வார்த்தைக்கு விளக்கம்'' என்ற பாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண்: 130
மலக்குகள் (தொழுவோரிடம்) தொடர்ந்து அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பார்கள். காலையில் வரும் மலக்குகளும், மாலையில் வரும் மலக்குகளும் சுப்ஹுத் தொழுகையிலும், அஸர் தொழுகையிலும் கூட்டாக கலந்து கொள்வார்கள். உங்களிடையே தங்கி இருந்த மலக்குகள் உயரே போவார்கள். அங்கு அவர்களிடம் மிகவும் அறிந்தவனான அல்லாஹ் ''என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்'' என்று கேட்பான். அவர்களோ அவர்களை தொழுபவர்களாக விட்டு வந்தோம். அவர்களை தொழுபவர்களாகவே சந்தித்தோம்'' என்று கூறுவார்கள்.
இதை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது புகாரியில் அஸர் தொழுகையின் சிறப்பு என்ற பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 131
மேற்கண்ட ஹதீஸின் கருத்தே மீண்டும் இடம் பெற்றுள்ளது.
(புகாரியில் 'ஜிப்ரிலுடன் அல்லாஹ் பேசுவது' என்ற பாடத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது)
ஹதீஸ் எண்: 132
மேற்கண்ட ஹதீஸே இடம் பெற்றுள்ளது (இது நஸயீயில் கூட்டுத் தொகையின் சிறப்பு என்றபாடத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண்: 133
அஸர் தொழுகையிலும், மஃரிபு தொழுகையிலும் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்ற வாசகத்துடன் மேற்கண்ட ஹதீஸ் அல்முஅத்தாவில் உள்ளதாக உள்ளது.
லுஹா தொழுகையின் சிறப்பு
ஹதீஸ் எண்: 134
ஆதமின் மகனே! முன்பகலில் நான்கு ரக்அத் எனக்காக தொழு! அது உனக்கு பகல் இறுதிவரை (பாவமன்னிப்புக்கு) போதுமாகும் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) கூறியதாக அபூதர்தாஉ (ரலி) அபீதர் (ரலி) அறிவிக்கின்றார்கள் (இது திர்மிதியில் 'லுஹாத் தொழுகை' என்ற பாடத்தின் கீழ் ''ஹலஸ் ஸஹுஹி எனும் சூரத்திலான ஹதிஸ் என்று திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.
ஹதீஸ் எண்: 135
ஆதமின் மகனே! உன் பகல் நேரப் பொழுதில் நான்கு ரக்அத் தொழுவதை விட்டும் என்னிடம் நீ சோம்பேறியாகி விடாதே! (தொழுதால்) அன்று முழுவதும் உனக்கு அது போதுமாகும் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) கூறினார்கள். இதை நயீம் இப்னு ஹம்மாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது அபூதாவூதில் லுஹர் தொழுகை என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்: 136
ஹீரைஸ் இப்னு கபிஸத என்பார் கூறுகின்றார்.
நான் மதீனாவை நோக்கிச் செல்லும் போது, ''இறைவா! எனக்கு நல்ல தோழரை ஏற்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தேன். (இறைகிருபையால்) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தேன். நான் அவர்களிடம் ''எனக்கு நல்ல தோழரை ஏற்படுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன் (நீங்கள் கிடைத்தீர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்ட ஒரு செய்தியை எனக்கு அறிவியுங்கள். இதனால் எனக்கு அல்லாஹ் பயனளிக்கக்கூடும்'' என்று கேட்டுக் கொண்டேன்.
தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக (பின்வருமாறு) கூறினார்கள். ஒரு அடியான் (மறுமையில்) விசாரிக்கப்படுவதில் முதலாவது, அவனது தொழுகையைப் பற்றித்தான். அது சரியாக இருந்ததால் அவன் வெற்றி பெற்றுவிட்டான். அவன் ஜெயம் பெற்றுவிட்டான். அது சரியாக இல்லையென்றால் அவன் மோசம் போய்விட்டான். கவலைக்குரியவனாக ஆகிவிட்டான்.
இவ்வாறு அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளாரில் ஒருவரான ஹம்மாம் (பின்வருமாறு) கூறுகிறார்.
(பின்வரும்) வாசகம் (எனக்கு இச்செய்தியை கூறிய) கதாதா அவர்கள் கூறியதா? அல்லது அபூஹுரைரா கூறியதா என்பதை நான் அறியமாட்டேன்.
(அந்த வாசகம் வருமாறு):
என் அடியானிடம் உபரியான வணக்கம் உள்ளதா? என்று பாருங்கள். என்று அல்லாஹ் கூறுவான். இருந்தால் கடமையான தொழுகையில் ஏற்பட்ட குறையை அதன் மூலம் முழுமைப்படுத்துவான். பின்பு அவனது இதர செயல்பாடுகள் அது போன்ற (நன்மை பெற) அளவுக்கு ஆகும் (இது நஸயீயில் 'தொழுகையை கணக்கிடல்' என்று பாடத்தின் கீழ் உள்ளது.
ஹதீஸ் எண்: 137
மறுமையில் ஒரு அடியான் விசாரிக்கப்படுவதில் முதலாவது, அவனது தொழுகையைத்தான். அது முழுமையாக இருக்கப் பெற்றால், முழுமையாக நன்மை எழுதப்படும். அதில் சிறிது குறைவு இருந்தால் ''அவனிடம் உபரி வணக்கம் உள்ளதா? பாருங்கள்'' என்று அல்லாஹ் கூறுவான். இருந்தால் அவனின் உபரி வணக்கத்திலிருந்து கடமையான வணக்கத்தில் ஏற்பட்ட குறையை முழுமைபடுத்துவான். பின்பு இதர செயல்கள் அதன் விசாரணைப்படி நடக்கும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது நஸயியில் உள்ளது)
ஹதீஸ் எண்: 138
ஒரு அடியான் (மறுமையில்) விசாரிக்கப்படுவதில் முதலாவது, அவனது தொழுகையைத்தான் அது (முறையாக) இருந்தால் அதை முழுமையாக ஆக்குவான். அப்படி இல்லை என்றால், ''என் அடியானிடம் உபரியான தொழுகை உண்டா? எனப்பாருங்கள்'' என்று அல்லாஹ் கூறுவான். அவனிடம் உபரியான தொழுகை பெற்றுக் கொள்ளப்பட்டால், ''அதை வைத்து கடமையான தொழுகையை முழுமைப்படுத்துங்கள்'' என்று அல்லாஹ் கூறுவான். நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது நஸயீயில் உள்ளது)
ஹதீஸ் எண்: 139
ஒரு அடியான் மறுமையில் முதலாவதாக விசாரிக்கப்படுவது, அவன் தொழுகையைத்தான். அவை முழுமையாக இருந்தால் அவனுக்கு உபரியான நன்மையும் எழுதப்படும் அவை முழுமையாக இல்லை என்றால் அல்லாஹ் தன் வானவர்களிடம் ''என் அடியானிடம் உபரியான தொழுகை உள்ளதா? என்று பாருங்கள்'' இருந்தால் அதை அவனது கடமையான தொழுகையில் அவன் குறைவு படுத்தியதை முழுமைப்படுத்துங்கள்'' என்று கூறுவான். பின்பு இதர செயல்கள் அதன் விசாரணைப்படி கணக்கில் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) கூறியதாக தமீமுத்தார் (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது இப்னுமாஜாவில் ''ஒரு அடியான் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகை தான்'' என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
பரிந்துரைத்தல் பற்றிய ஹதீஸ்கள்
ஹதீஸ் எண்: 328
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு விருந்தில் இருந்தோம். அவர்களுக்கு இறைச்சி உணவு தரப்பட்டது. அதை அவர்கள் விரும்பி எடுத்து, ஒரு பகுதியில் கடித்தார்கள். பின்பு மறுமையில் நான் மனிதர்களுக்கு தலைவனாவேன், ஏன் என்பதை அறிவீர்களா? அல்லாஹ் முந்தி - பிந்தி இறந்தோர் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ப்பான். பார்க்க நினைப்பவர் அவர்களை ஒரு சேரப்பார்ப்பார். குரல் கொடுப்பவர், ஒரு சேர அவர்களை கேட்கச் செய்வார். சூரியனும் தாழ்ந்து இருக்கும்.
அப்போது சிலர் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேரப்போகிறது? என்பதை அறியவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்கு பரிந்துரை செய்பவரை நீங்கள் காணவில்லையா? என மற்றவர்களிடம் கேட்பர். அவரா உங்களின் தந்தை ஆதம் (பரிந்துரைப்பார்) என்பார்.
அவர்கள் ஆதமிடம் வருவார்கள். ஆதம்அவர்களே! நீங்கள் தான் மனித குலத்தை, உங்களை அல்லாஹ் தன் கையால் படைத்தான். தன் உயிரை உங்களின் ஊதினான். மலக்குகளை (ஸஜ்தா செய்ய) கட்டளையிட்டான். உங்களுக்கு அவர்களும் ஸஜ்தா செய்தார்கள். உங்களை அவன் சொர்க்கத்தில் தங்கச் செய்தான். எனவே, எங்களுக்காக உமது இறைவனிடம் பரிந்துரை கூடாதா? நாங்கள் எப்படி உள்ளோம்? என்ன நேரும் என்பதை நீங்கள் அறியவில்லையா? என்று கேட்பார்கள். அப்போது அவர் என் இறைவன் இதற்கு முன் இவ்வாறு கோபம் கொண்டதில்லை. அதன் பின்பும் அவ்வாறு கோபம் கொண்டதில்லை. (அந்தளவுக்கு) கடும் கோபத்தில் உள்ளான். ஒரு மரத்தின் பக்கம் செல்ல என்னைத் தடுத்திருந்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என் நிலை என்னவோ, என்னைத் தவிர மற்றவரிடம் செல்லுங்கள். (அதோ) நூஹிடம் சொல்லுங்கள் என்பார்கள்.
பிறகு அவர்கள் நூஹிடம் வருவார்கள். நூஹே! நீங்கள்தான் பூமியில் உள்ளோருக்கு முதல் இறைத்தூதர். உங்களுக்கு அல்லாஹ் 'நன்றியுள்ள அடியான்' என பெயரிட்டுள்ளான். எங்களின் நிலை என்ன எனபதை நீங்கள் அறியவில்லையா? எங்களுக்கு என்ன நேரும்? என்பதை அறியவில்லையா? உங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரைக்கக் கூடாதா? என்பார்கள். அப்போது நூஹ் நபி இதற்கும் முன்பும் இவ்வாறு கோபம் கொண்டதில்லை. இதற்கு பின்பும் இவ்வாறு கொள்ளப்போவதில்லை. அந்த அளவுக்கு அல்லாஹ் கடும் கோபத்தில் உள்ளான். என் நிலை என்னவோ!என் நிலை என்னவோ! அதோ நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்பார்கள்.
அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் அர்ஷின் கீழ் ஸஜ்தா செய்து கொண்டிருப்பேன். முஹம்மதே! உன் தலையை உயர்த்துவீராக! பரிந்துரைப்பீராக! பரிந்துரை ஏற்கப்படும். கேள். அதைக் கொடுக்கப்படுவீர் என்று கூறப்படும். இவ்வாறு நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'படைப்புகளின் ஆரம்பம்' என்ற அத்தியாத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்: 329
மூமின்கள் மறுமைநாளில் ஒன்று சேர்வார்கள். அப்போது (நம் நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்ற) நம் இறைவனிடம் நாம் பரிந்துரைத்தலை தேடினால் என்ன? என்று பேசிக் கொள்வார்கள். பின்பு ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். நீங்கள் தான் மனித குலத்தின் தந்தை. அல்லாஹ் தன் கையால் உங்களை படைத்தான். உங்களுக்கு தன் வானவர்களை ஸஜ்தா செய்யச் செய்தான். ஒவ்வொரு பொருட்களின் பெயர்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். எனவே, இவ்விடத்தில் எங்களின் நிலையிலிருந்த எங்களுக்கு அமைதி கிடைக்கும் வகையில் உமது இறைவனிடம் எங்களுக்கு நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவார்கள்.
இங்கே உங்களுக்கு (உதவுபவனாக) நான் இல்லை என்று அவர் கூறிவிட்டு, தனது தவறை நினைவு கூர்ந்து வெட்கியவராக நீங்கள் நூஹிடம் செல்லுங்கள். அல்லாஹ், பூமியில் வசிப்போருக்கு அனுப்பிய தூதர்களில் முதன்மையானவர் அவர்தாம் என்று ஆதம் (அலை) கூறுவார்கள்.
பின்பு அவரிடம் (நூஹ் நபியிடம்) வருவார்கள். அவரும் உங்களுக்கு இங்கே (உதவும் நிலையில்) நான் இல்லை என்று அவர் கூறி, தனக்கு அறிவில்லாத ஒன்றை தன் இறைவனிடம் கேட்டது குறித்து நினைவு கூர்ந்து வெட்கமடைந்தவராக ரஹ்மானின் நேசரான (இப்ராஹிமிடம்) செல்லுங்கள் என்பார்கள் நூஹ் நபி.
உடனே (இப்ராஹிம் நபியான) அவரிடம் வருவார்கள். அவரும் இங்கே உங்களுக்கு (உதவும் நிலையில்) நான் இல்லை. மூஸாவிடம் செல்லுங்கள். அவரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். மேலும் அவருக்கு தவ்றாத் (வேதத்)தைக் கொடுத்துள்ளான் என்று இப்ராஹிம் நபி (அலை) கூறுவார்கள்.
(மூஸாவான) அவரிடம் வருவார்கள். அவரும் இங்கே உங்களுக்கு (உதவுபவனாக) நான் இல்லை எனக் கூறிவிட்டு, ஒரு உயிருக்காக அல்லாமல் (சாதாரணமாக) ஒரு உயிரை கொன்றதை நினைவு கூர்ந்த அவர், தன இறைவனிடம் (பரிந்துரை செய்ய) வெட்கியவராக, அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது தூதராகவும், அவனது வார்த்தையாகவும், அவனது உயிராகவும் உள்ள ஈஸாவிடம் செல்லுங்கள் என்பார்கள்.
அவ்வாறே அவரிடம் அவர்கள் வருவார்கள். அவரும் இங்கே உங்களுக்கு (பரிந்துரை செய்ய) நான் இல்லை. முன் பின் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்த அடியாரான முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்பார். உடனே என்னிடம் அவர்கள் வருவார்கள். நான் எனது இறைவனிடம் அனுமதிவேண்டி நடந்து செல்வேன், அனுமதி தரப்படும். என் இறைவனை நான் பார்த்ததும் ஸஜ்தா செய்தவனாக இருப்பேன். அல்லாஹ் நாடிய (நேர அளவுக்கு) என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பின்பு உமது தலையை உயர்த்துவீராக! நீகேள், அதைக் கொடுக்கப்படும். நீ கூறு, கேட்கப்படும். நீ பரிந்துரைச் செய். பரிந்துரை ஏற்கப்படும் என்று கூறப்படும்.
உடனே நான் என் தலையை உயர்த்துவேன். எனக்கு எதைக் கற்று தந்துள்ளானோ அதன்படியே அவனைப் புகழ்வேன், பின்பு பரிந்துரை செய்வேன். என்னிடம் குறிப்பிட்ட அளவுக்கு காட்டுவான். நான் அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். பின்பு அவனிடமே மீண்டும் செல்வேன். எனக்கு குறிப்பிட்ட அளவுக்கு வரையறை செய்வான் . அவர்களையும் சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். பின்பு (இது போல்) மூன்றாம் தடவையும் செல்வேன். பின்பு நான்காம் முறையும் மீண்டும் செல்வேன். குர்ஆன் எவனுக்கு குறிப்பிட்ட நிரந்தர நரகம் எனக் கூறி உள்ளதோ அவனைத் தவிர (மற்றவர்) நரகில் இருக்கமாட்டார் என்று கூறுவேன்.
(இது புகாரியில் 'தப்ஸீர்' அத்தியாத்தின் கீழ் பதிவாகி உள்ளது)
ஹதீஸ் எண்:330
மேற்கண்ட 329வது ஹதீஸே மீண்டும் வேறு அறிவிப்பாளர் வாரிசையுடன் இடம் பெற்றுள்ளது.
(இது புகாரியில் உள்ளது)
ஹதீஸ் எண்:331
இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் பார்ப்போமா? என சில மனிதர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அதைச் சுற்றி மேகம் இல்லாத போது சூரியனை(ப் பார்க்க) நீங்கள் இடைஞ்சல் ஏற்படுத்தப்படுவீர்களா? என்று கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே மறுமை நாளில் அவனை நிச்சயமாக நீங்கள் பார்ப்பீர்கள். அல்லாஹ், மனிதர்களை ஒன்று சேர்ப்பான். அப்போது அவன் எதை எவன் வணங்கினானோ அதை அவன் பின் தொடரட்டும் என்பான். உடனே, சூரியனை வணங்கியவர் (சூரியனை) பின்பற்றுவர். சந்திரனை வணங்கியவர், (சந்திரனை) பின்பற்றுவார். சிலைகளை வணங்கியவர், (சிலைகளை) பின்பற்றுவார். இந்த சமுதாயம் மட்டும் எஞ்சி நிற்கும். அதிலே நயவஞ்சகர்களும் இருப்பர். அப்போது அல்லாஹ் அவர்கள் அறிந்துள்ள தோற்றமல்லாத (தோற்றத்)தில் அவர்களிடம் வருவான். நான் தான் உங்களின் இறைவன் என்பான். உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். எங்களின் இறைவன் எங்களிடம் வரும் வரை, இதுதான் எங்களுக்குரிய இடமாகும். எங்களிடம் அவன் வந்தால், அவனை அறிந்து கொள்வோம் என்று அவர்கள் கூறுவார்கள்.
எனவே, அவர்கள் அறிந்து, வைத்துள்ள தோற்றத்திலேயே அல்லாஹ் அவர்களிடம் வருவான். நான்தான் உங்களின் இறைவன் என்பான். நீ தான் எங்களின் இறைவன் என அவர்கள் கூறி, அவனைப் பின்பற்றுவார்கள். நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்தார்கள்.
(அந்த பாலத்தைக்) கடப்போரில் முதல் நபராக நான் இருப்பேன். அன்றைய நாளில் இறைத்தூதர்களின் பிரார்த்தனை, இறைவா! காப்பாற்று காப்பாற்று!ம் என்பதுதான். அ(ந்த பாலத்)தில் கருவேல மரத்தின் முட்களைப் போல் கொக்கிகள் இருக்கும். நீங்கள் கருவேல மரத்தின் முட்களைப் பார்த்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். ஆம் (பார்த்துள்ளோம்) இறைத்தூதர் அவர்களே! என்று கூறுவார்கள்.
அவை கருவவேல முட்களைப் போல் இருக்கும். எனினும் அதன் கனத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார். அது, மக்களை அவர்களின் செயல்களுக்கு ஏற்ப கவ்வி இழுக்கும். அவர்களில், தன் (தீய) செயலால் அழிந்து போனவனும் இருப்பான். மேலும் அவர்களில், அதிர்ச்சியில் மயங்கி பின்பு தப்பிப்பவனும் இருப்பான். இறுதியாக அல்லாஹ் தன் அடியார்களுக்கிடையே தீர்ப்புக் கூறி முடித்ததும அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை என்று சாட்சியம் கூறியவர்களில் தான் விரும்பியோரை நரகிலிருந்து காப்பாற்ற விரும்புவான். அவர்களை அவர்கள் வெளியேற்றும் படி கட்டளையிடுவான்.
அவர்களும் அவர்களை ஸஜ்தா செய்த அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்வார்கள். ஆதமின் மகனி(மனிதனி)ன் ஸஜ்தா செய்த அடையாளங்களை அழித்திட நரகத்திற்கு அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் கரிக்கப்பட்டவர்களாக அவர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள். அப்போது அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்படும், இது உயிர்(தரும்) நீர் என அவரிடம் கூறப்படும். (அதை ஊற்றியதும்) அவர்கள், ஆற்றோடு படுகையில் விதை முளைப்பது போல் முளைப்பார்கள். (நிறம் மாறி விடுவார்கள்)
தன் முகத்தை நரகை நோக்கியவராக அவர்களில் ஒருவர் நிற்பார். மேலும் அவர் இறைவா! அதன் வாடை என்னை திணறடிக்கிறது. அதன் வெப்பம் என்னை கரித்துவிட்டது. எனவே என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பி விடுவாயாக என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார். உனக்கு இதை நான் தந்தால் அது அல்லாததையும் நீ என்னிடம் கேட்பாயே என்று அல்லாஹ் கூறுவான்.
இல்லை உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, இது அல்லாத ஒன்றை உன்னிடம் கேட்க மாட்டேன் என அவர் கூறுவார். உடனே அவரின் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவான். பின்பு, அதற்கு பிறகும் அவர், இறைவா! சொர்க்கத்தின் வாசல் பக்கம் என்னை நெருக்கமாக்கிவை என்று கூறுவார். இது அல்லாத ஒன்றை என்னிடம் நீ கேட்காமலிருக்க நீ நினைத்ததில்லையா? ஆதமின் மகனே! உனக்கு கேடு உண்டாகட்டும்! மாற்றியது எது? என்று அல்லாஹ் கேட்பான். அவரோ பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்.
இதை உனக்குத்தான் கொடுத்து விட்டால் இது அல்லாததை என்னிடம் நீ கேட்பாயேம் என்று கூறுவான். இல்லை, உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! இது அல்லாததை உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார். இது அல்லாததை அவர் கேட்காமல் இருக்க உடன்படிக்கையும், வாக்குறுதிகளையும் அல்லாஹ்விடம் அவர் வழங்குவார். உடனே அவரை சொர்க்கத்தின் வாசலுக்கு கொண்டு செல்வான்.
அதில் உள்ளவற்றை அவர் கண்டதும், அவர் மௌனமாக இருக்க அல்லாஹ் நாடிய அளவுக்கு மௌனமாக இருப்பார். பின்பு, 'இறைவா! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்வாயாக!ம் என்று கூறுவார். பின்பு (அல்லாஹ்), அது அல்லாததை என்னிடம் நீ கேட்காமல் இருக்க நீ எண்ணவில்லையா?ம் ஆதமின் மகனே! உனக்கு கேடுதான். உன்னை மாற்றியது எது? என்று கேட்பான்.
இறைவா! உன் படைப்பினங்களின் நிற்கதியுள்ளவனாக என்னை நீ ஆக்கி விடாதே! என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ் சிரிப்பான். அவன் சிரித்ததும் அவரை அதில் நுழைய அனுமதிப்பான், அதிலே அவர் நுழைந்ததும் அவரிடம், நீ விரும்பியதை ஆசைகொள் என்று கூறப்படும். அவரும் ஆசை கொள்வார். பின்பு அவரிடம் நீ விரும்பிய அளவுக்கு ஆசைகொள் என்று கூறப்படும். அவரும் ஆசைகள் முழுமை பெறும் அளவுக்கு ஆசைப்படுவார். அப்போது அல்லாஹ் அவரிடம், இதுவும் உனக்குண்டு, இது போலவும் இதனுடன் உண்டும் என்று கூறுவான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த மனிதர்தான், சொர்க்கத்தில் நுழையும் கடைசி நபர் என்றும் கூறினார்கள்.
(இது புகாரியில் 'அஸ்ஸிராத், நரகத்தின் பாலம்' என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்: 332
அல்லாஹ், மறுமையில் மூமின்களை ஒன்று சேர்ப்பான். இந்த நம் நிலையிலிருந்து நம்மை விடுவிக்க, நமக்கு நம் இறைவனிடம் பரிந்துரை செய்தால் (நல்லதே!) என்று பேசிக் கொள்வார்கள். உடனே அவர்கள் ஆதம் நபியிடம் வருவார்கள். ஆதம் அவர்களே! மக்களை நீங்கள் பார்க்கவில்லையா? தன் கையால் அல்லாஹ் உங்களைப் படைத்தான். தன் வானவர்களை உங்களுக்கு ஸஜ்தா செய்ய வைத்தான். ஒவ்வொரு பொருட்களின் பெயர்களையும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தான். இந்த எங்களின் நிலையிலிருந்து எங்களை விடுவித்திட எங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரை செய்வீராக!'' என்று கூறுவார்கள். இவ்விடத்தில் நான் (தகுதி வாய்ந்தவன்) இல்லை என்று கூறிவிட்டு தன் செய்திட்ட தன் தவறை அவர்களிடம் நினைவு கூர்ந்தவர்களாக, ''எனினும் நூஹிடம் செல்லுங்கள். அவர்தான் பூமியில் அல்லாஹ் அனுப்பிய முதல் இறைத்தூதர்'' என்று ஆதம் நபி கூறுவார்கள்.
உடனே அவர்கள் நூஹிடம் வருவார்கள். ''உங்களுக்கு நான்(உதவுபவனாக) இல்லை'' என்று நூஹ் கூறிவிட்டு, தான்செய்திட்ட தன் தவறை நினைவு கூர்ந்தவர் எனினும், ''அல்லாஹ்வின் நேசர் இப்ராஹிமிடம் செல்லுங்கள்'' என்பார்.
உடனே அவர்கள் இப்ராஹிம் நபியிடம் வருவார்கள். ''உங்களுக்கு (உதவுபவனாக) நான் இல்லை'' என்று அவர் கூறி விட்டு, தான் செய்த தன் தவறை அவர்களிடம் நினைவு கூர்வார். எனினும், ''மூஸா நபியிடம் செல்லுங்கள். அல்லாஹ் அவருக்கு தவ்றாத்தை வழங்கி உள்ளான். நேரில் அவரிடம் பேசி உள்ளான்'' என்று இப்ராஹிம் நபி கூறுவார்கள்.
உடனே அவர்கள் மூஸா நபியிடம் வருவார்கள். ''உங்களுக்கு உதவுபவனாக நான் இல்லை என்று அவர் கூறுவார். தான் செய்திட்ட தன் தவறை அவர்களிடம் நினைவு கூர்வார். எனினும், ஈஸா நபியிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் அடியாராக, அவனது தூதராக, அவனது வார்த்தையாக, அவனது உயிராக உள்ளான்'' என்று கூறுவார்கள்.
உடனே அவர்கள் ஈஸா நபியிடம் வருவார்கள். உங்களுக்கு நான்(உதவுபவனாக) இல்லை. எனினும் ''முஹம்மது(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். அவர் முன்பின் பாவங்களை அவருக்கு மன்னிக்கப்பட்டுள்ளது'' என்று கூறுவார்கள்.
பிறகு என்னிடம் வருவார்கள். நான் நடந்தேன். என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். இது விஷயமாக எனக்கு அனுமதிக்கப்பட்டது. என் இறைவனை நான் பார்த்ததும், ஸஜ்தா செய்தவனாகி விடுவேன். என்னை (அதே நிலையில்) அவன் நாடிய அளவுக்கு என்னை அவன் விட்டு விடுவான்.
உயர்த்துவீராக! கூறு கொடுக்கப்படும். கேள் அதைக்கொடுக்கப்படும். பரிந்துரை செய்வீராக, பரிந்துரை ஏற்கப்படும் என என்னிடம் அவன் கற்றுத்தந்த புகழ் வார்த்தைகளால் என் இறைவனை புகழ்வேன். பின்பு பரிந்துரை செய்வேன். எனக்கு அவன் (பரிந்துரை செய்ய) வரையறை செய்வான். நான் அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். பின்பு திரும்ப வருவேன். என் இறைவனைப் பார்த்ததும், ஸஜ்தா செய்தவனாக நான் விழுவேன். என் அவன் (அதே நிலையில்) விட்டு விட அவன் நாடும் அளவுக்கு என்னை விட்டு விடுவான். 'முஹம்மதே!(தலையை) உயர்த்துவீராக! கூறு, கேட்கப்படும். கேள், அதைக் கொடுக்கப்படும். பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும் என்று என்னிடம் கூறப்படும்.
என் இறைவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்வார்த்தைகளால் என் இறைவனை நான் புகழ்வேன். பின்பு பரிந்துரை செய்வேன். எனக்கு அவன் (பரிந்துரைக்கு) வரையறை செய்வான். சொர்க்கத்தில் அவர்களை நான் நுழையச் செய்வேன். பின்பு மீண்டும் வருவேன். 'இறைவா! குர்ஆனில் எவரை குறிப்பிட்டு, அவருக்கு நிரந்தர நரகம் என கடமையாக்கிவிட்டதோ அவனைத் தவிர நரகத்தில் மற்றவர் தங்கவில்லை' என்று கூறுவேன். இதை நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை' என்று கூறி, அவன் உள்ளத்தில் சிறுவிதை எடை அளவுக்கு நன்மை இருந்தால் அவன் நரகிலிருந்து வெளியேறுவான். பின்பு, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று ஒருவன் கூறி, அவன் உள்ளத்தில் எறும்பின் எடை அளவுக்கு நன்மை இருப்பின் அவன் நரகிலிருந்து வெளியேறுவான் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) இதை அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'அத்தவ்ஹீது' எனும் அத்தியாயத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்:333
நபி(ஸல்) அவர்கள் பவுர்ணமி இரவன்று எங்களிடம் வந்து ''நிச்சயமாக நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனை, இதை (நிலவை) நீங்கள் பார்ப்பது போல் பார்ப்பீர்கள் அவனை பார்க்கும் விஷயத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் சங்கடப்படுத்தப் படமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். இதை ஜாரிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது புகாரியில் 'அத்தவ்ஹீது' எனும் அத்தியாயத்தின் கீழ் உள்ளது)
இறைத்தூதர் அவர்களே! மறுமையில் எங்கள் இறைவனை நாங்கள் பார்போமா? என்று மக்கள் கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''பவுர்ணமி இரவில் சந்திரனைப் (பார்க்க) நீங்கள் இடைஞ்சல் செய்யப்படுவதுண்டா?' என்று கேட்டார்கள். ''இல்லை! இறைத்தூதர் அவர்களே!'' என்று மக்கள் கூறினார். மேகம் இல்லாதிருக்கும் போது சூரியனை(ப் பார்க்க) நீங்கள் இடையுறு செய்யப்படுவதுண்டா?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். இல்லை இறைத்தூதர் அவர்களே! என்று மக்கள் கூறினர்.
நிச்சயமாக நீங்கள் இதுபோலவே அவனைப் பார்ப்பீர்கள். மறுமைநாளில் மனிதர்களை அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். ''எதையேனும் வணங்கியவர், அதையே பின் தொடரட்டும்'' என்று கூறுவான். உடனே சூரியனை வணங்கியவர் சூரியனைப் பின் தொடரட்டும்'' என்று கூறுவான். உடனே சூரியனைப் பின்பற்றுவார். (ஷைத்தானிய) சிலைகளை வணங்கியவர். சிலைகளைப் பின்பற்றுவார். இந்த சமுதாயம் எஞ்சியிருக்கும். இதில் பரிந்துரை வேண்டுவோரோ, அல்லது நயவஞ்சர்களோ இருப்பர்.
அல்லாஹ் அவர்களிடம் வருவான். நான் தான் உங்கள் இறைவன் என்பான். 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை இதுவே எங்கள் இடம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை அறிந்து கொள்வோம்'' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் அவர்கள் அறிந்து கொள்ளும் தன் உருவத்திலேயே அவர்களிடம் வருவான். நான் தான் உங்களின் இறைவன்'' என்பான். நீதான் எங்கள் இறைவன் என்று அவர்கள் கூறிவிட்டு, அவனைப் பின்பற்றி நிற்பார்கள்.
நரகத்தின் இரு ஓரங்களிலும் பாலம் ஏற்படுத்தப்படும். அதை கடந்து செல்வோரில் முதன்மையாக நானும், என் சமுதாயமும் இருப்போம். அந்நாளில் இறைத்தூதர்கள் தவிர எவரும் பேசமாட்டார்கள். அந்நாளில் இறைத்தூதர்களின் பிரார்த்தனை. ''இறைவா! காப்பாற்று! காப்பாற்று! என்பதாகவே இருக்கும்.
நரகத்தில், கருவேல மரத்தின் முட்களைப் போன்று கொக்கிகள் இருக்கும். எனினும் இதன் கனஅளவை அல்லாஹ்வைத் தவிர வேறு நபர் அறியமாட்டார். அவை மனிதர்களை அவர்களின் செயல்களுக்கு ஏற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களின் தன் செயலால் அழிந்து விடுவோர் உண்டு. அவர்களில் சிலர்(நரகில்) விழுந்து விடுவார்கள். அல்லது கடந்து விடுவார்கள். அல்லது வேறு நிலைக்கு ஆளாவார்கள்.
பின்பு, அல்லாஹ் தன் அடியர்களுக்கிடையே தீர்ப்பை முடித்ததும் தோற்றமளிப்பான். நரகவாசிகளில் தான் நாடியோரை தன் அருளினால் வெளியேற்ற நாடுவான். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறியவர்களுக்கு தன் அருளைப் புரிந்திட அல்லாஹ் நாடியவர்களில், எதையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காதிருந்த நபரை நரகிலிருந்து வெளியேற்றிட வானவர்களுக்கு கட்டளையிடுவான். வானவர்கள், அவர்களை நரகில் ஸஜ்தாவின் அடையாளம் மூலம் அறிந்து கொள்வார்கள். ஆதமின் மகனை ஸஜ்தா செய்த அடையாளத்தைத் தவிர நெருப்பு கரித்துவிடும். அவர்கள் நரகிலிருந்து கரிக்கப்பட்டவர்களாக வெளியேறுவார்கள். அவர்கள்மீது உயிர்(தரும்) நீரை ஊற்றப்படும். ஆற்றோர படுகையில் விதை முளைப்பதுபோல், அதன் கீழே அவர்கள் முளைத்து (நிறம்மாறி) எழுவார்கள்.
பின்பு அடியார்களுக்கிடையே தீர்ப்பை அல்லாஹ் முடிப்பான். அவர்களில் ஒருவர் நரகை நோக்கி தன் முகத்தை வைத்தவராக ஒருவர் நிற்பார். அவர்களின் சொர்க்கத்தில் நுழையும் நரகவாசிகளில் கடைசிநபர். 'இறைவா நரகைவிட்டும் என் முகத்தைத் திருப்பு! அதன் வாடை என்னை திணறடிக்கிறது. அதன் ஜுவாலை என்னை கரிக்கிறது என்று கூறி, தான் பிராத்தனை செய்ய நாடிய அளவுக்கு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வார். பின்பு அல்லாஹ் உனக்கு (இதை) தந்துவிட்டால், இது அல்லாததை தன்னிடம் நீ கேட்கக் கூடும் தானே'' என்று கூறுவான். இல்லை! உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக. இது அல்லாததை உன்னிடம் கேட்கமாட்டேன்'' என்று கூறுவார். தான் இயன்ற அளவுக்கு உடன்படிக்கைகளை வாக்குறுதிகளை தன் இறைவனிடம் கூறுவார்.
உடனே அல்லாஹ் அவரின் முகத்தை நரகைவிட்டும் திருப்புவான். சொர்கத்தை முன்னோக்கி, அதை அவர் பார்த்துவிட்டால், அவர் அமைதியாக இருக்க அல்லாஹ் நாடிய அளவுக்கு அமைதியாக இருப்பார். பின்பு, ''இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னை கொண்டுபோ'' என்பார். அப்போது அல்லாஹ், ''நீ கொடுக்கப்பட்டது அல்லாத ஒன்றை எக்காலமும் என்னிடம் நீ கேட்காமல் இருக்க உன் உடன்படிக்கைகளை, வாக்குறுதிகளை நீ தரவில்லையா? ஆதமின் மகனே! உனக்குக் கேடே, உன்னை மாற்றியது எது? என்று கேட்பான்.
'இறைவா! எனக்கூறி அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வார். இறுதியில் இதை நீ கொடுக்கப்பட்டால் அல்லாததை நீ கேட்கச் செய்வாய் தானே'' என்று அல்லாஹ் கேட்பான். இல்லை உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, இது தவிர உன்னிடம் கேட்கமாட்டேன் என்று அவர் கூறி, உடன்படிக்கைகளை வாக்குறுதிகளை தான் நாடிய அளவுக்குத் தருவார். உடனே அல்லாஹ் அவரை சொர்க்கத்தின் வாசலுக்குக் கொண்டு செல்வான்.
அவர் சொர்க்கத்தின் வாசலில் நின்றதும் அவருக்காக சொர்க்கம் திறந்து கொள்ளும். அதிலுள்ள சுகங்களை, உல்லாசத்தை அவர் காண்பார். அமைதியாக இருக்க அல்லாஹ் நாடிய அளவுக்கு அமைதியாக இருப்பார். பின்பு இறைவா! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்வாயாக! என்பார். நீ கொடுக்கப்பட்டது அல்லாத ஒன்றை நீ கேட்காமல் இருக்க உன் உடன்படிக்கைகளை, வாக்குறுதிகளை நீ தரவில்லையா! ஆதமின் மகனே! உனக்கு கேடுதான். உன்னை மாற்றியது எதும் என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! உன் படைப்பினங்களில் நான் மிக தாழ்ந்தவனாக நான் ஆகாமல் இருக்க விரும்புகிறேன் என்று கூறி, துஆச் செய்து கொண்டே இருப்பார். இறுதியில் அவரின் காரணமாக அல்லாஹ் சிரித்து விடுவான்.
அவன் சிரித்து விட்டால் அவரை சொர்க்கத்தில் நுழையும் என்று கூறுவான். அதில் அவர் நுழைந்து விட்டால், 'இதில் நீ ஆசைக் கொள்' என்று அல்லாஹ் கூறுவான். அவர் தன் இறைவனிடம் கேட்பான். ஆசை கொள்வார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு நினைவூட்டி, 'இன்னதை, இன்னதை நீ ஆசைக் கொள்' என்று அவரிடம் கூறுவான். இறுதியாக அவரின் விருப்பங்கள் முடிவுக்கு வரும். 'இதுவும் இது போன்றதும் உனக்குண்டு' என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'தவ்ஹீது' எனும் அத்தியாத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்: 335
இறைத்தூதர் அவர்களே மறுமை நாளில் எங்களின் இறைவனை நாங்கள் பார்ப்போமா? என நாங்கள் கேட்டோம். சூரியனையும், சந்திரனையும் அவை தெளிவாக இருந்தால் பார்ப்பதில் நீங்கள் இடைஞ்சல் செய்யப்படுவீர்களா? என்று நபி (ஸல்) கேட்டார்கள். இல்லை எனக் கூறினோம். நிச்சயமாக நீங்கள் இன்னாளில் உங்கள் இறைவனைப் பார்ப்பதில், இந்த இரண்டையும் பார்ப்பதால் இடைஞ்சல் செய்யப்படுவது போலவே தவிர, நீங்கள் இடைஞ்சல் செய்யப்படமாட்டீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். பின்பு, ஒவ்வொரு சமுதாயமும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவை பக்கம் செல்லட்டும் என அழைப்பாளர் கூறுவார், சிலுவையை வணங்கியோர், தங்களின் சிலுவை பக்கம் செல்வார்கள். சிலைகளை வணங்கியோர், தங்களின் சிலைகள் பக்கம் செல்வார்கள். ஒவ்வொரு கடவுள்களை வணங்கியோர், தங்களின் கடவுள்கள் பக்கம் செல்வர், இறுதியாக அல்லாஹ்வை வணங்கிய நல்லவர் அல்லது தீயவர், மற்றும் வேதக்காரர்களில் எஞ்சியோர் நிற்பார்கள். கானலைப் போன்று எடுத்துக் காண்பிக்கப்பட நரகம் கொண்டு வரப்படும். யூதர்களிடம் எதை நீங்கள் வணங்குனீர்கள்? என்று கேட்கப்படும். அல்லாஹ்வின் மகன் உஸைரை வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவார்கள். 'நீங்கள் பொய் கூறுகிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மகனோ கிடையாது. எதை விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். நாங்கள் தண்ணீர் குடிக்க விரும்புகிறோம். குடியுங்கள் என்று கூறப்படும். அவர்கள் நரகில் குடிக்க முயல்வார்கள்.
பின்பு கிருத்துவர்களிடம் எதை நீங்கள் வணங்குனீர்கள்? என்று கேட்கப்படும். அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈஸாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவார்கள். நீங்கள் பொய் கூறினீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மகனோ கிடையாது, எதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். எங்களுக்கு நீ நீர் புகட்டிடிவே விரும்புகிறோம் என்று கூறுவார்கள். குடியுங்கள் என்று கூறப்படும். நரகில் அவர்கள் குடிக்க முயல்வார்கள்.
இறுதியாக அல்லாஹ்வை வணங்கிய நல்லவர் அல்லலது தீயவர் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்களிடம், மக்கள் சென்றுவிட்ட நிலையில் உங்களை தடுத்த நிறுத்தியது எது? என்று கேட்கப்படும். அவர்களை நாங்கள் புரிந்து விட்டோம். நாங்கள் அந்நாளில் அவர்கள் பக்கமே தேவையுடையவர்களாக இருந்தோம். 'ஒவ்வொரு சமுதாயமும் அவரவர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை சேர்ந்திருக்க அழைப்பாளர் ஒருவரின் அழைப்பைக் கேட்டோம். நாங்கள் எதிர்பார்ப்பது எங்கள் இறைவனைத்தான்கி என்று கூறுவார்கள்.
அவர்களிடம் வல்லமையாள(இறைவ)ன், அவனை அவர்கள் பார்த்திட்ட தோற்றமல்லாத தோற்றத்திலே முதலில் வருவான். 'நான்தான் உங்களின் இறைவன்' என்பான். நீயே எங்களின் இறைவன் என அவர்கள் கூறுவார்கள். நபிமார்களைத் தவிர அவனிடம் (யாரும்) பேச அறிந்து கொள்ள அடையாளம் உண்டா? என்று (ஒருவர்) கேட்பார். 'பாதம்' என்று பதில் கூறுவார்கள். உடனே அவன் தன் பாதத்தை திறப்பான். அவனுக்கு எல்லா மூமின்களும் ஸஜ்தா செய்வார்கள். பிறர் பார்க்கவும், பிறர் புகழவும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்தவர்கள் எஞ்சிநிற்பர். அவரும் ஸஜ்தா செய்ய முயற்சிப்பார். (ஆனால்) அவரது ஒரே பலகை போல் ஆக (ஸஜ்தா செய்ய இயலாது போய்) விடும்.
பிறகு பாலம் ஏற்படுத்தப்பட்டு, அதை நரகின் இரு ஓர மேற்புறம் வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, இறைத்தூதர்களே! பாலம் என்றால் என்ன? என்று கேட்டோம். 'அது வழுக்கின்ற, சறுக்கின்ற இடமாகும் என்று நபி (ஸல்) கூறிவிட்டு தொடர்ந்தார்கள்.
அதில் கொக்கிகளும் நீண்ட முட்களும் இருக்கும். அதற்கு கனத்த முட்களும் இருக்கு. 'நஜ்து' பகுதியில் அது முளைக்கும். அதற்கு 'கருவேல முள்' என்றும் கூறப்படும். ஒரு மூமின் அதை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், குதிரை, ஒட்டகத்தின் பந்தயம் போன்றும் (கடந்து விடுவான்) காயம் இன்றி தப்பிப்போர் உண்டு. காயம்பட்டு தப்பிப்போர் உண்டு. நரகில் தடுமாறி விழுவோரும் உண்டு. இறுதியாக அவர்களில் கடைசி நபர் கடுமையாக இருந்து வரப்படுவோர்.
அந்நாளில் வல்லமையான (இறை)வனிடம் தங்களுக்கு ஏற்பட்ட பயன் பற்றி கண்டதும் தங்களின் சகோதரர்கள் விஷயத்தில் முறையீடு செய்யும் மூமின்களை விட நீங்கள் உங்களுக்கு தெளிவாகிட்ட ஒரு உரிமை விஷயமாக என்னிடம் கடுமையாக வாதிட்டிருக்க மாட்டீர்கள். (அந்நாளில்) அவர்கள் எங்கள் இறைவா! அவர்கள் எங்களின் சகோதரர்கள். எங்களுடன் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். எங்களுடன் நோன்பு வைப்பார்கள். எங்களுடன் (நற்) செயல் செய்தார்கள் என்று கூறுவார்கள்,
நீங்கள் செல்லுங்கள், ஒரு தீனார் அளவுக்கு ஒருவரின் உள்ளத்தில் ஈமான் இருந்து நீங்கள் கண்டால், அவரை (நரகிலிருந்து) வெளியேற்றுங்கள். நரகத்திற்கு அவர்களின் தோற்றங்களை தடை செய்திருப்பான். அவர்கள் அவர்களிடம் வருவார்கள். அவர்களில் சிலர், தன் பாதத்தை நரகில் மறைத்திருப்பார்கள். சிலர் தங்களின் இரு கரண்டை கால் வரை (மறைத்திருப்பார்கள்) தாங்கள் அறிந்து கொண்டவர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள்.
பின்பு அவர்கள் மீண்டும் (இறைவனிடம்) முறையிடுவார்கள். நீங்கள் செல்லுங்கள், ஒருவரின் உள்ளத்தில் அரை தீனார் எடை அளவுக்கு ஈமானை நீங்கள் பெற்றுக் கொண்டால் அவரையும் வெளியேற்றுங்கள் என அல்லாஹ் கூறுவான். தாங்கள் அறிந்து கொண்டவர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்பு மீண்டும் (இறைவனிடம்) முறையிடுவார்கள். நீங்கள் செல்லுங்கள், ஒருவரின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பதை நீங்கள் கண்டால், அவரையும் வெளியேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களும் தாங்கள் அறிந்தோரை வெளியேற்றுவார்கள்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறும் அபூஸயீத் (ரலி) அவர்கள், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால், நீங்கள் நம்பாவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான் என்ற (4:40) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.
(நபி(ஸல்) மேலும் தொடர்ந்து கூறுகிறார்கள்:-)
நபிமார்களும், வானவர்களும், மூமின்களும் பரிந்துரை செய்வார்கள். என் பரிந்துரை மட்டும் எஞ்சி உள்ளது' என வல்லமையாளனான அல்லாஹ் கூறுவான். நரகிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, கரிக்கப்பட்டவர்களாக சில மக்களை வெளியாக்குவான். அவர்கள் சொர்க்கத்தின் வாசல்களில் உள்ள ஆற்றில் போடப்படுவார்கள், 'உயர்தரும் தண்ணீர்' என அந்த ஆற்றுக்கு கூறப்படும். அதன் இரு ஓரங்களிலும் அவர்கள், சூரியன் படும் இடம் பச்சையாகவும், நிழல் படும் இடம் வெண்மையாகவும் உள்ள் பாறையின் ஓரத்திலும், மரத்திலும் நீங்கள் பார்த்திட்ட ஆற்றோடு படுகையில் உள்ள விதைகள் முளைப்பது போல் முளைப்பார்கள். (அதாவது நிறம் மாறி வருவார்கள்).
அவர்கள் முத்துக்கள் போல் வெளியாகி விடுவார்கள். அவர்களின் கழுத்துகளிலே (நரகில் சுமந்து வெளியேதற்கான) முத்திரை போடப்படும். உடனே அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சொர்க்கவாசிகள், அல்லாஹ்வினால் விடுதலையானவர்கள் இவர்கள், எந்த நற்செயலையும் செய்யாமல், எந்த நன்மையும் செய்யாமல் சொர்க்கத்தில் அவர்களை அவன் நுழையச் செய்திட்டான் என்று கூறுவார்கள். பிறகு அவர்களிடம், நீங்கள் இங்கு எதைக் காண்கிறீர்களோ அதுவும், அதனுடன் அது போன்றதும் உங்களுக்கே என்று கூறப்படும்.
(இது புகாரியில் 'தவ்ஹீத்' எனும் அத்தியாத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்: 336
மறுமை நாளில் மூமின்கள் ஒன்று சேர்க்கப் படுவார்கள். முடிவாக இதன் காரணமாக கவலைப் படுவார்கள் எங்களின் இறைவனிடம் எங்ளுக்கு பரிந்துரை செய்து, எங்களின் நிலையிருந்து எங்களைக் காப்பாற்றினால் (நலமாக இருக்குமே!) என்று கூறிக் கொள்வார்கள். உடனே ஆதம் நபியிடம் வருவார்கள். ''நீங்கள் தானே ஆதம் மனிதர்களின் தந்தை, கையினால் உங்களை அல்லாஹ் படைத்தான். தன் சொர்க்கத்தில் உங்களை குடி புகச் செய்தான். தன் வானவர்களை உனக்கு ஸஜ்தா செய்ய வைத்தான். அனைத்துப் பொருட்களின் பெயர்களைளும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். இந்த எங்களிடம் நிலையிலிருந்து எங்களைக் காப்பாற்ற உங்கள் இறைவனிடம் உங்களுக்கு நீ பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கு (உதவுபவனாக) நான் இல்லை; என்று அவர் கூறி விட்டு தான் செய்திட்ட தனது தவறை, தனக்கு தடுக்கப் பட்டிருந்த மரத்தின் கனியை சாப்பிட்டதை நினைவு கூர்வார். எனினும் '' நூஹ் நபியிடம் செல்லுங்கள் பூமியில் உள்ளோருக்கு அனுப்பிய முதல் நபி அவர் என்று கூறுவார்.
உடனே நூஹ் நபியடம் வருவார்கள்''உங்களுக்கு நான் (உதவுபவனாக) இல்லை என்று கூறி விட்டு, தான் செய்திட்ட தவறை -அறிவின்றி தன் இறைவனிடம் தான் கேட்டதை நினைவு கூர்வார். எனினும் அல்லாஹ்வின் நேசர் இப்ராஹிம் நபியிடம் செல்லுங்கள்'' என்பார்.
உடனே இப்ராஹிம் நபியிடம் வருவார்கள். ''நிச்சயமாக நான் உங்களுக்கு (உதவுபவனாக) இல்லை'' என்று அவர் கூறிவிட்டு, தான் கூறிய மூன்று பொய்யான வார்த்தைகளை நினைவு கூர்வார். எனினும், ''மூஸாவிடம் செல்லுங்கள். அவருக்கு தவ்றாத் (எனும் வேதத்)தை அல்லாஹ் வழங்கி உள்ளான். அவரிடம் பேசி உள்ளான். தனக்கு அவரை நெருக்கமாக வைத்திருந்தான்'' என்று கூறுவார்.
உடனே மூஸா நபியிடம் வருவார்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (உதவுபவனாக) நான் இல்லை. தான் செய்திட்ட தன் தவறை- ஒரு உயிரை அவர் கொலை செய்ததை நினைவு கூர்வார். எனினும், ''ஈஸா நபியிடம் செல்லுங்கள். அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும், அவனது ஆவியாகவும், அவனது தூதராகவும் உள்ளார்'' என்று கூறுவார்.
உடனே ஈஸா நபியிடம் வருவார்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (உதவுபவனாக) நான் இல்லை. எனினும் முஹம்மதிடம் செல்லுங்கள். அவரின் முன்-பின் செய்திட்ட பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்ட அடியாராக உள்ளார்'' என்று கூறுவார்.
உடனே அவர்கள் என்னிடம் வருவார்கள். என் இறைவனிடம் அவனது வீட்டில் நுழைய அனுமதி தேடினேன். இதன்படி எனக்கு அனுமதி தரப்பட்டது. அவனை நான் பார்த்ததும் ஸஜ்தா செய்தவனாக நான் விடுவேன். என்னை அவன் (அதே நிலையில்) விட்டு விட அவன் நாடிய அளவுக்கு என்னை விட்டுவிடுவான். ''முஹம்மதே! தலையை உயர்த்து, கூறு, கேட்கப்படும். பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும். கேள். கொடுக்கல் படுவாய்'' என்று அல்லாஹ் கூறுவான். என் தலையை உயர்த்துவேன். எனக்கு அவன் கற்றுத்துந்துள்ள புகழ் வார்த்தைகளால் என் இறைவனை புகழ்வேன். பின்பு பரிந்துரை செய்வேன். எனக்கு அவன் வரையறை செய்வான். நான் வெளியேறுவேன். அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். (நான் வெளியேறி, நரகிலிருந்து அவர்களை வெளியேற்றி, அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன்'' என நபி(ஸல்) கூறியதைக் கேட்டதாக அனஸ் கூறினார்கள் என கதாதா(ரஹ்) கூறுகிறார்கள்.
பின்பு மீண்டும் வருவேன். என் இறைவனிடம் அவனது வீட்டில் நான் அனுமதி கேட்பேன். அவனிடம் எனக்கு அனுமதி தரப்படும். அவனை நான் பார்த்துவிட்டால் நான் ஸஜ்தா செய்தவனாக விழுவேன். என்னை (அதே நிலையில்) விட்டு விட அவன் நாடிய அளவுக்கு என்னை அவன் விட்டு விடுவான். பின்பு ''முஹம்மதே! தலையை உயர்த்து கூறு, கேட்கப்படும். பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும். கேள், கொடுக்கப்படுவீர்'' என்று அல்லாஹ் கூறுவான். உடனே நான் தலையை உயர்த்துவேன். எனக்கு அவன் கற்றுத் தந்த புகழ் வார்த்தைகளால் என் இறைவனை நான் புகழ்வேன். பின்பு பரிந்துரை செய்வேன். எனக்கு அவன் வரையறை செய்வான். நான் வெளியேறி, அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். (''நான் வெளியேற்றி, நரகிலிருந்து அவர்களை நான் வெளியேற்றி, சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வேன்.'' என்று நபி(ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) கூறினார்கள் என கதாதா கூறுகின்றார்)
பின்பு மூன்றாம் தடவையாக நான் மீள்வேன். என் இறைவனிடம் அவனது வீட்டில் அனுமதி தேடுவேன். எனக்கு அதற்கு அனுமதி தரப்படும். அவனை நான் பார்த்ததும் ஸஜ்தா செய்தவனாக விழுவேன். என்னை (அதே நிலையில்) அவன் விட்டுவிட நாடிய அளவுக்கு அவன் விட்டு விடுவான். பின்பு ''முஹம்மதே! தலையை உயர்த்துவீராக! கூறு, கேட்க, பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும் கேள். கொடுக்கப்படும்'' என்று அவன் கூறுவான்.
என் தலையை உயர்த்துவேன். அவன் எனக்குக் கூற்றுத் தந்த புகழ் வார்த்தைகளால் என் இறைவனை நான் புகழ்வேன். பின்பு நான் பரிந்துரை செய்வேன். அவன் எனக்கு வரையறை செய்வான். நான் வெளியேறி, அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்டுவேன். (நான் வெளியேறி, நரகிலிருந்து அவர்களை வெளியேற்றி, சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வேன்'' என்று கூறிதான் கேட்டதாக கதாதா கூறுகிறார்கள்)
முடிவில், குர்ஆன் எவரை தடுத்துள்ளதா-எவர் மீது நிரந்தர நரகம் என கடிப்பட்டுள்ளதோ அவனைத்தவிர நரகில் எவரும் தங்கி இருக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, (நபியே!) உம் இறைவன் உம்மை (மகாமே மஹ்மூத் என்ற) உயர்ந்த அந்தஸ்த்துக்கு அனுப்பலாம் என்ற 17:79 வசனத்தை ஓதினார்கள். பிறகு இந்த மகாமே மஹ்மூத் என்பது உங்கள் நபிக்கு வாக்களிக்கப்பட்ட இடம் என்றும் கூறினார்கள்.
இதை அனஸ் (ரலி) அறிவிக்கின்றனார்கள்.
(இது புகாரியில் தவ்ஹீத் என்ற அத்தியாத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 337
மறுமை நாள் வந்துவிட்டால் நான் பரிந்துரை செய்ய அனுமதிக்க படுகிறேன். ''இறைவா! தன் உள்ளத்தில் கடுகளவு (ஈமான்) இருந்தால் சொர்க்கத்தில் நீ நுழையச் செய்'' என்று கூறுவேன். அவர்கள் நுழைவார்கள். பின்பு, ''தன் உள்ளத்தில் மிக குறைந்த அளவுக் கேனும் (ஈமான்) உள்ளவனை சொர்க்கத்தில் நுழையச் செய்'' என்று கூறுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(குறைந்த அளவுக்கேனும் என்று கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தன் விரல்களை காண்பித்ததை (இன்றும்) நான் பார்ப்பது போல் உள்ளது என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரியில் 'தவ்ஹீது' அத்தியாத்தில் கீழ் உள்ளது)
'பஸ்ரா' வாசிகளில் சிலர் நாங்கள் ஒன்று கூடி, அனஸ் (ரலி) அவர்களிடம் வந்தோம். பரிந்துரை பற்றி நபி மொழியை எங்களுக்கு கேட்டுக்கூற, எங்களிடம் ஸழபித் அல்புனானியையும் நாங்கள் அழைத்துச் சென்றோம். அப்போது அவர் தன் கோட்டையில் 'லுஹர்' தொழுகையைத் தொழுபவராக நாங்கள் அடைந்தோம். நாங்கள் (உள்ளே நுழைய) அனுமதி தேடினோம். தன் விரிப்பில் அமர்ந்திருந்த நிலையில் எங்களுக்கு அனுமதி தந்தார். 'பரிந்துரை பற்றி ஹதீஸை விட முதலாவதாக எதையும் அவரிடம் வினவ வேண்டாம்'' என்று ஸாபித்திடம் நாங்கள் கூறினோம். ''அபூஹம்ஸா! பஸ்ராவாசிகளாக இந்த சகோதரர்கள் உம்மிடம் வந்து பரிந்துரை பற்றி ஹதிஸைப்பற்றி உம்மிடம் கேட்டிட வந்துள்ளார்கள் ''என்று ஸாபித் கூறினார்.
''மறுமை நாள் வந்து விட்டால் மனிதர்களில் சிலர் சிலருடன் அலைமோதி, ஆதமிடம் வருவார்கள், ''உங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரை செய்'' என்று கேட்பார்கள். ''அதற்கு நான் தகுதி இல்லை. எனினும் இப்ராஹீம் நபியிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் நேசராவார்'' என்று கூறுவார்கள்.
உடனே அவர்கள் இப்ராஹிம் நபியிடம் வருவார்கள். ''இதற்கு நான் (தகுதி) இல்லை. எனினும் மூஸாவிடம் செல்லுங்கள் ''அவர்தான் அல்லாஹ்விடம் பேசினார்'' என்று இப்ராஹிம் நபி கூறுவார்கள்.
உடனே மூஸா நபியிடம் வருவார்கள். 'இதற்கு நான் (தகுதி) இல்லை எனினும் ஈஸாவிடம் செல்லுங்கள். அவர், அல்லாஹ்வின் உயிராக அவனது வார்த்தையாக உள்ளார்'' என்று மூஸா நபி கூறுவார்கள்.
உடனே ஈஸா நபியிடம் வருவார்கள். ''அதற்கு நான் (தகுதி) இல்லை. எனினும் முஹம்மதிடம் செல்லுங்கள்'' என்று ஈஸா நபி கூறுவார்கள். உடனே என்னிடம் வருவார்கள். ''நான் தகுதியானவனே''. என்று கூறுவேன். என் இறைவனிடம் நான் அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி தரப்படும்.
இப்போது எனக்குத் தோன்றாத நான் புகழ வேண்டிய புகழ்ச்சி வார்த்தைகளை எனக்கு தோன்றச் செய்வான். இந்த புகழ் வார்த்தைகளால் நான் அவனைப் புகழ்வேன். ஸஜ்தா செய்தவனாக அவன் முன்னே நான் விழுவேன். ''முஹம்மதே! உன் தலையை உயர்த்து. நீ கூறு. உன்னிடம் கேட்கப்படும். நீ கேள். அதை கொடுக்கப்படுவீர். நீ பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப் படும்'' என்று கூறப்படும். ''இறைவா! என் சமுதாயம். என் சமுதாயம்'' என்று கூறுவேன்.
முஹம்மதே! நீ செல். ஒருவன் உள்ளத்தில் மணிக் கோதுமை அளவு ஈமான் இருந்தால் அவனை அதிலிருந்து வெளியேற்று என்று அல்லாஹ் கூறுவான். நான் செய்வேன். அதுபோல் செய்வேன். பின்பு மீண்டும் வருவேன். இநத புகழ் வார்த்தைகளால் புகழ்வேன். பின்பு ஸஜ்தா செய்தவனாக விழுவேன். ''முஹம்மது! உன் தலையை நீ உயர்த்து! நீ கூறு. உம்மிடம் கேட்கப்படும். நீ கேள், கொடுக்கப்படுவாய். நீ பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். 'இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்'' என்று கூறுவேன்.
''நீ செல்! எவரிடம் கடுகளவேனும் அவரின் உள்ளத்தில் ஈமான் இருந்தால் அதிலிருந்து அவரை நீ வெளியேற்று'' என்று அல்லாஹ் கூறுவான். நான் நடப்பேன். (அவ்வாறே) செய்வேன். பின்பு, மீண்டும் வருவேன். இந்த புகழ் வார்த்தைகளால் அவனைப் புகழ்வேன். பின்பு ஸஜ்தா செய்வதனாக விழுவேன். ''முஹம்மதே! உன் தலையை நீ உயர்த்து, நீ கூறு, உன்னிடம் கேட்கப்படும். நீ கேள். கொடுக்கப்படுவாய். நீ பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும்'' என்று அல்லாஹ் கூறுவான். இறைவா! என் சமுதாயம் என் சமுதாயம் என்பேன்.'' நீ செல். ஒருவரின் உள்ளத்தில் கடுகளவையும் விட மிக குறைந்த மிக குறைந்த மிகக் குறைந்த அளவு ஈமான் இருந்தால் அவரை வெளியேற்று'' அவரை நீ நரகிலிருந்து வெளியேற்று! என்று கூறுவான். நான் செல்வேன். (இது போலவே) செய்வேன். இதை நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்ற போது, எங்களின் தோழர்களில் சிலரிடம் ''அபூகலீஃபா அவர்கள் வீட்டில் ஒளிந்திருக்கின்ற ஹஸன் (ரஹ்) அவர்களிடம் சென்று, அனஸ் இப்னு மாலிக் (ரலி) நம்மிடம் கூறிய ஹதிஸை அவரிடம் தெரிவிப்போம்'' என்றேன். உடனே ஹஸன் (ரஹ்) அவர்களிடம் வந்தோம். அவரிடம் ஸலாம் கூறினோம். எங்களுக்கு (உள்ளே வர) அனுமதி தந்தார். ''அபூஸயீத்'' (ஹஸன்) அவர்களே! உம் சகோதரர் பரிந்துரை விஷயத்தில் எங்களுக்கு அவர் கூறியது போல் நாங்கள் கேட்டத்தில்லை என அவரிடம் கூறினோம். 'அதைக் கூறுங்கள்' என்றார். அந்த ஹதீஸை அவரிடம் தெரிவித்தோம். (மேற்கண்ட) இந்த செய்தி வரை முடிந்தது. அப்போது அவர்கள் 'அதைக் கூறுங்கள்' என்றார். இதை விட அதிகமாக எங்களிடம் அவர் கூறவில்லை' என்று அவரிடம் கூறினோம்.
அவர்கள் இருபது வயதை அடைந்திருந்தபோது என்னிடம் இந்த ஹதீஸைக் கூறினார். இப்போது (இந்த அளவுக்கு சுருக்கமாகக் கூற) அவர் மறந்து விட்டார். அல்லது நீங்கள் அக்கறை இல்லாமல் போயிடுவதை அவர் வெறுத்து விட்டார். (எந்த ஒன்று) நான் அறியமாட்டேன். அபூஸயீத் (ஹஸன்) அவர்களே! எங்களுக்கு (மீதமுள்ளதை கூறுங்கள் எனக் கேட்டோம். அவர் சிரித்து விட்டு, மனிதன் அவசரக்காரணாகவே படைக்கப் பட்டுள்ளான். உங்களுக்கு அவர் கூறியது போலவே, என்னிடமும் அவர் கூறியதை உங்களுக்கு நான் கூறிட விரும்பியே தவிர, இவ்வாறு அதை நான் நினைவு கூரவில்லை''என்று கூறிவிட்டு (அனஸ் (ரலி) கூறியதாக) த் தொடர்ந்தார்கள்.
பின்பு நான் நான்காவது தடவை வருவேன். இந்த புகழ்ச்சி வார்த்தைகளால் அவனைப் புகழ்வேன். பின்பு ஸஜ்தா செய்தவனாக அவனிடம் விழுவேன். முஹம்மதே! உன் தலையை உயர்த்துவீராக! நீ கூறு கேட்கப்படும் நீ கேள். அதைக் கொடுக்கப்படுவாய். நீ பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். ''இறைவா! அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை எனக் கூறியவர்கள் விஷயத்தில் அனுமதி தா'' என்று கேட்பேன். ''என் கண்ணியம், என் வல்லமை, என் பெருமை, என் மகத்துவம் ஆகியவை மீது சத்தியமாக, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை'' என்று கூறியவனை அதிலிருந்து வெளியேற்றுவேன் என அல்லாஹ் கூறுவான்.
இதை மஹ்பத் இப்னு ஹிலால் அல்அனஸிய்யு என்பார் கூறுகின்றார்.
(இது புகாரியில் 'தவ்ஹீது' அத்தியாத்தின் கீழ்' உள்ளது.
ஹதீஸ் எண் : 339
334வது ஹதீஸே மீண்டும் இடம் பெற்றுள்ளது.
(இது முஸ்லிமில் ''மறுமையில் தங்களின் இறைவனை மூமின்கள் பார்ப்பது உறுதி'' என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 340
சொர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தங்குமிடத்தில் மிக கீழானது அவரிடம் அல்லாஹ் ''ஆசை கொள்'' என்று கூறுவது தான். அவரும் ஆசை கொள்வார். ஆசை கொள்வார். '' நீ ஆசை கொண்டாயா?'' என்று அவரிடம் கேட்பான். 'ஆம்' என்பார். நீ ஆசை கொண்டதும், அதனுடன் அது போன்றதும் உனக்குண்டு'' என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான். இதை நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் உள்ளது)
ஹதீஸ் எண் : 341
இதைத் தூதர் அவர்களே! மறுமைநாளில் எங்கள் இறைவனை நாங்கள் பார்ப்போமா? என்று நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபி (ஸல்) அவர்களிடம் சிலர் கேட்டனர். 'ஆம்! மேகமே இல்லாத, பிரகாசமான பகலில் சூரியனைப் பார்ப்பதில் நீங்கள் இடைஞ்சல் செய்யப்படுவீர்களா? மேகமே இல்லாத பிரகாசமான பவுர்ணமி இரவில் நிலவைப் பார்ப்பதில் நீங்கள் இடைஞ்சல் செய்யப் படுவீர்களா? என்று நபி (ஸல்) கேட்பார்கள். ''இல்லை, இறைத் தூதர் அவர்களே'' என்பார்கள். இவ்விரண்டில் ஒன்றை பார்ப்பதில் நீங்கள் இடைஞ்சல் செய்யப்படுவது போலவே தவிர, அல்லாஹ்வைப் பார்ப்பதில் நீங்கள் இடைஞ்சல் செய்யப்படமாட்டீர்கள்.
மறுமை நாள் வந்து விட்டால் அழைப்பாளர் ஒருவர் தங்கள் வணங்கியதை ஒவ்வொரு சமுதாயமும் பின் பற்றட்டும்'' என்று அறிவிப்பார்.
அல்லாஹ் இல்லாத சிலைகளையும், அடையாளங்களையும் வணங்கிய எவரும் நரகில் விழுந்தே தவிர எஞ்சிட மாட்டார்கள். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிய நல்லவர் அல்லது தீயவர் மற்றும் வேதக்காரர்களில் எஞ்சியோர் தவிர எவரும் மிஞ்சிடவில்லையானால்; உடனே யூதர்களை அழைக்கப்படும். நீங்கள் எதை வணங்குனீர்கள்? என்று கேட்கப்படும். அல்லாஹ்வின் மகன் உஸைரை வணங்கினோம் என்று கூறுவார்கள். நீங்கள் பொய் கூறுகிறீர்கள். அல்லாஹ் மனைவியையோ, குழந்தையையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எதை விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். ''நாங்கள் தாகித்து உள்ளோம். எங்கள் இறைவா! எங்களுக்கு குடிக்கக் கொடு'' என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு ''நீங்கள் வந்திட மாட்டீர்களா?'' என சமிக்ஞை செய்யப்படும். நரகின் பக்கம் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அது கானல் நீர் போல் இருக்கும். அவற்றில் சில, சிலவற்றுடன் இறுதித் தெரியும். நரகில் அவர்கள் விழுந்து விடுவார்கள்.
பின்பு கிருத்துவர்களை அழைக்கப்படும். அவர்களிடம், நீங்கள் எதை வணங்குனீர்கள்?'' என்று கேட்கப்படும்.'' அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈஸாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்று கூறுவார்கள். 'நீங்கள் பொய் கூறுகிறீர்கள். மனைவியையோ, குழந்தையையோ அல்லாஹ் ஏற்படுத்திக் கொண்டதில்லை'' என அவர்களிடம் கூறப்படும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என கேட்கப்படும். ''எங்கள் இறைவா! நாங்கள் தாகமாக உள்ளோம். எங்களுக்கு குடிக்கத் தருவாயாக! என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் வரமாட்டீர்களா? என அவர்களிடம் சமிக்ஞை செய்யப்படும். உடனே அவர்கள் நரகின் பக்கம் ஒன்று சேர்க்கப் படுவார்கள். நிச்சயமாக அது கானலைப் போல் இருக்கும். அவற்றில் சில, சிலவற்றை இறும் இருக்கும். நரகில் அவர்கள் விழுவார்கள்.
அல்லாஹ்வை வணங்கிய நல்லவர் தீயவர் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்காத போது, அவர்களிடம் உலகத்தின் இறைவன், அவனை அவர்கள் பார்த்திட தோற்றமில்லாத உருவில் வருவான். ''நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்? தாங்கள் வணங்கியதை ஒவ்வொரு சமுதாயமும் பின்பற்றி விட்டதே'' என்று அல்லாஹ் கேட்பான். 'எங்கள் இறைவா! அவர்களிடம் நாங்கள் மிகத் தேவையுடையவராக இருந்தும் உலகிலேயே (அந்த) மனிதர்களை பிரிந்து விட்டோம். அவர்களை நாங்கள் நட்பு கொள்ளவில்லை. 'நான் தான் உங்களின் இறைவன்' என்று கூறுவான். 'உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்கமாட்டோம்'' என இரண்டு அல்லது மூன்று தடவை கூறுவார்கள்.
இறுதியாக அவர்களில் சிலர், அவனை அடைந்திட முயற்சிப்பார்கள். உங்களுக்கும், அவனுக்குமிடையே அவனை நீங்கள் அறிந்து கொள்ளும் அடையாளம் ஏதுமுண்டா?' என அல்லாஹ் கேட்பான். ஆம் என்று கூறுவார்கள், அப்போது பாதத்தை திறப்பான், அல்லாஹ்வுக்கு அவனை மட்டுமே அஞ்சி ஸஜ்தா செய்தவன்; அவனுக்கு ஸஜ்தா செய்ய அல்லாஹ் அனுமதித்தே தவிர எஞ்சியிருக்க மாட்டான். (அதாவது அவர்கள் ஸஜ்தா செய்வார்கள்) பிறர் பார்த்து புகழ ஸஜ்தா செய்தவன், அவனது முதுகை ஒரே தட்டையாக அல்லாஹ் ஆக்கியே தவிர அவன் நிற்கமாட்டான். ஸஜ்தா செய்ய அவன் விரும்பும் போதெல்லாம் அவன் தலைகுப்புற கீழே விழுவான். (அதாவது இவர்களால் ஸஜ்தா செய்ய இயலாது)
பின்பு, தங்களின் தலைகளை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்துவார்கள். முதல் தடவை அவர்கள் பார்த்திட்ட தோற்றத்தை அவன் மாற்றிக் கொள்வான். ''நான் தான் உங்களின் இறைவன்'' என்று கூறுவான். 'நீ தான் எங்களின் இறைவன் என அவர்கள் கூறுவார்கள். பின்பு நரகின் மீது பாலம் அமைக்கப்படும். பரிந்துரை அனுமதிக்கப்படும். 'இறைவா! காப்பாற்று. காப்பாற்று' என அவர்கள் கூறுவார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
இறைத் தூதர் அவர்களே! பாலம் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. வழுக்கும் வழுவழுப்பான பகுதியாகும். அதில் கொக்கிகளும் 'நஜ்தில்' வளரும் முற்களும் இருக்கும். அதிலே வளைந்த முற்கள் உண்டு. அதற்கு கடுவேலமர முற்கள் எனக் கூறப்படும். அதில் மூமின்கள், கண் சிமிட்டுவது போல், மின்னல் போல், காற்றைப் போல், பறவை போல், குதிரை, ஒட்டகத்தின் பந்தயம் போல் கடந்து விடுவார்கள். அங்கே காயமின்றி தப்பிப்போரும், காயம் பட்டு தப்பிப்போரும், நரகத்தில் விழுந்து விடுவோரும் உண்டு.
இறுதியில் மூமின்கள் நரகிலிருந்து தப்பித்தப்பிறகு; என் உயிரை கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக. மறுமை நாளில் நரகில் உள்ள தங்களின் சகோதரர்களுக்கு அல்லாஹ்விடம் வாதிடுவதில் மூமின்களைவிட உரிமையை நிலை நாட்டிட அல்லாஹ்விடம் வாதிடுவதால் உங்களில் எவரும் கடுமையாக இருப்பதில்லை. (அவர்கள் வாதிடும் போது) ''எங்கள் இறைவா! எங்களுடன் அவர்கள் நோன்பு வைத்தார்கள். தொழுதார்கள். ஹஜ் செய்தார்கள் என்று கூறுவார்கள்.
நீங்கள் அறிந்தவர்களை வெளியேற்றுங்கள் என அவர்களுக்கு கூறப்படும். நரகித்திற்கு அவர்களின் தோற்றங்கள் (கரிக்கப்பட) தடை செய்யப்பட்டிருக்கும். எனவே இரு பாதங்களின் பாதிவரை, தன் இரு முழங்கால் வரை நெருப்பு சாப்பிட்டுவிட்ட நிலையில் உள்ள அதிகமான மனிதர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள்.
''எங்கள் இறைவா! எங்களுக்கு நீ கட்டளையிடப்பட்டபடி உள்ளவர்களில் எவரும் அதில் இல்லை'' என்று கூறுவார்கள். 'நீங்கள் மீண்டும் செல்லுங்கள். ஒருவனின் உள்ளத்தில் ஒரு தீனார் எடை அளவுக்கு நன்மையை நீங்கள் பெற்றுக் கொண்டால் அவரையும் வெளியேற்றுங்கள்! என்று கூறுவான். அதிகமான மக்களை அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்பு எங்கள் இறைவா! எங்களுக்கு நீ கட்டளையிட்டப்படி எவரையும் அதில் நாங்கள் விடவில்லை'' என்று கூறுவார்கள். பின்பு அவன், 'மீண்டும் செல்லுங்கள். ஒருவனது உள்ளத்தில் அதை தீனார் எடை அளவுக்கு நன்மை உள்ளதை நீங்கள் கண்டால், அவனையும் வெளியேற்றுங்கள்'' என்று கூறுவான். உடனே அவர்கள் அதிகமான மக்களை வெளியேற்றுவார்கள். பின்பு அவர்கள் 'எங்கள் இறைவா! அதில் நன்மை (செய்த எவரையும்) நாங்கள் விடவில்லை என்பார்கள்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அபூஸயீத்அல்குத்கீ (ரலி) அவர்கள் ''இந்த ஹதீஸை நீங்கள் உண்மைப்படுத்திடவில்லை என்றால், நீங்கள் நாடினால், ''நிச்சயமாக அல்லாஹ் ஆணுவளவேனும் அநீதம் செய்ய மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதை இரட்டிப்பாக்குவான். மேலும் அதற்குக்காகத்தான் கூலியை வழங்குவான்'' (4:40) என்ற வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். (மேலும் நபி (ஸல்) தொடர்கிறார்கள்:-)
'வானவர்ககள் பரிந்துரை செய்து விட்டனர். நபிமார்கள் பரிந்துரை செய்துவிட்டனர். மூமின்கள் பரிந்துரை செய்துவிட்டனர் 'என அல்லாஹ் அறிவிப்பான். (அல்லாஹ்) வைத் தவிர எவரும் அங்கு இருக்க மாட்டார்கள். அவன் நரகில் இருந்து ஒரு பிடி எடுப்பான். எந்த நன்மையும் அறவே செய்யாத ஒரு கூட்டத்தை அதிலிருந்து வெளியேற்றுவான். அவர்கள் கரிக்கப்பட்டவர்களாக வருவார்கள். அவர்களை சொர்க்கத்தில் ஒரங்களில் உள்ள ஆற்றிலே போடுவான். அதற்கு 'உயிர் தரும் ஆறு' என்று கூறப்படும். ஆற்றோடு படுகையில் விதை முளைப்பது போல் அவர்கள் (நிறம் மாறி) வெளியேறுவார்கள். தவிர அல்லது மரத்தில் உள்ள அதை நீங்கள் பார்க்கவில்லையா? சூரியனை நோக்கி இருப்பவை பசுமையாக, மஞ்சம் நிறமாக இருக்கும். நிழலினை நோக்கி உள்ள மிக வெண்மையாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், 'இறைத் தூதர் அவர்களே! ஓடைப் பகுதியில் நீங்கள் வாழ்ந்தது போலா?'' என்று கேட்டார்கள். அவர்கள் முத்துக்கள் போல் வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலே (நரகிலிருந்து வெளியேறிதற்கான) முத்திரைகள் இருக்கும் சொர்க்கவாசிகள் அவர்களை அறிந்து கொள்வார்கள். இவர்கள் அல்லாஹ்வால் விடுதலை செய்யப்பட்டவர்கள் எதையும் அவர்கள் செய்யாமலேயே எந்த நன்மையையும் முற்பகுத்தாமலே சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்திட்டான்.
பின்பு 'சொர்க்கத்தில் நுழையுங்கள்'. அதில் நீங்கள் பார்த்திட்டவை உங்களுக்கு உரியதாகும் என்று கூறுவான். ''எங்கள் இறைவா! உலகத்தில் எவருக்கும் நீ கொடுக்காத ஒன்றை எங்களுக்கு கொடுத்துள்ளாய்'' என்று கூறுவார்கள். என்னிடத்தில் உங்களுக்கு இதைவிட மிகச் சிறந்தது உண்டு'' என்று கூறப்படும். எங்கள் இறைவா! இதைவிட மிகச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். உடனே அவன், ''என் திருப்திதான் அது. இதன்பின் எக்காலமும் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டான்'' என்று கூறுவான்.
நபி (ஸல்) கூறியதாக அபூஸயித் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமில் உள்ளது)
ஹதீஸ் எண் : 342
சொர்க்கவாசிகளை சொர்க்கத்தில் அல்லாஹ் நுழையச் செய்வான். தன் அருளினால் தான் நாடியோரை நுழையச் செய்வான். நரகவாசிகளை நரகில் நுழையச் செய்வான். பின்பு ''நீங்கள் ஒருவரின் உள்ளத்தில் அணுவளவேனும் ஈமானைக் கண்டால் அவரை நோக்குங்கள்'' என்று கூறுவான். அவரை அவர்கள் வெளியேற்றுவார்கள். அதிலிருந்து கரிக்கப்பட்ட கரிக்கட்டைகளாக வெளியேறுவார்கள். உயிர் (தரும்) ஆற்றில் அவர்கள் போடப்படுவார்கள். அதில் அவர்கள், ஆற்றோரைப் படுகையில் விளையும் வித்துக்கள் போல் முளைப்பார்கள். அதை நீங்கள் எப்படி அடர்த்தியான மஞ்சளாக வெளியாகிறது என்பதை அறிய வில்லையா?'' என்று நபி (ஸல்) கூறினார்கள் என அபூஸயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது முஸ்லிமீல் ''பரிந்துரை ஏற்குதல், நரகிலிருந்து ஓரிறை கொள்கைவாதிகளை வெளியாக்குதல்'' என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண் : 343
நரகத்தில் இருக்கின்ற நரகவாசிகளான அவர்கள், அதில் அவர்கள் இறந்து விடவும் மாட்டார்கள். உயிருடன் இருக்கவும் மாட்டார்கள். எனினும் அவர்கள் குற்றங்கள் காரணமாக அவர்களை நரக நெருப்பு தீண்டியிருக்கும். அவர்கள் கரிக்கட்டைகளாக மாறும் அளவுக்கும் மரணம் அவர்களை அடைந்திருக்கும். (அப்போது) பரிந்துரை செய்ய அனுமதிக்கப்படும். அவர்களை கூட்டம், கூட்டமாக அழைத்து வரப்படும். சொர்க்கத்து ஆறுகள் அருகே நிறுத்தப்படுவார்கள். பின்பு ''சொர்க்கவாசிகளே! அவர்கள் மீது (தண்ணீரை) தெளியுங்கள்'' என்று கூறப்படும். (தெளிந்தவுடன்) அவர்கள், ஆற்றோரா படுகைகளில் முளைத்தது போல் முளைத்து எழுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என அபுஸயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒடைப்பகுதியில் முன்பு வசித்துள்ளார்கள் என்பதால் (இது போன்ற உதாரணத்தைக்) கூறியுள்ளார்கள் போலும் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்.
(இது முஸ்லிமில் உள்ளது)
ஹதீஸ் எண் : 344
நரகவாசிகளில் அதில் இறுதியாக நுழைபவரையும், சொர்க்கவாசிகளில் அதில் இறுதியாக நுழைபவரையும் நான் அறிவேன். ஒருவர், நரகிலிருந்து தவழ்ந்தவராக வெளியேறுவார். அவரிடம் அல்லாஹ், ''நீ செல், சொர்க்கத்தில் நுழைந்து கொள்'' என்று கூறுவான். அவர் அங்கு வருவார். 'அது நிரம்பி விட்டது' என அவரிடம் காண்பிக்கப்படும். அவர் மீண்டும் வருவார். ''இறைவா! அதை (சொர்க்கத்தை) நிரம்பியதாகக் காண்கிறேன்'' என்று கூறுவார். ''நீ செல்! சொர்க்கத்தில் நுழைந்துகொள்'' என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான். அவர் (மீண்டும்) அங்கு வருவார். அது நிரம்பி விட்டதாக அவரிடம் காண்பிக்கப்படும். ''இறைவா! அதை நிரம்பியதாக கண்டேன்'' என்று கூறுவார். அப்போது, அல்லாஹ் அவரிடம், ''நீ செல், சொர்க்கத்தில் நுழைந்து கொள்''. நிச்சயமாக உனக்கு உலகம் போன்றும், அது போன்ற பத்து மடங்கு போன்றும் உண்டு'' என்று கூறுவான். ''நீ எஜமானன். என்னை நீ கேலி செய்கிறாயா? என்றோ அல்லது'' என்னை நீ நகைக்கிறாயா?'' என்றோ கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இப்படி அவர்கள் கூறும் போது அவர்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு அவர்கள் சிரித்ததைப் பார்த்தேன்'' என இதை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
''அவரிடம் கூறப்பட்ட இட அளவு, சொர்க்கவாசிகள் தங்கி இருந்த இடத்தில் மிகச்சிறிய அளவுதான்” என்றும் நபி (ஸல்) கூறினார்கள்.
(இது முஸ்லிமீல் உள்ளது)
ஹதீஸ் எண் : 345
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸே மீண்டும் இடம் பேறுகிறது. ஆனால் கீழ்க்காணும் வாசகமும் அதிகப்படியாக உள்ளது.
ஒருவர் அதிலிருந்து (நரகிலிருந்து) தவழ்ந்தவராக வெளியேறுவார். அவரிடம் நீ செல், சொர்க்கத்தில் நுழைந்து கொள் என்று கூறப்படும். அவர் சென்று சொர்க்கத்தில் நுழைவார். (அங்கே) மற்ற மனிதர்கள் இடங்களை பிடித்துக் கொண்டதாக காண்பார். நீ இருந்த உலகைப் பற்றி நீ நினைவு கூர்கிறீரா? என்று அவரிடம் கேட்கப்படும். அவர் 'ஆம்' என்பார். நீ விருப்பம் கொள்(தரப்படும்)ம் என்று அவரிடம் கூறப்படும். அவரும் விரும்புவார். நீ விரும்பியது உனக்குண்டு. உலகில் இருந்தது போன்று பத்துமடங்குண்டும் என்று அவரிடம் கூறப்படும். நீயோ அதிபதி, என்னை நீ கேலி செய்கிறாயே! என்று அவர் கூறுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிய போது அவர்கள்கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்ததை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்கள்.
(இது முஸ்லிமில் உள்ளது)
ஹதீஸ் எண்: 346
சொர்க்கத்தில் நுழையக்கூடியவர்களில் இறுதியானவர் ஒருவர் இருப்பார் அவர் ஒரு முறை நடப்பார். மறுமுறை தவழ்ப்பார். மறு முறை நரகம் அவரை கரித்து விடும். (இப்படிவந்து) அவர் நரகத்தை கடந்துவிட்டால் நரகம் பக்கம் திரும்பி, உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றியவன் அருள்புரிந்து விட்டான். முன்னோர், பின்னோர்களில் எவருக்கும் வழங்காத ஒன்றை அல்லாஹ் எனக்கு வழங்கிவிட்டான்கி என்று கூறுவார்.
அவருக்கு (முன்) ஒரு மரம் உருவாக்கப்படும், 'இறைவா! இந்த மரத்தின் பக்கம் என்னை நெருக்கிவைம் அதன் நிழலில் நான் இளைப்பாறிக்கொள்வேன். அதன் தண்ணீரை குடித்துக் கொள்வேன் என்று அந்த மனிதர் கூறுவார். ஆதமின் மகனே! இதை உனக்கு நான் கொடுத்தால், இது அல்லாததையும் நீ கேட்பாயே என்று அல்லாஹ் கூறுவான். இல்லை இறைவா! என்று அவர் கூறி, அது அல்லாததை அவனிடம் கேட்காமல் இருப்பதாக அவனிடம் வாக்குறுதி அளிப்பார். அவரின் இறைவனோ, இதில் அவருக்கு பொறுமை இல்லாததைக் காண்பிக்க அவரை சோதிப்பான். அந்த மரத்தை அவருக்கு வழங்குவான். அவரும் அதன் நிழலில் இளைப்பாறுவார். அதன் தண்ணீரிலிருந்து குடிப்பார்.
பின்பு, முதலில் இருந்ததை விட மிக அழகிய மரம் ஒன்றை அவருக்கு உருவாக்கப்படும். இறைவா! இந்த மரத்தின் பக்கம் என்னை நெருக்கிவை, இதன் தண்ணீரிலிருந்து குடிப்பேன். அதன் நிழலில் இளைப்பாறுவேன். இது அல்லாத ஒன்றை உன்னிடம் கேட்கமாட்டேன்கி என்று கூறுவார். ஆதமின் மகனே! இது அல்லாத ஒன்றை என்னிடம் நீ கேட்கமாட்டாய் என என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று அல்லாஹ் கேட்டுவிட்டு; (இப்போதும்) இதை உனக்கு தந்துவிட்டால், இது அல்லாததை கேட்பாய் தானேம் என்று கூறுவான். அவரது இறைவனோ இதில் அவருக்கு பொறுமை இல்லாததை காண்பிக்க வேண்டி, அவரை சோதிப்பான். அவருக்கு அ(ம் மரத்)தை வழங்குவான். அதன் நிழலில் அவர் களைப்பாறுவார். அதன் தண்ணீரிலிருந்து அருந்துவார்.
பின்பு, சொர்க்கத்தின் வாசல் அருகே மரத்தை அவருக்கு உருவாக்கப்படும். அது முந்தைய இரண்டையும் விட மிக அழகாக இருக்கும், இறைவா! இந்த மரத்தை எனக்கு தந்திடு. அதன் நிழலில் நான் இளைப்பாறுவேன். அதன் தண்ணீரிலிருந்து அருந்துவேன். இது அல்லாத ஒன்றை உன்னிடம் கேட்கமாட்டேன்கி என்று கூறுவார். ஆதமின் மகனே! இது அல்லாததை என்னிடம் கேட்காமலிருக்க என்னிடம் நீ வாக்குறுதி அளிக்க வில்லையா? என்று அல்லாஹ் கேட்பான். 'ஆம், இறைவா! இது அல்லாததை இனி உன்னிடம் கேட்க மாட்டேன்'என்று அம்மனிதர் கூறுவார். அவரது இறைவனோ, இதில் அவருக்கு பொறுமை இல்லாததை காண்பிப்பதற்காக அவரை சோதிப்பான். அவரை அம்மரத்தின் பக்கம் நெருக்க மாக்குவான்.
அந்த மரத்தை அவர் நெருங்கியதும், சொர்க்கவாசிகளின் சப்தங்களை கேட்பார், இறைவா! அதில் என்னை நுழையவை என்று கேட்பார், ஆதமின் மகனே! உன்னிடமிருந்து என்னை கேட்பதை தடுப்பது எது? உலகத்தையும், அதனுடன் அது போன்றதையும் உனக்கு நான் தந்திடுவதை நீ பொருத்திக் கொள்வாயா? என்று அல்லாஹ் கேட்பான் என நபி (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு சிரித்தார்கள்.
உன்னை சிரிக்க வைத்தது எது? என நீங்கள் என்னிடம் கேட்கமாட்டீர்களா? என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கேட்டார். உம்மை சிரிக்க வைத்தது எது? என்று (அருகில் இருந்தோர்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இப்படித்தான் சிரித்தார்கள். நீங்கள் எதற்காக சிரித்தீர்கள் இறைத்தூதர் அவர்களே!ம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். (நீ உலக இறைவனாக இருந்த நிலையில் என்னை கேலி செய்கிறாயா?) என்று அவர் கேட்டபோது, அல்லாஹ்வும் சிரிப்பதே (என்னையும் சிரிக்க வைத்து) என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.
அவர் அப்படிக் கேட்டதும் உன்னை நான் கேலி செய்யவில்லை. எனினும் நான் நாடியவற்றின் மீது நான் பேரராற்றல் உடையவன் என்று அல்லாஹ் கூறுவான் எனவும் நபி (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்கள்.
(இது முஸ்லிமில் உள்ளது. முஸ்லிமின் பல அறிவிப்பிகளின் ஒரு அறிவிப்பில் கீழ் காணும் செய்தியும் அதிகமாக இடம் பெற்றுள்ளது)
'பின்பு அவர் தன் வீட்டில் (சொர்க்கத்தில்) நுழைவார். அவருக்கு ஹுருல் ஈன் களிலிருந்து அவருக்குரிய இரண்டு மனைவிகள் அதில் நுழைவர். அவ்விருவரும் அவரிடம் எங்களுக்கு உம்மைத் தந்தும், உமக்காக எங்களையும் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்கி என்பார்கள். அவரும் நான் வழங்கப்பட்டது போன்று எவரும் வழங்கப்படவில்லை என்பார்.
ஹதீஸ் எண்: 347
உலகத்தின் தனக்குள்ள உரிமைக்காக உங்களின் ஒருவர் விவாதம் புரிவது என்பது, நான் நுழைந்து விட்ட தங்களின் சகோதரர் விஷயத்தில் தங்களின் இறைவனிடம் மூமின்கள் விவாதம் புரிவதை விட மிகக் கடுமையாக இருப்பதில்லை.
எங்கள் இறைவா! எங்களுடன் தொழுது எங்களுடன் நோன்பு வைத்து, எங்களுடன் ஹஜ் செய்த எங்களின் சகோதரர்களை நரகில் நீ நுழையச் செய்துவிட்டாய் என அவர்கள் கூறுவார்கள்.
நீங்கள் சென்று அவர்களில் நீங்கள் அறிந்தவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களிடம் அவர்கள் வந்து, அவர்களின் தோற்றங்களால் அவர்களை அறிந்து கொள்வார்கள். அவர்களில் ஒருவரை அவரது இரு முட்டுக்கால் வரை (நரக) நெருப்பு அவரை தீண்டியிருக்கும். அவர்களில் ஒரு வரை அவரது கரண்டை வரை நெருப்பு தீண்டிஇருக்கும். எனவே, அவர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள். எங்கள் இறைவா! எங்களுக்கு நீ கட்டளையிட்டபடி நாங்கள் வெளியேற்றிவிட்டோம் என்பார்கள்.
தன் உள்ளத்தில் ஒரு தீனார் எடை அளவு ஈமான் உள்ளவரையும் நீங்கள் வெளியேற்றுங்கள் என்பான். பின்பு, அரை தீனார் அளவுக்கு (ஈமான்) தன் உள்ளத்தில் வைத்திருப்பவரை (வெளியேற்றுங்கள்) என்பான். இப்படியே, அணுவளவேனும் தன் உள்ளத்தில் (ஈமான்) உள்ளவரை (வெளியேற்றுங்கள்) என்பான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸை நம்பாதவர் கீழ்க்காணும் வசனத்தை ஓதிக் கொள்ளட்டும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். மேலும் இது அல்லாத (குற்றத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு ஒருவன் இணைவைத்துவிட்டான். அவன் மிகப்பெரு பாவத்தையே கற்பனை செய்து விட்டான்கி (அல்குர்ஆன் 4:48) என்று அபூஸயீத் (ரலி) கூறுகின்றார்கள்.
(இது நஸயியீல் உள்ளது)
ஹதீஸ் எண்: 348
நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சிக் கொண்டு வரப்பட்டு. அவர்களுக்கு தொடைப்பகுதியை முன் வைக்கப்பட்டது. அதை அவர்கள் சாப்பிட்டார்கள். அந்த இறைச்சி அவர்களுக்கு விருப்பமாக இருந்தது. எனவே அதை பல்லால் கடித்தார்கள். பின்பு மறுமை நாளில் மனிதர்களுக்கு நான் தான் தலைவராக இருப்பேன். இது ஏன் என்பதை அறிவீர்களா? அல்லாஹ் மனிதர்களை, ஒரே (சம)தரையில் முன்னோர் - பின்னோர் என அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அழைப்பாளர் (தன் பேச்சால்) அவர்களை கேட்கச் செய்வார். பார்வை அவர்களை சூழ்ந்திருக்கும். அவர்களை சூரியன் நெங்கி இருக்கும். அவர்கள் தாஸ்காத, இயலாத கவலையும், வருத்தமும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
உங்களுக்கு என்ன நேரும் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்களுக்கு உங்கள் இறைவனிடம் பரிந்துரைப்பவர் யார் என்பதை நீங்கள் சிலர் சிலரிடம் கூறுவார்கள். ஆதமிடம் செல்லுங்கள் என்று அவர்களில் சிலர் சிலரிடம் கூறுவார்கள்.
ஆதம் நபியிடம் வருவார்கள். நீங்கள் தான் மனிதர்களின் தந்தை, அல்லாத தன் கையால் உங்களைப் படைத்தான். உங்களின் தன் ரூஹை (உயிரை) ஊதினான். வானவர்களை ஏவினான். அவர்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்தார்கள். உங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். இங்கே எங்கள் நிலைபற்றி நீங்கள் அறியவில்லையா? எங்களை அடைந்ததுள்ளது எது என்பதையும் நீங்கள் அறிய வில்லையா? என்று கூறுவார்கள். அவர்களிடம் ஆதம், நபி ''நிச்சயமாக என் இறைவன் இந்நாளில் கடும் கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் இது போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்கு பின்னும் இது போல் கோபம் கொள்ளவும் மாட்டான். ஒரு மரத்தைவிட்டும் என்னை அவன் தடுத்திருந்தான். அவனுக்கு நான் மாறு செய்துவிட்டேன். என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, நான் அல்லாதவரிடம் நீங்கள் செல்லுங்கள். நூஹிடம் நீங்கள் செல்லுங்கள் ''என்று கூறுவார்கள் ஆதம்.
நூஹ் நபியிடம் அவர்கள் வருவார்கள். ''நூஹே! பூமியில் வசிப்போருக்கு (அனுப்பப்பட்ட) தூதர்களில் நீங்கள்தான் முதன்மையானவர். நன்றியுள்ள அடியார் என உங்களுக்கு அல்லாஹ் பெயரிட்டுள்ளான். உங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். இதிலே எங்கள் நிலை என்ன என்பதை நீங்கள் அறியவில்லையா? எங்களுக்கு நேர்ந்தது என்ன என்பதை நீங்கள் அறியவில்லையா?'' என்பார்கள். அவர்களிடம் நூஹ் நபி ''நிச்சயமாக என் இறைவன், இந்நாளில் கடும் கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் இது போல் அவன் கோபம் கொண்டதில்லை. இது போல் இதன்பின்பும் கோபம் கொள்ளமாட்டான். எனக்கு ஒரு பிரார்த்தனை இருந்தது. அதை என் கூட்டத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து விட்டேன். என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, நீங்கள் நான் அல்லாத மற்றவரிடம் செல்லுங்கள் இப்றாஹிம் நபியிடம் செல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
இப்ராஹிம் (நபி)யிடம் அவர்கள் வருவார்கள். 'இப்ராஹிமே! நீங்கள் அல்லாஹ்வின் நபி. பூமியில் வசித்தோரில் அவனது நேசர். உங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். இதிலே நாங்கள் இருக்கும் நிலை என்ன? என்பதை நீங்கள் அறியவில்லையா? என்று கூறுவார்கள். ''நிச்சயமாக எனது இறைவன் இந்நாளில் கடும் கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் இது போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதன் பின்பும் இதுபோல் அவன் கோபம் கொள்ள மாட்டான். நிச்சயமாக நான் மூன்று பொய்களை கூறிவிட்டேன்- இந்த மூன்று பொய்களையும் அபுஹய்யான் என்ற அறிவிப்பாளர் நினைவு கூறுகிறார்-என் நிலை என்னவோ, என்நிலை என்னவோ, என் நிலை என்னவோ, என அல்லாத மற்றவரிடம் செல்லுங்கள். மூஸாவிடம் செல்லுங்கள்'' என்று இப்ராஹிம் நபி கூறுவார்கள்.
மூஸா நபியிடம் வருவார்கள். ''மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ், தன் தூதுவத்தால் தன் (நேரடிப்) பேச்சால் மற்ற மனிதர்களைவிட உங்கள் சிறப்பாக்கி உள்ளான். உங்கள் இறைவனிடம் எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலை என்ன என்பதை நீங்கள் அறியவில்லையா?'' என்பார்கள். நிச்சயமாக என் இறைவன் கடும் கோபத்தில் உள்ளான். இதற்கு முன் இது போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்கு பின்பும் இது போல் அவன் கோபம் கொள்ள மாட்டான். நிச்சயமாக நான் ஒருவரை கொலை செய்தேன். அவரை கொன்று விடும்படி நான் கட்டளையிடப்பட்டதில்லை. என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, என் அல்லாத (மற்ற)வரிடம் செல்லுங்கள் ஈஸாவிடம் செல்லுங்கள்'' என மூஸா நபி கூறுவார்கள்.
ஈஸா நபியிடம் வருவார்கள். ''ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். மர்யமிடம் இறைவன் தந்த அவனது வார்த்தை, அவனது ரூஹ் (உயிர்). மக்களிடம் தொட்டில் உள்ள போது பேசினீர்கள். உங்கள் இறைவனிடம் நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்நிலையில் இருப்போம் என்பதை நீங்கள் அறியவில்லையா?'' என்பார்கள். உடனே ஈஸா அவர்கள் எனது இறைவன் இன்று கடும் கோபத்தில் உள்ளான். இதற்கும் முன் அது போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப்பின்பும் இது போல் அவன் கோபம் கொள்ள மாட்டான்.'' என்று கூறிவிட்டு, பாவத்தை எதையும் அவர் நினைவு கூறாமல் ''என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ, என் நிலை என்னவோ. நீங்கள் நான் அல்லாத (மற்ற)வரிடம் செல்லுங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்'' என்றும் கூறுவார்.
நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். ''முஹம்மதே! நீங்கள் இறைவனின் தூதர். நபிமார்களில் இறுதியானவர். உங்களின் பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உங்களுக்கு மன்னிக்கப் பட்டு விட்டது. எங்களுக்கு உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். எங்களின் நிலை என்ன என்பதை நீங்கள் அறியவில்லையா?'' என்று கூறுவார்கள்.
நான் நடந்து, அர்ஷின் அடிக்கு வருவேன். என் இறைவனுக்காக ஸஜ்தா செய்தவானாகி விடுவேன். பின்பு அவனது முழு புகழ்களை அவனின் அழகிய புகழுகுரிய வார்த்தைகளை எனக்கு முன் எவருக்கும் தோற்றுவிக்காதவற்றை தோற்றுவிப்பான். பின்பு ''முஹம்மதே! உன் தலைமை உயர்த்து நீ கேள். அது கொடுக்கப்படும். நீ பரிந்துரை செய். பரிந்துரை ஏற்கப்படும்.'' என்று கூறப்படும். நான் என் தலையை உயர்த்துவேன். ''இறைவா! என் சமுதாயத்தை (காப்பாற்று) இறைவா! என் சமுதாயத்தை (க் காப்பாற்று)'' என்று கூறுவேன். அப்போது, ''முஹம்மதே! உன் சமுதாயத்தில் விசாரணை இல்லாத நபர்களை சொர்க்கத்தின் வாசல்களில் வலப்புற வாசலில் நுழைச் செய்வீராக மேலும் அவர்கள், அதன் வாசனங்களில் இது அல்லாத வழிகளிலும் நுழைய மக்களில் தகுதி வாய்ந்தவர்கள்'' என்று கூறுவான்.
''என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் வாசல்களில் இரண்டு வாசல்களிடையே உள்ள (தூர) அளவு; மக்காவிற்கும் ஹிகியர் என்ற இடத்திற்கும் இடையேயும் மற்றும் மக்காவிற்கும், புஸ்ராவிற்கும் இடையேயும் உள்ள (தூர) அளவாகும். இதை நபி (ஸல்) கூறினார்கள். இது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது திர்மிதியில் 'பரிந்துரைப்பற்றியது' என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
ஹதீஸ் எண்: 349
நரகத்திலிருந்து மூமின்களை அல்லாஹ் காப்பாற்றி, அவர்கள் அபயம் பெற்று விட்டால், உங்களில் ஒருவர் தன் தோழருக்காக இவ்வுலகில் அவருக்குள்ள உரிமை விஷயத்தில் வாதாடுவது என்பது, மூமின்கள் தங்கள் இறைவனிடம் நரகில் நுழைந்துவிட்ட தங்களின் சகோதரர்களுக்காக வாதாடுவதில் மிகக் கடுமையாக இருந்திடாது.
''எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களின் சகோதரர்கள். எங்களுடன் தொழுபவர்களாக, எங்களுடன் நோன்பு நோற்பவர்களாக, எங்களுடன் ஹஜ் அனுப்பவர்களாக இருந்தனர். இவர்களை நரகில் நீ நுழையச் செய்து விட்டாயே'' என்று கூறுவார்கள்.
''நீங்கள் செல்லுங்கள். அவர்களில் நீங்கள் அறிந்தவர்களை வெளியேற்றுங்கள்'' என்று அல்லாஹ் கூறுவான். அவர்கள், அவர்களிடம் வருவார்கள். அவர்களின் அடையாளங்களை அவர்கள் அறிவார்கள். அவர்களின் அடையாளங்களை (நெருப்பு) நரக அழிந்திருக்காது. அவர்களில், இரு முட்டுக்கால் வரை நெருப்பு தீண்டிருப்பவரும் இருப்பார். அவர்களில், இரு கரண்டை வரை (நெருப்பு) தீண்டியிருப்பவரும் இருப்பார்.
அவர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள், ''எங்கள் இறைவா! எங்களுக்கு நீ கட்டளையிட்டபடி நாங்கள் வெளியேற்றி விட்டோம்'' என்பார்கள். பின்பு அவன், ''ஈமானில் ஒரு தீனார் அளவு தன் இதயத்தில் வைத்திருந்தவரை வெளியேற்றுங்கள். பின்பு அதை தீனார் எடை அளவுக்கு தன் இதயத்தில் (ஈமான்) வைத்திருந்தவரை பின்பு அணுவளவேனும் தன் இதயத்தில் (ஈமான்) வைத்திருந்தவரை (வெளியேற்றுங்கள்)'' என்பார்கள். இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூஸயீத் (ரலி) அவர்கள், ''இதை ஏற்காதவர்,'' என்ற வசனத்தை (4:40) வசனத்தை ஓதிக் கொள்ளட்டும்'' என்று கூறுகிறார்கள்.
(இது இப்னு மாஜாவில் ஈமான் என்ற பாடத்தின் கீழ் உள்ளது)
''நிச்சயமாக அல்லாஹ், (எவருக்கும்) ஒரு அணுஅளவு கூட அநியாயம் செய்யமாட்டான். (ஒர் அணுஅளவு) நன்மை இருப்பினும் அதை இரட்டிப்பாக்குவான். அதற்கு மகத்தான கூலியையும் தன்னிடமிருந்து வழங்குவான்.''